மறுவாழ்வு 25
முழு தொடர் படிக்க
டிரைவர் பஷீர், தன்னைச் சென்னைக்கு அழைத்துப் போவான், உதவி செய்வான் என்று எதிர்பார்த்து, ஒரு விடியலுக்குக் காத்திருக்கின்றாள் மரகதம்.
வெள்ளைக்கார துரை கொடுத்துப் போன, பணத்தில், தற்சமயம் சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை. இது எவ்வளவு நாளைக்கு வருமோ என்ற பயத்தில், மிகச் சிக்கனமாய், செலவு பண்ணினாள். ஆஞ்சனேயரே துணை. காலை மாலை அங்கேயே கெதி, கோயில் பிரசாதம் காசை மிச்சம் பண்ணியது.
டிரைவர் பஷீர், தன்னைச் சென்னைக்கு அழைத்துப் போவான், உதவி செய்வான் என்று எதிர்பார்த்து, ஒரு விடியலுக்குக் காத்திருக்கின்றாள் மரகதம்.
வெள்ளைக்கார துரை கொடுத்துப் போன, பணத்தில், தற்சமயம் சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை. இது எவ்வளவு நாளைக்கு வருமோ என்ற பயத்தில், மிகச் சிக்கனமாய், செலவு பண்ணினாள். ஆஞ்சனேயரே துணை. காலை மாலை அங்கேயே கெதி, கோயில் பிரசாதம் காசை மிச்சம் பண்ணியது.
நாட்கள் செல்லச் செல்ல நம்பிக்கை குறைந்து கொண்டே போனது. அடுத்து என்ன என்று யோசிக்க யோசிக்கப் பயமானது. இங்க திருச்சிற்றம்பலத்தில ஒன்னும் வேல கெடைக்காது. சென்னைக்குத் தனியாகப் போய் மாட்டிக் கொள்ளவும் துணிவில்லை. பாண்டில ஏதும் வேலை கிடைக்குமா, அங்கேயும் யாரையும் தெரியாது. பட்டம்மாளிடம், தன் நிலைமையைச் சொல்லி, அவர்கள் உதவியை நாடுவது தவிர வேறு வழியில்லை. சென்னையில் உள்ள அவர்கள் பிள்ளைகள் ஏதாவது செய்யலாம்.
ஐப்பசி பிறந்து விட்டது, மழைக்காலம், கூரை சிதிலமடைந்து போன வீடு. சாதாரண மழைக்கே, ஓடி ஒளிய வேண்டும், அடை மழையென்றால், விரட்டியடிக்கும். ஏதாவது வழிகாட்ட அவசர பிராத்தனை, ஆஞ்சனேயருக்கு, கழுத்து மாரியம்மாவுக்கு, காத்தவராயனுக்கு. ஏன்....... தன் புகுந்த வீட்டில் இருந்த பொழுது, வேண்டாத பெருமாளையும் வேண்டினாள். அவர்கள் செவிக்கு, அபலையின் துயரம் எட்டியது போலும்.
ஒரு நாள் மதியம் இரண்டு மணி இருக்கும். கதவு தட்டும் சத்தம் கேட்டு முழிப்பு வந்து எழுந்து, மேலாக்கை சரி செய்து, தலை கோதி கொண்டை இட்டுக் கொண்டே, கதவைத் திறந்தாள். தூக்க கலக்கம், தோளில் துணிப்பை, கையில் குடையோடு நின்ற ஆளை, சட்டென அடையாளம் தெரியாமல் போனது. தெரிந்ததும்,
"அட நீங்களா......வாங்க வாங்க" என்று மகிழ்ச்சி துள்ள கதவை திறந்து அழைத்தாள்.
வெள்ளை சீறுடையில் பார்த்துப் பழகிய கண்கள், பச்சை கோடு போட்ட பனியன், கலர் பேன்ட்டில், பஷீரை எதிர்பார்க்கவில்லை.
செருப்பை கழற்றி விட்டு, உள்ளே போனான். அவள் ஓடிப் போய், தான் படுத்திருந்த பாய் மேல் கிடந்த துணிகளைத் தள்ளிவிட்டு, பாயை எடுத்து தட்டி தாழ்வாரத்தில் போட்டு உட்காரச் சொன்னாள்.
உட்கார்ந்து, சுவற்றில் சாய்ந்து, காலை வெற்றுத் தரையில் நீட்டி, "எப்டி இருக்க மரகெதம்." என்றான்.
"ஏதோ இருக்கேன், ஒவ்வொரு நாளும் ஒங்களுக்காகக் காத்துக் கெடந்தேன்."
"ஆமா பா, ஒன் மன்த் பூட்சு. நாமோ எம்மா ட்ரை பண்ணிட்டு இருந்தோம். நல்ல எடம் கெடைக்கல. நேத்து ஒரு நல்ல எடம் கெட்சிது. ஒடனே இன்னிக்கு ஓடி வந்துது."
"அப்டியா.... சொல்லுங்க", என்று அவளும் அவனருகில் பாயில் உட்கார்ந்தாள்.
"ஒரு கல்கத்தாக்காரங்கோ, பெங்காலி பேசுவாங்கோ, அய்யா டெல்லில இருக்காரு, மேடம், சின்னப் பொண்ணு மெட்ராஸ்ல. பொண்ணு ஸ்கூல் போவுது, அத பாத்துகினம், கானா (சாப்பாடு) பண்ணோனம், அதான் வேல. அவங்க ஊட்டுல தங்க வச்சிக்குவாங்கோ. ஒனக்கு இஷ்டமா பா?"
"அது போதுமே", என்று அவன் கையை எடுத்து கண்களில் ஒற்றினாள்.
"கடவுள்மாரி வந்தீங்க, ஒங்களுக்கு பெரிய புண்ணியமாயிருக்கும். எப்டி இந்த வேலய கண்டு புடிச்சீங்க. ஒங்களுக்குத்தான் சிரமம்."
"ஆமா பா....... பாவம் மரகெதம்ன்னு, நென்சி நென்சி நம்ப மனசு படா பேஜாராட்சி பா, ஒரு மன்த்தா ஒன்னும் கெட்கலயா..... நேத்திக்கு நம்ப மானேஜர்கிட்ட, ஒரு பெங்காலி மேடம் வந்துது. நம்போ கஸ்டமரு. வந்தூ.... இந்தா மாரி ஒரு பொண்ணு வேலக்கி ஓணும்னு கேக்குராங்கோ. அதூ... நம்பக் காதுல உளுந்துதா, கபக்குனு புட்சிகின"
"ரொம்ப நன்றி.... சரி எப்ப கௌம்பனும்."
"நம்பகூடவே வந்துருபா. இல்ல.... நீ இன்னா பண்ணுவ பாவம். தனியா அட்ரஸூ தேடி வந்தா மெட்ராஸ்ல காணாப் பூட்வ பா......... ஆமா. கேப்மாரி ஊரு........ தனியா பொம்பளயா பாத்தா போதும், ஏமாத்தி இஸ்துகினு பூடுவானுவ.......ஆமா."
"குடிக்க சாப்ட ஏதாச்சும் வாங்கியாரவா."
"வாணா பா, ஒன்கு எதுக்கு கஸ்தி, தண்ணி மட்டும் குடு போதும்",
"எனக்கொன்னும் கஷ்டமில்ல. தோ செத்த நாழில போய் வாங்கியாந்துடுவேன். சாப்டியா இல்லியா உண்மைய சொல்லு", என்று தோளைத் தொட்டாள்
"ஆச்சி ஆச்சி.......... பா.......... நமக்கூ பசி அல்லாம் தாளாது பா. நடுவுல பஸ் நிறுத்னாம்பா அங்கே ஆச்சி. தோ ஒனக்கும் கூட பரோட்டா வாங்கியாந்திகினே", என்று கைவிட்டு, பையிலிருந்து ஒரு பார்சலை எடுத்தான்.
எழுந்து தவளையில் நீர் மொண்டு கொடுத்து விட்டு, உட்கார்ந்தாள். நீரை தூக்கி விட்டான், நெஞ்சிக் குழி ஏறி இறங்க, மொடக் மொடக்கென்று குடித்து ஏப்பம் விட்டான்.
"இப்பவே கௌம்பவா" என்றாள்.
"ஆமா பா"
"இல்ல........ செத்த படுக்கிறியா....... கொஞ்ச நேரம் இங்க தங்கிட்டுப் போவலாமே."
"நா நா, ஜல்தி கௌம்பனும். அப்ரம் அவொங்கோ ஊட்டாண்ட போவ நைட் ஆயிடும். அது நல்லா இருக்காது. நைட் ஆயிட்டா, ஒன்னே எங்க....... தங்க வைக்ரது, படு பேஜார்தான்."
"இல்ல அதில்ல..........." என்று தலை குனிந்து இழுத்தாள். "அப்ரம்... எப்ப சந்தர்பம் கெடைக்குமோ என்னவோ",
'என்னா சொல்லுது இந்தப் புள்ள', என்று அவன் அவள் முகத்தைப் பார்த்தான்.
"இம்.. அது.... வேணாமா எங்கிட்ட", என்றாள்
பதில் இல்லை.
முகத்தை நிமிர்ந்து, அவனை உற்றுப் பார்த்தாள்.
"ஓ ஓ அதூவா.......... அதுவா பா.......... ஹஹ்ஹ" என்று தொப்பை குளுங்க சிரித்து............ "நை .....நை நை அதெல்லாம் ஒன்னும் வாணாம் பா", என்று பக்கவாட்டில் தலையாட்டினான்.
"ஒங்களுக்கு வேணாம். ஆனா, இம்மா ஒதவி செஞ்ச ஒங்களுக்கு நா எதனா கொடுக்கனும், இன்னா குடுப்பேன், இப்ப எங்கிட்ட இருக்கரது இந்த ஒடம்பு மட்டுந்தான்".
"ஓ.." என்று தலை குனிந்து உதட்டை பிதிக்கி யோசித்தான்.
"என்னா தயக்கம்". என்று நகர்ந்து அவன் தோளைத் தொட்டாள்.
"இல்ல இல்ல மரகெதம், நம்பப் பீபி இருக்குது பாரு, அதான் பா, நம்பப் பிரீதி, இஷ்டம் அல்லாம். நாமோ வேற பொம்ள தொட்ரதில்லே. அவதான் நமக்கு, பஸ்" என்று கையை விரித்துச் சிரித்தான்.
"நீ சொல்லாமலே தெரியுது. ஒன் பார்வை சுத்தம். நா ஓடி வந்துட்டவ, காசுக்கு துரை கூடப் படுத்தவ, அப்டி இருந்தும், நீ அந்த மாரி என்னப் பாக்கவே இல்லை. அதனாலத்தான், என் மனசில பூட்டியிருந்த விஷயத்த எல்லாம் கொட்டித் தீத்தேன் ஒங்கிட்ட."
"அச்சா மரகெதம். நம்பள கரக்டா புரிஞ்சிட்ட பா."
"இருந்தாலும். எனக்கு ஒன்னும் அது பெரிய தப்பா படல."
"நா நா பா........... அது தப்பு பா. அப்ரம் அந்தப் போலீஸ்காரன் மாதிரி நாம்போ ஆயிடும் இல்லியா. ஒன் ஒடம்பு மேல ஆச வச்சி நாம்போ ஹெல்ப் பண்ரான் போலோ ஆயிடும். வாணாம் பா. அல்லா நமக்கு ஒரு நல்ல பீபி குடுத்துகிராரு."
"நல்ல மனசு ஒனக்கு." என்று கை பிடித்து, கண்களில் ஒற்றினாள். "நல்லா இருப்பீங்க, ஒன் பொண்டாட்டி குடுத்து வச்சவ" என்று எழுந்தாள்.
இருந்த தன் உடைமைகளை அள்ளி பெட்டியில் திணித்தாள்.. பெட்ஷீட் விரித்து இன்னும் கொஞ்சம் பொருட்களையும், அதில் வைத்து மூட்டை கட்டினாள். மீதம் இருந்த தட்டு முட்டுச் சாமான்கள், ஸ்டவ், பாத்திரங்கள், பாய் எல்ளாம் என்ன செய்வது என்று புரியவில்லை.
'ஆங் ஆமா, எல்லாத்தயும், பட்டம்மா வீட்டில வச்சிட்லாம். அப்ரம் வந்து எடுத்துக்கரன்னு சொல்ல வேண்டியதுதான்.'
'வர முடியாட்டா'
'போவுது, இன்னா பெருசா. அவங்கதான் எடுத்துக்கிடட்டுமே, இம்மா நாள் ஒதவி பண்ணதுக்கு.'
எல்லாவற்றையும் அடுக்கி வைத்தாள். அரிசி, நல்ல தரமான அரிசி, மளிகை பொருட்கள் எல்லாம் ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டாள். ஆறுமாத குடித்தனம் அரை மணிக்குள் களைந்தது.
"இன்னும் ஒரு வேலை பாக்கி இருக்கு", என்றாள்
"என்னா பா"
"பக்கத்து வீட்டம்மா, இத்னி மாசமா ரொம்பத் தொணயா இருந்தாங்க, அவங்க கிட்ட போய் ஒரு வார்த்த சொல்லிட்டுக் கௌம்பனம். எப்டி சொல்றதின்னுதான் தெரியல குழப்பமா இருக்கு. முழுசா பொய் சொல்லவும் பிடிக்கல. அவங்க போலீஸ்காரன்தான் என் கட்ன புருஷன்னு நெனச்சிருக்காங்க. அப்டியே இருந்துட்டுப் போவட்டும், அவன் மொள்ளமாரின்னு நான் சொல்லல. இப்போ வெவரம் சொல்லி, என் மேல ஆசயா இருக்கர அவங்க மனச ஏன் கஷ்டப் படுத்தனம், அதனால ஒரு சின்னப் பொய் சொல்லப் போறேன். புருஷன் வந்திருக்காரு, திண்டிவனத்தில ஊடு பாத்துட்டாரு, ஒடனே கௌம்பன்னு சொல்லப் போறேன்." என்றாள்.
"செய்யி மரகெதம். எது கரக்டோ செய்யி"
கையில் கொள்ளும் அ அளவு பாத்திரங்களை எடுத்து, அடுத்த வீட்டுக்குப் போனாள். ஒரு பத்து நிமிடம் கழித்து, திரும்பி வந்தாள்.
"ஒரு சிக்கல். அந்த அத்தையும், மாமாவும் ஒன் புருஷன இது நாள் வரக்கும் காட்டல, அவரு மொகத்த காட்டிட்டுப் போடீன்னு கட்டாயப் படுத்துராங்க."
"இதென்னா வந்துது கஸ்தி" என்றான்.
"தயவு செஞ்சி வரனும். நீங்க ஒரு வார்த்த பேசாதீங்க எல்லாம் நா பாத்துக்கரேன்" என்றாள்.
இன்னும் மீதி இருந்த சாமான்களை எடுத்து இருவரும் போயினர் பட்டம்மாள் வரவேற்று, உட்கார வைத்து, இருவருக்கும் காப்பி கொடுத்தாள்.
"கௌம்பனும்மா நேரமாவுது" என்றதும், தட்டில் தாம்பூலம் வைத்து எடுத்து வந்தாள். பெரியவர் ஈஸி சேரில் உட்கார்ந்திருக்க, பட்டம்மாள் பக்கத்தில் நிற்க, இருவரும் ஒன்றாக அவர்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.
"அந்த ஆஞ்சநேயர் ஆசில, சீக்ரமா ஒரு ஆம்பளப் புள்ளய பெத்தெடுக்கனும்." என்று அக்ஷதை போட்டு ஆசி வழங்கினர்.
'அவங்க சொன்னாப்பல, நம்ம பீபி புள்ள பெத்தா நல்லது'ன்னு, அவன் மனதில்.
'விவரம் புரியாம ஆசீர்வாதம் பண்றாங்க' என்று மரகதம் மனதில்.
"எங்கள மறக்காதடி, அப்பப்ப வந்து இந்த அத்தை, மாமாவ பாத்துட்டுப் போடி" என்றாள்.
"ஆவட்டும் அத்தை" என்று கிளம்பினாள்.
அவர்கள் ஜோடியாய் போவதை பார்த்து, கையசைத்து வழியனுப்பி விட்டு வந்தாள் பட்டம்மாள்.
'ஆமா... பட்டு...., அவ புருஷம்பேரு ஏதோ கமலநாதன்னு சொன்னா, ஒரு முஸ்ஸிலிமு இல்ல வந்துட்டுப் போறாரு.'
'ஆமா..' என்று திகைத்தாள் பட்டம்மாள், 'என்னவோ பாவம், ஏதோ இக்கட்டுல மாட்டிக் கெடந்தது அந்தப் புள்ள, பாவம் வெளில சொல்ல முடியாம, மொகம் தெளிவாவே இருந்ததில்ல. ஏதோ நல்லா இருந்தா சரி.'
போற எடத்தில, சாப்பாடு எப்ப கிடைக்குமோ என்று, பஷீர் வாங்கி வந்த பரோட்டாவை, அவனுடன் சேர்ந்து சாப்பிட்டாள். மூட்டை கட்டிய சாமான்களை எடுத்து, வீட்டைப் பூட்டி, சாவியை நிலைப்படியில் வைத்து விட்டு, கிளம்பினர்.
அந்தப் போலீஸ்காரனோடு புள்ளயும் குட்டியுமாய் வாழப் போகிறோம் என்று கட்டிய தாம்பத்திய கோட்டை மண் கோட்டையாய் இடிந்து, உண்மை தெரிந்து மனம் குமிறி, பசியும் பட்னியுமாய்க் கஷ்டப் பட்ட அந்தக் கொடூரமான வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து கிளம்பினாள்.
கூட்டு ரோட்டில் திண்டிவனத்திற்குப் பஸ் ஏறினர். வழியில் ஆஞ்சநேயர் கோயில் கோபுரம் தெரிந்து, கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொன்னாள். அடுத்த, புது வாழ்வாவது நல்லபடியாய் அமைய வேண்டினாள்.
பட்டணத்தை வந்தடைய, பொழுது சாய்ந்து விட்டது. தாம்பரத்தில் இறங்கி, மின் தொடர் வண்டி பிடித்து, நுங்கம்பாக்கம் வந்தனர். நகரத்தின் சத்தம், வாகனங்களின் ஓட்டம், உயரந்த கட்டடங்கள் எல்லாம் பிரமிப்பாய் இருந்தன.
'இதான் மெட்ராஸா.' மெட்ராஸ்........ நல்ல மெட்ராஸ்.....என்ற பழைய பாட்டு. நாகேஷ் பாடும் பாட்டு ஞாபகம் வந்தது.
ஸ்டேஷனிலிருந்து கொஞ்ச தூரம் நடந்தனர். கரு மேகத்தினுடையே, வெள்ளிக்கீற்று மின்னல் கண்ணைப் பறித்தது. பலமான இடியுடன் மழை பிடித்துக் கொண்டது. இருந்த ஒற்றைக் குடையில் ஒண்டி நடந்தனர்.
குடியிருப்புப் பகுதிக்கு வந்து, பெரிய வீட்டின், கேட்டைத் திறந்து, அழைப்பு மணியடித்துக் காத்திருந்தனர். ஓர் பத்து வயது சிறுமி திறந்தாள்.
"சுமன குப்தா மேடம் இருக்காங்களா?"
"மம்மி நாட் தேர்"
(மேடம் இல்லை) என்றாள்.
(மேடம் இல்லை) என்றாள்.
"டீகே பேட்டி" என்று வெளியே நின்றனர்.
கதவை திறந்து, "கம் இன்ஸைட் அன்கிள், ஆன்டி" என்று அழைத்துப் போய் முன் ஹாலில் உட்கார வைத்தாள். இருவருமே பாதி நனைந்து விட்டனர். அந்த சிறுமி ஓடிப்போய், ஒரு பெரிய துண்டு ஒன்று எடுத்து வந்து கொடுத்தாள். தலை துவட்டி உட்கார்ந்திருந்தனர்.
சுவர்க்கடிகாரம் ஆறரை காட்டியது.
ஹாரன் சத்தம் கேட்டு, "மம்மி கேம்" என்று ஓடினாள் சிறுமி.
காரேஜ் கேட் திறக்க, ஒரு மாருதி கார் உள் நுழைந்து நின்றது. உள்ளே வந்த பெண்மணி கண்டு, பஷீரும், மரகதமும் எழுந்து நின்றனர். நல்ல சிவப்பு, உயரம், மடிப்பு களையாத வெளிர் சந்தன நிற புடவை, அரக்கு கலர் பார்டருக்கு மேட்சாய் ப்ளவுஸ். வகிட்டில் குங்குமம், நெற்றியில் அகலப் பொட்டு, மெல்லிய ப்ரேமில் பளிச்சென்ற மூக்குக் கண்ணாடி.
"ஒக்காருங்கோ" என்று சொல்லி, பையை வைத்து விட்டு உள்ளே போய் ஓர் ஐந்து நிமிஷம் கழித்து வந்தாள். எதிர் சோபாவில் நன்றாகச் சாய்ந்து, நிமிர்ந்து உட்கார்ந்து கால்மேல் கால் போட்டாள். இருவரும் நின்றபடி இருந்தனர். மரகதத்தை நோட்டம் விட்டாள்.
"எஸ் டெல் மீ, ஷி இஸ் த கேர்ள்?",
(இந்தப் பொண்ணு தானா?)
பேரு என்னா?" என்றாள்
(இந்தப் பொண்ணு தானா?)
பேரு என்னா?" என்றாள்
"மரகதம்..மா"
"மேரேஜ்"
"அது வந்து மேடம், ஹஸ்பேன்ட விட்டு பிரிஞ்சி வந்துட்டாங்க."
"ஓ... செபரேட்டட், எனி இஷியூஸ்?"
"புள்ளங்க ஏதும் இல்லிங்க மேடம்"
"ஓ சரி, வேல சொல்லிட்டீங்கோ?" என்று மரகத்ததைப் பார்த்து, "இங்க ஸ்டே பண்ணனும். நம்பப் பாப்பாவ நள்ளா பாத்கனும். குக் பண்ணனும். க்ளீன் இருக்கனும். இங்கிலீஷ் தெர்யும்?" என கேட்டாள்.
"கொஞ்சம் கொஞ்சம் வரும் மேடம்"
"எஸ் தட்ஸ் குட்."
"பேபி.... ஷோ, ஹர் ரூம்" என்று எழுந்தாள்.
"மேடம் சம்பளம்." என்று பஷீர் பின் தலையில் கை வைத்தான்.
"அதெல்லாம் நாமோ பாத்துக்கும், டோன்ட் வொரி. தேங்யூ ஸோ மச். என்கு திஸ் கேர்ள புடிச்சிருக்கு. நா ஒங்க மேனேஜர் கிட்ட பேஷறன்."
எடுத்து வந்த பெட்டி, மூட்டையைப் பஷீர் எடுத்துக் கொள்ள, பேபி அவர்களை அழைத்துப் போனாள். சமையலறையை ஒட்டிய சின்ன அறை, மிகச் சுத்தமாய் இருந்தது. ஒரு மூலையில் ஒற்றைக் கட்டில்.
பெட்டி, மூட்டையை வைத்து விட்டு, "அப்ப நாம்போ கௌம்பரன் மரகெதம். பாத்துக்க. மேடம் நல்லபடியா பாத்துக்குவாங்கோ. மரிவாதையா இருக்கனும்." என்றான்.
"போயிட்டு வாங்க.. நா அடக்க ஒடுக்கமா இருக்கேன். 'நீங்கோ பேஜார் பண்ணிக்க வாணாம்'." என்று அவன் பாஷையிலே சொல்லி சிரித்தாள்.
பஷீரை வழி அனுப்பி விட்டு வந்ததும். பேபி என்ற அபர்னா மரகதத்தை அழைத்துப் போய் வீட்டை சுற்றிக் காண்பித்தாள்.
அபர்ணா, மாடியேறியதும், மரகதம், சமையலறை தரையில் உட்கார்ந்து காத்திருந்தாள். அறை மணி கழித்து, நைட்டி போட்ட மேடம் மாடியிறங்கி வந்து, சமையலில் இறங்கினாள். மரகதம் கூடவே இருந்து அவள் சொல்வது போல் ஒத்தாசை செய்தாள். பொதுவாக, சாதாரண ஆங்கில வார்த்தைகளிலேயே பேசினாள்.
'அந்த வெள்ளைக்காரன் பேச்சிதான் ஒன்றுமே புரியவில்லை. இந்த மேடம் பேசுவது புரிகிறது. பேசத்தான் வரவில்லை.'
மரகதத்திற்குப் புரியாத பொழுது, கொச்சைத் தமிழுக்கு மாறி புரிய வைத்தாள்.
ஒரு மணி நேரத்தில் எல்லாம் தயார். சாப்பாட்டு மேசை மேல் அடுக்கி வைத்து, பேபியை கூப்பிட்டு விட்டு, மேடம் உட்கார்ந்தாள். மரகதம் பரிமாற அவர்கள் சாப்பிட்டு மாடி ஏறி விட்டனர். மரகதம் சாப்பிட உட்கார்ந்தாள். வரட்டு சப்பாத்தி, தொட்டுக் கொள்ள, கத்தரிக்காய் மசியல். பெரிய பாத்திரத்தில், கட்டித் தயிர், மாவடு ஊறுகாய் பாட்டிலில், ஆரஞ்சு ஜூஸ், சுவை எல்லாம் அவளுக்குப் பழக்கமில்லாமல், நாவுக்கு ஒத்து வரவில்லை. சோறு வேண்டும். அது இல்லை. நிறையத் தயிர் இருந்தது.
பசிக்கு சாப்பிட்டு, எல்லா வற்றையும் கழுவி சுத்தம் செய்து, தன் அறைக்கு வந்து கதவை சாத்தி, கட்டிலில் உட்கார்ந்தாள். தொட்டுத் தடவினாள். பஞ்சு மெத்தையை மறந்து பல மாதங்களாகியது, கண்கள் சொருக அடுத்த நிமிடம் அசதியில் தூக்கம். பல மாதங்களுக்குப் பின் அமைதியான தூக்கம்.
ஆறுமாத பழக்கத்தில், அதிகாலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்து விட்டது. விடிந்து எழுந்தால், வெளிச்சத்தில் பொம்பளை எப்படி வெளிக்குப் போக முடியும். அப்படி ஆகி விட்டால் இருட்டும் வரை அடக்கி காத்திருக்கவேண்டுமே. இங்கு கழிப்பிடத்தில், அவளுக்குப் பழக்கமில்லாத கம்மோட். சமாளித்து உட்கார்ந்து முடித்து வந்தாள். வயிறு பசித்தது. காத்திருந்தாள்.
ஏழு மணிக்காய் மேடம் இறங்கினாள். ப்ரட் டோஸ்ட் ஆம்லெட் போட காப்பி கலக்க கற்றுக் கொடுத்தாள். மதிய லன்ச் டப்பாவுக்கு சப்பாத்தி சப்ஜியும் தயாரானது. டிபன் ஆனதும், மாடிக்கு அழைத்துப் போய், அபர்ணாவை குளிக்க வைத்து, தலை வாரி பள்ளி சீருடை போட்டு தயார் பண்ண என்னென்ன செய்யவேண்டும் என்று பழக்கினாள். எட்டரை மணிக்கு மேடமும் பெண்ணும் தயார். வீட்டை எப்படி யெல்லாம் பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டும், சாவி இதர விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து விட்டு, அபர்ணாவை அழைத்துக் கொண்டு காரில் கிளம்பி விட்டாள்.
காய்ந்த ப்ரட், சப்பாத்தி பிடிக்கவில்லை. பெங்காலி வீட்டில், இட்லியா தோசையா.
எல்லாவற்றையும் சுத்தம் செய்த பின், அந்தப் பெரிய வீட்டில் மரகதம் மட்டும் தனியாய், என்ன செய்வதெனத் தெரியாமல், படுத்து மீதி தூக்கம்.
பதினோரு மணிக்காய் திடுக்கிட்டு எழுந்தாள். தன் உடைமைகளைச் சுவற்று மர அலமாரியில் அடுக்கினாள். அடுத்து மதிய உணவை சமைத்தாக வேண்டும். சோறு சோறு என்றது வயிறு. அரிசி இருக்குமா என்று தேடினாள். இல்லை அல்லது இருக்கும் இடம் தெரியவில்லை. அடிப்பாவி நாம்பத் தான் எடுத்து வந்தோமே என்று தலையில் அடித்து, தன் மூட்டை பிரித்து, அரிசி எடுத்து சோறு சமைத்தாள். முந்தைய நாள் கத்தரிக்காய் ப்ரிஜில், நிறையத் தயிர், ஊறுகாய், வயிறு முட்ட சாப்பிட்டாள்.
மதியம் மூன்று மணிக்கு தெரு முனைக்குப் போய்க் காத்திருந்து அபர்னாவை அழைத்து வந்தாள். "ஆன்டி" "ஆன்டி" என்று கூப்பிட்டு, நிறையக் கதை சொன்னது. அப்பா டெல்லியில் வேலை, மேடம் ஒரு பேங்கில் மேனேஜர். ஓயாமல் பேசியது. கொஞ்சும் தமிழ், ஆங்கிலம் கலந்து பேசுவதைச் சில புரிந்தும் புரியாமலும் ஆசையாய் கேட்டாள். இப்படி ஆசையாய் பேசும் குழந்தையுடன் பேசுவதே, தான் தனிமையில் தவித்து வாடியதிற்கு, ஒரு பெரிய ஆறுதல்.
ஆறரை மணிக்கு மேடம் வந்தாள். முன் தினம் போலவே காரியங்கள் நடந்து, ஒன்பது மணிக்கெல்லாம் மரகதம் படுக்கையில்.
கடந்த ஆறுமாத நிகழ்வுகளை அசை போட்டது மனது.
கோதண்டராம பிள்ளை வீட்டு மருமகள், அஞ்சி ஏக்கரா நிலம், எட்டு வண்டியில் மூட்டை மூட்டையாய் வரும் நெல் குதிரில் குமியும். மாடி வீட்டு எஜமானி, தற்பொழுது, குரல் கொடுத்தால் ஓடி வரவேண்டிய வீட்டு வேலைக்காரி, சமையக்காரி, என்ற மாற்றத்தை மனது ஏற்றுக் கொள்ள முரண்டு பிடித்தது. தனியாக அநாதை போல் மறைந்து வாழ்ந்து, பசி பட்னியோடு கிடந்ததுக்கு இது எவ்வளவோ மேல்.
'பஷீரு கடவுள் போல வந்து ஒதவி பண்ணலன்னா, வாழ்வு கந்தலாகிப் போயிருக்கும்.'
பஷீர் நினைவு வந்ததும் மனம் நெகிழ்ந்தது.
'நல்ல மனுஷன். ஒரு பொண்ணோட தனியா இருந்து, அவ ஓக்க கூப்ட்டும், பொண்டாட்டித் துரோகம் வேணாம்ன்னு சொல்ற மனுஷனும் இருக்காங்க, நல்ல கிளியான பொண்டாட்டி இருக்கும் போதே கூத்தியா, கெடச்ச பொண்ணுங்கள நாசம் பண்ற, மனுஷ உருவத்தில மிருகமும் இருக்கு.'
'இன்னோர் ரகத்த விட்டுட்டீயேடி, பொண்டாட்டிய ஓக்க முடியாத பொட்டை. எத்னி ரகம்.'
தொடரும்...
நானும், ஏற்கனவே, விமர்சனத்தில் எழுதி இருந்தேனே?! மரகதம் வாழ்வில் எத்தனை விதமான ஆண்கள்?! எத்தனை ரக சுகங்கள், ஏமாற்றங்கள் என்று?!
ReplyDeleteஅதே தான்
Delete