மறுவாழ்வு 50

முழு தொடர் படிக்க

 சுகந்தி, தான் கல்யாணமாகி விதவையான, முன் வாழ்வு ரகசியத்தை சத்யாவிடம் கூறி, "இந்த விதவைப் பொண்ண இன்னும் ஏத்துப்பிங்களா.?" என்றாள். 

"விதி நம்மை இணைத்து விட்டது, இனி யாரும் பிரிக்கமுடியாது" என்று சமாதானம் கூறினான், சத்யா. 

"நெஜமாத்தான் சொல்றீங்களா!" என்று உணர்ச்சி வசப்பட்டு அவனைக் கட்டிக் கொண்டாள். 

சத்யா, அந்தத் திடுக்கிடும் செய்தியின் தாக்கத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், சாதரணமாக நடந்து கொண்டானே தவிர, உள்ளுக்குள் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கடந்த மூன்று நாட்களாய் அவளுடன் நடத்திய ஒழ் ஆட்டத்தில் கிடைத்த இன்பமெல்லாம் கரைந்து போனது போல் ஆனது. 

இன்னும் சற்று நேரம் சாதாரண பேச்சி. 

"நாளைக்குச் சித்தி வந்துடுவாங்கல்ல, படுக்கையை பிரித்துப் போட்டு, சுத்தம் செய்துடநும்" என்று எழுந்தான். 

"இல்ல அவங்க வந்தா, நாளைக்கு மதியத்துக்கு மேலதான் வருவாங்க. இன்னிக்கு ராத்ரி இருக்கட்டும், நாளைக் காலையில போட்டுக்கலாம்" என்றாள் சுகந்தி.


"இல்ல, அவங்க திடீர்னு விடியக்காலைல வந்துட்டா, மாட்டிக்குவோம். பெரிய தப்பாயிடும் வாணாம், அதுவும் காலைல நேரம் இருக்காது" என்று அவன் படுக்கை அவன் கட்டிலுக்கும், அவளது அவள் அறைக்கும் போனது. 

"சரி படுக்காலாம்" என்றதும், கட்டிப் பிடித்து முத்தமிட்டு தன் அறைக்கு விலகினான். 

சத்யா, தன் அறை விளக்கை அணைத்துப் படுத்தான். தனிமையில், பெரும் சோகம் சூழ்ந்து கொண்டது. சுகந்தி பற்றிய அதிர்ச்சியான உண்மை தெரிந்த பின் மனதில், பெரும் சிக்கல், குழப்பம். 

'மாப்ள... காதல் கல்யாணமே போராட்டந்தா(ன்), இதுல அவ வேற விதவையா, இல்லாத ஊருக்கு வழி சொன்ன கததான். ரெண்டு பேருமே பொட்டு வச்சிக்கிட்டவங்க, பெரியவங்க விதவைன்னு தெரியும், சின்னவளும் விதவைன்றத மறைச்சி, நம்பள ஏமாத்திடுச்சுங்கலே.' 

'லே.. ஒனக்கு, ஓக்க பெண்ணுங்க தாராளமா கெடைக்குது, ஆனா நீ நெனக்கிர மாதிரி காதலிச்சுக் கல்யாணம் பண்ண மட்டும் தகுதியான பொண்ணு கெடைக்க மாட்டுது. சுனந்தா மட்டுந்தா கன்னிப் பொண்ணு, ஆனா அவ ஃப்ளேன் ஏறிட்டா. மரகதம் கல்யாணமாயி ஓடி வந்துட்டவ, இப்ப இந்த சுகந்தி விதவை. எதுவும் செட்டாவ மாட்டுது.'

'சுகந்திக்கு எல்லாத் தகுதியும் இருக்குன்னு பாத்தா, இப்டி குண்ட தூக்கிப் போட்டுட்டாளே.'

'லே, இது மட்டும் ஒங்கப்பா அம்மா காதுக்கு எட்டுச்சு, என்னா மாதிரி தாண்டவமாடுவாங்க தெரியுமா. போயிம் போயிம் ஒரு விதவைப் பொண்ணுதானா கெடைச்சா, ஒலகத்தில வேற பொண்ணே கெடைக்கலயா காதலிக்க. குருட்டுப்பயலாடா நீயின்னு. கண்டபடி பேசுவாங்க'

அவன் சுகந்தியை மனமார காதலித்தான். தனக்கு மிகப் பொறுத்தமான பொண்ணுன்னு என்று உறுதியாய் நம்பினான். இப்ப எல்லாம் போச்சி. இந்தப் புதுச் செய்தியை ஜீரணிக்க முடியாமல், தூக்கமின்றி இரவை கழித்தான். 

மறுநாள், அவனுக்கு முன் சுகந்தி கிளம்பிவிட்டாள். சந்திக்கவில்லை. மாலை வீடு திரும்பிய பொழுது புவனேஸ்வரி வந்து விட்டிருந்தாள். ஆகவே சுகந்தியுடன் தனிமையில் பேச வாய்ப்பில்லை. ஏதாவது அவளிடம் பேசியிருந்தாலாவது ஒரு தெளிவு பிறந்திருக்கும். 

(தற்சமயம், சத்யா, சுகந்தியை விடுத்து, புவனேஸ்வரி ஊருக்குப் போய் வந்த கதையைப் பார்ப்போம்.)

சத்யாவையும், சுகந்தியையும் தனியா விட்டுப் போகத் தயங்கிய புவனேஸ்வரி, கடைசியில், 'ஊருக்குக் போய் வந்தாலாவது, மாடு வித்து, கொஞ்சம் பணம் புரட்டி வரலாம், வேற வீடு தேடி குடித்தனம் போவ வழி பிறக்கும், வயசுப் புள்ள வீட்டில, பொண்ண வச்சிட்டு எவ்வளவு நாள் மடில நெருப்ப சுமக்கனும்?' என்ற எண்ணத்தில், ஐந்து நாட்கள் முன்பு, பெங்களூரிலிருந்து கிளம்பி, காஞ்சிபுரம் சென்றாள். அந்தப் பயணம், தன் வாழ்கைப் பாதையில் மிகப் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தப் போவதை அப்பொழுது அறியாள். 


அவள் காஞ்சிபுரம் சென்றடைய பிற்பகலாகி ஆகிவிட்டது. வீட்டைத் திறந்து பார்த்தாள். எல்லாம் வைத்தது வைத்தபடிதான் இருந்தது. எந்தக் களவாளிப்பயலும் புகவில்லை. பெருக்கி சுத்தம் செய்தாள். 

பால்காரர் வீட்டுக்குப் போய் மாடுகளைப் பார்த்தாள். செவலை அவளை அடையாளம் கண்டு தலையாட்டி "ம்மா.." என்றதும் புவனேஸ்வரி நெகிழ்ந்து போனாள். அருகில் போய்த் தடவிக் கொடுத்து சற்று நேரம் அவைகளுடன் இருந்தாள். 

பால்காரரிடம், தான் நிரந்தரமாய் பெங்களூருக்கு போய்விடப் போவதாகவும், மாட்டை விற்க ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்டாள். 

"இப்ப எங்கம்மா விக்கரது.........., செவலை ஏழு மாச சென (சினை) மறுத்தும் போச்சி (பால் கறப்பதில்லை) இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு, கன்னு போட்டப்பரம்தான், நல்ல வெல போவும். கருப்பு, கறவையில இருக்கு, அத வேனுன்னா விக்கலாம். பாக்கலாம்" என்றார். 

வீடு திரும்பி, ஒரு டிபனை செய்து அன்றிரவை கழித்தாள். 

மாட்டை விற்க, ஒரு வாரம் பத்து நாட்களாகும், அதற்குள், முசிறி போய் ஒரு முறை அம்மாவை பார்த்து விட்டு வந்துவிட வேண்டும் என்று உந்துதல். பெங்களூரில், நிரந்தரமாய்த் தங்கி விட்டால், அடிக்கடி வரமுடியாது. 

மறுநாள் காலையே, பேருந்தில் பயணம், தன் மண்ணை நோக்கி. 

பாலாற்றின் வரண்ட வடாற்காடு, தென்பெண்ணையின் ஒரளவு வள தென்னாற்காடு, காவிரி விரிந்து பரந்த சோழ வள தஞ்சை பூமி நுழைந்ததும் ஒரு தனி உற்சாகம். கடலூர் தாண்டியதுமே, தேவார திருவாசக பாடல் பெற்ற திருத்தலங்கள். கண்ணுக்கெட்டிய தூரம், பச்சை பசேல் வயக்காடு. தொட்டியம் என்ற ஊரைத் தொட்டதும் காவிரிக் கரையோரம், செழித்த தென்னை, வாழை, சல சலத்து நீரோடும் கால்வாய்கள். தன் சொந்த முசிறியை, நெருங்க நெருங்க, மனம் அலை பாய்ந்தது. 

'இந்த வளமான பிறந்த மண்ணைத் துரந்து, புகுந்த வீடு வாசல் துரந்து, எங்கோ தூரத்து அன்னிய மண்ணில், குற்றமிழைத்தவரைப் போல் ஓடி ஒளிந்து, மொழியறியா மிரள வைக்கும் நகரத்தில் தஞ்சம் புகுந்து வாழ, என்ன பாவம் செய்தேனோ, அம்மா அகிலாண்டேஸ்வரி எனக்கொரு நல்வழி காட்டம்மா' என்று கண்கள் பனிக்க வேண்டினாள். 

ஊர் வந்து இழிந்தாள், தெரு புகுந்தால், லக்க்ஷிமி பாட்டியை தவிர்க்க முடியாது. வீட்டுத் திண்ணையில் பகல் முழுதும் வாசம். போவோர் வருவோரை குசலம் விசாரிப்பதே பொழுது போக்கு. 

"வா ஈ...ஸ்வரீ" என்று வரவேற்பு. அவள் மட்டுந்தான், இப்படி ஈஸ்வரி என்று வாய் நிறைய அவளைக் கூப்பிடுவாள். மற்றவருக்குப் புவனா. 

"எம்மா மாச மாச்சி பாத்து, என்னா தனியா வர்ர, புள்ளங்க இல்லியா. இன்னேரம் பேர் சொல்ல ஒன்னாவது வந்திருக்கனுமே."  

புருஷன் போன செய்தியை இத்தனை வருடமாகியும் அம்மா ரகசியம் காத்தாள் போலும். சிரித்து ஏதோ பதில் சொல்லிப் போனாள். 

திடீரென வந்து நின்றவளைக் கண்டதும் அம்மாவுக்கு ஆச்சரியம், அளவிலா மகிழ்ச்சி. மடி சுமந்த தாயின் நெகிழ்ச்சியான அரவணைப்பு. இந்த அறுபத்தோரு வயசிலும், நல்ல ஆரோக்கியத்தோடுதான் இருந்தார்கள். நல்ல உழைத்த உடம்பு. இன்னும் முடிந்த விவசாய வேலைகளைச் செய்கின்றாள். அப்பாவின் குடும்பப் பென்ஷன் சொற்ப தொகையை வைத்து, தன்னைத் தானே பார்த்துக் கொள்கின்றார்கள். 

இன்று வெள்ளிக் கிழமை, உச்சிப் பிள்ளையாரை பார்த்து ரொம்ப நாளாச்சி என்று அம்மாவையும் அழைத்துக் கொண்டு மாலை கிளம்பினாள். தாயுமானவர் அடுத்து அவர் பிள்ளை தரிசனம் ஆகி உட்கார்ந்தார்கள். நல்ல குளிர் காற்று, திருச்சி நகரை அங்கிருந்து பார்க்க கொள்ளை அழகு, கொள்ளிடமும் காவிரியும் வளைந்து நெளிந்து ஓடும் அழகைப் பார்த்து ரசித்தாள். 

'ஆறில்லா ஊர் பாழ் என்று அப்பா அடிக்கடி சொல்வார். இந்த மாதிரி ஆற்றங்கரையின் அழகான ஊரவிட்டு, எங்கோ தூரத்து, தமிழ் பேசாத நகரத்தில் கெடக்கோம்' என்று ஏக்கம். 

'சுகந்திக்கு ஏதாவது நல்ல காலம் பொறந்து அவ செட்டில் ஆனா, நாம திரும்ப முசிறிக்கே வந்து அம்மாகூட மீதி காலத்த தள்ளிடலாம். இந்த மாதிரி கோயில்களுக்கு வந்தாலே மனதுக்கு எம்மா நிம்மதி, அதுவும் காவிரிக் கரையில இயற்கையான சுத்தமான காத்து தண்ணி, எந்த ஊருல கெடைக்கும், இங்க வாழ குடுத்து வச்சிருக்கனும்' என்று ஏக்கப் பெருமூச்சி. 

அது மட்டுமா, மனோ கூட எளம் வயசில இருந்த நினைவுகள் அவளை இன்னும் ஏங்க வைத்தன. 

'மனோ நீ எங்க இருக்க?' என்று மனம் இளகி அவனுக்குத் தூது விட்டது. 

அம்மாவை கேட்டாள், 

"ஏம்மா, நம்பப் பழைய கோட்டர்ஸ் வீட்டுக்குப் போவனும் பழைய இடமெல்லாம் பார்க்கனும் போலிருக்கு, போலாமா ஒரு தடவை" என்றாள். 

"அதுக்கென்னா, இன்னிக்கு இருட்டிடுச்சி, நாளை காலம்பர கெளம்பினா, திருவானக்கா அம்பாள பாத்துட்டு அப்டியே போய் வரலாம்" என்றாள். 

தை மறுநாள், அம்மாவுடன், கிளம்பி முதலில் திருவானக்கா கோயில். காஞ்சியில் பெரிய கோயில்கள் இருந்தாலும், இந்த கால் பழகிய கோயிலில் வரும் ஒரு நெருக்கம் அங்கு வருவதில்லை. ஜம்புகேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி தரிசனம். மனம் உருகி வேண்டுதல். 

அடுத்து, ரயில்வே கோர்டர்ஸுக்குப் போனார்கள். 

அவள் பிறந்து வளர்ந்த, பழைய நினைவுகள். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் வேறு யாரோ இருந்தனர். தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்கள் அனுமதியோடு, வீட்டினுள் சென்று சுற்றி வந்தாள். தோட்டத்து வீட்டைப் பார்த்ததும், புவனேஸ்வரிக்கு மனோவின் நினைவுகள் அலை அலையாய் வந்து அவளை வாட்டின. 

'அதோ மனோ, மாடியில் நின்று என்னைப் பார்க்கின்றான்' என்று பல வருடம் பின் நோக்கிப் போனாள். மனோவை திருமணம் செய்து வாழ, பெரும் கனவுகள் கண்டு, அவை கற்பனைக் கனவுகளாகவே கலைந்த சோகம். 

'நீ எங்க இருக்க மனோ, உனக்குக் கல்யாணம் ஆகி இன்னொருத்திக்கு சொந்தமாகி இருப்பாய். குடும்பம் என்றாகியிருக்கும், பிள்ளைகளும் வந்திருப்பர். ஆனால், நீ என்றும் என் மனதில் தங்கி நிரந்தரமாய் வீற்றுள்ளாய். அதை அழிக்க முடியாது. அந்த நினைவே போதும் இந்த ஜென்மத்துக்கு, அடுத்த ஜென்மத்திலாவது கூடுவோம்' என்று விண்ணை நோக்கி, மேகத்தைப் பார்த்து, அவனுக்குச் செய்தி அனுப்பினாள். கண்கள் ஈரமாகின. 

நினைவில் ஆழ்ந்திருந்தவளைத் தொட்டு திருப்ப அழைத்து வந்தாள் அவள் அம்மா. அம்மாவுக்குத் தெரியாமல் கண்களைத் துடைத்து திரும்பினாள். அம்மா அப்பொழுது சொன்னாள், 

"அந்த வீட்ல, அனுராதான்னு ஒரு வடநாட்டுக்காரங்க இருந்தாங்கள்ல, அந்தப் புள்ள பேரு கூட..........." 

"மனோ.."

"ஆஆ மனோஜ். அது ஒரு வாட்டி நம்ப வீட்டுக்கு வந்துது."

"எப்பம்மா வந்தாரு, எங்கிட்ட சொல்லவே இல்லயே" 

"ஒனக்கு கல்யாணமாகி, ஒரு வருஷம் இருக்கும்ன்னு நெனக்கிரன்" 

"என்னா சொன்னாரும்மா?" 

"ஒன்னுமில்ல ஒன்னப் பாக்கனும்ன்னுதான் சொன்னாரு, வேற ஒன்னும் சொல்லலயே." 

புவனேஸ்வரி தலை குனிந்தாள். 

"என்னாச்சி?" என்றாள் அம்மா 

"ஒன்னமில்லம்மா அப்ரம் சொல்றேன்" என்று அந்த வீட்டுக்காரங்களிடம் விடை பெற்று வீடு வந்தனர். 

முசிறிக்கு வந்து அம்மாவை, பிறந்த மண்ணைப் பார்த்த திருப்தி. ஆனால், ஆழத்தில் புதைந்திருந்த மனோவின் நினைவு, கிளர்தெழுந்து, இப்பொழுது அவளைத் துன்புருத்தியது. 'முசிறிக்கு வராமலே இருந்திருக்கலாமே' என்று கூட வெறுப்பு. தன் ஊரைப் பார்க்க துடிப்பு, அதே சமயம், மனோ நினைவை மறக்க முடியா துன்பன். 'இப்டி ரெண்டுங் கெட்டானா இருக்கியே' என்று மனதை கடிந்து கொண்டாள். 

மறுநாள், காஞ்சிக்கு கிளம்பி விட்டாள். 

"இருந்துட்டுப் போயேண்டி, சுடுத்தண்ணிய கால்ல ஊத்தனமாரி ஓடுறியே" என்றாள் அம்மா. 

'அதை விட, அவசரம்மா, பொண்ணு காவல் இல்லாம இருக்கா' என்று மனதில் நினைத்து, கிளம்பினாள். அப்பாவின் பழைய மர அலமாரியில், நிறைய புத்தங்கள். தி. ஜானகிராமனின் நாவல்களை, படித்தால் தஞ்சை மண் வாசம், தானாக வந்து சேரும், இளவயதில் படித்தவைதான். தற்பொழுது பெங்களூர் தனிமையை விரட்ட பயன்படும் என்று சிலவற்றை, அம்மாவின் ஒப்புதலில் எடுத்துப் பையில் வைத்துக் கொண்டாள். விடை பெற்றாள் கனத்த மனதோடு. 

காஞ்சியில், மாடு விற்பதாகத் தெரியவில்லை. பால்காரர் சொன்னார், 

"அவசரம்ன்னா அடிமாட்டு வெலைதாம்மா, ஒத்து வல்ல, ஆறப்போட்டா நல்ல வெலைக்குப் போவும்"

"சரி சரி செவலை கன்னு போடட்டும், அதுக்குப் பிறகு ரெண்டையும் வித்துக்கலாம். அதுக்கு முன்ன, கருப்ப யாரச்சியியும் நல்ல வெலக்கிக் கேட்டா குடுத்துடுங்க" என்றாள். 

இந்த மூன்று மாதம், பால் கணக்கு பார்த்து, அவருக்கான சம்பள பணம், தீனி செலவெல்லாம் போக மீதி பணத்தைக் கொடுத்தார். ஏதோ கொஞ்சம் செலவுக்கு ஆவும். மாட வித்து நல்ல தொகை ஏதும் வந்திருந்தா, வேற வீட்டுக்குப் போவலாம் என்றால், முடியல. அடுத்த முறை பாக்கலாம். 

மறுநாள் திங்கள் காலையில் பெங்களூர் கிளம்பத் தயாரானாள். முன்பு போலவே சாமான்களை எல்லாம் பத்திரப்படுத்தி விட்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு, இஷ்ட தெய்வத்தைக் காவல் வைத்து, அதிகாலையிலேயே கிளம்பினாள். 

காட்பாடிக்குப் பேருந்தில் வந்து, பெங்களூர் பிருந்தாவன் ரயிலுக்குக் காத்திருந்தாள். அது குறித்த நேரம் தவறாத ரயில். கூட்டம் இல்லை. ஏறி, டிடியிடம், பதிவு செய்து உட்கார்ந்தாள். சன்னல் ஓர பயணம், தலை சாய்த்துக் கண் மூடினாள், ஊரின் நினைவே சுற்றி வந்தது. 

'அப்ப மனோ என்னத் தேடி வந்தாரா. லெட்டரே வல்லயேன்னு, தவிச்சிக் கெடந்தோமே, ஏதோ அப்ப பெரிய தடங்கல் வந்து, அப்ரம் என்னத்தேடி வந்தாரா கல்யாணமாயிடுச்சின்னு தெரிஞ்சி என்னா மனக்கஷ்டப் பட்டிருப்பாரு.' என்று அவனை நினைத்து நினைத்துக் கண்ணீர் பெருக்கெடுத்தது. 

'இன்னும் சில காலம் காத்திருக்கவில்லையே நான் பாவி, மாசிலாமணிக்கு கழுத்தை நீட்டனும் என்ற தலையெழுத்தை யார் மாற்ற முடியும். காலம் கடந்து போச்சி, நடந்து போனதுக்கு என்னாத்துக்கு இப்ப வருத்தம்' என்று பழைய நினைவுகளை மறக்க முயன்றாள். 

பெங்களூரை நெருங்க சில்லென்ற காற்று வரவேற்றது. 

'இது ஒன்னுதான் இந்த ஊரில சுகம், வெய்ய இருக்காது. புழுக்கம்னா என்னான்னு கேக்கும்.' 

பெங்களூர் சிட்டி ஸ்டேஷனில், சொல்லி வைத்தார் போல் பிற்பகல் ஒன்னு பத்துக்கு, பிருந்தாவன் வந்து சேர்ந்தது. நகரப் பேருந்து பிடித்து, போக வழி தெரியாது. செலவானாலும் பரவாயில்லை என்று, வெளி வந்து ஆட்டோ பிடிக்க வரிசையில் நின்றிருந்தாள். 

அப்பொழுது ஒரு மஞ்சள் கருப்பு ஃப்யட் டேக்ஸி அருகில் வந்து நின்றது. கார் கதவை திறந்து ஒரு பத்து வயதுச் சிறுவன் இறங்கினான். ஏனோ அவனை புவனேஸ்வரி உற்று உற்றுப் பார்த்தாள். அந்தச் சாயல் மிகவும் பரிச்சயம் என்று அறிவு சொல்ல, சற்று குழம்பினாள். 

அவனை அடுத்து, இறங்கிய பெண்மணியைக் கண்டதும், "அனு ஆன்டி" என்று குரல் கொடுத்து அருகில் ஓடினாள்.. நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்த, வலதில் சேலை முந்தானி போட்ட, அந்த வடக்கத்திய பெண்மணியான, மனோவின் தாய்க்கு, இவளை சட்டென அடையாளம் தெரியவில்லை. 

"நாந்தா புவனா, புவனேஸ்வரி, தெரியலயா அனு ஆன்டி" என்று கூறியதும், 

"ஹே ஹே பகவான், அரே பேட்டி" என்று சிரித்து கைகளை அகட்டி அவளைக் கட்டிப் பிடித்தாள். 

"கைஸே ஹை பேட்டி (எப்டி இருக்க மகளே)"

"மை அச்சா ஹூ ஆன்டி, மனோ கைஸா ஹை (நா நல்லா இருக்கேன், மனோ எப்டி) ஆன்டி, யாரு பையன்?" என்று அந்தச் சிறுவன் தோளை தொட்டு, "மனோ பேட்டா ? (புள்ளயா)" என்றாள். 

"ஹா ஹாங் (ஆமா ஆமா)"

"நா சின்ன வயசில மனோவ பாத்தாப்பல அப்டியே அச்சா இருக்கான்" என்று தாடையை வழித்தாள். கூச்சத்தில் அவன் நெளிந்தான். 

பெட்டி படுக்கைகளை டேக்ஸியிலிருந்து இறக்கிய ஒரு ராணுவ அவில்தார், டேக்ஸிக்குப் பணம் கொடுத்து விட்டு 

"மேடம் லேட் ஹோகயா, ஜல்தி ஜானா சாயியே
(நேரமாகி விட்டது, அவசரமாய்ப் போக வேண்டும்)" என்று விடு விடுவென நடந்தார். 

அவர்களுடன், புவனேஸ்வரியும் நடந்து கொண்டே "எங்க போறீங்க, எங்க மனோ வல்லியா, ஸஸூர் நை ஆயா (மருமக வல்லயா)" என்றாள். 

"கான்பூர் ஜானா பேட்டி (போறோம்)" 

"இங்க பெங்களூர்ல யாரு இருக்கா?" 

"மனோ.... இங்கோ... பெங்களூர் டூட்டி பண்ணுது. நா வக்கேஷனக்கு பையன கூப்டு வந்தது"

"ஓஓ. இங்கத்தான் இருக்காரா."

"ஹா ஹாங்." 

முதல் ப்ளாட்பாரத்தில் நின்றிருந்தது தில்லி செல்லும் எக்ஸ்பிரஸ். மக்கள் அங்கும் இங்கும் ஓடும், புறப்படும் நேரம் நெருங்கிய பர பரப்பு. அவில்தார் அவசர அவசரமாய் நடந்து கோச் தேடி, பெட்டி படுக்கைகளை ஏற்றினார். ஆன்டியும் பையனும் ஏறினார்கள். ஆன்டி குனிந்து, ஜன்னல் வழியே பார்த்து, கை அசைத்தாள். புவனேஸ்வரி ப்ளாட்பாரத்தில் நின்றபடி தவித்தாள், இன்னும் விவரம் கேட்க ஆசைதான். நேரம் இல்லை. ரயில் நகர ஆரம்பித்து விட்டது, 

"ஒங்கோ அம்மா நல்லாயிருக்கு, ஸிஸ்டர்ஸ்?" 

"எல்லாம் நல்லா இருக்காங்க" என்று கை அசைத்தாள். 

மிக அபூர்வமாய் நடந்த சந்திப்பில், இன்னும் கொஞ்ச நிமிஷம் கெடைக்கலயே என்ற பெரிய ஏமாற்றத்தோடு திரும்பி நடந்தாள். சட்டென ஒரு மின்னல். 

அவளுக்கு முன்னே சற்றுத் தொலைவில் மிடுக்காய் நடந்து போகும் அவில்தாரை என்ன சொல்லி கூப்பிடுவது என்று தெரியாமல், அவர் கண்ணில் மறையுமுன் பிடிக்க ஓடினாள். 

அவர் பக்கம் போய் "சார் சார்" என்றாள்.

திரும்பிப் பார்த்து நின்றார். 

"சொல்லுங்கம்மா" என்றார் சுத்தமான தமிழில். 

"வந்து, மனோஜ்குமார் சார் எங்க இருக்காரு" 

"கேர்னல் சாப்? அவரு எம் இ ஜி சென்டர்ல, ஆபீஸர் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கி இருக்காரு."

"கொஞ்சம் அவரு அட்ரஸ் வேணும், அங்க போக வழி சொல்லனும்" 

"எதுக்கும்மா?" 

"அவர பாக்கனும், பல வருஷமாச்சி பாத்து, சின்ன வயசில இருந்து பழக்கம்." 

"அது மிலிடரி ஏரியாம்மா, சாதாரணமா அங்கெல்லாம் வெளி ஆளுங்க விடமாட்டாங்கம்மா."

"அப்ப என்ன செய்ய?" 

"வேணும்னா, நீங்க ஒங்க பேரு அட்ரஸ் குடுங்கம்மா, நா அவரு கிட்ட கொடுத்துடுவேன்."

தன் பர்ஸ் திறந்து, சத்யா அப்பார்மென்ட் அட்ரஸை எழுதிய தாளை எடுத்தாள். அவரும், தன் மேல் பை திறந்து, ஒரு குட்டி நோட்பேட் எடுத்தார். 

"பேரும்மா?" 

"புவனேஸ்வரி" 

எழுதிக்கொண்டார். அவள் முகவரி சொல்லச் சொல்ல எழுதினார், "சரியா?" என்று காட்டினார். 

"சரிதான்" என்று கூறியதும், 

"நா குடுத்தர்ம்மா" என்றார்.

"ரொம்ப நன்றி, ஒங்க பேரு?" என்றாள். 

"அவில்தார் முத்துசாமி" என்று தன் மார்பில் குத்திய பேட்ஜை காட்டினார்.

"மறக்காம குடுத்திடுங்க, இன்னோர் வாட்டி அவரு இருக்கர இடம் பேர் சொல்லுங்க"

"எம் இ ஜி சென்டர், அல்சூர் லேக் கிட்டம்மா" 

"நன்றி" என்று சிரித்து விடை பெற்றாள். 

குடியிருப்பு சேர்ந்து தன்னிடமிருந்த சாவி போட்டு திறந்து நுழைந்தாள். ஐந்து நாட்கள் தனிமையில் சுகந்தியும், சத்யாவும் எப்படி இருந்தார்களோ, என்று மனதில் கலக்கம். வீட்டைச் சுற்றி வந்தாள். ஒரு தடயமும் இல்லை. எதுவும் நடந்திருந்தாலும் இனி என்ன செய்ய முடியும். 

மாலை சத்யாவும், சுகந்தியும் தனித்தனியாக வீடு திரும்பினர். போய் வந்த கதை சொன்னாள், மனோ பற்றி ஒன்னும் மூச்சு விடவில்லை. 

அன்றிரவு படுக்கையில் புவனேஸ்வரி தூக்கமின்றித் தவித்தாள். 

'எதுக்கு இப்ப மனோவ தேடிப்போற, எத நெனச்சி அவர பாக்கத் துடிக்கர' என்று மனம் கேள்வி எழுப்பியது. 

"ஊம்... சும்மாதான், எம்மா வருஷமாச்சி பாத்து. பாக்கனும்." 

"அவ்ளோதானா?"

"ஊம்.... அட்ரெஸ் கெடச்சி நாளேக்கே தேடி வருவாரு பாரு" 

"ரொம்ப ஆசதான். பைத்தியக்காரி, கல்யாணமாகி பத்து வயசில புள்ள இருக்கான். இப்ப எதுக்கு ஒன்னத் தேடனும்." 

கண்ணை இருக மூடி தூங்க முயன்றாள். அர்த்தமில்லா கற்பனைகள் வந்து கலைத்தன. 


தொடரும்...

Comments

  1. மரகதம், மறுவாழ்வு பெற்று விட்டாள்! சத்யா, சுகந்தி மறுவாழ்வுக்கு காத்திருக்கிறார்கள்! புவனா வுக்கும், மனோ பற்றி தகவல் கிடைத்துள்ளது! மறுவாழ்வு?!

    ReplyDelete
  2. என்ன ப்ரோ இன்னைக்கு ஒரு கதை தானா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

என் குடும்பம் 59

என் குடும்பம் 60