"வாம்மா .. மணி ரெண்டாக போகுது... நீயும் பசியோட இருப்பே . போய் எதாவது சாப்பிடுவோம் ..." குமாரசுவாமியும் சுகன்யாவும் எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள்.
"சுகா, நீ நேத்து அம்மா மழையில நனைஞ்சான்னு சொல்ற; நீயே காஃபி போட்டு குடுத்தேங்கறே? அப்ப சுந்தரி உன் கூட சென்னையிலா இருக்கா?"
"ஆமாப்பா; அம்மா இங்க சென்னையிலத்தான் இருக்காங்க..."
"அம்மா வேலையை சென்னைக்கு மாத்திக்கிட்டாளா?"
"இல்லப்பா... அம்மா கும்பகோணத்துலத்தான் வேலை செய்யறங்க; என்னால நம்ப வீட்டுல ஒரு சின்னப் பிரச்சனை; அதனால அம்மாவும், மாமாவும் இங்க வந்தாங்க... அந்தப் பிரச்சனை இன்னும் முழுசா முடிவுக்கு வரலை. மாமா திரும்பிப் போயிட்டார்... அம்மா இன்னும் ரெண்டு நாள் இங்க என் கூடத்தான் இருப்பாங்கா; நான் பத்து நாள் லீவு போட்டிருக்கேன்; வெள்ளிக்கிழமை அம்மாவும் நானும் நம்ப ஊருக்கு கிளம்பறோம்."
"உனக்கு என்னப் பிரச்சனைடா செல்லம்... என்கிட்ட சொல்லேன் நான் தீத்துவைக்க முயற்சி பண்றேன்..."
"நீங்க முதல்ல வீட்டுக்கு வாங்கப்பா... வந்து அம்மாவை பாருங்க: அதுக்கப்புறம் நான் எல்லாத்தையும் விவரமா சொல்றேன்."
'என் சுகாவுக்கு பிரச்சனையாமே? இந்த உலத்திலே பிரச்சனை இல்லாதவங்களே இல்லையா?' குமாரசுவாமி மவுனமாக அவளுடன் நடந்தார். இருவரும் ஹோட்டல் வந்து சேர்ந்தனர்.
"என்னப்பா சாப்படறீங்க"
"எனக்கு ஒரு புல் மீல்ஸ் சவுத் இண்டியன் தாலி ஆர்டர் பண்ணும்மா." தன் செல்லில் வந்திருந்த செய்திகளை நோட்டம் விட்டுக் கொண்டே சொன்னார்.
"நான் தவா ரொட்டியும், ஒரு ப்ளேட் ஷாஹி பனீர் அண்ட் சுட்ட அப்பளம் வாங்கிக்கப் போறேன்; இங்க இந்த அயிட்டம் நல்லா இருக்கும்பா."
"வெரி குட்; நார்த் இண்டியன் டிஸ்லாம் உனக்கு பிடிக்குமா? அச்சி லட்தி ஹோ தும்" அவர் புன்னகைத்தார்.
"ம்ம்ம்... பாபூஜி, முஜே வாஹி பனீர் க சப்ஜி பகுத் அச்சி லக்தி ஹை; க்யா ஆப் பசந்த் நஹீ கர்தே?"
மகள் சரளமாக இந்தியில் பேசியதும் குமராசாமி அவளை வியப்புடன் பார்த்தார்.
"சுகா, உனக்கு இந்தி தெரியுமா?"
"தோடி தோடி ஆத்தி ஹை; மறந்துட்டீங்களாப்பா? அம்மா ஹிந்தியிலே கோல்ட் மெடல் வாங்கினவங்க" அவள் குரலில் லேசாக வருத்தம் தொனிக்க கேட்டாள்.
"நோ... நோ... எனக்கு நல்லா ஞாபகம் இருக்கும்மா... அம்மா சொல்லிக் கொடுத்தாளா உனக்கு, கேட்டுத் தெரிஞ்சுக்கறேம்மா..."
"ஆமாப்பா... அப்பா! உங்களால நான் இன்னைக்கு அம்மாகிட்ட சரியா திட்டு வாங்கப் போறேன்" சுகன்யா தன் கருவிழிகளை அகலமாக விரித்து சிரித்தாள்.
"ஏம்மா... நான் என்ன பண்ணேன்?"
"அம்மா மதியத்துக்குன்னு தயிர் சாதமும், தக்காளி சட்னியும் பேக் பண்ணி குடுத்தாங்க; உங்க கூட நான் ஹோட்டல்ல உக்காந்து நல்லா மூக்கு பிடிக்கத் தின்னுட்டு, அதை வீட்டுக்குத் திருப்பி எடுத்துக்கிட்டு போனா, முத்தமா குடுப்பாங்க: தொடையை திருவி எடுத்துடுவாங்க;"
"ம்ம்ம்.. என் பொண்ணை நான் இருக்கும்போது திட்டவோ, கிள்ளவோ விட்ற்றுவானா நான்?" சிரித்தார் குமாரசுவாமி.
"ஹா ஹா... நீங்க என் கூட இருக்கும் போது எனக்கென்ன பயம்? அவங்ககிட்ட நீங்க திட்டு வாங்காம இருந்தா சரி! அம்மா நடுவுல ரொம்ப மாறிட்டாங்கப்பா..."
"ஏம்மா... அப்படி சொல்றே? அவ முதல்ல எனக்கு பொண்டாட்டி: அப்புறம்தான் உனக்கு அம்மாவா ஆனா; சும்மா என்னை பயமுறுத்தாதே? என் சுந்தரியைப் பத்தி எனக்குத் தெரியாதா? தங்கமாச்சே அவ?" சிறிது நேரம் டல்லாக இருந்த தன் பெண் மீண்டும் முகம் மலர்ந்து சிரிப்பதை கண்ட மகிழ்ச்சியில் அவரும் சிரித்தார்.
"நீங்களே நேரா வந்து உங்க தங்கத்தைப் எடை போட்டு பாருங்க; இப்ப உங்க பத்தரை மாத்து தங்கத்தை பாக்கறதுக்கு கிளம்புங்க .." தன் தந்தையுடன் சேர்ந்து அவளும் சிரித்தாள்.
"ம்ம்ம்... ஆனா ஆறு மணிக்கு எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு. எனக்கு கீழ வொர்க் பண்றவரோட மகன் ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பெட்டல்ல அட்மிட் ஆயிருக்கான். ஈவினிங் நான் அவனை பாக்கப் போகணும்... அப்புறமா அங்கேயிருந்து எங்க ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸுக்கு போயிடலாம்ன்னு இருக்கேன்."
"இப்ப மணி ரெண்டுதானே ஆகுது... நீங்க தாராளமா உங்க வேலையை முடுச்சுட்டு, ராத்திரி நம்ம வீட்டுக்கே திரும்பி வந்து சாப்பிடலாம்; உங்க பொண்டாட்டியும், பொண்ணும் குத்து கல்லாட்டாம் சென்னையில இருக்கறப்ப, நீங்க ஏன் எங்கேயோ கெஸ்ட் ஹவுஸ்ல்ல தங்கணும், அங்க கண்டதை சாப்பிடணும்?"
"சரிடா ராஜா! இதைப்பத்தி நாம அப்புறம் பேசிக்கலாம்... உனக்கு ஐஸ் க்ரீம் எதாவது வேணுமா? இல்லன்னா பேரரை பில்லை கொண்டு வரச்சொல்லு."
சாப்பிட்டு முடித்து பில் ப்பே பண்ணிவிட்டு வெளியில் வந்தனர்.
"அப்பா நாம வீட்டுக்கு ஆட்டோவில போகலாம்பா."
"சரிடா கண்ணு; நீ ஒரு நிமிஷம் இங்கேயே நில்லு, உன் அம்மாவுக்கு பன்னீர் திராட்சைன்னா ரொம்ப பிடிக்கும்: எதிர்ல ஃப்ரெஸ்ஷா வெச்சிருக்கான்: நான் வாங்கிட்டு வந்துடறேன்."
சுகன்யாவின் உடல் ஒரு நொடி சலிர்த்தது. 'அம்மாவுக்கு என்ன பிடிக்கும்ன்னு அப்பா இவ்வளவு நல்லா ஞாபகம் வெச்சிருக்கார்: உடலால அவர் இப்ப என் கூட இருக்கார், ஆனா அவரு மனசு அம்மாவைப் பத்தித்தான் நெனைச்சிக்கிட்டிருக்கு. அவங்களை பாக்கணும்னு கிடந்து தவிக்குது. அம்மா மேல இவ்வளவு ஆசையும், பாசமும் வெச்சிருக்திறவர், இவ்வளவு நாளா பிடிவாதமா, தயங்கி தயங்கி அவங்களை பாக்க வராம இருந்திருக்கார்.'
'ஏன் ரெண்டு பேரும் இப்படி வீம்பா ஒருத்தரை ஒருத்தர் பிரிஞ்சு தங்களுடைய இளமையை வீணாக்கிக்கிட்டாங்க? இதை தலை எழுத்துங்கறதா? இல்லை, அப்பா சொல்ற மாதிரி தனிப்பட்ட ரெண்டு பேரோட ஈகோவில் பட்ட காயத்தின் விளைவாலா? தனிப்பட்ட மனுஷங்க மனசை புரிஞ்சிக்கறது ரொம்ப கஷ்டம் போல இருக்கே.' அவள் மனம் தன் தந்தைதையும், தாயையும் நினைத்து பரிதவித்தது.
'என் பெத்தவங்களை மாதிரித்தான் நானும் செல்வாவை காதலிக்கிறேன். அவனை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன். எங்க மத்தியிலேயும், இது போன்ற ஈகோ சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருமா?'
சுகன்யா, குமாருக்காக காத்திருந்த போது, பைக்தில் ஒரு இளம் ஜோடி அவளை மெதுவாக கடந்து சென்றார்கள். பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தவன் தேவையில்லாமல் ப்ரேக் போட அவன் பின்னால் உட்க்கார்ந்திருந்தவள், விருட்டென அவன் முதுகில் தன் விம்மிய மார்புகள் உரச அழுத்தமாக அவனைக் கட்டிப்பிடித்தாள்.
"மெத்துன்னு இருக்குடி"
அவன் சிரித்துக்கொண்டே சொன்னது சுகன்யாவுக்க தெளிவாக கேட்டது. அந்த பெண் முகத்தில், இந்த சந்தர்ப்பத்தை, எதிர்பார்த்து காத்திருந்தது தெளிவாக தெரிந்தது.
அவர்கள் இருவரும் சாலையில் நடத்திய காதல் நாடகத்தை கண்ட சுகன்யா, தன் முகம் சிவந்து அவளைப் பார்த்து முறுவலித்தாள். அவளும் கல கலவென சிரித்துக்கொண்டே, சுகன்யாவை நோக்கி தன் கையை அசைத்தாள்.
'லெட் தெம் பி ஹாப்பி;' சுகன்யாவின் மனம் அவர்களை வாழ்த்தியது. சட்டென சுகன்யாவுக்கு செல்வாவின் நினைவு மனசிலாடியது.
'நான் எத்தனை தரம் அவன் பின்னாடி பைக்ல உக்காந்து போயிருக்கேன்? ஒரு தரமாவது இந்த மாதிரி ப்ரேக் போட்டிருப்பானா? சரியான பயந்தாங்கோளி.' தன் வெக்கம் கெட்ட மனதில் எழுந்த ஆசையை எண்ணி, மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.
'இன்னேரம் செல்வா சாப்பிட்டிருப்பானா? இன்னைக்கு யார் சாப்பாடு கொண்டு போய் குடுத்து இருப்பாங்க?'
'நேத்து அம்மா, சும்மா சும்மா அவன் கிட்ட பேச வேண்டாம்ன்னு சொன்னாங்க. நானும் அவன்கிட்ட பேசலை. அவன் தன் மனசுக்குள்ளே என்ன நினைச்சுக் கிட்டிருக்கான்? எட்டு மணி நேரம் ஓடம்பு நோவ உழைச்சுட்டு, ரெண்டு நாளா அவனைப் பாக்கறதுக்காக ஆஃபீசுலேருந்து நேரா ஹாஸ்பெட்டலுக்கு ஓடினேன். அப்படி ஓடறதுக்கு நான் என்னப் பைத்தியக்காரியா?'
'இப்ப அவனுக்கு உடம்பு தேறிடுச்சி: தனி ரூமுக்கு வந்தாச்சு; அப்படியும் அவன் எனக்கு ஒரு கால் கூட பண்ணல. என்னை கப்பிட்டு ஒரு வார்த்தை ஆசையா எப்படி இருக்கேன்னு கேட்டா, கெட்டாப் போயிடுவான்? நான் அவனுக்கு கால் பண்ணலன்னா அவன் என்னைக் கூப்பிட்டு பேசக்கூடாதா?'
'அம்மா சொல்றதும் சரிதான். என் மேல அவனுக்கு உண்மையிலேயே ஆசையிருந்தா என்னை ஒரு தரமாவது கூப்பிட்டு பேசியிருக்கணுமே? நேராப் பாக்கும் போது, "சுகும்மா ஐ லவ் யூ வெரி மச்சுன்னு" பிட்டு போட வேண்டியது. எப்பவும் நான்தான் அவனுக்கு போன் பண்ணணுமா?'
'ட்ரான்ஸ்பர் ஆகி பாண்டிச்சேரி போன செல்வா ஏற்கனவே இது மாதிரி நாலு நாள் வரைக்கும் என் கிட்ட பேசாம கல்லுளி மங்கனாத்தானே இருந்தான்? கடைசியா வெக்கம் கெட்டவ நான்தானே அவனைக் கூப்பிட்டு பேசினேன். எல்லா ஆம்பிளைகளும் இப்படித்தானா? காதலிச்சவதான் உருகி உருகி சாகணுமா?'
'இந்தமுறை நான் சத்தியமா அவனை கூப்பிட்டு பேசப் போறது இல்லே. அவனா என்கிட்ட எப்ப பேசறானோ அப்ப பேசட்டும். அப்ப ஊதறேன் அவனுக்கு சங்கு.' அவளுக்குள் ஒரு தேவையில்லாத பிடிவாதம் சட்டென எழுந்தது.
குமாரசுவாமி ஒரு பை நிறைய பழங்களும், சுந்தரிக்கு பிடித்த பால்கோவாவும், கூடவே அவளுக்கு மிகவும் பிடித்த மல்லிகைப் பூவையும் ஒரு நாலு முழம் வாங்கிக்கொண்டு வந்தார். அவர் கையிலிருந்த பூவைப் பார்த்ததும் சுகன்யாவுக்கு தன் தந்தையை கிண்டலடிக்கத் தோன்றியது.
"என்னப்பா... ஏற்பாடெல்லாம் பலமா இருக்கு" சுகன்யா நாக்கை நீட்டி தன் தந்தையை நோக்கி கண்ணடித்தாள்.
"என்னடா சொல்ற செல்லம்..." தன் மகளின் கிண்டல் லேசாக புரிந்தும் புரியாதவர் போல் தன் முகத்தை வைத்துக்கொண்டுருந்தார் குமாரசுவாமி. சுகன்யாவின் குறும்புத்தனம் அவரை விடுவதாக இல்லை.
"ம்ம்ம்... சின்னப் பாப்பா நீங்க... புரியாத மாதிரி நடிக்திறீங்களே? பதினைஞ்சு வருவம் கழிச்சு பொண்டாட்டியை பாக்கப் போறீங்க; கையில பழம், ஸ்வீட்டு, அதுக்கு மேல மல்லிகைப் பூ, எல்லாம் ஒரு செட்டப்பாத்தான் கிளம்பறீங்க" முகத்தில் கள்ளத்தனத்துடன் சிரித்த சுகன்யாவிற்கு அவர் பதிலேதும் சொல்லவில்லை.
ஆட்டோ நகர ஆரம்பித்ததும் சுகன்யா மீண்டும் ஆரம்பித்தாள்.
"அப்பா, அம்மாவுக்கு நான் போன் பண்ணட்டுமா? வீட்டுல பால் இருக்குமான்னு தெரியலை; அது மட்டும் தான் இப்ப குறைச்சலா இருக்கு உங்க கைல: வீட்டுல பால் இல்லன்னா வழியிலேயே அதையும் வாங்கிட்டு போயிடலாம்." தன் நாக்கை குவித்து நீட்டி உரக்க சிரித்தாள்.
"கண்ணு அப்பாவை ரொம்ப கிண்டல் பண்ணாதேடா: எனக்கு கூச்சமா இருக்கு. நான் இதெல்லாம் உங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிட்டுப் போறேம்மா: உனக்கும் சேத்துத்தான் பூ, பழம், ஸ்வீட் எல்லாம் வாங்கியிருக்கேன். வீட்டுக்கு போய் முகம் கழுவி நீயும் உன் தலையில பூ வெச்சுக்கம்மா. மனசுல வேற எந்த எண்ணத்தோடும் நான் இதெல்லாம் வாங்கலடாச் செல்லம். அதுக்கெல்லாம், அப்பாவுக்கு வயசாதிப் போச்சும்மா." குமாரசுவாமி நெளிந்த படியே சுகன்யாவைப் பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தார்.
"அப்படி என்ன வயசாயிடுச்சு உங்களுக்கு? கிழவன்ல்லாம் டை அடுச்சி, செண்ட் அடிச்சிக்கிட்டு டீன் ஏஜ் பொண்ணுங்க பின்னாடி திரியறானுங்க? நீங்க என்னடான்னா.."
"எனக்கு ஐம்பது முடிஞ்சிடுச்சும்மா" அவர் வெகுளியாக பேசினார்.
"அப்பா... ஐம்பது வயசுல ஆசை வரக்கூடாதா... அதுவும் கட்டுன பொண்டாட்டிக்கிட்ட?" சுகன்யா முகத்தில் நமட்டு சிரிப்புடன் முணுமுணுத்தாள்.
"நீ... அப்பாக்கிட்ட செம அடி வாங்கப் போறே? என் சுகா இன்னும் சின்னப் பொண்ணுன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கேன்; நீ என்னடான்னா எல்லாத்தையும் கரைச்சு குடிச்சப் பெரிய பாட்டி மாதிரி பேசறே?" அவர் விளையாட்டாக அவள் முதுகில் அடித்தார்.
"அ... அப்பா... உங்களுக்கு நான் இப்படி பேசினது பிடிக்கலன்னா... வெரி வெரி சாரிப்பா..." அவள் முகம் சற்றே தொங்கிப் போனது.
"ச்ச.. ச்ச... அப்படியெல்லாம் இல்லடா கண்ணு... இன் ஃபேக்ட், ஐ லைக் யுவர் சென்ஸ் ஆஃப் ஹூயுமர்"
"அப்பா, அப்படின்னா, ஒரு சின்ன சஸ்பென்ஸ்: நீங்க என் கூட வரதை நான் அம்மாகிட்ட சொல்லப் போறதில்லை." சுகன்யா குழந்தைதனமாக மீண்டும் ஒரு முறை தன் நாக்கை நீட்டி குமாரசுவாமியை நோக்கி கண்ணடித்தாள். சுகன்யா ஹோட்டலில் சாப்பிட்டதும் ஒரு "ஸ்வீட் பான்" வாங்கி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாள். அவளது நாக்கும் உதடுகளும் நன்றாக சிவந்திருந்தன.
ஒரக்கண்ணால் தன் தந்தையைப் பார்த்த சுகன்யா, அவர் தோளில் தன் தலையை சாய்த்துக் கொள்ள, குமாரசுவாமி, தன் இடதுகையால், தன் மகளை ஆசையுடன் அணைத்துக்கொண்டார். இருவரும் வீடு வரும் வரை எதுவும் பேசவில்லை.
'நேத்து ரகுவோடு பேசிய போது, அவன் சுகாவைப் பத்தி கூட்டு கொறைச்சு எதுவும் சொல்லிடலை. உள்ளதை உள்ள மாதிரிதான் சொல்லியிருக்கான். சுகன்யாவுக்கும் என் பொண்டாட்டி சுந்தரிக்கும் உருவ ஒற்றுமை நெறய இருக்கு. உருவம்தான் ஓத்து போகுதுன்னு பாத்தா, அவ எப்படி நாக்கை நீட்டுவாளோ அதே மாதிரி இவளும் தன் நாக்கை சுழிச்சு நீட்டறா. அவளோட நிறைய பழக்கங்கள் இவளை அப்படியே தொத்திக்கிட்டு இருக்கு. சுந்தரி மாதிரியே இவளும் பிடிவாதக்காரியா இருப்பாளோ? இவளுக்கும் அவளை மாதிரியே எப்பவாது தீவிர கோபமும் வருமா? சுந்தரி எப்படி பாசத்தை கொட்டுவாளோ அப்படித்தான் இவளும் அப்பா, அப்பான்னு உருகறா? ஆனா சுந்தரிக்கு கோபம் வந்தா பத்து நாளானாலும் பேசமா மவுனமா இருந்தே ஆளைக் கொண்ணுடுவா? இந்த விஷயத்துல சுகன்யா எப்படியோ? இனிமே பாக்கத்தானே போறேன்.'
'என்னால சின்னப் பிரச்சனைன்னு சொன்னாளே...? அந்த பிரச்சனை என்னவாக இருக்கும்? அந்த பிரச்சனையாலத்தான் அம்மாவும், மாமாவும் சென்னைக்கு வந்திருக்காங்கன்னு சொன்னாளே? சுகா வயசுக்கு வந்த பொண்ணு: பெத்தவன் என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. நல்லா சிவப்பா மூக்கும் முழியுமா அழகா இருக்கா. நல்லாப் படிச்சி, தனக்குன்னு வேலையைத் தேடிக்கிட்டு நல்லா சம்பாதிக்கறா: மாடர்னா ட்ரஸ் பண்ணிக்கிட்டு இருக்கா. நேர் பார்வை பார்த்து தன்னம்பிக்கையோடு வெளிப்படையா, மனசுல இருக்கறதை தெளிவா பேசறா. பாக்கற வயசு பசங்களுக்கு இவ மேல ஆசை வர்றது ரொம்ப சகஜம். ஒரு வேளை எங்களை மாதிரி என் பொண்ணும் எந்த பையனாயாவது மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டு இருக்காளா? அதுல ஒண்ணும் தப்பு இல்ல. இவளையும் காதல் விட்டு வெக்கலையா? எங்களுக்கிருந்த மாதிரி இவங்க நடுவிலேயும் ஜாதி பிரச்சனை குறுக்க வந்திடுச்சா? வரதட்சினை பிரச்சனையா... பணம் ஒரு பிரச்சனையே இல்லே... நான் தான் வந்துட்டேனே; பையன் நல்லவனா இருந்தா போதும்; கேக்கறதுக்கு மேல நான் அள்ளிக் குடுத்துடறேன்... என் பொண்ணு சந்தோஷம் தான் முக்கியம். இல்லே, வேற எதாவது பிரச்சனையா?'
குமாரின் தோளில் தன் தலையைச் சாய்த்து கொண்டிருந்த சுகன்யா, திடிரென தன் நாக்கை வெளியில் நீட்டி "அப்பா என் நாக்கு சிவந்திருக்காப்பா" என வினவினாள்.
"ஆமாண்டா கண்ணு" குமார் அவளை நோக்கி மென்மையாக சிரித்தார்.
சுகன்யாவின் சிவந்திருந்த நாக்கைப் பார்த்ததும், குமாரின் மனதில் இளம் வயது சுந்தரியின் முகம் தோன்றி கிளுகிளுப்பை கொடுத்தது. கல்யாணமான புதிதில் சுந்தரியும், குமாரசுவாமியும், வாரத்தில் ஒரு நாள், வெள்ளிக்கிழமை மாலை கோவிலுக்கு போய்விட்டு, இரவு உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்புவதை தங்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள். வெளியில் சாப்பிட்டப்பின், சுந்தரி தவறாமல் "ஸ்வீட் பான்" போட்டுக்கொள்வது வழக்கம். "பானை" மென்றுக்கொண்டே, "குமரு, பாத்து சொல்லுங்க என் நாக்கு சிவந்திடுச்சா என்று நாக்கை நீட்டி நீட்டி அவனிடம் நூறு தரம் கேட்ப்பாள்.
அவள் வாயிலிருந்து வரும் இனிமையான ஏலத்துடன் சேர்ந்த வெற்றிலை வாசனயை நுகரும் குமாருக்கு வழியிலேயே கிக் தலைக்கு ஏறிவிடும். வீட்டுக்குள் நுழைந்தவுடன் குமார் சுந்தரியைக் கட்டியனைத்து அவள் சிவந்த உதடுகளை, அவள் கதற கதற, கவ்வி குதறி எடுத்து விடுவான். அவள் கன்னக் கதுப்புகளை கடித்து புண்ணாக்கிவிடுவான். சுந்தரியும் பதிலுக்கு குமார் தன்னை முத்தமிடும்போது தன் சிவந்த நாக்கை வெறியுடன் அவன் வாய்க்குள் நுழைத்து, அவன் நாக்கை தேடித் துழாவி, நக்தி, தன் வாயால் உறிஞ்சி அவனை மூச்சுத் திணற அடித்து விடுவாள்.
ஆட்டோ ஒரு முறை வேகமாக குலுங்கி நின்றது.
"அப்பா... நாம வீட்டுக்கு வந்தாச்சு," சுகன்யாவின் குரல் கேட்டு, குமாரசுவாமி தன் சுயநினைவுக்கு வந்தார். மெதுவாக ஆட்டோவை விட்டு இறங்கினார்.
தொடரும்...
நல்லா கொண்டு போறீங்க
ReplyDeleteதொடரட்டும் இந்த பொற்காலம்.
Deletenandri nanba
Delete