காதல் பூக்கள் 63
முழு தொடர் படிக்க
தன் தங்கை நடத்திய நாடகத்தின் அர்த்தம் மெல்ல மெல்ல செல்வாவுக்கும் புரிய ஆரம்பித்திருந்தது. அவன் வீட்டுக்குள் நுழைந்த மீனாவையும், தன் எதிரில் படிக்கட்டில் அமைதியாக அமர்ந்திருந்த சீனுவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டுருந்தான்.
'என் சீனு பசியோட இருக்கான். அவனுக்கு வெங்காய ஊத்தப்பம்ன்னா ரொம்ப பிடிக்கும்! ரெண்டு நிமிஷ வேலை' மீனா தன் மனதில் ஊற்றெடுத்துக்கொண்டிருந்த உவகையால், காதலால், உடலும் மனமும் 'என் சீனு', 'என் சீனு', எனக்கூவ, கைகள் அவள் மனதின் கிளுகிளுப்பில் பங்கெடுக்க, அவள் வேக வேகமாக வெங்காயம், பச்சை மிளாகாய், இஞ்சி என எல்லாவற்றையும் மெலிதாக அரிந்து, அதனுடன் கொத்து கறிவேப்பிலையை உறுவி போட்டாள். எல்லாவற்றையும் தோசை மாவில் கொட்டி கலந்து ஊத்தப்பமாக வார்த்துக் ஹாட் கேஸில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
“காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்;
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்;
சிரித்தாய் இசை அறிந்தேன்;
நடந்தாய் திசை அறிந்தேன்;
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்:
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்;
அசைந்தாய் அன்பே அசைந்தேன்;
ஆழகாய் அய்யோ தொலைந்தேன்:"
“சீனு, ஒரு வேகத்துல உன்கிட்ட சத்தியம் பண்ணியிருக்கலாம்; ரெண்டு வாரம் கழிச்சு திருப்பியும் பாட்டிலைத் தொறந்து தண்ணி பூஜைக்கு உக்காந்தான்னா என்னடி பண்ணுவே?"
“செருப்படி வாங்குவான் என்கிட்ட..."
“ம்ம்ம்... அவ்வளவு நம்பிக்கையா அவன் மேல உனக்கு?"
“வாழ்க்கையே நம்பிக்கைங்கற அஸ்திவாரத்துக்கு மேலதானே நிக்குது?"
“சரிடி... இன்னைக்கு நீ யார் எது சொன்னாலும் கேக்கப்போறது இல்லே?"
“இன்னைக்கு இல்லே! இனிமே என்னைக்குமே யார் சொன்னாலும் கேக்க மாட்டேன்; அவன்தான் என் படுக்கைக்கு வரப்போற ஆம்பிளை; நான்தான் அவன் கூட படுக்கப்போறவ; இதுல எந்த மாத்தமும் கிடையாது"
“இதை அவனும்தானே சொல்லணும்?"
“அவன் என் கிட்ட சொல்லிட்டான்"
“எப்போ சொன்னான்?"
“என் கையை புடுச்சு, கூட பொறந்த, என் ஆசை அண்ணன் எதிர்ல 'ஆமென்'ன்னு சொன்னானே; அப்போத்தான்..."
“அப்படியா ...?'
“ஆமாம் ... அப்படித்தான் ...!"
'உன்னால உன் பிரண்டை குடிக்காம இருடான்னு சொல்ல முடியலை; அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லேன்னு நீ இருக்கே. என்னால அப்படி இருக்க முடியாது; உன் பிரண்டை திருத்தறதுக்கு எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை...'
“இங்க சாப்பிடறதுக்கு யாரும் பில்லு போடப்போறதில்லே... சீன் காட்டாம ஓழுங்கா சாப்பிடுங்க...' மீனாவின் குரலில் இப்போது கொஞ்சம் மென்மை வந்திருந்தது.
அண்ணனுக்குத்தான் மரியாதை கடியிருக்குன்னுப் பாத்தா, எனக்கும் கொஞ்சம் மரியாதை அதிகரிச்சித்தான் இருக்கு. மனதுக்குள் சற்றே வியப்புடன் அவள் முகத்தைப் பார்த்த சீனு மெல்லிய குரலில் சொன்னான்
“சீனு, ஐயாம் சாரி ... உங்களை நான் கன்னா பின்னான்னு பேசிட்டேன் ... என்னை மன்னிச்சுடுங்க; மனசுல எதுவும் வெச்சிக்காதீங்க பிளீஸ்..." மீனா வேகமாக நாற்காலியில் அமர்ந்திருந்த சீனுவை நெருங்கி மெதுவாக தன் அடிக்குரலில் பேசினாள்.
“அழாதே சீனு!.. நீ இப்ப எதுவும் சொல்ல வேண்டாம்... உன் மனசு எனக்கு புரியுதுப்பா! உனக்குத்தான் நான் இருக்கேன்ல? .. ஏன் அழறப்பா?" அவள் குரல் தழுதழுத்தது.
“மீனா... சத்தியமா நான் இனிமே குடிக்கமாட்டேன்.. மீனா..." சீனு கேவலுடன் குளறினான்.
“சரி ... நான் உங்களை நம்பறேன்... இப்ப அழாதீங்க... நீங்க அழறதை என்னால தாங்கமுடியலை." மீனா மீண்டும் அவன் கண்களைத் துடைத்தாள்.

சீனுவுக்கு, மீனா காதலுடன் முத்தமொன்றை காற்றின் வழியே அனுப்பிவிட்டு, மனதில் கிளுகிளுப்புடன், கிச்சனுக்குள் நுழைந்தாள். வெங்காய சாம்பார் சூடாக ஆரம்பிக்க, கிளம்பிய வாசம், வெராண்டாவில் தனித்துவிடப்பட்டிருந்த செல்வா, சீனுவின் மூக்கைத் துளைத்தது.
'சீனு நான் சொன்னதை கேட்டுட்டான். நான் சொன்னதும், கொஞ்சம் கூடத் தயங்காம என் கையைப் புடிச்சு சத்தியம் பண்ணானே? ஆம்பிளைன்னா இவன் தான் ஆம்பிளை. பொம்பளை மனசை, என் பெண்மையை மதிக்க தெரிஞ்ச இவன்தானே உண்மையான ஆம்பிளை! சீனு என் ஆம்பிளை!' மீனாவின் மனம் மகிழ்ச்சியில் பொங்கிக் கொண்டிருந்தது.
'என் சீனு பசியோட இருக்கான். அவனுக்கு வெங்காய ஊத்தப்பம்ன்னா ரொம்ப பிடிக்கும்! ரெண்டு நிமிஷ வேலை' மீனா தன் மனதில் ஊற்றெடுத்துக்கொண்டிருந்த உவகையால், காதலால், உடலும் மனமும் 'என் சீனு', 'என் சீனு', எனக்கூவ, கைகள் அவள் மனதின் கிளுகிளுப்பில் பங்கெடுக்க, அவள் வேக வேகமாக வெங்காயம், பச்சை மிளாகாய், இஞ்சி என எல்லாவற்றையும் மெலிதாக அரிந்து, அதனுடன் கொத்து கறிவேப்பிலையை உறுவி போட்டாள். எல்லாவற்றையும் தோசை மாவில் கொட்டி கலந்து ஊத்தப்பமாக வார்த்துக் ஹாட் கேஸில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
மீனாவின் உதடுகளும், அவள் உள்ளத்தின் மகிழ்ச்சியில் பங்கேற்று, காதல் வயப்பட்டிருந்த அந்தப் பருவப்பெண்ணின் உள்ள உணர்வுகளுக்கு ஏற்றவாறு பாடல் ஒன்றை முணுமுணுத்தன.
“காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்;
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்;
சிரித்தாய் இசை அறிந்தேன்;
நடந்தாய் திசை அறிந்தேன்;
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்:
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்;
அசைந்தாய் அன்பே அசைந்தேன்;
ஆழகாய் அய்யோ தொலைந்தேன்:"
மனிதனுக்கு எஜமானன் அவன் மனம்தானே? மனதின் உள்ளுணர்வுதானே மனிதனை இயக்குதிறது. பண்பட்ட மணம், சீரான பாதையை மனிதனுக்கு காண்பிக்கிறது. மனதின் குரலை கேட்பதும், ஒதுக்குவதும் தனிமனிதனின் கைகளில்தான் இருக்கிறது.
பாட்டை இசைத்த மீனாவின் மனமே, அவளை எள்ளிநகையாடி வேடிக்கைப் பார்த்தது. எள்ளிய மனம் அவளை மெல்ல மெல்ல கூறு போடவும் ஆரம்பித்தது.
“என்னடி! பாட்டெல்லாம் பலமா இருக்கு?"
“நான் சந்தோவுமா இருக்கேன்; பாடறேன்"
“நீ செய்தது சரியாடி?'
“ஊர்ல; உலகத்துல, யாரும் செய்யாததையா நான் செய்துட்டேன்?"
“உன் சீனு, உன் சீனுங்கறியே, அவனைப் பக்கத்துல வெச்சிக்கிட்டு, உன் அம்மா மூஞ்சை உன்னால நேராப் பாக்கமுடியுமா?"'
“பாத்துத்தானே ஆகணும்"
“நீ செய்தது அப்ப சரிங்கறே?"
“ஒரு வயசு பொண்ணு, தன் மனசுக்கு பிடிச்சவனுக்கு காத்துல முத்தம் கொடுக்கறது தப்பா?"
“இப்ப உன் அண்ணன் பக்கத்துல இருந்தான்... காத்துல முத்தம் குடுத்தே?"
“ஆமாம்..."
“நீ தனியா இருந்து உன் சீனு, என் ஓதட்டுல ஒண்ணு குடுடின்னு கேட்டா?"
“இது கொஞ்சம் கஸ்டமான கேள்விதான் ... ஒத்துக்கறேன்..."
“பதில் சொல்லுடி?"
“ஓதட்டுல முத்தம் குடுத்தா தப்பா?"
“அதை நீதான் சொல்லணும்... தப்பா ... சரியான்னு? நீதானே அந்த வயசு பொண்ணு!"
“தப்பு: சரிங்கறது எல்லாம், அவரவர்களுடைய மனசாட்சியைப் பொறுத்து இருக்கு"
“உன் மனசாட்சி என்ன சொல்லுது?"
“நான் படிச்சு முடிச்சு, சுகன்யா மாதிரி ஒரு நல்லவேலைக்குப் போய், என் சொந்த கால்ல திடமா நிக்கற வரைக்கும், சீனுவை கொஞ்ச தூரமா வெக்கறதுதான் சரின்னு தோணுது..."
“வெரி குட்... மீனா..."
“போதுமே ... இன்னும் வேற ஏதாவது கேள்வி பாக்தியிருக்கா?"
“அப்போ, கடைசிவரைக்கும் அவன் கூட நிக்கப்போறே?"
“அதிலென்ன சந்தேகம் ... நான் அவன் கையை புடிச்சாச்சு; இனிமே விடறங்கற பேச்சுக்கே எடமில்லே.. அவனும் 'அப்படியே ஆகட்டும்'ன்னு சத்தியம் பண்ணிட்டான்... அவன் எனக்குத்தான்; நான் அவனுக்குத்தான்..."
“என்னடி! பாட்டெல்லாம் பலமா இருக்கு?"
“நான் சந்தோவுமா இருக்கேன்; பாடறேன்"
“நீ செய்தது சரியாடி?'
“ஊர்ல; உலகத்துல, யாரும் செய்யாததையா நான் செய்துட்டேன்?"
“உன் சீனு, உன் சீனுங்கறியே, அவனைப் பக்கத்துல வெச்சிக்கிட்டு, உன் அம்மா மூஞ்சை உன்னால நேராப் பாக்கமுடியுமா?"'
“பாத்துத்தானே ஆகணும்"
“நீ செய்தது அப்ப சரிங்கறே?"
“ஒரு வயசு பொண்ணு, தன் மனசுக்கு பிடிச்சவனுக்கு காத்துல முத்தம் கொடுக்கறது தப்பா?"
“இப்ப உன் அண்ணன் பக்கத்துல இருந்தான்... காத்துல முத்தம் குடுத்தே?"
“ஆமாம்..."
“நீ தனியா இருந்து உன் சீனு, என் ஓதட்டுல ஒண்ணு குடுடின்னு கேட்டா?"
“இது கொஞ்சம் கஸ்டமான கேள்விதான் ... ஒத்துக்கறேன்..."
“பதில் சொல்லுடி?"
“ஓதட்டுல முத்தம் குடுத்தா தப்பா?"
“அதை நீதான் சொல்லணும்... தப்பா ... சரியான்னு? நீதானே அந்த வயசு பொண்ணு!"
“தப்பு: சரிங்கறது எல்லாம், அவரவர்களுடைய மனசாட்சியைப் பொறுத்து இருக்கு"
“உன் மனசாட்சி என்ன சொல்லுது?"
“நான் படிச்சு முடிச்சு, சுகன்யா மாதிரி ஒரு நல்லவேலைக்குப் போய், என் சொந்த கால்ல திடமா நிக்கற வரைக்கும், சீனுவை கொஞ்ச தூரமா வெக்கறதுதான் சரின்னு தோணுது..."
“வெரி குட்... மீனா..."
“போதுமே ... இன்னும் வேற ஏதாவது கேள்வி பாக்தியிருக்கா?"
“அப்போ, கடைசிவரைக்கும் அவன் கூட நிக்கப்போறே?"
“அதிலென்ன சந்தேகம் ... நான் அவன் கையை புடிச்சாச்சு; இனிமே விடறங்கற பேச்சுக்கே எடமில்லே.. அவனும் 'அப்படியே ஆகட்டும்'ன்னு சத்தியம் பண்ணிட்டான்... அவன் எனக்குத்தான்; நான் அவனுக்குத்தான்..."
“சீனு, ஒரு வேகத்துல உன்கிட்ட சத்தியம் பண்ணியிருக்கலாம்; ரெண்டு வாரம் கழிச்சு திருப்பியும் பாட்டிலைத் தொறந்து தண்ணி பூஜைக்கு உக்காந்தான்னா என்னடி பண்ணுவே?"
“செருப்படி வாங்குவான் என்கிட்ட..."
“ம்ம்ம்... அவ்வளவு நம்பிக்கையா அவன் மேல உனக்கு?"
“வாழ்க்கையே நம்பிக்கைங்கற அஸ்திவாரத்துக்கு மேலதானே நிக்குது?"
“சரிடி... இன்னைக்கு நீ யார் எது சொன்னாலும் கேக்கப்போறது இல்லே?"
“இன்னைக்கு இல்லே! இனிமே என்னைக்குமே யார் சொன்னாலும் கேக்க மாட்டேன்; அவன்தான் என் படுக்கைக்கு வரப்போற ஆம்பிளை; நான்தான் அவன் கூட படுக்கப்போறவ; இதுல எந்த மாத்தமும் கிடையாது"
“இதை அவனும்தானே சொல்லணும்?"
“அவன் என் கிட்ட சொல்லிட்டான்"
“எப்போ சொன்னான்?"
“என் கையை புடுச்சு, கூட பொறந்த, என் ஆசை அண்ணன் எதிர்ல 'ஆமென்'ன்னு சொன்னானே; அப்போத்தான்..."
“அப்படியா ...?'
“ஆமாம் ... அப்படித்தான் ...!"
********************************
செல்வாவையும், சீனுவையும், மீனா, தனியாக விட்டு சென்றதிலிருந்து, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சற்று நேரம் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவரின் மனதிலும் இனம் தெரியாத உணர்ச்சிகள் எழுந்து பின் மெதுவாக அடங்கின. மீண்டும் வேகமாக எழுந்தன. மெல்ல மெல்ல அடங்கின.
ஒருவரிடம் ஒருவர் என்ன பேசுவது என்று தெரியாமல் நண்பர்கள் இருவருமே மனதுக்குள் தவித்துக்கொண்டுருந்தார்கள். நேருக்கு நேர், தங்கள் பார்வை ஒன்றுடன் ஒன்று மோதுவதை அவர்கள் கவனமாக தவிர்த்துக் கொண்டுருந்தார்கள். இந்த விளையாட்டில் செல்வா முதலில் களைத்துப்போனான்.
'உன்னால உன் பிரண்டை குடிக்காம இருடான்னு சொல்ல முடியலை; அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லேன்னு நீ இருக்கே. என்னால அப்படி இருக்க முடியாது; உன் பிரண்டை திருத்தறதுக்கு எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை...'
மீனாவின் இந்த ஒரே ஒரு வார்த்தை, அந்த வார்த்தையில் இருந்த அப்பட்டமான உண்மை, செல்வாவை ஒரு நொடி நிலை குலைய வைத்தது. மீனா தன் ஆடைகளை உருவி நிர்வாணமாக நடுத்தெருவில் நிற்க வைத்ததைப் போல் அவன் உணர்ந்தான்.
'மீனா உண்மையைத்தானே சொல்றா? அவளுக்கு என்னை விட சீனு மேல ஒரு படி அக்கறை அதிகமாவே இருக்கு; நிஜமாவே சீனு மேல எனக்கு அக்கறை இருந்திருந்தால் அவன் குடியை நிறுத்தறதுக்கு உருப்படியா எதையாவது ஒரு வழியைத் தேடியிருப்பேனே?'
அண்ணன் செல்வாவும், அவனுடைய இளவயது தோழன் சீனுவும், மீனாவை மிகவும் நன்றாக அறிந்தவர்கள். மீனா எந்த ஒரு விஷயத்திலும் தான் எடுத்த ஒரு முடிவை மாத்திக்கிட்டதேயில்லை. இனி அந்த ஆண்டவனே வந்தாலும், சீனுவுக்காக அவள் எடுத்துள்ள முடிவையோ, அவள் மனதை மாற்றுவதென்பதோ முடியாத காரியம், என்பது அந்த இருவருக்குமே தெரிந்திருந்தது.
இருபது வருட நட்பில், இது போன்ற ஒரு தருணத்தை, நண்பர்கள் இருவரும் சந்திப்பது இதுவே முதல் தடவை. தங்களுக்கிடையில் இருந்த பரிசுத்தமான, களங்கமற்ற, தூய்மையான நட்பு, இப்போது வேறு ஒரு பரிமாணத்துடன், இதுவரை அவர்கள் நினைத்தே பார்த்திராத, வேறு ஒரு திசையில் பயணிக்கப் போவதை, அவர்கள் இருவரும் அந்த கணங்களில் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள்.
'இந்தப் பாவி இனிமே தண்ணி கிளாசை, கையில எடுக்காம இருந்தான்னா, என்னால முடியாத காரியத்தை என் தங்கச்சி சாதிச்சுட்டான்னு, நான் ரொம்ப ரொம்ப சந்தோவப்படுவேன். ஆனா இதுக்கான வெலை என் தங்கச்சியோட வாழ்க்கைன்னு நினைக்கும் போது, எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.'
'ம்ம்ம்ம்.. சீனு ஆயிரத்துல ஒருத்தன். அவனைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும். அவனை கொறை சொல்லணும்ன்னு யாராவது நெனைச்சா, இந்த ஒரு விஷயத்தை தவிர வேற எதை காட்டமுடியும்? சீனு மீனாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை குடுப்பானா? சீனு என் தங்கச்சி மீனாவை சந்தோஷமா வெச்சுப்பானா? சீனுவிடம் இன்னைக்கு இல்லேன்னாலும் நாளைக்கு என் வாயைவிட்டு இதைப் பத்தி கேட்டுத்தான் ஆகணும்...'
'மாப்ளே! மாப்ளேன்னு சீனுவை நான் எவ்வளவு நாளா அர்த்தமேயில்லாம கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்? மீனா அந்த சொல்லுக்கான உண்மையான அர்த்தத்தை கொடுத்துட்டா, இவனை ஒரே செகண்ட்ல இந்த வீட்டு மாப்பிள்ளையா ஆக்கிட்டா! செல்வா, முகம் தெரியாத ஒருத்தனை நீ ஏண்டா மாப்ளேன்னு கூப்பிடப் போறே; இருபது வருவுமா நீ தினம் பாத்துக்கிட்டு இருக்கற இவனையே நீ மாப்ளேன்னு கூப்பிடுடான்னு, மீனா அடிச்சு சொல்லிட்டா! இனிமே நான் இவனை என்னன்னு கூப்பிடறது? வீட்டு மாப்பிள்ளையை 'டேய் சீனுன்னு' கூப்பிடமுடியுமா?'

'மீனா சீக்கிரமா வந்து தொலைச்சா பரவாயில்லே; உள்ளே போனவ அப்படி என்னதான் பண்ணிட்டு இருக்கா? இந்த கொடுமையான மவுனத்தை என்னால தாங்கமுடியலியே? தொண தொணன்னு பேசற இந்த சீனுவும் இன்னைக்கு வாயில கொழுக்கட்டையை அடைச்சிக்கிட்டு இருக்கான்? பாவி அவன் மட்டும் என்னப் பண்ணுவான்? எல்லாமே இந்த மீனாவால வந்த வெனை! அவதான் இன்னைக்கு சீனுவோட வாயை கட்டிப்போட்டுட்டாளே!'
சீனுவும், மீனாவின் அந்த வார்த்தையை தன் மீது வீசப்பட்ட ஒரு சவுக்கடியாகத்தான் உணர்ந்தான். 'எங்க ரெண்டு பேருடைய ஃப்ரெண்ட்ஷிப்பையே, ஒரு வினாடியிலே ஒண்னுமில்லாம ஆக்கிட்டாளே? செல்வாவும் நான் குடிக்கறதை சீரியஸா எடுத்துக்கலே! சீனு... நீயும் செல்வா சொல்றதை சீரியஸா எடுத்துக்கலே? நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்ன்னு வாயாலத்தானே சொல்லிக்கிட்டிருந்தங்கடான்னு, ரெண்டுபேரையும் ஜோட்டால அடிச்சுட்டாளே?'
'என்னாலத்தானே செல்வாவுக்கு இந்த நிலைமை? செல்வா எத்தனையோ முறை சீரியஸா, நான் கட்டிங்க்வுடற விஷயத்தைப் பத்தி, என்கிட்ட இது நல்லதுக்கு இல்லேடான்னு தன் மனம் வெதும்பி பேசியிருக்கான். நான் தான் அவன் சொன்ன எதுக்கும் காது குடுக்காம என் போக்குல போய்கிட்டு இருந்தேன்: என்னால இன்னைக்கு அவனும் அவமானப்பட்டு வாயைத் தொறக்க முடியாம உக்காந்திருக்கான்.'
செல்வா, மவுனமாக உட்க்கார்ந்து தன் விரல் நகங்களை ஒவ்வொன்றாக கடித்து துப்பிக்கொண்டிருந்தான். மீனா பேசிவிட்ட அந்த ஒரு வார்த்தையால் செல்வாவும், சீனுவும், எப்போதும் தங்களுக்குள் தாங்கள் உணரும் சகஜமான நிலைமை, ஒரே நொடியில் சுக்கு நூறாகிவிட்டதை நினைத்து திரும்ப திரும்ப வியப்பிலாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
சீனு, தலையை குனிந்து தன் கன்னத்தை சீரியஸாக சொறிந்து கொண்டிருந்தான்.
“அண்ணா! சாப்பிட வர்றீங்களா?"
“அண்ணா! சாப்பிட வர்றீங்களா?"
வெங்காயத்தின் விலை மடமடவென ஒரே நாளில் ஏறியது போல், மீனாவின் குரலில் திடீரென மரியாதை ஏகத்துக்கு ஏறியிருந்தது.
செல்வாவுக்கு தன் தங்கை தனக்கு திடீரென கொடுக்கும் மரியாதைக்கான காரணம், தெளிவாக புரிந்தாலும், 'இவ எப்ப நம்பளை தலைமேல தூக்கி வெச்சுக்குவா: எப்ப கால்லே போட்டு மிதிப்பான்னு ஒண்ணும் புரியலையே, ஏகத்துக்கு அப்பா இவளுக்கு செல்லம் கொடுத்து வெச்சிருக்காரு. வயசுக்கு வந்த பொண்ணை வாய்விட்டு அதட்டி ஒண்ணும் சொல்லவும் முடியலை. இவ மனசுக்குள்ள இந்த நிமிவும் என்ன இருக்கு? புதுசா வேற ஒரு சீனுக்கு அடி போடறாளா?' அவன் மனதில் சிறிதே வியப்பும், அச்சமும் ஒரு சேர எழுந்தன.
சீனு, தன் தலையை நிமிர்த்தாமல், தன் உள்ளங்கைகளை விரித்து, அதில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டுருக்கும், அட்சரேகைகளையும், தீர்க்க ரேகைகளையும், அன்றுதான் புதிதாக பார்ப்பவன் போல் மவுனமாக உற்று நோக்கிக் கொண்டுருந்தான்.
செல்வா, தன் தங்கையின் முகத்தை நிமிர்ந்து நோக்கியவன், வாய் பேசாமல், சீனுவின் பக்கம் நோக்தி, 'அவனையும் நீயே ஒரு தரம் சாப்பிட கூப்பிடேண்டி', என்ற பொருள் தன் பார்வையில் நிற்க, மீனாவிடம் கண்களால் கெஞ்சியவன், தன் தலையைத் சட்டென தாழ்த்திக்கொண்டான்.
“மணி பதினொன்னு ஆவப்போவுது, அர்த்த ராத்திரியில, ஒவ்வொருத்தரையும் நான் தனித்தனியா, வீட்டுக்கு வந்த புதுமாப்பிள்ளையை, விருந்துக்கு அழைக்கற மாதிரி வெத்தலைப் பாக்கு வெக்கணுமா?"' மீனா தன் குரலில் போலியாக சிறிது சீற்றத்தை கொண்டுவந்தாள்.

மீனாவின் குரலில் இருந்த சீற்றத்தைக்கண்டதும், 'இப்பத்தான் பத்து நிமிஷம் முன்னாடி, காத்துல எனக்கு முத்தம் கொடுத்துட்டு போனா: அதுக்குள்ள இப்ப எதுக்காக என் மேல இந்த கோபம் இவளுக்கு? ம்ம்ம். நடத்தற டிராமாவை, சொந்த அண்ணனை பக்கத்துல சாட்சிக்கு வெச்சிக்கிட்டே நடத்தணுதுமில்லாம, கடைசில என்னை இந்த வீட்டு மாப்பிள்ளைன்னும் சீலைக் குத்திப்புட்டா..! இனிமே இவகிட்டேருந்து தப்பிச்சு ஓடமுடியாதபடி கட்டிப்போட்டுட்டா!' சீனு தன் மனதில் ஓடும் கட்டுக்கடங்காத எண்ணங்களுடன், விளக்கெண்ணைய் குடிச்சது போலிருந்த தன் முகத்தை ஒரு முறை, தன் வலதுகையால், அழுந்த துடைத்துக்கொண்டு, தன் தலையை நிமிர்த்தி வாசல் படியில் நின்றிருந்தவளை பார்த்தான்.
'பசிக்குதுன்னு சொன்னியேடா... சட்டுன்னு எழுந்து வாயேன்' என்கிற கனிவான அழைப்பை அவள் கடைக்கண்ணில் கண்டதும்,
'பசிக்குதுன்னு சொன்னியேடா... சட்டுன்னு எழுந்து வாயேன்' என்கிற கனிவான அழைப்பை அவள் கடைக்கண்ணில் கண்டதும்,
'சரியான ஒண்ணாம் நம்பர் திருட்டு ராஸ்கல் இவ; இவளுக்கு வாயில ஒரு பேச்சு; கண்ணுல ஒரு பேச்சு; இவ கிட்ட இனிமே ரொம்ப ஜாக்திரதையா இருக்கணும் போல இருக்கே' என்று நீண்ட பெருமூச்சுடன் எழுந்தான்.
"மீனா, அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டாங்களா?"
சீனு அங்கு எதுவுமே நடக்காதது போல், தன்னை வெகு சகஜமாக காட்டிக்கொள்ள முயன்றான்.
“கையை கழுவிக்கிட்டு வந்து சாப்பிடறதுங்கற பழக்கம் கூட போயாச்சு இந்த வீட்டுலே?" தட்டின் எதிரில் உட்க்கார்ந்த செல்வாவிடம் மீனா எரிந்து விழுந்தாள்.
“மீனா ... போதும்டா கண்ணு, சாப்பிட வுடுடி..." செல்வா எரிச்சலுடன் பேசியபடி, முழுவதுமாக வீக்கம் குறையாத தன் காலுடன் வாஷ் பேசினுக்கு நொண்டியபடி நடந்தான்.

சீனு அவளை பார்க்காமலே செல்வாவின் பின்னால் வாயைத் இறக்காமல் எழுந்து ஓடினான்.
“போதும் மீனா... போதும்... செல்வாவுக்கு வெய்யேன்..." அம்மா மாதிரி பொண்ணுக்கும் மனசும், கையும் தாராளம், தட்டில் ஊத்தப்பத்தையும், பஜ்ஜியையும் மாறி மாறி எடுத்து போட்டுக் கொண்டிருந்தவளை மனதில் நன்றியுடன் பதறித் தடுத்தான் சீனு.
“போதும் மீனா... போதும்... செல்வாவுக்கு வெய்யேன்..." அம்மா மாதிரி பொண்ணுக்கும் மனசும், கையும் தாராளம், தட்டில் ஊத்தப்பத்தையும், பஜ்ஜியையும் மாறி மாறி எடுத்து போட்டுக் கொண்டிருந்தவளை மனதில் நன்றியுடன் பதறித் தடுத்தான் சீனு.
“இங்க சாப்பிடறதுக்கு யாரும் பில்லு போடப்போறதில்லே... சீன் காட்டாம ஓழுங்கா சாப்பிடுங்க...' மீனாவின் குரலில் இப்போது கொஞ்சம் மென்மை வந்திருந்தது.
அண்ணனுக்குத்தான் மரியாதை கடியிருக்குன்னுப் பாத்தா, எனக்கும் கொஞ்சம் மரியாதை அதிகரிச்சித்தான் இருக்கு. மனதுக்குள் சற்றே வியப்புடன் அவள் முகத்தைப் பார்த்த சீனு மெல்லிய குரலில் சொன்னான்
“மீனா.. ஊத்தப்பம் ரொம்ப நல்லா இருந்தது... தேங்க்ஸ்ம்ம்மா..."
“சரி... சரி... மாடிக்கு போகும் போது கையோட குடிக்கறதுக்கு தண்ணியை எடுத்துகிட்டு போய் சேருங்க; போனமா, படுத்தமான்னு ரெண்டு பேரும் நேரத்துக்க தூங்கற வேலையைப் பாருங்க; அப்புறமா என்னை ஒரு டம்ளர் தண்ணி குடுடி... ஒரு கப்பு டீ போட்டு குடுடீன்னு தூங்கறவளை எழுப்பினா எனக்கு கெட்ட கோவம் வரும்... இப்பவே சொல்லிட்டேன்..." வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.
“உன்னை இதுக்கு மேல யாரும் எதுவும் கேக்கமாட்டோம்... நீ நிம்மதியா தூங்குடியம்மா..." செல்வா கை கழுவ வாஸ் பேசின் பக்கம் நகர்ந்தான். கையை கழுவி, வாய் கொப்பளித்துவிட்டு டாய்லெட்டுக்குள் நுழைந்தான்.
“உன்னை இதுக்கு மேல யாரும் எதுவும் கேக்கமாட்டோம்... நீ நிம்மதியா தூங்குடியம்மா..." செல்வா கை கழுவ வாஸ் பேசின் பக்கம் நகர்ந்தான். கையை கழுவி, வாய் கொப்பளித்துவிட்டு டாய்லெட்டுக்குள் நுழைந்தான்.
“சீனு, ஐயாம் சாரி ... உங்களை நான் கன்னா பின்னான்னு பேசிட்டேன் ... என்னை மன்னிச்சுடுங்க; மனசுல எதுவும் வெச்சிக்காதீங்க பிளீஸ்..." மீனா வேகமாக நாற்காலியில் அமர்ந்திருந்த சீனுவை நெருங்கி மெதுவாக தன் அடிக்குரலில் பேசினாள்.
சீனு, மீனாவை ஒருமுறை நிமிர்ந்து நோக்கினான். அவன் கண்கள் இலேசாக கலங்கியிருந்தது. நிமிர்ந்தவன் வேகமாக தன் தலையை குனிந்து கொண்டான். இதுவரை அவன் மனதுக்குள் அடைபட்டிருந்த இனம் தெரியாத துக்கம் மெதுவாக பீறிட்டுக்கொண்டு கேவலுடன் வெளியில் வந்தது. அவன் உடல் வேகமாக குலுங்கியது. சீனு சத்தமில்லாமல் அழ ஆரம்பித்தான்.
'கல்லுளிமங்கன்சீனுவா அழறான்? எப்பவும் அடுத்தவங்களை அழவெச்சுப் வேடிக்கைப் பாத்துத்தானே இவனுக்குப் பழக்கம்!' மீனாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவன் அழுவதைப் பார்த்த மீனாவின் மனம் பதைத்து, மேனி நடுங்கியது.
'என் சீனு அழறான். என் சீனு அழறதை என்னால பொறுத்துக்க முடியாது. அவன் அழுகையை நிறுத்தணும். என்ன செய்யறது?'
செல்வா இன்னும் டாய்லெட்டுருந்து வரும் அறிகுறி எதுவும் தெரியவில்லை. மீனா நின்ற இடத்திலிருந்தே தன் பெற்றோர்களின் அறையை ஒரு முறை எட்டிப்பார்த்தாள். அவர்களின் அறைக்கதவு முற்றிலுமாக மூடப்பட்டிருந்தது.
மீனா, சீனுவை நெருங்கினாள். தலை கவிழ்ந்து விம்மிக்கொண்டிருந்த சீனுவின் முகத்தை தன் இருகரங்களாலும் பற்றி நிமிர்த்தினாள். கண்களால் பேசினாள். தன் தலையை ஆட்டி 'அழாதே சீனு...' என்று சீனுவின் கண்களை தன் வலது கையால் துடைத்தாள். சீனுவின் உதடுகள் ஏதோ சொல்ல துடித்தன. மீனா அவன் வாயை தன் சிவந்த உள்ளங்ககையால் பொத்தினாள்.
“அழாதே சீனு!.. நீ இப்ப எதுவும் சொல்ல வேண்டாம்... உன் மனசு எனக்கு புரியுதுப்பா! உனக்குத்தான் நான் இருக்கேன்ல? .. ஏன் அழறப்பா?" அவள் குரல் தழுதழுத்தது.
“மீனா... சத்தியமா நான் இனிமே குடிக்கமாட்டேன்.. மீனா..." சீனு கேவலுடன் குளறினான்.
“சரி ... நான் உங்களை நம்பறேன்... இப்ப அழாதீங்க... நீங்க அழறதை என்னால தாங்கமுடியலை." மீனா மீண்டும் அவன் கண்களைத் துடைத்தாள்.
சீனுவின் அருகில் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்த மீனா, அவன் முகத்தை திருப்பி தன் வயிற்றில் அழுத்திக் கொண்டாள். மீனாவின் வலுவான பருத்த இடது தொடை அவன் தோளை உரசிக்கொண்டிருந்தது.
இத்தனை நெருக்கத்தில், ஒரு இளம் பருவப்பெண்ணின் உடலை, அந்த உடல் தரும் இதமான வெப்பத்தை சீனு இதுவரை உணர்ந்ததில்லை. மீனாவின் உடல் வாசம் அவன் நாசியில் வேகமாக ஏறியது. உடல் சிலிர்த்தது. அவன் தேகம் காற்றில் பறந்துகொண்டிருந்தது.
மீனா தன் இடது கையால் சீனுவின் முதுகை மென்மையாக வருடிக் கொண்டிருந்தாள். அவளின் வலது கை விரல்கள் அவனின் அடர்த்தியான கேசத்துக்குள் நுழைந்திருந்தன. சீனுவின் உதடுகள் அவள் அணிந்திருந்த குர்த்தாவின் மேல் பதிந்து மெல்ல அசைந்து கொண்டுருந்தது. மீனாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
அவர்கள் தாங்கள் இருக்கும் நிலையை முழுமையாக மறப்பதற்குள், டாய்லெட் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மீனா சீனுவின் கன்னத்தை செல்லமாக தள்ளிவிட்டு, அவனிடமிருந்து விலகி வேகமாக கிச்சனுக்குள் ஓடினாள்.
சீனு தன்னைச் சுதாரித்துக்கொண்டு, நிதானமாக தன் தட்டிலிருந்த கடைசி ஊத்தப்பத்தை சாம்பாரில் அமிழ்த்தி, தன் வாயில் போட்டு மென்றவன், கிச்சனுக்குள் தன் பார்வையை மெல்ல செலுத்தினான். மீனாவிடமிருந்து சீனுவுக்கு இரண்டாவது முத்தம் காற்றின் வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த வினாடியில், சீனுவுக்கும் சற்றே தைரியம் வந்து, பதிலுக்கு தன் உதட்டை குவித்து மீனாவின் பக்கம் காற்றில் ஒரு முத்தத்தை பறக்கவிட்டான்.
தொடரும்...
Comments
Post a Comment