சபலம் 12 (இறுதி பாகம்)

முழு தொடர் படிக்க யாழினி வெடவெடவென நல்ல உயரம். மா நிறம்தான். ஆனால் அம்சமான முகம். அகன்ற நெற்றியும். அகலக் கண்களும், உருண்டை மூக்குமாக அம்மா ஜாடை. ஆனால் பாசம் மட்டும் அப்பா மீது. இன்னும் கட்டுக்குலையாமல் கும்மென்றுதான் இருந்தாள். இரண்டு குழந்தைகள் பெற்று விட்ட தளர்ச்சி சிறிதுகூடத் தெரியவில்லை. கொஞ்சம் பெருத்திருந்தாலும் எடுப்பாகவே இருக்கும் மார்புகள். யாழினியின் கண்கள் துருதுருவென அலைகின்றன. படபடவெனப் பேச்சு வருகிறது. நிதானமான பேச்சோ ஆழ்ந்த பார்வையோ இல்லை. பெண் அழகுதான் ஆனால் கணவனுடன் குடித்தனம் பண்ணும் ஒரு பெண்ணிடம் கனிவு பிறந்திருக்க வேண்டாமோ…? முகத்தில் ஒரு அமைதி தவள வேண்டாமோ? அதே… விழிநயாவின் முகத்தில் ஒரு அமைதியும் பேச்சில் ஒரு தெளிவும் இருக்கிறது. என்ன காரணம்.? விழிநயாவைப் பற்றி மிருதுளாவுக்கு நன்றாகவே தெரியும். அவள் ஒரு துணிச்சலான பெண். வெட்கம் கூச்சம் என்பதெல்லாம் அவளுக்கு ஒரு விசயமே இல்லை. எத்தனை ஆண்கள் இருந்தாலும். சகஜமாகப் பேசுவாள். ஆனால் யாழினியோ இதற்கு எதிர்மறையான குணம் கொண்டவள். விழிநயா காதலித்தது ஒருத்தனை, கரம் பிடித்தது ஒருத்தனை என்பது மிருதுளாவுக்கு மிக நன்றாகத் தெ...