மறுவாழ்வு 20

முழு தொடர் படிக்க (திருச்சிற்றம்பலத்தில், மரகதத்தை விடுத்து, நாம் சற்று காஞ்சிபுரம் போய் வரலாம்.) காஞ்சிபுர நகரத்தை ஒட்டிய, நாளைந்து தெருக்களை மட்டுமே கொண்ட புறநகரப் பகுதி தேனம்பாக்கம். தெருக்களைச் சுற்றி வயல்வெளி, தென்னந்தோப்புக்கள். அங்கு நடுவீதியில் அப்பாதுரைப் பிள்ளையின் வீடு அதை ஒட்டி அவர் தம்பி நடேசப்பிள்ளை வீடு. தாத்தா காலத்து சொத்தை இருவரும் பிரித்துக் கொண்டனர். அப்பாதுரைப் பிள்ளை ஊரில் மதிப்பிற்குரியவர், தேச பக்தர். விடுதலை போராட்டத்தில் கலந்து சிறை சென்ற தியாதி. சுதந்திரம் வந்த பின், கட்சி ஆட்சியாளர்கள் போக்கு ஒன்றும் பிடிபடாமல் ஒதுங்கி தன் வீட்டில் முடங்கிப் போனார். அவர் ஒரே மகள், கஸ்தூரிபாய். பத்து ஏக்ரா நிலம், வீட்டின் பின்புறம் தென்னந்தோப்பு, கொட்டடியில், பத்து கறவை மாடுகள் என்று வசதிக்கு குறைவில்லை. ஒரே மகளை வேறு இடத்தில் கட்டிக் கொடுத்தால், சொத்துக்கள் யாரிடமோ போய் விடும் என்று, அவர் பெண்சாதி, தன் தம்பி மாசிலாமணிக்கே கட்டிக் கொடுக்க சொல்லி கட்டாயப்படுத்தி வந்தாள். மாசிலாமணிமேல், பிள்ளைக்கு அப்படி ஒன்றும் ஒன்றும் நல்ல அபிமானம் இருக்கவில்லைதான...