மறுவாழ்வு 43
முழு தொடர் படிக்க
கடத்தல்காரர்களின் தொல்லை தாளாமல் தவித்த புவனேஸ்வரியும், சுகந்தியும் காஞ்சிபுரத்திலிருந்து பெங்களூர் வந்துள்ளனர். மரகதம், அப்பார்ட்மென்ட்டில் இல்லை. பசி தாகத்தோடு இருட்டில் உட்கார்ந்து காத்திருக்கின்றனர். விசாரித்து வருகின்றேன் என்று சுகந்தி கிளம்பினாள்.
சுகந்தி, லிஃப்டில் இறங்கி செக்யூரிட்டியை தேடினாள். கண்டு பிடித்து, "மரகதம் மரகதம்னு ஜி1003 இல் இருந்தாங்களே" என்று விசாரித்தாள்.
"ஓ வாங்க வாங்க, எப்ப வந்தீங்க? சுகந்தியும் வந்திருக்கா..." என்று வீட்டுக் கதவை திறந்து விட்டான். "வாங்க உள்ர வாங்க" என்று இரு பெட்டியை எடுத்து உள்ளே அழைத்துப் போய் கதவை சாத்தினான்.
கடத்தல்காரர்களின் தொல்லை தாளாமல் தவித்த புவனேஸ்வரியும், சுகந்தியும் காஞ்சிபுரத்திலிருந்து பெங்களூர் வந்துள்ளனர். மரகதம், அப்பார்ட்மென்ட்டில் இல்லை. பசி தாகத்தோடு இருட்டில் உட்கார்ந்து காத்திருக்கின்றனர். விசாரித்து வருகின்றேன் என்று சுகந்தி கிளம்பினாள்.
சுகந்தி, லிஃப்டில் இறங்கி செக்யூரிட்டியை தேடினாள். கண்டு பிடித்து, "மரகதம் மரகதம்னு ஜி1003 இல் இருந்தாங்களே" என்று விசாரித்தாள்.
"தமிலு கொத்தில்லா, நானு ஹொசபுரு"
(தமிழ் தெரியாது, நான் புதுசா வந்திருக்கேன்) என்றான்.
(தமிழ் தெரியாது, நான் புதுசா வந்திருக்கேன்) என்றான்.
அவளுக்குப் புரியாமல், மீண்டும், கேட்டாள் அதே பதில்தான்.
"சரி சத்யானு ஒருத்தர் 1002ல இருந்தாரே அவர பத்தி தெரியுமா?" என்றாள்
'இல்லை' என்று கையை ஆட்டினான்.
"சரி, பக்கத்துல ஹோட்டல் ஏதாவது இருக்கா?" என்றாள்
"சொல்ப தூர......தள்ளி இதே"
(கொஞ்சம் தூரத்தில இருக்கு) என்று கையை தூக்கி காட்டினான்.
(கொஞ்சம் தூரத்தில இருக்கு) என்று கையை தூக்கி காட்டினான்.
நடந்தாள். எல்லாம் குடியிருப்புப் பகுதி, மெயின் ரோட்டுக்கு வழி தேடி நடந்தாள். சற்று தூரம் நடந்து போனபின், பயமானது. ஆள் நடமாட்டமே இல்லா இருட்டு பகுதிகளை கடக்க வேண்டும், இப்பொழுதெல்லாம் இருட்டைக் கண்டாலே நடுக்கம். வழியும் தவறி விடுவோமோ என்று குழப்பம். கடை கன்னி ஒன்றும் தென்படவில்லை. இனியும் தொடர்வது நல்லதில்லை யென முடிவு செய்து திரும்பி நடந்தாள்.
லிப்ட் ஏறி பத்தாம் மாடிக்கு வந்த பொழுது, சித்தியைக் காணவில்லை. பகீரென்றது. தவறான மாடிக்கு வந்து விட்டோமோ என்று பார்த்தாள். இல்லை, இருட்டில் உற்று நோக்கினாள். ஜி 1003 தான்.
"ஓ மரகதம் வந்துடுச்சோ" என்று மணி அடித்தாள். பதில் இல்லை. குழப்பம் பயம்.
"ச்சீ இப்டி இருக்குமோ, சத்யா வந்துட்டாரா" என்று எதிர் கதவு மணியை அடிக்கப் போனாள், சட்டென அந்த கதவு திறந்தது, சத்யா வெளி வந்தான்.
சற்று நேரம் முன்பு...
ஒரு ஏழுமணியளவில், ஆபீஸிலிருந்து திரும்பிய சத்யா லிஃப்ட் ஏறி, வெளி வந்தான்.
"தம்பீ.." என்று பெண் குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினான். இருட்டில் யார் என்று தெரியவில்லை.
"நாந்தான் தம்பி புவனேஸ்வரி, காஞ்சிபுரம்" என்றாள்.
"ஓ வாங்க வாங்க, எப்ப வந்தீங்க? சுகந்தியும் வந்திருக்கா..." என்று வீட்டுக் கதவை திறந்து விட்டான். "வாங்க உள்ர வாங்க" என்று இரு பெட்டியை எடுத்து உள்ளே அழைத்துப் போய் கதவை சாத்தினான்.
"இங்க இப்டி தனியா வந்துருக்கீங்க, சுகந்தி வல்லயா?" என்றான்.
"வந்திருக்காப்பா, விசாரிக்க கீழப் போயிருக்கு" என்றாள்.
"இல்லியே நா யாரயும் பாக்கலயே" என்றான்.
"இல்லப்பா செத்த முந்தி போச்சே" என்றாள்
"நா போயி பாத்துட்டு வரன்" என்று கதவை திறந்ததும் சுகந்தியைக் கண்டான்.
"வா.. வா.." என்று அவளையும் அழைத்து உள்ளே விட்டு கதவை சாத்தினான்.
"எப்ப வந்தீங்க, ரொம்ப நாழியா காத்திருக்கீங்களா, சாப்டீங்களா?" என்று விசாரித்தான்.
"தம்பி, நாங்க வந்தப்ப மூனு நாலு மணி இருக்கும். மொதல்ல குடிக்க தண்ணி வேணும்."
இரண்டு பாட்டில் தண்ணீர் எடுத்து திறந்து டம்ளரில் ஊற்றி இருவருக்கும் கொடுத்தான்.
"ஒக்காருங்க" என்றான்.
சின்ன சாப்பாட்டு மேசை, இரண்டு மடக்கும் சேர் மட்டும் இருந்தது.புவனேஸ்வரி தரையில் உட்கார, அவனும் சுகந்தியும் சேரில் உட்கார்ந்தனர்.
"சொல்லுங்க என்ன இப்டி திடீர்னு கெளம்பி வந்திருக்கீங்க"
"ஆமா தம்பி, அங்க காஞ்சிபுரத்தில இருக்கமுடியல", என்று ஆரம்பித்து, நடந்த கதையை கூறினாள் புவனேஸ்வரி.
"பெரிய கேங் போல அவனுவ. ரொம்ப தைரியம்தான், ஊருக்குள்ளவே அதுவும் பகல்ல கடத்த ட்ரை பண்ணி இருக்கானுங்க. ரொம்ப டேன்ஜரஸ் பேர்வழிங்க. நீங்க அப்டி கௌம்பி வந்தது நல்லது தான்."
"ஆமா தம்பி, இந்த ஒரு மாசமா நாங்க பயந்து நடுங்கி கெடந்தோம். அதான் திடீர்னு கௌம்பிட்டோம். இங்க மரகதம் இருக்கும், பகல் வேலைல வந்து சேந்தா அங்க தங்கிடலாம்ற தைரியத்தில வந்துட்டோம். ஆனா அந்த பொண்ணு இல்ல போல வெளில போயிருக்கோ தெரியல."
"மரகதம் இல்லியே இப்ப, அது டெல்லிக்குப் போயிடுச்சே"
"ஓ அப்டியா.... போச்சி, அது இங்க இல்லியா தம்பி........ அப்ப இன்னா பண்ரது... அப்போ ஒனக்குத்தான் தம்பி தொந்தரவு குடுக்கப் போறாம். எங்களுக்கு வேற யாரயும் தெரியாது. வேற எங்கயும் போவ முடியாது. நீதான் தயவு பண்ணனும் தம்பி" என்றாள்.
புவனேஸ்வரியை தொடர்ந்து, சுகந்தி சொன்னாள், "ஆமாம் நீங்கதான் இப்ப எங்களுக்கு உதவி பண்ணனும்"
"அதுக்கென்னமா தாராளமா இங்க தங்கிக்கலாம். கவலப்படாதீங்க பாத்துக்கலாம்" என்றான்.
"ரொம்ப நன்றிப்பா, எங்களுக்கு வேற வழியில்ல"
சுகந்தி தொடர்ந்தாள். "அது மட்டுமில்ல, நாங்க ஒடனே வாடகை வீட்டுக்கும் போக முடியாது. எங்ககிட்ட பணமும் நெறைய இல்ல, வீட்டு வாடகை, அட்வான்ஸ் எல்லாம் கொடுக்க முடியாது, எனக்கு ஒரு வேலை கெடக்கரவரைக்கும், இங்க தங்கரதுக்கு, நீங்கதான் எடம் கொடுத்து ஒதவி பண்ணனும்" என்று கூறி தலை குனிந்து விட்டாள். அவர்களின் நிராதரவான நிலையை எண்ணி அவளுக்கு சோகம் பற்றிக் கொண்டது.
"அதெல்லாம் ஒங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். ரெண்டாவது அறை இருக்கே, அட்டாச்டு பாத்தோட சௌகரியமா இருக்கும். எவ்ளோ நாள் வேணுமோ, நீங்க தாராளமா தங்கிக்கலாம்"
"பெரிய மனசோட சொல்ற தம்பி நீ. ஆனா அதில இருக்கர கஷ்டம் எனக்கு புரியுதுப்பா. நீ கல்யாணத்துக்கு காத்திருக்கர புள்ள. இப்டி நாங்க ரெண்டு பொம்பளங்க வந்து ஒன்னோட தங்கரதே பெரிய தப்பு. இதுவே நம்ப ஊருன்னா, ஊரே பேசும். இங்க எப்டியோ"
"இங்க அந்த ப்ரச்சனயெல்லாம் இல்ல. அவங்க அவங்க வேலையைப் பாத்துட்டு போயிடுவாங்க. இந்த ப்ளோர்ல, மரகதம் இருந்த வீட்டுக்கு இன்னும் யாரும் குடி வல்ல, மூனாவதா இருக்கரவங்க கன்னடக்காரங்க, பேச்சு வார்த்தை இல்லை. நீங்க ஒரு கூச்சமும் படாம ஒங்க வீடு போல இருக்கலாம்."
"இருந்தாலும், இது ஒங்க ஊருக்கும், அப்பா அம்மாவுக்கும் தெரியாம இருக்கர்துதான் நல்லது. அப்பா அம்மா தம்பி தங்கைங்க இங்க ஏதும் வருவாங்களா"
"இல்லீங்க, எனக்கு தம்பி தங்கைகள்லா இல்ல, ஒரு அண்ணன் மட்டும்தான்"
"அப்பா அம்மா வருவாங்களா?"
"சாதாரணமா வரமாட்டாங்க. அப்டியே வந்தாலும், போன் பண்ணிட்டுத்தான் வருவாங்க அப்ப பாத்துக்கலாம், கவலப் படாதீங்க"
"நல்லது தம்பி. நல்ல வேல நீ இங்க இருக்கர இல்லன்னா எங்க நெலம மோசமாப் போயிருக்கும்"
"ஆமா, ஒரு அதிசயம் பாருங்க, நான் வெளிநாடு போயி ரெண்டு மாசம் இருந்துட்டு, அடுத்த வாரந்தான் திரும்ப திட்டம். ஏதோ வேலை சீக்ரம் முடிஞ்சிருச்சி, போன வாரமே வந்துட்டேன். இல்லன்னா, கஷ்டமாயிட்ருக்கும்."
"அப்டியாப்பா......, அந்த அம்பாள்தான், ஒன்ன சீக்ரம் கொண்டு வந்து சேர்ந்திருக்கனும், எங்களுக்கு ஒதவ"
"சரி, பசியா இருப்பீங்க, வாங்க போயி ஓட்டல்ல சாப்பிட்டுட்டு வந்துரலாம்" என்றான்.
"ஏந் தம்பி, இங்க ஒன்னும் சமைக்க முடியாதா, ஓட்டலுக்குப் போனா செலவுதானே" என்றாள் புவனேஸ்வரி.
"இல்ல, அப்டி ஒன்னும் வசதி இருக்காது"
"என்னா இருக்குன்னு நா பாக்கட்டுமா" என்று சுகந்தி சட்டென எழுந்து, சமையலறைக்குச் சென்றாள்.
"பாத்திரங்கள், இன்டக்ஷன் ஹீட்டர் இருக்கு"
புவனேஸ்வரியும் சென்று, பார்த்தாள். மரகதம் சமைத்த பொழுது இருந்த சில மீதி மளிகை பொருட்கள், பத்திரமாய் பேக் செய்து ஷெஃப்ல் அழகாய் அடிக்கி வைத்திருந்தன.
"அரிசி பருப்பு மிளகாய் தூள் எல்லாம் இருக்கு, ஒரு வேள சமையலுக்குப் போதும், கொஞ்சம் காய்கறிங்க இருந்தா சாப்பாடே செய்துடலாம்" என்றனர்.
ருசியான வீட்டு சாப்பாடு கிடைக்குமே என்ற ஆர்வத்தில், "காய் கறி வாங்கி வந்துடவா?" என்றான் சத்யா
"ஆமாம் தம்பி ஓட்டலுக்குப் போனா வீண் செலவுதானே தோ அரமணில சமைச்சிடலாம்" என்றாள்.
அவன் கிளம்பினான்.
"நானும் வரவா?" என்று சுகந்தியும் ஒரு பை எடுத்து சேர்ந்தாள்,
"அப்படியே நாளக்கி டிபனுக்கு தேவையானது கொஞ்சம் வாங்கி வந்திட்டா நல்லாயிருக்கும்" என்றாள் புவனேஸ்வரி.
"ஓ செய்யலாமே"
புவனேஸ்வரி ஒரு பட்டியல் போட்டு கொடுத்தனுப்பினாள்.
சத்யாவும் சுகந்தியும் சேர்ந்து லிஃப்ட்டில் இறங்கினர். சுகந்தியை பைக்கில் உட்கார வைத்துப் போனான். சூப்பர் மார்கெட் அருகில்தான். தேவையானதை வாங்கினர்.
"என்னால, ஒங்களுக்கு அநாவசியமா தொந்தரவு வந்துடிச்சி"
"இல்ல சுகந்தி, அப்டி நெனக்காத. நா உங்கள தொந்தரவாவே நெனக்கல, தனியா இருக்கர எனக்கு, நெருங்கின சொந்தக்காரங்க விருந்தாளியா வந்திட்ட மாரிதான் நெனைக்குரேன். நீ மனச அலட்டிக்காம, ஃபிரீயா இங்க தங்கலாம்."
புவனேஸ்வரியின் கைப் பக்குவத்தில் அந்த ஒரு சாதாரண கத்தரி சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு வறுவல் சாப்பாடும் மணத்தது. இந்த சமையல் ருசி மரகதத்திற்கு வரவில்லையே என்று சட்டென சொல்லியது சத்யாவின் நாக்கு.
சாப்பிட்டு முன் அறையில் வந்து உட்கார்ந்தனர்.
"அப்ரம் தம்பி, சுகந்திக்கு உடனே, ஒரு வேலை தேடனும், அதுக்கும் நீங்கதான் உதவி பண்ணனும்."
"என்னா படிச்சிருக்கே?"
"பிஸி ஏ முடிச்சிருக்கேன்"
"ஓ அப்டியா, பரவாயில்லயே. எந்த காலேஜ்"
"தாம்பரம் கிரிஸ்டியன் காலேஜ்ல"
"அப்ப நல்லா இங்கிலீஷ் பேச வரும் இல்லியா"
"ஏதோ வரும்", என்று சிரித்தாள்.
"இல்லப்பா, நா இன்னிக்குத்தான் மொதோ தடவ அவ இங்லீஷ் பேசி, கேட்டேன். வழி கேட்டு விசாரிச்சா பாரு, நல்லா தெளிவான உச்சரிப்போட நல்லா பேசுறா" என்று புவனேஸ்வரிக்கு பெருமை பிடிபடவில்லை. சுகந்தி நெளிந்து உட்கார்ந்தாள்.
"எங்க வேலை பாத்தே?"
"செங்கல்பட்டுல ஒரு சாப்ட்வேர் கம்பெனில, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டரா ஒரு வருஷம் ஒர்க் பண்ணியிருக்கேன்"
"ஓ நல்லதா போச்சி, எங்க கம்பெனில கூட ஏதாவது வேக்கன்ஸி இருக்குமான்னு கேட்கலாமே" என்று கூறியதும், சுகந்திக்கு ஏக சந்தோஷம்.
"எம் ஸியே படிக்க தொடரலயா?"
"இல்ல",
"ஓ பரவாயில்ல, இப்ப கூட பார்ட் டைம் பண்ணலாமே, எம் ஸியே பண்ணிட்டா, நிச்சயம் நல்ல வேலை கெடைக்குமே"
"பாக்கலாம், எல்லாம் ஒங்க ஒதவி இருந்தா பண்ணலாம்"
"அதுக்கென்ன எனக்கு ஒன்னும் கஷ்டமில்லயே"
இருந்த விரிப்புக்களில் தனக்கு இரண்டை வைத்துக்கொண்டு, மீதியை கொடுத்தான். இரண்டாவது அறையில், சுடு தண்ணீர் போடும் வசதியை காட்டிக் கொடுத்து விட்டு வந்தான்.
அறையில் இருந்த கடா முடா ஜாமான்களை ஒதுக்கி வைத்தனர். பெங்களூரில் அந்த ஆகஸ்டு மாதம் பருவ மழை காலம். தரை சில்லென்று இருந்தது. விரிப்பைப் போட்டு, அதனுடன் தன் வீட்டு புடவைகளையும் மடித்துப் போட்டு புவனேஸ்வரிமும் சுகந்தியும் படுத்தனர். கையே தலைக்காணி. படுத்தவுடன் தூங்கிப் போனாள் சித்தி.
சுகந்தியின் கண்கள் மட்டும்தான் மூடியிருந்தன. மனம் திறந்து கொண்டு ஏதேதோ கற்பனையில் சிறகடித்துப் பறந்தது.
முசிறியில் தங்கியிருந்த பொழுதே இந்த எண்ணம் மனதில் உதித்ததுதான். 'பெங்களூர் போய், மரகதத்துடன் சில காலம் தங்கினால், அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்'
அந்த எதிர்பார்ப்பில் வந்தவளுக்கு அதிஷ்டம்தான். மரகதம் விலகி, அவருடனே அவர் வீட்டிலேயே தங்க, எதிர்பாரா வாய்ப்பு கிடைத்ததில், பெரும் சந்தோஷம்.
'ஆனா, இதென்னடி ஆகாயத்தில கோட்டை கட்டுற நீ, இந்த ஆசையெல்லாம் ஒனக்கெதுக்கு, நீ யாரு தெரியுமில்ல' என்று அவள் மனம் எச்சரித்தது
'ஆகுதோ இல்லையோ, எனக்குள்ள ஆசய வச்சிக்க யாரு தடுக்க முடியுமெ'ன்று தனக்கே சமாதானம் கூறி புரண்டு படுத்தாள்.
தன் அறையில் படுத்த சத்யாவுக்கும், சுகந்தியின் நிலைதான். தூக்கம் சீக்கிரம் வரவில்லை.
'டே மாப்ள ஒனக்கு பொண்ணுங்க யோகம் தூக்கி அடிக்குதுடா'
'ஆமா.... அந்த மரகதம் போன, இந்த சுகந்தி வந்துட்டா. சிக்குனு டாப் க்ளாஸ், நல்லா மூக்கும் முழியுமா மரகதத்த விட அழகா, வயசிலயும் சின்னவளா. நல்ல ஜோடிதான்.'
'ஏய் ஏய் நிருத்துலே என்னமோ, அவ வந்து கால்ல உளுந்து கட்டிக்கன்னு ஒத்தக் கால்ல நிக்காப்பல நீயே குதிரை ஓட்ற'
'அது நம்பள பாக்கர பார்வையே சொல்லுதே.'
'இம் போகப் போக பாப்போம்' என்று கண்ணை மூடினான்.
மறுநாள் காலை சத்யா, எழுந்து குளித்து முடித்து, அறையை விட்டு வெளி வந்தவனுக்கு, சுடச்சுட கிச்சடி வெங்காய சட்னி காப்பி காத்திருந்தது. வெற்று வயிறோடு ஓடுபவனுக்கு அது விருந்து. ஆபீஸ் கிளம்பும் முன், குடியிருப்பில் என்னென்ன செய்யவேண்டும் எவை செய்யக்கூடாது என்று விளக்கி விட்டு, முன் கதவை பூட்டும் முறையை சொல்லி, ஒரு சாவியும் கொடுத்துவிட்டுப் போனான்.
புவனேஸ்வரிக்கும், சுகந்திக்கும் பெரும் நிம்மதி. முன் தினம், மரகதத்தை தேடி வந்து, கிடைக்காமல், திரும்ப ஊருக்கே போக வேண்டுமா, காஞ்சியில் அந்த படுபாவிகள் தொல்லையை மீண்டும் சந்திக்க வேண்டுமா என்ற பெரிய சிக்கல் நீங்கி, கிடைத்த சத்யாவின் உதவி, அந்த அம்பாள் அனுப்பிய உதவியாக தென்பட்டது.
மாலை சத்யா சீக்கிரமாகவே திரும்பி வந்தான், சுகந்தியை அழைத்துக்கொண்டு சூப்பர் மார்கெட் சென்று, வாரத்திற்கான மளிகை சாமான்கள், காய் கறி, அவர்களுக்கு படுக்க, மெலிதான பஞ்சு மெத்தை, பெட்ஷீட்கள், கம்பளிப் போர்வைகள், இருவருக்கும் ஸ்வட்டர்கள், ஃபோம் தலைகாணிகள், இதர சாமான்கள் என்று வாங்கினான். அவளுடன் ஷாப்பிங் பண்ணுவதே ஒரு குஷியாய் ஆனது. வாங்கியவற்றை ஒரு ஆட்டோவில் வைத்து சுகந்தியை ஏற்றி அவன் கூடவே வந்தான்.
'டே மாப்ள......யோசிச்சி யோசிச்சி செலவு பண்ணுவ, இப்ப கை தாராளமா நீளுது, வாங்கன சம்பௌமெல்லாம் அவுட் போல........' என்று உள்ளுக்குள் நக்கல் குரல்
ஒரு வாரம் சென்று, புவனேஸ்வரி காய்கறி வாங்கி குடியிருப்புக்குள் நுழையும் பொழுது, "யாரப் பாக்கனம்மா?" என்று செக்யூரிட்டி கேட்டான்.
"போன வாரம் வந்தோமே நாங்க, இங்க எங்க தம்பி ஊடுதாம்பா, பத்தாவது மாடில, சத்யான்னு"
"அப்டியாம்மா, நா பாக்கல, நா நைட் டூட்டில இருந்தேன்..... போங்க போங்க"
"தமிழ் பேசறியே நீ எந்தூருப்பா"
"மதுரை பக்கம்மா"
"பேரு?"
"வனத்தையன்...ம்மா"
ஒரு வாரமாய், சத்யாவுக்கு நல்ல சுவையான வீட்டு சாப்பாடு. பேச்சிலர் அப்பார்மென்ட், அடையாளம் தெரியாமல் மாறிப்போனது. வீட்டின் எல்லா பகுதியும் பளிச், அந்தந்த பொருட்கள் நல்ல பிள்ளைகளைப் போல அடக்கமாய் அதனதன் இடத்தில், உட்கார்ந்து கொண்டன, பொம்பளைங்க வீட்டில இருந்தாலே வீடு பள பளதான்.
மாலையில் பேச்சித்துணைக்கு, சுகந்தி. நல்ல புத்திசாலியான பேச்சி, விவரம் தெரிந்த பொண்ணுதான். டெக்லாலஜி பற்றியும் பேசலாம். சித்தியும் நடுவில் அவ்வப்போது பொது விஷயங்களில் கலந்து கொள்வாள். மரகத்திற்கு இவ்வளவு பொது அறிவும் புத்திசாலித்தனமும் இருக்காது, சாதாரண கிராமத்துப் பெண், படிப்பு எந்தளவு பெண்களை முன்னேற்றம் அடைய வைக்கின்றது என்று சத்யா ஆச்சரியப்பட்டான்.
இன்டர்நெட் மூலம், சிரத்தையாய் சுகந்திக்கு வேலை தேடினான். பத்து நாட்களில், ஒரு க்ளினிக்கில், கம்ப்யூட்டர் ஆப்பரேடர் கம் ரிசப்ஷனிஷ்ட் வேலை காலியாய் இருந்தது தெரியவந்தது. ஆன் லைனில் அப்ளை செய்து, இரண்டு நாள் கழித்து இன்டர்வியூ, ஆபீஸ் போகுமுன், அவன்தான் இடம் தேடி அவளை கொண்டுபோய் விட்டான்.
அவள் அழகு, ஆங்கிலம் பேசும் உச்சரிப்பு, புத்திசாலியான பதில்களை கேட்டு மேனேஜர் தயக்கமில்லாமல், முடிவு செய்ய, மறுநாளே அப்பாயின்மென்ட் ஆர்டர் கைக்கு வந்து விட்டது, அவள் எதிர்பார்த்ததை விட நல்ல சம்பளம். செங்கல்பட்டில் இதில் பாதிதான், சுகந்தியை விட புவனேஸ்வரிதான் சத்யாவுக்கு வாய் நிறைய நன்றி கூறி அவனை சங்கடப்படுத்தினாள்.
அவள் வேலை, ஒன்பது முதல் ஐந்து வரை, காலையில் பேஷன்ட்களை வரவேற்று, பதிவு செய்வது, பிற்பகல், டாக்டர்கள் எழுதும் கோழி கிறுக்களை, படித்து புரிந்து கம்பூட்டரில் ஏற்றும் மெடிகல் டிரான்ஸ்க்ரிப்ஷன் என்னும் பணி. பஸ்ஸில் போய் வரவேண்டும். காலை எட்டு மணிக்கு க்ளினிக்கில் இருந்தாக வேண்டும், ஏழு மணிக்கு கிளம்பினால், திரும்ப ஆறு ஆகி விடும். சனி கூட லீவு இல்லை.
தம்பி தம்பி என்று புவனேஸ்வரியும், அக்கா அக்கா என்று சத்யாவும் சொந்தங் கொண்டாடி உறவு நெருங்கியது. கேன்டீன் சாப்பாடு ஆகாது என்று சுகந்திக்கு கட்டும் பொழுது, சத்யா மறுத்தும், அவனுக்கும் பாக்ஸ் கட்டினாள்.
தனிமை கிடைத்த பொழுதெல்லாம், இரு ஜோடிக் கண்கள் பேசிக் கொண்டன. இன்னும் தனிமையில் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அல்லது, புவனேஸ்வரி அவர்களை தனிமையில் விடவில்லை.
ஒரு ஞாயிறு காலை. சத்யா, புவனேஸ்வரியிடம், "அக்கா, ஒங்க அறைக்கு கட்டில், ஹாலுக்கு சோபா செட், டைனிங் டேபிள் எல்லாம் வாங்கனும், சுகந்தியை அழைத்துப் போகவா?" என்றான்.
"எங்களுக்கா கட்டில், எதுக்குப்பா வீண் செலவு. நாங்க, இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு வீடு தேடி போயிடப் போறோம், அது வரைக்கும் தரையில சௌரியமாத்தானே இருக்கோம்"
"இல்ல, எப்டியும் வாங்கனும், அப்பா அம்மா வந்தா வேணுல்ல. எப்பவோ வாங்கியிருக்கனும்"
"சரி தம்பி ஒன் இஷ்டம்... தாரளமா இட்டுப் போயேன் அவள.......... என்ன இன்னா கேட்டுட்டு"
ஜோடியாய் பைக்கில் ஏறி, பல இடங்கள் சுற்றினர். இந்த ஒரு மாதத்தில் க்ளினிக்கில் கற்ற கன்னட வார்த்தைகள், ஆங்கிலம் கலந்து, பேசும் அவள் திறமையை கண்டு ஆச்சர்யம்.
'ஒரு வருட பெங்களூர் வாசத்தில் தனக்கு வராத கன்னடம், இவளுக்கு மட்டும் ஒரு மாதத்தில் எப்படி. ஷி இஸ் ஸ்மார்ட் (கெட்டிக்காரி)' என்று, க்ரிடிட் கார்டை அவள் கையில் கொடுத்து, அவளையே முன் நிறுத்தி பேரம் பேச வைத்து, தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்தான்.
அடுத்து, புது கேஸ் வாங்க புக் செய்தனர். வந்த வேலைகள் முடிந்தன.
"காஃபி சாப்பிட்லாமே" என்றான்,
"இல்ல நேரமாச்சி வீட்டுக்குப் போகலாம்" என்றாள்.
"இல்லை வா" என்று கை பிடித்து அழைத்துப் போனான்.
காஃபி டே என்னும் ரெஸ்டாரென்ட், நல்ல இடைவெளி விட்டு போட்ட வசதியான குட்டை சேர், டேபிள்கள், சத்தடியில்லா, ஏஸி ஹாலில் உட்கார்ந்து, அவசரமாய் பில் கொடுத்து விரட்டாத சர்வீஸ். கேப்பிச்சினோ என்னும் இத்தாலிய நுரை பொங்கும் காப்பியை குடிக்கலாம்.
ஆட்டர் கொடுத்தனர்.
தனிமையில் சத்யாவுடன் நேருக்கு நேர், அவன் தன்னையே விழுங்குவது போல் பார்ப்பதை உணர்ந்து அவளுக்கு நாணம். சிவந்த முகம் இன்னும் சிவப்பேறியது. அதே சமயம், பல மாதமாய் ஏங்கியிருந்த அவள் கனவுக் காதலனுடன் தனிமையான தருணம் கை கூடிய மகிழ்ச்சி, அவன் முகத்தைப் பார்த்துப் பார்த்து ரசித்தாள்.
'வெரி இன்னஸென்ட் ஃபேஸ் (குழந்தை முகம்), கடத்தல் காரர்களுக்கு எப்படி மனம் வந்ததோ, மிருகங்கள்.'
சுனந்தா போல் அவ்வளவு நிறமில்லை, ஆனால், தமிழ் பெண்ணுக்கு இந்த நிறம் கூடுதல்தான். வட்ட முகத்தில் சின்ன கருமை நெற்றிப் பொட்டு, மான் போல் மிரலும் பால் வெள்ளையில் கரு விழிகள். வளைந்த புருவம், மூக்குத்தி அணியும் பழக்கமே அற்றுப் போனதில், மூக்குத்தி இல்லா கூர் நாசி. பக்கவாட்டில் பார்த்தால், மூக்கு முன் வந்து, முகம் இன்னும் அழகாய். தேவையில்லா உதட்டுச் சாயம் பூசி இயற்கை அழகை சிதைக்காத இளம் சிவப்பில் மெல்லிய உதடுகள் கீற்றுப் போல். சிரிப்பின் அழகை கூட்டவே, அழகான பற்பசை விளம்பர பல் வரிசை. நீள் கழுத்து, வெயில் அதிகம் படாத கைகளும் முகம் போலவே சீறான வெளுப்பில். நகப்பூச்சு இல்லா திருத்திய ரோஜா நிற நகம் கொண்ட மெல்லிய விரல்கள். எடுத்து முத்தமிட காத்திருக்கின்றன.
தொடரும்...


நல்ல வேளை! சத்யா வெளிநாட்டில் இருந்து திரும்பி விட்டான்! இல்லேன்னா சுகந்தி புவனா என்ன ஆவார்கள்?! ஏற்கனவே நான் சொன்னது போல, சத்யா என்னும் பற்றுக் கோடை நோக்கி சுகந்தி என்னும் கொடி சா ய்கிறது! பற்றி படர வைக்க சத்யா வும் காத்திருக்கிறா ன்
ReplyDeleteநல்லதே நடக்கும்னு நம்புவோம்
Delete