முழு தொடர் படிக்க
"படார்"
பால்கனி கதவு மிகுந்த சத்தத்துடன் அடித்துக்கொள்ள, சட்டென சுந்தரி நிகழ்காலத்துக்கு வந்தாள்.
வானத்தில் இடியின் முழக்கம். காற்றின் வேகம் வலுத்திருந்தது. சுழன்று சுழன்று காற்று அடித்தது. மின்னல் மின்னியது. அவள் தன் கண்களை மூடிக்கொண்டாள்.
'மழை நாட்கள்ல்ல, மனுஷனுடைய உடல் வேட்க்கை அதிகமாயிடுது... இப்ப என் குமார் என்னப் பண்ணுவான்? அவனும் இப்படித்தான் தூங்காம இருப்பானா?'
'ச்சே.. ச்சே எனக்கென்ன பித்துப் புடிச்சு போச்சா?'
'இன்னைக்கு உப்புமாவுல உப்பு கொஞ்சம் அதிகமாயிருந்தது... அதான் என் உடம்புக்கு கதகதப்பு கேக்குது'
சடசடவென மழை வேகமாகக் கொட்டத் தொடங்கியது. சுந்தரி விருட்டென எழுந்தாள். எழுந்து ௯ரையில்லாத இடத்தை நோக்கி மெதுவாக நடந்து தலை முடியை அவிழ்த்து உதறிக் கொண்டு, கொட்டும் மழையில் நின்றாள். தலை முடி அவள் இடுப்பை தொட்டு நின்றது. அகன்ற இடுப்பு மத்தளமாக காட்சியளித்தது.
'உடம்பு சூடு கொஞ்சம் கொறையட்டும்' சுந்தரி விருப்பத்துடன் மழையில் நின்று நனைந்தாள். இரு கைகளாலும் மார்பின் மீது விழுந்த நீரை வழித்து எறிந்தாள். அவள் கை பட்டதும் ரவிக்கையில் தூங்கிக்கொண்டுருந்த முலைகளில் தினவேறி மெதுவாக காம்புகள் நிமிரத்தொடங்கின.
'எனக்கு பிடிக்காததை செய்யமாட்டேன்னு மழையில நின்னு சத்தியம் பண்ணியே?... நான் உன்னை வீட்டை விட்டுப் போடான்னு கத்தினேன்... உண்மைதான்... நான் இல்லேன்னு சொல்லலை... எத்தனை தரம் நீ என்னை உன் குடி வெறியில அடுச்சிருப்ப? என்னை கீழத் தள்ளி மிதிச்சிருப்ப? நான் ஒண்ணுமே சொன்னதில்லையே? குடி வெறியில நம்ம குழந்தையை கடிச்சியேடா? அதை என்னால பொறுக்க முடியாம போய்த்தானே, நான் உன்னை ஓரே ஒரு தரம், திருப்பி அடிச்சேன்? அதுக்காக நீ என்னை விட்டுட்டு மொத்தமா போயிட்டியேடா?'
'குமாரு, இப்ப நீ எங்கடா இருக்கே? நான் இங்கேத் தனியா மழையில பைத்தியக்காரியாட்டம் நிக்கறண்டா; உடம்பு சூடு ஏறிப் போய் நனையறேண்டா... தவிச்சிப் போயிருக்கேண்டா... என்னால முடியலடா... வெக்கத்தை விட்டு கெஞ்சறேன்... வந்துடுடா... எனக்காக நீ வரவேண்டாம்... உன் ஆசைப் பொண்ணுக்கு உன்னைப் பாக்கணுமாண்டா? ஒரே ஒரு தரம் வந்துட்டுப் போடா..." அவள் மனம் அழுது கூவியது.
வானத்தில் மின்னல் மின்னி, இடி இடித்துக்கொண்டு குமுறியது... இயற்கையின் இந்த கம்பீரமான பிளிறலில், அவள் மனதின் மெல்லிய ஓலம் அவள் ஆசைக் கணவன் குமாருக்கு - குமாரசுவாமிக்கு கேக்குமா?
'வீட்டுக்கு மாப்பிள்ளை வரப் போற நேரத்துல, என் மனசு ஏன் இப்படி தறிகெட்டு ஓடி பழசையெல்லாம் நினைக்குது?' அவள் கன்னங்களில் கண்ணீர்ர் வழிந்தோடி அவள் உதடுகளைத் தொட்டது.
'மழை நீர் சுத்தமானதுன்னு சொல்றாங்களே, எத்தனை தடவை நான் மழையில நின்னு நனைஞ்சிருக்கேன்? இன்னைக்கு ஏன் எனக்கு மழைத் தண்ணி உப்பு கரிக்குது? நான் அழறேனா என்ன? என் மனசு கல்லுன்னு என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் சொல்றாங்களே?' அவள் மனதுக்கு இதற்கான விடை தெரிந்திருந்த போதிலும், அவள் பரிதவித்துக் கொண்டிருந்தாள்.
சுகன்யா, பால்கனி கதவு ஏற்படுத்திய சத்தம் கேட்டு, தூக்கத்திலிருந்து சட்டென விழித்து எழுந்தாள். பக்கத்தில் படுத்திருந்த தாயைக் காணாமல் ஒரு நொடி பதறிப் போனாள்.
பால்கனி கதவு காற்றில் மீண்டும் திறந்து கொள்ள, மின்னல் வெளிச்சத்தில் சுந்தரி வெளியில் மழையில் நின்று கொண்டிருப்பது அவள் கண்ணில் பட்டது.
எழுந்து விளக்கைப் போட்டாள்.
"இந்த அம்மாவுக்கு மழை மேல அப்படி என்ன அடங்காத ஆசை? எப்ப மழை பேஞ்சாலும் பயித்தியமாட்டம் ஓடிப்போய் அதுல நனையனும்; ராத்திரி பகல் ஒன்னும் கிடையாது" அவள் மனதில் சலித்துக்கொண்டு சுவரில் மாட்டியிருந்த குடையை கையில் எடுத்துக்கொண்டு வெளியில் ஓடினாள்.
"எம்ம்மா, உள்ள வாம்மா: யாராவது உன்னைப் பாத்தா பயித்தியம்ன்னு நெனைச்சுக்கப் போறாங்க." சுகன்யா, சுந்தரியின் கையை பிடித்து உள்ளே இழுத்துக்கொண்டு வந்தாள்.
தன் மகளின் கரம் அவள் உடம்பில் பட்டதும், சுந்தரியின் உடல் லேசாக நடுங்கியது.
"சீக்கிரமா தலையைத் துவட்டும்மா: ஜொரம் வரப்போவுது உனக்கு; உடம்பு நடுங்கற அளவுக்கு மழையில நனையிற?... முதல்ல உன் ரவிக்கையை அவுத்துட்டு இதை உடம்புல போடு" அலமாரியை திறந்து ஒரு புது நைட்டியை எடுத்து தன் தாயிடம் நீட்டினாள் சுகன்யா. ஸ்டவ்வை பற்ற வைத்து பாலைச் சூடாக்கி, காஃபியை கலக்க ஆரம்பித்தாள்.
"கண்ணு, எனக்கு ஒன்னும் இல்லடா: ஏன் இப்படி பதறிப் போற நீ?"
"ஆமாம்... பதறிப் போறேன்... இடியிடிக்குது, அப்படி ஒரு மின்னல் மின்னுது; மழையில போய் நிக்கற? உனக்கு என்ன ஆச்சு இப்ப?"
"..........."
"ஹ்ம்.. எனக்கு எல்லாம் தெரியும்... இப்ப உனக்கு உன் புருஷன் நினைப்பு வந்துடுச்சு... அதானே?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லடி" காஃபியை உறிஞ்சிய சுந்தரி போலியாக சிரித்தாள்.
"நான் இன்னும் சின்னக் குழந்தையில்லம்மா; உண்மையை சொல்லு... பொய் பேசக்கூடாதுன்னு மூச்சுக்கு முன்னூறு தரம் எனக்கு உபதேசம் பண்ற நீ பொய் சொல்லலாமா; நான் என் அப்பாவை பாக்கணும்ன்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன்: அது உன்னை இந்த அளவுக்கு பாதிக்கும்ன்னு நான் நினைக்கலை: அப்பவே உனக்கு இஷ்டமில்லன்னா, நான் அவரைப் பாக்கமாட்டேன்னும் சொல்லிட்டேன்; அப்புறம் எதுக்கு நீ நேத்து ராத்திரி பூரா அழுதுகிட்டு இருந்தே?” பெண்ணின் பேச்சிலிருந்த உண்மை அவளைச்சுட்டது.
"சுகா... நீ சொல்றது சரிதாம்மா... நான் யோசனைப் பண்ணிப் பாத்தேன்"
"என்னம்மா சொல்றே நீ"
"தீராத கோபம் யாருக்கு லாபம்? தங்கமான மனுஷந்தாண்டி உன் அப்பா. அந்த குடிப்பழக்கம்தான் அவரை ஒரு மனுசனா இல்லாம ஆக்கியிருந்தது. நானும் உன் மாமாவும் சேர்ந்து தானே அவரை அடுச்சு விரட்டினோம். என் புருஷன் நல்லவர்தான் ஆன ரொம்ப ரோஷக்காரர். யாருக்குத் தெரியும்? நீ சொல்றது மாதிரி உங்கப்பா ஒருவேளைத் தன் குடிப்பழக்கத்தை விட்டுட்டு திருந்தி வாழ்ந்துட்டு இருக்கலாம்? திருந்தியே இருந்தாலும் உங்காப்பாவா எப்படி திரும்பி வருவார்? உன் மாமாவுக்கு அவர் இருக்கற இடம் தெரிஞ்சு இருக்குன்னு நினைக்கிறேன்.. பேசாம நானே உன் அப்பாகிட்ட பேசறேன்... திரும்பி வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடறேன்..." சுந்தரி சுவரைப் பார்த்துக்கொண்டு பேசினாள்.
"நிஜம்மாவாம்மா சொல்ற?" சுகன்யா தன் தாயின் தோளில் கையைப் போட்டுக்கொண்டாள்.
"நிஜம்மாத்தாண்டா கண்ணு சொல்றேன்."
"தேங்க்ஸ்ம்மா.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ம்மா.. உனக்கு கஷ்டமாயிருந்தா நான் வேணா அப்பாக்கிட்ட பேசறேனேம்மா.. அவருக்கு என் மேல என்ன கோபம் இருக்க முடியும்?" சுகன்யா தயங்கி தயங்கிப் பேசினாள்.
"சரிடா கண்ணு... நீ தான் பேசு... எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லம்மா... இப்ப லைட்டை நிறுத்து... செத்த நேரம் தூங்கலாம்... மணி ரெண்டாவாகப் போகுது..."
*****************************
தெரு விளக்குகள் பளிச்சென்று எரிந்து கொண்டயுருந்தன. பண்புள்ள ஒரு குடும்பத்துடன், மாலை நேரத்தை கழித்ததனால் உள்ளத்தில் பொங்கிய உவகையுடன், அந்த இனிமையான சுவையை அசைபோட்டவாறே, மனம் நிறைய குதூகலத்துடன் குமாரசுவாமி கெஸ்ட் ஹவுசை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருந்தார். தன் மனதிலிருந்த மகிழ்ச்சியை பதட்டமில்லாமல் அனுபவிக்க விரும்பி ஆட்டோவைத் தவிர்த்துவிட்டு, தான் தங்கியிருந்த இடத்திற்கு அவர் நடந்து செல்ல விரும்பினார்.
நடப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. கடந்த பதினைந்து வருடங்களாக, தன் ஓய்வு நேரத்தை நடப்பதிலேயே கழித்துக் கொண்டுருந்தார். குளிர்ச்சியாக வீசிக்கொண்டுருந்த காற்றும், வரப்போகும் மழையும், அவருடைய உள்ளத்தில் பொங்கிய மதிழ்ச்சியை ரெட்டிப்பாக்கிக் கொண்டிருந்தன. குமாரசுவாமியின் நிழல், அவருடன் சேர்ந்து சென்றது, பின்னாலிருந்து அவரைத் துரத்தியது, வேகமாக முன்னால் சென்று, மீண்டும் பின்னால் வந்து அவரைத் துரத்தியது. முன்னேயும் பின்னேயும் ஓடி ஓடி..
"ம்ம்ம்.. களைப்பே இல்லையா இதுக்கு: என் மனசை மாதிரி" அவர் சிரித்துக் கொண்டார்.
கால்கள் மெதுவாக நடை போட அவர் மனம் வேகமாகப் பறந்தது.
"நடராஜன் குடுத்து வெச்ச மனுஷன். அவர் கட்டிக்கிட்ட பொம்பளை, வெட வெடன்னு இருந்தாலும்; பளிச்சுன்னு மனசுல ஓட்டிக்கற முகம்; சிம்பிளா ஒரு மூக்குத்தி, தோடு, கழுத்துல மெல்லிசா ஒரு செயின், வாய் நிறைய சிரிப்பு; தர்மானமாக ஒரு பேச்சு; கொஞ்சம் முன் கோபியா இருப்பாளோ? அந்தம்மா பார்க்கற பார்வையில பொண்ணும், புருஷனும், பணிஞ்சிப் போயிடறாங்க; இருந்துட்டுப் போவட்டுமே; அவங்க குடும்பம்; அவங்க குடும்பத்தோட நல்லதுக்காகத்தானே மல்லிகா ஸ்ட்ரிக்டா இருக்காங்க; அவங்களுக்கு ஒரு ஆம்பளைப் புள்ளைன்னாரு நடராஜன்".
"நல்லவங்களுக்கு பொறந்தவன்; அவனும் நல்லவனாத்தான் இருப்பான்: ரெண்டு பேரு மேலயும் பாசத்தைக் அள்ளிக் கொட்டறாளே இந்த அம்மா!என்னமா ஓடி ஓடி, போதும்ன்னாலும் கேக்காம கை நெறய அள்ளி அள்ளி என் எலையில போட்டா: முகத்தைப் பார்த்து பரிமாறின விதத்துல தெரியுதே அவ மனசு தாராளம்ன்னு" குமாரசுவாமியின் மனசு வஞ்சனையில்லாமல் வாழ்த்தியது மல்லிகாவை!
"எனக்கு வாய்ச்சவ மட்டும் எந்த விதத்துல கொறச்சலா இருந்தா? அழகுல கொறையா? இல்லையே? அம்சாம இருந்தா! சுந்தரிங்கற பேருக்கு ஏத்தப்படி சுந்தரியாத்தான் இருந்தா: படிப்புல கொறையா? நல்லாப் படிச்சுட்டு கை நெறைய சம்பாதிச்சா: நான் உன்னை காதலிக்கறேன்னு சொன்ன ஒரு வார்த்தைக்காக அவ அப்பன் ஆத்தாளை பகைச்சிக்கிட்டு எனக்காக நான் கூப்பிட்ட உடனே என் பின்னால ஓடி வந்தா? என் கூடப்படிச்சவன்ல்லாம் "மாப்ளே, லாட்டரி விழுந்துடுச்சுடா உனக்குன்னு!" பொறாமையில வயிறெரிஞ்சானுங்க..."
"சுந்தரிக்கும் தாராள மனசுதான்: என்னக்குறை வெச்சா எனக்கு? கேட்டப்பல்லாம், வாரி வாரி மனசார அவளையும், அவ சம்பாதிச்ச பணத்தையும் அள்ளி அள்ளிக் குடுத்தா; நேரத்துல அழகா தங்க விக்ரகம் மாதிரி ஒரு பொண்ணையும் பெத்து என் கையிலக் கொடுத்து என்னைப் அப்பனாக்கினா: என் நேரம் சரியில்லாம போனா, நேரம் என்னா நேரம்? நான் புத்திக்கெட்டுப் போய், சேரக்கூடாதவன் கூட சேர்ந்து, குடிக்கக் கத்துக்கிட்டு, என் குடியை நானே அழிச்சிக்கிட்டா அதுக்கு யார் பொறுப்பு? கொடுத்தவன் நல்லாத்தான் கொடுத்தான்: நான் அவளை வெச்சி வாழல; அதுக்கு யாரைக் குத்தம் சொல்றது?"
"வேணாம் குமாரு, நாம அழிஞ்திப் போயிடுவோம்டானு தலைத் தலையா அடிச்சுக்கிட்டா; நம்பளைப் பாத்து ஊர்ல இருக்கற ஜாதி ஜனங்கல்லாம் சிரிப்பாங்கடா? நாம காதல் காதல்ன்னு ஊரு, உறவு மொறைங்களை பகைச்சுக்கிட்டு வந்துட்டோமே? அத்தனை பேருக்கும் நாம இளக்காராமா போயிடுவோம்; இந்த குடிப்பழக்கத்தை விட்டுடுடான்னு அன்பா சொல்லிப் பாத்தா: கெஞ்சினா: மிரட்டிப்பாத்தா; ரெண்டு வருவும் நான் அடிச்சக் கூத்தையெல்லாம் பொறுத்துக்கிட்டு இருந்தா."
"கடைசியா குடி வெறியில நான் என் பொண்ணையே கடிச்சுப் புண்ணாக்கினா: எந்தப் பொம்பளைத்தான் சும்மா இருப்பா: அப்புறம்தான் தொடப்பத்தை எடுத்து அடிச்சுப்புட்டா: என் வீட்டை விட்டு வெளியில போன்னா: அவ தம்பி அரிவாளைத் தூக்கிட்டு வெட்ட வந்தான். அவனுக்கு மட்டும் உரிமையில்லயா குடிச்சுப்புட்டு அங்கங்க நான் வாங்கி வெச்ச கடனையெல்லாம் அவன் தானே தீர்த்தான். அவன் வீட்டுலதானே நாங்களே இருந்தோம். சுந்தரி மேல என்னத் தப்பு இருக்கு?"
"ரோஷமா, வீட்டை விட்டு போடான்னு அடிச்சு விரட்டுனாளேன்னு நானும் மறு பேச்சு பேசாம போயிட்டேன். பொண்டாட்டி புள்ளையில்லாம தனியா பிச்சைக்காரன் மாதிரி ஊர் ஊராக அலைஞ்சதுக்கு அப்பறம் தான் புத்தி வந்தது; பதினைஞ்சு வருஷமா தனியா வீம்பா, கோபமா வாழ்ந்து என்னத்தைக் கண்டேன்?"
"அப்பா அம்மா என் கூட வந்து இருக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் , வாழ்க்கையில இப்டி ஒரு பிடிப்பு வந்திருக்கு. டேய் எங்க உசுறு போறதுக்கு முன்ன எங்க பேத்தியைப் பாக்கணும்ன்னு அவங்க துடிக்திறாங்க. போடா, அந்த பொண்ணு கால்ல விழுந்தாவது என் பேத்தியை கூப்பிட்டுக்கிட்டு வாடாங்கறாங்க; உடம்புல ரத்தம் குறைய குறைய இப்ப என் மிச்சமிருக்கற காலத்தை கட்டிக்கிட்டவ கூட கழிக்கணும்ன்னு தோணுது. சுந்தரியை பாக்கணும்ன்னு என் மனசு துடிக்குது. நான் அவ வீட்டுக்குப் போனா வான்னு சொல்லுவாளா? என்னை மன்னிச்சு மீண்டும் என்னை தன் புருஷனா ஏத்துப்பாளா?"
"முதல்ல அவ தம்பி ரகுகிட்ட தான் பேசிப்பாக்கணும். எத்தனை அலைஞ்சு, யார் யாரை விசாரிச்சு, அவன் ஆஃபீசை கண்டுபுடிச்சி, அவன் செல் நம்பர் எனக்கு கிடைச்சிருக்கு. இன்னைக்கு கெஸ்ட் ஹவுசுக்கு போனதும் என் மச்சான் கிட்ட பேசி என் குடும்பத்தை பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும்."
"மீனா துறுதுறுன்னு இருக்கா: மணியான பொண்ணு: பெத்தவ பாக்கற பார்வையிலேயே, சொல்றது என்னான்னு புரிஞ்சிக்கிட்டு செய்ய வேண்டிய காரியத்தை கரெக்டா செய்து முடிச்சிடறா! பொண்டாட்டி, புள்ளைங்க, சினேநஜிதன், வேலைக்காரன் இதெல்லாம் மேல இருக்கறவனா பாத்து கொடுக்கறது. வரம் வாங்கிக்கிட்டு வரணும்."
"டேய் மடையா! என்னப் பேசறே நீ: உன் பொண்ணுக்கு என்னடா குறைச்சல்; அப்பா அப்பான்னு உசுரை வுட்டாளே; உன் மடியிலதான் உக்காந்து சாப்பிடுவேன்னு தினம் ஒரு அமக்களம் பண்ணுவா. நீ குடிச்சுட்டு வர ஆரம்பிச்சதிலேருந்து எல்லாம் போச்சு; உன்னைப் பாத்தாலே அந்த குழந்தை பயந்து நடுங்க ஆரம்பிச்சிடுச்சி." குமாரசுவாமியின் கண்கள் கலங்கியது.
"இப்ப அழுது என்ன பிரயோசனம். இன்னும் என் சுந்தரி கும்பகோணத்துலதான் வேலை செய்யறாளா? என் சுகன்யா... என் குழந்தை சுகா என்னப் பண்ணிக்கிட்டிருப்பா? என்னைப் பாத்தா அவளுக்கு அடையாளம் தெரியுமா? அவளுக்கு இருபத்தி மூணு வயசாயிருக்கும்; என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா? அப்படியே ஆகியிருந்தாலும் சுந்தரி என்னை என் பொண்ணு கல்யாணத்துக்கு கூப்பிட்டுரக்கணும்ன்னு என்ன அவசியம்? நான் என் குழந்தைக்கு இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்கேன்?" அவர் மனம் வெட்கத்தில் துவண்டது.
"கடவுளே எனக்கு ஒரு சான்ஸ்... ஒரே ஒரு சான்ஸ் குடு... நான் என் மனைவியை... என் குழந்தையை, கண்ணுல வெச்சு பாத்துக்குவேன். என்னை நம்பி வந்தவளுக்கு, நான் பண்ண கொடுமைக்கு; அவ மனசு சந்தோஷப் படற மாதிரி நடந்துக்கறதுக்கு ஒரே ஒரு வாய்ப்பு குடு" அவர் மனது இறைந்தது. மழை தூறத் தொடங்கியது.
"என் இறைஞக்சுதல் அவனுக்கு கேட்டுவிட்டதா?"
தொடரும்...
Comments
Post a Comment