காதல் பூக்கள் 65

முழு தொடர் படிக்க

செல்வா, தேனீருடன்‌ மேலே ஏறிவந்தான்‌. சீனுவிடம்‌ ஒரு கப்பை கொடுத்துவிட்டு, தானும்‌ மெல்ல தேனீரை உறிஞ்ச ஆரம்பித்தான்‌. அன்று நிஜமாகவே அவன்‌ போட்ட டீ நன்றாக சுவையாக வந்திருந்தது.


சீனு டீயை “ஸ்ர்ர்‌ ஸ்ர்ர்‌” என ஓசை எழுப்பி உறிஞ்சி உறிஞ்சி நிதானமாக குடித்தான்‌. செல்வாவுக்கு எரிச்சல்‌ பற்றிக்கொண்டு வந்தது.

“மாப்ளே! ஏண்டா இப்படி சத்தம்‌ போட்டு உறிஞ்சறே? இது மேனர்ஸ்‌ இல்லேன்னு உனக்கு எத்தனை வாட்டிடா சொல்றது?

“ஆமாண்டா... நீங்க காதலிக்கற பொண்ணு மேல நம்பிக்கையில்லாம சந்தேகப்‌ படுவீங்க: அதெல்லாம்‌ மேனர்ஸ்‌; நாங்க டீ நல்லா இருக்கேன்னு கொஞ்சம்‌ சத்தமா உறிஞ்சி குடிச்சா பேடு மேனர்ஸ்‌... நல்லா வருதுடா வாயில..."னு பதிலுக்கு முறைத்தான்‌.

“சரிடா... நீ எப்படி வேணா குடிடா... இப்ப விஷயத்துக்க்க்கு வாடா..."

“மச்சான்‌. உன்னைப்‌ பாத்தா எனக்கு அழுவறதா சரிக்கறதான்னு புரியலடா" சீனு மெதுவாக ஆரம்பித்தான்‌.

“டேய்‌ சீனு, சிரிக்காதடா... எனக்கு மனசுல வலிக்குதுடா... அந்த சம்பத்து சுகன்யாவை ஃபார்மலா பொண்ணு பாக்க போறதா கூட, எனக்கு நீயூஸ்‌ வந்திருக்குடா. அதையும்‌ சுகன்யா எங்கிட்ட சொல்லலைடா..."

“இதையும்‌ அந்த சம்பத்துத்தான்‌ சொன்னானா?"

“இல்ல... சுகன்யாவோட ஃப்ரெண்டு வித்யா சொன்னாடா? அவதான்‌ சுகன்யா ஊருக்குப்‌ போயிருக்கற விஷயத்தையே சொன்னா"

“ஏண்டா நீ சுகன்யாவை டாவு அடிச்சிக்கிட்டே, ஜானகியை பொண்ணு பாக்க போனியே... அப்ப அது சுகன்யாவுக்கு வலிச்சிருக்காதா?"

“அம்மா சொல்லும்போது நான்‌ எப்படிடா மாட்டேன்னு சொல்லுவேன்‌?"

“சுகன்யா மட்டும்‌ உனக்காக அவங்க அம்மாவை எதுத்துக்கணுமா?"

செல்வா சீனுவுக்கு பதில்‌ சொல்லாமல்‌, தன்‌ கீழ்‌ உதட்டை பற்களால்‌ கடித்துக்‌ கொண்டுருந்தான்‌. அவன்‌ உதடுகளும்‌ கன்னங்களும்‌ கோணிக்கொண்டு, விட்டால்‌, அவன்‌ எந்த நேரத்திலும்‌ அழுதுவிடுவான்‌ என சீனுக்குத்‌ தோன்றியது.

“செல்வா... நீ என்‌ பால்ய சினேதிதன்‌... ஆனா நான்‌ சொல்றனேன்னு என்‌ மேல கோவப்படாதே; கேனப்புண்டை அந்த சம்பத்து இல்லடா..."

“ம்ம்ம்‌...?"

“என்னைக்‌ கேட்டா அது நீதாண்டா...'

“இன்னைக்கு நீ என்னை ரொம்பவே வெறுப்பேத்தறடா உன்னை நான்‌ தெரியாத்தனமா நாய்ன்னு சொல்லிட்டேன்... அதுக்காக என்னை ஏண்டா இப்படி வறுத்து எடுக்கறே?" செல்வா குமைந்தான்‌.

“பின்ன என்னடா... அந்த சம்பத்துக்கு உன்‌ சுகன்யா மேல ஏதோ வெறுப்பு: சமயம்‌ பாத்து அவன்‌ உன்னை உசுப்பேத்தி: நீ சுகன்யா கிட்ட அதை ஒளறி; அது மூலமா உங்க கல்யாணத்துல குழப்பம்‌ பண்ண அவன்‌ முயற்சி பண்ணியிருக்கான்‌: நீ இத புரிஞ்சுக்காம என்‌ மேல கோவப்படரே..."

“ம்ம்ம்‌.."

“நீ கருப்பா... சிவப்பாடா...?"

“என்னடா சொல்றே"

“கேட்டதுக்கு பதில்‌ சொல்லுடா"

“நான்‌ மா நிறம்‌ தான்‌..."

“சுகன்யா, செவப்பு தோலோட என்னை மாதிரி இருக்கறவன்‌ பின்னாடி போகாம, உன்னை ஏண்டா செலக்ட்‌ பண்ணா?"

“ம்ம்ம்‌. இந்த ஆங்கிள்ல்ல நான்‌ எப்பவும்‌ யோசிக்கலடா.."

“அந்த சம்பத்துக்கு தான்‌ கருப்பா இருக்கோம்ன்னு ஒரு காம்ப்ளக்ஸ்‌ இருக்கலாம்‌. நாலு நிமிஷம்‌ பேசினவன்‌... நாலு தரம்‌ தன்‌ உடம்பு நிறத்தைப்பத்தி உங்கிட்ட பேசியிருக்கான்‌... சுகன்யா அவனை தொட்டு கை குலுக்கலை... அவன்‌ கிட்ட சரியா பேசலைன்னு அவன்‌ காண்டா இருக்கும்‌ போது நீ போன்‌ பண்ணே, சரியா?"

“ஆமாம்‌..."

“எட்டு வருஷமா சுகன்யாவும்‌, அந்த சம்பத்துங்கற சொறி நாயை காதலிச்சிருந்தா.. அவன்‌ கையை குலுக்கறதுக்கு அவ தயங்குவாளா? அதுவும்‌ அவன்‌ அவளுக்கு அத்தைப்‌ பிள்ளை. உன்‌ மண்டையில நான்‌ சொல்றது ஏறுதா?"

“பாயிண்ட்டு மாப்ளே!" செல்வாவுக்கு மனதில்‌ தெம்பு வந்தது.

“எட்டு வருஷமா சுகன்யாவை காதலிக்கறவன்‌, அவளைக்‌ காலையிலப்‌ பாத்தப்ப 'க்ளாட்‌ டு மீட்‌ யூ'ன்னு சொல்லுவானா? செல்வா நல்லா யோசனைப்‌ பண்ணி பாருடா..."

“ம்ம்ம்‌"

“என்‌ யூகம்‌ என்னன்னா அவன்‌ சுகன்யாவை ரொம்ப நாள்‌ கழிச்சி பாக்கறான்‌... இல்லே முதல்‌ தரமா பாக்கறான்‌. இல்லேன்னா சுகன்யாவுக்கு அவனுக்கும்‌ பழக்கமேயில்லை..."

“வாய்ப்பிருக்கு..." செல்வாவுக்கு உற்சாகம்‌ அதிகமாதியது. அவன்‌ சீனுவை நெருங்கி உட்க்கார்ந்து கொண்டான்‌. 

'என்னா இருந்தாலும்‌ நம்ம மாப்பிள்ளை கிட்ட போனா பிரச்சனையை எப்படியாவது சிக்கு எடுத்துடுவான்‌.' செல்வா உற்சாகமானான்‌.

“அதுக்கப்புறம்‌ சம்பத்‌ என்ன சொன்னான்‌ உன்‌ கிட்ட? 'கடைசியா ஒரே ஒரு வார்த்தை... உன்‌ தோலு என்னா செவப்பா? இல்லே கருப்பா? சுகன்யாவோட அப்பனும்‌ ஆத்தாளும்‌ அவளை எனக்கு கட்டி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களே? அதுக்கு காரணம்‌ நீதானா?'னு உன்னைக்‌ கேட்டானா இல்லையா?"

“ஆமாண்டா..."

“அப்படின்னா என்னடா அர்த்தம்‌? ஏற்கனவே சம்பத்துக்கு சுகன்யாவை கட்டிக்கொடுக்க அவங்க வீட்டுல இஷ்டமில்லே, சம்பத்து வீட்டு ப்ரப்போசலை சுந்தரி மறுத்திருக்காங்க: அதுதானேடா இதுக்கு அர்த்தம்‌?"

“சீனு.. நீ கில்லாடிடா மாப்ளே..."

“அப்புறம்‌ என்னடா சம்பத்து அவளை திருப்பியும்‌ திருப்பியும்‌ பொண்ணு பாக்கறது?"

“நீ சொல்றது சரிதாண்டா மாப்ளே"

“சுகன்யாவை சம்பத்‌ இங்க அங்க பாத்து இருக்கலாம்‌. சம்பத்‌ வீட்டுலேருந்து சுகன்யாவை அவனுக்கு பெண்ணும்‌ கேட்டிருக்கலாம்‌. சுகன்யா லீவுல இப்ப கிராமத்துல இருக்கறதுனால, சம்பத்தும்‌ ஒரு தரம்‌ நேரா சுகன்யாவைப்‌ பாத்து இம்ப்ரஸ்‌ பண்ண முயற்சி பண்ணியிருக்கலாம்‌."

“மாப்ளே.. நீ இப்ப பாக்கற வேலையை வுட்டுட்டு, டிடெக்டிவா போகலாண்டா... ரியலி"

“குறுக்கப்‌ பேசாதே! காலையில அவன்‌ சுகன்யாவை பாக்கப்‌ போனப்ப, உன்‌ ஆளு அவன்‌ கிட்ட சுமுகமா பழகல.. நீ நடுவுல பூந்து... வெறுத்துப்‌ போய்‌ இருக்கறவன்‌ கிட்ட, நான்‌ சுகன்யாவுக்கு க்ளோஸ்‌ ஃப்ரெண்டு: அவளை கட்டிக்கப்போறேன்னு கதை சொன்ன: முறை மாப்பிள்ளை சம்பத்து, உன்‌ கிட்ட முறைச்சுக்கிட்டான்‌. உனக்கு புரியுதா? மொத்தத்துல இவ்வளவுதாண்டா விஷயம்‌..."

“மாப்ளே... ரொம்ப தேங்க்ஸ்டா.. நான்‌ இப்ப ரொம்ப ரிலீஃப்‌ஆ ஃபீல்‌ பண்றேண்டா.." செல்வா சீனுவை கட்டிக்கொண்டான்‌.

“ச்சை... விடுடா என்னை.."

“மாப்ளே... கோச்சிக்காதடா... இன்னொரு டீ போட்டுத்‌ தரேண்டா..."

“கடைசி வரைக்கும்‌ சம்பத்து சுகன்யாவை லைன்ல கூப்பிடலை இல்லையா?"

“யெஸ்‌...யெஸ்‌ ... யூ ஆர்‌ ரைட்ரா மாப்பிளே"

“சம்பத்‌ உன்‌ கிட்ட பேசினது, சுகன்யாவுக்கு தெரியக்கூடாதுன்னு அவன்‌ நெனைக்கறது சகஜம்டா... அந்த நிமிஷமே அவ லைன்ல வந்திருந்தா ... அவனோட கேம்‌ முடிஞ்சுப்‌ போயிருக்கும்‌... அப்பவே சுகன்யா அவனை நார்‌ நாரா கிழிச்சிடுவா.. அதனால அவன்‌ லைனை கட்‌ பண்ணச்‌ சொல்லி, தனக்கு டயம்‌ கெய்ன்‌ பண்ணிக்கிட்டான்‌.."

“உண்மைதான்‌ மாப்ளே.."

“இங்க ஒரு விஷயம்‌ மட்டும்‌ ஒதைக்குது நைனா..."

“என்னடா ..."

“டேய்‌ என்னடான்னு என்னை கேளுடா நீ ...!

“சொல்லுடா மாப்பிளே... நான்‌ குழம்பி போய்‌ இருக்கவேதானே... என்‌ மாப்பிள்ளயை கூப்பிட்டேன்‌.." செல்வா சீனுவின்‌ தோளில்‌ தன்‌ கையைப்‌ போட்டுக்‌ கொண்டான்‌.

“சுகன்யாவோட அப்பா... அவங்க குடும்பத்தோட இல்லே! ஆனா சம்பத்து, சுகன்யாவோட அப்பனும்‌ ஆத்தாளும்‌ அவளை எனக்கு கட்டி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களேன்னு உன்‌கிட்ட பொலம்பறான்‌. சுகன்யாவோட அப்பா எப்ப சீன்ல வந்தார்‌?"

“மாப்பிளே.. நீ போன பிறவியில ஷெர்லாக்‌ ஹோம்ஸா இருந்திருக்கணும்டா... எனக்கு மண்டையில இது உதிக்கவேயில்லடா..."

“மவனே செல்வா... சுகன்யாவை நீ சந்தேகப்பட்ட விஷயத்தை என்னைத்‌ தவிர வேற யாருகிட்டயாவது சொன்னியா?" சீனு தன்‌ நார்மல்‌ மூடுக்கு வந்துவிட்டான்‌.

“இல்லடா மாப்ளே! நீ தானடா என்‌ ஒரே நண்பேன்‌... என்‌ அட்வைசர்‌... என்‌ பிலாசஃபர்‌, என்‌ கைட்‌ எல்லாமே நீதானடா... சாயந்திரம்‌ மீனாகிட்ட சொல்லலாமான்னு நினைச்சேன்‌. ஆனா சுகன்யா இப்ப மீனாவோட பெஸ்ட்‌ ஃப்ரெண்ட்‌, அவ கிட்ட சொல்லியிருந்தா நீ சொன்ன மாதிரி மீனாவே என்னை செருப்பால அடிச்சிருந்தாலும்‌ அடிச்சிருப்பா..."

“டேய்‌ உன்‌ வாழ்கையிலேயே நீ இதுவரைக்கும்‌ ரெண்டு காரியம்தான்‌ உருப்படியா பண்ணியிருக்கே!" சீனு சரித்தான்‌.

“என்னடா மாப்ளே?"

“ஒண்ணு சுகன்யாவை நீ தைரியமா டாவு அடிச்சது: ரெண்டாவது நீ இன்னைக்கு அவளை சந்தேகப்பட்ட விஷயத்தை அவகிட்டவே சொல்லாம பொத்திக்திட்டு இருந்தது...." சீனு இப்போது ஹா ஹோ... வென உரக்க சிரித்தான்‌.

“டேய்‌.. டேய்‌.. அடங்குடா.. கொஞ்சம்‌ கேப்‌ கிடைச்சா.. உள்ள நுழைஞ்சிடுவியே?"

“செல்வா... நீ சுகன்யாவ நிஜமாவே காதலிக்குறியா?"

“என்னடா மாப்பிளே அப்படி கேட்டுட்ட?" செல்வா தன்‌ முகம்‌ சுருங்கி சிணுங்கினான்‌.

“உன்‌ ஆபீசுல எத்தனை நாய்‌ அவ பின்னால மூச்சு எறைக்க எறைக்க சுத்துச்சுங்க... அவ எவனையாவது திரும்பிப்‌ பாத்தாளா?"

“இல்லே..."

“அவ உன்‌ பின்னாலதானே வந்தா?"

“ம்ம்ம்‌..." 

"நீ ஹாஸ்பெட்டல்ல நெனவு இல்லாமே கிடந்தே; அன்னைக்கு சுகன்யா உனக்காக பட்ட பாட்டை நீ பாத்து இருக்கணும்டா: அம்மா அவசரப்பட்டு என்‌ புள்ளையை என்‌ கிட்ட முழுசா குடுத்துட்டு நீ போயிடுன்னாங்க; அவ உங்க அம்மா சந்தோஷமா இருக்கணும்ன்னு, டக்குன்னு ஒரு வார்த்தை சொல்லாம எழுந்து போய்‌ மரத்தடியில உக்காந்துக்கிட்டு மூஞ்சை மூடிக்கிட்டு அழுதாடா; அதைப்‌ பாத்த என்‌ கண்ணுல தண்ணி வந்திடுச்சிடா அன்னைக்கு; உன்‌ அப்பா அன்னைக்கே சொன்னாரு: இவதான்‌ என்‌ மருமவன்னு; மச்சான்‌ காதல்லே நம்பிக்கை ரொம்ப முக்கியம்டா. அவ உன்‌ மேல உயிரையே வெச்சிருக்காடா... அவளைப்‌ போய்‌ நீ சந்தேகப்பட்டுட்டியே?"'

“மாப்ளே... தப்புத்தாண்டா... அதுக்காக என்னை நீ குத்திக்கிழிக்காதடா... ஃப்ளீஸ்‌.." செல்வா சீனுவின்‌ கையை பிடித்துக்கொண்டான்‌.

“ஆனா நான்‌ சம்பத்தை ஒரு நாள்‌ இல்ல ஒரு நாள்‌ தேடுப்புடிச்சி நன்றி சொல்லத்தான்‌ போறேண்டா?"

“ஏண்டா..."

“இன்னைக்கு அவன்‌ உனக்கு சூடா அடியில ராடு வுட்டான்‌; அதனாலத்தான்‌ நீ பொலம்பிக்கிட்டே என்னை உன்‌ வூட்டுக்கு கூப்பிட்டே.."

“ம்ம்ம்‌..." அவன்‌ என்ன சொல்ல வருகிறான்‌ என்று செல்வாவுக்கு நன்றாக புரிந்தது ஆனால்‌ அதை அவன்‌ வாயால்‌ கேட்க்க விரும்பினான்‌.

“நானும்‌ உன்‌ வூட்டுக்கு என்‌ கட்டிங்கை பாதியில நிறுத்திட்டு வந்தேன்‌; ஆனா இங்கே அந்த எழுமலையான்‌ புண்ணியத்துல எனக்கு தங்கமா ஒரு வாழ்க்கைத்‌ துணை கிடைச்சிருக்கு; அந்த துணையால என்‌ கட்டிங்‌ வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துடுத்து..." சீனு நன்றியுடன்‌ செல்வாவின்‌ கைகளைப்‌ பிடித்துக்கொண்டான்‌.

“சீனு.., ஆரம்பத்துலேருந்தே என்‌ கல்யாண மேட்டர்ல ஒரு பிரச்சனைக்கு பின்னாடி இன்னொன்னுன்னு வர்றதை நெனைச்சா, 'ச்ச்‌'ன்னு ஆகிப்‌ போயிடுச்சிடா" சலித்துக்கொண்ட செல்வா தன்‌ இடது கையிலிருந்த பிளாஸ்டரினுள்‌ ஆள்காட்டி விரலை நுழைத்து சொறிந்து கொண்டான்‌.

“நீ பிரச்சனையை எப்படி பாக்கறே? அதுதான்‌ ரொம்ப முக்கியம்‌. பிரச்சனையை நீ பாக்கற கோணத்துலதான்‌ அது சுலபமாவோ, இல்லே கஷ்டமாவோ மாறுது."

“என்னடா சொல்றே?"

“செல்வா... சரியான பொண்ணு கிடைச்சு, ஸ்மூத்தா கல்யாணம்‌ நடக்கறதுங்கறது ஒரு பிரச்சனைதான்‌... நான்‌ இல்லேன்னு சொல்லலை..." சீனு, சிகரெட்டை தன்‌ உதட்டுல்‌ பொருத்தி ஒரு முறை நீளமாக இழுத்தான்‌. பின்‌ நிதானமாக புகையை வெளியில்‌ ஊதினான்‌. 

சமயம்‌ நள்ளிரவைத்‌ தாண்டுவிட்டிருந்தது. அவன்‌ பின்மாலையில்‌ குடித்திருந்த மதுவின்‌ ஆதிக்கம்‌ அவனை விட்டு முழுதுமாக நீங்கிவிட்டிருந்தது. நண்பர்கள்‌ இருவரும்‌ எப்போதும்‌ போல்‌ வெகு சகஜமாக பேசிக்கொண்டுருந்தார்கள்‌. 

சீனுவுக்கு குண்டு குண்டான கருப்பான கண்கள்‌. அவனுடைய பார்வை எப்போதும்‌ ஒரு இலக்கில்‌ நிற்காமல்‌ எட்டு திசையிலும்‌ சுழன்று, சுழன்று வந்தாலும்‌, எதிரில்‌ இருப்பவன்‌ கண்களைப்‌ பார்த்தே, அவன்‌ மனதில்‌ ஓடும்‌ எண்ணங்களை படித்துவிடும்‌ ஆற்றல்‌ இயற்கையாகவே அவனுக்கு இருந்தது. பெரும்பாலான சமயங்களில்‌ அவனுடைய அபிப்பிராயமும்‌ ஏறக்கறைய சரியானதாகவே இருந்திருக்திறது. 

'இந்த சீனுவிடம்‌ மட்டும்‌, பிரச்சனை எதுவானாலும்‌, அதுக்கு ஒரு ரெடிமேட்‌ தீர்வு இருக்கே', என்று நினைத்து செல்வா எப்போதும்‌ தன்னுள்‌ வியந்து போவதுண்டு.

“ம்ம்ம்‌.. அதனாலத்தான்‌ நீ கல்யாணமே வேணாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தியா?" செல்வா சீனுவின்‌ வாயிலிருந்து வெளிவந்த புகை வளையங்களை வெறித்துக்கொண்டிருந்தான்‌.

“நம்ம வேலாயுதத்தையே எடுத்துக்கோ. கோமதி நல்லப்‌ பொண்ணு!.. முகத்தை பாரு.. அமைதியா, களையா ஏத்தி வெச்ச குத்து விளக்கு மாதிரி இருக்கா! ... என்ன கொஞ்சம்‌ ஒல்லியா ஓடிசலா இருக்கா... ஒரு குழந்தை பொறந்தா அவளும்‌ எல்லோரையும்‌ மாதிரி ஊதி போயிடுவா: ஆனா அவன்‌ எவளுக்கு மாரு பெருசா இருக்கோ அவளைத்தான்‌ கட்டிக்குவேன்னு, ஊரெல்லாம்‌ ஃபிகர்‌ உஷார்‌ பண்றேன்னு திரிஞ்சிக்கிட்டு கிடந்தான்‌..."

“இது எல்லா ஆம்பளை பசங்களுக்கும்‌ இருக்கற ஒரு ஞாயமான ஆசைதானேடா...?" செல்வாவின்‌ உதடுகளில்‌ புன்னகை எட்டிப்பார்த்தது.

“மனசுக்கு எப்பவும்‌ திருப்தியே கிடையாதுடா...?"

“ம்ம்ம்‌..."

“நீ ஆஸ்பத்திரியில கெடந்தே பாரு... இன்சிடெண்டலி, அப்ப அவனும்‌ நாலு நாள்‌ ஜூரத்துல சோறு தண்ணியில்லாம அவன்‌ ரூம்ல கெடந்திருக்கான்‌... நானும்‌ உன்‌ கூட ஸ்லைட்லி பிஸியா, அவனுக்கு கூட இருந்து ஹெல்ப்‌ பண்ண முடியலை; அவன்‌ வீட்டுக்காரனும்‌ தன்‌ பொண்ணைப்‌ பாக்க ஊருக்குப்‌ போயிருந்திருக்கான்‌... ஊர்ல அண்ணன்‌ அண்ணியோட சண்டை - தனியா கிடந்து முதல்‌ ரெண்டு நாள்‌ அல்லாடியிருக்கான்‌..."

“ம்ம்ம்‌..."

“விஷயம்‌ தெரிஞ்சு கோமதி அவன்‌ ரூமுக்கு ஓடி... வாந்தி எடுத்துட்டு விழுந்து கெடந்தவனை டாக்டர்‌ கிட்ட காட்டி, மருந்து வாங்‌கி குடுத்து... ரூமெல்லாம்‌ சுத்தமா கழுவி... அவன்‌ லுங்கியை தோச்சிப்போட்டு, ஆத்தாளுக்கு தெரியாம, தன்‌ வூட்டுலேருந்து, வாய்க்கு ருசியா மொளகு ரசம்‌ வெச்சி, சோறு ஆக்கியாந்து போட்டிருக்கா..."

“ரியலி.. வெரி நைஸ்‌... அவ்ளோ நல்லப்‌ பொண்ணா அவ...?'

“வாழ்க்கையில தன்‌ பொண்டாட்டியா வரப்‌ போறவளுக்கு, கிண்ணுன்னு உடம்பு முக்தியமா? இல்லே குணம்‌ முக்தியாமான்னு இப்ப நம்ம வேலுக்கு புரிஞ்சு போச்சு..."

“நீ சொல்றது உண்மைதாண்டா!"

“இப்ப அவன்‌ என்ன சொல்றான்‌ தெரியுமா? எனக்கு சின்னச்‌ சின்ன ஆரஞ்சுங்களே போதும்‌.. சைஸ்‌ டஸ்‌ நாட்‌ மேட்டர்ன்னு டீ ஷர்ட்‌ போட்டுக்கிட்டு கோமதியை பைக்ல, பின்னாடி உக்கார வெச்சுக்கிட்டு மேலும்‌ கீழுமா அலையறான்‌..." சீனு ஹோவென பெருங்குரலில்‌ சரித்தான்‌.

“என்னடா மாப்ளே, வேலாயுதம்‌ அதுக்குள்ளே கோமதி சைஸையும்‌ பாத்துட்டானாமா?" செல்வாவும்‌ அவனுடன்‌ சேர்ந்து உற்சாகமாக சிரித்தான்‌.

“வேலாயுதத்தோட வீட்டுக்காரன்தான்‌ இல்லயே! ஞாயித்து கிழமை மதியானம்‌ சோறு எடுத்துக்கிட்டு வந்தவளை, 'நீ ரொம்ப ரொம்ப நல்லவ... உன்னை நான்‌ புரிஞ்சிக்கவேயில்ல... நீ என்‌ கிட்ட நெருங்கி நெருங்கி வந்தப்ப... மடையன்‌ நான்‌ விலகி விலகி போனேன்‌. என்னை ஏன்னு கேக்க யாருமே இல்லேன்னு மூக்கை உறிஞ்சினானாம்‌..."

“ம்ம்ம்‌"

“என்னை மன்னிச்சுடு கோமதீன்னு அவளை கட்டி புடிச்சிக்கிட்டு ஒப்பாரி வெச்சானாம்‌. அவளும்‌ அவன்‌ போட்ட சீன்ல மொத்தமா கவுந்துட்டா... அழாதடா என்‌ ராஜான்னு... அவனை கட்டிப்புடிச்சி கன்னத்துல கிஸ்‌ அடிச்சாளாம்‌..."

“உன்‌ கிட்ட எப்படிடா எல்லாக்‌ கதையையும்‌ ஓப்பனா சொல்லிடறானுங்க?"

“நான்தான்‌ பழகிட்டா உசுரையே குடுப்பேன்ல்ல.. அதான்‌.." சீனு தன்‌ கண்ணை சிமிட்டினான்‌.

“அப்புறம்‌"

“அப்புறம்‌ என்னா... எல்லாம்‌ வழக்கமான கதைதான்‌ .. சந்தடி சாக்குல, கோமதி போட்டுக்கிட்டிருந்த ரவிக்கையோட அவளைத்‌ தடவிப்‌ பாத்து இருக்கான்‌ நம்ப வெல்லாயுதம்‌... நான்‌ நெனைச்ச மாதிரி இல்லேடா... அவளுக்கு ஆரஞ்சு சைஸ்ல இருக்குதுடான்னு.. இப்ப நம்ப பையன்‌ சந்தோஷமா சிரிக்கிறான்‌..."

“ஹா .. ஹா ஹா" என செல்வா சிரித்தான்‌.

“மொதல்ல கோமதியை, வேலு பாத்த கோணமே வேற... தேவைப்பட்ட நேரத்துல அந்த பொண்ணு இவன்‌ மேல காமிச்ச பாசத்தைப்‌ பாத்ததும்‌... நம்ம வேலாயுதம்‌ அவளை வேற கோணத்துலேருந்து பாக்க ஆரம்பிச்சுட்டான்‌.."

“புரியுதுடா...”

“இப்ப நம்ம வேலு என்ன சொல்றான்‌ தெரியுமா? கோமு; நீ கட்டின புடவையோட வாடி: . எனக்கு நீ மட்டும்தான்‌ வேணும்‌... நான்‌ உனக்கு தாலிகட்டறேண்டி செல்லம்‌... நீ என்‌ கூட இருந்தா அதுவே போதும்ன்னு உருகறான்‌.."

“மாப்ளே... நிஜமாவே மனுஷங்களைப்‌ புரிஞ்சுக்கறது சுலபமில்ல.. அவங்க எப்ப எந்த மாதிரி பிஹேவ்‌ பண்ணுவாங்கன்னு ப்ரிடிக்ட்‌ பண்றதே கஷ்டம்தாண்டா..!"

“உண்மைதான்‌.. அதான்‌ கோம்திதான்‌ செட்‌ ஆயிட்டாளே! எதுக்குடா காத்தாலையும்‌, சாயங்காலமும்‌, அவ ஆஃபீஸ்‌ வாசல்லே போய்‌ தேவுடு காக்கறேன்னு நம்ம பசங்க கேட்டானுங்க..."

“ம்ம்ம்‌.."

“என்ன ரிஜக்ட்‌ பண்ணாளுங்களே, அவளுங்களுக்கு தெரியணுமில்லே, நமக்கு ஃபிகர்‌ செட்‌ ஆயிடுச்சின்னு, அதான்‌ நம்ம பிகரை ஊருக்கெல்லாம்‌ சுத்திக்காட்டறேங்கறான்‌.." சீனு வெண்மையாக சிரித்தான்‌.

“சீனு... உன்‌ கிட்டேயிருந்து கத்துக்க வேண்டியது நெறய இருக்குடா மாப்பிளே..." செல்வா நெகிழ்ந்து அவன்‌ கைகளை பிடித்துக்கொண்டான்‌.


தொடரும்...

Comments

  1. ப்ரோ கொஞ்சம் ரெகுலரா போடுங்க. பத்து நாளைக்கு ஒரு தடவை போட்டா மறந்து விடுகிறது

    ReplyDelete
  2. அப்பாடா! ஒரு வழியா, 3 வாரத்துக்கு அப்புறம் காதல் பூக்கள்! 65 ஆம் பாகத்தில் Psychology நன்றாக அலசப் பட்டு இருந்தது. பாராட்டு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

என் குடும்பம் 59

என் குடும்பம் 60