காதல் சுகமானது 8

written by raja

முழு தொடர் படிக்க

அடுத்த நாள் ராஜா வாசுவுக்கு ஃபோன் செய்தான்.

"டேய் வாசு என்ன பண்ணிட்டு இருக்க"

"நான் என் பொண்டாட்டி துணிய துவச்சிட்டு இருக்கேன் ராஜா."

"டேய் இன்னிக்கு மேட்ச், ராஜேஷ் நம்மள கண்டிப்பாக வர சொல்லி இருக்கான். சீனிவாசன் கூட விளையாடுறான். நம்ம sales டீம் ஃபைனல் qualify ஆகிடுச்சு. நாம போய் நம்ம டீமை support பண்ணலாம் வா"

"இல்ல மச்சான், வாய்ப்பே இல்ல, அவ்வளவு தூரம் எல்லாம் என்னால பெட்ரோல் செலவு பண்ணி வர முடியாது"

"அட அறிவு கெட்டவனே, நான் உன் ஏரியாவில் தான் இருக்கேன். ஒரே வண்டியில் போய்ட்டு வந்து விடுவோம்"

"அப்ப ஓகே, உடனே கிளம்பலாம்"

"சரி சீக்கிரம் வா, நான் கீழ வெயிட் பண்றேன்."

மைதானத்தில் telesales டீமுக்கும், வேறு ஒரு அணிக்கும் போட்டி நடைபெற்று கொண்டு இருந்தது.

துர்கா சஞ்சனாவிடம் "ஏய் என்னடி மேட்சை பார்க்காம, வாசல் பக்கமே திரும்பி திரும்பி பார்த்துட்டிருக்க" என்றாள்.

"இல்ல க்கா, ஒருத்தர் வரவை எதிர்பார்த்துட்டு இருக்கேன்."


"யாரு அந்த ராஜாவா?"

"ஆமாக்கா"

"இங்க பாரு, அவன் வந்தா, அவன் பின்னாடியே போய் விடாதே. நம்ம டீம் இப்போ செமி பைனலில் வெற்றி பெறுகிற மாதிரி இருக்கு, அப்படி வெற்றி பெற்றால் sales அணியும், நம்ம அணியும் பைனலில் விளையாட வேண்டி வரும். அதுக்கு நீ இங்கே இருந்து நம்ம டீமை support பண்ணு."

"சரிக்கா, நான் உங்க பேச்சை மீறுவனா?"

Telesales அணியும் செமி பைனலில் வெற்றி பெற்றது.

Telesales அணியின் கேப்டன் ஜார்ஜ், sales அணியின் கேப்டன் சக்திவேலை ரகசியமாக சந்தித்தான்.

"Hi ப்ரோ, எனக்கு நீங்க ஒரு favour செஞ்சீங்கனா நான் உங்களுக்கு நீங்க எதிர்பார்க்காத உதவியை செய்யறேன்"

"சொல்லு ஜார்ஜ் நான் என்ன செய்யனும்.?"

"ரொம்ப சிம்பிள் சக்திவேல், ஒவ்வொரு தடவையும் நீங்க தான் கப் அடிக்கறீங்க. இந்த முறை தான் நாங்க முதன் முதலாக ஃபைனல் வந்துருக்கோம். நீ இந்த மேட்ச் விளையாடவே கூடாது. உங்க அணியில் இன்னொரு ஆளும் விளையாட மாட்டான்."

"அய்யோ ஏற்கனவே 2 பேர் காலையில் நடந்த மேட்சில் தான் காயம் ஆனாங்க. மீதி இருப்பது மொத்தமே பதினொரு பேர் தான். அதிலும் நானும், இன்னொரு பையனும் விளையாடவில்லை என்றால் 9 பேர் தான் இருப்பாங்க. அவர்களை வைத்து எப்படி விளையாட முடியும்.?"

"அது தான் எங்களுக்கு வேணும் சக்தி, ஆடாமலே நாங்க ஜெய்க்கனும். அதுவும் அந்த டீமோட முக்கியமான தூணே நீங்க தான். நீங்க விளையாடவில்லை என்றால் போதும் அவங்க மனதளவில் தளர்ந்து போய் விடுவாங்க. வேற யாரையும் அணியில் சேர்த்து கொள்ள தைரியம் வராது"

"சரி, நீ சொன்னபடியே நான் செய்யறேன். ஆனா அதனால் எனக்கு என்ன பலன்னு நீ இன்னும் சொல்லவில்லையே"

"ம்... அடுத்தது அந்த விசயம் தான். நான் உனக்கு மாசத்துக்கு 10 லீட் support பண்றேன். லீட் clash எதுவும் வந்தால் என் டீம் கிட்ட பேசி உனக்கு விட்டு கொடுக்க சொல்றேன். ஓகேவா"

"ம்... it sounds good deal ஜார்ஜ். நானும் ஒவ்வொரு மாசமும் அந்த north team பையன் ராஜாகிட்ட வெறும் 5 நம்பர் வித்தியாசத்தில் தான் performer award ஐ கோட்டை விடறேன். அந்த performer award கிடைக்காததால் என்னால steps கிட்ட கூட போக முடியல. நீ இந்த உதவி செய்தால் நான் கண்டிப்பாக TL ஆகி விட முடியும்."

"நான் கண்டிப்பாக செய்யறேன் சக்தி."

ராஜா உள்ளே நுழைந்தது தான் தாமதம். உடனே சஞ்சனா telesales கேம்ப்பில் இருந்து சிட்டாக பறந்து sales camp அருகே ஓடி வந்து விட்டாள். "அடியே போகாதே" என்று துர்கா கத்தி கொண்டே இருந்தாலும் அவள் காதிலேயே வாங்கவில்லை.

ஆனால் sales கிரிக்கெட் அணியின்‌ கேம்ப் நிலைமை மோசமாக இருந்தது. வெறும் 9 பேர் மட்டுமே இருக்க, சக்திவேல் கேப்டனும் இல்லாமல் ராஜேஷ் தவித்து கொண்டு இருந்தான்.

"டேய் இப்போ ரெண்டு பேர் குறையுதேடா, எப்படி விளையாடுவது?" ராஜேஷ் கேட்க

சீனி அதற்கு "டேய் ராஜேஷ் நேரம் இல்ல நீ போய் டாஸ் போடு. மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம்." என்றான்.

"டேய் லூசா நீ, டாஸ் போடும் போது விளையாடும் வீரர்களின் விவரம் கேப்பானுங்களே? அப்ப நான் என்ன பண்ணட்டும்."

ராஜா: "ஏண்டா நடக்காத போட்டிக்காடா என்னை வற்புறுத்தி கூப்பிட்ட"

வாசு: "ஆமா ராஜா, வீட்டில் இந்நேரம் துணி துவைத்துவிட்டு அழகா ஒரு குட்டி தூக்கமே போட்டு இருப்பேன். இப்ப கூட ஒன்னும் கெட்டு போல, என்னை கொண்டு போய் வீட்டில் விட்டு விடு."

ராஜேஷ்: "போட்டி கண்டிப்பாக நடக்கும்.".

ராஜா" "எப்படி? அது தான் 2 players குறையுதே"

ராஜேஷ்: "அதான் நீங்க ரெண்டு பேர் இருக்கீங்களே, நீங்க வந்து விளையாடுங்க"

ராஜா: "டேய் ராஜேஷ், நானெல்லாம் கிரிக்கெட் மட்டையை பிடித்து 15 வருஷம் ஆச்சுடா. என்னால எல்லாம் முடியாது."

வாசு: "ராஜா நீயாவது பரவாயில்லை. கிரிக்கெட் மட்டையை தொட்டு 15 வருஷம் ஆச்சு. ஆனால் நான் கிரிக்கெட் எல்லாம் வாழை மட்டையில் தான் விளையாடி இருக்கேன்."

ராஜேஷ்: "டேய் டேய் பிளீஸ் இந்த ஒரு தடவை எனக்காக விளையாடுங்க, போராடி தோத்தா கூட பரவாயில்ல. ஆனா விளையாடமால் விட்டு கொடுத்தா அதை விட கேவலம் எதுவும் இல்லை."

ராஜா: "சரி ராஜேஷ் உனக்காக நான் விளையாடறேன்" 

ராஜா ஒத்து கொண்டான். ஆனால் வாசுவோ "அவன் வேணும் என்றால் விளையாடட்டும்.ஆனால் நான் வரமாட்டேன்" என்றான்.

"டேய் வாசு, நீ பந்து வரும் போது பிடித்து போட்டால் மட்டும் போதும். அதுவும் உன்னை பந்தே வராத இடத்தில் தான் நிற்க வைப்பேன். பேட்டிங் கூட நீ விளையாட வேண்டிய அவசியமே இருக்காது."

"முடியவே முடியாது ராஜேஷ்" 

வாசு கறாராக சொன்னான்.

"டேய் இன்னிக்கு இரவு ஒரு quarter வாங்கி தரேன்டா."

"Quarter பத்தாது. HALF வாங்கி கொடுக்கறேன்னு சொல்லு. நான் விளையாடறேன்."

"சரி வாங்கி கொடுக்கிறேன்."

சஞ்சனா நடப்பது எதுவும் புரியாமல் ராஜாவின் அருகில் நின்று பார்த்து கொண்டு இருந்தாள். ஒன்று மட்டும் புரிந்தது அவள் காதலன் விளையாட போகிறான் என.

சஞ்சனா " best of luck ராஜா" என கை கொடுக்க

"எனக்கு எதுக்கு best of luck சஞ்சனா, நான் ஜஸ்ட் பீல்டிங் மட்டும் தான் பண்ண போறேன். பேட்டிங், பவுலிங் எல்லாம் அவர்களே பார்த்து கொள்வார்கள்." என்றான் இவன்.

அங்கே ஜார்ஜ் நடுவரிடம் பேசிக்கொண்டிருந்தான். 

"சார் அவங்ககிட்ட பதினோரு வீரர்களே கிடையாது. எப்படி நீங்க அவங்க டீமை ஆட அனுமதிக்கலாம்?"

"அவங்க பதினோரு வீரர்கள் லிஸ்ட் கொடுத்தாச்சு. நீ வந்து டாஸ் போடு"

ராஜேஷ் டாசில் வெற்றி பெற்று, பேட்டிங்கை தேர்வு செய்தான்.

"டீம், அதிர்ஷ்டம் நம்ம பக்கம் தான் இருக்கு. நாம தான் பேட்டிங் பண்றோம். ராஜாவும், வாசுவும் பேட்டிங் விளையாட கூடாது. அதுக்கேற்ற மாதிரி விக்கெட் கொடுக்காம விளையாடுங்க. அது போதும்."

துர்காவின் தோழி வந்து துர்காவிடம் "சஞ்சனா எங்கே என்று கேட்க".

"அங்க பாரு" என்று sales team கேம்பை காண்பித்து "அவ ஆளு வந்த உடனே சிட்டாய் பறந்து அங்கே ஓடி விட்டாள்." என்றாள்.

"இப்படி எதிர் அணியில் போய் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு support பண்ணா ஜார்ஜ் கோவிச்சுப்பானே."

"நான் என்னடி பண்ணட்டும். அவ என் பேச்சை கேட்கவே மாட்டேங்கிறா."

போட்டி ஆரம்பமாகியது.

எப்பொழுதுமே சக்திவேல் தான் துவக்க ஆட்டக்காரனாக இறங்கி சிறந்த தொடக்கத்தை கொடுப்பான். ஆனால் இப்போ அவன் இல்லாததால் சேல்ஸ் அணியின் விக்கெட் சீட்டு கட்டு போல் சரிய தொடங்கியது. 2 ஓவரில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து விட்டது. நான்காவது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் மட்டுமே எடுக்க, ராஜேசும், சீனியும் சேர்ந்து ஒரு சின்ன பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் 7.5 ஓவர்களில் 44 ரன்கள் வரை விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர். அப்பொழுது சீனி ஒரு ரன் அடித்து ஓடி வர, telesales ஃபீல்டர் வேண்டுமென்றே குறுக்கில் ஓடி வர சீனி தடுமாறி கீழே விழுந்தான். மீண்டும் எழுந்து ஓடி கீரிசை தொடுவதற்குள் சீனி ரன் அவுட் ஆகி விட்டான். sales அணி 44 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து பரிதாபகரமான நிலையில் இருந்தது.

அப்பொழுது ட்ரிங்க்ஸ் ப்ரேக் வர, அனைவருக்கும் ஜுஸ் கொடுக்கப்பட்டது. பெவிலியனில் இருந்த வாசு ஒன்றுக்கு இரண்டாக ஜுஸ் எடுத்து குடித்துவிட்டு, "என்னடா, ஜூஸில் சர்க்கரை கம்மியாக இருக்கு" என்று சண்டை போட, அது போட்டி வர்ணனை செய்து கொண்டு இருந்த நபர் காதில் விழுந்தது.

"பாருப்பா sales அணி விக்கெட்களை இழந்து பரிதாபகரமான நிலையில் இருப்பது வாசுக்கு வருத்தம் இல்லையாம். ஜூசில் சக்கரை குறைவாக இருப்பது தான் வருத்தமாம்" என்று தன் பங்குக்கு மைக்கில் கலாய்த்தவுடன் வாசு திருதிருவென முழித்தான்.

"ஏண்டா ஜூசில் சக்கரை இல்லை என்று கேட்டதுக்கு மைக் போட்டு ஊர் முழுக்க சொல்லுவீங்களாடா" என்று வாசு முணுமுணுத்தான்.

ட்ரிங்க்ஸ் ப்ரேக் முடிந்து ஜார்ஜ் பந்து வீச வர, அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை எடுக்க சேல்ஸ் அணி நிலைமை இன்னும் மோசமானது.44 ரன்களுக்கு 8 விக்கெட்கள்.

வேறுவழியின்றி ராஜா களம் இறங்க ஜார்ஜ்ஜிற்கு பழிவாங்க சந்தர்ப்பம் வாய்த்தது.

ராஜேஷ், ராஜாவிடம் சென்று "மச்சான் ரன் அடிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஜஸ்ட் இந்த ஓவரை மட்டும் கடத்தி விடு. இன்னும் அவனுக்கு ஒரு ஓவர் தான் இருக்கு." என்றான்.

ஜார்ஜ் ஓடி வந்து வெறியோடு ராஜாவின் முகத்தை நோக்கி பந்து வீச, அது பூமியில் படாமல் நேராக ஃபுல்டாசாக வந்து அவன் ஹெல்மெட்டை தாக்கியது. பந்து ஹெல்மெட்டையும் உடைத்து அவன் மூக்கை சென்று தாக்க, ராஜா அங்கேயே சுருண்டு விழுந்தான். பந்து no ball ஆக அறிவிக்கப்பட , ஜார்ஜ்ஜிற்கு ஒருமுறை warning ம் கொடுக்கப்பட்டது.

ராஜா மூக்கில் வழியும் ரத்தத்தோடு பெவிலியன் திரும்ப, சஞ்சனா ஓடி எதிர்வரவும் சரியாக இருந்தது. அவன் மூக்கில் வழிந்த இரத்தத்தை சஞ்சனா தன் துப்பட்டாவில் துடைக்க துடைக்க அது வழிந்து கொண்டே இருந்தது. அவள் துப்பட்டா முழுக்க அவன் இரத்தம் நனைந்து ஈரமாக்கியது. ஜார்ஜ்ஜை மனதிற்குள் சபித்தாள். பதறி அழுது கொண்டே, தன் மொத்த கோபத்தையும் ராஜேஷ் மீது காட்டினாள்.

"அவர் தான் விளையாடி ரொம்ப நாள் ஆச்சுனு சொன்னார்ல, இப்போ பாருங்க என்னாச்சு" என்று கத்தினாள்.


"சஞ்சனா அமைதியா இரு, எனக்கு ஒன்னும் ஆகலை, அவன் மேல எந்த தப்பும் கிடையாது."

ராஜா சென்று பெவிலியனில் உட்கார, வாசு பேட்டிங் ஆட களத்திற்கு வந்தான்.

ராஜேஷ் வாசுவை பார்த்து "மச்சான் ஒரு புல்டாஸ் போட்டு அவன் warning வாங்கிட்டான். எப்படியும் பந்து கீழே பட்டு ஸ்லோவாக தான் வரும். எப்படியாவது தட்டி விட்டு ஒரு ரன் மட்டும் எடுத்து கொடு போதும்." என்றான்.

"டேய் அவன் பந்தை உருட்டி விட்டா கூட எனக்கு அடிக்க தெரியாதுடா. ஒரு நல்ல டீமுக்கு அழகு என்ன தெரியுமா? கடைசி பேட்ஸ்மேனை களத்தில் இறங்கவே விட கூடாது. நீங்களும் இருக்கீங்களே."

"சரி சரி மச்சான் பார்த்து ஆடு. இந்த ஓவரில் இன்னும் மூன்று பால் தான் இருக்கு."

அந்த மூன்று பந்தையும் வாசு ஒன்றை மார்பிலும், இன்னொன்றை சூத்திலும், கடைசி பந்தை முதுகிலும் வாங்கி ராஜேஷிடம் வந்தான்.

"என்னடா வாசு முகம் எல்லாம் வேர்த்து கொட்டி இருக்கு"

"மச்சான் நல்லா பாருடா, அது வியர்வை இல்ல, என் கண்ணீர். அவன் என்னடா பந்த அவ்வளவு வேகமா வீசுறான். கண்ணை மூடி திறப்பதற்குள் பந்து வந்து உடம்பு மேல படுது"

"நீ ஏண்டா கண்ணை மூடற. பந்து வரும் போது பேட்டை வை போதும்"

"அடி வாங்கினது கூட பரவாயில்லை மச்சான், அங்க பாரு பந்தை எங்க வச்சு தேய்க்கிறான். அவன் பந்தில் தேய்த்த எச்சில் எல்லாம் என் சட்டையில் தான்டா இருக்கு. இதை நான்தான்டா வீட்டுக்கு போய் துவைக்கணும்"

"சரி சரி, HALF சும்மா வருமா, ஆடு"

அடுத்த ஓவரின் முதல் பந்தில் ராஜேஷ் இரண்டு ரன் எடுக்க முயல, ஆனால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. மீண்டும் வாசு களத்தில் பேட்டிங் செய்ய வேண்டி வந்தது. அதுவும் இரண்டாவது ரன் எடுக்கும் போது ஒரு குட்டி கலாட்டாவே நடந்தது. "ஏய் வா வா.... இல்லை வராதே வராதே" என்று ராஜேஷ் சொல்ல வாசு முற்றிலும் குழம்பி இரண்டாவது ரன்னை எடுக்காமல் திரும்ப ஸ்ட்ரைக்கர் பக்கமே ஓட வேண்டியதாகி விட்டது .

"வாசு, எப்படியாவது ஒரு ரன் மட்டும் எடுத்து கொடு போதும்"

"நடக்கிறத பேசு, நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டேட. முதல் பந்திலே சிங்கிள் எடுத்து விட்டு இப்படி safe ஆ போய் நின்னுகிட்டேயே"

"சரி சரி ஆடு" 

அடுத்த பந்தை வாசு கண்ணை மூடி கொண்டு சுத்த, பந்து எங்கே எங்கே என்று அனைவரும் தேட அது safe ஆக கீப்பரிடம் சென்று இருந்தது. ஆனால் எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க, நான் அடிச்ச பந்து ஒருவேளை வெளியில் போய் விட்டதோ என்று வாசு நினைத்தான்.

"டேய் லூசு வெளியில் போ, நீயே ஸ்டம்பை தட்டி விட்டு அவுட் ஆயாச்சு."

நடுவர் ராஜேஷிடம் "என்னப்பா அவ்வளவு தானா உங்க டீம்" என்று கேட்க

அப்பொழுது ராஜா மீண்டும் சஞ்சனாவின் கெஞ்சுதலையும் மீறி களத்தில் இறங்குவதை பார்த்து சந்தோசம் அடைந்தான்.

"ராஜேஷ் ராஜாவிடம் வந்து, மச்சான் இன்னும் 28 பந்து மீதம் இருக்கு, அதுவரை நாம் களத்தில் நின்றால் போதும். வேற எதுவும் பண்ணிட வேணாம்"

"சரி ராஜேஷ்"

ராஜேஷ், ராஜா இருவரும் single தட்டி கொண்டே இருக்க, ராஜேஷ் மட்டும் அவ்வப்போது 4 ரன்களை அடிக்க ரன் உயர்ந்து கொண்டே வந்தது. 14 ஓவர் வரை 75 ரன்கள் எடுத்து வந்து விட்டனர். கடைசி ஓவரை ஜார்ஜ் வீச வந்தான்.
அவன் வீசிய பந்துகளை இருவருமே லாவகமாக கையாண்டு 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தனர். கடைசி பால் ராஜா களத்தில் நிற்க ராஜேஷ் அவனிடம் அடித்து ஆடு சைகையில் கூறினான்.

ஜார்ஜ் வேண்டுமென்றே பவுன்சர் வீச, இந்த முறை ராஜா தயாராக இருந்து, அந்த பந்தை பவுண்டரி எல்லை கோட்டை தாண்டி சிக்சர் அடித்தான்.
நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் sales அணி 89 ரன்களை எடுத்தது.

ராஜேஷ் ராஜாவிடம் "எப்படியோ ராஜா ஓரளவு கௌரவமான ஸ்கோரை எடுத்து விட்டோம், இதற்கு மேல் தோற்றாலும் பரவாயில்லை." என்றான்.

அடுத்து telesales அணி பேட்டிங் செய்ய வந்தது. ஜார்ஜ்ஜும், சதிஷும் களம் இறங்கி அடித்து ஆடினர். முதல் நான்கு ஓவரில் 44 ரன்களை குவித்தனர்.

ராஜேஷ் ராஜாவை அழைத்து, "எப்படியும் யார் போட்டாலும் ரன் போயிட்டு தான் இருக்கு so நீயே வந்து பந்து போடு" என்றான்.

ராஜா பந்து வீச முதல் இரண்டு பந்துகளும் wide ஆக சென்றது.

அதைப் பார்த்து ஜார்ஜ் "டேய் சதிஷ் நாம ரன்னே அடிக்க தேவையில்லை. இவனுங்களே ரன்னை வாரி வழங்கிடுவாங்க. இந்த ஒவரிலேயே மேட்ச்சை முடிச்சு விடு." என கீழியாக சொல்லி சிரித்தான்.

சதீஷ் அடுத்த பந்தை கவனக்குறைவாக எதிர்கொள்ள பந்து inswing ஆகி காலுக்கும் பேட்டுக்கும் நடுவில் நுழைந்து ஸ்டம் தெறித்தது. முதல் விக்கெட் 46 ரன்களுக்கு விழுந்தது.

ராஜேஷ் சந்தோஷத்தில் ஓடி வந்து ராஜாவை கட்டி பிடித்தான்.

"எப்படி மச்சான் என்னால நம்பவே முடியல"

"ரொம்ப சிம்பிள் ராஜேஷ், அவன் சைக்காலஜியில் விளையாடினேன். வேண்டும் என்று முதல் இரண்டு பந்தை வைடாக வீசினேன். மூன்றாவது பந்தும் வெளியில் தான் வரும் என்று அவன் ஏமாந்த சமயம் பந்தை உள்நோக்கி வீச அவன் அவுட் ஆகி விட்டான். நான் பவுலர்டா. inswing, outswing ரெண்டும் எனக்கு வீச தெரியும்"

"சூப்பர்டா, அப்போ கடைசி ஓவரையும் நீ தான் வீச போற"

"போடா முட்டாள் அவர்கள் இன்னும் 44 ரன்கள் தான் எடுக்க வேண்டும் 65 பந்துகள் மீதம் உள்ள நிலையில் 9 விக்கெட்டுகள் கைவசம் உள்ளது.
இந்த மேட்ச் கடைசி ஓவர் வரை போகாது."

"இல்ல மச்சான், என் உள்மனது சொல்லுது. இந்த மேட்ச் கண்டிப்பாக கடைசி ஓவர் வரை போகும்"

அந்த ஓவரிலேயே ராஜா மேலும் ஒரு விக்கெட் எடுக்க telesales அணி ஐந்து ஓவர்களில் 48 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது.

விக்கெட் விழுந்த உற்சாகத்தில் அடுத்தடுத்து sales அணியினர் பந்தை கட்டுக்கோப்பாக வீச டெலிசேல்ஸ் அணியும் ரன்னை குவிக்க திணறினர். சீரான இடைவெளியில் விக்கெட் வேறு விழுந்து கொண்டே இருந்தது. ஆனால் ஜார்ஜ் மட்டும் ஒரு பக்கம் நங்கூரம் போல் நின்று கொண்டு இருந்தான். ஒவ்வொரு தடவை சேல்ஸ் அணி விக்கெட் எடுக்கும் பொழுதும் சஞ்சனா துள்ளி குதித்து தன் நாயகனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள்.
டெலிசேல்ஸ் அணி 13 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டை இழந்திருந்தது. 14 வது ஓவரில் முதல் 5 பந்துகளில் 1,0,2,1,0 என்று மட்டுமே ரன்கள் வந்தது. கடைசி பந்தை கண்ணை மூடி கொண்டு பதினோராவது வீரர் சுற்ற அது பேட்டில் பட்டு கீப்பருக்கு பின் 4 ரன்கள் சென்றது.

அதை பார்த்து ராஜேஷ், "டேய் வாசு நீயும் இந்த மாதிரி ஒரு சுற்று சுற்றி இருந்தா நம்ம டீமுக்கு ஒரு நாலு ரன் வந்து இருக்குமில்ல" என்க

வாசு "நானும் சுத்தினேன் மச்சான், ஆனா பேட்டில் பந்து படாம, பேட் தான் ஸ்டம்பில் பட்டு விட்டது. நானெல்லாம் விளையாட வந்ததே பெரிய விசயம் பார்த்துக்க." என்றான்.

ராஜா VS ஜார்ஜ்

TELESALES அணி வெற்றி பெற கடைசி ஓவர் 6 பந்துக்கள் 6 ரன்கள் தேவை.
SALES அணி ஒரு WICKET எடுத்தால் வெற்றி என்ற நிலை. STRIKER முனையில் நிற்பது முதல் ஓவரில் இருந்து களத்தில் இருக்கும் ஜார்ஜ்.

கடைசி ஓவரை ராஜா வீச, ஜார்ஜ் எதிர்கொண்டான்.

முதல் பந்து ஸ்டம்பை நோக்கி யார்க்கராக வீச அந்த பந்தை GEORGE DEFENCE மட்டுமே செய்ய முடிந்தது.

இரண்டாவது பந்தை ஜார்ஜ் ஒரு ஸ்டெப் முன்னாடி வந்து யார்க்கரை புல்டாசாக மாற்றி, ராஜாவின் தலைக்கு மேல் அடிக்க அது நேராக பவுண்டரி லைனுக்கு முன் விழுந்து தொட்டது. 

இப்பொழுது இலக்கு வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே. நான்கு பந்துகள் மீதம் இருந்தது.

ராஜா ஓடி வந்து அதே லென்த் அதே லைனில் ஆனால் வேகம் வெகுவாக குறைத்து வீசினான். ஜார்ஜ் அடித்து முடித்த பின் பந்து பேட்டை மெதுவாக கடந்து சென்று ஸ்டம்பை பதம் பார்த்தது. கடைசியில் sales அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

sales அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் சஞ்சனாவும் கலந்து ஆடி கொண்டு இருந்ததை பார்த்து ஜார்ஜ் கோபம் அடைந்தான். ஏற்கனவே தன் பரம எதிரியிடம் தோற்றது ஒருபுறம், சஞ்சனா ஆடிக்கொண்டிருந்தது மறுபுறம் என கோபத்தில் அவன் கண்கள் சிவந்தது.

ஜார்ஜ் தன் teammate சங்கீதாவை பார்த்து, "அவ ஏன் நம்ம எதிர் அணி பக்கம் போனாள்" என்று கேட்க,

அதற்கு சங்கீதா, "அவ ராஜாவை காதலிக்கிறா ஜார்ஜ். போன மாசம் அவ Target முடிக்க அவன் உதவி பண்ணினானம். உடனே அவன் மேல இவளுக்கு காதல் வந்து விட்டது." என்றாள்.

'ச்சே, நான் கிரிக்கெட் பிராக்டீஸ் சென்ற இந்த ஒரு வாரத்தில் என்னென்னமோ நடந்து விட்டதே, சஞ்சனா எங்கே போய் விட போகிறாள் என்று நான் கவனக்குறைவாக இருந்த நேரத்தில் இந்த ராஜா முந்தி கொண்டு விட்டானே. வெறும் ஒருநாள் ஃபீல்டு டிரெய்னிங் தானே என்று கவனிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய பிசகு.' 

ஜார்ஜ்ஜின் மனதில் சஞ்சனாவை கவிழ்க்க திட்டங்கள் உதயம் ஆயின. 

'உன்னிடம் நான் தோற்று கொண்டே இருக்கிறேன் ராஜா. ஆனால் இந்த தடவை அவளை உன்னிடம் இருந்து பிரித்து என்னை காதலிக்க வைத்து உன்னை வாழ்க்கை முழுக்க அழ வைக்க போகிறேன். இதுவரை நான் உன்னிடம் தோற்ற அனைத்துக்கும் நான் உனக்கு கொடுக்கும் சரியான தண்டனை இது தான்' என மனதில் சபதம் எடுத்தான்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

நேத்து ராத்திரி... யம்மா!

கொழு கொழு அண்ணி

மாலை மங்கும் நேரம் 1