யார் அவன்?

மறுநாள் -
நிஷா, மார்பில் புத்தகத்தை வைத்துக்கொண்டு
அடக்கமாக இறங்கி வர, அவள் எப்போது வருவாள் என்று
காத்திருந்த இவன், "அம்மா... நிஷாவுக்கு சுத்திப்
போடும்மா..." என்றான்.
இனிமேல் அடிக்கடி நிஷாவுக்கு
சுத்திப்போடவேண்டும் என்று அவன் ஆர்டர் போட்டிருந்தான். ஷேவ் பண்ணியிருந்தான். அவள், புத்தகங்களை அவனிடம் கொடுத்துவிட்டு,
அத்தையின்முன் நின்றாள்.
நாட்கள் இனிமையாய் கழிந்தன.
லக்ஷ்மிக்கு, இப்போது ரெஸ்ட் கிடைத்தது. சாப்பாடு
பரிமாறுவதெல்லாம்.. நிஷாதான் பார்த்துக்கொண்டாள். அத்தை
கஷ்டப்படுறாங்களே என்று மற்ற சிறு சிறு வேலைகளிலும் அவளுக்கு ஒத்தாசையாக இருந்தாள்.
அன்று இரவு -
"அவன் வர லேட்டாகுதே.... என்னம்மா நீ
சாப்பிட்டுட்டு படுக்குறியா?"
"அப்புறம் சாப்பிட்டுக்கறேன் அத்தை... அவர் வரட்டும்"
லக்ஷ்மி லக்ஷ்மியாக இல்லை. 'ச்சே.. இந்தப் புள்ளையை பேசி முடிக்காம
விட்டுட்டோமே'
அத்தை படுக்கப்போய்விட... நிஷா காத்துக்கொண்டிருந்தாள். இன்று கதிர்
வரும்போது அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தால் என்ன? என்று
விரலைக் கடித்துக்கொண்டு... நாணத்தோடு யோசித்துக்கொண்டிருந்தாள்.
நிலவு வெளிச்சம் வீட்டு முற்றத்தை பகல்போல் காட்டிக்கொண்டிருந்தது.
கதிர், வாழைத்தாரோடு வீட்டுக்குள் வந்தான்.
அதை பக்குவமாக ஒரு ரூமில் நிமிர்ந்த நிலையில் வைத்துவிட்டு வெளியே வந்தபோது,
நிஷா... பாவாடை சட்டையில் இறங்கி வந்துகொண்டிருந்தாள்.
அவள் அவனை ரசித்தாள். வாயை திறந்து
காட்டினாள்.
"எனக்காகத்தான் சாப்பிடாம இருந்தியா"
"ம்..."
"நாளைக்கே நான் சென்னை போறேன்"
"எதுக்கு?"
"என்னால முடியாதும்மா. உன்மேல பாய்ஞ்சிடுவேனோன்னு எனக்கே பயமா
இருக்குது"
நிஷாவுக்குப் பெருமிதமாக இருந்தது. அவனது தவிப்பு...
பிடித்திருந்தது.
சாப்பிட்டு முடித்ததும்... தட்டில் கைகழுவினான். ஈரக்கையால் வாயைத்
துடைத்தான். எதிர்பாராவிதமாக நிஷா தன் பாவாடையால் அவன் வாயைத் துடைக்க...
கிறங்கினான்.
நிஷாவுக்கும் ஒருமாதிரியாகத்தான் இருந்தது. பாவாடை இழுபட்டிருந்ததால்,
தன் முழங்கால்கள் வரை அவனுக்குத் தெரிய.. இனம்புரியாத ஒரு கிளர்ச்சி. அவனைப் பார்க்க சிரமப்பட்டுக்கொண்டு.... கொலுசுவரை இழுத்துவிட்டாள்.
கதிருக்கு, அவள் உதடுகளைக் கவ்விக்கொள்ளவேண்டும்
என்ற ஆசை கிளர்ந்தெழுந்தது. அதைவிட... அவள் உதடுகளை
ரசித்துக் கொண்டேயிருக்க வேண்டும் போல் இருந்தது.
இதுக்கும் மேல இருந்தா கிறுக்காயிடுவோம் என்று... அவளைத்
தூக்கிக்கொண்டான்.
"நேரமாச்சு நிஷா. போய்
படுத்துக்கோ"
"ம்ஹூம். எனக்கு உன்கூட பேசிக்கிட்டே
இருக்கனும்போல இருக்கு கதிர்"
"எனக்கும்தான் நிஷா"
நிஷா அவனைக் கழுத்தோடு சேர்த்துக் கட்டியணைத்துக்கொண்டாள். அவனுக்கு
முத்தம் கொடுக்கவேண்டும் போல் உதடுகள் துடித்தன.
அவன், கிணற்ற்றுக்குப் பின்புறம்... அவளை
உட்காரவைத்தான். மண்தரையில்.. அவள் முழங்கால்களை மடக்கி
உட்கார்ந்துகொள்ள, அவன் அவளை உரசிக்கொண்டு, நெருக்கி உட்கார்ந்துகொண்டான். சட்டென்று அவள் கண்ணத்தில்
முத்தமிட்டான்.
நிஷா அவனைப் பொய்யாக முறைத்தாள். "இதுக்குத்தான்
இங்க கூட்டிட்டு வந்தியா பொறுக்கி"
"இல்ல. இதுக்கும்தான்..." என்று அவள் இடுப்பில் கைவைத்து அவளை
அணைத்துப் பிடித்துக்கொண்டான். நிஷாவுக்கு சுகமாக இருந்தது. அவன் தோளில்
சாய்ந்துகொண்டாள்.
"அப்படியே... சின்னப்பொண்ணு மாதிரியே இருக்குற நிஷா"
அவள் பதில் பேசாமல்... அவன் சட்டையை பிடித்து இழுத்து
வைத்துக்கொண்டிருந்தாள். கேசுவலாக அவன் தன் இடுப்பு வளைவில் கைவைத்து அழுத்திப்
பிடித்திருப்பது அவளை என்னவோ செய்தது.
"எதுக்காக என்ன பாவாடை சட்டை போடச்சொன்ன கதிர்?"
"கண்டிப்பா சொல்லனுமா?"
"சொல்லு..." - அவள் கிறக்கமாக கேட்டாள்.
"நீ காலேஜ் சேர்ந்த புதுசுல... ஒரு தடவை இங்க
வந்திருந்தீங்க அப்போ ஒருநாள் இந்த மாதிரி ஒரு
பாவாடை சட்டை போட்டுக்கிட்டு தோட்டத்துக்கு வந்திருந்தே ஞாபகம் இருக்கா?"
"ம்ஹூம். சுத்தமா ஞாபகம் இல்ல"
"ஏய்.. நீ கூட மரத்துல இருந்த தேன் கூட்டை ஆச்சரியமா
பார்த்துட்டிருந்தியே.. இது வேணும் வேணும்னு ஆசைப்பட்டியே... நான் தேன் எடுக்கும்போது,
தேனீ விரட்டுதுன்னு பயந்துபோய் என்ன கட்டிப்பிடிச்சிக்கிட்டியே..."
நிஷாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் காட்சி சட்டென்று கண்முன்
வந்து நின்றது. உண்மைதான். பட்.. ட்ரெஸ்.... ஞாபகத்துக்கு வரவில்லை
"ஆமா... ஞாபகம் இருக்கு. அப்போ நான் இந்த ட்ரெஸ்ஸா போட்டிருந்தேன்?"
"Same dress தான். Same கலர். சைஸ் மட்டும் சின்னது."
"சும்மா சொல்லாத. அப்போ என்கிட்ட இந்த கலரே இல்ல"
"இருந்தது. எனக்கு நல்லா தெரியும்."
நிஷா அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். "எப்படி
இவ்ளோ உறுதியா சொல்ற?"
"ஏன்னா அந்த ட்ரெஸ்ஸே இப்போ என்கிட்டதானே இருக்கு"
"என்னது? உன்கிட்டயா?"
"ஊருக்குப் போகும்போது நீ விட்டுட்டுப் போயிட்ட. அன்னைலேர்ந்து உன்னோட
அந்த ட்ரெஸ் என் பெட்டிக்குள்ளதான் இருக்கு. யாருக்கும் தெரியாது."
நிஷாவுக்கு வார்த்தைகள் வரவில்லை. மனது நனைந்து.. கண்களில் கண்ணீர்
முட்டுவதுபோல் இருந்தது.
"எ.. என்ன கதிர் சொல்ற?"
"இரு. வரேன்.... எடுத்துட்டு வரேன்..." என்று எழுந்து போனான். அயர்ன்
பண்ணி.. மடித்து வைக்கப்பட்டிருந்த அவளது டீன் ஏஜ் பருவ
பாவாடை சட்டையை... கொண்டுவந்து அவள் கையில்
கொடுத்தான்.
நிஷா... கண்கள் விரிய அந்த ட்ரெஸ்ஸை கைகளில் வைத்து விரித்து
விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். கடகடவென்று அந்தக் காட்சி... நேற்று
நடந்ததுபோல் கண்முன் வந்து நின்றது.
குளமான கண்களுடன் அவனைப் பார்த்தாள்.
"என்னாச்சு நிஷா?"
"ஒ... ஒண்ணுமில்ல கதிர்" - குரல் தழுதழுக்கச் சொன்னாள்.
"ஏய்.... இங்க பாரு நீ இப்படிப் பண்ணா அப்புறம் நான் உன்கிட்ட எதையும்
சொல்லமாட்டேன்"
அவள், பதில் பேசாமல், அந்தத்
துணிகளை அணைத்துப் பிடித்துக்கொண்டு, அப்படியே அவன்
மடியில் படுத்துக்கொண்டாள்.
'என்னை ஒன்சைடா இவ்ளோ டீப்பா இங்கே
கதிர் லவ் பண்ணிட்டு இருந்திருக்கானே!' என்று நினைக்க நினைக்க நிஷாவுக்கு வியப்பாக
இருந்தது. 'நான் இவ்வளவு valuable ஆன பெண்ணா' என்று
பெருமையாக இருந்தது. 'இத்தனை நாளும் இந்த அன்பை மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு
எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்?' என்று நினைக்கும்போது அவனது
ஏக்கங்களுக்கு மருந்தாக அவனை கட்டியணைத்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது.
அவன், அவளது தலையை
கோதிவிட்டுக் கொண்டிருந்தான். அவளது தோளில்... கையில்.. இதமாகத்
தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தான். முடி அவள்
கண்களில் விழாதவாறு ஒதுக்கிவிட்டுக் கொண்டிருந்தான். அவனது கேரிங்கில்... அவளுக்கு
தூக்கம் வர, அவளை ரூமுக்கு கொண்டுபோய் அவள்
நெற்றியில் முத்தம் கொடுத்துப் படுக்கவைத்தான்.
"ரூம்ல அடிக்கடி அழுதுட்டு கிடக்குறியாமே... வேணும்னா அம்மாகூட
படுத்துக்குறியா... இனிமே அப்படிலாம் அழக்கூடாது சரியா"
"முதல்லதான் அப்படி இருந்தேன் கதிர். இப்போதான் எனக்காக நீ இருக்கியே"
"குட். இனிமே நீ அழுறதையே நான் பார்க்கக்கூடாது சரியா"
"ம்.."
"குட் நைட்" - அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னான்
"கதிர்..."
"என்ன?"
நிஷா கொஞ்சம் எழுந்து அவன் கண்ணத்தில் முத்தம் வைத்தாள். கதிரின்
முகம் மலர்ந்தது.
நிஷா அவனைக் காதலோடு பார்த்துச் சிரித்துக்கொண்டே படுத்துக்கொண்டாள்.
அவளது முக பாவனைகளும் காதல் பார்வையும் கதிரை கொல்லாமல் கொல்ல... அவனுக்கு
ஜிவ்வென்றிருந்தது. ப்பா.... என்று தலையை உதறிவிட்டு வாசலுக்கு நடந்தான்.
போவதற்கு மனசே இல்லாமல் வாசலில் நின்றான். அவளையே கண்கொட்டாமல்
பார்த்தான். அவளும் அவனையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள்.
"என்னடி இப்படிப் பார்க்குற?"
"எப்படிப் பார்க்குறேன்?"
"கத்தியால குத்துற மாதிரி"
நிஷா சிரித்துக்கொண்டே மன நிறைவோடு தலையணைக்குள் முகத்தை
அழுத்திக்கொண்டாள்.
முந்தின இரவு அவள் கண்ணீரில் நனைந்த தலையணை இன்று அவள் வெட்கத்தில்
நனைந்து கொண்டிருந்தது.
அருமையான காதல் கதை இந்த பகுதி, நன்றாக இருந்தது.
ReplyDelete