மறுவாழ்வு 40


சத்யாவும், மரகதமும் தங்கள் உறவின் அடுத்த கட்டம் கல்யாணம்தான் என்று நெருங்கி வரும் வேலை. 

ஒரு நாள் மதியம் மூன்று மணியிருக்கும். பேபி முன்பே வந்து விட்டாள். அழைப்பு மணி அடித்தது. மரகதம் திடுக்கிட்டாள். 


'அவரு எதுக்கு இந்த நேரத்தில் வரனும். ரெண்டு மணிக்கு மேல வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கோமே.' 

பேபி அறையில் இருந்தாள். கதவு திறந்து ரகசியமாய், சொல்லி அனுப்பி விட வேண்டும் என்று மெல்ல கதவு திறந்து, இடைவெளி வழியே பார்த்தாள். 

"மரகெதம்" என்று கட்டைக் குரல் கேட்டு அதிர்ச்சி. 

பஷீர் நின்றிருந்தான், கையில் குழந்தை, தோளில் பை. 

குழந்தையைக் கண்டதும், சட்டென கதவை திறந்து, வாரி எடுத்து வாங்கினாள். மார்போடு ஆசையாய் அணைத்து கன்னத்தில் பல முத்தமிட்டாள். அது அழ ஆரம்பித்து விட்டது. 

"ஓஓ.." என்று குரல் கொடுத்து ஆட்டிக்கொண்டே "என்ன இப்டி திடீர்னு வத்துட்டீங்க, வாங்க" என்று உள்ளே அழைத்துப் போனாள். 

"கொழந்தைக்குப் பசி மரகெதம், பால் ஏதாவது குடேன்" என்று பையில் துழாவி எடுத்து காலி பாட்டிலை கொடுத்தான். 

"என்னாது இது" என்று ஒரு விநாடி அவனைப் பார்த்து விட்டு, "அது எதுக்கு, தூரப் போடு" என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறைக்குப் போனாள். 

அழுத குழந்தை சட்டென அழுகையை நிறுத்தியது. பஷீருக்கு புரிய சில விநாடியானது, 

"அரே அல்லா" என்று மண்டையில் அடித்து, 'அத்..தானே நெஜமாலும் அம்மா.' என்று ஒரு வறட்டுச் சிரிப்பு. 

பல மாதமாய் முலைப்பால் கட்டி வீக்கத்தில் மார்பு பாலைப் பீச்சி எடுத்து வீணாக்கும் பொழுது ஏற்படும் வேதனை, சுமந்து பெற்றெடுத்த குழந்தையைப் பரி கொடுத்து அவள் பட்ட மன அவஸ்தையை யாரரிவார். மார்போடு குழந்தையை அணைத்து, பாலூட்டிய பொழுது, கிடைத்த தாயுணர்வுக்கு ஈடாவுமா. இனி தன் கண்மணியைக் காணப் போவதே இல்லை என்று கிடந்தவளுக்கு, திடீரென தன் குழந்தை தன் மடியில் கிடப்பது, தொலைந்த பொக்கிஷம் கிடைத்தது போல் இருந்தது. குனிந்து நெற்றி கன்னம் என்று முத்தமிட்டு மகிழ்ந்தாள். 

பத்து நிமிடம் கழித்து, பசியாறிய குழந்தை தூங்கி விட, பருத்தி புடவை ஒன்றை எடுத்து நான்காக மடித்து, தன் கட்டிலில் மெத்து மெத்தென்று போட்டு, படுக்க வைத்து போர்த்தி, ஆசையாய் தடவி கன்னத்தில் முத்தமிட்டாள், ஆசை தீர தன் கண்மணியைக் கண்டாள். தலை முடி வளர்ந்து விட்டது. 

வெளி வந்தாள். பஷீர் சோபாவில் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். 

"தே ஏன் ரெஜினா வர்ல?" என்றாள் 

"இல்ல மரகதம்" என்று தலையை ஆட்டி, "அவ இல்ல போயிட்டா" என்று குரல் தழு தழுக்க,கண்களில் பொல பொலவெனக் கண்ணீர். 

"ஏன் என்னாச்சி?" என்றாள் பதட்டமாய். 

"அவ என்னயும் குழந்தையும் விட்டு அல்லா கிட்ட போயிட்டா" என்று கேவியது குரல்.

"செத்துட்சா.!!!" என்றாள் பதறி 

"ஆமா" என்று தலையாட்டினான் 

"எப்டி?" 

பேச வரவில்லை. சற்று பொறுத்து, கண்ணைத் துடைத்து, "ஆக்சிடென்டு, நம்போ ரோட் மேல, தாண்டரச்ச... ஒரு மோட்டர் பைக், வேகமா வந்தூ தூக்கிட்டான் பாஸ்டர்ட்.... மண்டைல அடி, ஸ்பாட்லே போயிட்சு" என்று தலை குனிந்து மேலும் பெரு உடல் குளுங்க அழுகை. 

அருகில் போய் அவன் தோளைத் தொட்டாள். அவன் அவள் கையை இழுத்து முகத்தில் தேய்த்து மேலும் அழுகை. 

நிற்க காத்திருந்தாள். 

"எப்ப ஆச்சி?" என்றாள் தலையைத் தடவி. 

"ரெண்டு வாரமாவுது. நா ரெஜினா வா நென்ச்சி அளுவனா, கொளந்த அளுவரதப் பாப்பனா, கஸ்தி மேல கஸ்திபா, போதும்பா அல்லா என்கு செரிய்யா தண்டன குடுத்துட்டாரு" என்று உடல் குலுங்க அழுதான். 

"போவட்டும் போவட்டும்" என்று அவன் தோளைத் தடவ, அவன் அவள் இடுப்பைப் கட்டி தன் சோகத்தை வடிய விட்டான். 

அணைத்து நின்று, அவன் அடங்க காத்திருந்தாள். 

"மத்யானம் சாப்டீங்களா இல்லயா.?" 

"இல்ல இல்லபா. கொளந்தக்கு பால் கூடக் கெடக்கல, அல்லாம் சாய், காப்பித்தான். அப்ரோம் ஒரு டேஷன்ல கெடச்சி வாங்கிக் குடுத்தேன்பா, கொளந்தய தூக்கிட்டு ரெயில்ல வந்தது படா படா பேஜார்பா." 

"இருங்க தோ வந்துறேன்" என்று சமையலறையில் நுழைந்தாள். உடனே ஒன்றும் இல்லை. ஃப்ரிஜ்ல் மிச்சம் மீதி, இருந்ததை எடுத்து சுடவைத்து, "பசி தாளாத மனுஷன்" என்று அவசரமாய் ஒரு தட்டில் போட்டு எடுத்து வந்தாள். அவனும் கை கழுவி உட்கார்த்தான், பசி ருசி அறியாது. அந்த முன்நாள் சாம்பார் சோறும் அவசரமாய் உள்ளே போனது. 

வந்து சோபாவில் உட்கார்ந்தான். 

"எப்டி இந்த அட்ரஸ் கண்டு புடிச்சீங்க"

"அரே அல்லா அது இன்னும் படா பேஜார் பா" என்று கதை சொன்னான். 

ரெஜினா இறந்தபின், பத்து நாள் டூட்டிக்கும் போகாமல், துக்கத்தில் படுத்துக் கிடந்தான். உயிருக்கு உயிராய் காதலித்து, தன்னையே நம்பி வந்த ரெஜினா என்ற ஜோதிக்குத் துரோகம் இழைத்து, மரகதத்துடன் தொடர்பு வைத்ததிற்குத் தண்டனைதான், ரெஜினாவை இழந்தான் என்று அவன் மனம் அவனை வாட்டி வதக்கி எடுத்தது. தொழுகையின் பொழுது, மனமுருகி மன்னிப்பு வேண்டினான். அக்கம் பக்கத்து பெண்டிர் மாற்றி மாற்றிக் குழந்தையைப் பார்த்துக் கொண்டனர். ஒரு முடிவு எடுத்தான். குழந்தையைப் பெற்றவளிடம் ஒப்படைத்து விடலாம் என்று. ஆனா, பெங்களூர் அட்ரஸ்? 

மேடம் வேலை செய்த பேங்கில் போய்க் கேட்டான். அவங்களுக்கு வீட்டு அட்ரஸ் தெரியல. பெங்களூர்ல எந்தப் பிரான்ச்னு கூடத் தெரியல. இழுத்தடிச்சி, ப்ரான்ச் அட்ரஸ் கிடைத்தது. அன்றிரவே, குழந்தையோடு ரயில் ஏறி விட்டான். அன் ரிசர்வ்ட் பெட்டியில் குழந்தையை வைத்துக் கொண்டு தூக்கமில்லாத பயணம். விடியக்காலைல பெங்களூர். புது ஊர், தமிலு, அவன் ஹிந்தி சமாளித்து, அட்ரஸ் தேடி, பேங்க் திறக்க வாசலிலே பத்து மணி வரை காத்திருந்தான். மேடத்தைப் பற்றி விசாரித்தான். 

'அப்டி சுமன குப்தான்னு யாருமில்லையே'ன்னு கை விரித்ததும், செய்வறியாது தவித்தான். 

யாரோ பாவப் பட்டு, யார் யாருக்கோ போன் போட்டு, மேடம் எந்த ப்ரான்ச்ல இருக்காங்கன்னு, விசாரிச்சு அட்ரஸ் கொடுத்தார்கள். ஒரு வழியா மேடத்தைப் பார்த்து விவரம், சொன்னதும், அவள், சரி சாயங்காலம் பேசலாம்ன்னு, ஒரு ஆட்டோ வைத்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். 

"சரி போனது போவட்டும். படுத்து தூங்கு கொஞ்ச நேரம்" என்று சமாதானம் செய்து, அவன் படுக்க ஏற்பாடு பண்ணப் போனாள். 

அவள் அறையில், கட்டிலில் அவள் செல்வம், பட்டாட்டம் ஒருக்களித்துப் படுத்து விரல் சூப்பித் தூங்குகின்றாள். கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள், அவளுக்குத்தான் இனி முன்னிரிமை. அவனுக்கு தரையில் பாய் படுக்கை போட்டு கூப்பிட்டாள். பெருத்த வயிறை போட்டு உருண்டு படுத்தான். போர்வை ஒன்றையும் அவன் மேல் போர்த்தினாள். 

'சாப்பாடு சரியில்லை போலும், சற்று இளப்பம்தான்' என்று கரிசனம். 

தூங்க விட்டு வெளியே போனாள். 

பல நாட்களாய் தொலைத்த தூக்கத்தை மீட்க, கண்ணை மூடினான். பிள்ளை பாரம் பெற்றவளிடத்தில் இறங்கியதில், அடுத்த நிமிஷம் தூங்கிப் போனான். 

மரகதம், பேபியை அழைத்து வந்து, "ஸி மை பேபி" என்று காட்டினாள். 

அவள் அருகில் சென்று பார்த்து, "ஓ ஷி இஸ் க்யூட், ஐ வில் ப்ளே வித் ஹெர் லேட்டர்" (அழகாய் இருக்காள், அவளுடன் அப்ரம் கொண் விளையாடுகின்றேன்) என்று மகிழந்தாள். 

இரவு சமையலுக்கான வேலையை கை செய்து கொண்டிருந்தாலும், இனி அடுத்து என்ன என்று மரகதத்தின் மன ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது. 

'பாவம் மனுஷன், பொண்டாட்டி மேல உசிர வச்சிருந்தாரு. நாம்பதான் குறுக்கப் பூந்து கெடுத்திட்டமா. தாங்க முடியாத பெரிய இழப்புதான். விதியின் விசித்திரமான வெளையாட்டு, யாருக்குப் புரியுது. கொழந்தைய இனி அவரு பாத்துக்க முடியாது, அதான் நம்பளத்தேடி வந்துட்டாரு, நமக்கு நம்பக் கொழந்த கெடச்சிடுத்து. அடுத்து இன்னா, நாம்பளம் அவரும் சேந்துக்றதா.' 

சற்றுக் குழப்பம் தடுமாற்றம். 

'மொதல்ல அவரு இன்னா சொல்றாருன்னு பாக்லாம். அப்ரம் ஒரு முடிவெடுக்கலாம்.' 

மணி ஐந்திருக்கும், சப்பாத்தி மாவு பிசைந்து, உருளைக்கிழங்கு வைத்து, மொத்தமான ஆலு பரோட்டா நான்கு செய்து அடுக்கினாள். கேரட், பீன்ஸ், வெங்காயம் வதக்கிய சப்ஜி கனிசமாய் ஒரு கிண்ணத்தில், இரண்டு முட்டை உடைத்து டபுள் ஆம்லெட் ஊற்றி எடுத்து, ஒரு பெரிய தட்டில் வைத்து குடி நீரும் எடுத்துப் போனாள் அறைக்கு. 

கதவை திறந்தாள், அப்பாவும் பொண்ணும் இன்னும் தூக்கத்தில், உள்ளே சென்று கதவை சாத்திவிட்டு, தொட்டு எழுப்பினாள். தூக்கம் களைந்து எழுந்து உட்கார்ந்தான். 

"சாப்டு" என்று கொடுத்து அவளும் தரையில் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். ஆம்லெட், சுடச் சுட பரோட்டா, பார்த்ததும், கண்ணில் ஒரு பிரகாசம். 

"மொகம் கைலம்பனுமா.?" 

அதைக் கண்டு கொள்ளாமல், "அச்சா...பா" என்று வாங்கிக் கப கபவென்று உள்ளே போனது. 

சுவற்றில் நன்கு சாய்ந்து கால் மடித்து உட்கார்ந்து, அவன் சாப்பிடுவதைப் பார்த்து ரசித்தாள். 'எத்னி நாள் பசியோ'

லோட்டா தண்ணீரும் தூக்கி விட்டு பலமான ஏப்பம். தட்டையும் தம்பளரையும் வாங்கி வைத்து விட்டு. "எப்ப திரும்பப் போவனும்" என்றாள். 

ரொம்ப நாள், இங்க மேடம் வீட்டில் தங்க முடியாது என்பதை, சூசகமாகச் சொன்னதை அவனும் புரிந்துகொண்டான். 

"தோ, ராத்ரி பஸ்ஸோ ரெயிலோ ஏறிடனும். டூட்டி பாத்து ரெண்டு மூனு வாரம் ஆவுதுபா, போவலன்னா வேற ஆள் போட்டுட்டாங்கன்னா, வேலையே பூடும்பா." 

"ஹ்ம்.. அப்ரம் என்னா" 

"அப்ரம்.. கொழந்தய நீதான் பாத்துக்கனும்." 

"சரி அப்ரம்."

"அப்ரம் என்னா மரகெதம், நா தனியா கெடக்க வேண்டிதான். அல்லா குடுத்த தண்டன." 

"எதுக்குப் போனத நெனச்சி ஒன்னயே காயப் படுத்திக்கினு" என்று அவன் தோளை தொட்டு தன் பக்கம் இழுத்தாள். அவனும் சாய்ந்து மடியில் படுத்தான். தலையை வருடினாள். கண்களில் கண்ணீர்.

"இல்ல மரகெதம், ரெஜீனா.." என்று சொல்ல முடியாமல் மேலும் தேம்பல், 

"நா ரொம்பத் தப்பு பண்ணிட்டேன் மரகெதம்" 

"அப்டின்னா, அந்தத் தப்பு என் பேர்லதான். நீ ஒம் பொண்டாட்டிக்கு உண்மையா கல்லுமாரி அசையாமத்தான் நின்ன. நாந்தான் பாவி, என் சுயநலத்துக்கு, ஒம் மனசக் கெடுத்து, கட்டாயப் படுத்தி எங்கூட இருக்க வச்சேன். அப்ப எனக்கும் சேத்து தண்டன குடுக்கட்டும் அந்த அல்லா." 

எழுந்து உட்கார்ந்தான். 

"இல்ல இல்லபா ஒன்மேல நா தப்பு சொல்லமாட்டேன். பாவம் நீ...... தனியா கஸ்தில இருக்கரச்ச, யாராவது தொணக்கு தேடுன. நம்பள்கும் ஒம்மேல ஆச வந்து போச்சி. அதான்.......ஆமா" 

"சரி போவட்டம். போன உயிர் திரும்பாது. மனச தெடப்படுத்திக்க. இப்ப நாம்ப ஒரு முடிவுக்கு வரனும். மேடம் வர்துக்குள்ள நாம பேசிடனும். கண்டிப்பா மேடம் கேப்பாங்க, என்ன செய்யப் போறீங்கன்னு. அவங்களுக்கு எப்ப வேணுன்னா டெல்லி டிரான்ஸ்பர் வந்துடும், ஏற்பாடு பண்ணிட்டாங்க. எனக்கு டெல்லி போவ இஷ்டமில்ல. இங்க பெங்களூர்ல ஏதோ ஒன்னு ரெண்டு நம்ப மனுஷங்கள பாக்ரேன், அங்க வடக்கெல்லாம் போனா பாஷை வராது, செத்துப் போவேன். நீயும் தனி ஆளுதான், ஒங்க ஊருக்குப் போவ முடியுமா. ஒன்ன கண்ணாலம் கட்ட யார் வருவாங்க சொல்லு. தனியா சோத்துக்கு அல்லாடனம். நானும் ஒரு அநாத நீயும் ஒரு அநாத. அதனால, எனக்கும் ஒனக்கும் சேத்து எது நல்லதுன்னா, நாம்ப ஒன்னா சேந்துக்கரதுதான். அதான் சரியான வழி, நல்லா யோசனை பண்ணு. மனச தளர உடாத" என்று எழுந்தாள். மேடம் 

"வந்துடுவாங்க. வெளில வந்து ஒக்காரு, சூடு தண்ணில முகம் கழுவு, சாய் போட்ரன், குடிச்சிட்டு மேடத்துட்ட தெளிவா பேசு."

"எல்லாம் பூட்சுன்னு ரொம்போ டீலாயி இருந்தம்பா, இப்ப நீ குடுக்கரத் தெகரியதாம்பா, எழுந்து ஒக்கார வக்கிது நம்பளே" என்று கை நீட்டி அவள் இரு கையைப் பிடித்து இழுத்து, முகத்தில் வைத்து தேய்த்துக் கொண்டான். 

ஆறரை மணிக்கு மேடம் உள் நுழைந்தாள், மரகதம் பையை வாங்கினாள், பஷீர் எழுந்து நின்றான். தலை ஆட்டிவிட்டு, அறைக்குப் போனாள். உடை மாற்றி, சிரமப் பரிகாரம் ஆனதும், ஹாலில் வந்து கால் மேல் கால் போட்டு, உட்கார்ந்தாள், மரகதம் தட்டில் ஸ்னேக்ஸ், டீ கொண்டு வந்து கொடுத்தாள். 

"யூ..?" என்றாள் பஷீரை பார்த்து 

"ஆச்சிங்க மேடம்" 

நின்றிருந்த பஷீரை உட்காரச் சொன்னாள், மரகதம், தள்ளி நின்றிருந்தாள். விவரமாய்ச் செய்திகளைக் கேட்டு அறிந்தாள். 

"ஸோ வாட் ஸ் நெக்ஸ்ட்.?"
(அப்போ என்னா அடுத்து) 

"நீங்கதாம்மா ஒரு வழி காட்டனும். கொழுந்தைய வச்சிக்க முடியாது. மரகெதம் பாத்துக்கனும்" 

"ஓகே... கரக்ட்.. இட்ஸ் நேச்சுரல், சைல்ட்... அம்மா கிட்ட... வந்துட்சி சரி, யுவர் ப்ளான்?" 

"மரகெதமும் எங்கூட வந்தா நல்லா இருக்கும் மேடம்" 

"ஓ ஈஸிட் (அப்டியா) நீ போறீயா மர்கெதம்" 

"ஆமாம் மேடம். அவரு கூட மெட்ராஸ் போறேன் மேடம். ஆனா, ஒடனே இல்ல, நீங்க டெல்லி கௌம்பரச்ச நா அவரு கூடப் போறேன். 

"ஐ ஸீ" (அப்டியா) என்று கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு கண்ணைச் சற்று மூடினாள். மரகத்ததிற்கு, அவள் அறியாமல், மேட்ரிமோனியல் காலங்களில் அவளுக்குப் பொருத்தமான, மணம் முறிந்த, மனைவியை இழந்த வயதேறிய வரன்களைத் தேடிக் கொண்டிருந்தவளுக்கு, இந்தத் திடீர் திருப்பம் ஒரு நல்ல மாற்றம் என்று உள்ளூர பெரும் நிம்மதி. அவளுக்கு, பஷீர் ஒரு நல்ல கணவனாக அமைவான் என்ற முடிவுக்கு வந்தாள். 

கண்ணைத் திறந்து, "ஒகே குட் டிஸிஷன்" (ஆம் நல்ல முடிவு) என்றாள், 

சட்டென ஏதோ உறுத்த, "பட் பஷீர், ஜஸ்ட் லிவ்விங் டுகெதர் நாட் குட் (ஆனா, சும்மா சேர்ந்து வாழ்வது போதாது) மேரேஜ் ஷூட் பி டன். கல்யாணம் ஆவனும் ஒகே, ப்ராமிஸ்." என்றாள்.

"நிச்சயமா மேடம், மொறையா எங்க சடங்குப்படி கண்ணாலம் கட்டிக்குவோம்மா" என்றான் பஷீர். 

"எஸ் தெட்ஸ் குட், மர்கெதம், ஷோ மி த பேபி" என்றதும், மரகதம் ஒடிப்போய் அள்ளி எடுத்து வந்தாள். மேடம் மடியில் இட்டாள். கை கால்களை உதைத்து, பொக்கை வாய் காட்டி சிரித்தது, 

"ஷி இஸ் ப்யூட்டிபுள். ஓ மை லிட்டில் மர்கெதம்" என்று கையாட்டி கொஞ்சினாள். உள்ளிருந்த பேபியும் வந்து கலந்து கொண்டாள். 

"அப்ப மேடம், நா ராத்ரியே கௌம்பரன் மேடம். அப்ரம் வந்து மரகெதத்த கூட்டிப் போறேன்." 

"எஸ் ஓகே." 

எட்டு மணி அளவில் பஷீர் கிளம்பினான். ஒரு தாளில் தன் முகவரியை எழுதி அவளிடம் கொடுத்தான். அவள், நான்கு பரோட்டா, வேக வைத்த முட்டை நான்கும், டப்பாவில் போட்டுக் கொடுத்தாள். கீழ் வரை வந்தாள். கையைப் பிடித்து, 

"லெட்டர் போடு மரகெதம். நாம்ப காத்திட்டு இருப்பான்" என்று கை எடுத்து கண்களில் ஒற்றி முத்தமிட்டான். 

கையசைத்து வழியனுப்பி வைத்தாள். அவன் கண்ணில் மறையும் வரை நின்று பார்த்து விட்டு உள்ளே வந்தாள். 

மரகத்ததிற்கு, மகளைச் சீராட்டவும், கொஞ்சவுமே, பொழுது போதவில்லை. வாழ்க்கையில் தான் இழந்ததையெல்லாம் திரும்பப் பெற்றதான நிறைவு. தனக்கென ஒரு குழந்தை, எத்தனை வருடம் ஏங்கியிருப்பாள். அடுத்து, ஒரு நல்ல புருஷன். பஷீர் பார்வைக்குச் சுமாரானவன்தான், ஆனால் அன்பானவன், நல்லவன், அதை விட வேறென்ன வேண்டும் ஒரு புருஷனுக்கு. அவங்க சடங்கு சம்பிரதாயத்துக்கு மாறனம். அவங்க மதத்துக்காரங்க கூட வாழனும். அது ஒன்னும் பெரிய விஷயமில்லை. பல வருடங்கள் பிறகு மனம் குதூகலிப்பில், மகிழ்ச்சியாய் நாட்கள் சென்றன. 

ஒரு வெள்ளிக்கிழமை, காலை ஒன்பது மணிக்கு மணி அடித்தது. குழந்தைக்குப் பால் புகட்டியிருந்தவள் திடுக்கிட்டாள், சத்யாவை மறந்தே போனாள். பஷீர் வந்து போனபின், சத்யாவுக்கு, சாப்பாடு செய்து வைப்பது தொடர்ந்ததுதான். நேரில் சந்திக்கவில்லை, ஒரு நாள், வைத்த சாப்பாடு அப்படியே இருந்தது, ஊருக்குப் போயிருக்கலாம் என்று நிறுத்தியிருந்தாள். ஒருவாரம் ஆகியதில், அவள் நினைவிலிருந்து சத்யா கறைந்து போயிருந்தான். அவனது தேவை, முடிந்து போன கதை. 

இப்பொழுது சத்யாவை எப்படி சமாளிப்பது என யோசனை. குழந்தையைக் படுக்கையில் கிடத்தினாள். பால் நின்றதில் அது அழ ஆரம்பித்து விட்டது. வாயில் கை வைத்து, தட்டி சமாதானம் செய்து, அறையை விட்டு வெளி வந்து ஓக்க வந்திருப்பவனை எப்படி சமாளிப்பது என்று யோசித்தாள். 

"ஆம் அப்படித்தான்...." என்று, மெல்லக் கதவு திறந்தாள். சத்யா தான் நின்றிருந்தான். வாயில் கை வைத்து, பேசாதிருக்கச் சொல்லி, வெளியே வந்து கதவை சாத்தினாள். 

"மேடம் லீவுல இருக்காங்க. நான் அப்ரம் பேசறேன்" என்றாள். 

"இல்ல மரகதம், நா அதுக்கு வரல, ஒரு முக்கியமான சேதி சொல்லனும்" என்றான். 

"நீங்க ஒங்க வீட்ல போயி இருங்க, தோ பத்து நிமிஷம், நா எதனா காரணம் சொல்லிட்டு வரேன்" என்று உள்ளே போனாள். குழந்தைக்குத் தொடர்ந்து பால் புகட்டி, தூங்க வைத்து, படுக்கப் போட்டு, பக்கத்தில் தலையணை ஒன்று வைத்து அணைத்தாள். வீட்டை பூட்டி போனாள். 

"வா மரகதம்" என்று அருகில் வந்து கை பிடித்து, "நா வெளி நாடு போறேன், ரெண்டு மாசமாவும், வர, அதான் ஒங்கிட்ட சொல்லனும்." என்றான். 

"அப்டியா...." என்று யோசனை. 

பேசாமல் இருந்தவள் தோள் தொட்டு, "என்னா மரகதம்" என்றான். 

"நீங்க திரும்பி வரும்போது, நானும் இங்க இருக்க மாட்டேன்"

"ஏன்" 

"அம்மா டெல்லிக்கு டிரான்ஸ்பர் ஏற்பாடு பண்றாங்களாம். சீக்ரம் வந்துடுமாம்." 

"அப்டியா மரகதம், அப்ப நாம பாக்கவே முடியாதா"

"ஆமா, மேடம் டெல்லிக்குப் போயிட்டா, நா வேற எங்க போவ அவங்க கூடத்தான்"

"ஏன் நம்பக் கல்யாணம்?" 

"கல்யாணமா" என்று ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தாள். "அது என் தகுதிக்கு மீறினது. அப்டில்லாம் இல்ல எனக்குப் பேராசை. அது நடக்காது. ஒங்க அப்பா அம்மா பாக்கர கன்னிப் பொண்ணா வருவா ஒங்க தகுதிக்கு. என்ன மறந்திடுங்க"

"அதான் ஒன் முடிவா மரகதம்" என்று உட்கார்ந்து விட்டான். 

"ஆமா அதான் நமக்கு நல்லது. என் தகுதிக்கும் ஒங்க அந்தஸ்த்தும் ஒத்து வராது."

"அப்போ நாம பிரியற நேரம் வந்துடுச்சா மரகதம்" 

"ஆமா, இந்தக் கொஞ்ச நாள் பழக்கம் மறக்காது, நீங்க குடுத்த சொகத்த இந்த ஒடம்பு மறக்காது. ஒங்களக்கு வரப்போறவ குடுத்து வச்சவ. கல்யாணம் பண்ணி நல்லா வாழுங்க"

"நானும் ஒன்ன மறக்க முடியாது மரகதம், ஒங்கிட்ட கெடைச்ச சுகம் அருமை. கண்டிப்பா ஒனக்கும் ஒரு வாழ்க்க ஒரு நல்லபடியா அமையும்." 

நெருங்கி, அவளைக் கட்டி அணைத்தான், தலை குனிந்தது, 

"இருக்கட்டும் இருக்கட்டும்" என்று மெல்ல விலகி "கெளம்பரச்ச சொல்லிட்டுப் போங்க" என்றாள். 

"கண்டிப்பா, ஞாயத்துக்கெளம, ராத்திரி ஃப்ளைட். ஆறு மணிக்கா கௌம்பனம்." 

"சரி பாக்கலாம்" என்று கிளம்பினாள். 

சத்யா பொத்தென கட்டிலில் விழுந்தான். சுனந்தாவை அடுத்து, இதுவும் பெயிலியரா. 

'ஆமா மாப்ள.... கடேசில, அப்பா பாக்கரப் பொண்ணுதான் ஒனக்கு.'

'இல்ல, ரெண்டு மாசம் பாரு, ஏதாவது ஜெர்மன் கேர்ள் மாட்டுவா'

'ஆச பேராச லே ஒனக்கு. நீ திருந்த மாட்ட' 

அன்று பிற்பகல் மரகதம், பூட்டிய சத்யா வீட்டுக்குப் போய், மளிகை சாமான்களை, கெட்டுப் போகாமல் பத்திரப்படுத்தினாள். கெட்டுப் போகும் என்றவற்றை தான் எடுத்துக் கொண்டாள். பாத்திரங்களை எல்லாம் அடுக்கி வைத்து, எல்லாவற்றையும் ஒரு முறை சுத்தம் செய்தாள். சாவியை அவன் கண்ணில் படும்படி வைத்து, வெளி வந்து கதவை சாத்தினாள். லேட்ச் தானாக மூடிக்கொண்டது. 

ஞாயிறு மாலை ஆறு மணியளவில், அவன் வெளி வர காத்திருந்து, பெட்டிகளை எடுத்து உதவி, அவனுடன் கீழே போய் வழியனுப்பி வைத்தாள். சத்யாவை நிரந்தரமாய் பிரிவது பற்றி ஏதோ ஒரு மூலையில் உருத்தல்தான். 

அவன் நமக்கில்லை. நாம அவனுக்குத் தகுயில்லை. தற்காலிய சுகம் கொடுத்தவன் அவ்வளவுதான் என்று மனதை தேற்றினாள். 


தொடரும்...

Comments

  1. எதிர்பாராத திருப்பம்! ஆனால், நான் நினைச்சபடி மரகதம், அவள் குழந்தை யுடன் பஷீர் உடன். சரியான முடிவு

    ReplyDelete
  2. சத்யா சுகந்தி யை இணைத்து விடுங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அந்தரங்கம் 47

நந்தவனம் 5

என் தங்கை 31