காதல் பூக்கள் 64

முழு தொடர் படிக்க “செல்வா... ஏதோ முக்கியமா பேசணும்ன்னு சொன்னே? என்ன விஷயம்?” சீனு, சுவரில் வசதியாக சாய்ந்து தன் இருகால்களையும் நீட்டி, ஒரு சிகரெட்டை கொளுத்தி புகையை நெஞ்சு நிறைய இழுத்தான். மாடிக்கு வந்ததும், இப்போது செல்வாவுக்கு எதிரில், தனிமையில், அவன் தன்னை மிகவும் சகஜமாக உணர ஆரம்பித்திருந்தான். “பேசணும்டா. ஆனா மீனா என்னை முந்திக்கிட்டா; யாருமே எதிர்பார்க்காத விதத்துல அவ இந்த வீட்டுல உன்னை ஒரு முக்கியமான நபரா ஆக்கிட்டா..." “ம்ம்ம்.. இப்படி ஒரு தருணம் என் வாழ்க்கையில வரும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை..” சீனுவின் குரல் கம்மியிருந்தது. “மாப்ளே, வெரி சாரிடா, மீனா இந்த அளவுக்கு உன்கிட்ட எடக்கு மடக்கா பேசியிருக்கக் கூடாது...” செல்வா பேண்ட்டிலிருந்து லுங்கிக்கு மாறிக் கொண்டிருந்தான். “நம்ம மீனாதானேடா... என்கிட்ட அவளுக்கு இல்லாத உரிமையா? நான் திருந்தணும்னுதானே அவ பேசினாள்... எனக்கு அதுல மனவருத்தம் ஒண்ணுமில்லை; ஒருவிதத்துல அவ இப்படி பேசினதுக்கு நான் தான் நன்றி சொல்லணும்... நிஜமாவே நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. யாருக்குடா இந்த மாதிரி ஒரு லட்சுமி சுலபமா கிடை...