முழு தொடர் படிக்க செல்வாவும் சுகன்யாவும் வழக்கமாக சந்திக்குமிடத்தில் உட்கார்ந்திருந்தனர். சுகன்யாவின் முகத்தில் அவனைப் பார்த்த மகிழ்ச்சி ததும்பிக்கொண்டிருந்தது. செல்வாவுக்கு அவளைப் பார்க்கப் பார்க்க பொறாமையாக இருந்தது.
"சுகு, இந்த கல்யாணத்தைப் பத்தி நான் டென்ஷனா இருக்கேன். நீ எப்படி இவ்வளவு ஹாப்பியா, எதைப்பத்தியும் கவலைப்படாம இருக்கே?" செல்வா சலிப்புடன் முனகினான்.
"நீ நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு சென்னைக்கு வந்தே, அப்பவே நான் உன்னை பாக்கணும்னு ஆசையா துடிச்சேன். இப்ப காலங்காத்தால என்னைப்பாக்க வந்துட்ட. இந்த நிமிஷம், நான் நேசிக்கற நீ என் பக்கத்துல இருக்கே. எனக்கு இப்போதைக்கு இது போதும். அதனாலதான் நான் ஹாப்பியா இருக்கேன். உற்சாகமா ஃபீல் பண்றேன்." சுகன்யா மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.
"சுகன்யா நீ சிம்ப்ளி க்ரேட், என்னால உன்னை மாதிரி இருக்க முடியலடி! இப்ப ரெண்டு நாளா எனக்கு கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டா என்னான்னு தோணுது"
"செல்வா, எப்பவும் நடக்கற விஷயத்தைப்பத்தி பேசணும். மனசுல கையை வெச்சு சொல்லு பொம்பளை துணை, அவ அணைப்பு, அவள் உடல் சூடு இல்லாம இதுக்கப்புறம் உன்னால இருந்துட முடியுமா? என்னால இனிமே என் லைப்ல தனியா இருக்க முடியாதுப்பா. எனக்கு ஒரு ஆம்பிளை துணை வேணும். எங்கம்மா அவங்க ஆசைப்பட்டவனையே கட்டிக்கிட்டும் பதினைஞ்சு வருவமா தனிமையில இருக்காங்க. என் மாமா கல்யாணமே பண்ணிக்காம இன்னைக்கு வரைக்கும் தனியா இருக்கார். தனிமை ரொம்ப கொடுமை செல்வா. நானும் உன்னைப் பாக்கற வரைக்கும் இப்படித்தான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்."
"வாழ்க்கையை செக்ஸ்ங்கற ஆங்கிள்ல்ல பாத்தாலும், ஒரு பொண்ணுக்கு ஒரு ஆண் துணை கண்டிப்பா வேணும். உன் இவஷ்டப்படி நானும் அன்னைக்கு அவுத்துப் போட்டுட்டு, என் மனசு பறக்க உன் மடியில கிடந்தேன். நீயும் என்னைத் துணியில்லாம முழுசா தடவிப்பாத்துட்ட. ஆசை, உடல் சுகம்ன்னா என்னாங்கற ஆர்வம், மோகங்கற போர்வையில ஒருத்தரை ஒருத்தர் மோந்து பாத்துட்டோம். இன்னும் உனக்கு காட்டறதுக்கு எங்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் பாக்கி இருக்கு; உன் கிட்ட பாக்கி எதுவும் இல்ல; நீ தான் உன்னை மொத்தமா எனக்கு அவுத்துக் காட்டி, என் தூக்கத்தை கெடுத்திட்டியே?" அவள் குலுங்கி குலுங்கி சிரித்தாள்.
"நானும் என் கையால உன்னை முழுசா தொட்டுப் பாத்துட்டேன். வளர்ந்த ஒரு ஆண் எப்படி இருப்பான். அவனைத் தொட்டா என்னா ஆகும்ன்னு சுயமா என் கண்ணாலப் பாத்துட்டேன். எல்லா சுகத்தையும் கண்ணு கிறங்கி நீ அனுபவிச்சுட்டு, தண்ணியடிச்சவன் சத்தியம் பண்ற மாதிரி, சுகன்யா உன்னைத் தவிர வேற யாரையும் நான் திரும்பி பாக்கமாட்டேண்டின்னு போன வாரம் சாமியாடினே; ஒரு வாரத்துல எடுப்பார் கைப்பிள்ளை போல, பொண்ணுங்களே என் வாழ்க்கையில வேணாம்ன்னு ௯வற. உன்னால ஒரு பொம்பளை துணை இல்லாம இருந்துடமுடியுமா? ஏன் இப்படி அர்த்தயில்லாம பேசற?" சுகன்யா தன் முகத்தில் கேலிப் புன்னகையுடன் மீண்டும் சிரித்தாள்.
"சுகன்யா நானும் மனசுல தவிச்சுப் போய்த்தான், போன அஞ்சே நாள்ல உன்னை பாக்கறதுக்கு ஆசையா ஓடி வந்திருக்கேன். எங்கம்மா உங்கப்பாவை பத்தி கேக்கச் சொன்னதை உங்கிட்ட கேட்டேன். அவங்க என்ன எனக்கு மூணாம் மனுஷியா? அவங்களுக்கு என் மேல, என் வாழ்க்கையில அக்கறை இல்லையா? எடுப்பார் கைப்பிள்ளைன்னு என்னை கிண்டல் பண்ணி சிரிக்கறே, நீதான் இப்ப என் மூடை கெடுக்திறே." அவன் குரலில் இலேசாக வருத்தமும், கோபமுமாக இருந்தது.
"செல்வா, சாவித்திரி உங்க வீட்டுல வந்து எங்க குடும்பத்தைப்பத்தி குறைவா பேசினதுக்கு அப்புறமும், இன்னும் என் மேல உனக்கு ஆசையிருக்குன்னு கேக்கற போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு; என் மேல ஆசை வெச்சவனுக்கு நான் வாழ்க்கையில எந்தக் கொறையும் வெக்கமாட்டேன்."
'இவனை கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும், சரியான அம்மா புள்ள இவன்', அவள் தன் மனசுக்குள் சிரித்துக் கொண்டாள்.
"கோவமா இருக்கியா டார்லிங்" சுகன்யா தன் கைகளை செல்வாவின் கழுத்தில் மாலையாக கோர்த்து அவனைத் தன்னருகில் இழுத்தாள்.
"கிட்டவாடாச் செல்லம்” சுகன்யா அவனை கொஞ்சினாள். தன் உதடுகளை அவன் கன்னத்தில் மென்மையாக உரசினாள். உரசியவள் அவன் உதடுகளை ஆசையுடன் கவ்வினாள்.
"சுகன்யா.. நீ என்னைத் தொடவேண்டாம். நான் உன்னை இதுவரைக்கும் தொட்டது தப்பு. அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். உன் கால்லே வேணாலும் விழறேன். ஆனது ஆச்சு; போனது போச்சு, இனி உன்னை நான் தொடறதா இல்லை. சும்மா நான் உன்னை தொட்டுட்டேன் தொட்டுட்டேன்னு என்னை நீ ப்ளாக் மெயில் பண்ணாதே?" அவன் குரலில் உஷ்ணமிருந்தது.
செல்வா சுகன்யாவின் பேச்சையும், செய்கையையும் ரசிக்கவில்லை, மாறாக அவள் கொஞ்சல், அந்த நேரத்தில் அவனுக்கு எரிச்சலைத்தந்து அவன் ஆத்திரத்தை அதிகமாக்கியது. அவன் தன் முகத்தை சுளித்து அவளைப் பார்ப்பதை தவிர்த்து, அவளை உதறிவிட்டு சற்றுத் தள்ளி உட்க்கார முயற்சித்தான். அவன் விரல்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன.
சுகன்யா அவனை லேசில் தன்னிடமிருந்து நகரவிடவில்லை. அவள் அவன் கழுத்திலிருந்த தன் பிடியை மேலும் இறுக்க, செல்வா அவள் பிடியிலிருந்து திமிற, அவள் சேலை மார்பிலிருந்து விலக, அவள் இடது முலை அசைந்து அவன் மார்பில் மென்மையாக மோதி செல்வாவின் உடலில் மின்சாரத்தை செலுத்தியது.
அவன் தன் பார்வையை சட்டென அவள் மார்பிலிருந்து திருப்பி, "பிளீஸ் சுகன்யா, என் கழுத்திலேருந்து உன் கையை எடு," என்றான். அவன் குரலில் கோபம் கூத்தாடியது.
'இவள் கைகளில் இவ்வளவு பலமா? இப்படி ஒரு குரங்கு பிடியா என்னை கட்டிப்புடிச்சு இருக்கா? உடம்பால, என் உடல் வலுவால, நான் நினைச்சா இவளை சுலபமா உதறிடலாம் ஆனா, மனசால இவளை என்னால உதற முடியுமா? என் பலவீனம் இவ மேல இருக்கற ஆசையினாலயா? இல்ல என் அம்மா மேல இருக்கற பாசம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இப்ப இவ மேல கூடுதா? எல்லாத்துக்கும் மேல, இவ ஸ்பரிசத்துக்கு என் மனசு அலையுதுன்னு புரிஞ்சிகிட்டு, என்னமா தளுக்கறா, தளுக்கி குலுக்கியே என்னை சீண்டறா? நான் ஒரு முட்டாள். இவகிட்ட போன்ல பேசிகிட்டே நான் கையடிச்ச கதையை சொல்லியிருக்ககூடாது. ஆனால் சுகன்யாவின் இந்த சீண்டல்கள் எனக்கு மிகவும் பிடித்திருப்பதும் உண்மைதானே?' செல்வா மனதுக்குள் புழுங்கினான்.
'எங்க போய் எங்க வந்தாலும் கடைசியா இந்த பெண் சுகம் அப்படிங்கற அஸ்திரத்தை எடுத்து என் மூஞ்சில அடிக்கறா? நீ என்ன பேசினாலும், கடைசியா இந்த ஆயுதத்துக்கு முன்னே நீ என்னை ஓண்ணும் பண்ண முடியாதுடான்னு கொக்கரிக்கறா. அவ மனசுல இருக்கற இந்த திமிரும், கொழுப்பும், அவ முகத்துல, இருக்கற சிரிப்புலயே தெரியுதே' செல்வா மனதுக்குள் மருகினான்.
செல்வா தன்னை உண்மையாகவே வலுவுடன் உதறியதை உணர்ந்ததும் சுகன்யாவின் மனதிலும் மூர்க்கம் தலையெடுத்தது.
'என் அழகின் வலு இவ்வளவுதானா? இவ்வளவு சீக்திரம் அவன் என்னை புறக்கணிக்க முடியுமா?' அவள் மனம் பதறியது. பதறும் போது பேசும் பேச்சால், கைக்காரியம் சிதறும் என்பதை அவள் மறந்தாள். அவள் மூக்கு விடைத்தது. கன்னங்களில் சூடு ஏறியது. அவள் கழுத்து நரம்புகள் புடைத்து உடல் லேசாக நடுங்கியது.
"ஸோ, மன்னிப்பு கேட்டுட்டா எல்லாம் சரியாப் போயிடும்ன்னு நினைக்கிறியா? கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டா என்னன்னு எங்கிட்ட ஏன் சொல்றே? என்னைத்தொட்டது ஒரு குற்றம்ன்னு நீ ஃபீல் பண்ற, அதனாலயா? இல்லை சொத்தோட ஒருத்தி வரா, அவளை பண்ணிக்கிட்டா என்னன்னு இப்ப உனக்கு தோண ஆரம்பிச்சிடுச்சா?"
"உன் அம்மா கிட்டே சொல்றதுதானே, எனக்கு கல்யாணம் வேண்டாம்மா, கடைசி வரைக்கும் எனக்கு நீயே போதும்ன்னு?"
"உன் பொண்ணு ஜானகியை வேற எவனுக்காவது குடும்பஸ்தனா பாத்து கட்டி வைடி, எனக்கு பொம்பளைங்களை புடிக்கலை, நான் சாமியாரா போகப் போறேன்னு, அந்த குண்டு பூசணிக்கா சாவித்திரிக்கிட்ட போய் உன் கோவத்தை காட்டறதுதானே?"
"கொஞ்சம் போனா, நான் உன்னை காதலிச்சதே தப்புன்னு சொல்லுவ போலருக்கே? உனக்கு உங்கம்மா பிரச்சனை இல்லை. சாவித்திரி பிரச்சனை இல்லை. ஜானதி பிரச்சனை இல்லை. நான்தான் உனக்குப் பிரச்சனை." சுகன்யா தன் மூச்சிரைக்கப் பேசினாள்.
"சுகன்யா நீ என்னடி பேசறே, எனக்கு சுத்தமாப் புரியல"
"செல்வா, உனக்கு இந்த நிமிடம் என்ன வேணும்ன்னு உனக்கே தெரியல, அதுதான் உன் பிரச்சனை. எனக்கு உன்னைப் பிடிச்சுது. நான் உன்னை நேசிக்திறேன்னு உன் கிட்ட சொன்னேன். எங்க அம்மாகிட்ட, என் மாமாகிட்ட நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னேன். என் மாமா உன்னைப்பத்தி கேட்டார், உன் குடும்பத்தை பத்தி கேட்டார். சிம்பிளா சொன்னேன் எனக்குத் தெரியாதுன்னு. நான் காதலிக்கறது செல்வாவை, எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு செல்வாவைத்தான், நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்ன்னு தெளிவா சொன்னேன். செல்வா குடும்பத்தைப் பத்தி எனக்கு கவலை இல்லேன்னு சொன்னேன். இதுல எனக்கு இந்த நொடி வரை எந்த குழப்பமும் இல்லை. ஆனா உன்னோட நிலை என்ன? உன்னால உன் மனசுல இருக்கறதை நான் இப்படி சொல்ற மாதிரி தெளிவா சொல்லமுடியுமா” அவள் நீளமாக பேசி நிறுத்தினாள்.
".........."
"செல்வா நான் சுத்தி பேச விரும்பலை. உனக்கு நான் வேணுமா? இல்லை ஜானகி வேணுமா?"
"இப்ப ஜானதி இதுல எங்க வர்றா, அவளை எதுக்கு இழுக்கற?"
"ஜானகியை உங்கம்மாவுக்குத் தெரியும். உங்கம்மாவுக்கு அவளைப் பிடிச்சிருக்கு. சாவித்திரி தன் புருஷனோட, முறைப்படி வந்து உனக்கு அவளை தரேன்னு சொல்லி இருக்கா. நீ ஒண்ணும் தெரியாத குழந்தை மாதிரி நடிக்காதே?" அவள் தான் பேசுவதை சற்றே நிறுத்தினாள்.
"சுகன்யா நான் உங்க அப்பாவைப்பத்தி கேட்டேன்?" அவன் அவள் கண்களைப் பார்க்காமல் பேசினான்.
"செல்வா, அன்னைக்கு நீ போன்ல எங்கம்மா, என் அப்பா கூட இல்லையான்னு கேட்டே; ஆமாம், எங்கம்மா என் அப்பா கூட வாழல. எங்கம்மா வாழாவெட்டியா இருக்கா. இந்த விஷயம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சா, இது நம்ம கல்யாணத்துக்கு குறுக்க வரலாம்ன்னு உங்க அம்மாகிட்ட சாவித்திரி வேல மெனக் கெட்டு சொல்லியிருக்கா. நம்ம கல்யாணம் நடக்கலாம்; நடக்காம போகலாம். அது வேற விஷயம். ஆனா நம்ம கல்யாணம் இந்த விஷயத்தால நிக்கக்கூடாது."
"சுகன்யா... ப்ளீஸ்..."
"செல்வா என்னைப் பேசவிடு... பேசற நேரம் வந்தாச்சு... என் அப்பாவும் என் அம்மாவும் நம்பளை மாதிரித்தான் காதலிச்சு இருக்காங்க. அப்புறம் ரெண்டு வீட்டுல இருந்த பெரியவங்க விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஜாதி வேறுபாட்டால் பெரிய பிரச்சனை எழுந்திருக்கு. என் அம்மா ஆசைப்பட்டவனை கட்டிக்கிட்டு வீட்டை விட்டு அவன் கூட வெளியில வந்துட்டாங்க. நான் பொறந்ததுக்கு அப்புறமும் அவங்களுக்கு ரெண்டு வீட்டுலேருந்தும் சப்போர்ட் கிடைக்கல.
கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே, என் அப்பா குடி போதைக்கு அடிமை ஆயிட்டார். அம்மா ஒரு ஸ்கூல் டீச்சர். அவங்களுக்குள்ள சண்டையும், சச்சரவும் ஆரம்பிச்சிடுச்சு. என் அப்பா தன் மாச சம்பளத்தை குடிச்சுத் தீர்த்ததும், அம்மாகிட்ட குடிக்க பணம் குடுன்னு தினமும் நச்சரிச்சிருக்கான். அம்மாவோட ஒரே தப்பு, ஏன் குடிக்கறேன்னு தன் புருஷன கேக்கறதுதான்.
ஏன் குடிச்சேன்னு கேட்டா, அன்னைக்கு எங்கம்மாவுக்கு அடியும் உதையும்தான் கிடைக்கும். பகல் நேரத்துல அவ்வளவு சாந்தமா அமைதியா இருக்திற ஆள், சாயந்திரம் ஆனா மூர்க்கனாயிடுவானாம். என் அப்பா குடிச்சுட்டு வந்து அம்மாவை அடி அடின்னு அடிச்சு நொறுக்குவான். ஒண்ணும் புரியாத சின்ன வயசுல என் அம்மா அடி வாங்கறதைப் பாக்கும் போது எனக்கு ஏன் இந்த இராத்திரி வருதுன்னு இருக்கும்?
அம்மா ஏன் அப்பாவை திருப்பி அடிக்கமாட்டேங்கறா? அம்மாதான் அவனை திருப்பி அடிக்கல; என் அப்பாவை திருப்பி அடிக்கணுங்கற வெறி எனக்கு வரும். நம்ம அப்பா குண்டா, உயரமா இருக்கானே, நான் இத்தணுண்டு குட்டிப் பொண்ணா இருக்கேனே, என்னால அவனை அடிக்க முடியுமா, அப்படிங்கற பயம் உடனே வந்துடும். என் அப்பனை எனக்கு பிடிக்கவே பிடிக்காது" பேச முடியாமல் சுகன்யாவின் கண் கலங்கி கண்ணீர் தத்தளித்தது.
"அந்த ஆறு வயசுல நான் அப்படியே பனிப் பாறையா மனசுல உறைஞ்சு போய், மாடிப்படிக்கு கீழ இருட்டுல உக்காந்துக்குவேன். யார் கிட்டயும் சீக்திரத்துல பேசவே மாட்டேன். எத்தனையோ தடவை, என் அம்மா அடி வாங்கராளேங்கற பயத்துல, நடுக்கத்துல என் உள்ளாடை மூத்திரத்தால நனைஞ்சு போயிருக்கு.
அடி வாங்தினவளை, குண்டுகட்டா கட்டில்ல தூக்திப் போட்டு, மேல ஏறி படுத்து அவன் உடம்பு பசியையும் தீத்துக்குவான். அது என்னன்னு அப்ப எனக்கு தெரியாது. இப்ப புரியுது. இப்பவும் லேசா ஞாபகமிருக்கு.
அன்னைக்கு நடந்ததை நினைச்சா என் உடம்பு இன்னைக்கும் நடுங்குது, ஒரு நாள் என் அம்மா மேல கிடந்தவனை, முதுகுல குத்தி, இழுக்க முயற்சி பண்ணேன். அவன் என்னை அறைஞ்சு தள்ளினான். குடி வெறியில என்ன பண்றோம்ன்னு தெரியாம என்னை கட்டிப்புடிச்சு முத்தம் குடுத்து... கடிக்க ஆரம்பிச்சிட்டான். அன்னைக்கு எங்கம்மாவுக்கு வந்த வெறியை பாத்து நான் உறைஞ்சு போயிட்டேன்.
என்னை என்ன வேணா பண்ணு, நான் பொறுத்துக்குவேன். என் பொண்ணைத் தொட்டே, உன்னைக் கொண்ணுடுவேன்னு கத்தினாங்க; தொடப்பக்கட்டையை எடுத்து சாத்து சாத்துன்னு அவனை சாத்தினாங்க. அதிகமான குடி வெறியில இருந்த அவனுக்கு தொடர்ச்சியா கிடைச்ச அடியால, எங்கம்மாவை அவனால திருப்பி அடிக்க முடியல.
அன்னைக்கு ஒரே ரகளை. தெருவே ஒண்ணு கூடிப் போச்சு. என் மாமா, கையில அரிவாளை தூக்கிட்டு வந்தார். ரெண்டு அறை விட்டு என் அப்பனை கழுத்தைப் பிடிச்சு வீட்டை விட்டு வெளியத் தள்ளினார். இந்த வீட்டுக்குள்ள நீ வந்தா உன் காலை மட்டும் இல்ல, உன் கழுத்தையும் வெட்டுவேன்னார். அன்னைக்கு போனவன் தான் இன்னைக்கு வரைக்கும் எங்களுக்கு அவன் எங்க இருக்கான்னு தெரியாது.
என் அப்பனைப் பத்தி நான் தெரிஞ்சுக்க எப்பவும் முயற்சி பண்ணதே இல்லை. என் அப்பன் மேல எனக்கு இருந்த இந்த பயம், நடுக்கம், கோபம் அப்படிங்கற உணர்ச்சிகளை என் ஏழு வயசு வரைக்கும் அனுபவிச்சதால, ஆம்பிளைங்களை நான் வெறுக்க ஆரம்பிச்சேன். இந்த வெறுப்புணர்சியினால தான் என்னை நான் மத்தவங்ககிட்ட இருந்து தனிமைப் படுத்திக்கிட்டேன். ஸ்கூல்லேயும் சரி, காலேஜ்லேயும் சரி நான் ஆம்பிளை பசங்க கூட அதிகமாக பேசமாட்டேன். என் மனசுல உன் மேல ஒரு விருப்பம், ஈர்ப்பு, எப்படி வந்ததுன்னு எனக்கு இன்னைக்கும் புரியல.
இந்த ஈர்ப்பு உன் மேல காதலா மாறினப்பகூட, உங்கிட்ட சொல்லமா இருந்ததுக்கு நீயும் ஒரு ஆம்பிளைங்கறதுதான் காரணம். என் ஃப்ரெண்டு வேணிதான் எல்லா ஆம்பளையும் கெட்டவன் இல்லன்னு கொஞ்சம் கொஞ்சமா என் மனசை மாத்தினா. உன் அம்மா வாழ்க்கையில நடந்தது, உன் வாழ்க்கையிலேயும் திரும்பவும் நடக்கணும்ன்னு அவசியம் இல்லடின்னு, என்னை வாழ்கையை ரசிச்சு வாழ உற்சாகப்படுத்தினா" அவள் தன் கண்களைத் துடைத்து, மூக்கை உறிஞ்சிக்கொண்டாள்.
"கொஞ்ச நாளா, உன் அன்பு என் மனசுக்கு ரொம்ப ஆதரவா இருந்தது. நான் திக்குத் தெரியாம வானத்துல பறக்கற பட்டத்தைப் போல மகிழ்ச்சியா பறந்துகிட்டு இருந்தேன். இப்பத்தான் தெரியுது, பட்டம் விடறவன் கயித்தை இழுத்து பிடிச்சா, கீல வந்துதான் ஆகணும்ன்னு. சாவித்திரி தன் பட்டத்தால என் கயிறை அறுக்கப் பாக்திறா, நீ இந்தப் பட்டத்தை அறுபடாம காப்பத்துவியான்னு எனக்குத் தெரியல.
செல்வா, என் அப்பனை நான் என்னைக்கோ மறந்துட்டேன். எனக்கு எல்லாமே என் மாமா ரகுதான். அவர்தான் எங்க வாழ்க்கையில எங்களுக்கு இதுவரைக்கும் ஆதரவா இருந்தவர், கடைசி வரைக்கும் எந்த பிரச்சனையிலும் எனக்கு உதவியா இருக்கப் போறவர் அவர்தான். என் கல்யாணத்திலும் அவரும், என் அம்மாவும் தான் என் பக்கத்துல நிப்பாங்க.
என் குடும்ப அந்தஸ்து இவ்வளவு தான். என் கிட்ட சொத்து இல்லை. நிலம் இல்லை; வீடு இல்லை; வசதிகள் இல்லை. உறவினர்கள் இல்லை. என் அன்பைத்தவிர வேற எதையும் என்னால உனக்கு குடுக்க முடியாது. உங்கம்மா எதிர்பாக்கற மாதிரி, இந்த சமூகத்துக்காக, என் அப்பனை நான் தேடி கூப்பிட்டுக்கிட்டு வந்தாத்தான் நம்ம கல்யாணம் நடக்கும்ன்னா, நம்ம ரெண்டு பேருக்கும் என்னைக்குமே கல்யாணம் நடக்காது. அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டவும் வேண்டாம். உன் இஷ்டப்படி நீ உங்க அம்மா சொல்றதை கேக்குற பையனாவே இருக்கலாம். அவங்க சொல்ற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்னைப்பத்தி நீ கவலைப்படவேண்டாம்" அவள் பார்வை வெகு காரத்தில் கடலை வானம் முத்தமிடும் இடம் போல் நின்றிருந்தது.
"இப்ப சொல்லு உன் முடிவு என்ன? உனக்கு நான் வேணுமா? இல்லை அந்தஸ்துல என்னைவிட உயரத்துல இருக்கிற, அப்பா, அம்மாவோட, பெசண்ட் நகர்ல மாடி வீட்டில குடி இருக்கற ஜானதி வேணுமா?"
" .............."
"சொல்லு செல்வா. நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன். என் முடிவையும் நான் ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டேன். சம்பந்தப்பட்ட நாம நேருக்கு நேரா உக்காந்து இருக்கோம். நீ இப்ப உன் பதிலை சொல்லியாகணும்." அவள் குரல் உணர்ச்சிகளின்றி வறண்டிருந்தது.
"சுகன்யா அவசரப்படாதே, நீ உன் குடும்பத்தைப் பத்தி சொன்னதை என் வீட்டுல போய் சொல்றதுக்குகூட நீ எனக்கு டயம் குடுக்கமாட்டியா? நான் என் வாழ்க்கையை என் பெத்தவங்க ஆசிர்வாதத்தோடு ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன்” அவன் அவள் முகத்தை தன் கையால் தொட்டு தன் புறம் திருப்பினான்.
"செல்வா, நீ சொல்றது ரொம்ப சரி. பெத்தவங்க ஆசிர்வாதம் கண்டிப்பா வேணும், இப்ப என்னை விட என் அப்பா யார், என் குடும்ப அந்தஸ்து என்னங்கறது உனக்கு முக்கியமா படுது. போனவாரம் வரைக்கும் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தே? இப்ப உன் மனசு ஊசலாடுதுன்னு எனக்குத் தோணுது. இப்ப நான் கேக்கிற ஒரே கேள்வி, உன் வாழ்க்கையை நீ யார் கூட ஆரம்பிக்க முடிவு பண்ணி இருக்கே? அதுக்கு நீ பதில் சொல்லலை."
செல்வா பதில் ஏதும் சொல்லாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டுருக்க, சுகன்யா தன் முகத்தை பற்றியிருந்த அவன் கையை கோபத்துடன் தட்டிவிட்டாள். சடாரென எழுந்து தன் புடவையில் ஓட்டியிருந்த மணலை வேகமாக உதறினாள். உதிர்ந்த மணல் செல்வாவின் முகத்தில் பறந்து விழுந்தன. சுகன்யா கைப்பையைத் தன் தோளில் மாட்டிக்கொண்டாள்.
"மிஸ்டர் செல்வா, நாம இனிமேல் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்காம, பேசிக்காம இருக்கறது, எனக்கு நல்லதுன்னு நினைக்கிறேன். லெட் அஸ் பார்ட் ஆஸ் குட் ப்ரெண்ட்ஸ். நீங்களும் உங்க மனசுல இருக்கறதை 'ஆனது ஆச்சு; போனது போச்சுன்னு' சொல்லிட்டீங்க, எனக்குத்தான் அப்ப டக்குன்னு அதுக்கு என்ன அர்த்தம்ன்னு புரியல."
சுகன்யா பேசியதை கேட்டதும் திடுக்கிட்டு எழுந்தவன், அவள் வலது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அவள் உதடுகள் இறுதியிருந்த விதத்திலும், அவள் பார்வையில் இருந்த சலிப்பிலும், அவள் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டாள் என செல்வாவுக்குத் தோன்றியது.
'என் ஒரு கேள்வியினால், அவள் தன்னை உதறும் அளவுக்கு போய்விட்டாளே? அப்படித் நான் என்ன தப்பா கேட்டுட்டேன்? அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியுமா?' செல்வா விரக்தியுடன் தன் மனதுக்குள் யோசித்தான்.
"சுகன்யா, என் அம்மாவோட முழு விருப்பத்தோட என் கல்யாணம் நடக்கணும்ன்னு நான் சொல்றதாலே, நான் ஒரு குற்றவாளின்னு நீ முடிவு பண்ணிட்டே. எனக்கு உன் தீர்ப்பையும் சொல்லிட்டே"
'நான் என் தாயை விட்டுக் கொடுத்துதான் இவளை கைப்பிடிக்க வேண்டுமா?' அவன் மனதிலும், கண்களிலும் ஒரு இனம் தெரியாத குழப்பமும், வன்மமும், தோன்றியிருந்தது.
"செல்வா நீங்க என்னைத் தப்பா புரிஞ்சுக்குறீங்க. உங்களை நான் குற்றவாளின்னு சொல்லலே. என் முடிவை நான் திட்டவட்டமா சொல்லும்போது உங்களால உங்க முடிவை ஏன் சொல்ல முடியலேன்னுதான் கேக்கிறேன்?"
"சுகன்யா, திரும்ப திரும்ப நான் குத்தம் பண்ணிட்டேங்கற மாதிரியான ஒரு உணர்வை நீ என் மனசுக்குள்ள உண்டாக்கற. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல" தன் இரு கைகளையும் அவன் தன் பின் தலையில் கோத்துக்கொண்டான்.
"நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு எனக்கும் புரியல செல்வா"
"நீயும் நானும் பல தடவை ஒருவரை ஒருவர் சகஜமாக உணர்ந்து இருக்கோம். அந்த சமயங்களில் நான் உன்னை அந்தரங்கமா தொட்டு இருக்கேன். இதை நான் எப்பவுமே மறுக்கல; அந்த சமயங்களில் நான் மட்டும் தான் மகிழ்ச்சியா, சந்தோஷமா இருந்தேன்னு சொன்னா, அது பொய்யாத்தான் இருக்க முடியும், சுகன்யா நீ புத்திசாலி, நான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்." செல்வா நிதானமாக பேசினான்.
சுகன்யா ஒரு பத்து வினாடி மவுனமாக இருந்தாள். பின் அவனைப் பார்த்து வாய்விட்டு உரக்கச் சிரித்தவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
"செல்வா, உன் மனசுக்குள்ள நான் மட்டும் இருந்தப்போ, நீ என்னைத் தொட்டப்ப, உனக்கு உன் மனசுல எந்த குற்ற உணர்வும் ஏற்படலை. மிஸ்டர் செல்வா, இப்ப உங்க மனசுல ஒரு சலனம் ஏற்பட்டு போச்சு. நாம் கடந்த காலத்துல, ஒருத்தரை ஒருத்தர் அந்தரங்கமா தொட்டு, மதிழ்ச்சியா இருந்திருக்கோம்ன்னு சாதாரணமாக நான் சொன்னாலும், உங்களுக்கு அது ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துது.
எல்லாத்துக்கும் மேல நீங்க ஒரு விஷயத்தை நல்லாப் புரிஞ்சுக்குங்க. என் விருப்பயில்லாம என்னை நீங்க எப்பவுமே தொட்டிருக்க முடியாது. என்னுடைய முழு விருப்பத்துடன், நான் உங்களை என்னைத் தொட அனுமதிச்சேன். ஏன்னா, நான் உங்களை மனசார காதலிச்சேன். நான் பிரியப்பட்டவன் என்னைத் தொட விரும்பினப்ப அவனைத் தொடவிட்டேன். நானும் மகிழ்ச்சியா இருந்தேன். அவனையும் மகிழ்விச்சேன். செல்வாவுக்கு முத்தம் குடுக்கறமே, நாளைக்கு இவன் நம்மளை கட்டிக்கலன்னா என்ன ஆகும்னு நான் நெனைச்சதே இல்லை. ஏன்னா நான் உங்களை முழுசா நம்பினேன்.
ஆனா உங்களை மாதிரி, எப்பல்லாம் சாவித்திரி நம்ம குறுக்க வராளோ அல்லது நம்ம காதலுக்கு நடுவுல ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை வந்தாவோ, உடனே அன்னைக்கு 'சுகன்யா நான் உன்னைத் தொடமாட்டேன்', அப்படின்னு சபதம் எடுத்ததில்லை.
இந்த ஒரு செகண்ட், என் அப்பனை நினைச்சு என் வாழ்க்கையில முதல் தடவையா நான் கர்வப்படறேன். அவன் குடிகாரனா இருந்திருக்கலாம். என் அம்மாவை அடிச்சு துன்புறுத்தியிருக்கலாம். ஆனா கடைசிவரைக்கும், அவன் காதல் வாழ்க்கையில வந்த பிரச்சனைகளை தைரியமா எதிர்த்து நின்னு, அவங்க பெற்றோர்களை விட்டுட்டு வந்து, எங்க அம்மா கழுத்துல தாலியைக்கட்டி, ஆசையா ஒரு பிள்ளையையும் பெத்துக்கிட்டான்.
உங்களை மாதிரி ஒரு வழவழா கொழகொழா ஆளை, நான் கெஞ்சி கூத்தாடி, நீங்க என்னைத் தொட்டுட்டீங்கன்ற ஒரு காரணத்துக்காக, உங்களை வற்புறுத்தி கல்யாணம் பண்ணிக்கணுமான்னு உண்மையிலேயே இப்ப எனக்குத் தோணுது" இதை சொல்லி ஒரு வினாடிக்குப்பின் அவன் மனதை தெரிந்தே புண்படுத்தியிருக்க வேண்டாமோ என அவள் நினைத்தாள்.
'நான் என்ன பொய்யா சொல்றேன்? இருக்கிற உண்மையைத்தானே சொல்லுகிறேன்' அவள் முகம் இப்போது அமைதியாக இருந்தது.
பின்தலையில் கையை கோர்த்துக்கொண்டு கண்ணை மூடி நின்ற செல்வா, தன் கண்ணைத் திறந்தபோது, சுகன்யா, நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாக நிதானமாக எதிர் திசையில் நடந்து கொண்டிருந்தாள்.
தொடரும்...
கதைல, திருப்பம் வருது! எல்லோர் பெற்றோரும் இன்பம் அனுபவிக்க, சுகன்யா வின் அம்மா மட்டும் தனியாக. அதுவும் கதாநாயகன் கதாநாயகி இடையில் பிரச்சனை ஆக!
ReplyDelete