உங்களில் ஒருத்தி 88

முழு தொடர் படிக்க

 காவ்யா கண்ணீரோடு.... வேகமாக அவர் சட்டையைப் பிடித்து இழுத்து அவர் உதடுகளைக் கவ்விக்கொண்டாள். 

கண்ணனுக்கு சொர்க்கத்தில் மிதப்பதுபோல் இருந்தது. அவளது முத்தத்தில் கிறங்கினார். காவ்யா தன் நாக்கை அவருக்குக் கொடுத்தாள். கண்ணன் அவள் நாக்கை உறிஞ்சி உறிஞ்சி அவளது எச்சிலை குடிக்க... காவ்யா சுகத்தில் நிலைகுலைந்தாள். உடம்பெல்லாம் சிலிர்க்க... கண்களை மூடிக்கொண்டு... அந்த இன்பத்தை அனுபவித்தாள். 

ஆசைதீர கிடைத்த முத்தங்களை அனுபவித்துவிட்டு, காவ்யா உதடுகளை விலக்கிக்கொன்டு அவரைப் பார்த்தாள். கண்ணன் அவள் கண்களில் முத்தமிட்டு சொன்னார்.

"ஐ லவ் யூ காவ்யா"

காவ்யா அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு முகத்தை அவர் கழுத்தில் புதைத்துக்கொண்டாள். அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. மனம் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தது.

அப்போது அவளது போன் சினுங்க.... மனமில்லாமல் அவரிடமிருந்து விலகிச் சென்று போனை எடுத்தாள். 

"சொல்லுங்கம்மா...."


"நல்லாயிருக்கியாம்மா"

"ரொம்ப நல்லாயிருக்கேன்மா. அகல்யா என்ன பண்ணுறா"

"அவ எங்க சொல்பேச்சு கேட்குறா. நீ இருந்தாலாச்சும் பயப்படுவா. இப்போ அந்த பொறுக்கிப் பயலோட தினமும் சுத்திட்டு வர்றா"

"அவகிட்ட போனை கொடுங்க...."

கண்ணன் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அதுவரை பாசமாக பேசிக்கொண்டிருந்த அவளது முகம் கடுமையாக மாறியதை கவனித்தார்.

"என்னடி? அவன்கூட சுத்துறியாம்? ஒழுங்கா இருக்கமாட்டியா? நம்ம நிலைமை தெரியும்ல"

"அக்கா அவன் என்ன 100% லவ் பன்றான்.. சத்தியமா... ப்ளீஸ்க்கா.."

"அப்படின்னா முட்டாக்கழுதை மாதிரி அவன் பின்னாடி திரியறதை விட்டுட்டு, அவனை வந்து பொண்ணு கேட்கச் சொல்லு."

காவ்யா போனை வைத்துவிட்டு, கனிவான முகத்துடன் அவரைப் பார்த்தாள். 

"ஸாரி....." என்று க்யூட்டாக சொல்லிவிட்டு சமைக்க  ஆரம்பிக்க.... அவள் சமைக்கும் அழகை கண்ணன் ரசித்தார். அவளுக்கு அருகில் வந்து நின்றுகொண்டு அவரும் அவளுக்கு உதவ, காவ்யாவுக்கு ஒருவிதமான சந்தோசமாக இருந்தது. இழந்த வாழ்க்கை மீண்டும் கிடைத்ததுபோல் இருந்தது. 

கண்ணன், அவளை சமைக்கவிடாத அளவுக்கு பின்னாலிலிருந்து அவளை கட்டியணைத்துக்கொள்ளவேண்டும் என்று எழுந்த ஆசையை... அடக்கிக்கொண்டு நின்றார்.

"நீங்க போய் சோபால உட்காருங்க. நான் சமைச்சிக்கறேன்..." என்றாள்.

"ஹ்ம்ம்.. ஓகே.... உன் பாத் ரூமை யூஸ் பண்ணிக்கட்டுமா?" - கேட்டுக்கொண்டே அவர் நடக்க,

"கண்ணன்... இருங்க இருங்க.... வெய்ட்"

அவள் கரண்டியோடு ஓடி வந்தாள். உள்ளே தொங்கிக்கொண்டிருந்த தனது பேன்ட்டி, ப்ராவை எடுத்துக்கொண்டு வெட்கத்தோடு வெளியே வந்தாள். 


கண்ணனுக்கு அவளை அங்கேயே சுவரில் சாய்த்து நிற்கவைத்து இஷ்டத்துக்கு முத்தம் கொடுக்கவேண்டும் என்று ஆசை வந்தது. அவள் முகத்தில் அவர் இன்று பார்க்கும் வெட்கம், பாவனைகள் இதற்கு முன்பு அவளிடம் அவர் பார்த்திராதது. அவள் அநியாயத்துக்கு அழகாகத் தெரிந்தாள். 

அன்று நிறைய பேசினார்கள். காவ்யா கணவனின் இறப்புக்குப் பிறகு தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னாள். அழுதாள். கண்ணன் அவளுக்கு ஆறுதல் சொல்லி தன்மேல் சாய்த்துக்கொண்டார். அந்த இரவு காவ்யாவுக்கு இனிமையாய் கழிந்தது.

அடுத்தடுத்த நாட்களில், கண்ணனின் அரவணைப்பையும் முத்தங்களையும் ஆசைதீர பெறும் ஆவலில் இருந்த காவ்யா, காய்ச்சலில் விழுந்தாள். டெம்பரேச்சர் கடகடவென்று ஏறியது. கண்ணன் டாக்டரிடம் கூட்டிக்கொண்டு சென்றார். "நான்கு நாட்கள் நல்லா ரெஸ்ட் எடுங்க மிஸ் காவ்யா" என்று சொல்லி மருந்துகள் கொடுத்து அனுப்பினார்கள். 

அவளுக்கு காய்ச்சல் குறையவே இல்லை. வீடே சோகமாக இருப்பதுபோல் உணர்ந்தாள். 'கண்ணனால் கிடைக்கும் சந்தோசம் இப்படி அநியாயமாய் பறிபோகிறதே... எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?' என்று அழுதாள்.

போனில் காவ்யாவோடு பேசிய அவளது அம்மாவும் அகல்யாவும் பதறிப்போனார்கள். 'அங்க போயி சந்தோஷமா இருப்பான்னு பார்த்தா மகள் இப்படிக் கிடந்து கஷ்டப்படுறாளே' என்று அம்மா அழுதாள். 'அக்காவுக்கு ஏன் எப்பவுமே பேட் லக்?' என்று அகல்யா தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அம்மா அடிக்கடி போன் பண்ணி பேசிக்கொண்டிருந்தாள். மதியம் பேசும்போது, "எழுந்திரிச்சு கொஞ்சமா சாப்பிடுடி...." என்று அவள் கெஞ்சிக்கொண்டிருந்தபோது கண்ணன் உள்ளே நுழைந்தார். 

"பேசு... பேசு..." என்று சைகையால் சொல்லிவிட்டு, அவளது நெற்றியில், கழுத்தில் கைவைத்துப் பார்த்தார். 

"சாப்டியா இல்லையா?" என்றார்.

"யாரும்மா அது? பேச்சுச் சத்தம் கேட்குது?"

"கண்ணன் வந்திருக்கார்மா. நான் அப்புறமா பேசுறேன்."

காவ்யா போனை வைத்துவிட்டு கண்ணனைப் பார்க்க, அவரோ கிச்சனுக்குள் போய் பார்த்தார். அவள் ஒன்றும் சமைக்கவில்லை என்று தெரிந்தது. கடகடவென்று பாத்திரங்களை எடுக்க, பதறிக்கொண்டு வந்த காவ்யா தடுத்தாள். 

"என்ன பண்றீங்க..." என்று அவர் கையிலிருந்த பாத்திரத்தைப் பிடுங்கினாள். 

"நீ சாப்பிடாம இருக்க. சாப்பிட்டாத்தானே மாத்திரை போட முடியும்?"

"நான் நல்லாயிருக்கேன். நான் சமைச்சிக்கறேன். நீங்க போங்க"

அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் கண்ணன் அவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டு வந்து பெட்டில் கிடத்தினார். 

"நான் சமைச்சிக்கறேன். எனக்கு சரியாகிடுச்சி...." - காவ்யா சிணுங்கினாள்.

"நீ நல்ல பிள்ளையா ரெஸ்ட் எடு"

"ப்ச். இப்போ எதுக்கு நீங்க வேலையை விட்டுட்டு வந்தீங்க?"

கண்ணன் சட்டென்று அவள் உதட்டில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டார். காவ்யாவுக்கு இதயம் எகிறியது. 

"கூடக்கூட பேசினா இப்படித்தான்" - அவர் குறும்பாக சொல்ல... அவளுக்கு அப்பொழுதும் அவரை சமைக்க விட மனதில்லை.

"அதில்லைங்க... உங்களுக்கு எதுக்கு...."

அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவள் உதடுகளுக்கு இன்னொரு முத்தம் கிடைத்தது. அவள் முகம் சிவந்தது. 

"இதுக்குத்தான் வந்தீங்களா..." என்று சிணுங்கிக்கொண்டே அவர் கையில் அடித்தாள்.


கண்ணன் அவளது சிணுங்கலை ரசித்தார். சிரித்துக்கொண்டே போய் சாதமும் ரசமும் வைக்க ஆரம்பித்தார். காவ்யா கட்டிலில்.. முழங்கால்களை மடக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். காய்ச்சல் எங்கு போனது என்றே தெரியவில்லை. நாக்கில் இருந்த கசப்பெல்லாம் போய் அவர் கொடுத்த முத்தம்தான் மறுபடி மறுபடி உதட்டில் இணித்துக்கொண்டிருந்தது. 

'அடடா நான் சந்தோசமா இருக்கறதைப் பார்க்க அம்மா என் பக்கத்துல இல்லையே'

அரைமணி நேரத்தில் கண்ணன் ப்ளேட்டில் சாப்பாடு போட்டு எடுத்துக்கொண்டு வந்தார். 

"சாப்பிடு..." என்று அவளிடம் நீட்டினார். சாப்பாட்டில் ஆவி பறந்துகொண்டிருந்தது.

"நீங்க?"

"நான் கேன்டீன்ல சாப்பிட்டுட்டுத்தான் வந்தேன்"

"நீங்களும் கொஞ்சம்... ஸ்ஸ்ஸ்ஸ்... செம சூடு... ஆஆ...."

காவ்யா உதட்டைச் சுழித்துக்கொண்டு கையை உதற.... கண்ணன் அவளை ரசித்தார். பிளேட்டை அவளிடமிருந்து வாங்கி, சாதத்தை பிசைந்தார். கையிலெடுத்து... ஊதி... அவள் வாயருகே நீட்டினார். 

காவ்யாவுக்கு சந்தோசமாக இருந்தது. மறுபேச்சு பேசாமல் வாயை திறந்தாள்.

கண்ணன் அவளுக்கு ஊட்டிவிட... அவள் கண்களில் துளிர்த்த கண்ணீரோடு வாங்கி வாங்கி சாப்பிட்டாள். அம்மாவைத் தவிர அவளுக்கு யாரும் இப்படி ஊட்டிவிட்டது கிடையாது. கண்ணன் தன்மேல் இவ்வளவு அன்பு காட்டுவார் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. 

அவரே அவள் வாயை துடைத்துவிட்டார். வெதுவெதுப்பாக தண்ணீர் கொண்டுவந்து மாத்திரையை கையில் எடுத்தார்.

"ஆ காட்டு"

"நீங்களே சமைச்சீங்க. நீங்களே ஊட்டிவிட்டீங்க. இதையாவது நானே செய்றேனே..."

கண்ணன் சிரித்துக்கொண்டே அவள் கையில் கொடுத்தார். அவள் அவரை காதலோடு பார்த்துக்கொண்டே மாத்திரை போட்டாள். 

"நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும். சரியா?.." என்று அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு எழுந்தார். 

'இங்கயே... என்கூடவே இருங்க கண்ணன்...' என்று சொல்ல அவளுக்கு உதடுகள் துடித்தன. ஆனால் ஏதோ ஒன்று அவளை தடுத்தது. அப்போது அம்மாவிடமிருந்து போன் வர, கட் பண்ணினாள்.

"ஒருமணி நேரம் கழிச்சி வந்து பார்ப்பேன். நீ தூங்கிட்டு இருக்கணும்."

"ம்...." என்று தலையாட்டினாள்.

கண்ணன் போனதும், அம்மாவுக்கு போன் போட்டாள். 

"சொல்லும்மா.. போன் பண்ணியிருந்த?"

"சாப்பிட்டியா காவ்யா" - அவள் குரல் தழுதழுக்கக் கேட்டாள். 

"சாப்பிட்டுட்டேன்மா. நீ சும்மா கவலைப்பட்டுக்கிட்டு இருக்காதே. நான் நல்லாயிருக்கேன்."

இதற்குள் அகல்யா போனை வாங்கிக்கொண்டு பேசினாள். 

"என்னடி... ஒன்னும் சமைக்கலைன்னு சொல்லிட்டிருந்த?"

காவ்யாவுக்கு இதயம் படபடத்தது. மெதுவாகச் சொன்னாள். 

"கண்ணன் சமைச்சார்!"

"வாவ்.. மேடம்க்கு இவ்வளவு மரியாதையா அங்க?"

"போடீ....."

"ஹேய்... அவரோட வைப் அவர்கூட வரலையா? என்ன வர்க் பன்றாங்க?"

"அது... ஆக்சுவலி..."

"என்னடி... சொல்லு"

"அம்மாகிட்ட எதுவும் சொல்லாதே. அவர் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டு வந்திருக்கார்."

"என்னடி... ரொம்ப நல்லவர்... நல்லவர்னு சொல்லுவியே"

"நல்லவங்களைத்தான் கடவுள் சோதிக்கிறாரே"

காவ்யா அதற்குமேல் எதுவும் சொல்லாமல் போனை வைத்தாள். காய்ச்சல் முக்கால்வாசி குறைந்து உடம்பில் தெம்பு வந்திருந்தது. கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு தன்னைத்தானே திட்டிக்கொண்டாள். 'இப்படி அலங்கோலமா இருக்கிறேனே...'

முகத்தைக் கழுவி, தலைசீவி கிளிப் மாட்டிக்கொண்டு வந்து படுத்தாள். தூக்கம் சுத்தமாக வரவில்லை. நடந்ததை நினைத்துக்கொண்டே கிடந்தாள். 

முக்கால் மணி நேரம் கழித்து கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க, கண்ணை இறுக்க மூடிக்கொண்டு கிடந்தாள். கண்ணனின் கை அவள் நெற்றியில் தொட்டுப்பார்த்தது. அவள் கழுத்தில் நுழைந்து வருடி... தொட்டுப் பார்த்தது. காவ்யா தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திறமையாக நடித்தாள். சட்டென்று கண்ணனின் மூச்சுக்காற்று அவள் கண்ணத்தில் பட... இதயம் படபடத்தது. இமைகளை இறுக்க மூடிக்கொண்டாள். 

அவளது கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, கண்ணன் சத்தமில்லாமல் கதவை அடைத்துவிட்டுப் போக...  அதற்குமேல் கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாமல் எழுந்து உட்கார்ந்தாள்.   

'ஐயோ என்ன இது மறுபடியும் காய்ச்சல் கூடுது?'

அவளுக்குத் தூக்கம் வரவில்லை. கசங்கிய முகத்தோடு, எப்போது ஈவினிங்க் ஆகும் எப்போது கண்ணன் வருவார் என்று வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.  

அடுத்த இரண்டு நாட்களில், அகல்யாவுக்கு தன் அக்காவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் ஆச்சரியத்தைக் கொடுத்தன. 

"கண்ணன் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனாரு"

"கண்ணன் மாத்திரை எடுத்துக்கொடுத்தாரு"

"இப்போதான் கண்ணன் வந்து பார்த்துட்டுப் போனார்"

"கண்ணன் இருக்கார்டி... அப்புறமா பேசுறேன்"

"கண்ணனும் நானும் சேர்ந்து சமைச்சிட்டிருக்கோம்"

"கண்ணன்கூட ஒரு walk போயிட்டு வந்தேன்"

"யு டோன்ட் வொரி. கண்ணன் என்ன நல்லா பார்த்துக்கறார்"

அகல்யாவுக்கு தலை சுற்றியது. 

"என்ன இவ? கண்ணனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்து, அவர்கூட ஹனிமூன் அனுப்பி வச்சமாதிரி, வாயை திறந்தாலே கண்ணன்... கண்ணன்ங்கிறா!"

அவள் தன் அம்மாவைப் பார்த்துச் சொன்னாள். 

"அம்மா... காவ்யாவோட வாழ்க்கைல பைனலா நல்லது நடக்கப்போகுதுன்னு நினைக்குறேன்!"



தொடரும்...

Comments

  1. காமம் மட்டுமே வாழ்க்கை இல்லை, கண்ணனை விட்டு விட்டு நிஷா சீனுவிடம் கஷ்ட பட போகிறாள் என்று தோணுகிறது. காதலின் அருமை கஷ்டத்தில்தான் புரியும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107