காதல் சுகமானது 7

written by raja

முழு தொடர் படிக்க

"எனை கொல்லும் இனிய கவிதையே! எனை கெஞ்ச விடாமல் என் முன் வந்துவிடு!"

"வந்து ரொம்ப நேரமாச்சு மச்சான், முன்னாடி இல்ல உன் பின்னாடி தான் நின்னுட்டு இருக்கா,"


"அடப்பாவி இப்படி மாட்டி விட்டுட்டுட்டீயே"

"சரி மச்சான் நீ கிளாஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் கூப்பிடு,நான் ஒரு ரவுண்ட் போய்ட்டு வரேன்."

"டேய் ஒரு நிமிஷம் நில்லுடா, ராஜேஷ் போகாதே,"

"காதலர்களுக்குள் ஆயிரம் இருக்கும், நடுவில் நான் எதுக்குப்பா?"

ராஜா சஞ்சனாவிடம் "சாரி சஞ்சனா, அவன் ஏதோ உளறிட்டு போறான்."

"அவர் சரியாக தான் சொல்றார். நீங்க தான் சரியான tube light. கவிதை எல்லாம் பலமா இருக்கே"

"அதுவந்து.."

"என்னை பற்றி தானே கவிதை சொன்னீங்க,"

ராஜா தலை கவிழ்ந்து ஆமோதித்தான்.

"கவிதையில் வர்ணிப்பது, கனவில் கட்டி பிடிப்பது, எல்லாம் உள்ளுக்குள் ஆசைய வைச்சுக்கிட்டு நேராக பார்த்தா மட்டும் ஒன்னும் சொல்றது கிடையாது" என்று முணுமுணுத்தாள்.

"எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் சஞ்சனா, ஆனா அது காதலா என்று எனக்கு தெரியல. அது வெறும் ஈர்ப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு. அதுவும் நீயும் என்னை காதலிப்பதாக உணர்கிறேன்."

"அப்படியா, நான் உன்கிட்ட வந்து எப்பவாது காதலிக்கிறேன் என்று சொன்னேனா"

"இல்லை தான். ஆனா தினமும் என்னை விழுங்கிற மாதிரி பார்க்கிற அந்த பார்வைக்கு என்ன அர்த்தம், எனக்கு உணவு கொடுப்பதற்கும், எனக்கு மெஸேஜ் அனுப்புவதற்கும் என்ன அர்த்தம்?"

"அது பாவம் எப்பவுமே ஓட்டலில் சாப்பிடுகிறானே என்ற கவலை, ஒரு சின்ன அக்கறையின் வெளிப்பாடு மட்டும் தான். உங்களுக்கு உண்மையில் என் மேல் காதல் இருந்தால் நேராக என் கண்ணை பார்த்து சொல்லுங்க. நான் அதுக்கு அப்புறம் என் முடிவை சொல்றேன்."

சஞ்சனா மனதிற்குள் 'ம்ம் சொல்லுடா சீக்கிரம், நானும் உன்னை லவ் பண்றேனு சொல்ல தயாராக இருக்கிறேன்" என்று நினைத்து கொண்டு அவனையே குறுகுறுவென்று உற்று பார்க்க

ராஜா அவளிடம், "ஓகே சஞ்சனா நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். சாரி, நல்லவேளை நீயே சொல்லிட்ட. எனக்கும் உன் மேல இருப்பது வெறும் ஈர்ப்பு தான். காதல் இல்ல. வந்தால் நானே சொல்றேன். நீ பாடத்தை ஆரம்பி?"

சஞ்சனாவிற்கு சப்பென்று ஆகி விட்டது. என்மேல உள்ள காதலால் தான் இதை எல்லாம் நீ செய்கிறாய் என்று என்னுடன் சண்டை போடுவான் என சஞ்சனா எதிர்பார்த்தாள். அதை வைத்தே அவன் வாயாலேயே அவன் காதலை சொல்ல வைக்கலாம் என நினைத்தால் டக்கென்று back அடித்து விட்டானே. மண்டு மண்டு என மனதில் அவனை திட்டி கொண்டாள். அடுத்த அடி எடுத்து வைக்கும் போது மிகவும் கவனமாக வைக்க வேண்டும் என எண்ணி கொண்டாள். ஆனால் இப்போது அவன் அடுத்த உயரத்திற்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பும் அவளுக்கு உறுதியாக இருந்ததால் சொல்லி கொடுப்பதில் அவள் எந்த தவறும் செய்யவில்லை. ராஜாவும் அவள் சொல்ல சொல்ல எளிதில் புரிந்து கொண்டான்.

அவள் கூந்தலில் வைத்து இருந்த மல்லிகை வாசமும், நெற்றியில் வைத்து இருந்த சந்தனத்தின் வாசமும், உடலில் இருந்து கிளம்பிய பெண்மையின் நறுமணமும் அவனை அவள் பக்கம் காந்தம் போல ஈர்த்தாலும், அவள் நமக்காக தான் மெனக்கெட்டு வந்து சொல்லி கொடுக்கிறாள் என்று புரிந்து கொண்டு பாடத்தில் கவனம் செலுத்தினான். இருப்பினும் இருவர் விரல்களும் அவ்வப்போது உரசும் போது தடுமாறி போனான்.

"சரி ஓகே, இன்னிக்கு அவ்வளவு தான். வீட்டுக்கு போய் நான் சொல்லி கொடுத்ததை பிராக்டீஸ் பண்ணி பாரு, நாளைக்கு நீ வரும் போது என்னிடம் ஆங்கிலத்தில் தான் உரையாடனும்‌. சரியா?"

"ஓகே சஞ்சனா."

ராஜேஷ் வந்து "என்னம்மா தங்கச்சி தாரகை இன்னிக்கு பாடம் ஒரு வழியாக முடிந்து விட்டதா?" என கேட்க

ராஜா அவனிடம் "டேய் நீ இன்னும் போகலையா?" என்றான்.

"நான் எங்கடா போனேன். இங்கே தான் வெளியே உட்கார்ந்து கொண்டு இருந்தேன். என்ன சஞ்சனா, பையன் எப்படி பாடம் எல்லாம் ஒழுங்கா கத்துக்கிறானா?"

"பாடம் கற்று கொள்வதில் எல்லாம் செம sharp தான், ஆனா மற்ற விசயத்தில் தான் ஜீரோ.உங்க ப்ரெண்ட் தேறுகிறா என்று போக போக பார்ப்போம்."

"டேய் ராஜா, நம்ம sales டீம் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஜெயிச்சு semifinal qualify ஆகிருச்சு. ஞாயிற்றுகிழமை semi final and final நடக்க போகுது. நீ கண்டிப்பாக வரணும்."

"அய்யோ என்னால முடியாது. நீ பிளேயர், உனக்கு HR பெர்மிஷன் இருக்கு. நான் சும்மா பார்வையாளர் மட்டும் தான். நான் வந்தேன் என்று தெரிந்தால் அந்த மேனேஜர் என்னை சும்மா விட மாட்டார். அதுவும் இல்லாம அந்த மேனேஜர் எனக்கு ரெண்டு முக்கியமான அப்பாயின்ட்மெண்ட் வேற என் தலையில் கட்டி இருக்கார். அதனாலே கண்டிப்பாக வர முடியாது."

"டேய் இந்த முறை sales டீம் vs telesales டீம் ஃபைனல் வரும் போல இருக்கு. உனக்கே தெரியும் நாமும், அவங்களும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி. அவங்க பக்கம் support பண்ண எல்லோரும் வருவாங்க. கொஞ்சமாவது நம்ம டீமுக்கு சப்போர்ட் பண்ண யாருனா வாங்கடா. சஞ்சனா நீயே கொஞ்சம் எடுத்து சொல்லு."

'ஆகா அருமையான சந்தர்ப்பம். இந்த மர மண்டைக்கு நம்மோட காதலை புரிய வைக்க இன்னொரு சந்தர்ப்பம் வருகிறது. இதை தவற விடவே கூடாது.' 

"பொண்ணுங்க நாங்களே மைதானத்திற்கு வரோம். உனக்கு என்ன? சும்மா வேலை வேலைனு ஓடிக் கொண்டே இருக்க கூடாது. மூளை மழுங்கி விடும். இந்த மாதிரி அப்பப்போ பொழுது போக்கிலும் பங்கெடுத்து கொள்ள வேண்டும். அப்ப தான் மூளை sharp ஆக இருக்கும்"

"சரி சஞ்சனா, அந்த ரெண்டு appointment முடிச்சிட்டு வரேன். எப்படியும் வர மதியம் ஆகி விடும் என்று நினைக்கிறேன்."

"அது போதும் மச்சான், எப்படியும் ஃபைனல் தொடங்க மதியம் 3 மணி ஆகி விடும் .அது தான் நமக்கு முக்கியமான match. அப்போ நீ இருந்தா கூட போதும்."

"YMCA ground தானே மச்சான்."

"ஆமா அதே தான்."

மூன்று பேரும் பிரிந்தார்கள்.

இரவு சஞ்சனா, ராஜேஷ் மொபைலுக்கு அழைத்தாள்.

"என்ன அண்ணா, உன் ப்ரெண்ட் இவ்வளவு தத்தியா இருக்கார், ஒரு பொண்ணு லவ் பண்றத கூட புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்."

"ஏன், அவனுக்கு தெரியுமே சஞ்சனா, நீ அவனை லவ் பண்ற விசயம்."

"ம்ம், அதை அவரே சொன்னாரு, நான் சும்மா தான் அவரிடம் விளையாடினேன், நான் அவரை லவ் பண்ணல என்று, உடனே அவரும் அப்படியே back அடித்து விட்டார். அவருக்கு புரியாதா, ஒரு பொண்ணு பழகும் போதே அதில் லவ் இருக்கா இல்லையா என்று."

"அய்யோ சொதப்பிட்டீயே சஞ்சனா,"

"ஏன் என்ன ஆச்சு அண்ணா,"

"அவன் ஏழு வருஷம் முன்னாடி இங்கே எப்படி வந்தான் தெரியுமா? ஒரு லேடீஸ் கஸ்டமரை பார்த்தா கூட அவன் கை கால் நடுங்கும். இப்போ தான் நான் அவனை ஓரளவு tune பண்ணி வைச்சு இருக்கேன்."

"ஏன் அப்படி?"

"எல்லாம் அவங்க அப்பா பண்ண வேலை சஞ்சனா, சின்ன வயசில் இருந்து கூட படிக்கிற பொண்ணு கூட பேசினா போதும் உடனே அவனை அடி பொளந்து கட்டி விடுவார். போற இடத்தில் எல்லாம் எல்லோர் முன்னாடியும் அவனை அசிங்கப்படுத்தி கொண்டே இருப்பார். அவன் தினமும் அடி வாங்காத நாளே கிடையாது. ஒரு போலீஸ், குற்றவாளியை நடத்துவது போல தான் நடத்துவார். இப்போ அவன் அப்பா இறந்து விட்டால் கூட டேய் உன் அப்பாடா என்று சொன்னால் போதும் ஒரு நிமிஷம் பயந்து விடுவான். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எம்டன் மகன் படம் பார்த்தீயா, அதில் வரும் நாசர் கேரக்டர் போல தான் அவன் அப்பா. அவன் வீட்டை விட்டு வெளியே வந்து 14 வருஷம் ஆச்சு. மாசம் ஒருமுறை தான் வீட்டுக்கு போவான். அதுவும் ஒரு நாள் தான் அங்கு இருப்பான். அவன் பெரிய தங்கச்சி ஆரம்பத்தில் இருந்தே அவ்வளவு ஓட்டுதலே கிடையாது. அவன் அம்மா அவங்க அப்பாவுக்கு பயந்து பொட்டி பாம்பா இருந்தாங்க. அவனோட வாழ்க்கையில் சந்தோஷமே எப்போ தெரியுமா முதன் முதலில் வந்தது? அவனோட சின்ன தங்கை பிறந்த பிறகு தான். அதுவும் எப்போ இவனோட பதினைந்தாவது வயதில்."

"அப்போ இவனுக்கும், இவன் சின்ன தங்கைக்கும் 15 வயது வித்தியாசமா?"

"ஆமா சஞ்சனா, அந்த பொண்ணு தான் முதன் முதலாக இவனை அண்ணான்னு கூப்பிட்டுச்சு. அவனோட சின்ன தங்கையை தவிர வேறு எந்த பொண்ணோடயும் அவன் பழகியதே இல்ல. சுஜிதா கூட அவன் வாழ்கையில் மின்னல் போல வந்து போய் விட்டாள். இந்த சூழ்நிலையில் வளர்ந்த ஒருத்தன் எப்படி இருப்பான் என்று நினைச்சு பாரு. அவன் வாழ்க்கையில் சந்தோசம் கிடைப்பதே ரெண்டே பேர் மூலமாக தான். ஒன்னு நான், இன்னொன்னு அவன் சின்ன தங்கை. இப்போ புதுசா அவன் வாழ்வில் நீ வந்து இருக்கே, அவன் களிமண்ணு தான் கல் கிடையாது சஞ்சனா, அதை அன்பு என்னும் தண்ணீர் கலந்து அழகான பொம்மையாக எளிதில் செதுக்க முடியும். என்ன தான் தங்கை மேல் பாசம் இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட வயது வந்த பிறகு தள்ளி நின்று தான் அன்பு காட்ட முடியும். ஆனா மனைவியாக வரும் பெண்ணிடம் மட்டும் தான் ஒரு ஆண் முழுமையாக அன்பை வெளிப்படுத்த முடியும். ஒரு ஆண் முழுமை பெறுவது அவன் மனைவியுடன் மட்டும் தான். அவன் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வர முடியும் என்றால் அது உன்னால் மட்டும் தான் முடியும்."

"சாரி அண்ணா, இப்போ தான் புரியுது. நான் பண்ண தப்பு என்னவென்று. கொஞ்சம் கொஞ்சமாக என் காதலை அவருக்கு புரிய வைத்து தீபாவளி பண்டிகை அன்னிக்கு கண்டிப்பாக என் காதலை சொல்லி விடுகிறேன்."

"ரொம்ப சந்தோசம் சஞ்சனா. சீக்கிரம் அவன் வாழ்வில் ஒளியேற்று. நீங்கள் இருவர் இணையும் நாளே எனக்கு தீபாவளி."

மறுநாள்..

"ஹே good morning சீனி, நேற்று promoter activity எப்படி போச்சு? promoter ஒழுங்கா வேலை செய்தானா?"

"எங்க வேலை செய்தான் ராஜா, அவன் சுத்த வேஸ்ட். என்ன பண்ணான் தெரியுமா? அவன் கிட்ட ஸ்டிக்கர்ஸ் கொடுத்துட்டு no parking போர்டில் பார்த்து ஒட்டு என்று சொல்லிட்டு போனேன். ஒரே ஒரு appointment நான் போய் விட்டு வருவதற்குள் அவன் டீ கடையில் உட்கார்ந்து முட்டை போண்டா சாப்பிட்டுகிட்டு இருக்கான்."

"பசியா இருந்து இருக்கும்,சாப்பிட்டு கொண்டு இருந்து இருப்பான்."

"அப்படி தான் ராஜா நானும் நினைச்சேன். என்னடா ஸ்டிக்கர்கள் எல்லாம் ஒட்டி ஆச்சா என்று கேட்டால் ஒட்டி ஆச்சு என்று சொல்றான். வெறும் அரை மணி நேரத்தில் 500 ஸ்டிக்கர் எப்படி மச்சான் ஒட்ட முடியும்."

"கண்டிப்பாக ஒட்ட முடியாது.மிஞ்சி போனா நூறு ஸ்டிக்கர் ஒட்டலாம்."

"ம் அதான் ராஜா, எங்கடா ஒட்டிய ஸ்டிக்கர் காண்பி என்று கூட்டி போனால் நூறு ஸ்டிக்கர் கூட ஓட்டல. மிச்ச ஸ்டிக்கர் எங்கடா ஒட்டினனு கேட்டால் பேந்த பேந்த முழிக்கிறான். அப்புறம் முட்டை போண்டா எப்படிடா வந்துச்சி என்று கேட்ட பிறகு தான் உண்மையை சொல்றான். ஸ்டிக்கரை எடைக்கு போட்டு தான், முட்டை போண்டா வாங்கினேன் என்று சொல்றான்."

"சும்மாவா விட்டே அவனை, complaint பண்ண வேண்டியது தானே"

அதற்கு வாசு, "சீனி என்ன பண்ணான் என்று நான் சொல்றேன். அவன்கிட்ட இருந்து முட்டை போண்டா பிடுங்கி இவன் தின்னு ஏப்பம் விட்டுட்டு, அது தான் உனக்கு தண்டனை என்று சொல்லி விரட்டி விட்டுட்டான்."

பதிலுக்கு சீனி "டேய் வாசு, என்னை நீ குறை சொல்றியா, போன வாரம் newspaper activity பண்ணப்போ, நியூஸ் பேப்பரை எடைக்கு போட்டு சரக்குக்கு காசு உஷார் பண்ணவன் தானே நீ!"

ராஜா இருவரிடம் "உண்மையை சொல்றவங்க தெய்வத்திற்கு சமம் என்று பெரியவங்க சொல்லுவாங்க, ரெண்டு பேரும் இப்படியே மாறி மாறி போட்டு கொடுத்துக்கிறீங்களேடா."

"என்ன பண்றது ராஜா, நீ target achieve பண்ணி incentive வாங்கிடுவ, ஆனா எங்க நிலைமை அப்படியா, நாங்க வாங்குற சம்பளத்த வேற அப்படியே பொண்டாட்டிகிட்ட கொடுக்க வேண்டியதா இருக்கு. கைச்செலவுக்கு இந்த மாதிரி தானே கை வைக்க வேண்டி இருக்கு. சரி ராஜா எங்கே இன்னிக்கு ராஜேஷ் வரலையா?"

"இல்ல சீனி, அவன் இன்னிக்கு வீக் ஆஃப்,"

"அப்ப என்ஜாய் பண்ணட்டும். டிஸ்டர்ப் பண்ண வேணாம். ராஜா swiggy வருது."

"என்னது swiggy யா?"

"Food டெலிவரி மச்சான். என்ன ரொம்ப லவ் பண்றளோ!"

"இல்ல மச்சான் கேட்டுட்டேன், லவ் எல்லாம் கிடையாதுனு சொல்லிட்டா. சும்மா ஒரு அக்கறை தானாம். அவ கொடுக்கிற சாப்பாட்டிற்கு அவளுக்கு பிடித்த கிஃப்ட்டா ஏதாவது வாங்கி கொடுத்து விடலாம் என்று இருக்கிறேன்."

முருகேஷ் அண்ணன் வழக்கம் போல் வந்து கொடுத்து விட்டு போக சாயங்காலம் சஞ்சனாவும், ராஜாவும் மீண்டும் சந்தித்தனர்.

"சஞ்சனா இன்னிக்கு சப்பாத்தி சூப்பர். அதுக்கு தக்காளி சட்னி வித்தியாசமான சுவையாக இருந்தது. இது வரை நான் அந்த மாதிரி சாப்பிட்டதே கிடையாது."

"அது தக்காளி சட்னியில் கொஞ்சம் கடலை மாவு சேர்த்தால் சுவை இன்னும் அதிகமாகும். நான் எப்பவுமே அப்படி தான் செய்வேன்."

"சூப்பர் சஞ்சனா, உன்னை கட்டிக்க போறவன் கண்டிப்பாக குடுத்து வைச்சவன் தான்."

"ராஜா, எனக்கு பீச் ரொம்ப பிடிக்கும்.இன்னிக்கு கொஞ்சம் என்னை அங்கே கூட்டி போக முடியுமா?"


"அவ்வளவு தானே, எந்த பீச்னு மட்டும் சொல்லு, பெசன்ட் நகரா, இல்லை மெரினாவா?"

"மெரினாவே போலாம்."

முதல் முறை அவள் அவனோடு கை கோர்த்து கொண்டு மணலில் நடக்க, அவனுக்குள் பூட்டி வைத்த உணர்வுகள் மேல் புதிய சிறகு முளைத்தது.

கடல் அலையை பார்த்ததும் சின்ன குழந்தை போல் துள்ளி குதித்து ஓடினாள் சஞ்சனா. கடலும் ஓடி வந்த அவள் பாதத்தை ஆசையுடன் நனைத்து சென்றது.
அவள், அவன் விரல்களுடன் கை கோர்த்து தோளை உரசிக்கொண்டு கடலின் அலையை ரசிக்க, அவனுக்குள் ஒரு பனிமலையும், எரிமலையும் சேர்ந்து பொங்கி வெடித்தது.

அவளின் பாதத்தை தழுவியது போதும் இன்னும் மேலே சென்று நனைக்கலாம் என்ற ஆவலோடு கடல் அலைகள் உற்சாகத்தோடு, பெரிய பெரிய அலையாக ஓடி வர, பெரிய அலையில் இடுப்பளவு தண்ணிரில் சஞ்சனா நிலைதடுமாறி கீழே விழும் போது, ராஜா அவள் மெல்லிய இடுப்பில் கை வைத்து தாங்கி பிடித்தான். அவன் விரல்கள் அவள் இடுப்பில் பட்டவுடன் அவள் மேனி சிலிர்த்தது. இருவரும் ஒருவரை ஒருவர் இமைக்காமல் பார்த்து கொண்டு இருக்க, மற்றொரு அலை வந்து இருவரையும் கீழே தள்ளி முழுக்க நனைத்தது.

சஞ்சனா அணிந்து இருந்த மஞ்சள் சுடிதார் முழுக்க நனைந்து போனது.

ராஜா எழுந்து கை கொடுக்க, அவளும் வெட்கத்துடன் அவன் கைகளை பிடித்து எழுந்தாள்.

"என்னடா தண்ணிக்குள்ள ஜலபுலஜங்கா என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க" ராஜேஷ் சிரித்து கொண்டு நின்றிருந்தான்.

"அடப்பாவி நாங்க ரெண்டு பேர் என்ன பண்றோம் என்பதை வேடிக்கை பார்த்து கொண்டு சிரித்து கொண்டு இருக்கியா நீ"

"டேய் நான் மட்டும் இல்ல, ஊரே வேடிக்கை பார்த்து சிரிச்சுச்சு. அப்படியே என்னவோ லைலா மஜ்னு மாதிரி ரெண்டு பேரும் போஸ் கொடுத்துட்டு நின்னுட்டு இருக்கீங்க."

"அது சரி நீ இங்க எங்கடா வந்தே,"

"நான் என் பொண்டாட்டி, புள்ளையோடு லீவில் என்ஜாய் பண்ண வந்தேன். சார் எதுக்கு வந்தீங்க என்று தெரிஞ்சுக்கலாமா"

"நான் நான்...."

"நீ நீ தான் சொல்லு"

"சஞ்சனா ஆசைப்பட்டா அதனால கூப்பிட்டு வந்தேன்."

"டேய் சும்மா ரீல் உடாத, நீ கூட்டிட்டு வந்துட்டு அவள் மேல் பழியை போடாதே. பச்ச மண்ணுடா அவ"

"டேய் நான் பொய் சொல்லல, நீ வேணும்னா சஞ்சனா கிட்டேயே கேளு."

"நீ சொல்லு தங்கச்சி, நீ தான் ஆசைப்பட்டீயா"

"இல்ல அண்ணா, இவர் தான் இன்னக்கி பாடம் போர் அடிக்குது, பீச்சுக்கு போலாமா என்று கேட்டார். சரினு வந்தால் அங்கே இங்கே கை வைச்சு, தண்ணியில் இழுத்து போட்டு விளையாடி எப்படி என்னை நனைச்சுட்டார் பாருங்க", என்று சிணுங்க

"டேய் ராஜா, இந்த பூனையும் பால் குடிக்குமானு பார்த்தால் பீரே அடிக்கும் போல இருக்கே. ரெண்டாவது நாளே பீச்சா, நீ தேறிடுவா மச்சான்."

"டேய் அவ பொய் சொல்றாடா, அவளை நம்பாத."

"இந்த விசயத்தில் பொண்ணுங்க பொய் சொல்ல மாட்டாங்க மச்சான், அதுவும் என் தங்கச்சி பொய் சொல்லவே மாட்டா" என்று ராஜேஷ் கூறியவுடன்

சஞ்சனா ராஜா பக்கம் திரும்பி, நாக்கை வெளியே நீட்டி பழிப்பு காட்டி கண்ணடித்தாள்.

"என்னிக்குடா ஆம்பள பேச்சை நம்பி இருக்கீங்க,"

"அண்ணா அவர் கிடக்கறாரு விடுங்க ,நீங்க உங்க பொண்டாட்டியை அறிமுகம் செய்து வைங்க" 

சஞ்சனா கூறியவுடன், மூவரும் ராஜேஷ் மனைவி இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

ராஜேஷ் அவன் மனைவியிடம், சஞ்சனாவை அறிமுகப்படுத்தி அவன் மனைவியின் காதில் ஏதோ கிசுகிசுக்க, உடனே அவன் மனைவி சஞ்சனாவிடம் கை நீட்டி "advance congratulations" என்று வாழ்த்து கூறினார்.

"எதுக்குடா congratulations?" ராஜா கேட்டான்.

ராஜேஷ் அதற்கு, "அது ரெண்டு பொம்பளைக்குள்ள இருக்கிற விசயம். அதை எல்லாம் நீ கேட்க கூடாது." என்றான்.

சஞ்சனா ராஜேஷ் குழந்தையை வாங்கி கொண்டாள்,

"அண்ணா குழந்தை பேர் என்ன?"

"யாழினி"

"சூப்பர் தமிழ் பேரு அண்ணா, அப்படியே குழந்தை உங்களை உரிச்சு வைச்சு இருக்கு."

நால்வரும் பேசி சிரித்து அரட்டை அடித்து கொண்டு இருக்கும் போது, சஞ்சனா ராஜாவை பார்த்து கொண்டே, அவன் பார்க்கும் போது குழந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

"சரி ராஜேஷ், டைம் ஆச்சு, கிளம்பலாமா?"

"சரி, நீ சஞ்சனாவை கூட்டிட்டு கிளம்பு"

ராஜா, சஞ்சனாவை நேராக நாகராஜ் kulfi கடைக்கு கூட்டி சென்றான். ஒரு சின்ன tricycle தான். அதை சுற்றி மக்கள் ஈ போல் அவரிடம் kulfi வாங்க மொய்த்து கொண்டு இருந்தனர்.

"சஞ்சனா இங்கே kulfi ice நல்லா இருக்கும். நானும், ராஜேஷிம் இங்கே வந்தா கண்டிப்பாக சாப்பிடாமல் போக மாட்டோம்."

"அப்போ அவரையும் கூப்பிட்டு இருக்கலாமே"

"அவன் குழந்தைக்கு ஐஸ் கிரீம் ஆகாது சஞ்சனா. கூட்டி வந்தால் குழந்தை அடம் புடிக்கும். அதனால் தான் அவன கூப்பிடல. இரு நான் போய் வாங்கிட்டு வரேன்."

ஒரு இலை கப்பில் வைத்து kulfi ice கொண்டு வந்து கொடுத்தான். 

"சாப்பிடு சஞ்சனா, அருமையாக இருக்கும். பாதாம், முந்திரி தூக்கலாக இருக்கும்."

சஞ்சனா வாயில் வைத்து சப்பி, "ம் செமையா இருக்கு." என்றாள்.

பாதி ஐஸ்கிரீமை இருவரும் சாப்பிட்டு முடிக்க, சஞ்சனா அவன் கையில் இருந்த ஐஸ்க்ரீமை வாங்கினாள் இல்லை பிடுங்கினாள். அவள் ஐஸ்க்ரீமை அவனிடம் கொடுத்து விட்டு அவன் எச்சில் ஐஸ்க்ரீமை சாப்பிட தொடங்க, அவனும் சிரித்து கொண்டே அவள் எச்சில் பட்ட ஐஸ் க்ரீமை சுவைக்க தொடங்கினான்.

ராஜா "ம், நான் சாப்பிட்ட ஐஸ்க்ரீமை விட இது சுவையாக இருக்கே" என்று கூற சஞ்சனாவிற்கு வெட்கம் வந்தது.

"ம் இருக்கும்டா, இருக்கும்" என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க, மீண்டும் அங்கே ராஜேஷ் நின்றிருந்தான்.

"டேய் என்னடா எங்களையே சுற்றி சுற்றி வந்துட்டு இருக்க."

"நான் உன்கிட்ட பேச மாட்டேன் மச்சான். வர வர நீயும் பொய் பேச ஆரம்பிச்சுட்ட, அவளை வீட்டுக்கு கொண்டு போய் விடுகிறேன்னு சொல்லிட்டு நேராக ஐஸ்கிரீம் கடைக்கு கூப்பிட்டு வந்து இருக்க, ஏன் சஞ்சனா இங்க ராஜானு ஒருத்தன் தான் அரிச்சந்திரனா இருந்தான். அவனையும் கெடுத்து விட்டுட்டேயே"

"நான் ஒண்ணுமே பண்ணல அண்ணா, எனக்கு ஒன்னும் தெரியாது" என்று சஞ்சனா அப்பாவியாய் முகத்தை வைத்து கொள்ள,

ராஜா அவனிடம் "டேய் எதுக்குடா இப்போ கிரிஞ் பண்ணிட்டு இருக்க சரி புரிஞ்சு போச்சு சொல்லி தொல உன் கோபம் தீர நான் என்ன பண்ணட்டும்"

"ஒழுங்காக எனக்கு ஒரு ஐஸ் கிரீம் வாங்கி கொடு. ஒன்னு இல்லை ரெண்டு வாங்கி கொடு."

ராஜா வாங்கிட்டு வந்து கொடுக்க,

"நீ இங்கே தான் இருப்பனு, நான் என் பொண்டாட்டியை எப்படியோ பொய் சொல்லி ஆட்டோவில் ஏற்றி விட்டு வந்தேன் நினைச்சபடியே இங்க நின்னுட்டு இருக்கீங்க, இதுல romance வேற."

"இது தான் எங்க ஏழு வருஷ friendship சஞ்சனா, அடுத்து நான் என்ன செய்வேன் என்று இவன் சரியா சொல்லிடுவான். மனைவி கடவுள் கொடுத்த வரம் என்பார்கள். ஆனால் நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரம். எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நான் ஒவ்வொரு நிமிஷமும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பான்."

'நானும் தான்' என்று சஞ்சனா மனதில் சொல்லி கொண்டாள்.

"டேய் அது தான் ஐஸ் வாங்கி கொடுத்தாச்சுல.அப்புறம் என்ன மேற்கொண்டு ஐஸ். போதும் உடுடா. மழை வர மாதிரி இருக்கு, ரெண்டு பேரும் சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புங்க."

"சரி ராஜேஷ் நான் நாளை appointment முடித்து விட்டு நேராக YMCA கிரவுண்ட் வரேன்."

"நீ மட்டும் வராம போன, அப்புறம் உன்னை சும்மா கூட விட மாட்டேன்."

"கண்டிப்பாக வரேன் ராஜேஷ்."

ராஜா ,சஞ்சனாவை வீட்டில் விடும் பொழுது, சஞ்சனா அவனிடம் ஒரு application கொடுத்தாள். "இதை fill பண்ணி monday கொடுங்க"

"என்ன இது,"

"Madras university application இது. இப்போ உனக்கு இருக்கிற qualification வச்சு TL மட்டும் தான் ஆக முடியும். மேற்கொண்டு அடுத்த லெவல் போக வேண்டும் என்றால் கண்டிப்பாக டிகிரி அவசியம். அதான் பகுதி நேரமாக டிகிரி சேருவதற்கான அப்பிளிக்கேஷன் இது. அடுத்த இரண்டு வருடத்தில் நீ கண்டிப்பாக AM ஆக வேண்டும்."

"சஞ்சனா ஒரு நிமிஷம்"

"என்ன சொல்லு"

"உன்கிட்ட முக்கியமான ஒரு விசயம் சொல்லணும்"

"ம் சொல்லு"

"இப்போ இல்ல, தீபாவளி அன்னிக்கு சொல்றேன்."

சஞ்சனா நெருங்கி வந்தாள். அவன் நெற்றியில் தன் ஸ்ட்ராபெர்ரி உதடுகளை அழுத்தமாக சில்லென்று பதித்தாள். சுற்றிலும் உள்ள உலகத்தை இருவருமே மறந்தார்கள். இரண்டு நொடி தொடர்ந்த அந்த முத்தமே அவள் காதலை அவனுக்கு பறைசாற்றியது.

"நீ சொல்லும் அந்த வார்த்தைக்காகத்தான் நான் அனுதினமும் காத்திருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

நேத்து ராத்திரி... யம்மா!

கொழு கொழு அண்ணி

மாலை மங்கும் நேரம் 1