மறுவாழ்வு 42
முழு தொடர் படிக்க
சுகந்தி, பெங்களூரிலிருந்து, காஞ்சிபுரம் திரும்பி, பதினைந்து நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, வழக்கம் போல், ரயில் ஏறி, செங்கல்பட்டில் உள்ள ஆபீஸுக்கு வேலைக்குச் சென்றாள்.
லீவுக்குச் சொல்லாமல், திடீரென நின்றதிற்கு ஏதோ காரணம் சொல்லி. வேலையைத் தொடங்கினாள். ஆனால், வேலை முடிந்து ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் பொழுது, இருட்டு வழியில் போன தடவை போலவே மறுபடியும் கடத்தப்படலாம் என்ற பீதி இருந்து கொண்டுதான் இருந்தது.
சுகந்தி வேலைக்குப் போக ஆரம்பித்து, ஒரு மாதம் இருக்கும், ஒரு நாள் மாலை ஆபீஸை விட்டு வெளி வந்து நடக்க ஆரம்பித்தவள், கடைத்தெருவில், எதிரில் வந்தவனை தூரத்தில் கண்டாள். அவனை அடையாளம் கண்டதும், சிவ்வென முதுகுத் தண்டில் பயம் பரவியது.
சுகந்தி, பெங்களூரிலிருந்து, காஞ்சிபுரம் திரும்பி, பதினைந்து நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, வழக்கம் போல், ரயில் ஏறி, செங்கல்பட்டில் உள்ள ஆபீஸுக்கு வேலைக்குச் சென்றாள்.
லீவுக்குச் சொல்லாமல், திடீரென நின்றதிற்கு ஏதோ காரணம் சொல்லி. வேலையைத் தொடங்கினாள். ஆனால், வேலை முடிந்து ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் பொழுது, இருட்டு வழியில் போன தடவை போலவே மறுபடியும் கடத்தப்படலாம் என்ற பீதி இருந்து கொண்டுதான் இருந்தது.
வேலையை விட்டு விடவும் முடியாத, குடும்ப வருமானம் குறைந்த சூழ்நிலை. பங்காளிக் காச்சலில், குத்தகைக்காரிடம் தகராறு செய்து, நிலம் பயிரிட முடியாமல் நிறுத்தி விட்டனர். நிலத்து வருமானம் இல்லாமல், பணத் தட்டுப்பாட்டில் புவனேஸ்வரி தவித்தாள்.
சுகந்தி வேலைக்குப் போக ஆரம்பித்து, ஒரு மாதம் இருக்கும், ஒரு நாள் மாலை ஆபீஸை விட்டு வெளி வந்து நடக்க ஆரம்பித்தவள், கடைத்தெருவில், எதிரில் வந்தவனை தூரத்தில் கண்டாள். அவனை அடையாளம் கண்டதும், சிவ்வென முதுகுத் தண்டில் பயம் பரவியது.
சட்டென ஒரு கடையில் நுழைந்து மறைந்தாள். திரும்பி நின்று, சற்றே தலையைத் திருப்பி ஓரக்கண்ணால் பார்த்தவள். திடுக்கிட்டாள், அவனும் கடையினுள் ஏறி அவள் அருகில் வந்தான். என்ன செய்வதெனத் தெரியாமல், கல்லாக நின்றாள்.
அவன் அருகில் வந்து, "வா வீட்டுக்குப் போகலாம்" என்றான் மெல்ல.
"யாரு நீ?" என்றாள் உரக்க.
அந்த ப்ளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடையில் இருந்த மூன்று நான்கு பேர் திரும்பிப் பார்த்தனர்.
"ஒன்னுமில்லங்க, இது எங்கக்கா பொண்ணு வீட்ல கோவிச்சுக்கிட்டு வந்துட்டுச்சு, வீட்டுக்கு கூப்டா வரமாட்டுது, வா, அக்கா தேடுதில்ல" என்றான் சுகந்தியைப் பார்த்து.
"இல்ல இல்ல பொய்யி, இவன் யாரோ, திருட்டுப் பய, என்ன கடத்திட்டுப் போவப் பாக்குரான்" என்றாள் இன்னும் உரக்க.
ஒரு அம்மா அருகில் வந்து, "என்னாய்யா இது" என்று அவர்கள் மத்தியில் வந்து நின்றாள்.
" இல்லம்மா கோவத்தில ஏதோ சத்தம் போடுது, இது எங்களுக்குள்ள சமாசாரம், நா சமாதானம் பண்ணி இட்டுட்டுப் போறேன் நீங்க ஒங்க வேலையப் பாருங்க" என்றான் முரட்டுத்தனமாய்.
"இல்லம்மா பொய்யி பொய்யி", என்று சுகந்தி அந்த அம்மாவை பிடித்துக் கொண்டு அவள் பின் பக்கம் மறைந்தாள்.
"போய்யா வயசுப்பொண்ணுகிட்ட என்னா வம்பு" என்றாள் அதட்டலாய்.
அதற்குள் இன்னும் இரண்டு பேர் சேர்ந்துவிட அந்த ஆள், "இது என்னா இப்டி மனசு மாறி இப்டில்லாம் பேசுது, நா போயி அக்காவ இட்டாரன்" என்று விடு விடுவென இறங்கி நடந்தான்.
"அம்மா அவன் தப்பிக்கிரான் அவனப் பிடிங்க, அவன் ஒரு கடத்தல்காரன்" என்றாள்.
ஒரு ஆள் சட்டென ஓடி அவனைத் தொடர்ந்தான். அதற்குள் அவன் ஓட்டமாய்த் தெருவில் இறங்கி மாயமாய் மறைந்தான்.
அந்த அம்மா திரும்பி, "என்னம்மா நீ சொல்றது நிஜமா" என்றாள்.
"ஆமாம்மா, ஒரு மூனு மாசத்து முன்னால என்ன கார்ல தூக்கிட்டுப் போயி பெங்களூர்ல ஒரு அறையில அடச்சி வச்சிருந்தாங்க. ஒருத்தர் ஒதவியால நா தப்பிச்சி வந்தேன். அந்தக் கடத்தல் பண்ணவங்கல்ல ஒருத்தன்தான் இவன்."
"ஏம்மா போலீஸுக்கு சொன்னியா"
"இல்லம்மா."
"என்னா பொண்ணு நீ, இப்டி திருட்டுப் பசங்க நடமாடனா, பொம்பளப் பொண்ணுங்க எப்டி வெளிய தெருவ போறது"
கூட்டம் கூடிவிட்டது, இதிலிருந்து தப்பிக்க, "ஆமாம்மா செய்றேன்ம்மா, ஒங்களக்கு நன்றிம்மா" என்று கூறி சுகந்தி கடை யை விட்டு இறங்கி நடந்தாள். உடல் படபடக்க, ஒட்டமும் நடையுமாய் நடந்தாள். செங்கல்பட்டில் ரயில் ஏறி, வீடு வந்து சேரும் வரை பதட்டம் அடங்கவில்லை.
வீடு நுழைந்ததும், "சித்தி.." என்று கூவிச் சென்றாள். தோட்டத்தில் இருந்தவள் சத்தம் கேட்டு ஒடி வந்தாள். இவளும் ஒடி கட்டிக் கொண்டாள்
"என்னாடா கண்ணு" என்று சித்தி பதறிவிட்டாள்.
"அவன இன்னிக்குப் பாத்தேன்"
"யார........"
"அன்னிக்கு கார்ல கடத்திட்டுப் போனவன்ல ஒருத்தன் முன்னால ஒக்காந்து இருந்தான், அவன இன்னிக்கு செங்கல்பட்டு கடத்தெருல பாத்துட்டேன்." என்று சித்தி தோளில் தலை சாய்த்து கேவினாள்.
"அவன் ஒன்ன பாத்தானா"
"ஆமா.. ஆமா" என்று அழுது கொண்டே நடந்த கதையைச் சொன்னாள்
"பாவி, இன்னும் அவன் செங்கல்பட்டுலதான் சுத்தராம் போலருக்கு, படுபாவி, கெடச்சான், கைய கால முறிச்சிடனும்."
அன்றிரவு வெகு நேரம் புவனேஸ்வரியும், சுகந்தியும் அடுத்து என்ன செய்வதெனப் பேசிக் கொண்டிருந்தனர். சமூகத்தில், ஆண் துணையில்லா பெண்களின் பாதுகாப்பு பெரும் பிரச்னைதான். போலீஸுக்குப் போகலாமா என்று யோசனை. என்னவென்று புகார் கொடுப்பது, பெங்களூருக்கு கடத்திப் போனார்கள், பத்து பதினைஞ்சி நா பொண்ணுங்கள கடத்துற கடத்தல்காரங்க கிட்ட மாட்டிக்கிட்டவள் என்று வெளியே தெரிந்தாள் வேண்டாத அவப் பெயர். சும்மா மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தார் போல், ஊர் பலது பேசும்.
'பொம்பளன்னா அடக்க ஒடுக்கமா இருக்க வாணாமா, வேலைக்குப் போவுதாம்', என்று வாய்க்கு வந்து பேசும். இப்பவே ஒரு சொந்தக்காரங்க கூட, என்னாட இருக்காளுவளா செத்தாளுவளான்னு, எட்டிப்பாக்கரதில்ல, இந்தச் செய்தி பரவினா, பேசியே கொன்னுடும் ஜனம்.
யோசிக்க யோசிக்கப் பெரும் பயம் கவ்வியது. ஆகவே போலீஸ் கீலீஸ் என்று பெருசு படுத்த வேண்டாம். தற்சமயம், வேலைக்குப் போகாமல், சில மாதங்களாய் வீட்டோடு இருந்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தனர்.
அந்த முடிவின் படி, இரண்டு தினங்கள் விட்டு, சுகந்தி, சித்தி துணையோடு, செங்கல்பட்டு ஆபீஸிற்குப் போனாள். வேலையை விடுவதாக அறிவித்தாள்.
"என்னாம்மா ரூல்ஸ் தெரியாத பொண்ணா இருக்க, ஒரு மாத நோட்டீஸ் கொடுக்கனும். தக்க காரணம் கொடுக்கனும்" என்றார், அவள் நிலைமை புரியாத மேனேஜர்.
"அதெல்லாம் ஆகாது சார் தயவு பண்ணி விடுங்க", என்று கெஞ்சினாள்.
"சரிம்மா பாக்கி சம்பளம்ளம் எதிர் பாக்காத, என்ன காரணத்துக்கு வேலய விடரன்னு லெட்டர் எழுதிக் கொடும்மா" என்று பெரிய மனது பண்ணினார்
கடிதம் எழுதினாள். சட்டென மனதில் பட்டது, 'பெங்களூர் குடிபெயர்ந்து போகின்றோம் அதனால் வேலையை விடுகின்றேன்' என்று எழுதிக் கொடுத்தாள். காத்திருந்து, சர்டிபிகேட்ஸ் மட்டும் வாங்கிக் கொண்டு வெறும் கையோடு வந்தாள்.
"போன மாச சம்பளத்தையும், இந்தப் பத்து நாட்கள் சம்பளத்தையும், கபளீகரம் செய்துக்கிட்டாங்க, படுபாவிங்க" என்று புவனேஸ்வரிதான் கரித்துக் கொண்டிருந்தாள். வீட்டோடு கூண்டுப் பறவையானாள் சுகந்தி.
ஒரு வாரம் சென்று, ஒரு நாள் மாலை, சித்தியுடன் மார்கெட் போய், வீட்டுச் சாமான்கள் வாங்கிக் கொண்டு திரும்பி வரும் பொழுது, அவர்கள் தெரு முனையில் ஒரு அம்பாஸிடர் கார் நிற்பதை கண்டாள் சுகந்தி. ஒரு டிரைவர், அவன் பக்கத்தில் அந்த ஆள் உட்கார்ந்து அவர்களையே முறைத்துப் பார்ப்பதைக் கண்டு, சித்தியின் கையை பற்றி ரகசியமாய், "திரும்பி பாக்காத சித்தி அந்தக் கார்ல இருக்கரவன்தான் அவன்" என்று கூறி கையைப் பிடித்தபடியே வேகமாய் நடந்தாள். காரைத் தாண்டி திரும்பிப் பார்க்காமல், வீடு வந்து சேர்ந்தனர்.
"என்னா தைரியம்டி பட்டப் பகல்ல, அந்தப் பாவிப்பசங்க, இங்க காஞ்சிரத்துக்கே வீடு தேடி வந்துட்டானுவ" என்று சித்திக்கும் படபடப்பு. முன் கதவு தோட்டக் கதவை இருக சாத்திவிட்டு, வாசற்படி விளக்கை அணைக்காமலே எறியவிட்டு, ஒரே அறையில் படுக்கை போட்டு, படுத்தனர்.
ஒன்பது மணி அளவில், தெருக் கதவை தட்டும் சத்தம். புவனேஸ்வரி எழுந்து கதவைத் திறக்காமல் "யார் அது?" என்று குரல் கொடுத்தாள்.
பதில் இல்லை.
மெல்ல நடந்து சாவித் துவாரம் வழியே பார்த்தாள்.
இரண்டு ஆண் உருவங்கள், முகம் தெரியவில்லை.
மீண்டும் கதவை தட்டும் சத்தம். பயத்தில் ஒடுங்கி, அறையில் போய்ச் சுகந்தி அருகில் உட்கார்ந்தாள்.
தூக்கம் வருமா? விடிய விடிய வெட்டு வெட்டென்று இருவரும் உட்கார்ந்தே தூங்கினர்.
விடிந்தது. கதவு திறந்து புவனேஸ்வரிதான் தெருவை பார்த்தாள். அந்தக் கார் இருக்குமோ என்ற பயத்தோடு. கார் இல்லை, வாசல் தெளித்துக் கோலம் போட நினைத்தாள். வேண்டாம் என்று உள்ளே சென்றாள்.
அன்று பகல் முழுதும் ஒன்றும் வேலை ஓட வில்லை. புவனேஸ்வரி ஒரு மணிக்கு ஒரு முறை கதவை திறந்து தெருவை எட்டிப் பார்த்து வருவாள். மாலை ஆறு மணி வாக்கில் அந்தக் கார் நின்றிருந்ததைக் கண்டு வேகமாய்த் தலையை இழுத்துக் கொண்டு வீட்டினுள் மறைந்தாள்.
"இந்தச் சண்டாளனுவ நம்பள நிம்மதியா இருக்க விடமாட்டானுவ. இருட்டுக்கு காத்திருக்கானுவ போல, வெளில போனா ஆபத்து" என்று இரண்டாம் நாளும் பயத்தில் ஓடியது.
"நாம்ப எங்காவது ஊருக்குப் போய் ஒரு வாரம் தங்கிட்டு வரலாம்" என்று யோசித்தனர்.
முசிறிக்கு அம்மா வீட்டுக்குப் போகலாம். ஆனால் மாடு கன்ன யார் கிட்ட விட்டுப் போவறது என்று பிரச்னை. ஆம்பள தொணைக்கு, வந்து படுக்க யாரையாவுது கேட்கலாமா என்று ஒரு எண்ணம், ஆனால் அது ஆகுமா. ஊரு சும்மா இருக்குமா. ரெண்டு பொட்டச்சிங்க, ராத்திரில ஆம்பளத் தொண தேடுதுங்க என்று ஊர் வம்பு பேசும். எதற்கும் வழி தெரியாமல் குழம்பினர்.
இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அடைந்து கிடந்து, காய்கறியாவது வாங்கி வரலாமே என்று மூன்றாம் நாள், காலை பத்து மணியளவில் இருவரும் கிளம்பினர். வீட்டைப் பூட்டி நடந்தனர்.
அவர்கள் தெரு தாண்டி ஒரு தோப்பு, அதைத் தாண்டியதும், மெயின் ரோடு. தோப்பைத் தாண்டும் பொழுது அதன் சந்தில் மறைவில் இருந்த கார் வேகமாய் ஸ்டார் ஆகி வெளி வந்தது. அதை முதலில் பார்த்த சுகந்தி மெயின் ரோட்டை நோக்கி ஓடினாள், அவள் ஓடுவதைப் பார்த்து, புவனேஸ்வரி, கூக்குரலிட்டாள். "காப்பாத்துங்க காப்பாத்துங்க" என்று கத்திக் கொண்டே அவளும் ஓடினாள்.
கார் சுகந்தியை நெருங்கி விட்டது. புவனேஸ்வரியின் கூக்குரல் கேட்டு, தோப்பில் வேலை செய்திருந்த இரண்டு ஆட்கள் வேலையைப் போட்டு விட்டு, தோப்பின் கரையேறி திபு திபு வென ஓடி வந்தனர். சுகந்தியின் அருகில் கார் நின்று கதவு திறந்து அந்த ஆள் இறங்கினான். அதைக் கண்டு சுகந்தி இன்னும் வேகமாய் ஓடினாள். அதற்குள் வேலையாட்கள் காரை நெருங்கி விட, அந்த ஆள் நிலைமையைப் பார்த்து, வெடுக்கெனக் காரில் ஏறி உட்கார்ததும், கார் பறந்தது.
"யாரும்மா அவனுவ"
"தெரியலயேப்பா, நம்பப் பாப்பாவ தூக்கிப் போவ பாக்கரானுவ பாவிங்க திருட்டுப் பயலுவ, தப்பிச்சிட்டானுவ, கெடச்சிருந்தானுவ, நார் நாராக் கிழிச்சிட்டுருப்பேன்", என்றான் துரத்தி வந்த ஒரு ஆள்.
"ரெண்டு நாளா இந்தக் காரு இந்தப் பக்கமாவே சுத்துனப் பாத்தப்பவே சந்தேகப் பட்டது சரியாப் போச்சி" என்றான் அடுத்தவன்.
மூச்சி இறைக்க சுகந்தி திரும்ப நடந்து வந்தாள்.
"போலீஸுக்குப் போய்ச் சொல்லுங்கம்மா" என்றான் ஒருத்தன்.
"சொல்லலாம்பா, ரொம்ப நன்றி ஒங்களுக்கு" என்று புவனேஸ்வரி சுகந்தியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள். அவர்களின் படப் படப்பு அடங்க சில மணி நேரமானது.
இந்தப் பிரச்னையை விட்டு எப்படி வெளி வருவதெனத் தெரியாமல் பயத்தில் அடங்கிக் கிடந்தனர். சற்று தெளிந்து, புவனேஸ்வரி தான் சொன்னாள்.
"சுகந்தி இனி இங்கிருந்தா ஆபத்து", என்று அவளை ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு முசிறிக்கு அனுப்பி வைக்க யோசனை கூறினாள்.
"நீ தனியா இருப்பியா சித்தி"
"என்ன ஒன்னும் செய்ய மாட்டானுவ, அவனுங்க குறியெல்லாம் ஒன்னத்தான். ஒன் அழகுதான் பெரிய தீம்பா வந்திருக்கு."
அன்றைய பொழுது போனது. இன்னும் இரண்டு நாட்கள் வெளியே தலை காட்டாமல் இருந்தனர். மூன்றாம் நாள் காலை ஏழு மணியளவில், பால்காரரை வரச்சொல்லி இருந்தாள், அவர் துணையுடன் புவனேஸ்வரியும் சுகந்தியும் கிளம்பினர். பேருந்து நிலையம் வந்து, திருச்சி பேருந்தில் சுகந்தியை ஏற்றி விட்டுத் திரும்பினாள்.
சுகந்தி, முசிறியில் பாட்டி வீட்டில், தங்கியிருந்தாள். சின்ன ஊரு, ஊரெல்லாம் அழகாத்தான் இருக்கு, முதல் பிரச்னை, குளியல். வீட்டுத் தோட்டத்தில் கதவில்லா குளியலறை, கல் அடுக்கிய தரையில் குளிக்கப் பிடிக்கவில்லை. தரையில் பாயில் படுக்கை வசதி போதாது. சாப்பாடும் அவளுக்கு பிடித்ததாய் இல்லை. அவர்கள் சைவக்காரர்கள்.
அடுத்து, பொழுதை எப்படி கழிப்பது. பாட்டி, திருச்சியில் கோயில்களுக்கெல்லாம் கூட்டிப் போனாள். இருந்தும், மீதிப் பொழுதை கழிப்பதென்பது அவ்வளவு சுலமாய் இல்லை. நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.
பதினைந்து நாட்கள் ஆனதும், காலை பேருந்து ஏறி மாலை காஞ்சிபுரம் திரும்பி விட்டாள். பேருந்ததை விட்டு இறங்கி வீடு வரும் வரை பதட்டம்தான். இப்படி பயந்து பயந்து இந்த காஞ்சிபுரத்தில் எவ்வளவு நாட்கள் வாழ முடியும் என்று வெறுத்தது.
சுகந்தி தான் அந்த யோசனையை முதலில் சொன்னாள். "சித்தி நாம்ப பெங்களூர் போயிட்டா என்னா" என்று.
"என்ன சொல்ற, அந்த அயலூர்ல போயி எங்க தங்கர்து, சொந்தமா பந்தமா"
"இல்ல சித்தி, அந்த அக்கா மரகதம் இருக்காங்கலே. அவங்க தங்க எடம் கொடுப்பாங்க."
"என்னா சொல்ற சுகந்தி. அந்த பொண்ணு ஒரு வேலக்காரி, வீட்டு எஜமானியா இன்னா எடம் குடுக்க"
"இல்ல சித்தி, அந்த ஊட்டுக்கார அம்மா ரொம்ப நல்ல மனசுன்னு அக்கா அடிக்கடி சொல்லும். கொஞ்ச நாள்தான், எனக்கு வேல கெடச்சா மாத்திக்கலாம்."
"எனக்கென்னாவோ அங்க தங்கரது சரின்னு தோணல. ஒரு நாள் தங்கி ஒடனே வேற எடத்துக்கு போயிடனும். ஆனா, ஒனக்கு வேலை கிடைக்குமா"
"தேடலாம் சித்தி, பெங்களூர்ல, நெறைய சாப்ட்வேர் கம்பெனிங்க இருக்குன்னு தெரியும். நிச்சயம் கெடைக்கும்"
"இங்க வீடு, மாடு, கன்னு எல்லாம் என்னா பண்றது."
"ஒரு ரெண்டு மாசத்துக்கு, பால்காரர பாத்துக்கச் சொல்லுவோம். அங்க பெங்களூர்ல செட்டானப்பரம், வந்து மாட்ட வித்துடலாம். வீட்ட அப்ரம் பாத்துக்கலாம்" என்று பேசப் பேச சுகந்திக்கே அந்த யோசனையில் பெரும் நம்பிக்கை வளர்ந்தது.
'பாக்கலாம், நல்லா யோசனை பண்ணனும், இந்த பாவிங்க தொல்லை போனா போதும்ன்னு இருக்கு. இருந்தாலும் அங்க போனப்பறம் இக்கட்டுல மாட்டிக்கக் கூடாது. இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம்' என்று புவனேஸ்வரி முடித்தாள்.
மறுநாள், புவனேஸ்வரிக்கு திடீரென ஒரு யோசனை, 'முசிறிக்கே இருவரும் போய் விட்டாள். தன் வாழ்நாள் ஆசை நிறைவேறி விடுமே. ஒத்துப்பாளா சுகந்தி, சொல்லிப் பார்ப்போமே' என்று சொன்னாள்.
"முசிறியா.." என்று இழுத்தாள், சுகந்தி, பதினைந்து நாட்களுக்கே அவளாள் அங்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவள் குறியெல்லாம் பெங்களூர்தான். சத்யாவை சந்திக்க அதுதான் வழி.
"அங்க எந்த வேலை கிடைக்கும் சித்தி" என்றாள்,
"ஏன் திருச்சில இல்லாத வேலையா"
"சாப்ட்வேர் படிப்புக்கு அஙெல்லாம் சரியா வேல கிடைக்காது சித்தி, பெங்களூர்லதான் நெறைய சாப்ட்வேர் கம்பெனிங்க இருக்கு" என்று சித்தியை திசை திருப்பி விட்டாள்.
அடுத்த சில தினங்களில் பேசி அலசி, திட்டம் இன்னும் உறுதியானது. புவனேஸ்வரி மட்டும் டவுனுக்குப் போய் பேங்கில் இருந்த மொத்த சேமிப்பு பணத்தையும் எடுத்தாள். பால் பாக்கி எல்லாம் வசூல் செய்து எடுத்துக் கொண்டனர். பெரிய தொகை ஒன்றுமில்லை. இருவருக்கும் ஒரு மாதம் சாப்பாட்டுக்குப் போதும், வீடு வாடகை, அட்வான்ஸ், பெரிய நகரத்தில அதிகமா கேப்பாங்களாமே. புவனேஸ்வரிக்கு கலக்கம்தான். மாடுகளை பால்காரர் பராமரிப்பில் இருக்க ஓட்டியனுப்பிய பொழுது மனதை பிசைந்தது.
மாடும் கன்னுமா வாழர எடத்தவிட்டு ஓடுரோமோ. என்ன கெட்ட காலமோ. தானும் சுகந்தியும் பட்ட துயரங்கள் போதாதா, இன்னும் வேணுமா என்று மனம் கசந்தது.
சாமான்களை எல்லாம் ஒழித்து ஒரு அறையில் போட்டு பூட்டப்பட்டது. இரண்டு பெட்டிகளில் அவர்கள் துணி மணி முக்கிய பொருட்கள் அடங்கி விட்டன. பயணத்துக்குத் தயார்.
முன்பு மரகதம் செய்தது போல், வழிக்கு தயிர் சாதமும், ஊறுகாயும் தயார். அக்கம் பக்கம், சொந்தம் என்று யாரும் இல்லை சொல்லிக் கொள்வதற்கு, எல்லாம் எப்பொழுதோ அறுந்து போயின. வீட்டு பூஜை நடுக்கூடத்தில் இருவரும் விழுந்து எழுந்து, முன்னோர்களை வேண்டி, 'அம்பா ஈஸ்வரி நல்ல வழிகாட்டு தாயே' என்று அந்த திருவானைக்கா அம்மனை வேண்டி பிராத்தனை செய்து கிளம்பினர்.
விடியகாலை பேருந்து ஏறி காட்பாடி வந்து ரயில் பிடித்து, பெங்களூர் வந்தடைந்தனர். மொழி அறியா ஊர், பெரிய நகரம், இருவருக்கும் மிரட்சி. சுகந்தி, பத்திரப் படுத்தி வைத்திருந்த முகவரியை எடுத்து, சொல்லி, ஆட்டோ கேட்டனர். ரயில் கட்டணத்தைவிட அதிகம் அவன் கேட்ட தொகை மிரட்டியது. சுகந்திதான், ஆங்கிலத்தில் அங்கும் இங்கும் விசாரித்தாள். படிச்ச பொண்ணு இல்ல, என்று சகந்தியின் ஆங்கில பேச்சை முதன் முதலில் கேட்ட புவனேஸ்வரிக்குப் பெருமிதம்.
அந்த பனஷங்கரி பகுதிக்கு நகர பேருந்து தேடி அலைந்து, ஏறினர். இறங்கி நடந்து, வழி விசாரித்து, குடியிருப்பை தேடி அடையும் பொழுது மணி நான்கு. செக்யூரிட்டியிடம் விவரம் கேட்டனர். கன்னடக்காரன், அவர்கள் சொல்வது புரியாவிட்டாலும், நுழைய தடை செய்யவில்லை. லிப்ட்ல் பத்தாவது மாடி ஜி1003 கதவு, அழைப்பு மணி அடித்து காத்திருந்தனர்.
யாரும் வரவில்லை.
சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் மரகதம் வருவாளா, அழையா விருந்தாடிகளை வரவேற்க.
"அந்த பொண்ணு தூங்குதோ என்னவோ", பத்து பத்து நிமிடம் விட்டு விட்டு மணி அடித்துப் பார்த்தும் கதவு திறக்கவில்லை.
"எங்காவது வெளில போயிருக்கும்" என்று வராந்தாவிலேயே பெட்டியை வைத்து விட்டு உட்கார்ந்து காத்திருந்தனர்.
'இப்டி திடு திப்புன்னு வந்துட்டோமோ. பெங்களூர் போவனும்னு அவசரப்படுத்தி, இந்த சின்னப் பொண்ணு, கூட்டி வந்திட்டா. நம்பதான் நெதானமா யோசன பண்ணி இருக்கனும். ஒரு லெட்டர் கிட்டர் போட்டுப் பாத்துட்டு வந்திருக்கனும்', என்று தன்னையே கடிந்து கொண்டாள் புவனேஸ்வரி.
'ஊம்....., அதுக்கெல்லாம் நேரம் எங்க இருந்தது, அந்த நாசமாய் போனவனுவ எங்க விட்டானுவ, நம்பள கதி கலங்க வச்சி ஊறை விட்டே ஓட்டிட்டானுவ, அப்டி ஒரு நெருக்கடி கொடுத்தானுவ அந்தப் பாவிங்க.'
"ஆமா... சுகந்தி, அந்த மரகதம் கூட ஒரு புள்ள வந்துதே, அது இருக்கர அட்ரஸ் தெரியுமா"
"அவரு இருக்கரது, தோ எதிர் அப்பார்ட்மென்ட் தான் சித்தி, ஆனா அவரு வர்ரதுக்கு ஏழும் ஆவும் எட்டும் ஆவும்."
அந்த தளத்தில் மூன்றாவதாக ஒரு குடியிருப்பும் இருந்தது. அங்கு விசாரிக்கலாம் என்று சென்று மணி அடித்தாள். ஆள் அரவமே இல்லை. யாரும் குடியில்லை போலுள்ளது என்று திரும்பினாள்.
"ஆவணி மாசம் சாயரட்சையே இந்த ஊர்ல இப்டி ஒரு குளிரு" என்று புவனேஸ்வரி, சேலை தலைப்பை இழுத்துப் போர்த்தினாள்.
இருட்டும் வேளை ஆகி விட்டது, மரகதம் வருவதாக இல்லை. எடுத்து வந்த பாட்டில் தண்ணீரும் தீர்ந்து விட்டது, தாகம் பசி என்ன செய்வதெனப் புரியவில்லை.
"சித்தி, நா கீழ போயி யாரயாவது விசாரிச்சுட்டு வரன், பக்கத்தில ஓட்டல் இருந்தா எதனா சாப்பிட வாங்கியாரேன், நீங்க பெட்டிய பாத்துகினு இங்கேயே இருங்க" என்றாள்
"வேணான்டி, புது ஊருல நீ எப்டி தனியாப் போவ, எனக்கும் இங்க தனியா வெட்டு வெட்டுன்னு இந்த இருட்டுல இருக்க பயமாயிருக்கு, நானும் வரேனே" என்றாள்.
"இல்ல இல்ல சித்தி, கனமான ரெண்டு பெட்டிய தூக்கிட்டு எதுக்கு அலையனும், எனக்கு ஒன்னும் பயமில்ல சித்தி, நா சீக்ரம் போயிட்டு வந்துட்ரேன்" என்று கை பை எடுத்து கிளம்பினாள்.
கால் மணி கூட ஆகியிருக்காது, புவனேஸ்வரிக்கு பயம் தொத்திக் கொண்டது. இருட்டு, அவளது தனிமை, சின்னப் பொண்ணு வேற புது எடத்தில தனியாப் போயிருக்கா. மடக்கிய கால்கள் மேல் தலை வைத்து, தெரிந்த அம்பாள் பாடலை முனு முனுத்து, வேண்ட ஆரம்பித்து விட்டாள் புவனேஸ்வரி.
தொடரும்…


சத்யா வெளிநாட்டில்! மரகதம் சென்னையில்! அறியாமல் பெங்களூரு வந்துவிட்டாள் சுகந்தி, சித்தி புவனாவுடன்! அதே பெங்களூரு வில் தான் கொண்டுவந்து அடைக்கப் பட்டு, தச்செயலாக சத்யா வால் காப்பாற்றப் பட்டாள்! ஆனாலும், ஆபத்து அறியாமல், இருவரையும் பார்க்கும் ஆவலில் வந்து விட்டாள்!
ReplyDeleteபாவம்...
Delete