மறுவாழ்வு 55
முழு தொடர் படிக்க
சத்யாவை மதுரைக்கு வர உத்தரவிட்டுருந்தார் அவன் அப்பா. அவன் போகவில்லை. அதனால், அவனை கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைக்க நேரில் வந்து விட்டனர்.
"இங்கத்தாம்மா........" என்று குரலில் தெம்பு வந்து, "இதே பில்டிங்ல, ரெண்டாம் ப்ளோர்ல, அவங்க சொந்தக்காரங்க கூடத்தான் இருக்கா. இன்னிக்கே கூட பாக்கலாம். நீ மொதல்ல ரகசியமா தனியா பாரு, அப்ரம் அப்பா தாத்தாகிட்ட சொல்லலாம்." என்றான்.
தலைமுதல் கால்வரை கண்களை ஒட்டி, மங்களகரமாய் இருந்தவளை அவன் அம்மாவின் கண் வழியாய் அவளைக் கண்டான். மிகவும் திருப்தியானது. சிரித்து, கன்னத்தைக் கிள்ளி விரலை முத்தமிட்டு அவசரமாய் அறையை விட்டு அகன்றான்.
"நீதாம்மா எப்டியாவது அப்பாவ சமாதானம் பண்ணனும்."
சிவபூஷணம், "இல்லம்மா வாணாம். நம்ப வீட்டு வேலக்காரி வந்திருக்கா, எதனா செய்வோம். நீங்க கொஞ்சம் இட்லி மாவு, குழம்பு, கொடுத்தா போதும்" என்றாள். "ராத்திரி வேணும்னா டிபன் செஞ்சி குடுத்துடுங்க" என்றாள்.
ஒன்பது மணியளவில், சத்யா ஆபீஸ் கிளம்பினான்.
"அவங்களுக்கு எந்த ஊரு? அப்பா அம்மா?"
"காஞ்சிபுரத்தில நல்ல பெரிய விவசாயக் குடும்பம். நெலம் வீடெல்லாம் இருக்கு. அப்பா அம்மா எறந்துட்டாங்க, சித்தி இருக்காங்க. சித்திக்குத் திருச்சி சொந்த ஊர். அவங்க மாமாதான் மேஜிஸ்ட்ரேட், சதாசிவம்ன்னு பேரு."
அப்பாவின் முகம் கோணலாது.
தலை குனிந்து மெல்ல நடந்து வந்து, எல்லோர் மத்தியிலும், கம்பளத் தரையில் மண்டியிட்டு வணங்கி எழுந்து சற்று விலகிய நாற்காலியில் உட்கார்ந்தாள். கொண்டு போன மல்லி சரத்தை, சிவபூஷணம், சுகந்திக்கு சூட்டினாள்.
சத்யாவை மதுரைக்கு வர உத்தரவிட்டுருந்தார் அவன் அப்பா. அவன் போகவில்லை. அதனால், அவனை கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைக்க நேரில் வந்து விட்டனர்.
சத்யா, தன் அம்மாவிடம் சுகந்தி பற்றி விவரம் கூறினான்.
"அம்மா நீ ஒரு தடவை அவள பாத்தினா புடிச்சிடும்மா. ப்ளீஸ் அம்மா, எனக்காக. என் செல்ல அம்மா இல்ல" என்று அவள் தாடை பிடித்துக் கெஞ்சினான்.
"ஊம் ஊம், பாக்கலாம், எங்க இருக்கா இப்ப, அளச்சிட்டு வருவியா?"
"அம்மா நீ ஒரு தடவை அவள பாத்தினா புடிச்சிடும்மா. ப்ளீஸ் அம்மா, எனக்காக. என் செல்ல அம்மா இல்ல" என்று அவள் தாடை பிடித்துக் கெஞ்சினான்.
"ஊம் ஊம், பாக்கலாம், எங்க இருக்கா இப்ப, அளச்சிட்டு வருவியா?"
"இங்கத்தாம்மா........" என்று குரலில் தெம்பு வந்து, "இதே பில்டிங்ல, ரெண்டாம் ப்ளோர்ல, அவங்க சொந்தக்காரங்க கூடத்தான் இருக்கா. இன்னிக்கே கூட பாக்கலாம். நீ மொதல்ல ரகசியமா தனியா பாரு, அப்ரம் அப்பா தாத்தாகிட்ட சொல்லலாம்." என்றான்.
"என்னவோடா நீ சந்தோஷமா இருந்தா அது போதும். எம்புள்ள தப்பான வழிக்குப் போவ மாட்டான்ன்னு தெரியும் எனக்கு."
"தேக்ங்ஸ்ம்மா" என்று பக்கவாட்டில் கட்டிப் பிடித்தான்.
காப்பி சாப்பிட்டு களைப்புத் தீர்ந்ததும். ஹாலில் உட்கார்ந்து பேசினர். அப்பாவின் கோபம் வார்த்தையில் தெரித்தது. தாத்தா அவனைக் கெஞ்சினார்.
பெண்ணின் அழகு, அந்தஸ்து, ஒரே வாரிசின் சொத்து, இந்தத் திருமணம் முடிந்தால், அவனை ஃபாரின் கூட அனுப்பி படிக்க வைக்கலாம், வளமான அவனின் எதிர் காலம், என்று பல காரணங்களை அடிக்கினார்கள்.
அம்மா அவ்வளவாகப் பேசவில்லை.
சத்யா எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்டான். எதிர்த்து பதில் பேசவில்லை. அவர்கள் பேச்சை கேட்கக் கேட்க, அவன் நம்பிக்கை குலைய ஆரம்பித்து, சுகந்தியை மணக்க எடுத்த முடிவு தப்போ என்றுகூடச் சந்தேகம் முளைக்க ஆரம்பித்து விட்டது.
'டே எத்னி தடவ இப்டி மனச தளர விடுவ, திடமா இருக்கனும்னு முடிவெடுத்து இருந்தா, அடுத்த தாக்குதல் வந்தா அந்தப் பக்கம் சாஞ்சிடுரியே' என்று சமாளித்து உறுதியானான்.
தன் எண்ண ஓட்டங்களை வெளிக் காட்டாமல், முகத்தை இருக்கமாய் வைத்து மறைத்தான்.
ஒரு மணி நேரம் பேசியும், அவன் கல்லுளி மங்கனாய் வாய் திறக்காது உட்கார்ந்திருந்ததைக் கண்டு அப்பா ஆத்திரப்பட்டு, அப்பொழுதே அந்தச் சமயமே ஒரு நல்ல முடிவை அவன் சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தாத்தா தான் நடுவில் புகுந்து, அப்பாவை சமாதானப்படுத்தி, "அவசரப் படாத சிவராமா, தம்பிக்கு ரெண்டு நா டைம் குடு, நாம்ப இப்ப பேசனது எல்லாம் மனசில எறங்கட்டும், நல்ல செய்தி சொல்லுவான். நம்பத் தம்பி பாரு" என்று முடித்தார்.
மணி எழு, "ராத்திரிக்கு, ஓட்டலில் டிபன் ஏதாவது வாங்கி வந்து விடவா?" என்று சத்யா புறப்பட்டான்.
நேராக, பாலாமணியின் குடியிருப்பு போய், அப்பா அம்மா தாத்தா வந்துள்ள செய்தி சொன்னான். தன் அம்மா சுகந்தியை பார்க்க ஒப்புக் கொண்டது பற்றியும், அவர்களை அங்கு ஒன்பது மணிக்கு மேல், அழைத்து வருவேன் என்று, தயாராய் இருக்கச் சொன்னான்.
பாலமணியிடம், "அம்மா ஒரு வேண்டுதல், நீங்க அக்காவுக்குச் சொந்தம்னு சொல்லியிருக்கேன், அதுமாரியே சொல்லனும்" என்று கேட்டுக் கொண்டான்.
"அதிக்கின்னா, புவனேஸ்வரி என்ன அத்தையின்னுதானே கூப்பிடரா, அவள எங்கண்ணம்பொண்ணா ஆக்கிட்டாப் போச்சி" என்றாள் சிரித்து.
அப்பாவும் தாத்தாவும் டிபன் சாப்பிட்டு படுத்தனர். சத்யா அம்மாவிடம் ரகசியம் சொன்னான். அவர்கள் தூங்கியதும், அந்தப் பொண்ணைச் சந்தித்துவிட்டு வரலாம் என்று. அம்மாவும் ஒத்துக் கொண்டாள்.
ஒன்பதரை மணிக்கு மேல், அம்மாவுடன் கிளம்பி கதவை பூட்டிக் கொண்டு, பாலாமணி குடியிருப்புக்குச் சென்றனர். அங்கு எல்லோரும் காத்திருந்தனர். பரஸ்பர அறிமுகம் ஆனது. வரவேற்பறையில் உட்கார்ந்து, சதாசிவம் அய்யா, பாலமணி, புவனேஸ்வரி, சத்யா அம்மா சிவபூஷணம் பேசிக் கொண்டிருந்தனர்.
சத்யா அறைக்குள் போய் சுகந்தியை பார்த்தான். அவன் முன்பு வாங்கிக் கொடுத்த மஞ்சள் மைசூர் சில்க் சேலை தரித்து, நெற்றிப் பொட்டு, தலையில் மல்லிகை என்று அலங்காரம் செய்து காத்திருந்தாள்.
தலைமுதல் கால்வரை கண்களை ஒட்டி, மங்களகரமாய் இருந்தவளை அவன் அம்மாவின் கண் வழியாய் அவளைக் கண்டான். மிகவும் திருப்தியானது. சிரித்து, கன்னத்தைக் கிள்ளி விரலை முத்தமிட்டு அவசரமாய் அறையை விட்டு அகன்றான்.
சற்று பொறுத்து அவள் வெளியே வந்தாள். நேராகச் சென்று உட்கார்ந்திருந்த, சிவபூஷணம் முன் சென்று மண்டியிட்டு அவள் காலை தொட்டு, கண்களில் ஒற்றி எழுந்தாள்.
"நல்லாயிரும்மா.. நல்லா இரு" என்று அவள் தலையில் கை வைத்து, தோளை பிடித்து தூக்கி விட்டாள்.
சுகந்தி எழுந்து நின்றாள்.
"ஒக்காரும்மா" என்று பாலாமணி சொல்ல, சிவபூஷணம் எதிர் சோபாவில் உட்கார்ந்தாள்.
"நீ ஏண்டா நிக்கர?" என்றதும் சத்யாவும் உட்கார்ந்தான்.
புவனேஸ்வரி எழுந்து போய், எல்லோருக்கும் சூடாய் பால் கொண்டு வந்தாள். காஞ்சிபுரம், திருச்சி, மதுரை என்று பொதுவான பேச்சி ஆனது. விடை பெற்று சத்யா சிவபூஷணமும் கிளம்பினர்.
லிஃப்டில் ஏறிய அடுத்த விநாடி, "எப்டி இருக்காம்மா?" என்றான் சத்யா.
"ஊம்......... நல்லாத்தாண்டா இருக்கா. அழகா, லக்ஷணமா, அடக்கமா, எனக்குப் பிடிக்குது. ஆனா அப்பா தாத்தாவுக்கு என்னாடா பதில் சொல்றது. ஒரே சிக்கலா இருக்கேடா. நீ எங்கிட்ட இப்டி ஒரு பொண்ண ஆசப்படறேன்னு மொதல்லயே சொல்லியிருந்தா என்னா... ஊம், இப்ப தும்ப விட்டு வாலப் பிடிக்கர கதையாப் போச்சே, அப்பவேன்னா, எப்டியாவது மெட்ராஸ் பொண்ண பாக்கப் போவாம தடுத்திருக்கலாம். இப்ப காரியம் கடந்து போச்சே என்னா பண்ணுவேன்" என்று கை பிசைந்தாள்.
"ஒந் தாத்தா ஒருத்தர்....... வாக்குக் குடுத்துட்டு, ஒத்தக் கால்ல நிக்கிராரு."
"நீதாம்மா எப்டியாவது அப்பாவ சமாதானம் பண்ணனும்."
"ஒங்க அப்பா கத்துவாரு, ஆனா நா நெதானமா எடுத்துச் சொன்னா கேப்பாரு. ஒங்கப்பாவ சமாளிச்சிடலாம். ஆனா ஒங்க தாத்தா இருக்காரே, வெளில காட்டிக்கமாட்டாரு, ஆனா ஒங்கப்பாவ விட அழுத்தம். சுதந்திர காலத்தில இன்னா தீவிரமா இருந்தவருள்ள."
சத்யாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. 'அம்மாவை ஒருவாரு தேத்தியாச்சி. அப்பா தாத்தாவை எப்படிச் சமாளிக்கப் போறோமோ' என்று கவலையில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.
மறுநாள் காலை, ஏழரை மணி அளவில், மணி அடித்தது. ஆண்கள் யாரும் எழுந்திருக்கவில்லை. சத்யா அம்மா சிவபூஷணம்தான் எழுந்து கதவு திறந்தாள். புவனேஸ்வரியைக் கண்டு, சற்று ஆச்சரியம்,
"வாம்மா.. வாம்மா.." என்று உள்ளே அழைத்தாள்.
மறுநாள் காலை, ஏழரை மணி அளவில், மணி அடித்தது. ஆண்கள் யாரும் எழுந்திருக்கவில்லை. சத்யா அம்மா சிவபூஷணம்தான் எழுந்து கதவு திறந்தாள். புவனேஸ்வரியைக் கண்டு, சற்று ஆச்சரியம்,
"வாம்மா.. வாம்மா.." என்று உள்ளே அழைத்தாள்.
புவனேஸ்வரி, டிபனுக்கு இட்லி சுட்டு, ஹாட் பேக்கில் அடிக்கிவைத்து, சட்னி சாம்பாரும் கொண்டு வந்திருந்தாள்.
"எதுக்கும்மா ஒங்களுக்குச் சிரமம்" என்று சிவபூஷணம் வாங்கி வைத்தாள்.
"சாப்பிடுங்க, நான் அப்புரமா காப்பிக் கொண்டு வரேன்" என்றாள்.
"வேணாம் வேணாம், பால் இருக்கு நா போட்டுக்கரேன்" என்றாள்.
"எதுக்கும்மா ஒங்களுக்குச் சிரமம்" என்று சிவபூஷணம் வாங்கி வைத்தாள்.
"சாப்பிடுங்க, நான் அப்புரமா காப்பிக் கொண்டு வரேன்" என்றாள்.
"வேணாம் வேணாம், பால் இருக்கு நா போட்டுக்கரேன்" என்றாள்.
பேச்சு குரல் கேட்டு சத்யா எழுந்து வந்தான். அவனைப் பார்த்து, "மதியம் சாப்பாடும் சமைச்சி கொண்டு வந்துட்றேன்." என்றாள் புவனேஸ்வரி
சிவபூஷணம், "இல்லம்மா வாணாம். நம்ப வீட்டு வேலக்காரி வந்திருக்கா, எதனா செய்வோம். நீங்க கொஞ்சம் இட்லி மாவு, குழம்பு, கொடுத்தா போதும்" என்றாள். "ராத்திரி வேணும்னா டிபன் செஞ்சி குடுத்துடுங்க" என்றாள்.
கழுத்தில்லா சிவபூஷணத்துக்கு, ரெட்டை நாடி உடம்பு, உருவம். பசி தாங்காது.
புவனேஸ்வரி போனதும், "நல்ல வேல அந்தம்மா டிபன் கொண்டாந்துது, எனக்கு நல்ல பசி, நீ எழுந்து போய் டிபன் வாங்கி வர வரைக்கும் தாங்காதேன்னு பாத்தேன், நீயும் வா குளிச்சிட்டு" என்று சாப்பிட உட்கார்ந்தாள்.
மல்லிகைப்பூ இட்லி, மணக்கும் சாம்பார், திருப்தியாய் சாப்பிட்டாள்.
ஒன்பது மணியளவில், சத்யா ஆபீஸ் கிளம்பினான்.
"எங்கள தனியா விட்டு எதுக்கு ஆபீஸ், லீவு போடக்கூடாதா.?"
"இல்லம்மா ஆபீஸ் போயி, கொஞ்சம் அர்ஜென்ட் வேலைகளைச் சொல்லிட்டு ஒடனே வந்துட்ரேம்மா."
பதினோரு மணியளவில் சத்யா திரும்பினான். அம்மா கதவைத் திறந்தாள். ஏதோ அவசரமாய் சைகை காட்டினாள், புரியவில்லை. காதில் ஏதோ சொன்னாள் அதுவும் புரியவில்லை. சத்தம் கேட்டு அப்பா அறையிலிருந்து வெளி வர நிறுத்திக் கொண்டாள்.
"வந்திட்டியா வா" என்று எழுந்து வந்து, சோபாவில் உட்கார்ந்தார். தாத்தாவும் மெல்ல அறையிலிருந்து நடந்து வந்து உட்கார்ந்தார். கம்பளி சால்வை மேலுடம்பில் போர்த்தி, தலைக்குக் கம்பளி குல்லா, காலுக்குக் காலுறை போட்டு, வேடிக்கையாய் இருந்தார்.
பதினோரு மணியளவில் சத்யா திரும்பினான். அம்மா கதவைத் திறந்தாள். ஏதோ அவசரமாய் சைகை காட்டினாள், புரியவில்லை. காதில் ஏதோ சொன்னாள் அதுவும் புரியவில்லை. சத்தம் கேட்டு அப்பா அறையிலிருந்து வெளி வர நிறுத்திக் கொண்டாள்.
"வந்திட்டியா வா" என்று எழுந்து வந்து, சோபாவில் உட்கார்ந்தார். தாத்தாவும் மெல்ல அறையிலிருந்து நடந்து வந்து உட்கார்ந்தார். கம்பளி சால்வை மேலுடம்பில் போர்த்தி, தலைக்குக் கம்பளி குல்லா, காலுக்குக் காலுறை போட்டு, வேடிக்கையாய் இருந்தார்.
'போச்சி... மறுபடியும் லெக்சர் ஆரம்பமா?' என்று மனதுள் அலுத்துக் கொண்டான் சத்யா.
இருவரும் பேசாமல் மௌனமாய் உட்கார்ந்திருந்தது கண்டு சத்யாவுக்கு, சற்று ஆச்சர்யம்.
இருவரும் பேசாமல் மௌனமாய் உட்கார்ந்திருந்தது கண்டு சத்யாவுக்கு, சற்று ஆச்சர்யம்.
"ஏதோ பொண்ணுன்னு சொன்னியாமே, அத பத்தி விவரமா சொல்லு பாக்கலாம்" என்று அப்பா ஆரம்பித்தார்.
சத்யா, 'எதுக்கு விசாரிக்கிராரு, அம்மா ஏதும் சொல்லி இருப்பாங்களோ' என்று அம்மாவை பார்த்தான். அவள் முகத்தில் ஒரு உற்சாகம் கண்டான்.
சுகந்தி பத்தி இப்டி திடீர்னு கேட்டா அப்பாகிட்ட என்னான்னு சொல்றது, எப்டி சொல்றதுன்னு யோசித்தான்.
"கேக்கிறாரே சொல்லேண்டா தைரியமா, நீ விரும்பர பொண்ணப் பத்தி" என்று அவனை ஊக்கினாள்.
"இங்க ஸெகன்ட் ப்ளோர்ல, ஒரு ரிடயர்ட்டு மேஜிஸ்ரேட் இருக்காரு. அவரோட சொந்தக்காரங்க பொண்ணு. பிஸி ஏ டிகிரி முடிச்சிட்டு, இங்க ஒரு க்ளிக்கல, ரிசப்ஷன், கம்பூட்டர் வேலை பாக்குது."
"அவங்களுக்கு எந்த ஊரு? அப்பா அம்மா?"
"காஞ்சிபுரத்தில நல்ல பெரிய விவசாயக் குடும்பம். நெலம் வீடெல்லாம் இருக்கு. அப்பா அம்மா எறந்துட்டாங்க, சித்தி இருக்காங்க. சித்திக்குத் திருச்சி சொந்த ஊர். அவங்க மாமாதான் மேஜிஸ்ட்ரேட், சதாசிவம்ன்னு பேரு."
அப்பாவின் முகம் கோணலாது.
"அப்பா அம்மா இல்லாத பொண்ணா." என்று யோசித்தார்.
மௌனம்.
'நம்ம தகுதிக்கு ஒத்து வராது. ஏதாவது சாக்கு சொல்லி வெட்டி விட்றனும், ஒரு பைசா தேறாது இதுல' என்று தனக்குள் எண்ணம் ஓடியது.
சத்யாவுக்கு திக் திக்கென்றது. அம்மா முகத்தைப் பார்த்தான், அது தெளிவாய் இருக்க இவனுக்கு நம்பிக்கை.
அம்மா சொன்னாள், "பொண்ணு இங்க பக்கத்திலதான் இருக்காலே பாக்கலாமே?" என்றாள்.
"ஊம் பாக்கலாம்" என்று அப்பா தலை அசைத்தார்.
'நம்ம தகுதிக்கு ஒத்து வராது. ஏதாவது சாக்கு சொல்லி வெட்டி விட்றனும், ஒரு பைசா தேறாது இதுல' என்று தனக்குள் எண்ணம் ஓடியது.
சத்யாவுக்கு திக் திக்கென்றது. அம்மா முகத்தைப் பார்த்தான், அது தெளிவாய் இருக்க இவனுக்கு நம்பிக்கை.
அம்மா சொன்னாள், "பொண்ணு இங்க பக்கத்திலதான் இருக்காலே பாக்கலாமே?" என்றாள்.
"ஊம் பாக்கலாம்" என்று அப்பா தலை அசைத்தார்.
'எப்டி இப்டி திடீர்னு மாறிட்டாரு அம்மா வேலைதானா. அப்பாவ சம்மதிக்க வச்சிட்டாங்களா. என் செல்ல அம்மா' என்று மனதில் கொண்டாட்டம்.
தாத்தா முகத்தில் ஈயாடவில்லை. இடித்த புளி போல் உட்கார்ந்திருந்தார்.
"போய் அவங்கள கேட்டு வாயேன்டா" என்றாள் அம்மா.
ஓடினான். புவனேஸ்வரிதான் கதவு திறந்தாள்.
"அக்கா...... பொண்ணு பாக்க நாள் பாத்துட்டு வர சொல்லி அப்பா சொன்னாருக்கா" என்றான்.
"நெஜமாலுமா தம்பி. அப்பா ஒத்துக்கிட்டாரா?"
"ஆமாக்கா"
"சுகந்திக்கு நல்ல காலம் பொறந்துடுச்சி தம்பி" என்று அவன் கை பிடித்து முத்தமிட்டாள்.
அடுத்து. சதாசிவம் பாலாமணி அவர்களிடமும் விவரம் சொன்னான்.
"சந்தோஷம் தம்பி" என்று. பஞ்சாங்கம் பார்த்து, "இன்னிக்கும் பாக்கலாம் பரவாயில்ல, அதவிட, நாளைக்குப் பத்தரைக்கு மேல நல்ல நேரம், பாக்கலாமே" என்றார்.
திரும்ப வந்து அப்பாவிடம் சொன்னான்.
"அப்ப சரி.. பாத்துட்டு, அப்டியே ஊருக்கு கௌம்பிடலாம்." என்று முடிவானது.
சத்யா அம்மாவை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் கிளம்பினான். காரிடோரிலேயே நிறுத்தி, "என்னாம்மா ஆச்சி, அப்பாவ எப்டிம்மா சம்மதிக்க வச்ச?" எனக் கேட்டான்.
"நா எங்கடா, ஒன் அதிஷ்டம் அதுவா எல்லாம் நடந்து போச்சி"
"அப்டின்னா.?"
"காலைல தாத்தாவுக்கு ஒரு போன் வந்துது."
"நா ஆபீஸ் கெளம்பினப்பரமா?"
"ஆமா. பொண்ணு வீட்டிலேருந்து வந்துது. பேசிட்டு ஒன்னும் பேசாம அசந்து ஒக்காந்துட்டாரு தாத்தா. நாங்கதான் அவரு வாயப் புடுங்கி விஷயத்த வர வச்சோம். பொண்ணுக்குப் பிடிக்கலயாம். அதனால, மன்னிசுக்குங்கனு பொண்ணோட தாத்தா பேசினாராம். அதுக்கு மேல பேச என்னாயிருக்கு. அப்ரம்தான் நா அப்பாகிட்ட பேச ஆரம்பிச்சேன். ஜாதி, அந்தஸ்துன்னு வழக்கமான பேச்சிதான். அப்ரம் வேற வழியில்லாம நா சொன்னேன், நேத்து நான் பொண்ண பாத்துட்டேன், எனக்குப் பிடிச்சிருக்கு, பொருத்தமாவும் இருக்குன்னு. நான் எறங்கினப் பிறகுதான், அந்த பொண்ண பத்தி ஒங்கிட்ட பேச சம்மதிச்சாரு."
"அம்மான்னா அம்மாதான். என் செல்ல அம்மா" என்று சட்டெனக் கன்னத்தில் முத்தமிட்டான்.
"டாய்" என்று அக்கம் பக்கம் பார்த்துக் கன்னத்தைத் துடைத்தாள்.
"என்னமோடா......... ஒனக்கு சந்தோஷம்னா எங்களுக்கும் சந்தோஷம்தான். ஆனா, பொண்ணு கொணம் எப்டியிருக்குமோ. நீதான் அதுக்குக் கேரண்டி கொடுக்கனும். பாக்க சாதுவாத்தான் இருக்கா. அப்ரம் பிடாறி ஆகப்கூடாது"
"அதெல்லம் கோல்ட்ம்மா"
"என்னது கவரிங்கா"
"அம்மா......" என்றான்.
எம்ஜி ரோட் நல்லி, தீபம் என்று ஏறி இறங்கி, காஞ்சிபுரம், பிரின்ட்ட் மைசூர் சில்க் என்று தனக்கும் பெரிய மருமகளுக்கும், வரப்போகும் சின்ன மருமகளுக்கும் எடுத்தாள். நாகர்ஜுனா ஆந்திர ஓட்டலில், பிரியாணி பார்சல் பண்ணிக் கொண்டு திரும்பினர்.
சுகந்திக்கு எடுத்த சேலைகளைத் தனியாக வைத்துக் கொண்டான் குடியிருப்பு, போனதும், அம்மாவை போகச்சொல்லி விட்டு, அவன் மட்டும் பாலாமணி வீட்டுக்குப் போய், புவனேஸ்வரியிடம்,
"இது சுகந்திக்கு. கட்டிக்கிட்டு, பத்து மணிக்கா தயாரா இருக்கச் சொல்லுங்க. எல்லாம் வரம். ராத்திரி, காலைல டிபன் கொஞ்சம் ஏற்பாடு பண்ணிடுக்கா." என்று சொன்னான்.
"செய்யலாம்பா. நாளை மதியமும், இங்கதான் எல்லாருக்கும் விருந்து."
"அப்டியா, அக்கா ஒங்களுக்குத்தான் எல்லாருக்கும் சமைக்கச் சிரமம்"
"இது ஒரு சிரமமா. எப்பேர் பட்ட விஷயம் நடக்குது. சுகந்திக்கு ஒரு நல்ல காரியம். அந்த சந்தோஷம் போதுமே, நூறு பேருக்கு சமைச்சிடுவேன்."
"அக்கா, ஒன்னு பண்ணலாம், நம்ப வீட்டு வேலைக்காரி மரிக்கொழுந்தும், வந்திருக்கா, அவள இட்டுட்டு வந்து அறிமுகம் பண்ணிடரேன், ஒத்தாசைக்கு வச்சிக்கிங்க, நல்லா சமைப்பா, அவ ஒங்க கூடவே இருக்கட்டும், நீங்க தனியா கஷ்டப் பட வாணம். சமைச்சத அவ கிட்ட குடுத்தனுப்புங்க."
"நல்லதுப்பா"
மதியம், பிரியாணிப் பொட்டலம் பிரித்து, சாப்பிட்டு எல்லோரும் படுத்தனர். மூன்று மணியளவில், சத்யா ஏதோ வேலையாய் வெளியே போவதாகக் கூறிக் கிளம்பினான். பொறுக்கவில்லை, சுகந்திக்கு இந்தச் செய்தியை உடனே சொல்லியாக வேண்டும் என்று ஓடினான்.
பைக் எடுத்தான், அடுத்த நிமிஷம், க்ளினிக்.
எதிர்பாராமல் வந்து நின்றவனைக் கண்டு அவளுக்கு ஆச்சரியம்,
"பர்மிஷன் போட்டுக் கெளம்பு" என்றான் ரகசியமாய்.
"ஏன்?" என்றாள் கண்களால். அக்கம் பக்கத்தில் மற்றவர் கண்கள்.
"விவரம் சொல்ல முடியாது. வா" என்று சைகையால் அவசரப்படுத்திவிட்டு வெளியே சென்றான்.
அவள் எழுந்து மேனஜர் அறைக்குச் சென்றாள்.
பைக்கில் உட்கார்ந்து அரை மணியாய் காத்திருந்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.. அவள் வந்ததும் அள்ளிக் கொண்டு பைக் பறந்தது. பக்கத்து பூங்காவுக்கு.
ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. கைபிடித்து ஒரு மரத்தின் மறைவில் ஒதுங்கியதும், அவளை இறுக கட்டியணைத்தான். உதடுகள் ஒட்டி ஆழ்ந்த முத்தம். கூச்சத்தில் அவள் நெளிந்து,
"என்னாச்சி திடீர்னு" என்றாள்.
அவன் மூச்சு வாங்கி, "நம்பக் கல்யாணத்துக்கு அப்பா ஒத்துத்திட்டாரு. நாளை காலைல ஒன்ன பொண்ணு பாக்க வரோம் எல்லாம்." என்றான்.
"அப்டியா.........." என்று அவளே அவனை கட்டியணைத்து அவன் கன்னம் காது மூக்கு உதடு என்று மாறி மாறி முத்தமிட்டாள்.
"எப்டி.. எப்டி.. சொல்லுங்க."
சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து நிதானமாய் விவரம் சொன்னான். உணர்ச்சி வசப்பட்டு, அவள் கண்கள் கலங்கி விட்டது. இது கனவா நனவா. சத்தியமா நம்ப முடியல.
"ஆமா என் முன் கல்யாணம் பத்தி சொல்லிட்டீங்களா.?"
"பைத்தியம். அது வெளில சொல்ற விஷயமா. அது ஒரு கெட்ட கனவு நீ அத ஆழமா குழி தோண்டிப் பொதச்சிடனும். ஆங்......... சொல்ல மறந்துட்டேனே, சதாசிவம் அய்யா அம்மா கிட்ட, இத பத்தி ஒருபோதும் பேசக்கூடாதுன்னு வேண்டி கேட்டுக்க. மறக்காத. நாளைக்கு ஏதும் வாய் தவறிகூட வந்துடக் கூடாது. அக்காவையும் எச்சரித்து வை."
இன்னும் ஒரு அரை மணி அங்கு உட்கார்ந்தபடியே எதிர் காலக் கனவுலகம் சென்று உலவி விட்டு திரும்பினர்.
அன்றிரவு, இருவரும் அந்த எதிர்காலக் கனவை தொடர்ந்தனர். சத்யாவை விட இந்தத் திருப்பம், சுகந்தியைத்தான் மிகவும் பாதித்தது. அம்மாவை, அப்பாவை, மூன்று மாத கணவனை இழந்து வாழ்வே இருளடைந்து போன நிலையென்ன, கயவர்கள் கையில் சிக்கிண்டு வேசியாய் போக வேண்டிய நிலையென்ன, பட்ட துன்பங்களையெல்லாம் துடைத்தது போல், தான் மனதார விரும்பிய, படித்த, இளைஞனை மணம் புரிந்து, மறுவாழ்வு பிறக்கப் போகும் நிலையென்ன. கனவிலும் காணா திருப்பம் இன்று. நினைத்து நினைத்து உள்ளம் நெகிழ்ந்து உருகி படுக்கையில் கிடந்தாள்.
மறுநாள் காலை ஆறுமணிக்கே, மரிக்கொழுந்து போய், புவனேஸ்வரிக்கு முன் தினம் போலவே சமையலுக்கு உதவி செய்து, டிபன் எடுத்து வந்தாள், நெய் மணக்கும் ரவா கேஸரி, பூரி, கிழங்கு, பொங்கல் என்று தன் கைவரிசையைக் காட்டியிருந்தாள் புவனேஸ்வரி. நல்ல சுவையான டிபன். சாப்பிட்டு பாராட்டு.
சித்தியின் உதவியுடன், சுகந்தி, புது பட்டுப் புடவை கட்டி, பல வருடமாய்த் தரிக்காத தன் நகைகளைப் பூட்டி, கண்ணாடி பார்த்து, சிரத்தையாய் முக அலங்காரம் செய்து. கடைசியில், அலமாரி முழுக் கண்ணாடி முன் நின்று அழகு பார்த்தாள்.
சித்தி தாடை வழித்து நெட்டி முறித்து பூரித்துப் போனாள்.
சதாசிவம் அய்யாவும் அம்மாவும், தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சி போல், அவர் முழுக்கை வெள்ளை சட்டை, தும்பை பூ வேட்டி, அங்கவஸ்திரம், உடுத்தி, நெற்றியில் பட்டை நீர் தீட்டி, குங்கும பொட்டு இட்டு, தயாரானார். பாலாமணி அம்மாவும் பட்டுச் சேலையில், புவனேஸ்வரியும் ஒரு பட்டுப் புடவை கட்டி தயாராகி, வரவேற்பறையைச் சுத்தம் செய்து, விரிப்புக்களைச் சரி பண்ணி அழகு படுத்தினாள். பூஜை அறையில் பூவால் அலங்கரித்து, அம்மன் விளக்கு, ஐந்து திரி குத்து விளக்கும் ஏற்றி வைத்தாள்.
பத்தரை மணிக்கு சத்யா எல்லோரையும் அழைத்து வந்தான் தாத்தாவை கைத்தாங்களாக கூட்டி வந்தான். கதர் வேட்டி சட்டை, சாம்பல் நிற காஷ்மீர் சால்வை போர்த்தி, கையில் கைப்பிடி வளைந்த தடி, தங்க ப்ரேம் கண்ணாடி, தடித்த முறுக்கு வெள்ளை மீசை, நெற்றியில் சந்தனப் பொட்டோடு கலையாய் கம்பீரமாய் இருந்தார் சிவதாணுப்பிள்ளை.
சத்யா பட்டு வேட்டி கரும் சிவப்பு ஜிப்பாவில்.
வந்தவர்களை முன் அறையிலேயே, நின்று, சதாசிவம் தம்பதியர், பூக்கள், சந்தன குங்குமம், கொடுத்து. வரவேற்றனர். சத்யா அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் சதாசிவத்தைப் பார்த்த, முதல் பார்வையிலேயே, நல்ல மதிப்பும் மரியாதை ஏற்பட்டு விட்டது.
வணக்கம் சொல்லி அமர்ந்தனர். அறிமுகமானது. புவனேஸ்வரியும், வந்து நின்று, அழகாய் சிரித்து வரவேற்றாள். பொட்டும், திருநீறு கீற்றுமாய், அவள் மங்களகரமான முகத்தைக் கண்டு சற்றுத் திகைப்பு, அதை வந்தவர்கள் யாரும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. பாரதியின் புதுமைப் பெண் இவள் என்று தாத்தா மனதில்.
சத்யாவின் அப்பா அம்மா இரட்டை சோபாவில் உட்கார, சத்யா அம்மா பக்கத்தில் நின்றிருந்தான். சதாசிவ அய்யா, மதுரையில் அவர் சில வருஷம் மாவட்ட நீதிபதியாக, பணி புரிந்த அனுபவம், பழகிய பெரிய மனிதர்கள் பற்றி, பொது விஷயங்கள், நாட்டு நடப்பு என்று பேச்சி சுவாரஸ்யமானது. அப்பாதான் பேசினார். தாத்தா பேசவில்லை.
அறையிலிருந்து பெண் வந்தாள். அந்த அரக்கு நிற காஞ்சிபுர பட்டுக்கும், அவள் சிவந்த மேனிக்கும் நல்ல கான்ட்ராஸ்ட், நகையலங்காரம், முக அலங்காரம் எல்லாம் சேர்ந்து, சுகந்தியின் அழகை பன்மடங்காக்கிய விந்தை கண்டு, சத்யாவுக்குப் பெருமை.
தலை குனிந்து மெல்ல நடந்து வந்து, எல்லோர் மத்தியிலும், கம்பளத் தரையில் மண்டியிட்டு வணங்கி எழுந்து சற்று விலகிய நாற்காலியில் உட்கார்ந்தாள். கொண்டு போன மல்லி சரத்தை, சிவபூஷணம், சுகந்திக்கு சூட்டினாள்.
தொடரும்...



சத்யாவுக்கும் சுகந்திக்கும் கல்யாணம் முடிஞ்சா சரி
ReplyDeleteகூட புவனஸ்வரி சேர்ந்துட்டா இன்னும் கதை நல்லா இருக்கும்
காதல் பூக்கள் எங்க சகோ
ReplyDeleteநான் தினமும் எதிர்பார்க்குறேன்
poduren bro intha stories podavey time kidaika matenguthu
Deleteசுஹாசினி, போட்டியில் இருந்து விலக, சுகந்திக்கு ரூட் clear! நல்லது நடக்கட்டும்! புவனா வும் மனோஜ் உடன் சேரட்டும்
ReplyDelete