காதல் சுகமானது 2
written by raja
"வினோத் ஒரு நிமிஷம் என்னோட கேபின்க்கு உடனே வாங்க" - HR மிருதுளா அழைத்தாள்.
மிருதுளா வினோத்தை பார்த்து "ஹே வினோத், இவங்க உங்க டீம்ல இன்னிக்கு ஜாயின் பண்ணி இருக்காங்க, இவங்களுக்கு வேலை பற்றிய விவரம் எல்லாம் சொல்லி கொடுங்க."
"Bye the bye சஞ்சனா. இவர் வினோத் உங்க TL, உங்க ROUTINE JOB பற்றி எல்லாம் சொல்லி கொடுப்பார். BEST OF LUCK FOR YOUR JOB." என்று சஞ்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்தாள்.
"YAA THANK YOU VERY MUCH மிருதுளா", என்று சஞ்சனா புன்னகைக்க அவள் முத்து பற்கள் பளீரென மின்னியது.
வினோத் சஞ்சனாவை அழைத்து சென்று, "சஞ்சனா உங்க சீட் இது. நம்ம கம்பெனி பல்வேறு வழிகளில் விளம்பரம் செய்யும். அதை பார்த்து கஸ்டமர் ஃபோன் மூலமாகவும் நம் கம்பெனி website மூலமாகவும் ENQUIRY செய்வார்கள். அவர்களின் DETAILS இந்த LEAD BASKET இல் வந்து பதிவு ஆகி கொண்டே இருக்கும். நீங்கள் இதில் வந்து விழும் மொபைல் நம்பரை பார்த்து அவரிடம் நம்ம PRODUCT DETAILS சொல்லி ஆர்டரை எடுக்க வேண்டும். உங்களுக்கான MONTHLY TARGET details நான் email பண்றேன். அதை நீங்கள் முடிக்கும் பொழுது உங்களுக்கு ADDITIONAL INCENTIVE கிடைக்கும். உங்களுக்கு சந்தேகம் ஏதாவது இருந்தால் நான் பக்கத்து கேபினில் தான் இருப்பேன். என்னை அழையுங்கள். BEST OF LUCK TO DO YOUR TARGET." என்று வினோத் கை நீட்ட
"THANK YOU VINOTH" என்று சஞ்சனாவும் கை குலுக்க, அது அவளின் பஞ்சு போன்ற உள்ளங்கையின் மென்மையை வினோத்திற்கு உணர்த்தியது.
உடனே அதை பார்த்து கொண்டு இருந்த இருவர் "வினோத் உங்க பையனுக்கு வரும் பொழுது DIAPER வாங்கிட்டு வரணுமாம், உங்க பொண்டாட்டி சொல்ல சொன்னாங்க" என்று பக்கத்தில் உள்ள டீம் மெம்பர் கலாய்க்க
'அடப்பாவிங்களா, கையை தான்டா குடுத்தேன். அதுக்கேவா!' என மனதில் நினைத்துக்கொண்டான் வினோத்.
"YAA THANK YOU VERY MUCH மிருதுளா", என்று சஞ்சனா புன்னகைக்க அவள் முத்து பற்கள் பளீரென மின்னியது.
வினோத் சஞ்சனாவை அழைத்து சென்று, "சஞ்சனா உங்க சீட் இது. நம்ம கம்பெனி பல்வேறு வழிகளில் விளம்பரம் செய்யும். அதை பார்த்து கஸ்டமர் ஃபோன் மூலமாகவும் நம் கம்பெனி website மூலமாகவும் ENQUIRY செய்வார்கள். அவர்களின் DETAILS இந்த LEAD BASKET இல் வந்து பதிவு ஆகி கொண்டே இருக்கும். நீங்கள் இதில் வந்து விழும் மொபைல் நம்பரை பார்த்து அவரிடம் நம்ம PRODUCT DETAILS சொல்லி ஆர்டரை எடுக்க வேண்டும். உங்களுக்கான MONTHLY TARGET details நான் email பண்றேன். அதை நீங்கள் முடிக்கும் பொழுது உங்களுக்கு ADDITIONAL INCENTIVE கிடைக்கும். உங்களுக்கு சந்தேகம் ஏதாவது இருந்தால் நான் பக்கத்து கேபினில் தான் இருப்பேன். என்னை அழையுங்கள். BEST OF LUCK TO DO YOUR TARGET." என்று வினோத் கை நீட்ட
"THANK YOU VINOTH" என்று சஞ்சனாவும் கை குலுக்க, அது அவளின் பஞ்சு போன்ற உள்ளங்கையின் மென்மையை வினோத்திற்கு உணர்த்தியது.
உடனே அதை பார்த்து கொண்டு இருந்த இருவர் "வினோத் உங்க பையனுக்கு வரும் பொழுது DIAPER வாங்கிட்டு வரணுமாம், உங்க பொண்டாட்டி சொல்ல சொன்னாங்க" என்று பக்கத்தில் உள்ள டீம் மெம்பர் கலாய்க்க
'அடப்பாவிங்களா, கையை தான்டா குடுத்தேன். அதுக்கேவா!' என மனதில் நினைத்துக்கொண்டான் வினோத்.
"சரி சஞ்சனா நீங்க உங்க வேலையை பாருங்க" என்று விடை பெற்றான்.
பாலாஜி அரக்க பறக்க ஓடிவந்து "டேய் ஜார்ஜ், நம்ம டீமில் ஒரு சூப்பர் ஃபிகர் வந்து இன்னக்கி ஜாயின் பண்ணி இருக்கு,"
பாலாஜி அரக்க பறக்க ஓடிவந்து "டேய் ஜார்ஜ், நம்ம டீமில் ஒரு சூப்பர் ஃபிகர் வந்து இன்னக்கி ஜாயின் பண்ணி இருக்கு,"
"தங்க நிற தேகம், சுண்டி விட்டா சிவந்து போகும் கலர், ஆரஞ்சு சுளை உதடுகள், சிக்கென்ற இடுப்பு, செதுக்கி வைக்கப்பட்ட கனிகள். ஆப்பிள் போல கன்னம், கழுத்து, மூக்கு இன்னும் சொல்லி கிட்டே போகலாம். எடுப்பான நாசியில் இருக்கும் சின்ன மூக்குத்தி, சிவந்த நெற்றியில் இரு புருவங்களுக்கு இடையே சின்ன சந்தன கீற்று. சாமுத்திரிகா லட்சணபடி எது எது எப்படி இருக்கனுமோ அப்படி இருக்கா, சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தேவலோகத்தில் இருந்து வந்த தேவதை மாறி இருக்கா", என்று அவள் அழகை வர்ணித்தான் பாலாஜி.
"அப்படியா, அப்ப உடனே போய் பார்க்கலாம் வாடா", ஜார்ஜ் தன் இருக்கையில் இருந்து எழுந்து அவளை பார்க்க பாலாஜியை துணைக்கு அழைத்தான்.
ஜார்ஜ் சென்று சஞ்சனா அழகை பார்த்து மயங்கி, "டேய் பாலாஜி நீ வர்ணிச்சதே ரொம்ப கம்மிடா, இவ அதை விட பல மடங்கு அழகா இருக்காடா. இவ்வளவு அழகான பொண்ணை நான் என் வாழ்கையில் பார்த்தததே இல்லடா"
"ஆமாடா ஜார்ஜ், இந்த பொண்ணை கட்டிக்க யாருக்கு குடுத்து வச்சு இருக்கோ"
ஜார்ஜ் அவனை கோபமாக பார்த்து, "டேய் அந்த லக்கி person நான் தான்டா"
"டேய் அப்போ நீ இப்ப லவ் பண்ற காயத்ரி"
"இதற்கு மேல் காயத்ரி என்னோட பத்தாவது exlover. இவ தான் இனிமே என்னோட புது லவ்வர்."
"டேய் ஜார்ஜ், இங்க இருக்கிற பொண்ணுங்க வேணா உன் பின்னாடி சுற்றலாம். ஆனா இவ உன்கிட்ட அவ்வளவு சீக்கிரம் மடிய மாட்டா."
"டேய் கடலில் எந்த மீனுக்கு எப்படி வலை வீசனும் என்று எனக்கு தெரியும் போடா."
"டேய் ஜார்ஜ் இது சாதாரண மீன் மாதிரி தெரியல, சுறாடா.. உன் வலையையே கிழிச்சி போட்டுடும்."
"சுறா மீனுக்கு என்ன வலை விரிக்கணுமோ நான் அந்த வலையை விரிச்சி பிடிச்சுக்கிறேன். நீ உன் வேலையை பாரு" என்று ஜார்ஜ், பாலாஜியை விரட்டினான்.
ஜார்ஜ் இங்கு வேலை செய்யும் பல பெண்களின் கனவு நாயகன். தினமும் ஜிம் சென்று தன் உடலை கட்டு கோப்பாக வைத்து இருப்பவன். இவனிடம் மடியாத பெண்களே கிடையாது. எந்த பெண்ணை எப்படி வளைக்க வேண்டும் என்ற ரகசியம் அறிந்தவன்.
"Hi சஞ்சனா, Have a coffee" என்று ஜார்ஜ் ஒரு கோப்பையில் காபி அருந்தி கொண்டே இன்னொரு காஃபி கோப்பையை அவளிடம் நீட்டினான்.
"நீங்க.... ?" சஞ்சனா புருவத்தை வளைத்து கேட்க
"Meeee... ஜார்ஜ்" சிரித்துவிட்டு "கமான் சஞ்சனா என்னை பற்றி நானே சொல்ல கூடாது இருந்தாலும் சொல்றேன். என்னை தெரியாதவங்க இந்த ஆபீஸ்ல யாருமே கிடையாது. டாப் performer in our team. என்ன ரேகா என்னை பற்றி எல்லாம் ஒன்னும் சொல்லவில்லையா?"
"Hey சஞ்சனா, இவர் தான் ஜார்ஜ். இங்க இருக்கிற எல்லா பெண்களோட ஹீரோ இவர் தான். நம்ம டீம்மேட். and star performer."
"ஓ, nice to see you george. and thanks for your coffee."
"அப்புறம் சஞ்சனா, ஒரு முக்கியமான விசயம் இங்க நம்மளோட முதல் எதிரி sales டீம் தான். நம்ம tele sales டீமுக்கும் அந்த bloody sales டீமுக்கும் ஒரே கஸ்டமருக்காக அடிக்கடி clash வரும். அப்படி பிரச்சினை வரும் பொழுது என்னை கூப்பிடுங்க. நான் உங்க பிரச்சினையை solve பண்ணி தரேன்."
"Thanks for your concern ஜார்ஜ், அந்த மாதிரி பிரச்சினை வந்தால் நானே handle பண்ணிக்கிறேன்.இந்த தடவை மட்டும் நீங்க கொண்டு வந்த காஃபியை எடுத்து கொள்கிறேன். அடுத்த தடவை எனக்கு தேவை என்றால் நானே போய் குடிக்கிறேன். நீங்கள் எடுத்து வர வேண்டாம் நன்றி." என்று சொல்லிவிட்டு அமைதியாக சஞ்சனா வேலை பார்க்க தொடங்கினாள்.
ஜார்ஜ் முதல் முறை தான் மூக்கறுப்பட்டது போல் உணர்ந்தான்.
'ச்சே ! எந்த பெண் ஆனாலும் முதல் முறை என்னை பார்க்கும் பொழுதே என் அழகு மற்றும் ஸ்டைலை பார்த்து விழுந்து விடுவார்கள். ஆணழகனான என்னையே அசிங்கப்படுத்தி விட்டாளே' என்று அவனுக்கு கோபம் வந்தது.
"வா மச்சான் போன காரியம் என்ன ஆச்சு?" பாலாஜி ஆர்வத்துடன் கேட்க
ஜார்ஜ் அவனை பார்த்து "நீ சொன்னது சரி தான் பாலாஜி, சுறா மீனாச்சே, நேரம் பார்த்து தான் வலை வீச வேண்டும். பேரழகி என்ற திமிர் வேற நிறைய இருக்கு. இரு அடக்கி காட்டறேன்"
சஞ்சனா தன் ஹேன்ட் பேகில் இருந்து ஒரு தங்க மோதிரத்தை வெளியே எடுத்தாள். அதை பார்த்து "டேய் ஏழு வருஷம் எப்படி போனது என்றே தெரியவில்லை. ஆனா ஒருநாள் கூட நான் உன்ன நினைக்காமல் இருந்ததே இல்லை. தினமும் என் கனவில் வருகிறாய். கனவில் வந்த நீ எப்போது நேரில் வருவாய்" என்று மனதில் சொல்லி கொண்டு மீண்டும் அந்த மோதிரத்தை எடுத்து உள்ளே வைத்தாள்.
***************
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா,
நேரம் வரும் பார்த்து இருந்து பாடு ராஜா ,
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா,
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா,
நேரம் வரும் பார்த்து இருந்து பாடு ராஜா ,
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா,
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா,
என்ற பாடல் தன் ear phone இல் ஒலிக்க, அதை ஹம்மிங் பண்ணி கொண்டு ஜாலியாக வண்டி ஓட்டி கொண்டு இருந்தான் இந்த கதையின் நாயகன் ராஜா.
மாநிறம், அகன்ற நெற்றி, சற்றே கூரான நாசி, சதுர முகம், விரிந்த மார்பு, உயரம் 6 அடிக்கு 1" குறைவு. மீசை ஒன்றிரண்டு நரைத்து அவன் வயது 31 முடிந்து 32 என காட்டியது.
தன் வண்டியை ஒரு டீக்கடையின் முன்பு நிறுத்தினான். அங்கு ஏற்கனவே அவனது நண்பர்கள் வாசு, ராஜேஷ், சீனிவாசன், முத்து இருந்தனர்.
"என்ன ராஜா இன்னிக்கி லேட்", ராஜேஷ் கேட்க
"இல்ல மச்சான், ஊருக்கு போய்ட்டு அப்படியே direct field வரேன். அதான் லேட்."
"டேய் அப்போ எனக்கு ஷூ வாங்கிட்டு வந்தீயா?" ராஜேஷ் ஆர்வத்துடன் கேட்க
"மறப்பேனா மச்சான். ஆம்பூரில் இருந்து ஒரிஜினல் லெதர் ஷூ வாங்கி வந்து இருக்கேன். சரியா இருக்கான்னு போட்டு பாரு?"
ராஜேஷ் போட்டு பார்த்து விட்டு, "சூப்பர்டா சரியா இருக்கு. எவ்வளவு விலை இது?"
"800 ரூபா மச்சான்."
"ஓகே நான் gpay பண்ணி விடறேன்."
சீனிவாசன் அதை வாங்கி பார்த்து விட்டு "டேய் இதே பிராண்ட் husk puppies ஷூ தான் போன வாரம் வாங்கினேன்டா. என்கிட்ட 1400 ரூபா புடுங்கிட்டான் டா ஷோரூம்காரன் ."
தன் வண்டியை ஒரு டீக்கடையின் முன்பு நிறுத்தினான். அங்கு ஏற்கனவே அவனது நண்பர்கள் வாசு, ராஜேஷ், சீனிவாசன், முத்து இருந்தனர்.
"என்ன ராஜா இன்னிக்கி லேட்", ராஜேஷ் கேட்க
"இல்ல மச்சான், ஊருக்கு போய்ட்டு அப்படியே direct field வரேன். அதான் லேட்."
"டேய் அப்போ எனக்கு ஷூ வாங்கிட்டு வந்தீயா?" ராஜேஷ் ஆர்வத்துடன் கேட்க
"மறப்பேனா மச்சான். ஆம்பூரில் இருந்து ஒரிஜினல் லெதர் ஷூ வாங்கி வந்து இருக்கேன். சரியா இருக்கான்னு போட்டு பாரு?"
ராஜேஷ் போட்டு பார்த்து விட்டு, "சூப்பர்டா சரியா இருக்கு. எவ்வளவு விலை இது?"
"800 ரூபா மச்சான்."
"ஓகே நான் gpay பண்ணி விடறேன்."
சீனிவாசன் அதை வாங்கி பார்த்து விட்டு "டேய் இதே பிராண்ட் husk puppies ஷூ தான் போன வாரம் வாங்கினேன்டா. என்கிட்ட 1400 ரூபா புடுங்கிட்டான் டா ஷோரூம்காரன் ."
"மச்சான் ஆம்பூரில் எனக்கு தெரிந்த ப்ரெண்ட் கடை இருக்கு. அங்கே வாங்கினா நமக்கு விலை கம்மியா கிடைக்கும். நெக்ஸ்ட் டைம் வேணும்னா சொல்லு, நான் என்னோட சொந்த ஊருக்கு போகும் போது வாங்கிட்டு வரென்."
ராஜா வாசுவை பார்த்து "அப்புறம் வாசு, காலையில் உன் பொண்டாட்டி துணியை எல்லாம் துவைச்சிட்டு வந்துட்டியா"
அதற்கு சீனிவாசன் "நீ வேற ராஜா பொண்டாட்டி துணி மட்டும் இல்ல, வீட்டை கழுவி தெருபெருக்கி கோலம் போடறது முதற்கொண்டு அய்யா தான்."
வாசு உடனே "டேய் சீனி நானாவது பொண்டாட்டி துணியை மட்டும் தான் துவைக்கிறேன். ஆனா நீ உன் மாமியாரோட உள்பாவாடை, ஜாக்கெட் முதற்கொண்டு துவைக்கிற. நீ என்னை பற்றி பேசலாமா?" என்று சொல்ல அங்கு பலத்த சிரிப்பு அலை எழுந்தது.
"அவர்களாவது பரவாயில்லை, நம்ம முத்து நிலைமை இன்னும் மோசம். காலையில் அவன் பொண்டாட்டிக்கு bed காஃபி கொடுப்பது முதற்கொண்டு சமையல் செய்வது வரை எல்லாமே வீட்டில் தலைவர் தான்" என்று ராஜேஷ் சொல்ல அந்த இடமே கலகலப்பானது.
"அப்ப எல்லோர் வீட்டில் நடப்பது மதுரை ராஜ்ஜியம் என்று சொல்லுங்க. நல்லவேளை எனக்கு கல்யாணம் ஆகல. நான் தப்பிச்சேன்" என்று ராஜா சிரிக்க
அதற்கு வாசு "டேய் performer ராஜா, ஜாலியா இருக்கிறேன்னு நக்கலா உனக்கு. கூடிய சீக்கிரம் உனக்கும் கல்யாணம் ஆகும். அப்ப இருக்குடா உனக்கு"
அதெல்லாம் நடக்கும் போது பார்த்துக்கலாம் வாசு, சரி இன்னிக்கு மாசத்தோட கடைசி நாள். நம்ம டீமில் எல்லோரும் incentive target achieve பண்ணியாச்சா?"
"இல்ல ராஜா, உன்னோட சேர்த்து நம்ம டீமில் ரெண்டு பேர் மட்டும் தான் target achieve பண்ணி இருக்கோம். ஆமா இந்த மாசமும் நீ star award வாங்கிடுவேல்ல."
"பத்து மாசம் தொடர்ந்து வாங்கிட்டேன் வாசு. இந்த மாசமும் நேற்று வரை கரெக்ட்டா ontrack இல் தான் இருந்தது. ஆனா நேற்று நான் லீவ். south zone பையன் ஒரே நாளில் நாலு நம்பர் போட்டு என்னை விட ஒரு நம்பர் முந்தி விட்டான். இன்னிக்கு அவன் பண்ற நம்பரை விட நான் ரெண்டு நம்பர் ஜாஸ்தி பண்ணா மட்டும் தான் நான் star அவார்ட் வாங்க முடியும்."
"சரி ஓகே ராஜா. என்னால் முடிந்த அளவு இன்னிக்கு உனக்கு நான் support பண்றேன்."
"ரொம்ப தாங்க்ஸ்டா வாசு."
"சேட்டா 5 டீ 3 வடை காசு எடுத்துக்கோங்க", ராஜா காசு கொடுக்க
அப்போ ஒரு முதிய பெண்மணி வந்து அவனிடம் "அய்யா ரொம்ப பசிக்குது சாப்பிட ஏதாவது வாங்கி கொடுங்க" என்று கேட்டாள்.
"சேட்டா அப்படியே நாலு இட்லி ஒரு வடைக்கும் சேர்த்து காசு எடுத்துக்கோங்க. அம்மா நீங்க வாங்கிக்கங்க"
"நீ நல்லா இருக்கணும் ராசா" என்று அந்த பெண்மணி வாழ்த்த
"அவன் பேரே ராஜா தாம்மா" என்று ராஜேஷ் கூவினான்.
"அப்படியே நான் அடிச்ச சிகரெட்டுக்கும் சேர்த்து காசு கொடுக்கலாம் இல்ல" என்று சீனிவாசன் அங்கலாய்த்தான்.
"சாரி சீனு, ஒரு சில விசயங்களுக்கு கண்டிப்பா நான் காசு செலவு பண்ண மாட்டேன். அது உனக்கே தெரியும்."
ராஜேஷ் சீனுவிடம் "டேய் சீனு அவனும் சிகரெட், தண்ணி எதுவும் அடிக்க மாட்டான். மற்றவருக்கு வாங்கியும் கொடுக்க மாட்டான் என்று உனக்கு தெரியும் தானே. சும்மா திரும்ப திரும்ப அதையே அவன் கிட்ட கேக்குற. அவன் நமக்கு டீ வாங்கி கொடுக்கறதே பெருசு"
"சரி ஓகே ஃப்ரெண்ட்ஸ் எனக்கு appointment இருக்கு. சாயங்காலம் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு ராஜா பறந்தான்.
மதிய வேளைக்குள் மூன்று ஆர்டர் எடுத்து விட்டான். அடுத்து ஒரு appointment சென்று கொண்டு இருக்க அவனது ஃபோன் ஒலித்தது.
வண்டி ஓட்டி கொண்டே Ear phonai அழுத்தி "ஹலோ யார் பேசறது?" என்றான்.
மறுமுனையில் ஒரு அழகிய பெண்ணின் குரல் கேட்டது.
"ஹலோ ராஜாவா, ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட பேசணும். கொஞ்சம் வண்டியை நிறுத்த முடியுமா"
"நான் ear phone இல் தான் பேசுகிறேன். என்ன விசயம் சீக்கிரம் சொல்லுங்க. நான் அவசரமாக ஒரு appointment க்கு போய்ட்டு இருக்கிறேன்."
"அதை பற்றி தான் நான் உங்களிடம் பேச வேண்டும் மிஸ்டர்" என்று அந்த பெண் சொன்னாள்.
"ம் சீக்கிரம் சொல்லுங்க என்ன விசயம்?" ராஜா அவசரமாக கேட்க
அந்த பெண் "நான் telesales டீம்ல இருந்து பேசறேன். நீங்க ஒரு appointment போறீங்க இல்ல, அவர் என்னோட கஸ்டமர்."
"என்னது அவர் உன்னோட கஸ்டமரா? அந்த கஸ்டமரை நான் ஒரு மாசமா ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன். தெரிஞ்சு பேசுங்க"
"இங்க பாருங்க, வீண் தகராறு வேண்டாம். அவர் கஸ்டமர் கேர் மூலமா enquiry கொடுத்து இருக்கார். அதனால் நாங்க தான் இந்த லீடை எடுக்க முடியும்."
"ஹலோ ஹலோ அவர் இப்ப enquiry கொடுத்து இருக்கலாம். ஆனா நான் அவரை ஒரு மாசம் முன்னாடியே பார்த்து பிளான் details எல்லாம் கொடுத்தாச்சு. ஒரு மாசமா ஃபாலோ பண்ணி இன்னிக்கு தான் பேமென்ட் பண்ண வர சொல்லி இருக்கார்."
"இங்க பாருங்க, அவர் என்னிடம் docs எல்லாம் whatsapp இல் அனுப்பிட்டார். நீங்க போய் சும்மா திரும்ப கூடாது என்ற அக்கறையில் தான் நான் ஃபோன் பண்ணினேன்" என்று சொல்லிவிட்டு படாரென்று போனை வைத்து விட்டாள்.
ராஜா சோர்ந்து போய் வண்டியை ஓரம் கட்டினான்.
"ச்சே இந்த கஸ்டமர்ஸே இப்படி தான். பொண்ணு குரலை கேட்டா போதும் உடனே தூக்கி ஆர்டரை அவங்க கையில் கொடுத்து விடுவாங்க. சரி எதுக்கும் கஸ்டமருக்கு ஃபோன் பண்ணி பார்ப்போம்"
"சார் நான் ராஜா, என்னை வர சொல்லி இருந்தீங்களே"
"ஆமா நீ வாப்பா, உனக்காக தான் நான் வெயிட் பண்ணி கொண்டு இருக்கிறேன். ஒரு பொண்ணு கூட உங்க ஆபீஸில் இருந்து ஃபோன் பண்ணிச்சு. அந்த பொண்ணு கூட என்னோட அசிஸ்டன்ட் தான் ராஜா, நீங்க என்கிட்டேயே docs கொடுக்கலாம் என்று சொன்னதால் தான் நான் whatsapp இல் அனுப்பினேன்."
"சார் ஒரு ஐந்து நிமிஷம், நான் இங்கே போரூர் சிக்னலில் தான் இருக்கேன். இதோ உடனே வந்து விடுகிறேன்."
வண்டி எடுக்க முயற்சி செய்யும் பொழுது, மீண்டும் ஃபோன் அழைத்தது. பார்த்தவுடன் தெரிந்து விட்டது அதே பெண் தான் மீண்டும் அழைக்கிறாள் என்று
ராஜா கோபத்துடன் "அடியே களவாணி, என்னை உன் அசிஸ்டன்ட்னு கஸ்டமர் கிட்ட பொய் சொல்லி இருக்கீயா."
"அய்யோ சாரி சார், நான் இப்ப தான் இந்த மாசம் தான் ஜாயின் பண்ணி இருக்கேன். என்னோட target முடிப்பதற்கு இன்னும் ஒரு நம்பர் தேவை. அதனால் தான் பொய் சொல்ல வேண்டியதாகி விட்டது. நீங்க விட்டு கொடுத்தால் நான் achieve பண்ணி விடுவேன்."
ராஜாவுக்கு என்ன செய்வதென புரியவில்லை."சரி போ எடுத்து தொலை"
"சார் அப்புறம் இன்னொரு உதவி"
"என்ன இன்னொரு ஆர்டர் வேணுமா?" ராஜா வெறுப்பாக கேட்க
"இல்ல சார், கஸ்டமர் சீனியர் சிட்டிசன்"
"ஆமா வயசானவரு, எழுபது வயதுக்கு மேல் இருக்கும். நானே நேரில் பார்த்து இருக்கேன்."
"அது தான் சார் பிரச்சினை. அவரால் ஆன்லைன் பேமென்ட் பண்ண முடியல. நீங்க கொஞ்சம் நேரில் போய் அவருக்கு ஆன்லைன் பேமென்ட் எப்படி பண்ணுவது என்று சொல்லி கொடுத்தால் கொஞ்சம் நல்லா இருக்கும். நான் அவர் மொபைலுக்கு லிங்க் send பண்ணிட்டேன்."
"இது வேறயா? ஒரு பத்து நிமிஷம் கழிச்சு செக் பண்ணி பாருங்க பேமென்ட் receive ஆகி இருக்கும்."
பத்து நிமிடம் கழித்து check பண்ணி பார்க்கும் பொழுது payment வந்து இருந்தது.
மீண்டும் ஃபோன் செய்து "சார் நீங்க செய்த உதவிக்கு ரொம்ப நன்றி"
"It's ஓகே நோ பிராப்ளம்"
"சார் என்னோட பேர் வந்து,"
ஏற்கனவே ஆர்டர் மிஸ் ஆன வெறுப்பில் இருந்த ராஜா "எனக்கு உங்க பேர் தெரிஞ்சுக்க அவசியம் இல்லை" என்று போனை வைத்து விட்டான்.
'என்ன இவன் என்னோட பெயர் என்னனு கூட கேக்காம போனை கட் செய்து விட்டான்' என்று சஞ்சனா ஆச்சரியமும் கோபமும் பட்டாள். 'இவனுக்கு பொண்ணுங்ககிட்ட எப்படி பேச வேண்டும் என்று கூட தெரியவில்லை.'
அதற்குள் அங்கு வந்த ஜார்ஜ் சஞ்சனாவிடம் "என்ன சஞ்சனா ஏதோ sales டீம் கூட பிரச்சினை என்று கேள்விப்பட்டேன். யார் அந்த sales person சொல்லு நான் பார்த்துக்கொள்கிறேன்." என்றான்.
"No problem ஜார்ஜ் the issue got resolved."
"Atleast யார் அந்த sales person என்று சொல்லு, நம்ம மேனேஜர் பிரியா மேடம் கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும். immediately he will get a warning letter."
"Stop it george, தப்பு என்னோடது. இருந்தும் எனக்கு அவன் விட்டு கொடுத்தான். don't over react" என்று சொல்லி எழுந்து சென்று விட்டாள் சஞ்சனா.
ஜார்ஜ்ஜின் மூக்கை மீண்டும் உடைத்து விட்டாள்.
'ச்சே இங்க இருக்கிற பொண்ணுங்க எல்லாம் என்னை சுற்றி சுற்றி வராங்க. ஆனா இவ மட்டும் என்கிட்ட சிக்காம தண்ணி காட்டுகிறாளே. இருக்கட்டும் நேரம் பார்த்து தான் அடிக்கணும்.'
இந்த மாத performers award ceremony நடந்து கொண்டு இருந்தது. ஐடி டீம் இக்பால் வந்து ராஜாவிடம் பேசினார்.
"என்ன ராஜா இந்த மாதமும் ஸ்டார் அவார்ட் வாங்கீட்டீயா"
"இல்ல இக்பால் ஜஸ்ட் 0.5 புள்ளியில் ரேங்க் மிஸ் ஆகி விட்டது"
"இந்த முறை மட்டும் நீ வாங்கி இருந்தால் தொடர்ந்து பதினொரு முறை வாங்கி ரெக்கார்ட் பண்ணி இருக்கலாம்."
"எல்லாம் விதிப்படி தான் நடக்கும் இக்பால். அடுத்த மாதம் பார்த்துக்கலாம் விடு"
இந்த award வழங்கும் விழாவிற்கு அனைத்து கம்பனி நபர்களும் ஒன்றாக கூடுவது வழக்கம். ஏறக்குறைய 300 நபர்களுக்கு மேல் அவரவர் டீம் நபர்களோடு குழுவாக நின்று கொண்டு இருந்தனர்.
சஞ்சனா எதேச்சையாக திரும்பி பார்க்க அந்த கூட்டத்தில் தன் நண்பர்களோடு அரட்டை அடித்து கொண்டு இருந்தவனை பார்த்தவுடன் அவள் முகம் சூரியனை கண்ட தாமரை போல் மலர்ந்தது.
"இல்ல இக்பால் ஜஸ்ட் 0.5 புள்ளியில் ரேங்க் மிஸ் ஆகி விட்டது"
"இந்த முறை மட்டும் நீ வாங்கி இருந்தால் தொடர்ந்து பதினொரு முறை வாங்கி ரெக்கார்ட் பண்ணி இருக்கலாம்."
"எல்லாம் விதிப்படி தான் நடக்கும் இக்பால். அடுத்த மாதம் பார்த்துக்கலாம் விடு"
இந்த award வழங்கும் விழாவிற்கு அனைத்து கம்பனி நபர்களும் ஒன்றாக கூடுவது வழக்கம். ஏறக்குறைய 300 நபர்களுக்கு மேல் அவரவர் டீம் நபர்களோடு குழுவாக நின்று கொண்டு இருந்தனர்.
சஞ்சனா எதேச்சையாக திரும்பி பார்க்க அந்த கூட்டத்தில் தன் நண்பர்களோடு அரட்டை அடித்து கொண்டு இருந்தவனை பார்த்தவுடன் அவள் முகம் சூரியனை கண்ட தாமரை போல் மலர்ந்தது.
அந்த கூட்டத்திலும் எளிதாக அவனை அடையாளம் கண்டு கொண்டு விட்டாள். இது கனவா இல்லை நிஜமா என்று தன்னை தானே கிள்ளி கொண்டாள். இது கனவல்ல நிஜம் தான். கனவில் வந்தவன் இன்று நேரில் வந்து இருக்கிறான்.
முதல் கனவே முதல் கனவே
மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்..
உடனே சஞ்சனா பக்கத்தில் இருந்த சீனியர் துர்காவிடம் அவனை நோக்கி கை காட்டி எந்த டீம் என்று கேட்க
அதற்கு துர்கா, "நீ போன மாசம் sales team பையனோட சண்டை போட்டியே அவனே தான். sales team performer ராஜா" என்றாள்.
"அவனை கொஞ்சம் எனக்கு indroduce பண்ணி வைக்க முடியுமா துர்கா பிளீஸ்"
"முடியாது சஞ்சனா, எங்க ஹீரோ ஜார்ஜிற்கும் அவனுக்கும் ஆகவே ஆகாது. அதுவும் அவன் சரியான தலைக்கனம் பிடித்தவன் என்று கேள்விபட்டு இருக்கிறேன். நீயும் அவன்கிட்ட போகாதே"
சஞ்சனா எப்படி, யார் மூலம் அவனிடம் அறிமுகம் ஆவது என்று புரியாமல் தவிக்க, அப்பொழுது sales team lead coordinator பல்லவி எதிரில் வர மான் போல் துள்ளி கொண்டு அவளிடம் சென்றாள்.
தொடரும்...
Comments
Post a Comment