அந்தரங்கம் 17

முழு தொடர் படிக்க பாலா தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனலில் இறங்கி கொள்ள, ரதி ஸ்கூட்டியை வைஷ்ணவ் கல்லூரி பக்கம் திரும்பினாள். தன்னுடைய முதல் வகுப்பிலிருந்து கல்லூரி வரை பெண்கள் மட்டும் பயிலும் பள்ளி கல்லூரியில் தான் படிக்கிறாள். வீட்டில் கூட தங்கை ரம்யா மட்டுமே. முதன் முதலில் அப்பாவை தவிர வேறு ஒரு ஆண் பாலாவுடன் வண்டியில் வந்தது, அவள் உடலில் என்றும் இல்லாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். வாயாடித் தனமாக துரு துருவென இருக்கும் ரதியின் முகம் வெக்கத்தில் சிவந்து இருந்தது. பைக் கண்ணாடியை பார்த்தாள், உதட்டைச் சுளித்தாள், “ச்சீ… இதெல்லாம் உனக்கு செட்டாகாது? புரியுதா?” என்று தனக்கு தானே அவள் சொல்லிக் கொண்டிருக்க, “என்ன லவ்வா?” என்று அவள் தோழி வைஷு அவள் முதுகில் தட்டினாள், ரதியின் கண் அகலமாக விரிந்தது. “ஏய்.. அந்த பொறுக்கியவ?… நானா?… ச்சீ” “ஆளு செம ஸ்மார்டா இருக்கான்… வேண்டாம்னா சொல்லு நான் ட்ரை பண்ணுறேன்” என்று வைஷு நக்கலடிக்க, “அவனபத்தி உனக்கெப்படி தெரியும்?” “BBC நியூஸ்ல சொன்னாங்க…” “சொல்லுடி?” “ஏய்.. இப்ப தான் வண்டில பாத்தேன்.. அப்படி...