பெண்மை

ஒன்பதாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதி முடித்து வீடு வந்த பாபு வாசலில் உக்காந்து கூடை பின்னி கொண்டிருந்த என்னை பார்த்ததும் நின்றான். அப்போது நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கரஸ்பாண்டன்ஸில் பி.ஏ படித்து கொண்டிருந்தேன். பாபு வந்ததும் கூடை பின்னுவதை நிறுத்திவிட்டு அவனை ஏறிட்டேன். “என்னடா பரிட்சை முடிஞ்சுதா, பாஸாயிடுவியா” “ஆயிடூவேன்க்கா” “ரெண்டு மாசம் லீவ்வா. ரெண்டு மாசம் உன்னைய வச்சு மேய்க்கனும்னு அம்மா புலம்பிட்டு இருந்தாங்க” “இல்லக்கா. டென்த் க்ளாஸ் இப்போவே ஆரம்பிக்க போறாங்களாம். இன்னும் ஒரு பத்து பதினஞ்சு நாள் ஸ்கூல் இருக்குக்கா. அதுக்கப்புறம் ஒரு வாரம் லீவ். அப்புறம் ஒரு பத்து நாள் ஸ்கூல். அப்புறம் ஒரு வாரம் லீவ்னு மாத்தி மாத்தி போய்ட்டு இருப்பேன்க்கா” “ஏன்டா ஒன்பதாவது தேறுவியா தேறமாட்டியான்னே தெரியாம அதுக்குள்ள பத்தாம் வகுப்பு ஆரம்பிச்சி, ரிசல்ட்டுல நீ பெயில்னு தெரிஞ்சா பத்தாவது சப்ஜக்ட் படிச்சது எல்லாம் வேஸ்ட் தானே” “அக்கா உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதா... போக்கா.. நைந்த்துல எல்லோருக்குமே பாஸ் போட...