என் தங்கை 39
.jpg)
இங்கே - (present)
நிஷா, சீனு தன்மேல் வைத்திருந்த மரியாதை கலந்த அன்பையும்,
உடலளவிலும் மனதளவிலும் தன்னை சந்தோஷமாக வைத்திருந்த ஒவ்வொரு
நிமிடங்களையும்... நினைத்துக்கொண்டு கிடந்தாள். அவனை தானே
வழிய அழைப்பது தவறுதான் என்று தெரிந்தும், மனசு கேட்காமல் அவனுக்குப் போன் பண்ணினாள்.
இளமைப் பருவத்தில் இருந்தே... மனதைத் திருட ஆரம்பித்த நிஷா... என்ன முடிவு சொல்வாளோ என்கிற பதைபதைப்பில் அவன் காத்துக்கொண்டிருந்தான்.
ஓடிவந்த நிஷா அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
"கதிர்....."
"நிஷா..."
"என்மேல் இவ்ளோ பாசமா கதிர்?"
"நீன்னா எனக்கு உயிர் நிஷா."
"நான் தப்பு பண்ணவடா. என் உடம்பை உனக்கு பரிசுத்தமா தரமுடியாதவ.
எப்படிடா?"
"நீ முழுமனசோட தூக்கிப்போட்டுட்டு வந்துட்டா போதும்
நிஷா. நீ எனக்கு எப்போதும் பழைய நிஷாதான். உன் கல்யாணத்துக்கு முன்னாடி நான்
பார்த்து ரசிச்ச நிஷாதான்."
"நான் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுடுறேன் கதிர். என் வாழ்க்கைல
இனிமே நீ மட்டும்தான். இனி நான் உனக்காகத்தான்
வாழ்வேன். உன்னோட ஆசைகள்தான் என்னோட ஆசைகளும். ஐ லவ் யூ கதிர். ஐ லவ் யூ."
அவள் கண்ணீரோடு அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.
கதிர் சந்தோஷத்தோடு அவளை அணைத்துக்கொண்டான்.
அவன் நிஷாவை அணைத்துக்கொள்வது இதுவே முதல் முறை. "ஐ
லவ் யு நிஷா.. ஐ லவ் யு நிஷா.." என்று இதயம் குளிர சொல்லிக்கொண்டே
அவள் நெற்றி, கண்ணம், கண்கள் என்று முத்தமிட்டான். அவள் கண்ணீரைத் துடைத்தான். அவள் முகத்தை தன்
நெஞ்சோடு வைத்து அணைத்துப் பிடித்துக்கொண்டான்.
"ஐ லவ் யூ நிஷா"
"கதிர்....."
நிஷா அவனுக்குள் புதைந்துகொண்டாள்.
கதிர், கணக்கில்லாமல் அவளுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.
மறுநாள் -
நிஷா ரொம்ப லேட்டாகத்தான் எழுந்தாள்.
அடித்துப் பிடித்துக்கொண்டு ஆட்டோவில் ஸ்கூலுக்குப் போனாள். ரொம்ப ரொம்ப சந்தோஷமாக,
சென்னை ஸ்கூலுக்குள் நடந்து திரிந்ததுபோல் பூரிப்போடு நடந்தாள். முடியை அழகாக வாரி,
க்ளிப் போட்டிருந்தாள். புடவையை, பழையமாதிரி
சிரத்தை எடுத்து நேர்த்தியாகக் கட்டியிருந்தாள்.
மாலை 6 மணிவாக்கில்,
டிராக்டரை நிறுத்திவிட்டுக் கதிர் இறங்கினான். கம்மாயில்
குளித்துவிட்டு ஈரத்துணிகளோடு வந்திருந்தான். நிஷாவையே நினைத்து நினைத்து...
முகமலர்ச்சியோடு வந்திருந்தான். தன் ரூமுக்குள் போய் வேஷ்டி உடுத்திக்கொண்டு, சட்டை
போட்டுக்கொண்டு வந்தான். லக்ஷ்மி, அவள் பாட்டுக்கு அவள் வேலைகளை
பார்த்துக்கொண்டிருந்தாள். இவன், ஆடு, மாடுகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு
வந்து முற்றத்தில், கட்டிலில் உட்கார்ந்தான்.
அவனுக்குப் பின்னால் கொலுசுச் சத்தம் கேட்டது. நிஷா இறங்கி வந்து,
அவனைக் கடந்து, கிச்சனுக்குள் போனாள். அவனுக்கு டீ
கலந்தாள்.
"அவன் இந்த நேரத்துல காபி, டீ எதுவும் குடிக்க
மாட்டானேம்மா.. எரிஞ்சு விழுவான்..." என்றாள் லக்ஷ்மி. நிஷாவின் முகம் வாடுவதை பார்த்துவிட்டு, "சரி
சரி, கலந்துட்ட.. போய் கொடுத்துப் பாரு.." என்றாள்.
நிஷா வந்து அவன் முன்னால் நின்றுகொண்டு டீ க்ளாஸை பிடித்தவாறு கையை நீட்டிக்கொண்டு நின்றாள்.
கதிர் அவளை நிமிர்ந்து பார்த்தான். 'என் அழகி... இப்போ.. கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் குளித்திருப்பாள் போல. நன்றாக
தலை வாரி, பொட்டு வைத்து, சூப்பராக
புடவை கட்டி, வந்து நிற்கிறாள். சென்னையில்
இருப்பதுபோல் கட்டியிருக்கிறாள். முகத்தில் ஒரு
பொலிவு தெரிகிறது. கழுத்தில்... மெல்லியதாய் ஒரு அடிஷனல் செயின் போட்டிருக்கிறாள்.
இன்றுதான் போட்டிருக்கிறாள். இப்போதுதான் என் நிஷா முக மலர்ச்சியோடு இருக்கிறாள்.'
"டீ..." என்றாள்.
கதிர் அவளை ரசித்துப் பார்த்துக்கொண்டே வாங்கினான். ஆசையோடு
குடித்தான். அவளோடு என்னென்னவோ பேசவேண்டும் என்று இருந்தது. ஆனால் வார்த்தைகள்
வரவில்லை. அவள்.. அவனை ஏறிட்டுப் பார்க்காமல்,
தன் ரூமை நோக்கி நடந்தாள். படிகளில் ஏறினாள். கதிர் அவளைத்
திரும்பிப் பார்த்தான். அவள், கால் கொலுசுகளை காட்டிக்கொண்டு படிகளில் நடக்கும் அழகை ரசித்துப் பார்த்தான்.
"ஏண்டா... நான் போட்டுக் கொடுத்தா கரிச்சுக் கொட்டுவ? இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிடப் போறோம். இப்போ எதுக்கு டீ????
ன்னு கத்துவ?"
ரூமுக்குள் நுழையப்போன நிஷா, வெட்கத்தோடு,
உள்ளே நுழையாமல் நின்றாள். அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
"நீ என்னைக்காவது நிஷா மாதிரி டேஸ்ட்டா டீ போட்டிருக்கியா?" என்றான்.
நிஷா, செயினைப் பிடித்து
விரல்களால் வருடிக்கொண்டே நின்றாள். அங்கே லக்ஷ்மி
அவனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
"உனக்கு என்ன பிடிக்கும் எது டேஸ்ட்டா இருக்கும்னு எனக்கு தெரியாதா?
நேத்து கறிக்குழம்பு பத்தி ஒண்ணுமே சொல்லலையே
நீ. நல்லா சாப்டியா?"
"குழம்பு சுமார்தான். ஆனா எலும்பு நல்லா..... டேஸ்ட்டா
இருந்தது..ம்ம்ம்ம்ம்.... இன்னொரு நாள் அதுமாதிரி வேணும்"
நிஷாவுக்கு... ஜிவ்வென்றிருந்தது. அவனை ஓரக்கண்ணால் பார்த்து
ரசித்துவிட்டு ரூமுக்குள் போனாள்.
அவளுக்கு வேலையே ஓடவில்லை. மறுநாள்
பாடம் நடத்த, சில நோட்ஸ்கள் எடுக்கவேண்டி இருந்தது.
ஆனால் அதற்கு எல்லாம் மனமில்லாமல் கிடந்தாள். 'ஸாரி
தீபா... ஸாரி அப்பா...ஸாரி அம்மா... கதிர் எனக்கு கண்கண்ட கடவுள் மாதிரி. ஆமா.. அப்படித்தான் அன்னைக்கு ஷாப்பிங்க்
மால்ல வந்து காப்பாத்தினான். நம்ம நிஷா என்றான். என்னைச் சிறுவயதிலிருந்தே
காதலித்திருக்கிறான். நான் இவனுக்கானவள். இவன் என் ஆளு. இவனை என்னால
மிஸ் பண்ண முடியாது அப்பா. யாருக்காகவும்.. எதற்காகவும் மிஸ் பண்ணமுடியாது. இவன்
எனக்கு வேணும்... ப்ளீஸ் தீபா... கதிரை நான் எடுத்துக்கிடுறேன்...' - முழங்கால்களை
கட்டிக்கொண்டு, தாடையை முழங்கால்களில் வைத்துக்கொண்டு,
தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள்.
எழுந்து ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டாள். ஆடினாள். 'கடவுளே.... எனக்கு
ஏன் எந்த வேலையுமே ஓடமாட்டேங்குது....' என்று இறங்கினாள். நடந்தாள். சோபாவில் சாய்ந்துகொண்டு தரையில் உட்கார்ந்தாள். மௌனமான நேரம் பாடலில் வரும் ஜெயப்ரதா போல... கால் கொலுசு தெரிய....
நேரம்போவதே தெரியாமல் உட்கார்ந்திருந்தாள். 'கதிர் என்மேல்
எவ்வளவு ஆசைகளை வைத்திருந்திருக்கிறான்!'
ஒவ்வொரு பெண்ணுக்குமே... இதுமாதிரி... அவள் வாழ்க்கையில் ஒருவன்
இருப்பான் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அதில் பலருக்கும்.. கடைசிவரை அந்த
அன்பை... உணர முடியாமல்.. அல்லது வெளிப்படுத்த முடியாமலேயே போய்விடுகிறதோ... என்று
நினைத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள்.
இரவு - சாப்பிடும்போது கீழே போனாள்.
அவன் தரையில் உட்கார்ந்திருந்தான். இவள், அத்தைக்காரியோடு சேர்ந்து கிச்சனிலிருந்து பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வந்தாள்.
"நீ எதுக்கு நிஷா சிரமப்படுற. போய் உட்காரு."
"பரவாயில்ல அத்தை. நான் பரிமாறுறேன்"
அவள், கோலம் போடுவதுபோல உட்கார்ந்துகொண்டு,
அவனுக்கு சாப்பாடு போட்டாள். குழம்பு ஊற்றினாள். பொறியல் வைத்தாள். அவன் அவளை ரசித்துப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டான். அவளது முகத்தில்
தெரிந்த வெட்கம், தவிப்பு... எல்லாம் செம அழகாக இருந்தது.
"நல்லா சாப்பிடுங்கன்னு வாய் திறந்து சொல்லமாட்டியா?"
கேட்டுக்கொண்டே அவன் அவளது புடவைக்கும்
ப்ளவுசுக்கும் நடுவில் பிதுங்கிக்கொண்டிருந்த இடுப்பு சதையை இழுத்துப் பிடித்துக்
கிள்ள, இதை எதிர்பார்க்காத நிஷா "ஆவ்வ்..." என்று
கத்திக்கொண்டு எழுந்துவிட்டாள். பீட்ரூட் கூட்டு, பாத்திரத்தோடு
தொம்மென்று கீழே விழுந்தது.
லட்சுமி ஓடி வந்தாள். "ஏம்மா இப்படி பண்ற? நான்தான்
உன்னை உட்கார்ந்து சாப்பிடச்சொன்னேன்ல?"
"இல்லை அத்தை... அவர்தான்...."
"அவன் என்ன பண்ணான்?"
நிஷா ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து முறைத்தாள். பதில் பேச முடியாமல்
நின்றாள். கதிர் மனதுக்குள் சிரித்துக்கொண்டிருந்தான்.
"நீ உட்காரும்மா... நான் பரிமாறுறேன்"
நிஷா தெளிவாக அவனுக்கு இடது பக்கம் உட்காரப் போனாள். அவன்
வேண்டுமென்றே அங்கே தண்ணீர் செம்பை வைத்தான்.
அவள் வேறுவழியில்லாமல் அவனுக்கு வலதுபக்கம்.. புடவையை நன்றாக இழுத்து
விட்டுக்கொண்டு உட்கார்ந்தாள்.
அவனோ, "அம்மா.... உப்பு பத்தலை. எடுத்துட்டு
வா..." என்றான். லட்சுமி உள்ளே ஓட... நிஷாவின் புடவைக்குள் கைவிட்டு மறுபடியும்
அவள் இடுப்பைப் பிடித்துக் கிள்ளினான்.
"அய்யோ சும்மா இருங்க.." - அவள் பதறினாள்.
"நல்லா என்பக்கம் நெருங்கி உட்காரு" என்றான்.
"ம்ஹூம்..."
"இல்லைனா மறுபடியும் கிள்ளுவேன்"
"அநியாயம் பண்றீங்க" - அவள் முதல்
முறையாக... அவனிடம் லேசாக சிணுங்கிக்கொண்டு சொன்னாள்.
"இந்த நேரத்துல... இவ்ளோ அழகா புடவை கட்டிட்டு வந்திருக்கியே.. நீ
பண்றது அநியாயமா நான் பண்றது அநியாயமா"
"நான் எப்பவும் போலத்தான் புடவை கட்டியிருக்கேன்."
அவன் அவள் காதுக்குள் மெதுவாகச் சொன்னான். "நீ இறக்கிக் கட்டியிருக்கிறது தெரியும்."
நிஷாவுக்கு முகம் சிவந்தது. சாப்பாட்டில் கையை வைத்து அலைந்துகொண்டே
இருந்தாள். அவளுக்கு சாப்பாடு இறங்க மறுத்தது. அவனோ சாப்பிட்டு முடித்து
கைகழுவினான். ஈரக் கையை அவளிடம் நீட்டினான்.
நிஷா அவனை முறைத்தாள்.
அவள் முறைப்பதை ரசித்துக்கொண்டே, ஈரக்கையை
அவள் இடுப்பு பக்கத்தில் வைத்து உதறினான். தண்ணீர் துளிகள் சில்லென்று இடுப்பில்
விழுந்தன.
நிஷாவுக்கு நாணமாக இருந்தது. இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை
எடுத்து அவன் கையில்.. கொடுத்தாள்.
'ஐயோ இந்நேரம் பார்த்து அத்தை வெளியே போறாங்களே...'
"அவங்க ஆட்டுக் கொட்டகைக்கு போறாங்க. வர நேரமாகும். கல்யாணம் எப்போ
வச்சிக்கலாம்?" - அவள் முந்தானையில் கையை
துடைத்துக்கொண்டே கேட்டான்.
"எனக்கு கொஞ்சம் டைம் வேணும் கதிர். எல்லாரையும் சமாதானப்படுத்தனும்."
"அப்படி என்ன சமாதானப் பேச்சுவார்த்தை?" - முந்தானையை
அவள் கையில் கொடுத்தான்.
"எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க. தீபா உங்க மேல ஆசையா இருக்கா.
அண்ணன் கோபக்காரன்...." என்று சொல்லியபடியே எழுந்தாள்.
"காலைலேர்ந்து உன்கிட்ட பேசணும்னு தவிச்சிட்டு இருக்கேன் நிஷா..
நீபாட்டுக்கு வர்ற.. போற... எழுந்துக்கற..."
நிஷாவுக்கு மனம் இறக்கை கட்டிப் பறந்தது. 'எனக்கும் இப்படித்தானே
இருந்தது!'
அவளது கையைப் பிடித்து, இழுத்து,
தன் பக்கத்திலேயே உட்காரவைத்துக்கொண்டான்.
காட்டு வேலை செய்து காய்ப்பு பிடித்திருந்த அவன் கை பிடித்ததில்
அவளது மென்மையான கைகளுக்கு வலித்தது. அவனது உறுதியை நினைத்து வியந்து அவன் முகத்தை
ஒருமுறை ரசித்துப் பார்த்துவிட்டு பார்வையை மாற்றிக்கொண்டாள். அவளுக்குத்தான் மனம்
அலைபாய்ந்துகொண்டிருந்தது. சிறகடித்துக்கொண்டிருந்தது. கதிர், சாதாரணமாக அவளிடம் பேசிக்கொண்டிருந்தான்.
"தீபா... ராஜ்.... இவங்க யாருக்கும் நான் பதில் சொல்லணும்னு அவசியம்
கிடையாது நிஷா. என் மாமாவைத் தவிர."
நிஷா அவனை வியப்போடு பார்த்தாள்.
அவன், அவளை இடுப்போடு
சேர்த்து தன்பக்கம் இழுத்து அனைத்துப் பிடித்துக்கொண்டு, சட்டென்று
மோகன் மாமாவுக்கு போன் போட்டான்.
"கதிர் நல்லாயிருக்கியா. லக்ஷ்மி எப்படியிருக்கா"
அவன் இப்படி சட்டென்று போன் போடுவான் என்பதை எதிர்பார்க்காத நிஷா
அவனைப் படபடப்போடு பார்த்துக்கொண்டிருக்க, அவனோ அவள் கூந்தலை வாசம் பிடித்து.... அவள் வாசனையில் கிறங்கியபடியே பேசினான்.
"மாமா.. நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"
நிஷா பதறிப்போனாள். வேகமாக அவன் வாயைப் பொத்தினாள். தலையை வேகம்
வேகமாக இடதும் வலதுமாக அசைத்து, வேணாம்
வேணாம் என்றாள்.
"கதிர்... என்னப்பா சைலன்ட் ஆகிட்ட"
கதிரால் பேசமுடியாமல் போக, சட்டென்று அவளது
வளைந்த இடுப்பை கைவைத்துப் பிடித்தான். இடுப்புச் சதை பிதுங்கும் அளவுக்கு
நன்றாகப் பிடித்துக்கொண்டான்.
"ஆவ்வ்...."
அவள் துள்ளிக்கொண்டு அவன் வாயிலிருந்து கையை எடுத்தாள். ஆனால்
இப்போது போனை பிடித்துக்கொண்டாள்.
அவனோ நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருந்தான்.
"மாமா என்ன மன்னிச்சிடுங்க மாமா. எனக்கு
நிஷா....."
நிஷா நச்சென்று அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள்.
"கதிர்... கதிர்.. என்னப்பா ஆச்சு?"
கதிர், கிறங்கிப்போய், கிறுகிறுத்துப்போய்
உட்கார்ந்திருக்க.... நிஷா போனோடு எழுந்து ஓடினாள். அவன் தன்
இடுப்பை இழுத்து இழுத்து வைத்துப்
பிடித்துக்கொண்டிருந்ததால்... இறங்கிவிட்டிருந்த
கொசுவத்தை... தொப்புளுக்குமேல் ஏற்றிவிட்டுக்கொண்டு.. பேசினாள்.
"நல்லாயிருக்கீங்களா அப்பா?"
"நல்லாயிருக்கேன்மா. கதிர் எதோ சொல்லிட்டிருந்தானே"
"கொஞ்ச நாளைக்கு முன்னாடி.... என்னை சந்தோஷமா இருக்கச்சொல்லி
திட்டினாரு. அதான் மனசு கேட்காம உங்களுக்கு போன் பண்ணினார் போல"
"ஓ... அப்படியா. சரி சரி. லக்ஷ்மிக்கு ஒரு விவரமும் தெரியாது. ஆனா
பையன நல்லா வளர்த்திருக்காள்ல?"
கதிரோ, அவர் இப்படி
சொல்லிக்கொண்டிருக்கும்போதே... புடவை உடுத்திய பூந்தோட்டம் போல நின்றுகொண்டிருந்த அவளை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டு மறுபடியும் அவள் கூந்தல்
வாசனையை முகர..., "அ.ஆமாப்பா. நிறைய
புக்ஸ்லாம் கூட படிக்கிறாரு. சரி நாளைக்கு பேசுவோம். bye..." என்று கட் பண்ணினாள்.
அவள் போனை கட் பண்ணியதும் அவன் அவளை திருப்பி நிறுத்தி வேக வேகமாகக் கேட்டான்.
"ஏன் நிஷா தடுத்த? இதையெல்லாம்
straight-ஆ கேட்டுடனும். டிலே பண்ணக்கூடாது. நிஷா நீ
எனக்கு வேணும். என்னோட பொண்டாட்டியா வேணும்."
நிஷா க்ளீன் போல்டு ஆனாள். கண்கள் விரிய அவனைப் பார்த்துக்கொண்டு,
வியந்து நின்றாள். தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
"அ... அவசரப்படாத கதிர். நான்தான் உன்னை
மயக்கிட்டேன்னு... அவங்கள்லாம்..."
நிஷா பாவமாகச் சொன்னாள். தன்மேல் மீண்டும் ஒரு பழி விழப்போகிறது
என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
ஒருபக்கம்... அவன் தன்மேல் உள்ள வெறித்தனமான ஆசையில் தன்னை பெண் கேட்பதை நினைத்து சந்தோசம். மறுபக்கம், வீட்டில் என்ன நினைப்பார்களோ என்ற பயம், சோகம். அந்தக் கலக்கம் அவள் கண்களில் தெரிந்தது.
"நீ எங்க என்னை மயக்குன? நீ உண்டு உன்
வேலை உண்டுன்னுதானே இருந்த."
"யாரும் நம்பமாட்டாங்க கதிர். என் நிலைமை அப்படி"
கதிருக்கு, அவள் சொல்ல வருவது புரிந்தது.
உண்மைதான். ஒருதடவை சறுக்கிவிட்டால் அப்புறம் என்ன பண்ணினாலும் தப்பாகத்தான்
பார்ப்பார்கள். சிறு வயதிலிருந்தே எனக்கு நிஷா மேல் இருக்கும் க்ரஷ் இவர்கள் யாருக்கும் புரியாது.
"நான் பார்த்துக்கறேன். நீ எதைப்
பற்றியும் கவலைப்படாத. சரியா?"
"ம்..." என்றாள். நான் பார்த்துக்கறேன்... என்ற அவனது வார்த்தை,
அவளுக்கு சுகமாக இருந்தது. எல்லா விஷயங்களிலும்... அவன் வேகமாக
முடிவெடுப்பது அவளுக்குப் பிடித்திருந்தது.
அவனை இறுக்கிக் கட்டிப்பிடித்துக்கொண்டு இன்னொரு
முத்தம் கொடுக்கவேண்டும்போல் இருந்தது. ஆனால் அதற்குள் லக்ஷ்மி
உள்ளே வர, விலகி நின்றாள். பாத்திரங்களை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள்.
"அவன் சீக்கிரம் சாப்பிட்டுட்டு எழுந்திடுவானே... இன்னுமா சாப்பிட்டீங்க?"
நிஷா முழித்தாள். எக்ஸைட்மென்டில்... சமாளிப்பதற்கு அவளுக்கு ஒன்றும்
தோணவில்லை. ஆனால் அவள்
கொடுத்திருந்த முத்தத்தால்... கதிர் உற்சாகமாக சொன்னான்.
"நிஷாவுக்கு... அவ வயசுப்பொண்ணா இருந்தபோது ட்ரெஸ் பண்ணின மாதிரி
இப்போ டிரஸ் பண்ணிக்க ஆசையா இருக்காம். பாவாடை சட்டைலாம் போடணுமாம்."
"அய்யோ இல்ல...!!" - அவள் வேகம் வேகமாக தலையை இடதும் வலதுமாக
அசைத்தாள்.
"கூச்சப்படாத நிஷா, உன் அத்தை
ஒன்னும் நினைக்க மாட்டாங்க. இது நம்ம வீடுதானே. ட்யூஷன் முடிஞ்சதுக்கப்புறம் நீ
ஆசைப்பட்டமாதிரி ட்ரெஸ் பண்ணிக்கோ"
'டேய் இதெல்லாம் உன் ஆசையா, என் ஆசையா?
பாவி!' - அவள் அவனை பொய்க்கோபத்தோடு முறைத்துப் பார்த்துக்கொண்டு
நின்றாள்.
"நிஷாவுக்கு தாவணி இப்போ நல்லாவா இருக்கும்?" என்றாள்
லக்ஷ்மி
'அய்யோ அத்தை நீ வேற பாயிண்ட் எடுத்துக் கொடுக்குறியே....!'
"ஆசைப்படுறா. சென்னைல போடவிடலையாம். இங்கேயாவது போட்டுட்டுப்
போகட்டுமே.. சாயங்காலம் கொஞ்ச நேரம்"
"அப்படியா கண்ணு... தாவணி போடணுமா.. உனக்கு அவ்ளோ ஆசையா"
நிஷா, தயங்கித் தயங்கி, "அ... ஆமா அத்தை..." என்றாள். ப்ளஸ் டூ படிக்கும்போதோ காலேஜ் பர்ஸ்ட்
இயரிலோ.... ஊர்த்திருவிழாவுக்கு இங்கே வந்திருந்தபோது தாவணியில் தான் சந்தோஷமாக
சுற்றித் திரிந்ததை நினைத்துப் பார்த்தாள். 'இந்தப் பொறுக்கி என்னையேதான்
பார்த்துக் கொண்டிருந்திருப்பான் போல.'
"இப்போல்லாம் யாருப்பா பாவாடை தாவணிலாம்
போடுறா. சரி அவ ஆசைப்பட்டான்னா வாங்கிக்கொடு"
சொல்லிவிட்டு, லக்ஷ்மி தூங்கப்போக, கதிர் அவளை அவளது ரூமில் கொண்டுபோய் விடுவதற்காக, படிக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நிஷாவைத் தூக்கப்போனான்
"அவகிட்ட எதுக்குடா போற?"
தனது படுக்கை அறைக்குள் நுழைந்த லக்ஷ்மி வெளியே வந்து நின்றுகொண்டு கேட்க, இவள் இன்னும் உள்ள போகலையா? என்று கதிர் கடுப்போடு நின்றான். நிஷா முகத்தை திருப்பிக்கொண்டு
சிரித்தாள்.
"ரூம்ல ஒரு லைட்டு எரியலையாம்.." என்றான்.
"எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம். போய் படு. நிஷா நீ போய்
தூங்கும்மா."
"சரி அத்தை."
அவள் அடக்கமாக, புடவையை நடுவில் பிடித்துக்கொண்டு,
அவனை நினைத்து சிரித்துக்கொண்டே படியேறினாள்.
மேலே போய் நின்றுகொண்டு, "போய்யா... போய் படு..." என்பதுபோல் கையை
காட்டினாள்.
"நீ கீழே வா..." என்றான்.
"ம்ஹூம்." என்று குறும்பாகச் சொல்லிவிட்டுக் கதவை அடைத்தாள்.
கதவுக்குப் பின் சாய்ந்துகொண்டு... சந்தோஷமாக நின்றாள்.
'நேரா அப்பாவுக்கே போன் போட்டுட்டான். ராஸ்கலுக்கு ரொம்பத்தான் ஆசை!'
'கதிர்... சீக்கிரமே உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்ன மாதிரி ஒரு குழந்தை பெத்துக்க ஆசையா இருக்குடா...' என்று ஆசையோடு
உதட்டுக்குள் சொல்லிக்கொண்டே முகத்தை நிமிர்த்தி உச்சந்தலையை கதவில்
சாய்த்துக்கொண்டு... சந்தோஷமும் வெட்கமும் கலந்த முகத்துடன்... தனக்குள்
முளைவிட்டுக்கொண்டிருக்கும் அந்த அழகான உணர்வை அனுபவித்து ரசித்துக்கொண்டு... கண்மூடி நின்றாள்.
நிஷா கதிர் திருமண நடக்க வேண்டும்
ReplyDeleteநிஷா கதிரையும், சீனு அகல்யாவையும் கல்யாணம் பண்ணிக் கொள்ளட்டும், அதுதான் சரியாக இருக்கும்.
ReplyDelete