மறுவாழ்வு 56

முழு தொடர் படிக்க

 சென்னை பெண் வீட்டார், மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி விட, சத்யாவின் தாத்தா ஒன்றும் தடை சொல்ல முடியாமல் போக, அவன் அப்பா சுகந்தியை பெண் பார்க்க சம்மதித்தார். மறுநாள், சதாசிவம் அப்பார்மென்டில் பெண்ணை பார்க்க சென்றுள்ளனர். 

அப்பாவின் முகத்தில் திருப்தியைக் கண்டு சத்யாவுக்கு நிம்மதி. அவள் படிப்பு, கேட்டார்.. 

சொன்னாள். 

"மெட்ராஸ் க்ரிஸ்டியன் காலேஜ் பா, இங்கிலீஷ் நல்லா வரும்" என்றான் சத்யா

அப்பா அவனை மேல் பார்வை பார்த்ததும், அடங்கினான். 

வேலை, சம்பளம், பொழுது போக்கு, மற்ற ஆர்வங்கள் பற்றி கேட்டார். நல்ல புத்திசாலித்தனமான பதில்கள் வந்தன. 

சிவபூஷணம், "கார சாரமா சமைப்பியா நல்லா, சிக்கன்னா எம்புள்ள காத அருத்துக்குவான்." என்றாள்.


"அம்மா......." என்றான் சத்யா. கல கலப்பானது. 

பால் பாயாசம், காரா சேவு தட்டில் வந்தது. அடுத்து, பள பளவென்ற பித்தளை டபரா செட்டில் காப்பி. 

தாத்தா ஒரு காப்பி ரசிகர். அவருக்கு சர்க்கரை கம்மியாய். உருஞ்சி ருசித்து, அருமை என்றார். 

"திருச்சிக்காரங்களுக்கு டிகிரி காப்பிக்கு போடச் ச்சொல்லனுமா?" என்றாள் சிவபூஷணம். 

"ஆனா, இந்த காப்பித்தூள், நம்மூருல கெடைக்காது போல, புது மணமா இருக்கே, வாங்கிட்டுப் போவனும்" என்றார் தாத்தா.

"ஆமா, நம்ப பக்கம் இது கெடைக்கரதில்ல. கோத்தாஸ் ன்னு ஒரு காப்பிப் பொடி, இப்ப நம்பகிட்டகூட இருக்கே கொண்டு போகலாமே" என்றாள் புவனேஸ்வரி.

சதாசிவம்தான் பேச்சை ஆரம்பித்தார். 

"அப்ப கல்யாணத்த எப்ப எங்க வச்சிக்கலாம்?"

புவனேஸ்வரி, முந்தானையை அடக்கமாய் முன் பக்கம் சொருகி, முன் வந்து நின்று பேசினாள்,


"அய்யா, காஞ்சிபுரத்தில, எங்க மாமனார், மதிப்பும் மரியாதையுமா பரம்பரையா வாழ்ந்த பெரிய மனிதர். பத்து ஏக்கர் நெலமிருக்கு, தென்னந்தோப்பு, பெரிய மாடி வீடும் இருக்கு. எல்லாம், சுகந்தி பேர்லதான். ஆனா, கல்யாணம் பண்ண எங்களுக்கு இப்ப பண பலம் இல்ல. அடுத்து ஆள் பலமும் இல்ல, அதனால, நீங்களே முன்னிருந்து செய்ய வேண்டும்னு கேட்டுக்கரன்."

சத்யாவுக்கு, என்ன சொல்லப் போகின்றார்களோ என்று ஒரு பட படப்பு. 

அப்பா, அம்மாவைப் பார்த்தார், அவள் கண் அசைத்தாள். 

"அதுக்கென்னா, மதுரையில நமக்கு இல்லாத வசதியா, நடத்திட்டாப் போச்சி." என்றார் சிவராமன். 

சத்யாவுக்கு மூச்சி வந்தது. 

சதாசிவம் அய்யா சொன்னார். "சித்திரையில செய்யலாமே." 

"ஓ செய்யலாமே, ரெண்டு மாசமாவது அவகாசம் வேணுமே ஏற்பாடு பண்ண. மண்டபம் கெடைக்கரதுதான் குருதக் கொம்பா இருக்கே இப்ப. ஊருக்குப் போயி பாத்துட்டு, சித்திரையில நல்ல முகூர்த்தமா பாத்து நடத்திடலாம்"

பேச்சி தொடர்ந்தது. 

சதாசிவம் அய்யா, தாத்தாவை பார்த்து, "நீங்க சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமா இருந்தீங்கன்னு, தம்பி சொல்லிச்சு, அது பற்றி சொல்லுங்களேன்" என்றார். 

அதுவரை மெளமாய் பேசாதிருந்த தாத்தாவுக்கு முகம் பிரகாசமானது. பேச ஆரம்பித்தார், அந்த காலத்துக்கே போய் விட்டார். விரிவாக, சத்யமூர்த்தி அய்யா பற்றி, காமராஜர் தலைமையில் பணியாற்றியது, உப்பு சத்யாக்கிரக போராட்டம், வெள்ளையன் அடக்குமுறை, சிறை வாசம் என்று சத்யாவுக்கே தெரியாத நிறைய விஷயங்களைப் பகிர்ந்தார். யாவரும் சிரத்தையாய்க் கேட்டனர். 

சத்யாவுக்கு, என்ன உந்துதலோ தெரியாது, "தாத்தா, சுகந்தியோட தாத்தாவும் சுதந்திரப் போராட்டத்தில கலந்து கிட்டவருதான். அவங்க வீட்டில, காமராசர் கூட அவரு இருந்த போட்டோவாப் பாத்தேன்." என்றான்.

"அப்டியா, அவரு பேரு.?" 

வரவேற்பறையின் எதிர் மூலையில் நின்றிருந்த சுகந்தி. முன்னுக்கு வந்து, "அப்பாதுரைப் பிள்ளை" என்றாள் பெருமையாய். 


"என்னாது....., சொல்லு திரும்ப", என்றார் தாத்தா.

"அப்பாதுரைப் பிள்ளை, தேனம்பாக்கம்"

"தொரை இருக்கானா?"

"இல்ல எறந்துட்டாரு." 

சட்டென கைத்தடியை ஊன்றி எழுந்தார், சிவதாணுப்பிள்ளை. உடல் ஆடியது, 

"என்னாட சொன்ன கண்ணு, தொரையோட பேத்தியா.........?" என்று கையை நீட்டினார். அவள் வேகமாய் அருகில் வந்தாள், அவள் கையைப் பிடித்து இழுத்து அவளை கட்டினார். 

எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி. 

தலையை சாய்த்து, உச்சந்தலையில் முத்த மிட்டு, "தொரையோட பேத்தின்னா, எம்பேத்தி இல்ல நீ......... என் செல்லமே.........." என்று உணர்ச்சி வசப்பட்டார், கண்கள் கலங்கி விட்டன. 

அவள் கையை பிடித்துக் கொண்டு, சத்யா பக்கம் கை நீட்டினார் அவன் வந்ததும், இரு கைகளையும் பிடித்து சேர்த்து வைத்தார். சட்டென அவள் குனிந்து காலைத் தொட, சத்யாவும் தொட்டான். 

"நல்லாயிருங்க கண்ணுங்களா" என்றார். 

புவனேஸ்வரி ஓடிப்போய் தாம்பூலத் தட்டை எடுத்து வந்து, பூக்களை அள்ளி பெரியவர்கள் எல்லோருக்கும் கொடுக்க, மறுபடியும் ஜோடியாய் சாஷ்டாங்கமாய் விழுந்தனர். மலர் தூவி ஆசீர்வாதம் ஆனது.

உணர்ச்சி வடிந்ததும், தாத்தா சோபாவில் உட்கார்ந்தார். கதையைத் தொடர்ந்தார். 

"நானு, அப்பாதுரைப் பிள்ளை, செல்வநாயகம் மூனு பேரும் ரெண்டு வருஷம் சேலம் சென்ட்ரல் ஜெயில்ல இருந்தோம். அப்பத்தான் எங்களுக்குள்ள அறிமுகம், ஆழமான நட்பு. சுதந்தரத்துக்குப் பிறகு, தொடர்பு கொஞ்ச கொஞ்சமா விட்டுப் போச்சி. செல்வநாயகம், கட்சில பெரிய ஆளாயாயிட்டான். முதலமைச்சர் காமராசர், டெல்லி போனப்பரம், எல்லாம் போயிடுச்சு, கெட்ட அரசியல் புகுந்து போச்சி, சுயநலம் பெரிசாப்போச்சு. நாட்டப்பத்தி அக்கரை கொறைஞ்சி போச்சி, நாங்கெல்லாம் ஒதுங்கிட்டோம். லெட்டர் போக்கு வரத்து இருந்து வந்துது. ஆனா, தொரை எறந்துட்ட செய்தி கூட தெரியாமப் போச்சே." என்று கண்களைத் துடைத்தார். 

நெகிழ்ச்சியான நேரம், எல்லாரும் அமைதி காக்க. அவரே தொடர்ந்தார். 

"மேல இருக்கரவன் விளையாட்ட என்னான்னு சொல்ல", மேலே பார்த்து ஒரு நொடி கண் மூடினார். 

"நா செல்வநாயகம் பொண்ண கட்டனும்னு பிடியாய் நின்னேன். எம்பேரன் தொரையோட பேத்திய கொண்டாந்து இதத்தான் கட்டுவேன்னு பிடிவாதம் பண்ணான். சொக்கன் (மதுரை சொக்கநாதர் மீனாட்சி) விளையாட்டு, அது பொருந்தாது, இதுதான்னு எனக்கு குட்டு வச்சிட்டாரு. அம்பது வருஷத்துக்கு முன்ன போட்ட முடிச்சி, நடக்கட்டும் நல்லவிதமா", என்றார். 

"நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க................" என்று கனீரென்ற குரல் ஒலித்தது. புவனேஸ்வரி, பூஜை அறைமுன் நின்று கண் மூடி நெஞ்சுருகும் திருவாசக, சிவபுரம் பாடலை பாடிக் கொண்டிருந்தாள். சுகந்தியும் அவள் பக்கத்தில் நின்று, தலை குனிந்து கை கூப்பி வேண்டினாள். அனைவரும் அசையாது கேட்டனர். 

பாடி முடித்ததும், "இறைவன் சித்தம்" என்று சதாசிவம் அய்யாவும் கண் மூடி உள்ளம் நெகிழ்ந்தார்.

பாலாமணி அவள் அருகில் வந்து கை பிடித்தாள்.. "இவ்ளோ அருமயா பாடுவேன்னு தெரியாமப் போச்சே" என்று. அவளும் அழகான புன்புருவல் காட்டி அகன்றாள். 

எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. பெரியவர்கள் பேச்சி தொடர்ந்தது. சிவபூஷணம், சுகந்தியை அழைத்துக் கொண்டு அறைக்குப் போனாள். புவனேஸ்வரி, மரிக்கொழுந்து சமையலில் முனைந்தனர்.

சத்யாவுக்கு மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டது. 

பன்னிரெண்டரைக்கெல்லாம் தலை வாழ இலை போட்டானது. கேரட் அல்வா, பச்சடி, துவையல், அவியல், கூட்டு, பொரியல், வறுவல், தயிர் வடை, வடை பாயசம், அப்பளம், என்று அருசுவையோடு பத்து வித ஐயிட்டங்கள் இலை நிரம்பின. 

"நம்ப பொன்னி மாதிரியே இருக்கே" என்றார் தாத்தா சாதத்தை பிசைந்து, 

"ஆமா இங்க சோனா முஸூரின்னு சொல்றாங்கய்யா."

"அருமை" என்று வாயார பாராட்டு. 

வெத்திலை தாம்பூலம் ஆனது. மறுநாள் ஊருக்கு கிளம்புவதாகவும். ஊர் போய் முகூர்த்த நாள் பார்த்து, மண்டபம் கிடைத்ததும் தெரிவிப்பதாக கூறி விடை பெற்றனர். 

தாத்தா, சுகந்தி கை பிடித்து, "வீட்டுக்கு வந்து பாக்கனும். தொரை போட்டோவெல்லாம் இருக்கா?" என்றார். 

"எல்லாம் பத்திரமா இருக்கு தாத்தா" என்றாள். "வாங்க அவசியம்." 

அவர்களுக்கு லிஃப்ட் வாசல் வரை விடை கொடுத்து உள்ளே வந்தனர். சத்யாவும் தாத்தாவை அழைத்துப் போனான். 

வீட்டினுள் நுழைந்த புவனேஸ்வரி முதலில், "மாமா அத்தை" என்று, சதாசிவம் தம்பதியர் காலில் விழுந்தாள். அவளை பார்த்து சுகந்தியும் விழுந்தாள். 

"நல்லாயிருங்க" என்று ஆசீர்வதிக்க எழுந்து நின்றார்கள். 

புவனேஸ்வரி சொன்னாள். "கடவுள் மாரி வந்து, எம் பொண்ணுக்கு வாழ்வு குடுத்திட்டீங்க. நீங்க மட்டும் இல்லன்னா, தங்க எடமில்லாம நிராதராவா நிக்கர எங்கள மட்டும் பாத்து இருந்தா அவங்க சம்மதிச்சி இருப்பாங்களான்னா, சந்தேகம்தான். நீங்க ஒதவி பண்ணலன்னா இந்த கல்யாணம் முடிஞ்சிருக்குமா."

"நாங்க என்ன பண்ணோம், அவளுக்கு நல்ல காலம் பொறந்துடுச்சி, அந்த ஈசன் கண்ணத் தொறந்து, அதை எங்க மூலம் பண்ணியிருக்கார். அதான் சிவதாணுப்பிள்ளையே சொன்னது போல், நண்பர்கள் இருவரது பேரன் பேத்தினுக்கும் எப்பவோ போட்ட முடிச்சி. அந்த ஈசன் விளையாட்டே விளையாட்டு, அவன்தான் சூத்ரதாரி, நாமெல்லாம் கைப் பொம்மைகள்", என்றார் பெரியவர். 

"இல்லிங்க அய்யா", என்று சுகந்தி தொடர்ந்தான். "ரொம்ப குறுகிய கால அறிமுகந்தான். என்ன ஒங்க பேத்தியா நெனச்சி, இந்த பொண்ணு பாக்கர நிகழ்ச்சிய ரொம்ப கௌரவமா நடத்தி, எங்க அந்தஸ்த உயரத்திட்டீங்க. பெரிய மனசு உங்களுக்கு. நாங்க நன்றி பட்டவங்களாயிட்டோம்." 

"இருக்கட்டும் கண்ணு, ஏதோ எங்களால முடிஞ்ச நல்ல காரியம். இனி நீ எங்க பேத்தியாவே இருந்துட்டுப் போயேன் தாராளமா." என்று பாலாமணி சுகந்தியை அணைத்து, தலையை தொட்டு ஆசீர்வதித்தாள். 

பெரியவர்களை வீட்டில் விட்டு விட்டு, வந்த சத்யாவும் கலந்து கொண்டு, பெரியவருக்கு புவனேஸ்வரி சுகந்தி சொன்னது போலவே கால் தொட்டு நன்றி சொன்னான். 

"நல்லது நடக்க நாங்க தொணையா இருந்தது சந்தோஷம்." என்றார். 

"நல்லது அய்யா அப்டியே ஆகட்டும், ரொம்ப சந்தோஷம் எங்கள ஒங்க குடும்பமா நெனக்கரதுக்கு," என்று கை கூப்பினான்.

"அப்ப, நா ஆபீஸ் கௌம்பிரேங்கா" என்றான் புவனேஸ்வரியிடம்.

"ராத்ரி காலைல ஒன்னும் சமைக்க வாணாம்ன்னு சொல்லு அம்மாகிட்ட. மரிகொழுந்து இருக்காலே கொடுத்து விடரன்" என்றாள். 

சதாசிவம், பாலாமணி அறையில் போய் ஓய்வெடுக்க போயினர்.

புவனேஸ்வரியும் சுகந்தியும், உட்கார்ந்தனர் சாப்பிட மரிக்கொழுந்து பரிமாறினாள். 

"அடுத்து டிரைவருக்கு சாப்பாடு போடனும்" என்றாள், மரிக்கொழுந்து,

"ஓ.... இங்கயே வந்து, சாப்பிட்லாமே கீழ போயி கூப்டு வாயே", என்றாள் புவனேஸ்வரி. "ஆங் அப்டியே, அங்க செக்யூரிட்டி ஒருத்தர், வனத்தையன்னு, பட்டாளத்துக்காரர், அவரையும் கூப்டு, அம்மா சாப்ட கூப்டாங்கன்னு. ரெண்டு பேருக்கும் ஒன்னா எல போட்டுடலாம்" என்று மரிக்கொழுந்துவை அனுப்பினாள்.

"லிஃப்டுல தனியா கீழ போவல்ல?"

"தெரியும்மா, ஆனா கீலப் போவ எந்தப் பொத்தான் அமுக்க..ன்னு தெரியாதே. மேல வீட்டுக்கு போவ இங்க வர, எந்த பொத்தான்னு சத்யா தம்பி காட்டி குடுத்துது, அதாந் தெரியும்."

சுகந்தி சிரித்து விட்டு, "நா போய் கூட்டியாரன் சித்தி" என்று போனாள்.

டிரைவரும் வனத்தையன்யும் வந்து கை கழுவி தரையில் உட்கார்ந்தனர். இலை போட்டு, மரிக்கொழுந்துதான் பரிமாறினாள்.

வனத்தையன், "என்னாம்மா இன்னிக்கு விஷேஷம் சாப்பாடெல்லாம் ரொம்ப தட புடலாயிருக்கு." எனக்கேட்டான். 

"நம்ப பாப்பாவுக்கு, கல்யாணம் முடிஞ்சிருக்குப்பா"

"மாப்ள யாரு,?"

"தெரியாதா, சத்யா தம்பிதான்." 

"ரொம்போ சந்தோஷம்மா. ஆமா தம்பியும், ஒங்க திருச்சிங்களா."

"இல்ல........ ஒங்க மதுரைதான், தோ மரிக்கொழுந்தும் ஒங்கூருதான்" என்றதும், வனத்தையன் அப்பொழுதுதான் நிமிர்ந்து மரிக்கொழுந்துவை பார்த்தான். 

"மருதையா புள்ள நீ?" 

அவள் வெட்கப் பட்டு "ஆமந்தே, பக்கத்தில வெள்ளப்பாறபட்டி" என்றாள்.

"அப்ப, தென்பளஞ்சி தெரியுமா?"

"அதத்தெரியாதான்ன, பக்கந்தானே, தெக்கால."

"அதேன் எங்கூரு"

"அப்டியா தென்பளஞ்சிக்காரரா நீக. அம்மாடி" என்று பேச்சி தொடர்ந்தது. இதை புவனேஸ்வரி, வேடிக்கை பார்த்துக் கொண்டே, தன் அறைக்குப் போய் கதவை சாத்தி, கட்டிலில் படுத்து தலை சாய்த்தாள். விடியக்காலை மூனு மணிக்கு எழுந்தது, பம்பரமாய் சுயன்ற அசதி, கண்ணை மூடியதும் வந்துவிட்டது. சுகந்தியும் படுத்து தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

சத்யா வீட்டில் எல்லோரும் மத்யானம் தூக்கம் போட்டு, எழுந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஐந்து மணியிருக்கும், மரிக்கொழுந்து வந்தாள், "வந்தியாடி, எங்க அங்கயே தங்கிட்டியான்னு பாத்தேன், தலை வலிக்குது, காப்பி போடு" என்று விரட்டினாள் சிவபூஷணம்.

காப்பி ஆனதும், உட்கார்ந்து பேசினர். கல்யாணப் பேச்சேதான். சத்யாவும், அம்மா பக்கத்தில் உட்கார்ந்து சுவாரஸ்யமாய் கலந்து கொண்டான். 

தாத்தாவுக்கு இந்த எதிர்பாரா திருப்பத்தில், இறைவன் காட்டிய வழியென்று, மிகவும் திருப்தி. 

சிவபூஷணத்துக்கும் புது மருமகளாக வரப்போகும் சுகந்தி பற்றி, ஏக திருப்தி. சாப்பாட்டுக்கு முன், கிடைத்த இரண்டு மணி நேரத்தில், அவளுடன்தான் தனியாக உட்கார்ந்து நிறைய பேசினாள். 

'பெண் நல்ல மாதிரிதான். நல்ல குடும்பத்தில் பிறந்த குணம் தெரிகின்றது. புவனேஸ்வரியின் பார்வையில், மேலும் கோயில், சாமி, அடக்கம், பேச்சி சுத்தம் என்று மெருகேறி நன்கு வளர்ந்துள்ளாள். பெரிய மருமகள், பெரிய இடத்துப் பெண். அப்டியில்ல, முறுக்காய் இருப்பாள். பணிவு இருக்காது. இளங்கோ, நல்ல பிள்ளை, பொறுமை, எதையும் பொறுத்துக்குவான். சின்னவன் அப்டியெல்லாம். விட்டுக் கொடுத்து போகமாட்டான், கொஞ்சம் கோபக்காரன், இவ அவனுக்குத் தகுந்த மாதிரி அடங்கி நடந்துக்குவா சத்யாவுக்கு பொறுத்தமானவதேன்' என்று, எடை போட்டு உரசிப் பார்த்து விட்டாள். 

'பையன் கெட்டிக்காரன் தனக்கேத்த பொண்ணை தானே தேர்ந்தெடுத்திருக்கான் என் சின்ன பிள்ளை', என்று பூரிப்பு.

சிவராமனுக்குத்தான், அவ்வளவு திருப்தியில்லை. பெரிய இடத்து சம்பந்தம் கை நழுவியது, இன்னம் ஏதேனும் லைஸன்ஸ் கெடச்சி, தன் வியாபார விருத்தி கனவில் இருந்தவருக்கு, பெரும் ஏமாற்றம். 

'இந்த சம்பந்தம் நமக்கெதுக்கு, ஒரு பைசா தேறாது, ஊருக்குப் போயி ஏதாவது காரணங்காட்டி, வெட்டி விடலாம்ன்னு பாத்தா, இந்த அப்பா பழசக் கௌறி ஒத்துக்க வச்சிட்டாரு, கொள்வினை கொடுப்பனை இல்லாத புது உறவை பற்றி, சுற்றம் என்ன சொல்லுமோ' 

கடைசியில் கல்யாண செலவெல்லாம் அவர் தலையில். மனைவியிடம், அது பற்றி தனியாக, லேசாக தொட்டார். அவள் பிடித்துக் கொண்டாள். 

'பணம் பணமின்னு அதே குறி, சம்பாரிச்சு பணத்த சேத்து வக்கரது யாருக்கு, நம்ப புள்ளங்களுத்தானே. ஒரு புள்ள அப்டின்னா ஒரு புள்ள இப்டி, மனசார செய்யுங்களேன்' என்று அழுத்தமாய் சொன்னதும் வாயை மூடிக் கொண்டார், அதன் பின் அந்த பேச்சே இல்லை. 

இரவு சாப்பாடும், புவனேஸ்வரி கொடுத்து விட்டாள். மணத்தக்காளி வத்தல் காரக்கொழம்பு, அப்பளம், நாக்கை தட்டி சாப்பிட்டனர். சத்யா வெளியில் போய், சிக்கன் சிக்ஸ்டி ஃபை வருவல் வாங்கி வந்து விட்டான். சத்யாவைவிட, சிவபூஷணத்துக்குத்தான், கவிச்சி வாசனை இல்லாமல் எதுவும் இறங்காது. 

மறுநாள் காலை, ஆப்பம் வந்தது. "சம்பந்தியம்மா சமையல்ல, நம்பள அசத்திடராங்க" என்று சிவபூஷணம் வயிறு முட்ட, மறந்து போன ஆப்ப பலகாரத்தை உள்ளே தள்ளினாள். சாப்பாட்டுப் பிரியை. ஃப்ள்டர் காப்பியும் சேர்ந்து அருமை. 

பத்து மணியளவில், ஊருக்குப் புறப்பட்டனர். புவனேஸ்வரி மட்டும் சத்யா வீட்டுக்கு வந்தாள். கோத்தாஸ் காப்பிப் பொடி பாக்கெட் நான்கு, மணத்தக்காளி வத்தல், பிஸ்கட், நொருக்குத் தீனி, ப்ளாஸ் கில் காப்பி என்று பை கூடையில் வைத்து எடுத்து வந்திருந்தாள். சிவபூஷணத்திடம் கொடுத்து பயணத்துக்கு என்றாள்.

"எம்மருக எங்க?"

"அவளுக்கு லீவு இல்லயாம்."

"நல்லது வாரேன், சம்பந்தியம்மா, எம் மருமவ பத்ரம்" என்று சிரித்து, புவனேஸ்வரி கை பிடித்து விடை பெற்றாள் சிவபூஷணம்.

புவனேஸ்வரி, சம்பந்திகளை ஊருக்கு அனுப்பிவிட்டு, சத்யாவுடன், பாலாமணி வீட்டுக்கு வந்து, தம்பதியருக்கு நன்றி சொல்லி, தற்காலிக குடியிருப்பை காலி செய்து, படுக்கை பொருட்களை எடுத்துக் கொண்டு, சத்யா வீட்டுக்குத் திரும்பினர்.

காலையிலேயே சுகந்தி ஆபீஸ் சென்று விட்டாள். சத்யாவும் ஆபீஸ் கிளம்பினான். அவனுக்கு ஒரு கப் காப்பி சூடாய் போட்டு கொடுத்து அனுப்பிவிட்டு, புவனேஸ்வரி, தன் அறையில் வந்து படுத்தாள். நான்கு நாட்களாய், படுக்கக் கூட நேரமில்லாமல் சமையல் வேலை. உடல் அசந்து போனது. எல்லாம் நம்ப சுகந்திக்குத்தான். மனத்தின் சுமை இறங்கி, லேசானது. 

'எவ்வளவு பெரிய மாற்றம். இதற்குத்தான், அந்த கடத்தல்கார்ர்கள் துரத்தி துரத்தி விரட்டி, பெங்களூக்கு கொண்டு வந்து சேர்த்தார்களா. சிவதாணுப்பிள்ளை சொன்னது போல் அந்த பெருமான் செயல்தான் இது.'

அவர் சுகந்தியை தன் பேத்தி என்று உணர்ச்சி வசப்பட்டு கூறியதும், புவனேஸ்வரிக்கு சட்டென புரிந்து போனது அது அந்த தில்லைக் கூத்தன் செயலே என்று. உள்ளம் நெகிழ்ந்து, தன்நிலை மறந்து, அவனை நினைத்து திருவாசம் பாடினாள். 

சுகந்திக்கு மறுவாழ்வென்றால், அடுத்து தனக்குந்தான் என்று உள்ளம் உவகையில் மகிழ்ச்சி பொங்கியது. 

இந்த செய்தியை மனோவுக்கு உடனே சொல்ல வேண்டும். தனிமை கிடைக்காததால், மனோவுடன் பேசி ஒரு வாரம் மேல் ஆகின்றது. அன்று அவர்கள் பேசும் நாள். பிற்பகல்தான் பேசும் நேரம். இருந்தும், பதினோரு மணிக்கே மிஸ்டு கால் கொடுத்து விட்டு, காத்திருந்தாள். கண்கள் சுயட்ட தூக்கம் அணைத்தது. 

அரைமணி கழித்து போன் வைப்ரேட்டர் மார்பில் அலற, திடுக்கிட்டு எழுந்தாள். அவள் மனோதான். அந்த மகிழ்ச்சியான செய்தியை அவசரமாய் சொன்னாள். அவன் கங்கிராசுலேஷன் சொன்னான். அடுத்து அவர்கள் எதிர் கால திட்டம் தீட்டப் பட்டது. 

ஏப்ரல், சுகந்தி திருமணத்திற்கு மதுரைக்கு அவன் அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். ஒத்துக் கொண்டான். அடுத்து சில மாதங்கள் சென்று அவனுக்கு சௌகரியம் போல் லீவு எடுத்து வந்தால், தங்கள் மேரேஜ் முடித்துக் கொள்ளலாம். அது முடிந்து அவள் அவனுடன் பீகானர் பயணம் செய்து வாழ்வை துவக்கலாம். பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். 

சத்யாவுக்கும், சுகந்திக்கும் அவரவர் வேலையில் கவனமே இல்லை. மாலை சத்யா காத்திருந்து, பைக்கில் அவளை அள்ளிக் கொண்டு போனான். முழு உரிமை பெற்றவள், இடுப்பில் கை போட்டு, முலைகள் அழுந்த கட்டிக்கொண்டு போனாள். 

லால்பாக் சென்றான். இரண்டு பெரிய ஐஸ்க்ரீம் கப் வாங்கி, பைக்கை வெளியில் நிறுத்தி உள்ளே கை கோர்த்து நடந்தனர். மரம் செடி கொடியிடையே தனிமை தேடிப் போய், உட்கார்ந்தனர். மீதி ஐஸ்கிரீமை வைத்துவிட்டு, உடன் கட்டிப் பிடித்து தீவிர முத்தம், ஐஸ்க்ரீம் தடவிய உதடுகள் மேலும் சுவையூட்டின. அவை, தேய்ந்து எரியும் வரை முத்தம் தொடர்ந்து, மூச்சு வாங்க பிரிந்தனர். 

கடந்த நான்கு நாட்களாய் என்னென்ன நிகழ்வுகள். முதலில் சென்னை பெண் வாண்டாம் என்று மறுத்தது, அடுத்து தாத்தா. நடந்த திருப்பங்கள் சினிமா க்ளைமேக்ஸ் போல் வந்து, அவர்களை அதிர வைத்திருந்தது. தனிமையில் சந்தித்து, அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளவும் சந்தர்ப்பம் இல்லை. யாரும் காணாத பொழுது கண்களால் பேசியதோடு சரி. இப்பொழுது நேரில் பேசிப் பேசி, இனி தடையேதும் இல்லை தங்கள் கல்யாணத்திற்கு என்று வானில், சிறகடித்துப் பறந்தனர். கிடைத்த நேரம்தான் குறைவு, கிடைத்திருந்தால், இரவு முழுதும் பேசலாம் அவ்வளவு விஷயம் கொட்டிக் கிடந்தது. 

'மணி ஐந்தரை. சித்திக்கு பதில் சொல்லனும்' என்று கிளம்ப அவசரப்படுத்தினாள். 

ஆறுமணிக்கெல்லாம் இருட்டிவிடும், இருட்டின் துணையில், இன்னும் நெருக்கமான விரும்பியதைத் தொடல், தடவல் பிசைதலுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம். 

போகட்டும், இனி அவை தனக்கே உரிதானது, சில மாதங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும், அவ்வளவே என்று சமாதானம் செய்து கிளம்பினர். 


தொடரும்...

Comments

  1. எப்படியும் தாத்தா முடிவு பண்ணுவது தான் சத்யா வுக்கு ன்னு, ப்ரம்ம லிபி! காதல் பறவைகள், காமத்தில் சிறகடித்துப் பறக்கட்டும்! எல்லோருக்குமே மறுவாழ்வு கிடைக்கட்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

என் குடும்பம் 59

என் குடும்பம் 60