உங்களில் ஒருத்தி 106

முழு தொடர் படிக்க

மூன்று நாட்கள் ஆகியிருந்தது. 

நிஷா அழுதுகொண்டே இருந்தாள். சாப்பிடாமல் கிடந்தாள். அந்த வீட்டில் அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது. 

சீனு அவளிடம் அழுது கெஞ்சி இனிமேல் இப்படி பண்ணவே மாட்டேன் நீதான் என் உயிர் என்று கதறுவான் அழுது தவிப்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அதில் பாதி கூட நடக்கவில்லை. நொந்துபோனாள். 

'எனக்கு வேணும், என் மதிப்பையெல்லாம் நானே கெடுத்துக்கிட்டேன். நான் ஒரு அசிங்கம். நான் ஒரு அரிப்பெடுத்தவ. நான் ஒரு துரோகி.  நான் ஒரு பைத்தியக்காரி. நான் ஒரு ஏமாளி.' - அவள் தன்னைத்தானே திட்டினாள். அழுது அழுது ஓய்ந்தாள். அழகிழந்து கிடந்தாள்.


மலர்
, பாட்டியின் ஊரிலிருந்து திரும்பி வந்தாள். நிஷாவின் விஷயம் கேள்விப்பட்டதும் அவளைக் கேவலமாகப் பார்த்தாள். 

'இவங்க ஆஹா ஓஹோன்னு இவளை புகழும்போதே நெனச்சேன். உள்ளே ஓட்டையாத்தான் இருக்கும்னு.'

மலர், தன் மாமனாரிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக, கதிரை நான் சம்மதிக்க வைக்கிறேன் என்று வாக்கு கொடுத்தாள். 

கதிரின் அம்மாவிடம் பேசினாள். "நல்ல படிப்பு, கம்யூனிகேஷன் இருக்கு அப்புறம் ஏன் விவசாயம் பார்க்கணும்? என்றாள்.  சீக்கிரம் நானும் ராஜ்ஜும் அங்கே விருந்துக்கு வருகிறோம் அப்போ விவரமாக பேசுவோம்" என்றாள். நிஷாவை காப்பாற்றியதிலிருந்து, அவன் தீபாவுக்கு ஏற்றவன், கிராமத்தில் இருக்கவேண்டியவன் அல்ல என்று இவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். 

எல்லோரும் அவளை மதிப்போடு பார்த்தார்கள். 

நிஷா ரொம்ப down ஆக இருந்தாள். ராஜ் ஆறுதல் சொன்னான். 

"நீ கவலைப்படாதே நிஷா உன்ன கண்ணன்கிட்ட சேர்த்து வைக்கவேண்டியது என் பொறுப்பு."

"வேணாம்ணா. அவர் ஒத்துக்கறதுக்கு வாய்ப்பு குறைவு"

"எனக்காக வா நிஷா. இந்த விஷயத்துல அடம் பிடிக்கக்கூடாது."

அவன் நிஷாவைக் கூட்டிக்கொண்டு போனான். கண்ணன் இப்போது வேறு வீட்டில் இருந்தார். காலிங்க் பெல் அடித்ததும் காவ்யா வந்து கதவைத் திறந்தாள். 


நிஷா
, முகத்தில் எந்த உணர்ச்சியுமற்று இருந்தாள். ராஜ் பவ்யமாக நின்றான். 

"கண்ணனை பார்க்கணும்"

"வ... வாங்க"

கண்ணன் நிஷாவை பார்த்தார். அவள் அழுது அழுது முகம் வீங்கியிருப்பது தெரிந்தது. 

ராஜ் அவரிடம் கெஞ்சினான். "அவள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தப்பு செய்துவிட்டாள். திருந்திவிட்டாள். இனி உங்களுக்காக மட்டுமே வாழுவாள். அவளை தயவுசெய்து ஏத்துக்கோங்க" என்றான்.

கண்ணனுக்கு அவர்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆனால் சூழ்நிலை முற்றும் மாறியிருந்தது. இந்த சில மாதங்களில் என்னென்னவோ நடந்துவிட்டது. 

அவர் தயங்கித் தயங்கிச் சொன்னார்.

"ஸாரி ராஜ்... காவ்யா இப்போ கர்ப்பமா இருக்கா."

அதுவரை அமைதியாய்... தலைகுனிந்து நின்றுகொண்டிருந்த நிஷா ஓஓஓஓஓ.... என்று தாங்கமுடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். ராஜ் கோபமாக கண்ணனின் சட்டையைப் பிடித்து உலுக்கி, தள்ள.... அவர் சோபாவில் போய் விழுந்தார். சோபாவோடு சேர்ந்து சாய்ந்து தரையில் கிடந்தார். 

"அவரை எதுவும் செய்யாதேண்ணா...." நிஷா பதறிக்கொண்டு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். 

"இது அநியாயம். டிவோர்ஸ் அப்ளை பண்ணி ஒரு வருஷம் முடியறதுக்குள்ள நீங்க இப்படிப் பண்ணது அநியாயம்"

அவன் கண்ணனைப் பார்த்துக் கத்த, அவர் அமைதியாகச் சொன்னார். "நிஷா வேற எந்த விஷயத்துல தப்பு பண்ணியிருந்தாலும் நான் மன்னிச்சு ஏத்துக்கிட்டிருப்பேன் ராஜ். வேற எந்த விஷயத்துல தப்பு பண்ணியிருந்தாலும்!"

"இதுக்கு காரணம் நீங்க. நீங்க அவளை கவனிக்காம விட்டுட்டு அவளை குத்தம் சொல்றீங்களா. உங்கள....." - அவன் பல்லைக் கடித்துக்கொண்டு அவரை சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.

"அண்ணா ப்ளீஸ். வா போகலாம்."

நிஷா அவனைப் பேசவிடாமல் தடுத்துவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டே திரும்பி நடந்தாள். அவருடைய தப்பு... திருத்தக்கூடியது. தன்னுடைய தப்பு... திருத்த முடியாதது. 

"என்ன நிஷா இப்படி ஆகிடுச்சு?" என்றான் ராஜ். "அவர் மேல கேஸ் போடப்போறேன்" என்றான். 

"அந்தப் பொண்ணு காவ்யா பாவம்ணா. அவ வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல."

"நிஷா நீ ரொம்ப நல்லவ. உனக்கு ஏன் இப்படிலாம் நடக்குது. நீ எப்படிம்மா தப்பு பண்ணுன?"

"என் நிலைமைக்கு சீனு மட்டும் காரணம் இல்லைண்ணா. நானும்தான் காரணம். என் ஆசைகளை புருஷன்கிட்ட தனிச்சிக்கணும்னு நினைக்காம, அதுக்கு என்ன பண்ணனும்னு யோசிக்காம சுலபமா ஒரு வழி கிடைச்சதேன்னு படுகுழில போய் விழுந்துட்டேன். என்ன மன்னிச்சிடுண்ணா உங்களை எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்துறேன்" என்று அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

"இப்போ.. நான் கர்ப்பமா இருக்கவேண்டியது!!!" - அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அவள் அழுகை அவன் நெஞ்சைப் பிளந்தது.

அவனுக்கு என்னென்னவோ தோன்றியது. 'சீனு... நிஷாவை பற்றி தப்பாக யாரிடமும் சொல்லவில்லை. அவளை வீடியோ எடுக்கவில்லை. பின்னாடி அவளை மிரட்டலாம் என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால்... அவன் நிஷாவுக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாராக இல்லை. நிஷாவை மட்டுமே நினைத்துக்கொண்டும் இல்லை. கையில் வந்து விழுந்தால் லாபம் என்று இருந்திருக்கிறான். நிஷாவை நல்லா யூஸ் பண்ணியிருக்கிறான். என் தங்கையின் வாழ்க்கையை கெடுத்திருக்கிறான். இதையெல்லாம் கவனிக்காமல் நான்... ச்சே... இனிமேலும் இப்படி இருந்துவிடக்கூடாது. நிஷாவின் குணத்துக்கும் அழகுக்கும் ஊரில் ஒரு நல்ல கணவன் கண்டிப்பாகக் கிடைப்பான்.'

"நீ கவலைப்படாதே நிஷா. தீபாவுக்கும் கதிருக்கும் கல்யாணம் நடக்குறதுக்குள்ள உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நாங்க அமைச்சுத் தருவோம்...." என்றான்.

சீனு - அன்று, வீட்டிலிருந்து வெளியேறி, பெங்களூர் போய்விடலாம் என்று ஓடியவனுக்கு, நண்பன் பரத்திடம் இருந்து போன் வந்தது. 

"மச்சி எங்க இருக்க"

"பஸ் ஸ்டாண்டு போயிட்டிருக்கேண்டா. பெங்களூர் போகப்போறேன்"

"டேய்... போயிடாத. நீ உடனே என் வீட்டுக்கு வா"

"எதுக்கு?"

"முக்கியமான விஷயம். வீட்டுக்கு வா சொல்றேன்."

பரத்தின் வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கே அவனது மனைவி சாந்தியின் பக்கத்தில், ஒரு அழகான பெண்... அழுதுகொண்டிருந்தாள். 


'இவ நவீனோட லவ்வராச்சே! அவன் காட்டுன போட்டோல...நல்லா க்யூட்டா சிரிச்சிக்கிட்டு இருந்தா. இப்போ அழுறாளே'


"என்னாச்சுடா?.." என்றான்.

"நவீன் அவனோட தாய்மாமாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பாண்டிச்சேரி போனான். என்ன நடந்ததோ தெரியல. என்கேஜ்மென்ட் பிக்ஸ் பண்ணிட்டாங்களாம்."

"மை காட்!"

"அவங்களை மீறி அவனுக்கு எதுவும் பண்ண முடியல போல. அகல்யாவுக்கு போன் பண்ணி ஸாரி சொல்லியிருக்கான்."

அகல்யா குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தாள்.

"பாவம் அகல்யா, அவனை சின்சியரா லவ் பண்ணியிருக்கா..." என்றாள் சாந்தி

சீனு வேகம் வேகமாக தன் போனை எடுத்தான். நவீன் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. 

"எப்போ போன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆப்னுதான் வருது. அகல்யா அவனை பார்த்தே ஆகணும்னு சொல்றா. என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா" - சாந்தி வருத்தமுடன் சொன்னாள். 

"மச்சி.... நான் சாந்தியை பார்த்துக்க வேண்டியிருக்கு. நீதான் அகல்யாவை பாண்டிச்சேரி கூட்டிட்டுப் போகணும்."

"டேய்.. அதுக்கெதுக்கு அகல்யா. நான் மட்டும் போய் என்னன்னு கேட்டுட்டு வர்றேன். அவனை எப்படியாவது கூட்டிட்டு வரேன்"

"இல்லங்க. அவன் ஏதோ இக்கட்டான சூழ்நிலைல இருக்கிறான். அவங்க அவனுக்கு போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ண ஏற்பாடு பன்றாங்க. நான் போய் நின்னாத்தான் அவங்க வீட்டுல எங்க காதலை புரிஞ்சுப்பாங்க. என்னைப் பார்த்ததும் அவனும் ஸ்ட்ராங்கா ஒரு முடிவு எடுப்பான்."

"வேணாங்க.. நீங்க ரொம்ப கஷ்டப்படவேண்டியிருக்கும். அதோட... உங்க வீட்டுல உங்களை தேடுவாங்க."

"நான் நவீனை பார்க்கணும்..... ப்ளீஸ்" - அவள் அழுதாள். 

'ச்சே.. இந்தப் பொண்ணு அவன்மேல உயிரையே வச்சிருக்கா.' 

"பாண்டிச்சேரில எந்த இடம்?.." என்றான் பரத்திடம்.

"தெரியாது. அதுக்குத்தான் உன்ன கூப்பிட்டேன்."

"நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். தனியாவே போறதா முடிவு பண்ணிட்டா. வீட்டுல லெட்டர் எழுதி வச்சிட்டு வந்துட்டாளாம்.."

சீனுவுக்கு, அவளுடைய காதலையும், மன உறுதியையும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. 

"எந்த வழியிலும் அவனை ரீச் பண்ண முடியல சீனு..." என்றான் பரத். 

"சரி மச்சி... நான் போய் என்னன்னு பார்க்குறேன். நான் அங்கதான் போயிருக்கேன்னு யாருக்கும் சொல்லாதீங்க"

"சரிடா என்றான் பரத்."

அகல்யா.. கண்ணீரை துடைத்துக்கொண்டுவேக வேகமாக ஹேண்ட் பேகை எடுத்துக்கொண்டு எழுந்தாள்.

கண்ணன் வீட்டில் - 

போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்திடலாம் என்றார் கண்ணன். அகல்யா லெட்டர் எழுதிவிட்டு ஓடிப்போய் மூன்று நாட்கள் ஆகியிருந்தது. காவ்யா அவளை எல்லா இடங்களிலும் தேடி நொந்துபோயிருந்தாள்.

"உன் கழுத்துல உடனே தாலி கட்டணும்னு நெனச்சேன். அதுக்குள்ளே அகல்யா இப்படி பண்ணிட்டாளே..."

காவ்யாவுக்கு அகல்யாவின் லெட்டர் கண் முன்னே வந்து போனது. 

'நீங்கள் என் காதலைப் புரிந்துகொள்ளப்போவதில்லை. நான் என் காதலனைத் தேடிப் போகிறேன். ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு நானே தொடர்பு கொள்ளுகிறேன். என்னைத் தேடவேண்டாம்.'

போலீஸ் ஸ்டேஷனில் அகல்யாவைப் பற்றிய தகவல்களை கொடுத்துவிட்டு மனதில் பாரத்தோடு திரும்பி வந்தார்கள். 'ஐயோ அகல்யா எப்படியெல்லாம் கஷ்டப்படப் போறாளோ... இப்படி பண்ணிட்டாளே படுபாவி.... அகல்யா திரும்ப வந்துடுடி ப்ளீஸ்......' - காவ்யா மனமுடைந்தாள். 'எனக்கு சந்தோஷமா இருக்க அதிர்ஷ்டமே இல்லையா...'


கண்ணன் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தபோதுதான் ராஜ்ஜும் நிஷாவும் வந்து கெஞ்சிவிட்டுப் போனார்கள். இப்போது நிஷாவின் அழுகை வேறு அவளை வாட்டி எடுத்தது.
 

"நீ இந்த நேரத்துல அழக்கூடாது. கோபப்படக்கூடாது. போலீஸ் அகல்யாவை நல்லபடியா நம்மகிட்ட ஒப்படைச்சிடுவாங்க. அவ நம்ம சொல்  பேச்சு கேட்கலைன்னா நாம என்ன பண்ண முடியும்? அவ நல்லபடியா திரும்ப வருவா. திரும்ப வந்ததும் முதல்ல நாம கல்யாணம் பண்ணிக்கணும்.." என்றார். 

இங்கே - 

மலர்க்குஅவளது திருமணமான தோழி ஒருத்தி சொன்னது நினைவுக்கு வந்தது. 'மாமியார்கிட்ட முதல்லயே தலைகுனிஞ்சி பேச பழகிட்டீன்னா உன்ன கொட்டிக்கிட்டே இருப்பாங்கடி. கொஞ்சம் கெத்தாவே நடந்துக்க. ஆட்டோமேட்டிக்காக வழிக்கு வருவாங்க.'

அவளது மிதப்பை இது இன்னும் அதிகப்படுத்தியது. பத்மாவை மதிக்காமல் உதாசீனப்படுத்தினாள். எப்போது argument வந்தாலும் மாமியார் பத்மாவிடம்தான் தப்பு இருப்பதுபோல் அவர்களை நினைக்க வைத்தாள். ஏற்கனவே சட் சட்டென்று பேசும் பத்மா இதில் சுலபமாக விழுந்துவிட்டாள். விளைவு - மோகன் முன்னாலேயே மலர் பத்மாவிடம் எரிந்து விழுந்தாள். 

விஷயம் ராஜ் காதுக்குப் போனது. "கொஞ்சம் அடஜஸ்ட் பண்ணிப் போ மலர். அவங்க இருக்கப்போறதே இன்னும் கொஞ்ச காலம்."

அவன் அம்மாவை விட்டுக்கொடுக்க முடியாமல் பேசினான்.

அவள் மூளை வேறுவிதமாக யோசித்தது. 'இப்பவே பணிஞ்சி போயிட்டா காலத்துக்கும் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும். இப்போ நான் எடுக்கற முடிவைப் பார்த்துட்டுஇவ கோவக்காரிபிடிவாதக்காரிஅவ சேஞ்ச் ஆகமாட்டா நாமதான் விட்டுக்கொடுக்கணும்னு இவங்க எல்லாரும் ஒரு முடிவுக்கு வரணும்!'


அவள் தன் வீட்டுக்கு கிளம்பினாள். தடுத்தபோது, "உனக்கு உன் அம்மாவை விட நான்தான் முக்கியம்னு எப்போ சொல்றியோ அப்போதான் வருவேன்" என்று எரிக்கும் விழிகளால் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். 

ராஜ் அவளை சமாதானப்படுத்துவதற்காக போன் பண்ணஅது இன்னும் பெரிய சண்டையாக முடிந்தது.

அவளது வீட்டில் அவளுக்கு புத்திமதி சொல்லஅவள் அதையெல்லாம் கேட்கும் நிலைமையில் இல்லை. "ராஜ்க்கு உண்மையிலேயே என்மேல பாசம் இருந்தா என்கிட்டே வந்து கெஞ்சட்டுமே... என்று நினைத்தாள். மானம் ரோஷம் கெட்டு என்னால அங்க குப்பை கொட்டமுடியாது..." என்றுவிட்டுஅக்கா வீணாவின் வீட்டுக்குப் போய்விட்டாள். இங்கே கொஞ்ச நாட்கள்  இருந்தால் சமாதானமாகிவிடுவாள் என்ற நம்பிக்கையில்... "உன் வீடு மாதிரி நினைச்சுக்கோடி" என்று சொல்லிவீணா அவளை தங்கவைத்துக்கொண்டாள். 

ஆனந்த் தன் கொழுந்தியாளை நன்றாகப் பார்த்துக்கொண்டார். "நீ எத்தனை நாள் வேணுமானாலும் இங்கே இருக்கலாம். உனக்கு என்ன வேணும்னாலும் ஒரு வார்த்தை மட்டும் சொல்லு. உடனே வாங்கிட்டு வந்திடுறேன்."

"தேங்க்ஸ் மச்சான்.." என்றாள். வீணாவும் அவரும் சண்டை போடாமல் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ரசித்தாள். 'ராஜ் ஏன் ஆனந்த் போல் நடந்துகொள்ள மாட்டேங்குறான்' என்று வருத்தப்பட்டாள். 

ஒருவாரம் ஆகியும் வீணாவால் மலரை சமாதானப்படுத்த முடியவில்லை. 

"அவன் வந்து நான்தான் முக்கியம்னு சொல்லி கூப்பிட்டாத்தான் போவேன். இனிமேல் என்னை அவங்க முன்னாடி திட்டமாட்டேன்னு அவன் சொன்னாத்தான் போவேன்"

மோகனும் பத்மாவும்நிஷாவும்ராஜ்ஜிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். 

"என் மேல தப்பிருந்தாத்தானே நான் இறங்கிப் போகணும்பொட்டச்சிக்கு இவ்ளோ திமிரா?" என்றான்.

நிஷாவுக்குதன்னிடம் எப்போதும் தன்மையாக நடந்துகொள்ளும் கண்ணனின் ஞாபகம் வந்தது. தனிமையில் அழுதாள். அவரிடம் இவள்தான் அடிக்கடி கோபப்பட்டிருக்கிறாள். எரிந்து விழுந்திருக்கிறாள். அவரோராஜ் மாதிரி.... எப்பொழுதும் எடுத்தெறிந்து பேசியது கிடையாது.

அன்று - வீணா வருத்தத்தோடு போய் ராஜ்ஜை சந்தித்தாள்...



தொடரும்...

Comments

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107