முழு தொடர் படிக்க காயத்ரி, தன் நிலையை நினைத்து நினைத்து அழுதாள். அவளுக்கு, யாரிடமாவது கத்தி அழவேண்டும்போல் இருந்தது. அழுதுகொண்டே மன்னிப்பு கேட்கவேண்டும்போல் இருந்தது. நிஷாவுக்கு போன் போட்டாள்.
"சொல்லு காயத்ரி"
எப்போதும்போல்.. கனிவான குரல் மறுமுனையில் கேட்க.... இவள் மனம்விட்டு அழுதாள். எதுவும் பேசாமல்... அழுது தீர்த்துவிட்டு, போனை வைத்துவிட்டாள்.
குழந்தையை தோளில் போட்டு தூங்கவைத்துக்கொண்டிருந்த நிஷா, பதறிக்கொண்டு உடனே பார்வதிக்கு போன் பண்ண, அவள் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல... அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. "அபர்ணா ஆன்ட்டியை நல்லா பார்த்துக்கோங்க ப்ளீஸ்" என்று கண்கலங்க சொன்னாள். அவளுக்கு, கதிரிடம், பொய் சொல்லி சென்னைக்கு கிளம்பவேண்டிய சூழ்நிலை வந்தது.
சென்னையில் இறங்கியதும், குழந்தையோடு, நேராக காயத்ரியின் வீட்டுக்கு வந்தாள். அவர்களை பார்க்க ஓடினாள். காயத்ரி, ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள். நிஷாவை தனியாக கூட்டிப்போய், "நான் பெரிய தப்பு பண்ணிட்டேண்டி..." என்று ஓவென்று கத்தி அழுதாள்.
காயத்ரி, எல்லாமே சொன்னாள். ஒன்று விடாமல் சொன்னாள். இதைக்கேட்ட நிஷா, "என்னடீ நீ!!!! இப்படி பண்ணி வச்சிருக்கே?!" என்று கோபத்தில் அவளை ஓங்கி அறைய... ஆல்ரெடி வீக்காக இருந்த காயத்ரி சுருண்டு விழுந்தாள்.
நிஷாவுக்கு, உள்ளங்கையில் தீப்பிடித்ததுபோல் இருக்க, காயத்ரியை கோபத்தோடும் பரிதாபத்தோடும் பார்த்துக்கொண்டு கண்கலங்கி நின்றாள்.
சீனு, நிஷாவை பார்த்ததும், எழுந்து, தலை குனிந்து நின்றான். தள்ளாடியபடியே, நிற்க முடியாமல் நின்றான்.
நிஷாவால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியில், கண்களை அகலமாக விரித்து அவனைப் பார்த்தாள்.
பலவருட நோயாளி போல்... ஒல்லியான தேகத்தோடு... தாடியோடு.... தூங்காத கண்களோடு.... அவன் நின்ற கோலத்தைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல் நின்றாள் நிஷா.
"சீனு... என்ன இதெல்லாம்?" என்றபடியே இவள் அவன் கையைப் பிடிக்க.... அவன் அவள் கையை தன் முகத்தில் வைத்துக்கொண்டு அழுதான். "கண்ணனுக்கு நான் பெரிய துரோகம் பண்ணிட்டேன் நிஷாஆஆ..." என்று அழுதான்.
நிஷா, பல வருடங்கள் கழித்து அவன் தான் செய்த தவறுக்காக... தான் செய்த துரோகத்துக்காக வருந்தி அழுவதை... கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டு நின்றாள். தான் இப்படி கண்ணீர் விட்டு அழுது, கண்ணனிடம் மன்னிப்பு கேட்ட நாட்களை நினைத்துப் பார்த்தாள். வாழ்க்கைப் பிச்சை கேட்டு கண்ணனின் வீட்டுக்கு ராஜ்ஜோடு சேர்ந்து போனதை நினைத்துப் பார்த்தாள். அங்கிருந்து அழுதபடியே திரும்பி வந்ததும், அவள் வாழ்க்கையை வெறுத்து இருண்ட பாதாளத்துக்குள் விழப்போவதற்குமுன், கதிர் வந்து அவளை பூப்போல பிடித்து இழுத்து அணைத்துக்கொண்டதை நினைத்துப் பார்த்தாள். அவள் கண்ணீரை துடைத்து அவளை தூக்கிக்கொண்டதை நினைத்துப்பார்த்தாள்.
'கதிர் என் கண்ணீரோடு சேர்த்து என் பாவத்தையும் துடைத்தான்...'
'பஞ்சாயத்து தலைவராகப் போகிறேன் என்று சொன்னவனிடம், சிவில் சர்வீஸ் புத்தகங்களை கொடுத்திருக்கிறேன். அவன் படித்துக்கொண்டிருக்கிறான்....'
'வினய்... முடிந்தவரை தன்னைத் திருத்திக்கொண்டு, நம்பர் ஒன் பிசினஸ்மேன் என்கிற லட்சியத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறான்...'
'காவ்யாவின் கருணையால்... கண்ணனின் கையில் இப்போது பதக்கங்கள்... பாராட்டுக்கள்... கைதட்டல்கள்... நல்ல குடும்பம்...'
'இவன்??? இவன் மட்டும் ஏன் இப்படி ஆனான்? ஏன் நான் சொல்வதைக்கூட கேட்கமாட்டேன்கிறான்?'
சீனு, அவள் புறங்கைகளை அவன் கண்ணீரால் இன்னும் நனைத்துக்கொண்டிருக்க, அவனை... பிச்சைக்காரன் போல் பரட்டைத் தலையுடன் கேவிக் கேவி அழுதுகொண்டிருந்த அவனை.... பார்க்க சகிக்காமல் அவள் வேறு பக்கம் திரும்பி, காயத்ரியைப் பார்த்தாள்.
'காயத்ரி... நீ என் தோழி மட்டும் இல்லையடி. அதற்கும் மேல். நீ இப்படி செய்யலாமா?...' என்று மனதுக்குள் வேதனைப்பட்டுக்கொண்டு நின்றாள்.
கீழே விழுந்து கிடந்த காயத்ரி, மெல்ல எழுந்தாள். மெதுவாக சொன்னாள்.
"இப்படித்தான் நைட்டெல்லாம் அழுதுக்கிட்டே கிடக்கிறார் நிஷா. மாத்திரை கொடுத்தாலும்... தூங்கவே இல்ல. பயமாயிருக்கு...."
நிஷாவுக்கு நிலைமையின் சீரியஸ்னஸ் புரிந்தது. அவனை பெட்டில் உட்காரவைத்து, அவன் அருகில் உட்கார்ந்துகொண்டு, அவனை தன் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.
"சீனு.. சீனு.. இட்ஸ் ஓகே.. டோன்ட் வொரி.. டோன்ட் வொரி... எல்லாம் சரியாகிடும்..." என்று அவன் கண்ணத்தில் தட்டிக் கொடுத்தாள். அவனோ, தான் ஆம்பளை என்கிற கர்வமெல்லாம் போய் அவள் கைகளை இன்னும் இறுக்கமாக பிடித்துக்கொண்டு விம்மி விம்மி அழ.. அழுகையை நிறுத்தமுடியாமல் அழுதுகொண்டேயிருக்க... ஆறுதலாக அவனை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.
உண்மையான ஆறுதலுக்காக... ஏங்கிப்போயிருந்த சீனு, நிஷாவின் அணைப்புக்குள் அப்படியே ஒடுங்கிப்போய்விட்டான். அவனது விசும்பல், அழுகை, நடுக்கம்.. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய.... நிஷா அவனிடம் மெதுவாக சொன்னாள்.
"இட்ஸ் ஓகே சீனு. எல்லாம் சரியாகிடும். நீ கவலைப்படாதே. உனக்காக நாங்க எல்லோரும் இருக்கோம். இட்ஸ் ஓகே... இட்ஸ் ஓகே....."
சொல்லிக்கொண்டே அவள் அவன் முதுகை தடவி விட... அவன் அவளிடம் சரணடைந்தவனாய்... அவளை பிடித்துக்கொண்டு அவளது மார்புக்குள் ஒடுங்கிக்கொண்டான். புடவையில்... அழகு தேவதையாக வந்திருந்த நிஷாவின் கனத்த மார்புகளின் கதகதப்பில்... அவளது மார்புகளின் மென்மையில்... அவளது வாசனையில்.... அவன் மூச்சுவிடும் வேகம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சீராக.... நிஷா அவனை அணைத்தபடியே மெல்ல அவனையும் சேர்த்து நகர்த்தி கட்டில் headboard-ல் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள் .
சீனு, அவளது அணைப்பில்... தன்னை மறந்து... தன் வேதனைகளை மறந்து... அவளது பளிச்சென்ற பின்னிடையில் கைகளை வைத்து அவளை நன்றாகப் பிடித்துக்கொண்டு, அவள் மார்புகளுக்கு நடுவே நன்றாக முகத்தைப் புதைத்துக்கொண்டு படுத்துக்கொள்ள... நிஷா அவன் தலையை ஆறுதலாக கோதிவிட... அவன் அப்படியே தூங்கிப்போனான்.
காயத்ரி, அவளுக்குப் பக்கத்தில் வந்து... அவளிடம் பவ்யமாக கேட்டாள்.
"தூங்கிட்டாரா?"
"ம்ம்..."
அவள் மெதுவாக நடந்துபோய், முகத்தை கழுவினாள். கொண்டையை போட்டுக்கொண்டு சமைக்க ஆரம்பித்தாள்.
சந்திரன், பார்வதி, அபர்ணா, மூன்று பேரும், நிஷாவின் குழந்தையோடு, மெல்ல உள்ளே வந்தார்கள். நிஷாவின் மார்பில் தூங்கும் சீனுவைப் பார்த்தார்கள். நிஷா அவன் முதுகில் தட்டிக்கொடுத்துக்கொண்டே அவர்களை பார்த்தாள்.
"தூங்கிட்டான்..!" என்றாள்.
பார்வதிக்கு அழுகையே வந்துவிட்டது. குனிந்து நிஷாவின் நெற்றியில் முத்தமிட்டாள்.
'நீ மட்டும் சீனுவுக்கு மனைவியா வந்திருந்தா என் பிள்ளை எவ்வளவோ சந்தோஷமா இருந்திருப்பான்!! எங்கேயோ போயிருப்பான்!!!' என்று முதல் முறையாக மனதுக்குள் நினைத்தாள்.
"பாவம் உனக்கு குறுக்கு வலிக்குமே கண்ணு.." என்றாள்.
"பரவாயில்லைக்கா. கொஞ்ச நேரம் இவன் எதையும் நினைக்காம தூங்கட்டும்"
அவர்களுக்கு அப்போதுதான் நிம்மதியாயிருந்தது. திடீரென்று வீட்டில் அனைவருக்கும் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன், ஒரு மன நிம்மதி வந்திருப்பதுபோல் இருந்தது. காயத்ரி, கடகடவென்று சமைத்து முடித்துவிட்டு வந்தாள்.
"போதும் நிஷா பாவம் நீ எழுந்திரு.." என்றாள்.
"ஏண்டி இப்படி பண்ண? நான் ஒருத்தி எவ்வளவு கஷ்டப்பட்டேன்? கண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டார்?? எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுத்தானே இருந்தே. அப்புறம் ஏண்டி??"
காயத்ரி அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் தலையை குனிந்துகொண்டாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப்பார்த்தது.
"இனிமே இப்படி பண்ணவே மாட்டேன் நிஷா"
"சரி சரி நீ குளிச்சிட்டு fresh அப் ஆகிட்டு வா. நல்லா ட்ரெஸ் பண்ணிக்கோ"
காயத்ரி, மறுப்பு பேசாமல் போய் குளித்துவிட்டு, தலையில் ஈரத் துண்டுடன்... நன்றாக புடவை கட்டிக்கொண்டு பொட்டு வைத்துக்கொண்டு, கடவுளிடம் வேண்டிக்கொண்டு வந்தாள்.
"சாப்பிட வா நிஷா"
"எல்லாரும் சாப்பிடணும். அப்புறம்.. அப்பாவும் அம்மாவும் எனக்காக காத்திட்டு இருப்பாங்க. சீனு எழுந்ததும் நான் கிளம்பிடுவேன். ஓகே?"
"ஓகே" என்று சிரித்தாள்.
தன் மார்புகளில்... சூடாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்த சீனுவை, குழந்தையை கிடத்துவதுபோல் கட்டிலில் கிடத்திவிட்டு, நிஷா குறுக்கை பிடித்துக்கொண்டு எழுந்தாள்.
"தேங்க்ஸ்டி.." என்று கண்கலங்க சொன்னாள் காயத்ரி.
"உன்ன மதுரைல எங்க தோட்டத்துக்கு கூட்டிட்டுப் போய் அங்கே குழி தோண்டி புதைக்கப் போறேன்"
சொல்லிக்கொண்டே நிஷா, காயத்ரியின் தலையிலிருந்த டவலை உருவிக்கொண்டு பாத் ரூமுக்குள் போக... காயத்ரி சிரித்துக்கொண்டே கதவருகே போய் நின்றாள்.
"என் நிஷா செல்லத்துக்கு நைட்டி வேணுமா புடவை வேணுமா இல்ல சுடி வேணுமா...?"
"நான் உன்மேல செம கோபமா இருக்கேன். போயிடு"
அவள், சிரித்துக்கொண்டே போய் நிஷாவின் லக்கேஜ் பேகை நோண்டினாள். அதிலிருந்து ஒரு புடவை செட்டை எடுத்து வந்து பாத் ரூம் கதவில் தொங்கவிட்டாள். கதவை தட்டினாள்.
"என்னடி??" என்றபடியே கதவை திறந்தாள் நிஷா
"என்ன மன்னிச்சுடு நிஷா"
"மன்னிக்கிற மாதிரியாடி நடந்திருக்கே நீ?"
காயத்ரி சட்டென்று நிஷாவின் முகத்தைப் பிடித்து அவள் கண்ணத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தாள்.
"என்ன மன்னிச்சுடுடி ப்ளீஸ்"
அவள் கெஞ்சலாக சொல்ல... நிஷா, கண்ணத்தை துடைத்துக்கொண்டே அவளை முறைத்தாள்.
காயத்ரி, அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
"ச்சீ போ!" என்று சொல்லிவிட்டு, சிரித்தபடியே கதவை அடைத்தாள் நிஷா.
சீனு எழுந்திருக்கும் வரை அவர்கள் கலகலப்பாக பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். பல நாட்கள் கழித்து அங்கே சிரிப்பு சத்தம்.
சீனு எழுந்ததுமே, "ஐ டோன்ட் வான்ட் டு ஸீ யூ லைக் திஸ்!" என்று நிஷா சொல்லிவிட, அவன் சலூனுக்குப் போய்விட்டு வந்து குளித்தான். புது மனிதனாக வந்தான்.
இவள் அவனிடம் தனியாக பேச வந்தாள்.
"தேங்க்ஸ் நிஷா. தேங்க்ஸ் பார் கமிங்க்"
"ஒரு ரிக்வஸ்ட் சீனு"
"சொல்லு நிஷா"
"காயத்ரியை நீ மன்னிக்கணும். ப்ளீஸ். இனிமே அவ இப்படி ஒரு தப்பை செய்யமாட்டா. ப்ராமிஸ்."
அவன் அமைதியாக தரையை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றான்.
"மன்னிச்சு அவளை ஏத்துக்கோ சீனு. ரெண்டு பேருமே... ஒவ்வொருத்தர் பண்ண தப்பையும் மறந்துட்டு ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழனும்கிறதுதான் என் ஆசை. சரியா?"
அவன் தலையை ஆட்டினான்.
"ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் உண்மையான அன்பு வச்சிருக்கணும். சரியா?"
"சரி நிஷா."
"தீபா கிட்ட சொல்லி, நல்ல சம்பளம் கிடைக்கிற மாதிரி பெங்களூருல நான் உனக்கு ஒரு நல்ல வேலை அரேன்ஜ் பண்ணியிருக்கேன். அதுல சேர்ந்துக்கறியா? இங்கே இருந்தா உங்க ரெண்டு பேருக்கும் இதே நினைப்பா இருக்கும். கொஞ்ச நாள் வெளியூர்ல இருங்க"
"அப்படின்னா நான் காயத்ரியை கூட்டிட்டு துபாய் போயிடுறேன் நிஷா. அங்க ஒரு கம்பெனிலேர்ந்து எனக்கு ஜாப் ஆபர் வந்திருந்தது. அவங்களை காண்டாக்ட் பண்ணி பார்க்குறேன்"
"எதுக்கு அவ்ளோ தூரம்...." என்றபடியே நிஷா காயத்ரியைப் பார்த்தாள். அவள் அமைதியாக நிற்க, சீனு பதில் சொன்னான்.
"இல்ல நிஷா. கடன் அதிகமாயிடுச்சி. அங்க போனா நல்லாயிருக்கும்."
"ஒன்றிரண்டு வருஷம் பொறுத்துக்கோங்களேன்..... அப்போ உங்களுக்கு பணம் பெரிய விஷயமா இருக்காது"
"இல்ல நிஷா. நான் இந்த ஊர் உலகத்துக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும். நல்லா வாழ்ந்து காட்டணும்."
அவன், ஒரு உறுதியோடு அவளிடம் சொன்னான். 'இனிமேல் No Fucking Around!' என்று மனதுக்குள் உறுதியாக நினைத்துக்கொண்டான்.
நிஷாவுக்கு, அவன் சரியான track-ல் வந்து நிற்பதுபோல் தெரிந்தது.
இரண்டு மாதத்தில் - அவன் காயத்ரியோடு துபாய் கிளம்பினான். ஏர்போர்ட்டில் - அவர்கள் விடைபெறும் முன் - நிஷா அவர்கள் இருவரின் கைகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டாள்.
"ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் குத்தம் சொல்லிக்காம புதுசா வாழ்க்கையை தொடங்கணும் சரியா? சந்தோஷமா இருக்கணும்."
"கண்டிப்பா நிஷா..." என்றாள் காயத்ரி.
"அப்புறம் சீனு.. ஒரு முக்கியமான விஷயம்."
"சொல்லு நிஷா"
"அடுத்து நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு வரும்போது நல்ல செய்தியோட வரணும்."
இதைக்கேட்டதும் காயத்ரி சீனுவை நிமிர்ந்து பார்க்க, அவன் பட்டும் படாமலும் சொன்னான்.
"சரி நிஷா"
"டேய்.. என்னடா... முகத்துல சிரிப்பே இல்லாம சொல்லுற?"
அவனுக்கு, காயத்ரியை முழுமையாக மன்னிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. அப்புறம் எப்படி குழந்தை எல்லாம்... என்று அமைதியாக நின்றான். இருந்தாலும் நிஷா அவனை டா போட்டு பேசியது அவனது spine-க்குள்... சில்லென்று... சுகமாக இருந்தது. அவளைப்பார்த்து லேசாக சிரித்தான்.
நிஷா, அவனது கைகளை பிடித்துக்கொண்டு, விடாமல், ஏதோ அவனுக்கு கடன்பட்டவள் போல்... அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
"எனக்காக. ப்ளீஸ்...."
"ஐயோ என்ன நிஷா இது"
"காயத்ரியை சந்தோஷமா பார்த்துக்கோ. பார்த்துக்கணும்."
"சரி நிஷா."
நிஷாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
அவர்களிடம், தலையசைத்து, கண்களால் விடைபெற்றுக்கொண்டு, அவர்கள் இருவரையுமே இழந்துவிட்டதுபோல்.... மனம் கனக்க அங்கிருந்து கிளம்பினாள்.
தொடரும்...
Comments
Post a Comment