குடும்பத் தலைவன்
சாரதாவுக்கு பெருமையாக இருந்தது. 45 வயதிலேயே அவள் பாட்டியாகி விட்டாள். அவளது மகள் மேகலைக்கு நேற்று தான் கல்யாணம் நடந்தது போல இருக்கிறது. ஆனால் ஒரு வருடம் உருண்டோடி அவளுக்கு தலைச்சன் குழந்தையும் பிறந்து விட்டது. பத்து வருடங்களுக்கு முன் சாரதாவின் கணவன் அகால மரணம் அடைந்தபோது, மூன்று பெண் குழந்தைகளையும், இரண்டு ஆண் குழந்தைகளையும் எப்படி கரையேற்றப் போகிறோம் என்று அவள் இடிந்து போயிருந்தாள். ஆனால், அவளின் மூத்த மகன் சரவணன் எல்லா குடும்ப சுமைகளையும் ஏற்றுக்கொண்டு காலாகாலத்தில் மூத்தவள்க்கு ஒரு நல்ல வரனாகப் பார்த்து கல்யாணம் செய்து வைத்ததுடன், மற்ற சகோதர சகோதரிகளின் படிப்பு, வளர்ப்பு இவற்றில் எந்த குறையும் வைக்காமல் பார்த்துக்கொண்டான். இப்போதும் அவன் தான் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் இடையே ஓடி ஓடி எல்லா வேலைகளையும் முன்னின்று செய்து கொண்டிருந்தான். "இன்னிக்கு தம்பி ஆஸ்பத்திரிக்கு போறானாம்; நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா போறேன்," என்று சொன்ன சரவணனின் முகத்தில் மிகுந்த களைப்பு தென்பட்டது. "சரிப்பா...