Featured post

என் தங்கை 40

Image
முழு தொடர் படிக்க நான் புது துணி எல்லாம் எடுத்து போட்டுட்டு ரூம்விட்டு வெளிய வந்தேன். அம்மா புது புடவை கட்டி இருந்தாங்க. தலைல மல்லி பூ... ரொம்ப அழகா இருந்தாங்க.  அடுத்து கீர்த்தி பெட்ரூம் கதவ திறந்தது வெளிய வந்தா. தீபாவளினு அவளும் புடவை கட்டி இருந்தா. என் கண்ணே படுற அளவுக்கு அவளோ அழகா இருந்தா. அவளே நல்லா புடவை கட்ட கத்துக்கிட்டா போல. என்ன ஒரு குறை... அம்மா மாரி அவ தலைல இன்னும் பூ வைக்கல. நானும் அம்மாவும் கீர்த்தியோட அழக ரசிச்சு பாத்துட்டு இருந்தோம். கீர்த்தி எங்க கிட்ட வந்து "நல்லா இருக்கா,"னு கேட்டா. "கல்யாண பொண்ணு மாதிரி ரொம்ப அழகா இருக்கடி," அம்மா சொன்னாங்க. "தல தீபாவளில" சொல்லிட்டு மெதுவா சொல்லி சிரிச்சா. அப்போ அம்மா கீர்த்திக்கு எடுத்து வச்சிருந்த மல்லி பூ எடுத்து என் கைல தந்தாங்க. நான் அத வாங்கி, கீர்த்தி தலைல வச்சி விட்டேன். பூ வச்சதும், அவளோட அழகு இன்னும் கூடி, ரொம்பவே அழகா இருந்தா. அப்பா அவரோட ரூம்ல இருந்து வெளிய வந்து, கீர்த்தி புடவை கட்டி இருக்குற அழகா பாத்ததும், "நல்லா இருக்கு"னு சொல்லிட்டு போய் சோபால வந்து உட்காந்தாரு. எல்லாரும் கால...

காதல் பூக்கள் 46

முழு தொடர் படிக்க

 சுகன்யா ஏதும்‌ பேசாமல்‌ தன்‌ தந்தையின்‌ மடியில்‌ தலை வைத்துப்‌ படுத்திருந்தாள்‌. அவள்‌ கண்கள்‌ மூடியிருந்தன. தன்‌ தந்தையின்‌ கையை பிடித்துக்கொண்டு அவர்‌ கையில்‌ கட்டியிருந்த வாட்ச்சை மேலும்‌ கீழுமாக தள்ளி குழந்தையைப்‌ போல்‌ விளையாடிக்‌ கொண்டிருந்தாள்‌.


“அப்பா... அந்த சம்பத்து... மாசத்துக்கு ஒரு லட்சம்‌ சம்பாதிக்கட்டும்‌... இல்ல ரெண்டு லட்சம்‌ சம்பாதிக்கட்டும்‌; உங்க சொந்தமா இருக்கட்டும்‌; இல்ல அம்மா சொந்தமாவே இருக்கட்டும்‌; நம்ம சொந்தத்துல யாரையும்‌ நான்‌ கல்யாணம்‌ பண்ணிக்க மாட்டேன்‌.. இப்பவே, இங்கேயே உங்ககிட்ட சொல்லிடறேன்‌... ஊர்ல வந்து அவன்‌ உன்னை பாக்க வரான்‌, சும்மா பேருக்கு உக்காந்து அவங்ககிட்டு பேசும்மான்னு.. என்னை யாரும்‌ டென்ஷன்‌ பண்ணக்கூடாது..." சுகன்யா தீர்மானமாக பேசினாள்‌.

“சுந்து... எனக்கு ஒரு கப்‌ சாயா குடிக்கணும்‌ போல இருக்கு, கொஞ்ச நாளா நார்த்லயே இருந்ததால இந்த டீ குடிக்கற பழக்கம்‌ என்னை தொத்திக்கிச்சு... ஒரு கப்‌ போட்டுத்‌ தரயாம்மா...?"

“சுகா உனக்கும்‌ வேணுமாடி?

“ம்ம்ம்‌... குடும்மா"

“உன்‌ லவ்வர்‌ பேரு என்னம்மா?"

“செல்வா..ப்பா"

“சுகா..." நீ இந்த செல்வாவை உண்மையிலேயே கல்யாணம்‌ பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படறியா?" 

'இந்த கேள்விக்கு என்ன அர்த்தம்‌?' சுகன்யா மட்டுமல்லாமல்‌, சுந்தரியும்‌ தன்‌ கணவனை ஒரு வினாடி வியப்புடன்‌ பார்த்தாள்‌.

“என்னப்பா... இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்க; அவரை நான்‌ மனசார நேசிக்கிறேன்ம்பா!"

“சாரிம்மா... உனக்கு என்‌ கேள்வி பைத்தியகாரத்தனமாப்‌ பட்டிருக்கலாம்‌. அவன்‌ மேல உனக்கு இருக்கற நேசம்‌, பாசம்‌, காதல்‌, எல்லாம்‌ சரி: நீ படிச்ச பொண்ணு. காதலிக்கும்‌ போது ஒருத்தருக்கு அடுத்தவரோட குறைகள்‌ சட்டுன்னு தெரியறது இல்லை. ஆனா கல்யாணம்‌ பண்ணிக்கிட்டு ரெண்டு பேரும்‌ ஒன்னா சேர்ந்து வாழறப்ப, உடம்பு மேல இருக்கற கவர்ச்சி கொஞ்சம்‌ கொஞ்சமா குறைய ஆரம்பிக்கறப்ப, கணவனுக்கு தன்‌ மனைவிகிட்ட இருக்கற குறைகளும்‌, மனைவிக்கு தன்‌ புருஷனோட குறைகளும்‌ புரியும்‌ போது, தினசரி வாழ்க்கையில உரசல்கள்‌ ஆரம்பிக்கும்‌."

“அப்பா... எது எப்படியிருந்தாலும்‌ செல்வா இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நெனைச்சுக்‌ கூட பாக்க முடுயலைப்பா. அவரை கல்யாணம்‌ பண்ணிக்கிட்டு, முறையான.. அண்டர்லைன்‌ பண்ணிக்குங்க, முறையான ஒரு வாழ்க்கையை வாழணும்ன்னுதான்‌ நான்‌ அவர்‌ கூட பழகறேன்‌. அவரும்‌ அந்த எண்ணத்துலத்தான்‌ என்‌ கூட பழகிட்டு இருக்கார்‌. ஆனா சில நேரங்கள்ல, இப்பவே அவர்‌ மேல எனக்கு சட்டுன்னு கோபம்‌ வருது. அவருடைய சில குணங்கள்‌ எனக்கு சுத்தமா பிடிக்கலைப்பா. இதை சொல்லிக்காட்டி நான்‌ அவர்கிட்ட சண்டை போட்டிருக்கேன்‌."

“ம்ம்ம்‌..."

“அவரால எந்த விஷயத்துலேயும்‌, சட்டுன்னு ஒரு முடிவுக்கு வரமுடியலைப்பா. எல்லாத்துக்கும்‌ பயப்படறார்ப்பா. இப்படி பண்ணா அவங்க என்ன நினைப்பாங்க... அப்படி பண்ணா இப்படி ஆயிடுமோனு எப்பவும்‌ குழம்பிக்கிட்டேதான்‌ இருப்பார்‌. அவரோட அம்மாவை கேக்காம அவரால எந்த காரியத்தையும்‌ செய்ய முடியாதுப்பா. 

கண்டிப்பா அவருக்கு அவர்‌ அம்மா மேல ஆசையிருக்கும்‌. இதை நான்‌ தப்புன்னு சொல்லலை. எனக்கும்தான்‌ என்‌ அம்மா மேல அளவில்லாத பிரியம்‌ இருக்கு. ஆனா ஒரு விஷயம்‌ எனக்கு பிடிக்கலைன்னா, அம்மாகிட்ட நான்‌ பட்டுன்னு சொல்லிடுவேன்‌. தன்‌ மனசுல இருக்கறதை தன்‌ அம்மாகிட்ட சொல்லக்கூட பயப்பட்டா எப்பபுப்பா? எல்லாத்துக்கும்‌ மேல, அவரா எதையும்‌ இனிஷியேட் பண்ணி எடுத்து செய்யறது இல்லேப்பா"

“ம்ம்ம்‌... எனி எக்ஸாம்பிள்‌"

“என்‌ அம்மா நம்ம கல்யாணத்துக்கு சம்மதம்‌ கொடுக்கலைன்னா, நாம என்ன பண்றதுன்னு அப்பப்ப கேக்குறார்‌. இது வரைக்கும்‌ அவர்‌ இந்த கேள்வியை என்‌கிட்ட நூறு தரம்‌ கேட்டாச்சு. நானும்‌ அத்தனையோ தரம்‌ பதில்‌ சொல்லியாச்சு."

“நீ என்ன பதில்‌ சொன்னே?"

“நான்‌ உங்களைத்தான்‌ கல்யாணம்‌ பண்ணிப்பேன்‌; உங்கம்மா கிட்ட பேசி அவங்களை நம்ம பக்கம்‌ திருப்ப முயற்சி செய்யுங்க; அவங்க ஒத்து வரவேயில்லன்னா என்ன செய்யமுடியும்‌? நீங்க போட்டிருக்கற பேண்ட்‌, சட்டையோட என்‌ வீட்டுக்கு வந்துடுங்க; மீதியை நான்‌ பாத்துக்கறேன்னேன்‌. அதுக்கு, நான்‌ எப்படி உங்க வீட்டுல வீட்டோட  மாப்பிள்ளையா இருக்க முடியும்ன்னு கேக்கறாரு? இதைக்‌ கேட்டா எனக்கு எரிச்சல்தான்‌ வருது?

சரி நான்‌ உங்க வீட்டுக்கு வந்துடறேங்கறேன்‌.. அதுக்கும்‌ கொஞ்சம்‌ பொறும்மா. எங்க அப்பாவுக்கு உன்னைப்‌ பிடிச்சிருக்கு: எங்க அம்மா மனசும்‌ மாறிடும்‌. அவங்க ரெண்டு பேரோட ஆசீர்வாதத்தோட நான்‌ உன்னை கல்யாணம்‌ பண்ணிக்க விரும்பறேன்னும்‌ சொல்றார்‌. எது வந்தாலும்‌ நான்‌ பாத்துக்கறேன்‌. நீ தைரியமா இருன்னு சொல்ற துணிவு அவருக்கு வரலை. அவருக்கு என்‌ மேல ஆசையும்‌ இருக்கு. கூடவே அவங்க அம்மா மேல பயமும்‌ இருக்கு. கூழுக்கும்‌ ஆசை. மீசைக்கும்‌ ஆசை: என்னப்‌ பண்றதுன்னு எனக்கு ஒன்னும் புரியலை.

நேத்து ராத்திரி எட்டு மணி வாக்குல ஆஸ்பத்திரியில நான்‌ அவரோட ரூம்ல தனியா இருந்தேன்‌. அப்ப என்‌ பாஸ்‌ சாவித்திரி அவரை பாக்கறதுக்கு வந்தா. அந்த நேரத்துல என்னை அவங்க அங்க எதிர்பார்க்கல. போகும்‌ போது செல்வா நான்‌ உங்கிட்ட சில விஷயம்‌ தனியா பேசணும்‌னு சொன்னாங்க.

வீ ஆர்‌ இன்‌ லவ்‌னு அந்த லேடிக்கு நல்லாத்‌ தெரியும்‌. நாங்க கல்யாணம்‌ பண்ணிக்கறதா இருக்கோம்ன்னும்‌ தெரியும்‌. இவர்‌ என்ன சொல்லணும்பா? எதுவாயிருந்தாலும்‌ நீங்க சுகன்யா முன்னாடி பேசலாம்‌; இங்கேயே பேசுங்கன்னு சொல்லாம்ல, அவ எதிர்ல பொத்திக்கிட்டு இருந்தவரு, அவ போனதுக்கு அப்புறம்‌ என்னைக்‌ கொடையறாரு.

இவங்க எதுக்கு என்‌ திட்ட தனியா பேசணும்‌? இவங்க பொண்ணுதான்‌ என்னை அவங்க வீட்டுக்கு போனப்பவே ஹுமிலியேட்‌ பண்ணி அனுப்பிச்சாளே? இப்ப இந்தம்மா என்‌கிட்ட என்ன பேசணும்ன்னு நினைக்திறாங்க? என்னைத்‌ திருப்பியும்‌ அவ பொண்ணை கல்யாணம்‌ பண்ணிக்க சொல்லுவாங்களானு எங்கிட்ட கேட்டா நான்‌ என்ன சொல்றது? 

சாவித்திரியை நான்‌ ஒரு புடி புடிக்கிறேன்னு சொல்றேன்‌: அதுக்கும்‌ வேணாங்கறாரு.

இதுதாம்பா எனக்கு செல்வாகிட்ட சுத்தமா புடிக்கலை. வழ வழா கொழ கொழன்னு, சரியான வெண்டைக்காய்ப்பா அவரு.. அதுவும்‌ மோர்க்குழம்புல போட்ட வெண்டைக்காய்."

“வேற எதாவது, உனக்கு அவன்‌கிட்ட பிடிக்காம இருக்கலாம்‌..." அவர்‌ இழுத்தார்‌.

“அப்பா முதல்‌ நாள்‌ நானும்‌, அவரும்‌ தனியா மீட்‌ பண்ண அன்னைக்கு முதல்ல கோயிலுக்குத்தான்‌ போனோம்‌; அப்புறம்‌ பீச்சுக்கு போய்‌ கொஞ்ச நேரம்‌ பேசிக்கிட்டிருந்தோம்‌; நேரமாச்சு... நான்‌ போயிட்டு வர்றேன்னு சொன்னேன்‌. என்னடா, இவ எப்படி தனியா போவா, நான்‌ கொண்டுவந்து விடட்டும்மான்னு கூட கேக்கலே. சரி போயிட்டு வான்னு சொல்லிட்டார்‌.

அப்புறம்‌, அவர்‌ ஃப்ரெண்ட்‌ சீனு சொல்லியிருக்கான். நீயெல்லாம்‌ ஒரு மனுஷனாடா? இருட்டாயிடுச்சே; நீ அந்த பொண்ணை வீட்டுக்கு பக்கத்துல கொண்டு போய்‌ விட வேணாமான்னு அவர் திட்டினதுக்கு அப்புறம்‌ எனக்கு போன்‌ பண்ணி, நான்‌ பன்னது தப்பும்மா. சாரிம்மாங்கறாரு.

இவருக்காக தினம்‌ ஆஃபீசுலேருந்து, ஈவினிங்‌ ஆஸ்பத்திரிக்கு ஓடறேன்‌. நீ எப்படிம்மா இருக்கேன்னு ஒரு வார்த்தை கேக்கலை; நேத்துலேருந்து ஒரு போன்‌ பண்ணலப்பா எனக்கு; அவருக்கு என்‌ மேல ரொம்ப ஆசைப்பா: ஆனா அதை வெளியில சொல்லலைன்னா: அவரோட பிரியம்‌ எனக்கு எப்படிப்பா தெரியும்‌?" சுகன்யாவின்‌ குரல்‌ கம்ம ஆரம்பித்தது. 

குமாரசுவாமி ஒரு வினாடி அவள்‌ பேசியதை கேட்டதும்‌ வாய்விட்டு சிரித்தார்‌. பின்‌ கேட்டார்‌.

“உன்‌ சொல்வாவோட முழு பேரு என்னம்மா?"

“தமிழ்செல்வன்‌.. ப்பா... எதுக்குப்பா நான்‌ சொன்னதெல்லாத்தையும்‌ கேட்டுட்டு சிரிக்கறீங்க"

“நானும்‌ காதலிச்சுத்தான்‌ கல்யாணம்‌ பண்ணிக்கிட்டேன்‌. உங்கம்மாவும்‌ நீ சொன்ன அத்தனை குறையும்‌ என்‌ மேல சொல்லியிருக்கா: அதான்‌ எனக்கு நீ சொன்னத கேட்டதும் சிரிப்பு வந்துட்டு?"

“ஏன்‌ என்‌ குழந்தையை அழுவ வெக்கறீங்க? உங்க கதையை இப்ப எவன்‌ கேட்டான்‌?" சுந்தரி அவரை தன்‌ கண்ணை உருட்டி பார்த்து முறைத்தாள்‌. முறைத்துக்‌ கொண்டே அவரிடம்‌ டீக் கோப்பையை நீட்டினாள்‌.


“உன்‌ ஆளோட அப்பா பேரு என்னடா செல்லம்‌? அவர்‌ என்ன பண்றார்‌?" கேட்டுக் கொண்டே சுந்தரி கொடுத்த டீயை வாங்கி அவர்‌ ரசித்து உறிஞ்ச ஆரம்பித்தார்‌.

“சுந்தரி... சாய்‌ நல்லா இருக்குடி... ஏலக்காய்‌ நசுக்திப்‌ போட்டியா?" சொன்னவர்‌ தன்‌ பெண்ணின்‌ காதில்‌ மெதுவாக கிசுகிசுத்தார்‌. "இப்ப இந்த டீயைப்‌ பத்தி நான்‌ எதுவும்‌ சொல்லலேன்னா, உங்கம்மா என்‌ கிட்ட முறுக்கிக்குவா... என்‌ வயசு அம்பது... உன்‌ செல்வா வயசு இருபத்தஞ்சு... அதான் வித்தியாசம்" சொல்லிவிட்டு மீண்டும்‌ சிரித்தார்‌.

“கட்டிக்கிட்ட பொம்பளைகிட்ட எப்படி பேசணும்‌; எப்படி பேசக்கூடாது; என்‌ மனைவியோட விருப்பங்கள்‌, எதிர்ப்பார்ப்புகள்‌ என்னன்னு மெதுவாத்தான்‌ எனக்கு புரிஞ்சுது: சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட, அவளை அப்ரிஷியேட்‌ பண்ற மாதிரி ஒரு தலையாட்டல்‌, ஒரு சின்ன புன்முறுவல்‌ தேவைப்படும்; இந்த யுக்திகள்‌, தந்திரங்கள்‌, எல்லாம்‌ கல்யாணம்‌ ஆகி ரெண்டு வருஷம்‌ கழிச்சுத்தாம்மா எனக்கும்‌ புரிஞ்சுது: உன்‌ செல்வாவும்‌ இதையெல்லாம்‌ கொஞ்சம்‌ கொஞ்சமா புரிஞ்சுக்குவாம்மா.

மே பீ அவன்‌ செல்‌ - சிம்‌ கெட்டுப்‌ போய்‌ இருக்கலாம்‌; ஆஸ்பத்திரியில இருக்கான்‌: ரீ சார்ஜ்‌ பண்ண வேண்டி இருக்கலாம்‌. ஏன்‌... இன்ஸ்ட்ருமெண்ட்‌ கூட திருடு போயிருக்கலாம்‌; உங்கிட்ட பேச நினைக்கும்‌ போது வேற யாராவது கூட இருந்திருக்கலாம்‌... வெய்ட்‌... பொறுத்துப்‌ பாரு; நேத்துத்தான்‌ அவனைப்‌ பாத்து பேசியிருக்கே; கூட இருந்து இருக்கே; முழுசா ஒரு நாள்‌ ஆகலே; அதுக்குள்ள அவன்‌ உன்‌ கிட்ட பேசலேன்னு கோபப்பட்டா எப்படி? ம்ம்ம்‌... டோண்ட்‌ வொர்ரி! இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம்‌ கவலைப்பட்டு, உன்‌ வாழ்க்கையின்‌ இனிமையான நேரத்தை வீணாக்கிடாதே."

“சரிப்ப்பா"

“அம்மா சொல்ற மாதிரி, நீ மட்டுமே நெருங்கி நெருங்கி போனாலும்‌ அவனுக்கு உன்‌ மேல ஒரு சலிப்பு வந்துடும்‌; நம்ம சுகன்யாதானே... இட்ஸ்‌ ஓ.கே அப்படின்னு எடுத்துக்குவான்‌; பழக பழக பாலும்‌ புளிக்கும்ன்னு ஏன்‌ சொல்றாங்க? நம்ம உடம்புக்கு வெய்யிலோட சூடு தேவை; அதுக்காக வெயில்ல நின்னு உடம்பை சுட்டுக்கறதா? கூடாது: வாழ்க்கையில புத்தர்‌ சொன்ன மிடில்‌ ஆஃப்‌ த ரோட்‌ ஆட்டிட்யூட்‌ வெச்சுக்கணும்‌"

“இப்ப நீங்க என்னைப்‌ பாத்து பாத்து அவ காதுல என்ன முணுமுணுக்திறீங்க?" சுந்தரி போலியான கோபத்துடன்‌ அவர்களை நெருங்கினாள்‌.

“உன்னைப்‌ பத்தி ஒன்னும் போட்டுகொடுக்கலமா, இது வேற"

“சரிப்பா... நீங்க சொல்றது எனக்கு புரியுது."

“குட்‌ கேர்ள்‌... அவன்‌ அப்பாவைப்‌ பத்தி சொல்லிக்கிட்டிருந்தியே" 

"செல்வாவோட அப்பா பேரு நடராஜன்‌; அவரு சீஃப்‌ அக்கவுண்ட்ஸ்‌ ஆபிசரா, கங்கூலி அண்ட்‌ கங்கூலிங்கற, ஒரு ஃப்ரைவேட்‌ கம்பெனியில வொர்க்‌ பண்றார்‌. அவரோட அம்மா பேரு மல்லிகா, ஹவுஸ்‌ மேக்கரா இருக்காங்க; செல்வா தங்கை பேரு மீனாட்சி; செல்லமா அவளை மீனான்னு கூப்பிடுவாங்கப்பா.

ஒரு தரம்‌ நான்‌ அவகிட்ட அவசரப்பட்டு சண்டை போட்டுட்டேன்‌. ஆனா அவ இப்ப எனக்கு நல்ல ஃப்ரெண்டுப்பா; ரொம்ப ரொம்ப ஸ்வீட்‌ கேர்ள்ப்பா: எனக்காக அவங்க அம்மாகிட்ட சண்டை போட்டு இருக்கா. 

அவங்க இந்திரா நகர்ல, சொந்த வீட்டுல இருக்காங்க. கார்‌ வெச்சிருக்காங்க." 

சுகன்யா, நடராஜன்‌ பேரையும்‌, அவர்‌ குடும்பத்தினர்‌ ஒவ்வொருத்தரின்‌ பேரையும்‌ சொன்னபோது, குமாரசுவாமி ஒரு நிமிடம்‌ திகைத்துத்தான்‌ போனார்‌. 

'ஆண்டவா, நீ எப்படியெல்லாம்‌ என்‌ வாழ்க்கையில விளையாடறே? இதுக்கு என்ன அர்த்தம்‌?' 

சில வினாடிகள்‌ அவர்‌ மவுனமாக இருந்தார்‌.

“என்னங்க, நான்‌ ஒரு விஷயம்‌ சொல்ல மறந்துட்டேங்க. ஹாஸ்பெட்டல்ல செல்வாவுக்கு நினைவு வந்தவுடனே முதல்ல அவன்‌ வாயில வந்த வார்த்தையே சுகன்யா தான். அவன்‌ நம்ம சுகன்யாவைத்தான்‌ முதல்ல பாக்கணும்ன்னு சொன்னதா டாக்டர்‌ சொன்னார்‌.

கடைசியா நானும்‌ ரகுவும்‌ ஐ.சயூவுல அவனைப்‌ பார்க்க போனோம்‌. எங்க எதிர்லேயே, நம்ம சுகா கையை எடுத்து தன்‌ மார்ல வெச்சிக்கிட்டாங்க. அவனால அப்ப பேசவே முடியலை. வலியில துடிச்சிக்கிட்டிருந்தான்‌. அவன்‌ கண்ண பாத்தேன்‌. அதுல பொய்‌, பாசாங்கு எதுவும்‌ இல்லைங்க. அப்ப அந்த நேரத்துல, நம்ம பொண்ணு அவன்‌ பக்கத்துல இருக்கறதைத்தான்‌, அவன்‌ விரும்பறான்னு அவன்‌ மூஞ்சியில எழுதி ஒட்டியிருந்துதுங்க. அந்தப்‌ பையன்‌ நம்ம பொண்ணை நிஜமாவே கல்யாணம்‌ பண்ணிக்க விரும்பறான்‌. சும்மா டயம்‌ பாஸ்க்காக நம்ம பொண்ணு பின்னால சுத்தலீங்க. இது என்னோட ரீடிங்‌."

“உன்‌ பொண்ணு அவனை ஆசைபட்டுடாளேன்னு சொல்லாதே. அவனை உனக்கு நிஜமா பிடிச்சிருக்கா?"

“ஆமாங்க... எனக்கு அவனை பிடிச்சிருக்குங்க."

“ரகு என்ன சொல்றான்‌"

“அவனுக்கும்‌ செல்வாவை பிடுச்சிருக்குங்க."

“அப்ப நடராஜனைப்‌ பாத்து முடிவா என்ன சொல்றீங்கன்னு கேட்டுடட்டுமா?"

“நீங்க இப்படி ஒரே வழியா அவசரப்‌ பட்டா எப்படீங்க? நீங்க இன்னும்‌ அவனை பாக்கலையே?"

“சுந்து... சுகன்யாவுக்கு செல்வாவைப்‌ பிடிச்சிருக்கு; இப்பத்தான்‌ உன்‌ பொண்ணு தெளிவா சொன்னா நான்‌ வேற யாரையும்‌ கல்யாணம்‌ பண்ணிக்க மாட்டேன்னு: அந்த பையனுக்கும்‌ நம்ம சுகாவை பிடிச்சிருக்கு; செல்வாவோட அப்பாவுக்கும்‌ நம்ம பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்றே: அவனோட அம்மாவை அவன்‌ தான்‌ கன்வின்ஸ்‌ பண்ணணும்‌.

உங்க எல்லோருக்கும்‌ அவனைப்‌ பிடிச்சிருக்கு. அதனால செல்வாவை எனக்கு பிடிச்சவனா நானும்‌ ஏத்துக்கறேன்‌; அவ்வளவு தானே? யாருதிட்ட தான்‌ குறையில்லை? சுகன்யா அவன்‌கிட்ட இருக்கற குறைகள்ன்னு சொன்னதெல்லாம்‌ ரொம்ப ரொம்ப சின்ன விஷயங்கள்‌: வாழ்க்கையில அடிபட்டா, அவன்‌ போக்கும்‌ கொஞ்சம்‌ கொஞ்சமா மாறிடும்‌."

“அப்பா நீங்களும்‌ அவரை ஒரு தரம்‌ பாத்துட்டு உங்க விருப்பத்தைச்‌ சொல்லுங்கப்பா: அப்பத்தான்‌ எனக்கு சந்தோஷமா இருக்கும்‌.." சுகன்யா அவர்‌ கையை பிடித்துக்கொண்டாள்‌.

“சுகா, இன்னும்‌ கொஞ்ச நேரத்துல நான்‌ அவனைத்தான்‌ பார்க்கப்போறேன்‌."

“அப்பா நீங்க என்ன சொல்றீங்கப்பா?" 

சுகன்யாவும்‌, சுந்தரியும்‌ அவர்‌ சொன்னதைக்‌ கேட்டு ஒரு வினாடி திகைத்தார்கள்‌.

“சுகா! இன்னைக்கு நடக்கறதெல்லாம்‌, சினிமாவுலவர்ற மாதிரி ரொம்ப விசித்திரமா இருக்குன்னு, நீயே காலையில சொன்னே: இப்ப நான்‌ சொல்றேன்‌, உண்மையிலேயே நேத்துலேருந்து என்‌ வாழ்க்கையில, ஒண்ணு பின்னால ஒண்ணா நடக்கற நிகழ்ச்சிகளை பாக்கறப்போ, எனக்கும்‌ நீ சொன்ன அந்த எண்ணம்தான்‌ வருது."

“புரியற மாதிரி சொல்லுங்க" சுகன்யாவும்‌, சுந்தரியும்‌ ஒரே குரலில்‌ பேசினார்கள்‌.

“சுகா, கங்கூலி அண்ட்‌ கங்கூலிங்கற கம்பெனியிலத்தான்‌ நான்‌ ப்ராஞ்ச்‌ மேனேஜரா இருக்கேன்‌. அந்த நடராஜன்‌ என்க்கு கீழத்தான்‌, என்‌ கம்பெனியிலத்தான்‌, அக்கவுண்ட்ஸ்‌ ஆஃபீசரா வொர்க்‌ பண்றார்‌. ரொம்ப நேர்மையான மனுஷன்‌. கை ரொம்ப ரொம்ப சுத்தம்‌. கம்பெனி பணத்துல, ஒரு பைசா வீணா செலவு பண்ண விட மாட்டார்‌. அவர்‌ கையெழுத்து இருக்கற பேப்பர்‌ எங்கிட்ட வந்தா, நான்‌ படிக்காமலே கையெழுத்துப்‌ போடுவேன்‌... அப்படி ஒரு சுத்தமான மனுஷன்‌. நேத்து ராத்திரி நான்‌ அவர்‌ வீட்டுலத்தான்‌ டின்னர்‌ சாப்பிட்டேன்‌.

மல்லிகா என்னை அவங்க புருஷனுக்கு ஆபீசரா பார்க்கலை. தன்‌ கணவரோட ஒரு நல்ல நண்பராகத்தான்‌ என்னை நடத்தினாங்க. மல்லிகாவும்‌, அவங்க பொண்ணு மீனாவும்‌ நேத்து என்னை ஓடி ஓடி மனசார உபசரிச்சாங்க. அந்தம்மாவுக்கு கை மட்டும்‌ தாராளமில்லே, அவங்க மனசும்‌ கதாராளமானதுன்னுத்தான்‌ நான்‌ நினைக்கிறேன்‌."'

சுகன்யா ஒரு நிமிடம் வாயடைத்துப் போனாள். பிறகு ஆச்சரியத்தில் திக்கி திக்கி பேசினாள்.

“நிஜமாவே நீங்க சொல்ற இந்த விஷயம்‌ எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்ட்ரேஞ்சாத்தான்‌ இருக்குப்பா..."

“நேத்து அவங்க வீட்டுக்கு போனதுக்கு அப்புறம்‌ தான்‌ அவங்க பையன்‌ தமிழ்செல்வன்‌, ஒரு ஆக்ஸிடெண்ட்ல அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்கறதா எனக்கு தெரியவந்தது. இந்த மாதிரி இக்கட்டான சமயத்தில அவங்க வீட்டுக்கு போனதுக்காக நான்‌ ரொம்ப வருத்தப்பட்டேன்‌. மீனாவும்‌, மல்லிகாவும்‌ பகலெல்லாம்‌, உன்‌ செல்வா கூட இருந்துட்டு, நான்‌ சாப்பிட வரேன்னு சொன்னதும்‌, அவனை தனியா விட்டுட்டு, எனக்காக வீட்டுக்கு வந்து விருந்து தயார்‌ பண்ணியிருக்காங்க.

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறுதான்‌ பதம்‌ பாக்கணும்மா. நான்‌ நடராஜனை பர்ஸனலாவும்‌, அவருக்கு நான்‌ ஆஃபீசருங்கற ஹோதாவிலேயும்‌ அஞ்சு வருஷமா பதம்‌ பாத்துட்டு இருக்கேம்மா. அவர்‌ மகன்‌ செல்வாவை நான்‌ பதம்‌ பார்க்க வேண்டாம்மா. அவனும்‌ உன்னை மாதிரி சின்னப்‌ பையன்‌ தானேம்மா... அனுபவமில்லாதவன்தானே.. நாளடைவில அவனுக்கும்‌ பக்குவம்‌ வந்துடும்‌: எல்லாம்‌ சரியா போயிடும்‌. கவலைப்‌ படாதே.

யாரோ உள்நோக்கத்தோட உன்னைப்‌ பத்தி சொன்னதை வெச்சி மல்லிகா உன்னைத்‌ தவறா மதிப்பிட்டிருக்கலாம்‌. அவங்க வீட்டுல போய்‌ நீ வாழணும்‌. உனக்காக நான்‌ அவங்க கிட்ட, உன்‌ தந்தையா போய்‌ ஒரு தரம்‌ பேசிப்‌ பார்க்கிறேன்‌. அவங்க மனசுல உன்னைப்‌ பத்தி இருக்கற தப்பான அபிப்பிராயத்தை மாத்த நான்‌ முயற்சி பண்றேன்‌. நீ நல்லா இருக்கணும்ன்னு உங்கம்மா நினைக்திற மாதிரி அவங்க தன்‌ பிள்ளைக்கு ஒரு நல்ல பெண்‌ மனைவியா வரணும்ன்னு நெனைக்கறதுல தப்பே இல்லை."

“அப்பா... ரொம்ப தேங்க்ஸ்ப்பா..."

“எதுக்கும்மா... தேங்க்ஸ்‌...?

“நீங்க செல்வாவை பார்க்காமலே அவரை உங்க மாப்பிளையா ஏத்துக்கறேன்னு அப்ரூவ்‌ பண்ணதுக்குதாம்பா... இந்த நிமிஷம்‌ நான்‌ ரொம்ப ரொம்ப சந்தோவமா இருக்கேம்பா. நீங்க அவரைப்‌ பாத்துட்டு சொல்லுங்கப்பா என்‌ செலக்ஷன்‌ எப்படீன்னு'

“சுந்தரி... நீ சிம்பிளா ஒரு சமையல்‌ பண்ணி வைம்மா: நான்‌ அந்தப்‌ பையனை பார்க்க வர்றதா சொல்லியிருக்கேன்‌. எனக்காக நடராஜன்‌ அங்க ஆஸ்பத்திரியில காத்துக்கிட்டு இருப்பார்‌. திரும்பி வந்து நான்‌ இன்னைக்கு உன்‌ கையாலத்தான்‌ சாப்பிடப்‌ போறேன்‌; சாப்பிட்டுட்டு இங்கேயே தங்கிட்டு, நாளைக்கு காலையில அம்பாளை கட்டாயம்‌ தரிசனம்‌ பண்ணியே ஆகணும்‌..."

“சரிங்க..."

“சுகா, நீயும்‌ என்‌ கூட வர்றியாமா?"

“எதுக்குங்க... தினம்‌ தினம்‌ இவ ஏன்‌ அங்க போகணுங்க; நீங்க மட்டும்‌ போய்ட்டு வாங்களேன்‌..." சுந்தரி குறுக்கிட்டாள்‌.

“அப்பா.. நிஜம்மாத்தான்‌ கூப்பிடறீங்களா?... இல்ல கிண்டல்‌ பண்றீங்களா?"

“அயம்‌ சீரியஸ்‌; நாட்‌ ஜோக்கதிங்‌..."

“எனக்கும்‌ அவரைப்‌ பார்க்கணும்‌ போல இருக்குப்பா: நேத்துலேருந்து அவர்‌ என்‌ கிட்ட போன்‌ பண்ணி பேசவே இல்லே; அம்மா வேண்டாம்ன்னு சொன்னதால நானும்‌ பேசலை; நான்‌ மதியானத்துலேருந்து அவருகிட்ட பேசவே கூடாதுன்னு நினைச்‌சிக்கிட்டு இருந்தேன்‌: இப்ப நேராப்‌ பாத்து சண்டை பிடிக்கணும்ன்னு ஆசையா இருக்குப்பா?" அவள்‌ சிரித்தாள்‌.

“சுகா... என்னடிப்‌ பேசறே நீ: நீ அடிக்கற கூத்து கொஞ்சம்‌ கூட நல்லாயில்லே; எனக்கு கோபம்‌ வர மாதிரி நடந்துக்காதே; உன்‌ அப்பா பக்கத்துல இருக்காருன்னு ரொம்ப துள்ளாதே; கொஞ்சம்‌ அடங்கு: சும்மா அந்த பையன்‌ கிட்ட தொட்டதுக்‌ கெல்லாம்‌ சண்டை போட வேணாம்: நீ அவனை ஏதாவது சொல்லுவே: அவன்‌ உன்னை ஏதாவது கேப்பான்‌; அப்புறம்‌ நீ முஞ்சை தூக்கி வெச்சிக்கிட்டு அழுது புலம்புவ. அதனால இப்ப நீ அங்க போக வேண்டாம்‌. உன்‌ நல்லதுக்குத்தான்‌ சொல்றேன்‌. பெரியவங்க சொல்றதை கேளு. இந்த ஸ்வீட்‌, காரம்‌, மல்லிப்பூவை எடுத்துகிட்டு போய்‌ வேணிகிட்ட குடுத்துட்டு வா. அவ பால்கோவான்னா, உயிரை விடுவா..." சுந்தரி குரலை உயர்த்தி தன்‌ பெண்ணை முறைத்தாள்‌.

“சரி... சரி... நீ பாட்டுக்கு கத்தாதே... நீயும்‌ தான்‌ உன்‌ வீட்டுக்காரர்‌ பக்கத்துல இருக்காருன்னு ரொம்பத்தான்‌ துள்ளி தொப்புன்னு குதிக்கறே" ஸ்வீட்‌ வைத்திருந்த தட்டை எடுத்தக்‌ கொண்ட சுகன்யா கோபத்துடன்‌ முனகிக்கொண்டே தட தடவென கீழ்‌ போர்ஷனுக்கு ஓடினாள்‌.


தொடரும்...

Comments

  1. இந்த கதையின் விஷேஷமே, முதிர் காதல் / காமம் தான்! அசத்தல்

    ReplyDelete
  2. மிகவும் அருமை சகோ
    வாழ்க்கை ஒரு வட்டம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 5

அந்தரங்கம் 2