திங்கள் கிழமை., இரண்டு நாள் விடுமுறைக்குப்பின், தத்தம் அலுவலகத்தை நோக்தி கும்பல் கும்பலாக விரையும் கூட்டம். வரப்போகும் சனி, ஞாயிறு நாட்களில் என்ன செய்யவேண்டுமென சிலர் நடைபாதைகளில், இன்றே திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களும் நடக்கவில்லை. நடப்பவர்களையும் நடக்க விடவில்லை. கூட்டத்தில் நிதானமாக யார் மீதும் முட்டிக் கொள்ளாமல் சுகன்யாவும் தன் ஆபீஸ் வாசலை நோக்கி அந்த மனித வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்தாள்.
"அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் செல்வா, என்னாச்சு...? உன் குரல் ஏன் டல்லாருக்கு"
"இனிமேல் நான் உன்னைத் தினம் தினம் பாக்க முடியாது, சாயாங்கலத்துல ஜாலியா காபி குடிச்சுட்டு, காலற பீச்சுல நடக்க முடியாதுடி, நான் உடனே உன்னை பாக்கணும், எனக்கு என்ன செய்யறதுன்னே புரியல" புதிராகப் பேசினான்.
"காலங்காத்தால என்ன புலம்பல், நீ இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் பதட்டப்படறே; என்னையும் டென்வுனாக்கறே; நான் ஆபீசுல இன்னைக்கு பட்ஜெட் ஸ்டேட்மெண்ட்ஸ்ல்லாம் அனுப்பி ஆகணும், எதுவா இருந்தாலும் ஈவினிங் பேசிக்கலாம்” காலை கட் பண்ணிவிட்டு, தன் நடையை வேகப்படுத்தினாள்.
ஆபீசில் நுழைந்து பயோமெட்ரிக்தில் தன் வருகையை பதிவு செய்துவிட்டு, இருக்கையில் அமர்ந்தாள். அடுத்த நொடி செல்வா சொல்ல வந்த மேட்டர் என்னவாக இருக்கும் என்று அவள் உள்ளம் அலை பாய்ந்தது. அவனை உடனே பார்க்க மனம் விழைந்தது.
அவன் ஹாலை நோக்தி நடந்தாள்... இல்லை ஓடினான்.
அவன் இருக்கை காலியாக இருக்கவே, மீண்டும் தன் கேபினில் வந்து உட்கார்ந்து, வேகமாக நடந்து வந்ததால் வியர்த்த தன் பின் கழுத்தையும் முகத்தையும் அழுத்தி துடைத்துக் கொண்டாள். நெத்திப் பொட்டை சரியாக ஒட்டிக்கொண்டாள். லேசாக மூச்சிறைத்தது.
"ஏண்டிப் பொண்ணே, ஒரு முழுங்கு தூத்தம் குடிச்சுக்கோடி. வெயில்ல ஏன் இப்டி வர. இனிமே நீ ஜோடியா, அஷ்டலட்சுமி கோயில்ல அம்பாளை பாக்கறதோ, பீச்சுல நின்னு காத்து வாங்கிட்டே மொளகா பஜ்ஜி திண்ணறதோ முடியாதுடியம்மா" சாவித்திரியின், குரலில் கிண்டலும், விஷமமும் மிகுதியாக தொனித்தது.
'இவளுக்கு வேற யாரும் ஆள் கிடைக்கலயா இன்னைக்கு, என் தலையை போட்டு உருட்டறாளே' என்ற திகைப்புடன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் சுகன்யா.
"அப்படி போடு அருவாள. சும்மா படம் காட்டாதடியம்மா, உன் வயசுல நேக்கு ரெண்டு குட்டிகளாக்கும். நீ யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுண்டு இருக்கே, அவனும் தேமேன்னு உன் துப்பட்டாவை புடிச்சுண்டு உன் பின்னால சுத்திண்டுருந்தான். உங்க ஜோடிப் பொருத்தம் வேற நன்னா இருக்கு. சின்னஞ்தசிறுசுங்க நீங்க சிரிச்சு பேசிட்டுருந்தேள். யார் கண்ணு பட்டுதோ, அந்த கெழ கோட்டான் ராத்திரியோட ராத்திரியா உன் ஆளை பாண்டிசேரிக்கு தூக்தி அடிச்சுட்டான்?"
சாவித்திரி நீட்டி முழக்கியதில், சுகன்யாவுக்கு செல்வாவின் மாற்றல் உத்தரவினால் அவள் உள்ளூர மிக்க சந்தோஷத்தில் இருப்பது போல் தோன்றியது.
சுகன்யா வாட்டர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வாட்டர் டிஸ்பென்சரை நோக்தி சென்ற போது, சாவித்திரி அவள் முதுகுக்கு பின்னால் குரல் கொடுத்தாள்.
"சீக்திரமா வந்து சேருடியம்மா, தலைக்கு மேல வேலை கிடக்கு, நேரா அவனை தேடிக்கிட்டுப் போயிடாதே"
சுகன்யாவின் மனதில் லேசாக கோபம் தலையெடுக்க தொடங்கியது.
'முழுவிவரம் தெரியாமல் இவளிடம் பேசக்கூடாது' என்று நினைத்து தன் பல்லைக் அழுத்திக் கடித்துக்கொண்டாள்.
சீட்டுக்குத் திரும்பி வரும் போது, செல்வாவை செல்லில் கூப்பிட, அவன் தொடர்பு எல்லையில் இல்லை என முகம் தெரியாத ஒருத்தி சுகன்யாவுக்கு அனுதாபம் தெரிவித்தாள். அவளுக்கு நெற்றி புருவங்களுக்கு அருகில் லேசாக விண் விண்ணென்று தெறிப்பது போல் இருந்தது.
"என்னை ஏன் இவள் நேராக சீண்டுகிறாள்? நான் செல்வாவை காதலிப்பதில், அவனோடு சுத்துவதில், இவளுக்கு என்னப் பிரச்சனை? இதில் இவள் எங்கு வருதிறாள்"
சுகன்யாவுக்கு இது சாதாரண வம்பாகத் தோன்றவில்லை.
'செல்வாவின் புலம்பலுக்கும், இவர்களின் காதலுக்கும், சாவித்திரியின் எக்காளத்திற்கும் ஏதாவது சன்னமான தொடர்பு இருக்திறதா?, நேரடியாக அவளிடமே கேட்டுவிடலாமா?'
விஷயம் விளங்காமல் அவள் குழம்பியதால் தலை வலிக்க ஆரம்பித்தது.
டீ ப்ரேக்தில் அவளைத் தவிர மற்ற எல்லாரும் கேண்டீனுக்கு போயிருக்க, அவள் மனம் வேலையில் லயிக்க மறுத்தது.
"இவன் எங்கப் போய்த்தொலைஞ்சான்" செல்வாவின் மேல் லேசாக எரிச்சல் பட்டாள்.
அந்த நேரம் தொங்கிய முகத்துடன், அவளுடைய ஹாலில் நுழைந்தான் செல்வா.
"சுகு, எனக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் போட்டாச்சு; நான் அங்க போய் ஜாய்ன் பண்ணத்தான் வேணும். நான் இப்பத்தான் நம்ம சீஃப்பையும் பாத்து பேசினேன். அந்த கடங்காரன் நான் கொஞ்ச நாள் அங்க போய்த்தான் ஆகணுங்கறான். உன் செக்ஷன் ஹெட், அதான் அந்த குண்டு சாவித்திரிதான் என் பேரை ஃபைல்ல, ப்ரொபோஸ் பண்ணியிருக்கா. ட்ரான்ஸ்பர்ஸ் அண்ட் போஸ்டிங்ஸ் கமிட்டில அவ ஒரு மெம்பர். அந்த நாய் கொஞ்ச நாளாவே என் மேல ரொம்ப எரிச்சலா இருந்தா" என்றபடி அங்கு வேறு யாரும் இல்லாததால் அவள் கையை பற்றினான்.
"செல்வா, இது ஆபீஸ், பிஹேவ் யுவர்செல்ஃப்” முகத்தை சுளித்து அவன் கையை உதறியவள், "செல்வா, காலையிலேருந்து நான் ஒன்னும் சாப்பிடலை. இது டீ டயம் தானே, நீபோய் காபியோட, எனக்கு ரெண்டு வடையும் சேத்து வாங்கு, கேண்டீனுக்கு போயிருக்திற யாரவது ஒருத்தர் இங்க திரும்பி வரட்டும், நான் உன் பின்னாலேயே கேண்டீனுக்கு வரேன், அங்க வெச்சு பேசிக்கலாம்." என்றாள். அவள் முகத்தில் உணர்ச்சிகள் ஏதுமில்லை.
கேண்டீனில்..,
"இப்ப என்ன குடியா முழுகிப் போச்சு, எதுக்கு இப்ப நீ உன் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு உக்காந்து இருக்கே? ட்ரான்ஸ்பர் ஒரு பெரிய விஷயமா, நாளைக்கு எனக்கும் வரலாம்... ஆனா, நாம கோவிலுக்கு போனது, பீச்சுல சுண்டல், பஜ்ஜி தின்ன வரைக்கும் அந்த சாவித்திரி பிசாசுக்கு தெரிஞ்சுருக்கு; நான் யார்திட்டயும் சொல்லலை; நான் வேலைக்கு சேர்ந்த புதுசுல 'கொழந்தை, கொழந்தைன்னு' என் கூட நல்லாதான் பேசிக்கிட்டிருந்தா; இப்பத்தான் ஒரு மாசமா, என் கிட்ட எதுக்கெடுத்தாலும், குத்தம் கண்டு பிடிச்சு எரிஞ்சு விழறா; என் மேல அவளுக்கு அப்படி என்ன கோபம்ன்னு தெரியல; காலையில கூட நம்மளை பத்தி ரொம்ப கிண்டலா, விஷமமா பேசி சிரிச்சா; எனக்கு கோபம் வந்தது, பொறுத்துகிட்டு வந்திருக்கேன். நீ சொன்ன ட்ரான்ஸ்பர் பைல் என் டேபிளுக்கு வரவே இல்ல. எப்டியோ எனக்கு தெரியாம அந்த ஃபைல் மூவ் ஆயிருக்கு" சுகன்யா அவனிடம் பொரிந்து கொண்டிருந்தாள்.
"நீ போன வாரம் லீவு எடுத்துகிட்டு உங்கம்மாவை பாக்க ஊருக்கு போயிருந்தே இல்லியா, அப்பதான் என்னோட ட்ரான்ஸ்ஃபர் ஃபைல் மூவ் ஆயிருக்கு. நம்ம காதல் விஷயம் என் தரப்புல இருந்து இவனுக்கு மட்டும் தான் தெரியும், ஆபீசுல வேற யார்கிட்டயும் நான் சொன்னதில்லை. சாவித்திரியும் பெசண்ட் நகர்ல, எங்க ஏரியாவுல தான் இருக்கா. சான்ஸா சாவித்திரி அன்னைக்கு கோவிலுக்கு வந்திருக்கலாம், இல்லன்னா, வேற யாராவது நம்ம ஆபீஸ் ஸ்டாஃப், நம்பளை பாத்துட்டு இவகிட்ட வம்பளந்து இருக்கலாம்; நீ உரசியும் உரசாமலும் என் கூட வண்டில உக்காந்து வந்தே, கோவில்ல புசு புசுன்னு காட்டன் புடவையை கட்டிகிட்டு, என் தோளோட ஓட்டி ஒட்டி நடந்து வந்த, உன் இடுப்பை பாத்து திகைச்சுப் போய், நான் மொத்தமா உன்கிட்ட விழுந்துட்டேன். அப்படியே வானத்துல மெதந்துகிட்டு இருந்தேன், அதனாலதான் பாவி இவ என் கண்ணுல படல"
"உன்னை மட்டும் சொல்லி குத்தம் இல்ல செல்வா, நான் மட்டும் அன்னைக்கு தரையிலயா நடந்துகிட்டு இருந்தேன், நாலு முழம் பூவை வாங்கி கொடுத்து நீ என்னை கவுத்துட்ட, அந்த கடங்காரி என் கண்ணுலயும் தான் படலை." அவள் தன் பங்குக்கு புலம்பினாள்.
"செல்வா, நாம ஒருத்தர்கிட்ட ஒருத்தர் விழுந்த கதையை அப்புறம் பேசிக்கலாம், நாம காதலிக்கறதுல அவளுக்கு என்ன ப்ராப்ளம்?” சுகன்யா, மெது வடையை கடித்து மெல்ல ஆரம்பித்தாள்.
"சுகன்யா, சாவித்திரிக்கு என் மேல ஒரு கண்" செல்வாவின் குரலில் சற்றே இயலாமையும், ஆத்திரமும் கலந்து ஒலித்தது.
"என்னது, இந்த வயசுல அவ உன் மேல கண்ணு வெச்சிருக்காளா? என்னப்பா சொல்லற நீ..." சுகன்யாவின் குரலில் ஏளனம் அப்பட்டமாகத் தெரிந்தது.
"சுகு அவசரப்படாதடி... நீ தப்பா புரிஞ்சுகிட்ட. அவளுக்கு ரெண்டு பொண்ணு, பெரியவ செவப்பா, மூக்கும் முழியுமா பாக்கறதுக்கு நல்லா லட்ச்சணமா இருப்பா... என்ன, ஆத்தாளை மாதிரி அவளும் இப்பவே கொஞ்சம் குண்டு, ஒரு புள்ளயை பெத்தா அப்புறம் அவ பூதம் தான். சாவித்திரி வாரத்துல ரெண்டு தரம் எங்க வீட்டுக்கு வருவா, என் அம்மா கிட்ட குழைஞ்சு குழைஞ்சு பேசுவா, அவங்க ரெண்டு பேரும் அப்ப அப்ப கோவிலுக்கு, மார்கெட்டுக்குன்னு ஒன்னா போவாங்க. அவளோட சின்ன பொண்ணு, காலேஜ்ல என் தங்கையோட கிளாஸ் மேட்... தொப்புள் மயிர் தெரியற மாதிரி ஜீன்ஸ் போட்டுகிட்டு எப்பவும் செல்லை காதுல சொருவிகிட்டு அலைவா... அவளைத்தான் சீனு ரூட் விட்டுக்கிட்டு இருக்கான். இவளுங்களைப் பாத்தாலே எனக்கு அப்படியே பத்திகிட்டு எரியும்"
"சரி விஷயத்துக்கு வா"
"அவளோட பெரிய பொண்ணை எனக்கு கட்டி வெக்கணுங்கற எண்ணம் சாவித்திரிக்கு இருக்குன்னு நினைக்கிறேன். என் கிட்ட ரெண்டு மூணு தரம் ஜாடை மாடையா ஆபிசுல இது பத்தி பேசினா... நான் சரியா பிடி குடுத்து பேசல... ஒரு தரம் என் அம்மா கிட்ட பேசறேன்னு சொன்னா, அவ பேசினாளா என்னனு எனக்கு தெரியாது. அதனால தான் அவளுக்கு நம்ம காதல் விவகாரம் பிடிக்கல, என்னை இங்கேருந்து மாத்திட்டா நாம பழகறது குறையும், என்னை எப்படியாவது என் அம்மா மூலமா மசிய வெக்கலாம்ன்னு அவ நினைச்சுட்டு இருக்கலாம். நம்ம சீஃப், நொள்ளக் கண்ணனை, இவ கைல போட்டு வெச்சுருக்கா, அவன் ரூமுக்கு போறப்பல்லாம் நான் பாத்துருக்கேன், தன் முந்தாணி விலகனது கூடத் தெரியாம தொறந்து போட்டுகிட்டுத்தான், அவன் முன்னாடி உக்காந்திருப்பா, பைல் டிஸ்கஸ் பண்றாங்களாம்.... தூத்... தேறி.. பொம்பளையா அவ... அவன் மூலமா என்னை இங்கேருந்து மாத்திட்டா" செல்வா கோபத்தில் உக்கிரமாக இரைந்தான்.
"இதெல்லாம் நீ எங்கிட்ட இதுவரைக்கும் சொன்னதே இல்லையே?"
"சுகன்யா, நல்லா யோசனை பண்ணி பாரு, நாம இந்த பத்து பதினைஞ்சு நாளாத்தான் ஒருத்தர ஒருத்தர் நெருங்கி வந்துட்டு இருக்கோம். இதுவரை நாம நம்ம இரண்டு பேரை பத்தியும், நம்ம விருப்பு வெறுப்புகளை பத்தியும்தான் பேசிக்கிட்டு இருக்கோம், அதுக்கே நமக்கு நேரம் பத்தல. நான் இன்னும் என் குடும்பத்தை பத்தி உனக்கு சொல்லல, நீயும் இதுவரை கேக்கல. அது மாதிரி உன் குடும்பத்தை பத்தி, உன் பேரண்ட்ஸ் பத்தி எனக்கும் எதுவும் தெரியாது. ரெண்டு மூணு நாள் முன்னதான் உன் மாமா எங்கிட்ட பேசுவார்ன்னு சொன்னே... இதுவரைக்கும் அவரும் என் கிட்ட பேசல, அதுக்குள்ள சாவித்திரி நம்ம இரண்டு பேருக்கும் நடுவுல பூந்து குட்டையை குழப்பறா, இதுல என் தப்பு என்ன இருக்கு"
"செல்வா, நல்லா கேட்டுக்க.., 'அவ பொண்ணு நல்ல சேஃப்பா இருந்தா', 'முன்னப்பாத்தா அவளுக்கு மார் சூப்பரா இருக்குது', 'பின்னால பாத்தா அவளுது பெருசா கொழுத்து அசையுது', 'சாவித்திரி என்னை வேலையை விட்டே எடுத்துடுவேன்னு சொன்னா', 'எங்க அம்மா இத சொன்னா', 'எங்க ஆயா அத சொன்னான்னு', எதாவது எக்குத்தப்பா முடிவெடுத்த, உன் வீட்டுக்கே வந்து உன்னை இழுத்து வெச்சு வெட்டிடுவேன், சொல்லிட்டேன்"
சுகன்யா சொன்னபின் தன் உதடுகளை கடித்துக்கொண்டாள். அவசரப்பட்டு அளவுக்கதிகமாகப் பேசிட்டமா, இன்னைக்கு என் நாக்குல சனி உக்காந்து இருக்கானா என்ன? அவள் கண்கள் கலங்குவது போல் உணர்ந்தாள்.
"சுகன்யா, என்னைப் பத்தி உனக்கு என்னடி தெரியும், என்னை இப்படி மட்டமா எடைப்போட்டு பேசிட்டயே" அவன் உதடுகள் துடிக்க புருவங்கள் சுருங்க தன் இரு கை விரல்களையும் ஒன்றாக கோத்து நெறித்துக் கொண்டான். அதற்கப்புறமும் அவன் கைகள் லேசாக நடுங்கின. நிச்சயமாக சுகன்யா இது போல் பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை என்பது மட்டும் அவன் உடல் மொழியில் இருந்து தெரிய வந்தது.
"காலையில பயித்தியக்காரன் மாதிரி நான் தான் உனக்கு ஃபோன் பண்ணி, என்ன பண்றதுன்னு உன்னைக் கேட்டேன், எனக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொன்னியா, நான் உன்னை டென்ஷன் படுத்தறேன்னு சொல்லிட்டு இப்ப நீ... என்னை குத்தம் சொல்லறே," அவன் பேச முடியாமல் வாய் குளறி, மேல் கூரையில் சத்ததுடன் ஓடிக்கொண்டுருந்த மின்விசிறியை வெறித்து நோக்தினான். பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் அவர்களை திரும்பி பார்த்தது போல் இருந்தது.
"சாரி செல்வா, உன்னைப் பத்தி அதிகமா தெரிஞ்சுக்காமத்தான் உன் கிட்ட என் மனசை பறிகொடுத்துட்டேன், நான் உன்னை காதலிக்கிறேங்கறது சத்தியமான உண்மை; ஆனா, எங்கப்பனை பத்தி எனக்கு நல்லா தெரியும், எங்க அப்பாவும் ஒரு ஆம்பிளை. நீயும் ஒரு ஆம்பிளைதான். அதுதான் ஒரு நிமிசம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன், மத்தபடிக்கு உன் மனசை எந்த விதத்துலயும் நோகடிக்கணுங்கறது என் விருப்பம் இல்ல" அவள் குரல் தழுதழுக்க, கண் கலங்க, சட்டென எழுந்து தன் கேபினை நோக்தி நடக்க ஆரம்பித்தாள்.
தன் மூக்க விடைக்க விம்மிக்கொண்டு வெளி வரத்துடித்த அமுகையை நெஞ்சுக்கள்ளேயே அடக்கிக்கொண்டு, கேண்டீனிலிருந்து திரும்பி பார்க்காமல் விறுவிறுவென வேகமாக நடந்து சீட்டை அடைந்த போது சாவித்திரியும், மற்றவர்களும் அவரவர் வேலையில் மும்மரமாக மூழ்கி இருந்தார்கள்.
'சுகன்யா, உனக்கு ஏன் அழுகை வருது? உன் மனபலம் இவ்வளவு தானா? இதுவரைக்கும் உன் காதல் வண்டி சீராக ஓடிக்கிட்டு இருந்தது; செல்வாவோட இடமாற்றம் உன் கட்டுப்பாட்டுக்கு அப்பால இருக்கிற ஒண்ணு; திடீர்ன்னு நீங்க ரெண்டு பேருமே எதிர்பார்க்காத இந்த சின்னத் திருப்பத்தால், செல்வா வர திங்க திழமைக்குள்ள புது இடத்துல போய்ச் சேர்ந்தாகணும்; இதுக்கு உன் தரப்புலேருந்து நீ என்ன செய்ய முடியும், அதை மட்டும் யோசி'
'சாவித்திரியைப் பாத்து நீ ஏன் துவண்டு போறே? அவ போடற திட்டத்துல ஜெயிச்சு, செல்வாவை உன்கிட்ட இருந்து பிடுங்கிடுவாளோன்ற பயம் உனக்கு இப்பவே வந்துடுச்சா, உன் காதல் மேல உனக்கு நம்பிக்கையில்லயா? நீ செல்வா உன்னை முழுமனசோட காதலிக்திறானா? அவன் கடைசி வரைக்கும் உன் கூட வருவானான்னு சந்தேகப்பட்டுட்ட; நீ என்ன சொன்னாலும் உண்மை இதுதானே? சந்தேகத்துலயும், பயத்துலயும் இருக்கற ஒருத்தரால காதல்ல எப்படி சந்தோவமா இருக்க முடியும்?'
'உன்கிட்ட இருக்கற அழகை வச்சு முதல்ல அவனை இறுக்கமா உன் இடுப்புல முடிஞ்சு போட்டுக்கோ; பரஸ்பர உடல் கவர்ச்சியிலதான் எல்லா காதலும் ஆரம்பிக்குது; அப்புறம் உன் பாசத்தால, அன்பால, மனசால, அவனை கட்டி நிறுத்து. இப்போதைக்கு அவன் உன்னையும், உன் முந்தானையையும் தானே புடிச்சுக்கிட்டு சுத்தறான், இப்ப அவனே சோர்ந்து போய் இருக்கான்: சோர்ந்து போய் இருக்கறவனை நீயே உன் வார்த்தையால குத்தினா எப்படி?'
'சாவித்திரியும், செல்வாவின் அம்மாவும் சேர்ந்து அவனுக்கு வேப்பில அடுச்சுட்டா என்ன பண்றதுன்ற பயத்துல நீ அவனை வெட்டுவேன்னு சொன்னது நிச்சயமா அவனுக்கு கோபத்தை உண்டாக்கியிருக்காது, மாறா நீ அவனை சந்தேகபடற விதத்துல பேசினது அவன் கோபத்தை கிளறியிருக்கலாம்'
'ஒரு விதத்துல நீ பேசினதும் சரிதான். நீ அவன் காதலி, அந்த உரிமையில பேசிட்ட, இவளை விட்டுட்டு சுலபமா ஓடிட முடியாதுன்னு, மனசுல அவனுக்கும் பயம் வந்திருக்கும், உன் மனசுல வந்த பயத்தை செல்வாகிட்ட கொஞ்சம் மிருதுவான நேரம் பாத்து சொல்லியிருக்கலாம்; பேசினது பேசியாச்சு, அவன்கிட்ட சாரியும் சொல்லிட்ட, ஈவினிங், அவனை பாக்கும் போது இன்னொரு தரம் சாரின்னு சொல்லிடு, இனிமே யோசிக்காம பேசாதே; அவ்வளதான், இப்ப உன் வேலையை கவனி, ஆபீஸ் வேலைல உன்னை குறை சொல்லற மாதிரி சாவித்திரிக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காதே, இது ரொம்ப முக்தியம்'
சுகன்யா, தன் மனதுடன் வாக்கு வாதம் நடத்தி சற்றே தெளிவடைந்தாள். கிடுகிடுவென அன்று அக்கவுண்ட்ஸ்க்கு அனுப்ப வேண்டிய பேப்பர்களை தயார் செய்து, எடுக்க வேண்டிய நகல்களை எடுத்து ஒரு முறை சரி பார்த்தாள். லஞ்சுக்கும் போகாமல் அவள் விடுமுறையில் சென்ற போது, அவளுக்கு மார்க் பண்ணப்பட்ட விஷயங்களுக்கும் குறிப்பெழுதி, கோப்புகளை சரஸ்வதியின் டேபிளில் தானே கொண்டு போய் வைத்துவிட்டு நிமிர்ந்தபோது மணி மதியம் மூணு ஆகியிருந்தது.
"சீக்கிரம் வாடிம்மா, வேலை கொஞ்சம் ஜாஸ்தின்னு சொன்னேன்; உண்மைதான்; அதுக்காக சாப்பிடாமக் கூட நீ இந்த ஆபீசுக்கு உழைக்க வேண்டாண்டி; உனக்கு இளம் ரத்தம்; எல்லாத்தையும் நீ சீரியஸா எடுத்துக்கறே. இங்க யார் வேலை செய்யறா, யார் ஒப்புக்கு மாரயிக்கறா, எல்லாம் நேக்குத் தெரியுண்டி", சாவித்திரி அந்த நேரத்தில் உண்மையான கரிசனத்துடன் சொன்னாள்.
"தேங்க்யூ மேடம்.. காலைல பிரேக் டைம்ல்ல செல்வா ஆசையா ரெண்டு வடை வாங்கிக் கொடுத்தார், சாப்பிட்டேன். அதுவே நெஞ்சை கரிச்சுது, வேலையை முடுச்சுட்டு நிதானமா சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்" உதட்டை சுழித்து இயல்பாக சொல்லுவது போல் சொல்லிக்கொண்டே அவளை ஆழம் பார்த்தாள்.
சாவித்திரியின் முகம் சட்டென இருண்டது.
'காலையில எரிச்சல் மூட்டி உன்னை அழவச்சா. உன் காதல் விவகாரத்தை ஆபீஸ்ல்ல போட்டு உடைச்சுட்டா, இவளே உன்னை அவன் கூட ஜோடி சேத்துட்டா. இனி உன் காதலை ரகசியமா வெக்கறதுல எந்த பிரயோசனமும் இல்லை. செல்வாவின் இட மாறுதலை உன்னால இப்போதைக்கு நிறுத்த முடியாது. ஆனா செல்வாகிட்ட உனக்கு இருக்கற உரிமையை இவளுக்கு காட்ட முடியுமே! செல்வாவை இங்க கூப்பிடு. உங்க நெருக்கத்தை இவளுக்கும் உன் செக்க்ஷனுக்கும் காட்டு. நாளைக்கு உன் கூட வேலை செய்யற இவங்க உன் பக்கம் நிப்பாங்க'
'முகத்துல எரிச்சலையோ, கோபத்தையோ காட்டாதே. நீ இவளை இவ வழியிலே போய் மடக்கு. முள்ளை முள்ளால மெதுவா எடுடி. குத்தின இடத்துலயும் வலிக்கக் கூடாது, முள்ளு முனையும் உடையக்கூடாது. சாவித்திரி ஒரு காயை நகர்த்தி உன்னை மடக்தியிருக்கா. உன் காயை நீ நிதானமாக நகர்த்து.' அவள் உள் மனம் பேசியது.
செல்லை எடுத்து செல்வாவின் நம்பரை அழுத்தினாள்.
"செல்வா, சுகன்யா பேசறேன்... என்ன பண்றே?" அவன் பேரை உரிமையுடன் அழுத்தி சாவித்திரிக்கு கேட்கும்படி சொன்னாள்.
"என்ன வேணும் உங்களுக்கு" செல்வாவின் பேச்சில் மரியாதை கூடியிருந்தது. முதல் முறையாக அவளிடம் பேசுவது போல் பேசினான்.
குழந்தை ரொம்ப கோபமா இருக்கு அதான் 'நீங்க' 'வாங்க' போடுது... சுகன்யாவின் உதடுகளில் முறுவல் விரிந்தது.
"நீ என் செக்க்ஷனுக்கு கொஞ்சம் வரயா"... வேண்டுமென்றே "நீயில்' அழுத்தம் கொடுத்தவள், "இன்னைக்கு எலுமிச்சம் சாதம் செய்தேன், உனக்கும் சேத்து கொண்டுட்டு வந்தேன்... உனக்குத்தான் லெமன் ரைஸ் பிடிக்குமே... ரெண்டு ஸ்பூன் எடுத்துக்கயேன்" சொல்லிக் கொண்டே தன் டிஃபன் பாக்ஸைத் திறந்தாள். எலுமிச்சை வாசம் கம கமவென ரூமை நிறைத்தது.
"நான் சாப்பிட்டுட்டேன்... இப்ப கொஞ்சம் பிஸி... நீங்க சாப்பிடுங்க பிளீஸ்” அவன் மனதில் கோபம் இன்னும் தணியவில்லை.
"ரெண்டு நிமிஷம் எனக்காக கீழ வரக்கூடாதா... அவ்வளவு பிஸியா" கேட்டவாறே களிப்புடன் சிரித்த சுகன்யா, சாவித்திரியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்க்க, அவள் முகம் லேசாக நிறமிழந்து கொண்டிருந்தது.
"லுக் சுகன்யா, நீங்க எந்த உரிமையில இப்படி என்னை வா... போன்னு... பேசிட்டு இருக்கீங்கன்னு எனக்கு புரியல” அம்மாவிடம் கோபம் கொண்ட ஒரு சின்னக் குழந்தையைப் போல் இன்னும் அவளிடம் முறுக்கிக்கொண்டிருந்தான் அவன்.
"செல்வா"... தன் குரலைத் தாழ்த்திக் கொண்ட சுகன்யா பேசினாள், "பீச்சுல நாலு பேர் பாக்கறதை கூட சட்டை பண்ணாம, என்னை உன் மடியில போட்டுதிட்டு, எந்த உரிமையில என் மூஞ்சி பூரா முத்தம் கொடுத்தியோ, அந்த உரிமையில தான் உங்கிட்ட பேசறேன்... இப்ப நீ வரயா... இல்ல நான் உன் ரூமுக்கு வரவா" சொல்லிவிட்டு புன்னகை தவழும் முகத்துடன் செல்லை கட் பண்ணினாள்.
அடுத்த 10 ஆவது நொடி,
"வணக்கம் மேடம்" சுகன்யாவின் ஹாலில் நுழைந்த செல்வா சாவித்திரியை விஷ் செய்து கொண்டே சுகன்யாவை நோக்தி நடந்தான்.
செல்வாவை பார்த்த சுகன்யாவின் நெஞ்சு விம்மியது. 'இவன் என் பேச்சைக் கேக்கறவன், இவன் எனக்கு சொந்தம், இவனை யாரும் எங்கிட்ட இருந்து பிரிக்க முடியாது.'
"ம்ம்ம்... எப்பா செல்வா, ஆபீசுல உனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் கிடைச்சிருக்கா, வீட்டுல இருந்து கலந்த சாதம் பண்ணிக் கொண்டாந்து உன்னை கூப்பிட்டு குடுக்கறா... அவளை மாதிரி ஒரு பொண்டாட்டியும் உனக்கு கூடிய சீக்திரமே வரட்டும்பா... நல்ல மனசோட சொல்றேன், தப்பா எடுத்துக்காதே", சொன்ன சாவித்திரியின் முகம் இறுகியிருந்தது.
"மேடம்... ஆசிர்வாதம் செல்வாவுக்கு மட்டும்தானா, எனக்கு கிடையாதா, என் மனசுல யாரை நினைச்சுக்கிட்டு இருக்கிறேனோ அவனே எனக்கு புருவனா கிடைக்கணும்ன்னு, பெரியவங்க உங்க வாயால ஆசிர்வாதம் பண்ணுங்களேன்" சொல்லிக் கொண்டே, ஒரு பேப்பர் தட்டில் கொஞ்சம் லெமன் ரைஸை வைத்து, சாவித்திரியின் டேபிளின் மேல் வைத்தாள்.
"நன்னாத்தான் பண்ணியிருக்கேடிம்மா, உனக்கு வரப்போறவன் குடுத்து வெச்சவன்தான்" சனியன் புடிச்சதுங்க நம்ம வீட்டுலயும் தான் ரெண்டு வளந்து கழுதை கமுதையா றிக்குதுங்க, ஒரு புடி சாதம் வெக்கக்கூட துப்பில்லை, மனதுக்குள் நொந்துக்கொண்டாள்.
"தேங்க் யூ செல்வா... ரொம்ப சந்தோஷம் நீ வந்ததுக்கு ... ரொம்ப ரொம்ப சாரி... நான் காலையில உன்னை சந்தேகப்பட்டு பேசினதுக்கு, இப்ப சொல்றேன்... கட்டுனா உன் கையாலத்தான் தாலி கட்டிக்குவேன்" அவனுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தாள்.
"ஏண்டா உம்முன்னு இருக்க, கொஞ்சம் சிரியேன்.. ஆசையா உனக்காக செஞ்சு கொண்டாந்துருக்கேன், எடுத்து சாப்பிடு... எனக்குத் தெரியும் நீ மத்தியானம் சாப்பிடலே... பட்டினியா இருக்கேன்னு" தன் ஈர உதடுகள் பளப்பளக்க அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் காதல் பொங்கியது.
'ச்ச்சே... இவ கிட்ட நான் வசமா மாட்டிக்கிட்டேன் .. கண்ணாலேயே என்னை கட்டிப்போட்டு பேசவிடாம பண்ணிடரா' மனதுக்குள் புலம்பியவன், அவன் அவளிடம் ஏதேதோ சூடாக கேட்க்க வேண்டும், சொல்ல வேண்டும் என்று வேகமாக வந்து இப்போது ஏதும் பேசத்தோன்றாமல் மவுனமாக சாப்பிட ஆரம்பித்தான்.
'அடியே சுகன்யா, நீ உக்காருன்னா உக்காந்துக்கறான், எழுந்துரின்னா எழுந்துக்கறான்... குட்... நான் நினைக்கறது நடக்கணும்னா கொஞ்சம் கஷ்ட்டப்பட்டுத்தான் ஆகணும், நீயும் காயை நல்லாத்தான் நகர்த்தறடி...' என்று எண்ணிய சாவித்திரி நீண்ட பெருமூச்சுடன், இந்த ஆட்டத்தில் தன் காயை மேற்கொண்டு எப்படி நகர்த்துவது என யோசிக்கத் தொடங்கினாள்.
தொடரும்...
வில்லி இல்லாத காதல் கதையா?! ஹும்! ஜமாய் ங்க
ReplyDelete