மறுவாழ்வு 40

முழு தொடர் படிக்க சத்யாவும், மரகதமும் தங்கள் உறவின் அடுத்த கட்டம் கல்யாணம்தான் என்று நெருங்கி வரும் வேலை. ஒரு நாள் மதியம் மூன்று மணியிருக்கும். பேபி முன்பே வந்து விட்டாள். அழைப்பு மணி அடித்தது. மரகதம் திடுக்கிட்டாள். 'அவரு எதுக்கு இந்த நேரத்தில் வரனும். ரெண்டு மணிக்கு மேல வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கோமே.' பேபி அறையில் இருந்தாள். கதவு திறந்து ரகசியமாய், சொல்லி அனுப்பி விட வேண்டும் என்று மெல்ல கதவு திறந்து, இடைவெளி வழியே பார்த்தாள். "மரகெதம்" என்று கட்டைக் குரல் கேட்டு அதிர்ச்சி. பஷீர் நின்றிருந்தான், கையில் குழந்தை, தோளில் பை. குழந்தையைக் கண்டதும், சட்டென கதவை திறந்து, வாரி எடுத்து வாங்கினாள். மார்போடு ஆசையாய் அணைத்து கன்னத்தில் பல முத்தமிட்டாள். அது அழ ஆரம்பித்து விட்டது. "ஓஓ.." என்று குரல் கொடுத்து ஆட்டிக்கொண்டே "என்ன இப்டி திடீர்னு வத்துட்டீங்க, வாங்க" என்று உள்ளே அழைத்துப் போனாள். "கொழந்தைக்குப் பசி மரகெதம், பால் ஏதாவது குடேன்" என்று பையில் துழாவி எடுத்து காலி பாட்டிலை கொடுத்தான். "என்னாது இது" என்று ஒரு விநாடி அவனைப...