மறுவாழ்வு 60
முழு தொடர் படிக்க மதுரையில், சத்யா சுகந்தி திருமணம் வரவேற்புக்கு மறுநாள் காலை, ஏழரை ஒன்பது முகூர்த்தம். முன்னாள் இருந்ததில் கால் வாசி பேர்கள்தான். முக்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே. இரவு பேருந்தில், காஞ்சிபுரத்திலிருந்து, சுகந்தியின் சின்னப் பாட்டி ஆண்டாளம்மாள், தன் வளர்ந்த பேரன் துணையுடன் வந்திருந்தாள். புவனேஸ்வரி, உறவினர்களை நேரில் அழைத்து, பத்திரிகை அனுப்பி வைப்பதாகச் சொல்லி வந்தாள். ஆனால், பாட்டியைத் தவிர ஒருவரும் எட்டிப் பார்க்கவில்லை. அவ்வளவு ஒட்டுதல் பங்காளிகள். நல்ல வேலை அவர்கள் யாரும் வரவில்லை. இல்லையெனில், சுகந்தி பற்றிய உண்மையை, மாப்பிள்ளை வீட்டாரிடம் கொளுத்திப் போட்டாள், பத்தி எரிந்திருக்கும். கடவுள்தான், அவர்களை நிறுத்தி வைத்திருக்க வேண்டும். மத்தளம் கொட்ட வரிசங்கு நின்றூத கைத்தளம் பற்ற கனாக் கண்டேன் தோழி என்ற பாடல் போல், தன் வாழ்வில் மறுதாலி ஏறுமா என்று கனாக் கண்டவள் கழுத்தில், தன்னுயிர் காதலன், கட்டினான் தாலியை. மேலோர் கீழோர் எல்லாரும் வாழ்த்தி ஆசி வழங்கினர். புவனேஸ்வரி கண் கலங்கி மலர் தூவினாள். தான் பெறாத மடிச்சுமை இறங்கியது போலானது. மதி...