என் தங்கை 39
.jpg)
ஈவினிங்க் ஆக ஆக மலருக்கு உடம்பு குறுகுறுத்தது. எப்போதுடா போய் படுப்போம் என்று உட்கார்ந்திருந்தாள். நல்ல பிள்ளையாக... லேப்டாப்போடு உட்கார்ந்துகொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள்.
"என்னாச்சு அண்ணி... ஒருமாதிரியா இருக்கீங்க?" என்றாள்
தீபா.
அன்று -
"நான் வேலையாக இருக்கிறேன், தொந்தரவு
செய்யாதீர்கள் என்று கண்ணன் போனில் சொல்லிவிட...." ராஜ் வருத்தத்தோடு
நின்றுகொண்டிருந்தான்.
நிஷா ராஜ்க்கு காபி எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தாள். இருவரும்
பால்கனியில் நின்றுகொண்டிருந்தார்கள். காற்று நன்றாக வீசிக்கொண்டிருந்தது. அவன்
கண்ணனோடு பேசி பேசி மூக்குடைபடுவது பிடிக்காமல்... வேறு வழியில்லாமல்... தயங்கி தயங்கி.. பேச்சை ஆரம்பித்தாள்.
"அண்ணா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"
மறுநாள் - ஆபிசில் -
ராஜ் இருந்ததால், ஆஃபிஸில் கீ
போர்டில் டைப் பண்ணும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அவ்வப்போது போன்
ஒலிக்கும் சத்தம்.
"வந்தனா சீனுவை என்கிட்ட அனுப்பு"
சிறிது நேரத்தில்... சீனு தயங்கித் தயங்கி வந்து நின்றான். ராஜ்
சேரில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்துகொண்டு அவனைப்
பார்த்தான். அவன் பார்வையில் இருந்த வெறுப்பைப் பார்த்து சீனுவுக்கு கால்கள்
நடுங்கின.
"நிஷாகிட்ட என்ன சொல்லி வச்சிருக்க?"
"ஸார்"
"சொல்லுடா நிஷாகிட்ட என்ன சொல்லி அவளை மயக்கி வச்சிருக்க?"
"ஸார்"
"நிஷாவை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறியா?" - பாகுபலி ப்ரபாஸ் போல் அவனை சுற்றி சுற்றி நடந்துகொண்டே கேட்டான்.
"ஸ... ஸார்"
"ஐயோ சார் அப்படி எல்லாம் இல்ல!! என்ன சார் இதெல்லாம்?....னு அதிர்ச்சியாகி அழுது புலம்புவேன்னு நெனச்சேன். ஆனா நீ நிக்குறதை
பார்த்தா அப்படி ஒரு எண்ணம் உனக்கு இருக்கத்தான் செய்யுது இல்லையா?"
"ஸார்"
ராஜ் அவன் கண்ணத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். இதை எதிர்
பார்க்காத சீனு தடுமாறி கீழே விழுந்தான். கண்ணத்தைப் பிடித்துக்கொண்டு
அதிர்ச்சியோடு ராஜ்ஜைப் பார்த்தான்.
"ங்கோத்தா... உன்ன கொன்னே போட்டுடுவேன்" என்று அவன் ஷோல்டரில் ஓங்கி
ஒரு மிதி மிதித்தான்.
"ஸார்... எனக்கு தகுதி கிடையாதுதான். ஆனா நான் அவங்களை நல்லா
பார்த்துப்பேன்.... அவங்களை சந்த்..."
இதற்குள் ராஜ் சீனுவின் சட்டையை பிடித்து தூக்கி அவன் கண்ணத்தில்
மீண்டும் ஒரு குத்து விட.... அவனுக்கு பொறி கலங்கியது. கடவாயிலிருந்து ரத்தம்
வழிய.... நடுங்கிப்போனான். சாவை நேரில் பார்ப்பதுபோல் இருந்தது.
ராஜ் தன் ரூம் கார்னரில் இருந்த
பாத்ரூமை காட்டிச் சொன்னான். "முகம் கழுவிட்டு என்கூட வா"
சீனுவுக்கு அவனிடம் கேள்வி கேட்க பயமாக இருந்தது. முகம் கழுவி வாயை
கொப்பளிக்க.... ரத்தம் ஓடியது. கர்ச்சீப்பால் வாயை ஒற்றிக்கொண்டே வந்தான்.
"பேசாம என் பின்னாடி வரணும்..." என்று சொல்லிவிட்டு ராஜ் நடக்க... சீனு தலையை குனிந்துகொண்டு அவன் பின்னாலேயே நடந்தான்.
ராஜ் அவனை காரில் ஏற்றிக்கொண்டு போய் தனது ஆட்கள் இருக்கும் பேட்டைக்குள்
நுழைந்தான். ஷர்மாவிடம் தள்ளிவிட்டான்.
"என்னா ஸார் இவனும் அந்த அரவிந்த் மாதிரியா?"
"ம்... என் தங்கச்சிக்கே ரூட்டு விட்டிருக்கான். அவ மனசை
கெடுத்திருக்கான். இனிமே அவ முகத்துலயே முழிக்கமாட்டேன். அவ வாழ்க்கைல குறுக்கிட
மாட்டேன்னு சொல்றவரைக்கும் அடிங்க. அதுவரைக்கும் பட்டினி
போடுங்க. கை கால் மட்டும் உடையாம பார்த்துக்கோங்க"
"ஸார் ஸார்... நான் நிஷாவை நல்லா பார்த்துக்கறேன் ஸார் அவங்களை
சந்தோஷமா வச்சிப்பேன் ஸார்.... அவங்களும் என்ன விரும்புறாங்க ஸார் ப்ளீஸ் ஸார்
ப்ளீஸ்"
"எவ்ளோ தைரியம் இருந்தா கல்யாணம் முடிஞ்சி கணவனோடு
வாழ்ந்துக்கிட்டிருக்கிற என் தங்கச்சியை நீ நல்லா பார்த்துக்கறேன்னு சொல்லுவ"
"கண்ணன் சாரைவிட நான் நல்லா பார்த்துக்கறேன் ஸார். நிஷாவுக்காக
என்னனாலும் பண்ணுவேன் ஸார்"
"என்னனாலும் பண்ணுவியா? அப்போ சாவு"
ராஜ் சிகரெட்டை எறிந்துவிட்டு காருக்கு வந்தான். ஷர்மா ஓடி வந்தான். "அண்ணாத்த... அந்த அரவிந்த், என்ன விட்டுடுங்க விட்டுடுங்கன்னு
சொல்லி கெஞ்சுனான். இவன் மேடத்தை நல்லா பார்த்துக்கறேன்னு திரும்ப திரும்ப
சொல்றான்?"
"அப்படி சொல்றதை நிறுத்துறவரைக்கும் அடிங்க"
ஆபிஸ் போனதும் காமினி வேகமாக வந்தாள்.
"ராஜ்! சீனுவை எங்க கூட்டிட்டுப் போன?"
அதேநேரம் -
டிபார்ட்மென்டிலிருந்து அழைப்பு வந்திருந்ததால்... கண்ணன் காவ்யாவோடு சென்னையில் வந்து இறங்க... ஒருசில நிருபர்கள் அவரை
சூழ்ந்துகொண்டார்கள்.
"சார் கவர்ன்மெண்டோட மெடிக்கல்
கவுன்சில்ல உங்களுக்கு முக்கிய பதவி கொடுத்திருக்காங்களே... அதை பற்றி சொல்லுங்க"
"ஏழைகளின் உயிர் காக்க நம்ம மாநிலத்துலயே ஒரு சயின்டிஸ்ட் இருக்கார்னு
பேப்பர்ல வந்திருக்குது அத பத்தி என்ன சொல்றீங்க"
கண்ணனிடம் அவர்கள் கேள்வி கேட்பது TV யில்
ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. காவ்யா பெருமையோடு அவர்கூட நின்றுகொண்டிருந்தாள்.
"ஸார் கேன்சருக்கு சைடு எபக்ட்ஸ் இல்லாம ஜெனிரிக் மெடிஸின்
கண்டுபிடிக்கணும்னு எப்போ தோணியது?"
"ஸார்...."
"ஸார்...."
அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிக்கொண்டிருக்க...
கடைசியில் அந்தக் கேள்வியும் கேட்கப்பட்டது
"ஸார் உங்ககூட நிக்குறாங்களே இந்தப் பெண் யாரு?"
"இவங்க காவ்யா. இவங்களை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். எனக்கு
ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருக்காங்க."
கேமரா அனைத்தும் காவ்யா பக்கம் திரும்பின.
தொடரும்...
Comments
Post a Comment