மறுவாழ்வு 62
முழு தொடர் படிக்க சத்யாவும், சுகந்தியும், ரிஸார்ட்டில் தேன் நிலவை கொண்டாடி மகிழ்கின்றனர். இரவு சாப்பிட ரெஸ்டாரென்ட் போக கிளம்பி, நிலவொளியில், நடந்தனர். ரெஸ்டாரென்ட், வித்யாசமாக எண் கோண வடிவத்தில், மரத்தில் நாலடி உயர் மேடை அமைப்பு. மேசைக்கு மேல் மட்டும் ஒளி விளக்கு. வெளிநாட்டவர் பலருக்கு மத்தியில் அமர்ந்தனர். "அய்யா சாமி சிக்கன் தவிர வேற எதுவேண்ணா ஆர்டர் கொடுங்க சாமி" என்ற பத்தினியின் உத்தரவை மீற முடியவில்லை. கடல் வாழ் இனங்களின் துணையை நாட வேண்டியதாகி விட்டது. குட்டி இறால் ப்ரைட் ரைஸ், ஸியர்ஸ்(வஞ்சினம்) வருவல், மீன் குழம்பு, சாதம், சாரு(ரசம்) என்று ஆர்டர் ஆனது. எல்லோருக்கும் பொதுவாகப் பலவித புட்டிங், கேக், ஐஸ்க்ரீம், நறுக்கிய பழங்கள், சாலட், என்று தனியாக அடிக்கி வைத்திருந்தனர். தட்டு நிறைய பழங்கள், குடிக்க திராட்சை சாறு எடுத்து வந்து, ஆரம்பித்தனர். மெல்லிய தாலாட்டும், ஹிந்துஸ்தானி ஸிதார் இசை. வந்த ஐயிட்டங்கள் யாவும் பிரத்யோக சுவையில். சூடாய் குட்டி குலோப் ஜாமூனுடன் நிறைவானது. நாவுக்கு, வயிற்றுக்கு, மனதுக்கு திருப்தியாய் அமைந்தது. முடித்து, தங்கள் குடிலுக்குக...