காதல் சுகமானது 1

written by raja


வருடம் 2016

பெங்களூர் சிட்டி இரயில்வே ஸ்டேஷன்.
காலை 7 மணி,

பல ஊர்களுக்கு செல்ல வேண்டிய ரயில்கள் புறப்பட தயாராக இருந்தன.

அப்பொழுது ஒலி பெருக்கியில் மைசூரில் இருந்து காட்பாடி அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் வண்டி எண் 12610 சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்னும் சிறிது நேரத்தில் பிளாட்பார்ம் நம்பர் 4 ஐ வந்தடையும் என்று அறிவிப்பு பல மொழிகளில் திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருந்தது.

"4 வது பிளாட்பாரம் அப்பா, வாப்பா மெதுவா படிக்கட்டு வழியா ஏறி இறங்கிடலாம்" என்று அந்த பதினைந்து வயது மங்கை அழைக்க இருவரும் படிக்கட்டு ஏற தொடங்கினர். தீடீரென அவருக்கு கண் இருட்டி கொண்டு வந்தது. மூச்சு விட சிரமப்பட்டு உடல் முழுக்க வியர்த்தது. கையை தூக்க முடியாமல் நெஞ்சை பிடித்து கொண்டு அப்படியே உட்கார

"அப்பா என்னப்பா ஆச்சு" - அந்த இள நங்கை கதற


"தெரியலம்மா ,நெஞ்சு ஒருபக்கமா வலிக்குது" என்று தந்தை கூற, அந்த பெண் யாராவது உதவிக்கு வருமாறு அழைத்தாலும் யாரும் கிட்ட கூட வரவில்லை. ஏதும் அறியா ஊரில் வெளியே ஓடி சென்று ஆட்டோவை அழைத்து வர அந்த பேதை பெண் ஓடினாள்.

அப்பொழுது ஊருக்கு செல்ல வந்த இரு வாலிபர்கள் கும்பலாக கூட்டம் கூடி இருந்ததை பார்த்து என்னவென்று எட்டி பார்க்க ஒரு வயதான மனிதர் நெஞ்சு வலியில் துடித்து கொண்டு இருப்பதை பார்த்து பதறினர்.

முதலில் எல்லோரும் அவர் மூச்சு விட கொஞ்சம் வழி விடுங்க என்று கத்தினர். முதல் உதவி செய்தும் அவர் வலி இன்னும் குறையாமல் இருக்க உடனே அவரை போர்டர் லக்கேஜ் தூக்கும் டிராலியில் வைத்து தள்ளி கொண்டு வெளியே பறந்தனர். பார்க் செய்யப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தில் அவரை அமர்த்தி பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு triples அடித்து ,கை காட்டி தடுக்க முயன்ற ட்ராஃபிக் போலீஸுக்கு தண்ணி காட்டி விட்டு மின்னலென பறந்தனர்.

பக்கத்தில் உள்ள MR ஹாஸ்பிடல் CASUALITY கொண்டு சென்று டாக்டரிடம் காண்பித்தனர். HEART ATTACK வந்ததை டாக்டரும் உறுதி செய்து உடனடியாக 15000 ரூபாயை கட்டினால் மேற்கொண்டு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க முடியும் என்று கூறினார்.

உடனே அதில் 25 வயது உள்ள ஒரு வாலிபன் கேஷ் COUNTER ஓடி சென்று தன் தங்கையின் கல்யாணத்திற்கு வாங்கி வைத்து இருந்த மோதிரத்தை கொடுத்து
"மேடம் இந்த மோதிரத்தை வைத்து கொண்டு கொஞ்சம் RECEIPT போட்டு கொடுங்க, Emergency patient க்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கனும்.கொஞ்ச நேரத்தில் நான் பணம் எடுத்து கொண்டு வந்து இந்த மோதிரத்தை திருப்பி வாங்கி கொள்கிறேன்." என்றான்.

ஆனால் cash counter-ல் இருந்த பெண் "சார் அதெல்லாம் முடியாது. போய் பணம் எடுத்திட்டு வாங்க அப்போ தான் நான் RECEIPT போட முடியும்." என முரண்டு பிடித்தாள்.

"மேடம் பிளீஸ் புரிஞ்சிக்கோங்க, அவர் உயிருக்கு போராடி கொண்டு இருக்கார். இங்க பாருங்க நேற்று தான் இந்த மோதிரம் வாங்கினேன் அதோட receipt இது. அரை சவரன் மோதிரம் இது. சரியா ஒரு மணி நேரம் கழித்து நான் பணம் கட்டி விட்டு இந்த மோதிரம் வாங்கி கொள்கிறேன்."

கேஷ் கவுண்டரில் இருந்த பெண்ணும் சற்று மனம் இளக "சரியா ஒரு மணி நேரம் கழித்து வந்து பணம் கட்டிடனும் சார்" என்றாள். 

"கண்டிப்பாக மேடம்"

மீண்டும் casualty ஓடி வந்தான்,

"டாக்டர் பணம் கட்டி விட்டேன் ,சீக்கிரம் ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க இந்தாங்க பணம் கட்டிய ரசீது,"

டாக்டர் அவனிடம் "இந்தாங்க அவரோட ஃபோன் தொடர்ந்து அடிச்சிகிட்டே இருக்கு எடுத்து பேசுங்க. அப்புறம், நீங்க சரியான நேரத்தில் அவரை கொண்டு வந்ததால் உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்ல. தேவையான ட்ரீட்மென்ட் கொடுத்தாச்சு"

"ரொம்ப நன்றி டாக்டர்."

மீண்டும் அடித்த போனை அழுத்தி "ஹலோ" என்று அந்த வாலிபன் பேச மறுமுனையில் அந்த பெண் குரல் "அப்பா அப்பா" என்று தேம்பி தேம்பி அழுதது.

"இந்தாமா பொண்ணு அழாத, உங்க அப்பா நல்லா இருக்கார். இங்க பக்கத்தில் உள்ள MR ஹாஸ்பிடலில் தான் அட்மிட் பண்ணி இருக்கோம். நீ பதட்டப்படாமல் இங்கே CASUALITY வா."

"ரொம்ப நன்றி சார். நான் உடனே வரேன்."

அந்த வாலிபன் அங்கு இருந்த நர்சிடம் சென்று அந்த போனை கொடுத்து "சிஸ்டர் இன்னும் கொஞ்ச நேரத்தில் இவரோட பொண்ணு வந்து விடுவார்கள். நான் கொஞ்சம் அவசரமாக கிளம்ப வேண்டி இருக்கு. அவர்களிடம் இந்த போனை மட்டும் கொடுத்து விடுங்கள்." என்றான்.

"சரிங்க சார்." என்று அந்த நர்ஸும் வாங்கி கொண்டார்.

அவனிடம் கூட வந்தவன் "டேய் மச்சான் காலையில் வெறும் வயிற்றில் உன்னை ரயில் ஏற்ற வந்தது. ஒரு டீயாவது வாங்கி கொடுடா." என்று கேட்க

"அதுக்கென்ன மாமா, வா கேன்டீன் போவோம்." என்று அவனை அழைத்து சென்றான்.

கேன்டீனில் டீ அருந்தியவாறே, "டேய் உன் தங்கச்சிக்கு நாளைக்கு கல்யாணம் ஆசையா வாங்கி வைத்து இருந்த மோதிரத்தை இங்கே கொடுத்துட்டு அப்படியே போற. அந்த பொண்ணு வருகிற வரை இருந்து வாங்கிட்டு போகலாம்லடா." என்றான் அவன் நண்பன்.

அவனோ பதிலுக்கு "இல்ல மாமா, அவரை பார்க்கும் போதே தெரியுது. அவங்க கிட்ட காசு இல்லைனு. ஏதோ நம்மால முடிந்த சின்ன உதவி விடு."

"உனக்கு எப்படி தெரியும், அவங்க கிட்ட காசு இல்லைனு, நீயே உன் தங்கச்சி கல்யாணத்துக்கு கடன் வாங்கிவச்சிருக்க.

"டேய் மாமா, அவர் வைச்சிருக்க போன பாரு, பட்டன் மேல் நம்பர் எல்லாம் அழிந்து ரெண்டு பட்டன் உடைந்து, 50 ரூபா key pad கூட மாற்றாமல் வச்சுருக்கார். அதில் இருந்தே தெரியுது அவர் கிட்ட காசு இல்லைனு."

"சரி உன் தங்கச்சி கல்யாணத்திற்கு இப்போ என்ன பிரசெண்ட் பண்ணுவ,"

"அதுவா, இருக்கவே இருக்கான் நம்ம ஐந்து வட்டி அழகேசன். ஏற்கனவே தங்கச்சி கல்யாணத்திற்கு அவன் கிட்ட ரெண்டு லட்சம் கடன் வாங்கி இருக்கேன். இதுக்கும் சேர்த்து வாங்கிட்டா போச்சு."

"என்னவோ பண்ணி தொல"

"சரி மாமா, ட்ரெயின் miss ஆயிடுச்சு. என் ஊருக்கு போக இப்போ வேற ட்ரெயின் கிடையாது. என்னை கொஞ்சம் மைசூர் சர்க்கிள்ல ட்ராப் பண்ணிடு."

"ஏண்டா, சொந்த தங்கச்சி கல்யாணத்திற்கு கூட ஒரு நாள் முன்னாடி போகாமல் இப்படி லேட்டாவா போவ. ஒரு வாரம் லீவு எடுத்து போய் தொலைய வேண்டியது தானே"

"டேய் நான் என்னடா பண்ணட்டும், அந்த கொம்பெரி மூக்கன் லீவே கொடுக்கல. என் பெரியம்மா, பெரியம்மா பசங்க கூட நேற்றே கிளம்பிட்டாங்க. நான் இப்போ ஊருக்கு போய் இறங்கிய உடனே என் தங்கச்சி என்னை துரத்தி துரத்தி அடிக்க போறா"

"வாங்கு மச்சான் நல்லா வாங்கு. உனக்கு நல்லா வேணும். அவ்வளவு கஷ்டமா இருந்தால் பேசாம இந்த வேலையை விட்டு வேற வேலை தேட வேண்டியது தானே."

"அது தான் மச்சான், சென்னையில் ஒரு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி இருக்கேன். maximum கிடைக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஊரான சென்னைக்கே சென்று விடுவேன்."

"சரி வாடா போலாம் நேரமாச்சு."

அப்போதுதான் அந்த யுவதி மருத்துவமனைக்கு வந்தாள்,

"சிஸ்டர் என் அப்பா எப்படி இருக்கார்."

"எந்த பேஷண்ட்மா,"

அப்பொழுது மேசையில் இருந்த செல்போனை பார்த்து "இது எங்க அப்பாவோட செல்ஃபோன்" என்று அந்த பெண் கூற

"ஓ இவரா, இவர் நல்லா இருக்கார்." என்றாள்.

"சிஸ்டர் எங்க அப்பாவை பார்க்கலாமா?"

"ஒரு பத்து நிமிஷம் கழித்து பார்க்கலாம்."

"அப்புறம் சிஸ்டர் எங்க அப்பாவை இங்கே அட்மிட் பண்ண நபர் யாரு,"

"அவர் அப்பவே கிளம்பிட்டாரு" என்று சிஸ்டர் சொல்லும் போதே, அந்த இருவர் படிக்கட்டில் இறங்கியதை பார்த்து "அதோ சிகப்பு கலர் பேக் மாட்டிகிட்டு  போறாரு பாரு அவர் தான்" என்று அந்த சிஸ்டர் கை காட்ட, காட்டிய திசையில் அந்த யுவதி ஓடினாள்.


"சார் ஒரு நிமிசம் நில்லுங்க" என்று கத்தி கொண்டே அந்த பெண் ஓடி வர, அந்த இருவரும் அதை கவனிக்காமல் பைக்கில் அமர்ந்து சிட்டாய் பறந்தனர். இருந்தும் அவன் முகம் அந்த யுவதியின் மனதில் கல்வெட்டு போல ஆழமாக பதிந்தது.

வார்டுக்கு திரும்பிய அந்த யுவதியை பார்த்து சிஸ்டர், "உன்னை உடனே கேஷ் கவுண்டர் வர சொன்னாங்க" என்று சொல்ல அவள் கேஷ் கவுண்டர் சென்றாள்.

"மேடம் நீங்க என்னை வர சொன்னீங்க..!!"

"நீ யாரும்மா?"

"நான் ஆறுமுகம் பேஷன்ட்டோட பொண்ணு."

"என்னது ஆறுமுகமா? இங்கே அட்மிட் பண்ணவர் முருகேசன் என்று தானே சொன்னார்."

"மேடம் எங்க அப்பா நினைவு இல்லாமல் இருந்தார்.அதனால் அட்மிட் பண்ண வேண்டும் என்று ஏதோ ஒரு பேரை சொல்லி இருப்பார்."

"சரி சரி ஏதோ ஒன்னு, பணத்திற்கு பதிலாக இந்த மோதிரத்தை கொடுத்துட்டு போய் இருக்கார். நீ பணத்தை கட்டிட்டு இந்த மோதிரத்தை வாங்கிட்டு போ."

"ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்க மேடம்."

விறுவிறுவென வெளியே போன அவள் பளிங்கு கழுத்தில் மின்னி கொண்டு இருந்த தங்க செயின் திரும்பி வரும் பொழுது காணாமல் போய் இருந்தது.

"மேடம் இந்தாங்க" என்று பணத்தை கட்டி விட்டு மோதிரத்தை பெற்று கொண்டு, அந்த மோதிரத்தை பார்த்து "யாருடா நீ, மின்னல் போல வந்த, எனக்கென்று இந்த உலகில் ஒரே ஒரு உறவாய் இருந்த என் அப்பாவை மீட்டு கொடுத்து விட்டு மின்னல் போல் மறைந்து விட்டாயே" என்று தனக்குள்ளேயே கேட்டு கொண்டு அந்த மோதிரத்தை பத்திரப்படுத்தி கொண்டாள்.

அவனோ தன் ஊருக்கு செல்ல வேலூர் பஸ்ஸில் ஏறி தன் தங்கையின் கல்யாணம் காணும் ஆவலில் சென்று கொண்டு இருந்தான்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

நேத்து ராத்திரி... யம்மா!

மாலை மங்கும் நேரம் 1

கொழு கொழு அண்ணி