காதல் பூக்கள் 64


“செல்வா... ஏதோ முக்கியமா பேசணும்ன்னு சொன்னே? என்ன விஷயம்‌?” சீனு, சுவரில்‌ வசதியாக சாய்ந்து தன்‌ இருகால்களையும்‌ நீட்டி, ஒரு சிகரெட்டை கொளுத்தி புகையை நெஞ்சு நிறைய இழுத்தான்‌. மாடிக்கு வந்ததும்‌, இப்போது செல்வாவுக்கு எதிரில்‌, தனிமையில்‌, அவன்‌ தன்னை மிகவும்‌ சகஜமாக உணர ஆரம்பித்திருந்தான்‌.

“பேசணும்டா. ஆனா மீனா என்னை முந்திக்கிட்டா; யாருமே எதிர்பார்க்காத விதத்துல அவ இந்த வீட்டுல உன்னை ஒரு முக்கியமான நபரா ஆக்கிட்டா..."


“ம்ம்ம்‌.. இப்படி ஒரு தருணம்‌ என்‌ வாழ்க்கையில வரும்ன்னு நான்‌ எதிர்பார்க்கவே இல்லை..” சீனுவின்‌ குரல்‌ கம்மியிருந்தது.

“மாப்ளே, வெரி சாரிடா, மீனா இந்த அளவுக்கு உன்கிட்ட எடக்கு மடக்கா பேசியிருக்கக்‌ கூடாது...” செல்வா பேண்ட்டிலிருந்து லுங்கிக்கு மாறிக் கொண்டிருந்தான்‌.

“நம்ம மீனாதானேடா... என்கிட்ட அவளுக்கு இல்லாத உரிமையா? நான்‌ திருந்தணும்னுதானே அவ பேசினாள்‌... எனக்கு அதுல மனவருத்தம்‌ ஒண்ணுமில்லை; ஒருவிதத்துல அவ இப்படி பேசினதுக்கு நான்‌ தான்‌ நன்றி சொல்லணும்‌... நிஜமாவே நான்‌ ரொம்ப ஹேப்பியா இருக்கேன்‌.. யாருக்குடா இந்த மாதிரி ஒரு லட்சுமி சுலபமா கிடைப்பா? என்னால இதை நம்பவே முடியலை.” சீனு பேசமுடியாமல்‌ தடுமாறினான்‌.

“ஏண்டா நீ பாட்டுக்கு யோசிக்காம... குடிக்கமாட்டேன்னு அவகிட்ட சட்டுன்னு சத்தியம்‌ பண்ணிட்டே?" செல்வா சீனுவுக்கு எதிர்‌ சுவரில்‌ சாய்ந்து உட்கார்ந்தான்‌.

“மச்சான்‌... மீனா ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு இருந்தா... அந்த நேரத்துல அவளை எப்படி சமாதானப்படுத்துறதுன்னு எனக்கு புரியலை... அவ கையைப் பிடிச்சு சத்தியம்‌ பண்றதை தவிர எனக்கும்‌ வேற வழி தெரியலை..."

“எல்லாமே நல்லதுக்குத்தாண்டா.... நீ உருப்பட்டா சரிதான்‌; ஆனா உன்னால இந்த குடிக்கிற பழக்கத்தை சட்டுன்னு விட்டுட முடியுமா?"

“ஒரு கெட்டப்‌ பழக்கத்தை இப்படித்தாண்டா விடமுடியும்‌ ...'"

“மாப்ளே... உனக்கு நல்லாப் புரிஞ்சிருக்கும்; மீனா தன் லைப்பையே உனக்காக பணயம் வெச்சிருக்கா: இதை மட்டும் நீ மறந்துடாதே! அவ உன்னை கொஞ்ச நாளாவே தன் மனசுக்குள்ளவே நேசிச்சுக்கிட்டு இருந்திருக்கான்னு எனக்குத் தோணுது..."

“புரியுது செல்வா... அவ நம்பிக்கையை என்னைக்கும் நான் வீணாக்கிட மாட்டேன்! ஆனா அவ அன்புக்கு நான் லாயக்கானவனா? யோக்கியதை உள்ளவன் தானா? அதுதான் எனக்குப் புரியலை..."

“சீனு... உனக்கென்னடா குறைச்சல்? எனக்கு என் தங்கையைப் பத்தி நல்லாவேத் தெரியும்; மீனா உன்னைத் தனக்குன்னு தேர்ந்தெடுத்துட்டா: இனிமே எங்க வீட்டுல, யார் என்ன சொன்னாலும் அவ கேட்கப் போறது இல்லை. யாருக்குப் பிடிச்சாலும், பிடிக்கலன்னாலும், நீ தான் இந்த வீட்டு மாப்பிள்ளை... இதுல எந்த மாற்றமும் கிடையாது..."

“செல்வா... உங்க வீட்டுல உங்க அம்மா கையால சாப்பிட்டு வளந்தவண்டா நான்‌... என்னால உங்க வீட்டுல எந்த பிரச்சனையும்‌ வந்துடக்கூடாது.." சீனு தன்‌ சிகரெட்டை அழுத்தி தேய்த்து அணைத்தான்‌. அவன்‌ முகத்தில்‌ இலேசாக பயமும்‌, மிரட்சியும்‌ இருந்தது.

“என்னைப்‌ பொறுத்த வரைக்கும்‌ ... மீனா உன்னை நேசிக்கறதுலயோ... அவ உன்னை கல்யாணம்‌ பண்ணிக்கறதுலேயோ எனக்கு எந்த பிரச்சனையும்‌ இல்லே. உன்னை நான் இருபது வருஷமா பாக்கறேண்டா: உன்‌ மனசைப்‌ பத்தி எனக்கு நல்லாத்‌ தெரியும்‌. மீனாவுக்கு ஏத்தவன்தான்‌ நீ..." செல்வாவின்‌ குரல்‌ தெளிவாக வந்தது.

“செல்வா... மீனா எனக்கு கிடைக்கறதுக்கு நான் உண்மையிலேயே கொடுத்து வெச்சிருக்கணும்; ஒண்ணு மட்டும் சொல்றேன்: நான் எப்பவுமே அவளை இந்த மாதிரி எண்ணத்துல பார்த்ததே கிடையாதுடா: என் மனசுக்குள்ளே அவளை கல்யாணம் பண்ணிக்கணுங்கற எண்ணம் எப்பவுமே வந்தது கிடையாது." சீனுவுக்கு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. சில வினாடிகள் தன் தலையை குனிந்து மவுனமாக உட்கார்ந்திருந்தவன், மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து தன் நடுங்கும் விரல்களால் உதடுகளில் பொருத்தி பற்றவைத்துக்கொண்டான்.

“மாப்ளே.. உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதாடா... உன்னைப் பொறுத்தவரைக்கும் நீ இந்த முடிவை ஒரே ஒரு நொடியில் எடுத்திருக்கேன்னு எனக்கு நல்லாப் புரியுது..." செல்வா ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாறி மாறிப் பேசினான்.

“தேங்க் யூடா... உன் அப்பாவை நினைச்சாத்தான் எனக்குப் பயமா இருக்கு... இதை அவர் எப்படி எடுத்துப்பார்னு தெரியலை?”

“இனிமே இதையெல்லாம் யோசிச்சு எந்தப் பிரயோசனமுமில்லை; மீனா என் ஒரே தங்கைடா! நாங்க எல்லாம் அவ மேல எங்க உயிரையே வெச்சிருக்கோம்... இது உனக்கு நல்லாத் தெரியும்... அவ சந்தோஷமா இருக்கணும்... அதுக்கு நீதான் உறுதியா நிக்கணும்;” செல்வாவின் குரல் இலேசாக தழுதழுத்து வந்தது.

“செல்வா.. மீனாவை நான்‌ என்‌ உயிருக்கு மேலாகப்‌ பார்த்துப்பேன்‌... அவளைப்‌ மாதிரி ஒருத்தி என்‌ வாழ்க்கைத்‌ துணையாக, எனக்குக்‌ கிடைக்க நான்‌ ரொம்ப ரொம்ப புண்ணியம்‌ பண்ணியிருக்கணும்‌" சீனு, செல்வாவின்‌ முகத்தை நேராகப்‌ பார்த்து உறுதியுடன்‌ பேசினான்‌. 

இருவரும் ஒரு நிம்மதியான சிரிப்பை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.

சிறிது நேரம் கழித்து, 

“மச்சான்‌ ... ஏண்டா பேசாமல்‌ உம்மென்று இருக்கே?" என்று தன்‌ வழக்கமான உற்சாகத்துடன்‌ ஆரம்பித்தான்‌.

“அம்மா இன்றைக்குக்‌ காலையில்‌ சுகன்யாவைத்‌ தன்னோட மருமகளாக ஏத்துக்கிறேன்னு சொல்லிட்டாங்கடா..."

“இந்தக்‌ குட்‌ நியூஸை நீ எனக்கு இவ்வளவு நேரம்‌ கழித்து சொல்கிறாய்‌.. ம்ம்ம்‌' என்று செல்வாவின்‌ கையை மகிழ்ச்சியுடன்‌ குலுக்கினான்‌.

“நீ வந்ததுலேருந்து மீனா எங்கடா என்னை பேசவிட்டாள்‌?"

“இதுக்கு ஏண்டா நீ இப்ப ஒப்பாரி வைக்கிறே?”

“சம்பத்துன்னு ஒரு கம்மனாட்டி என்னை இன்னைக்கு ரொம்பவே கலாய்ச்சுட்டாண்டா”

“ம்ம்ம்‌... யார்ரா அவன்‌? பேரை கேட்ட மாதிரி இல்லையே?”

“அம்மா விருப்பத்தையும்‌ நான்‌ சுகன்யாவோட மாமா ரகுவிடம் மதியம்‌ சொல்லிட்டேன்‌...”

“விஷயத்துக்கு வாடா...”

“இந்த சம்பத்து சுகன்யாவை எட்டு வருஷமா காதலிக்கிறானாம்‌...”

“சரி.. அவன்‌ என்ன சுகன்யாவை உன்கிட்ட தானமா கேட்டானா? நீ என்ன கொடை வள்ளல்‌ கர்ணன்‌ மாதிரி வாடா வந்து வாங்கிக்கோடான்னு சொல்லிட்டியா?”

“சுகன்யாவுக்கு நான்‌ அத்தைப்‌ பையன்‌... அவளுக்கு நான்தான்‌ முறை மாப்பிள்ளைன்னான்‌”

“எங்கடா இருக்கான்‌ அவன்‌? பொழுது விடிஞ்சதும்‌ போய்‌ என்ன ஏதுன்னு சரியா விசாரிச்சிட்டு வரலாம்‌...”

"நேத்து வந்த நீ சுகன்யாவை கல்யாணம்‌ கட்டிக்கிட்டு ஃபைவ்‌ ஸ்டார்‌ ஹோட்டல்லே, சாமான்‌ போடுவே! நான்‌ என்னா உனக்கு விளக்கு பிடிக்கவான்னு கேட்டாண்டா.." 

"அவன்‌ கதை சொல்ல சொல்ல, அவனுக்கு மூஞ்சியில ரெண்டு பல்பு குடுக்காம, நீ என்னா உன்னுடையதை உன்‌ கையில புடிச்சுக்கிட்டு கேட்டுக்கிட்டு இருந்தியா?"

"மாப்ளே... சுகன்யா இப்ப கும்பகோணத்துல அவ தாத்தா வீட்டுல இருக்காடா! அவ கிட்ட அம்மா சம்மதம்‌ சொன்னதை சொல்லலாம்னு போன்‌ போட்டப்ப அவன்‌ லைன்ல வந்தாண்டா..." 

"இப்ப என்னா நாம ரெண்டு பேரும்‌ கும்பகோணம்‌ போகணுமா அவனை மீட்‌ பண்றதுக்கு? அவன்‌ நம்பரை குடுடா நான்‌ என்னாடா விஷயம்ன்னு கேக்கறேன்‌..."

"அதெல்லாம்‌ வேணாம்‌..."

“அப்டீன்னா இதுல உனக்கு என்னடா பிராப்ளம்‌? நீ சுகன்யாவுக்கு தாலியை கட்டிட்டு, ஜாலியா அவளை கூட்டிக்கிட்டு ஹனிமூன்‌ போக வேண்டியதுதானேடா?" சீனு விஷயம்‌ புரியாமல்‌ குதித்தான்‌.

“அவன்‌ எட்டு வருஷமா காதலிக்கிறேன்னு சொல்றான்‌: சுகன்யா இதைப்பத்தி எங்கிட்ட எப்பவும்‌ சொன்னதேயில்லை; அவங்களுக்குள்ள எப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப்‌? வெறுமனே ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்களா? எதுவரைக்கும்‌ அவங்களுக்குள்ள உறவு இருந்திருக்கும்னு என்‌ மனசு அலைபாயுதுடா?" செல்வா மெதுவாக இழுத்து இழுத்து பேசினான்‌.

“ஓஹோ... மை டியர்‌ சார்‌... நீங்க எங்க வர்றீங்கன்னு இப்ப புரியுது எனக்கு. நீங்க சுகன்யாவை சந்தேகப்படறீங்களா?" சீனுவின்‌ குரலில்‌ நையாண்டி ஒலித்தது.

"மாப்ளே... என்னடா நீ. சேம் சைட் கோல் போடறியேடா? நான் அவ நடத்தையை சந்தேகப்படலடா... ஆனா சுகன்யா இவனைப்பத்தி என் கிட்ட ஏன் சொல்லலைன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன முள்ளு மாதிரி உறுத்திக்கிட்டே இருக்குடா..."

"ம்ம்ம்..."

"இதைப்பத்தி அவளிடம் கேக்கலாமா...? கூடாதா...? அப்படி கேட்டா சுகன்யா என்ன பண்ணுவா?" செல்வா இழுத்தான்... 

"சுகன்யா, கும்பகோணத்துலேருந்து ஒரு தரம் மெனக்கெட்டு உன் வீட்டுக்கு வந்து உன்னை செருப்பால அடிச்சுட்டு திரும்பி போவா..." சீனுவின் முகம் கோபத்தில் சற்றே சிவந்திருந்தது. 

"மாப்ளே... அந்தாள் பேரு என்னா? சுகன்யாவோட மாமன் .. ரகுராமன் தானே? அவன் வீச்சு அருவாளோட வந்து உன்னை வெட்டினாலும் வெட்டுவான்... என் மருமவளை நீ சந்தேகப்பட்டியான்னு?"

"என்னடா நீ அவங்க பக்கமே பேசறே?" செல்வா சீறினான். 

"சுகன்யாவைப் போய் சந்தேகப்படறியேடா..நாயே? அவளை மாதிரி ஒரு பொண்ணை நீ ஒரு தரம் கை நழுவ விட்டே... கடைசி வரைக்கும் நீ கையில புடிச்சிக்கிட்டுத்தான் அலையணும் சொல்லிட்டேன்..." சீனு ஒரு சிகரெட்டை எடுத்து கொளுத்திக்கொண்டான். 

"மாப்ளே... என்னை திட்டறதுக்காடா நான் உன்னை இங்கே கூப்பிட்டேன்?" செல்வாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்த போதிலும், பரிதாபமாக சீனுவைப் பார்த்தான். 

"மச்சான்... மனுஷாளுங்களோட தராதரம் உனக்குத் தெரியலைடா..." 

"என்னடா சொல்றே?"

"சுகன்யாவோட அம்மாவை பார்த்தல்ல?"

“ம்ம்ம்.."

“அந்தம்மா பெத்த பொண்ணுடா சுகன்யா.. எவனோ ஒரு கேனப்புண்டை என்னமோ சொன்னான்னு அவளைப் போய் சந்தேகப்படறியே நீ?"

“ம்ங்க்.. ம்ம். ஹம்ம். ப்ச்ஸ்" செல்வாவின் வாயிலிருந்து இனம் புரியாத ஓசைகள் வெளிப்பட்டன. 

'இவனெல்லாம் ஒரு ஃப்ரெண்டு... குடிகார நாய் இவன்; குடிக்கமாட்டேன்னு சொல்லி முழுசா ஒரு மணி நேரம் ஆகவில்லை. அதுக்குள்ள பெரிய மகாத்மா மாதிரில்லா எங்கிட்ட பேசறான்..? என்னமோ இருபது வருஷமா, ஒண்ணுக்கு ஒண்ணா பழகி, ஒரு தட்டுல சாப்பிட்டோமே, இவன் எனக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசுவான்னு கூப்பிட்டேன். என்னை நாய்ங்கறான்: அதுக்கு அப்புறம் என் இடுப்புக்கு கீழ போர் போட்டு, அது உள்ள ராடு விட்டு லெஃப்ட்டு ரைட்டுன்னு என்னை நெம்பி நெம்பி எடுக்கறான்.' 

செல்வாவுக்கு ச்சீய் என்று ஆகிவிட்டது.

"இப்ப என்னை நீ என்ன பண்ணச் சொல்றே?" செல்வா முனகினான். சீனு சீறினால் அவன் எப்போதும் அடங்கிவிடுவான்.

“என் வாயை நீ நாத்தம் அடிக்குதுன்னு சொன்னேல்ல! இப்ப நீ உன் நாத்த வாயைப் பொத்திக்கிட்டு இருன்னு சொல்றேன்."

“ம்ம்ம்..." 

'நான் இவனை நாய்ன்னேன்; அதைச் சொல்லி என்னை திட்டினான். இப்ப பதிலுக்குப் பதில் என் வாயை நாத்தம்ங்கறான். நல்லா வேணும்டா எனக்கு! என் புத்தியை என் செருப்பாலேயே அடிச்சுக்கணும்... இன்னைக்கு ஒவ்வொருத்தன் கிட்டவும் செருப்படி வாங்கறதுன்னு ராசி பலன்ல எழுதியிருக்கா எனக்கு?'

“டேய் செல்வா, முதல்ல நீ உங்க ரெண்டுபேருக்குள்ள என்ன பேச்சு நடந்ததுன்னு விலாவாரியா ஒரு எழுத்து விடாம முதல்லேருந்து சொல்லுடா..." சீனு புகையை நன்றாக இழுத்து அனுபவித்து வெளியில் விட்டான்.

'ஆமாம்‌ இதுல ஒண்ணும்‌ குறைச்சல்‌ இல்லை; திருவிளையாடல்‌ சிவாஜிகணேசன்‌ மாதிரி பேசுகிறான்‌. நான்‌ என்ன தருமியா? உரலுக்குள்ள தலையை விட்டாச்சு; இனிமே இவன்‌ உலக்கைக்குப்‌ பயந்து என்ன பண்றது?' 

செல்வா, ரகுவிடம்‌ பேச, சுகன்யாவின்‌ தாத்தா சிவதாணு பிள்ளையின்‌ செல்‌ நம்பர்‌ வாங்கியதிலிருந்து, அவனுக்கும்‌ சம்பத்துக்கும்‌ இடையில்‌ நடந்த உரையாடலை முழுவதுமாகச்‌ சொல்லி முடித்தவன்‌ சீனுவிடம்‌ வேகமாக எகிறினான்‌.

“இப்ப சொல்லுடா... இந்த நாய்‌ என்ன பண்ணணும்‌? என்‌ நாத்த வாயை பொத்திக்கிட்டு இருக்கணுமா?" செல்வாவின்‌ குரலில்‌ சுயபரிதாபமும்‌, கோபமும்‌ வெகுவாக ஒலித்தது.

"நீ என்னடா பண்ணுவே; அவன் நம்பரும் உன் கிட்ட இல்லே? கொஞ்ச நேரம் என்னை யோசிக்க விடுடா; மச்சான் ஒரு கப் டீ போட்டுக்கிட்டு வர்றியா? கீழே தூங்குற யாரையும் டிஸ்டர்ப் பண்ணிடாதே; ஜாக்கிரதை, மெயினா அந்த பிசாசு மீனா எழுந்துடப்போறா; எழுந்துட்டா ராத்திரி நேரத்துல உனக்கு ஓத்தாம்பட்டை விடுவா; சொல்லிட்டேன்." என்று தன் கண்களை மூடிக்கொண்டு, சிகரெட்டு ஒன்றை கொளுத்திக்கொண்டான்.

“டேய் ... நீ இதுவும் பேசுவே; இதுக்கு மேலயும் பேசுவடா! அண்ணனும், தங்கச்சியும், உனக்கு சூடா ஊத்தப்பம் ஊத்திக்குடுத்து, பஜ்ஜியை பக்கத்துல வெச்சு சேவை பண்ணோமில்லே... ஏன் பேசமாட்டே நீ..." அவன் எரிச்சலுடன் டீ போடுவதற்காக எழுந்து கீழே இறங்கினான்.


தொடரும்...

Comments

  1. 60 அத்யாயம் போட்டு ஒரு மாசம் கழித்து 2 அத்யாயம் போட்டீங்க! பிறகு பத்து நாள் இடைவெளி! இப்போ ரெண்டு பாகம் போட்டீங்க! தொடர்ந்து போடுங்க! காதல் பூக்களுக்கு நிறைய வரவேற்பு, ஆதரவு, எதிர்பார்ப்புகள் இருக்க தான் செய்யுது

    ReplyDelete
    Replies
    1. ஒரே நேரத்தில் நிறைய கதைகள் போட முடியவில்லை நண்பா. நேரம் கிடைக்கவில்லை.

      Delete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 47

நந்தவனம் 5