வேட்டையாடு விளையாடு 5
போலீஸ் அசிஸ்டென்ட் கமிஷனர் தரனாவின் கூர்மையான கண்கள் அந்த இடத்தை சுற்றி சர்வே செய்தது. அவரது ஆட்கள் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் ஏதாவது தடயம் கிடைக்குதா என்று துருவளாக தேடிக்கொண்டு இருந்தனர். ஏதேனும் ஆதாரம் கிடைக்குமா எனப் பார்க்க அவர்கள் படிப்படியாக பெரிய வட்டங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர்… ஏதாவது தவறுதலாக விட்டுச்சென்று விட்டார்களா.. ஏதேனும் கால் அடையாளங்கள் போன்றவை. போலிஸ் விசாரணைப் பணியானது பெரும்பாலும் இதுபோல பல மிகுந்த சிரத்தை மற்றும் மனச் சோர்வூட்டுகிற வேலைகளை உள்ளடக்கியது. வெளிநபர்களுக்கு தோன்றுவது போல ரொம்ப கவர்ச்சியான வேலை ஒன்றும் கிடையாது.
சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் மூக்கில் கைக்குட்டையை அழுத்தி பிடித்திருந்தார் அசிஸ்டென்ட் கமிஷனர். சடலத்தின் நிலையை பார்த்தபோது அது அங்கே இரண்டு அல்லது மூன்று நாளாக கிடந்திருந்தது என்று கணித்தார்.
இந்தப் பகுதி வழியாகச் சென்ற ஓரிரு மனிதர்கள் தெருநாய்கள் சில புதர்களுக்குப் பின்னால் ஆவேசத்துடன் தரையைத் தோண்டுவதைக் கண்டனர். என்னவாக இருக்கும் என்று அந்த நாய்களை நோக்கி சென்ற போது அவர்கள் மூக்கை முதலில் வீசும் துர்நாற்றம் தாக்கியது. யாருக்கும் சொந்தம் இல்லாத பாதி காட்டு நாய்கள் போல இருந்த அந்த நாய்கள் அதன் பற்களைக் காட்டிக்கொண்டு அவர்களை நோக்கி சீறின… அதுங்களுக்கு உணவாக கிடைத்திருப்பதை பாதுகாக்க. இப்படி அந்த நாய்கள் செய்ய, அந்த நபர்கள் சாதாரணமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து இருப்பார்கள். ஆனால் திடிரென்று அதில் ஒருவன் ஒரு மனிதனின் கை மண்ணில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியானான். அநேகமாக அந்த நாய்கள் அங்கே தோண்டியதால் அந்த கை வெளிவந்திருக்கணும்.
அவர்களில் ஒருவன் அங்கே இருந்து அந்த நாய்களை விரட்ட முயற்சித்தான் அனால் நாய்கள் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. வேறுவழி இல்லாமல் அவன் வைத்திருந்து பெரிய பிரம்பை வைத்து ஒரு நாயை அடித்தான். அது வலியில் குரைத்து சற்று நகர்ந்து ஓடியது. அதனுடன் இருந்த மீதி இரண்டு நாய்களும் விலகி ஓடியது ஆனால் ரொம்ப தூரம் போகாமல் அவர்களை பார்த்து உறுமிக்கொண்டே இருந்தது.
அங்கே ஒரு பிணம் இருப்பதை கண்டு அவர்களில் ஒருவன் அங்கே இருந்து போய்விடலாம், ஏன் போலீசுடன் வம்பு என்று கூறினான். ஆனால் கையில் பிரம்பு வைத்திருந்தவனோ அங்கே போலீசை அழைத்து அவர்கள் வரும் வரை அந்த பிணத்தை காவல்காற்றான்.
ACP தரனா அந்த ஒருவனுக்காவது சமூக பொறுப்பு இருந்தது என்று மனதில் அவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டார். அந்த இடம் ஆள் நடமாட்டம் மிகவும் குறைவான இடம். அவரது மேலோட்டமான அவதானிப்புகளிலிருந்து கூட அது ஒரு கொலை என்று அவருக்கு தெரிந்தது. பாதிக்கப்பட்டவரின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு நொறுக்கப்பட்டு இருந்தது. கழுத்தில் ஆழமான வெட்டுக் குறியையும் அவரால் காண முடிந்தது. மருத்துவர் தனது இன்வெஸ்ட்டிகேஷனை செய்ய அவர் காத்திருந்தார். அப்போது தான் மேலும் சில விவரங்கள் தெரியவரும். அந்தநேரம் யாரோ அவரை உரக்கக் கூப்பிட்டதால் அவர் சிந்தனையிலிருந்து யார் என்று திரும்பி பார்த்தார்.
ஒரு ஐம்பது மீட்டர் தூரத்தில் இருந்து இன்ஸ்பெக்ட்டர் வஜேந்திரா அவரை கூப்பிட்டார்,
"சார், இங்கே வாங்க."
அவர் விரைவாக இன்ஸ்பெக்டர் வஜேந்திரா மற்றும் ஒரு கான்ஸ்டபில் நிற்கும் இடத்துக்கு சென்றார். புதர்களுக்கு இடையே ஒரு மோட்டார் சைக்கிள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது விலையுயர்ந்த மற்றும் அதிக ஹார்ஸ் பவர் கொண்ட மோட்டார் சைக்கிள். அநேகமாக அது அங்கே செத்து கிடந்தவரின் வாகனமாக இருக்கும். ஒன்று அந்த நபரை கொன்ற ஆலோ ஆட்களோ அவர்களுக்கு அதை ஒழுங்காக மறைக்கவைக்க நேரம் இருந்திருக்காது அல்லது அதை மறைத்துவைக்க பெரிய அக்கறை எதுவும் எடுத்திருக்க மாட்டார்கள். தாரணை அதை கூர்ந்து பார்க்க அனுப்பினார்.
"இதில் ஏதாவது பிங்கர்பிரிண்ட்ஸ் கிடைக்குமா என்று பார்க்கணும். ஃபாரன்சிக் டீமுக்கு காத்திருக்கணும். இன்னும்கொஞ்ச நேரத்தில் அவர்கள் இங்கே வந்துவிடுவார்கள் சார்," என்றார் இன்ஸ்பெக்டர் வஜேந்திரா.
"நம்பர் பிளேட் எதுவும் இல்லை, அநேகமாக கொலையாளிகள் அதை எடுத்திருக்க வேணும். அதன் மூலம் கொலையான ஆள் யார் என்று நாம கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக இருக்கும்," என்று மேலும் தொடர்ந்தார்.
இன்ஸ்பெக்டர் வஜேந்திரா பலவருடங்கள் சர்வீஸின் பிறகு இந்த இன்ஸ்பெக்டர் போஸிஷேனுக்கு வந்தவர். இந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்குத் தெரிந்ததை விட, தான் பெற்ற அனுபவம் மதிப்பு வாய்ந்தது என்பது அவரது தனிப்பட்ட கருத்து. அவர்களின் படிப்பின் காரணமாக மட்டுமே தரனா போன்றவர்கள் உடனே அவர்களின் மேல் அதிகாரிகளாக ஆகிவிடுகிறார்கள். அவர் தரனிடம் பேசும் போது எப்பொழுதும் சிறு இலக்கார சாயல் இருந்தது.
தனக்குக் கீழ் பணிபுரிபவரின் ஏளனத்தின் அடி நீரோட்டம் வரை தரனா அறிந்திருந்தார். அதை பற்றி சட்டைசெய்ய வேணாம் என்று முடிவெடுத்தார். அவர் இதற்க்கு புதிது மற்றும் இதில் தான் அவர் முதல்முறையாக முழு பொறுப்பு எடுத்திருக்கார். அவரின் ஆட்களின் மரியாதையை அவர் சம்பாரிக்கணும், அப்போதுதான் அதற்க்கு முழு மதிப்பு இருக்கும். இருப்பினும் அவர் தான் அவர்களின் அதிகாரி என்பதையும் அவர்கள் மறக்க கூடாது. சகிப்பு தன்மை ஓரளவு தான் இருக்க முடியும்.
"ஏன் ஃபாரன்சிக் டீம் இன்னும் இங்கே வரவில்லை.. நாம வந்த அதே நேரத்தில் அவர்கள் இங்கே இருந்திருக்கணும்," அவரின் எரிச்சல் தெரியும்படி பேசினார்.
"போலோ மீ," என்று வஜேந்திராவுக்கு கட்டளையிட்டு அவர் வேகமாக சாலையை நோக்கி நடந்தார்.
"அங்கே என்ன பார்க்க போறீங்க .....சார்,"
அந்த சார் சற்று தாமதமாகவே வஜேந்திராவிடம் இருந்து வந்தது. வேறு வழி இல்லாமல், வற்புறுத்தலில், தரானவை அப்படி அழைக்க வேண்டியதாக இருப்பது போல.
வஜேந்திரா அவரின் அறிவார்ப்பு மற்றும் திறமையை சோதிக்கிறார் என்று புரிந்த தரனா அவருக்குள் சிரித்துக்கொண்டார். "இங்கே என்ன கிடைக்கலாம் என்று நினைக்கிற," என்று அந்த கேள்வியை வஜேந்திராவுக்கு திருப்பி போட்டார்.
இப்போது வஜேந்திராவுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவரின் மேல் அதிகாரிக்கு இன்வஸ்ட்டிகேஷனில் என்ன திறமை இருக்கு.. எவ்வளவு தெரியும் என்று சோதிக்க பார்த்தார். அனால் அவர் இப்போது ACP க்கு என்ன தெரியும் என்று பார்ப்பதற்கு அவரிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் அவரின் மேல் அதிகாரியிடம் அவரின் திறமை கேள்விக்குறியாகிவிடும். பதில் சொல்லவேண்டிய நிர்பந்தத்துக்கு ACP தரனா தன்னை கொண்டுவந்துவிட்டார்.
ACP தரனா தன்னைவிட பத்து வயது இளையவர் ஆனாலும் அவர் போலீஸ் வேளையில் ஒன்னும் அரைவேக்காடு இல்லை என்று வஜேந்திராவுக்கு புரிந்தது.
வேறு வழி இல்லாமல் வஜேந்திர பதிலளித்தார்," மோட்டார்பைக் இங்கே கண்டுபிடிக்கப்பட்டதால் விக்டிம் இந்த சாலையில் போகும்போது ஆட்கள் பதுங்கி இருந்து அவனை தாக்கி இருக்கலாம்."
"அது சரிதான், அனால் இந்த சாலையில் எந்த இடத்தில் அது நடந்து இருக்கலாம் என்று நினைக்கீறிங்க?" என்று மேலும் தரனா கேட்டார்.
'பப்பு' என்று நான் நினைத்த இந்த ஆள் என்னையே நோண்டுகிறான் என்று வஜேந்திரா சிறு கோபத்துடன் மனதில் கருவினார். ஆனால் அதை வெளிக்காட்டாமல் கவனமாக இருந்தார். எப்படி இருந்தாலும் ACP தான் அவரின் மேல் அதிகாரி. அவர் தரனாவுக்கு அடிபணியனும். அவரின் அனுபவம் வாய்ந்த கவனத்துடன் அந்த சாலையின் இருபுறமும் பார்த்தார் வஜேந்திரா.
மறுபடியும் வஜேந்திரா கேள்வியை தரான பக்கம் திருப்பினார். "இந்த இடத்தில தான் அந்த தாக்குதல் நடந்து இருக்கணும் என்று ஏன் நினைக்கீறிங்க சார்? அவன் வேற இடத்தில கொல்லப்பட்டு இங்கே வந்து அவனின் உடலை போட்டிருக்கலாம் இல்லையா?"
"இந்த இடத்தில தான் அந்த கொலை நடந்திருக்கு என்று நான் ஏன் நினைக்கிறேன் என்று நீங்க நினைக்கீறீங்க?"
தரனா வஜேந்திராவை இப்படி கேள்வியை திருப்பிக்கொண்டு நழுவவிட போவதில்லை.
இருவருடனும் சைலன்ட் மனோபல சோதனை நடந்து கொண்டிருந்தது, ஆனால் இறுதியில் வஜேந்திரா தனது உயர் அதிகாரியிடம் விட்டு கொடுக்க வேண்டியிருக்கும், அது அவருக்குத் தெரியும். எவ்வளவு தான் சொல்லலாம் என்று வஜேந்திரா யோசித்தார்... அவருக்கு திறமை இருக்கு என்ற அளவுக்கு, ஆனால் இப்போதைக்கு எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. தேவைப்பட்டால் அதை பிறகு பார்த்துக்கலாம்.
"வேற இடத்தில அவனை கொலை செய்துவிட்டு இங்கே வந்து உடலை யாருக்கும் தெரியாமல் மறைக்க செய்வதில் சென்ஸ் கிடையாது. உடலை மறைப்பதற்கு இதைவிட சிறந்த இடங்கள் பல இருக்கின்றன."
ACP இன்ஸ்பெக்டரை ஒருவித உள் சிந்தனையுடன் பார்த்தார். "அது மட்டும் தான் காரணமா? வேற எதுவும் இல்லையா?"
இன்ஸ்பெக்டர் ஒரு பெருமூச்சுவிட்டு தொடர்ந்தார். "இங்கே மோட்டார்பைக் அவசரமாக மறைக்கப்பட்டிருந்ததை பார்த்தால் அவனை கொலை செய்தவர்களுக்கு நேரம் இல்லை என்று தோன்றுகிறது. அப்படி என்றால் வேற இடத்தில கொன்ற ஒருவனை இங்கே வரைக்கும் தூக்கிக்கொண்டு வந்திருப்பதுக்கு சான்ஸ் அதிகம் இல்லை."
தரனா இன்ஸ்பெக்டரை பார்த்து புன்னகைத்தார். "அது தான் கரெக்ட்டா இருக்கும். மேலும் இங்கே ஒரு க்ரேவ் தோண்டி இருக்கார்கள். அப்படி என்றால் ஏற்கனவே இந்த இடத்தை தேர்ந்தெடுத்து இங்கே செத்தவனை தாக்குவதற்கு பிளான் போட்டிருக்கணும். அதோ அங்கே முப்பது மீட்டர் தூரம் இருக்கே, சாலையில் அங்கே ஆய்வு செய்யலாமா?'
தன்னை அறியாமல் வஜேந்திராவுக்கு அவன் மேல் அதிகாரி மீது மதிப்பு ஏற்பட்டது. இவர் புதுசு என்றாலும் முட்டாள் இல்லை என்று மனதில் நினைத்துக்கொண்டான். ACP குறிப்பிட்ட இடம் தான் ஒளிந்து இருந்து தாக்குவதர்கு சரியான இடம். அங்கே மட்டும் தான் சாலையின் இருபுறமும் சில பெரிய மரங்கள் இருந்தனர். மற்ற இடங்களில் மரங்களோ, செடிகளோ எதுவும் இல்லாமல் மறைவாய் பதுங்கி இருக்க வாய்ப்பு இல்லை. இந்த இடத்தை தேர்ந்து எடுத்ததால் தான் இங்கேயே உள் பகுதியில் சற்று தூரத்தில் உடலை மறைக்க க்ரேவ் தோண்டி தயாராக வைத்திருப்பார்கள். அப்போது தான் ஃபாரன்சிக் டீம் வந்து சேர்ந்தது.
"ஏன் இவ்வளவு லேட்டு? சீக்கிரம் வேலையை தொடங்குங்க," என்று உரக்க கட்டளையிட்டார் இன்ஸ்பெக்டர் வஜேந்திரா.
பிறகு அவர்கள் இருவருமே கவனமாக சாலையில் தடயங்கள் எதுவும் இருக்கா என்று பார்க்க துவங்கினார்கள்.
"இங்கே பாருங்க வஜேந்திரா சிறு சிறு உடைந்த மெட்டல் பீஸ் இருக்கு, அநேகமா மோட்டார்பைக்கில் இருந்து உடைந்து விழுந்திருக்கணும். இங்கு டயர் சறுக்கிய மார்க்கும் இருக்கு."
"ஆமாம் சார், இங்கே பாருங்க காய்ந்து போன இரத்த மார்க் இருக்கு, நான் ஃபாரன்சிக் டீம இங்க பார்க்க சொல்லுறேன் சார்," என்றார் வஜேந்திரா. இம்முறை 'சார்' என்று உடனே வந்தது.
தரனா சாலையின் இருபுறமும் பார்த்தார். "வஜேந்திரா, இந்த இருபக்கம் இருக்கும் வீடுகள், ஃபார்ம், கட்டடங்கள் எல்லாற்றையும் பார்க்கணும். அதில் ஆட்கள் இருக்க, யாரும் இல்லாதா வீடுகளோ, பில்டிங்கோ விசாரிக்கணுமா. அவன் சிட்டிக்கு திரும்பும்போது தான் கொலை செய்யபட்டிருக்கணும். அதனால் சிட்டிக்கு வெளிப்பக்கம் போகும் இடங்களில் அதிகம் கவனம் செலுத்துங்க. மோட்டார்பைக் போட்டோ எடுத்திட்டு போங்க. யாரும் அது சாலையில் போவதை பார்த்திருக்காங்கலா என்று கேளுங்க."
"அதுமட்டும் இல்லை, அங்கே இருப்பவர்களின் விவரங்கள் அல்லது ஆட்கள் இல்லாத வீடு என்றால் அது யாருக்கு சொந்தமானது என்ற விவரங்களை சேகரியுங்கள்," என்று மேலும் தொடர்ந்தார்.
"சரிங்க சார், என் டீம தயார் செய்கிறேன். முடிந்த விரைவில் ஸ்டார்ட் செய்கிறேன்."
"ஹ்ம்ம் இன்னொன்னு வஜேந்திரா, திறமையான ஆட்களை உங்க டீமில் வைத்துக்கொள்ளுங்கள்."
"யெஸ் சார்."
இப்போது என்ன நடக்குது என்ற அற்றவதில் பார்க்க ஒரு சிறு குரூப், பிரஸ், அவர்களின் போட்டோக்ராபர்ஸ், டிவி செய்தியாளர்கள் அவர்களின் வீடியோ எடுப்பவர்கள் எல்லாம் அங்கே சேர்ந்துவிட்டார்கள். இவர்கள் எல்லாம் அவர்களின் இன்வஸ்டிகேஷனுக்கு தடையாகவே இருப்பார்கள். இவர்கள் கண்ட இடத்தில நடந்து இருக்கும் ஏதாவது எவிடன்ஸை பாழாக்க கூடாது என்று தரனா மனத்தில் அவர்களை திட்டிக்கொண்டார்.
பொது மக்கள் கூட பரவாயில்லை அனால் இந்த மீடியா காரர்கள் தான் மோசம். எல்லாமே அவர்களுக்கு உடனே பதில் வேண்டும். நெட்ஒர்க்குகள் இடையே அவ்வளவு போட்டி இருந்தது. அவருக்கு தெரியும் அநேகமாக அவரின் டிபார்ட்மென்டில் உள்ளவர்கள் தான் அவர்களுக்கு இங்கே ஒரு சம்பவம் நடந்து இருக்கு என்று டிப் கொடுத்திருப்பார்கள். அதை செய்வதற்கு அவர்களுக்கு வெகுமதி கிடைக்கும். அதை பற்றி அவரால் ஒன்னும் செய்ய முடியாதது தான் உண்மை. ஆனாலும் சில நேரத்தில் மீடியா மூலம் அவர்களுக்கு உதவியும் கிடைக்கும். அதனால் இதில் லாபமும் இருக்கு, பாதிப்பும் இருக்கு.
இன்னும் ஒரு இரண்டு மணி நேரம் அங்கே ஆய்வு செய்தபிறகு தரனா அங்கே இருந்து கிளம்பினார். மெடிக்கல் எக்ஸாமினர் ரிப்போர்ட் அடுத்த நாளில் அவர் மேஜையில் இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டு சென்றார். அவர் மனதில் பல விஷயங்கள் ஓடிக்கொண்டு இருந்தது.
செத்தவன் உடலில் நிறைய பச்சை குத்தி இருந்தது. அதை பார்க்கும் போது அவன் ஒரு கிரிமினல் என்று தோன்றியது ஆனால் இப்போது தான் சாதரணமான நிறைய பேர் குறிப்பாக இளைஞர்கள் பச்சை குத்திக் கொள்கிறார்களே. அவர் கரியர் துவக்கத்தில் வந்த முதல் பெரிய கேஸ். அவரின் உயர் அதிகாரிகளிடம் அவரின் திறமையை காட்டவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டார்.
அடுத்த நாள் ACP தரனா அப்போது தான் மெடிக்கல் எக்ஸாமினர் ரிப்போர்ட்டை படித்து முடித்தார். அவன் கழுத்து நெரிக்க பட்டிருக்கு. அவன் கழுத்தில் இருந்த ஆழமான காயம் அதை காட்டியது அநேகமாக மெல்லிய இரும்பு கம்பியால்.
இறந்து போனவரின் மோட்டார்பைக் சறுக்கிய விதத்தில் பார்த்தால் அவன் அதில் பயணிக்கும்போது அவன் கழுத்தில் அந்த கம்பி மாட்டி அவன் தனது வாகனத்தில் இருந்து தூக்கி ஏறிய பட்டிருக்கணும்.
கொல்லப்பட்டவன் ஆறடி உயரம் கொண்டவன். வாட்டசாட்டமான உடல் அமைப்பு கொண்டவன். அவன் அப்படி வாகனத்தில் இருந்து ஏறிய பட்டிருக்கனும் என்றால் இரு புறமும் குறைந்தபட்சம் இரு ஆண்கள் அந்த இரும்பு கம்பியை பிடித்திருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் செத்துப்போனவன் தூக்கியெறிய பட்டபோது கம்பியை பிடித்திருந்த நபர்களின் கையையும் அந்த கம்பி வெட்டி இருக்கணும். அப்படி இல்லை என்றால் அந்த கம்பி முதலில் ஒரு தடியில் சுத்தப்பட்டு பிடிக்கப்பட்டிருக்கணும்.
இரண்டாவது அவனை கொன்றவர்கள் இதை பிளான் பண்ணி செய்திருக்கார்கள். அப்படி என்றால் அவன் அந்த பக்கம் தான் வருவான் என்று ஏற்கனவே அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
இறந்து போனவன் ஏதோ ஒரு இடத்துக்கு வழக்கமாக போயிருக்கிறான் என்று அது காட்டுகிறது. யார் வீடு அது? வஜேந்திரா தான் அதை கண்டுபிடிக்கணும்.
இறந்துபோனவன் உடனே சிகிச்சை பெறாவிட்டால் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால், இரத்தம் அதிகம் வெளியாகி, இறந்திருப்பான் என்றாலும் அவன் இறப்புக்கு அது காரணம் இல்லை. அவன் அடித்தே கொல்லப்பட்டிருக்கான். மரணத்திற்கான காரணம் அப்படிதான் என்று போஸ்ட் மார்ட்டம் அறிக்கையும் சுட்டிக்காட்டியது.
வேறு ஒன்று, அவன் அணிந்து இருந்த ஜட்டியிலும் , அவன் ஆணுறுப்பு மொட்டிலும் காய்ந்த விந்து இருப்பதாக கூறி இருந்தது. அது என்ன காட்டுகிறது என்றால் அவனின் மரணத்துக்கு சற்று முன்பு தான் அவன் உடலுறவில் ஈடுபட்டிருக்கணும். அப்படியென்றால் அவன் காதலி (கள்ளக்காதலி?) அங்கேதான் எங்கேயோ தங்கி இருக்கிறாள்.
அது யாராக இருக்கும்?
தொடரும்...

Comments
Post a Comment