காதல் சுகமானது 9

written by raja

முழு தொடர் படிக்க

 டீம் co ordinator பல்லவி வந்து ராஜேஷிடம் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தாள். "சூப்பர் ராஜேஷ், ஒரு கேப்டனாக டீமை அருமையா வழி நடத்தினீங்க, கடைசி வரை நின்னு நீங்க அடிச்ச ஸ்கோர் தான் நம்ம டீமை வெற்றி பெற வைச்சது."


ராஜாவிடமும் கை கொடுத்து, "நீங்களும் அருமையா பந்து வீசி முக்கியமான 4 விக்கெட்களை எடுத்ததால் தான் வெற்றி பெற முடிந்தது. சூப்பர்." 

மேலும் பல்லவி சஞ்சனாவை பார்த்து "என்ன சஞ்சனா உங்க டீம் தோற்றதிற்கு இங்க வந்து இவங்க கூட கொண்டாடிட்டு இருக்கே. உனக்கும் ராஜாவுக்கும் something ஏதாவது?" என கேட்க

சஞ்சனா மௌனமாய் ராஜாவை பார்க்க, ராஜா பல்லவியிடம் "இதுவரை அப்படி ஒன்னும் இல்ல பல்லவி, சஞ்சனா எனக்கு ஒரு நல்ல ப்ரெண்ட் அவ்வளவு தான்" என்றான்.

"அப்போ நீ இன்னமும் சிங்கிள் தானே. நான் உன்னை லவ் propose பண்ணலாம் அல்லவா!"


இதை கேட்டு சஞ்சனா கோபித்து கொண்டு போக ,

ராஜா "அய்யோ என்ன பல்லவி காரியத்தையே கெடுத்துட்டீயே, அங்க பாரு வாசு இருக்கான், அவன் இன்னும் நீ அவனுக்கு கொடுத்த லீட் data எதுவுமே முடிக்கல. கையும் களவுமா சிக்கி இருக்கான். அவனை விடாதே புடி. ஏய் சஞ்சனா ஒரு நிமிஷம் நில்லு" என்று அவள் பின்னாடி கத்தி கொண்டு ஓடினான்.

ராஜேஷ் பல்லவியிடம் "பல்லவி அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் லவ் பண்றாங்க. ஆனா இன்னும் சொல்லிக்கல. யார் முதலில் சொல்லுவாங்க என்று அவர்களுக்குள் ஒரு போட்டியே நடக்குது. கூடிய சீக்கிரம் யாராவது ஒருத்தர் சொல்லிடுவாங்க." என்றான்.

"ஓ அப்படியா சங்கதி"

"ஏய் சஞ்சனா ஒரு நிமிஷம் நில்லு" என்று ஓடிப்போய் அவள் கை பிடித்து நிறுத்தினான் ராஜா.

சஞ்சனா அவனை பார்த்து "நீ இன்னும் சிங்கிள் தானே, நான் உன்னை லவ் புரோபோஸ் பண்ணவானு அவ கேட்கிறா, நீயும் அதுக்கு பல் இளிக்கற. மவனே அப்படியே மூஞ்சு முகரைய அடிச்சு உதைச்சிடுவேன் பார்த்துக்க" என்றாள் செல்ல கோவத்துடன்.


"பின்ன நீயும் என்கிட்ட காதலை சொல்லல, நானும் உன்கிட்ட காதலை சொல்லல. ஒரு நல்ல ஆஃபர் தானா வரும் போது எப்படி விடறது?"

"அப்போ அவ பின்னாடியே போக வேண்டியது தானே, ஏன் என் பின்னாடி ஓடி வந்தே!"

"அப்போ அவ பின்னாடி போலாமா? உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான்" என்று ராஜா திரும்ப

"போன்னு சும்மா ஒரு வார்த்தை சொன்னா, அப்படியே போய்டுவியா"என்று அவன் கன்னத்தில் சப்பென்று அறைந்தாள் சஞ்சனா.

"அய்யோ வலிக்குதுடி, என்னடி இப்படி அடிக்கிற"

"இனி என்னை தவிர வேற எவ வந்து உன்கிட்ட லவ் சொன்னாலும், நான் அப்படித்தான்டா அடிப்பேன்" என்று மற்றொரு அறை விழுந்தது.

"அப்போ நீ வந்து உன் காதலை சொல்லு கண்மணி"

"முடியாது போடா, நீ சொல்லு முதல்ல"

ராஜா அவள் முகத்தை தன் இரு கரங்களில் ஏந்தி "ஒளி சிந்தும் கண்களை கொண்ட இந்த தேவதைக்கு நான் தகுதியானவனானு தெரியல. நான் முன்னாடியே கேட்ட மாதிரி எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் கொடு அது போதும்" என்றான்.

"முதலில் இந்த தாழ்வு மனப்பான்மையை விட்டு தொலைடா, உனக்கு என்ன குறைச்சல், சதுர முகம், மாநிறம், அகன்ற மார்பு, கம்பீரமா இருக்க, முடிந்த வரை இல்லாதவங்களுக்கு உதவி செய்யற, இது மட்டும் இல்லாம எனக்கு தெரிந்து இதுவரை உனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இதை விட ஒரு பொண்ணு ஒரு ஆண் கிட்ட என்ன எதிர்ப்பார்ப்பா சொல்லு?"

"எதிர்பார்ப்பாங்க சஞ்சனா, அத என்னோட முன்னாள் காதலி வாயாலேயே கேட்டுருக்கேன். பெண்கள் அடிப்படையா எதிர்பார்க்கும் நல்ல வேலை, சொந்த வீடு, கார் இது எதுவும் என்கிட்ட இல்ல. நான் இன்னும் தெரு தெருவா சுத்தற sales executive மட்டும் தான் "

"இதெல்லாம் எனக்கு தெரியாதா? அது தெரிஞ்சு தானே நான் உன் கூட வரேன். அவளும் நானும் ஒண்ணா? போடா லூசு"

அப்போது ராஜேஷ் வந்து "என்ன மச்சான் பட் பட்டென்று பட்டாசு வெடிக்கிற சத்தம் எல்லாம் கேட்டுச்சு" என்று கிண்டல் செய்ய 

ராஜா "அப்படியா அதெல்லாம் ஒன்னும் இல்லையே" என்று சமாளித்தான்

"இல்லை இல்லை... எனக்கு நல்லா கேட்டுச்சு, எங்கே கொஞ்சம் கன்னத்தை காட்டு. என்னடா இப்படி கன்னம் சிவந்து போய் இருக்கு
ஏய் சஞ்சனா, என்ன என் நண்பனுக்காக கேட்க ஆள் இல்லை என்று நினைச்சியா, நான் இருக்கேன்"

ராஜேஷுக்கும் ஒரு அறை கன்னத்தில் சப்பென்று விழுந்தது. அண்ணனுக்கு வலிக்க கூடாது என்று பொருப்பாகவே அறைந்தால் சஞ்சனா. 

சஞ்சனா "என்னடா உனக்கு இப்போ, எனக்கும் இவனுக்கும் நடுவில் நீ வந்தா உனக்கும் மிதி தான்" என்றாள்.

ராஜேஷ் கன்னத்தை பிடித்து கொண்டு "மச்சான் இனிமே நீ யாரோ நான் யாரோ, சஞ்சனா இதுக்கு மேல் நான் உங்க ரெண்டு பேர் நடுவில் வந்தா என்னன்னு கேளு. ராஜா, இனிமேல் உனக்கு தினமும் பட்டாசு வெடிக்கும், கன்னம் சிவக்கும். அனுபவி ராஜா அனுபவி. யப்பா என்ன அடி, வீட்டுக்கு போய் கன்னத்தில் ஓத்தடம் கொடுக்கணும் போல இருக்கே" என்று நழுவினான்.

சரியாக அந்த நேரம் வாசு "ராஜா, நாங்க சரக்கு அடிக்க wine shop போறோம். வெற்றியை என்ஜாய் பண்ண போறோம், நீயும் வாடா" என்றான்.

அவனுக்கும் ஒரு அறை விழுந்தது.

சஞ்சனா வாசுவிடம் "டேய் என் முன்னாடியே வந்து அவனை wine shop கூப்பிடறீயா" என கடுகடுக்க

வாசு "என்னடா பார்க்க பஞ்சு பொம்மை மாறி இருக்கா ஆனா அடி இடி மாதிரி விழுது, கையாடா அது, என் பொண்டாட்டி கூட என்னை இந்த மாதிரி அடிச்சது இல்லைடா. நான் என்னடா தப்பா கேட்டேன்?" என்றான்.

ராஜேஷ் வாசுவிடம், "டேய் நான் ஏற்கனவே ஒரு ரவுண்ட் அடி வாங்கிட்டு தான் உட்கார்ந்துக்கிட்டு இருக்கேன். நீ கேட்டது தப்பு இல்ல. கேட்ட இடம், கேட்ட நேரம் தான் தப்பு. அமைதியா வா மூடிட்டு போலாம்." என அவனை அழைத்து சென்றான்.

சஞ்சனா அவர்களை பார்த்து "டேய் ரெண்டு பேரும் எங்கடா கிளம்பறீங்க" என்க

வாசு அதற்கு "சிஸ்டர் கச்சேரி இன்னும் முடியலையா. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க"

"யாருக்குடா ரெஸ்ட் ?"

"உங்களுக்கு தான் சிஸ்டர். நீங்க அப்புறமா, வாடா வாசு என்று ஒரு குரல் கொடுத்தால் போதும் நான் வந்து உதை வாங்கி கொள்கிறேன்"

சஞ்சனா "டேய் இவன் தண்ணி அடிப்பானா?"

"இல்ல சிஸ்டர் அவன் வந்து எங்க கூட கூல் ட்ரிங்க்ஸ் மட்டும் குடித்து கம்பனி கொடுப்பான்."

"இதுக்கு மேல, கூல் ட்ரிங்க்ஸ் குடிக்க கூட இவனை கூப்பிட கூடாது சரியா?"

"இதுக்கு மேல தண்ணி குடிக்கிறப்ப கூட அவனை கூப்பிட மாட்டேன் சிஸ்டர்"

"என்னது மறுபடியும் தண்ணியா?"

"ஐயோ நான் குடிக்கிற தண்ணிய சொன்னேன் சிஸ்டர்"

"ரெண்டு பேரும் போங்கடா"

"வாடா மச்சான் போவோம். all the best ராஜா, நீயும் நல்லா வாங்கிட்டு வீடு போய் சேரு" என்று ராஜேஷூம், வாசுவும் ஓட்டம் பிடித்தார்கள்.

சஞ்சனா ராஜாவிடம் "ஏன் நீ தண்ணி அடிக்க மாட்டியா" என மெதுவாய் கேட்டாள்.

"ம்ஹீம்"

"எப்பவுமேவா இல்லை, என் முன்னாடி இன்னிக்கு மட்டுமா?"

"எப்பவுமே தான். என் அப்பாகிட்ட இருந்த குடிப்பழக்கத்தினால் என் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்க என்று நான் கண் கூடாக பார்த்து இருக்கேன் சஞ்சனா. அந்த மாதிரி ஒரு கஷ்டத்தை என்னை நம்பி வரும் பொண்ணுக்கு கொடுக்க மாட்டேன்."

"ம், நீ இப்படியே இருந்தா எனக்கு சந்தோஷம்."

"சரி சஞ்சனா, எங்க உங்க டீம் ஆளுங்களே காணோம்."

"அவங்க அப்பவே போய்ட்டாங்க"

"சரி வா, நான் உன்னை வீட்டில் ட்ராப் பண்ணிடறேன்.."

வீட்டுக்கு செல்லும் வழியில், நீண்ட நாள் கழித்து கிரிக்கெட் விளையாடியதால் ராஜாவுக்கு தோள் பட்டையில் வலி உருவாகி சரியாக வண்டி ஒட்ட முடியவில்லை. இதில் மேடு பள்ளம் பார்க்காமல் அங்கங்கு ப்ரேக் அடிக்க, முதல்முறை சஞ்சனாவின் பஞ்சு போன்ற பந்துக்கள் இரண்டும் அவன் முதுகில் உரச, அவன் உடலில் இதமான சூடு ஏறியது.

"என்ன சார், இன்னக்கி வண்டி ஓட்ட திணறுகிற மாறி இருக்கு,"

மேலும் அவள் மூச்சுக்காற்று அவன் பின் கழுத்தில் பட்டு அவனுக்கு மூடு ஏறி தீப்பிடிக்க ஏதும் பேசாமல் தட்டு தடுமாறி சஞ்சனா வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

சஞ்சனா அவனிடம் "உன்னோட முன்னாள் காதலி, ஒரு வைரத்தின் மதிப்பு தெரியாம அதை உதறிட்டு போய் இருக்கா, ஆனா எனக்கு அதன் மதிப்பு தெரியும். நான் என்ன நிலை வந்தாலும் இந்த வைரத்தை விட்டுவிட மாட்டேன். சரி இப்போ மூக்கில் வலி எப்படி இருக்கு"

"ம், பரவாயில்ல இரவு ஒரு pain killer மாத்திரை போட்டால் சரியாகி விடும்."

"Pain killer மாத்திரை எல்லாம் வேண்டாம்." 

சஞ்சனா சுற்றும் முற்றும் பார்த்து, யாரும் அருகே இல்லை என்பதை உணர்ந்து, அவன் மூக்கில் அடிபட்ட இடத்தில் முத்தம் ஒன்று வைத்தாள்.

"ஸ்ஸ்ஸ்... ப்ப்ப்பா சரியான pain killer மாத்திரை இது தான். போட்ட உடனே வலி மாயமாய் மறைந்து விட்டது. கன்னத்தில் நீ அடித்த அடி இன்னும் வலிக்குது?"

சஞ்சனா அவன் இரு கன்னத்தில் முத்தம் வைக்க

"நெற்றியில் இருந்து மூக்கு வரை வந்தாச்சு. அப்படியே இன்னும் கொஞ்சம் கீழே இறங்கினா நல்லா இருக்கும்."

"ஹா அஸ்கு புஸ்கு, அது நீ காதலை சொல்லும் போது தான் தருவேன்."

"உன் செந்தூர இதழில் சேகரித்து வைத்து இருக்கும் இந்த மலைதேனை அருந்தும் நாளை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன் என் கண்மணி"

"ச்சீ போடா" என்று வெட்கத்துடன் ஓடினாள் சஞ்சனா.

நேற்று என் வானம் மழை தரவில்லை.
ஏனோ என் தோப்பில் குயில் வரவில்லை,
வானவில் இருந்தும் வண்ணங்கள் இல்லை,
பூக்கள் இருந்தும் புன்னகை இல்லை,
அரண்மனை வாசல் தாண்டி நான் அன்புக்கு ஏங்கினேன்,
உன்னிடம் சேர்ந்த பின்பு தான் சொர்க்கத்தை வாங்கினேன்,
எனக்கு இந்த சொந்தம் போதுமே..

அவள் காதலுடன் கொடுத்த அந்த முத்தம் அவன் உடம்பில் இருந்த வலியை மட்டுமல்ல ஏறி இருந்த சூட்டையும் காணாமல் போக செய்தது.
ஆனால் இதே போன்று எதிர்காலத்தில் அவள் கொடுக்க போகும் முத்தம், அவனுள் காமகனலை மூட்டி அவர்கள் இருவரையும் கலவியில் ஒன்றிணைக்க போகிறது எப்படி? ஒரு முத்தம் மோகதீயை அணைத்தது, மற்றொரு முத்தம் மோகதீயை பற்ற வைக்க போகிறது? இயற்கையின் அதிசயத்தை என்னவென்று சொல்ல?.

அடுத்த நாள் சஞ்சனா ஆபிசில் வந்து உட்காரும் போது, அவள் டீம் நண்பர்கள் எல்லோரும் முகத்தை திருப்பி கொண்டார்கள். யாரும் பேச கூட இல்லை.

சஞ்சனா சங்கீதாவிடம் "Hi சங்கீ, என்னாச்சுடி எல்லோரும் என்னை பார்த்த உடனே முகத்தை திருப்பிட்டாங்க,"


சங்கீதா அவளிடம் "நம்ம டீம் நேற்று தோத்துபோய் இருக்கு, நீ நம்ம எதிரி டீம் கூட போய் ஆடிட்டு இருக்க. என்கிட்ட பேசாத" என அவளும் முகத்தை திருப்பி கொண்டாள்.

வழக்கமாக தன் பக்கத்தில் உட்காரும் துர்கா அக்கா கூட இன்று வராததால், தான் தனிமைப்படுத்த படுவதை சஞ்சனா உணர்ந்தாள்.

மதிய உணவு இடைவெளியில் Cafetaria சென்று அவர்களுடன் சாப்பிட உட்கார, அவள் டீம் நண்பர்கள் உடனே எழுந்து வேறு மேசைக்கு சென்று விட்டனர்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஜார்ஜ் சஞ்சனா எதிரே உட்கார்ந்தான்.

"நீ கவலைப்படாதே சஞ்சனா, ஏய் டீம் எல்லோரும் வாங்க. எப்படி இருந்தாலும் சஞ்சனா நம்ம டீம், நாம அவளை விட்டு கொடுக்கலாமா? வாங்க எல்லோரும் ஒண்ணா சாப்பிடலாம்."

அனைவரும், ஜார்ஜ்ஜின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதியாக வந்து உட்கார்ந்தனர்.

"இங்க பாருங்க டீம், நம்ம டீமுக்குள்ள, எந்த பிரச்சினையும் எப்பவும் வரகூடாது. முன்ன மாதிரி எல்லோரும் சஞ்சனா கிட்ட பேசி கலகலப்பாக இருங்க."

"தாங்க்ஸ் ஜார்ஜ்" என்று சஞ்சனா சொல்ல,.

"பரவாயில்ல சஞ்சனா, நீ சாப்பிடு."

ஜார்ஜ் மனதிற்குள் "இப்போ தாங்க்ஸ் சொல்ல வைச்ச உன் வாயால் கூடிய விரைவிலேயே ஐ லவ் யூ என்று சொல்ல வைக்கிறேன்" என்று சொல்லி கொண்டான்.

சங்கீதா, சிறிது நேரம் கழித்து ஜார்ஜ்ஜை தனிமையில் பார்த்து "என்ன ஜார்ஜ் நீ சொல்லி தானே நாங்க எல்லோரும் சஞ்சனாவிடம் பழகுவதை தவிர்த்தோம். இப்போ நீயே வந்து கூட பழக சொல்ற."


"எல்லாம் காரணமாக தான் சங்கீ, இப்போ தானே இந்த ஜார்ஜ் முதல் அடியை எடுத்து வச்சி இருக்கேன். இனி அடுத்து அடுத்து நான் எடுத்து வைக்கும் அடியில் அந்த சஞ்சனாவிடம் இருந்து ராஜா விலகி போவான். இந்த ஜார்ஜ் நெருங்கி போவான். அப்புறம் எனக்கு நீ ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு. நாளைக்கு என்னோட பர்த்டே. எங்க வீட்டில் celebrate பண்ண போறோம். எப்படியாவது சஞ்சனாவை மட்டும் அங்கே கூட்டிட்டு வந்துடு."

"அவ வருவாளா ஜார்ஜ்,"

"வர வைக்க வேண்டியது உன் பொறுப்பு சங்கீ."

சஞ்சனா அன்று மாலை ராஜாவை சந்தித்த பொழுது,

"என்னடா வலி எல்லாம் போச்சா?"

"ம், நேற்று நீ கொடுத்த மாத்திரை நல்லாவே வேலை செய்தது சஞ்சனா. இரவு செம தூக்கம். தூக்கத்தில் கூட நீ தான் வந்த"

"நான் வந்தேனா!"

"ஆமாம் நீயே தான்"

"நான் வந்து என்ன பண்ணேன்?"

"நீயா, நேற்று நான் ஒன்னு கேட்டேன் இல்ல, அதை நீ கனவில் வந்து தந்து விட்டு போன."

"நீ என்ன கேட்ட, நான் என்ன தந்தேன்?"

"என்ன அதுக்குள்ள மறந்துட்டீயா கண்மணி, சரி நானே சொல்றேன். நீ கனவில் வந்து என் முகத்தை உன் இரு மலர்கரங்களால் பிடித்து, அப்படியே உன் முகத்தை என் முகம் கிட்ட கொண்டு வர. உன் மூக்கை என் மூக்கோடு உரசி, கன்னத்தோடு கன்னம் தேய்த்து, உன் விழியால் என் இமைகளை மூடி, உன் செவ்விதழ்களை என் இதழில் பதித்து ஒரு சூப்பரான இங்கிலீஷ் முத்தத்தை கொடுத்து விட்டு போன கண்ணே."

"ம்...., கனவு எல்லாம் நல்லா தான் இருக்கு, கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் அது நீ சொல்லும் வார்த்தையில் தான் உள்ளது."

"நேற்று நீ கனவில் கொடுத்த முத்தத்திற்கே என் உடம்பு எல்லாம் சில்லுன்னு சிலிர்த்து போச்சு தெரியுமா, நிஜத்தில் மட்டும் நடந்தால் எப்படி இருக்கும்.?"

"நீ ஆசைப்பட்டது கூடிய விரைவில் நடக்கும், போதுமா!.. சரி ராஜா, இன்னிக்கு ஆபீஸில் ஒரு சின்ன பிரச்சினை. நான் உங்க கூட நேற்று வெற்றியை கொண்டாடியதில் எங்க டீமில் உள்ள எல்லோருக்கும் என் மேல கோபம், அப்புறம் ஜார்ஜ் தான் வந்து எல்லோரையும் சமாதனப்படுத்தினான்."

"ம், பரவாயில்லையே. ஜார்ஜ் இந்த மாதிரி நல்ல வேலை கூட செய்வானா?"

"அப்புறம் எங்க டீம் மெம்பர்ஸ் எல்லோரும் நாளை மாலை ஜார்ஜ் பிறந்த நாள் விழாக்கு போறாங்க. என்னையும் கட்டாயப்படுத்தி கூப்பிட்டாங்க. நான் போகட்டுமா?"

"தாராளமா போய்ட்டு வா. கூட வேலை செய்யும் டீம் மெம்பர்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் தான் உறவு மேம்பட்டு வேலை செய்யும் இடத்தில் நல்ல சூழ்நிலை உருவாகும்."

"நீயும் வரீயா ராஜா"

"வேண்டாம் சஞ்சனா, அழைப்பு எனக்கு இல்ல. நான் வரக்கூடாது"

"அதுவும் சரி தான். ஆனா நாளைக்கு என்னால் உன்னை பார்க்க முடியாதே என்ற வருத்தம் தான்."

"பரவாயில்லை ஒரு நாள் தானே விடு."

"ராஜா எனக்கு வடபழனி கோவிலுக்கு போகனும் ஆசையா இருக்கு, கூட்டிட்டு போறியா"

"சரி வா போகலாம்"

வடபழனி கோவில் வாசலில்,

"வாடா உள்ள போகலாம்"

"இல்ல சஞ்சனா நீ போய்ட்டு வா, நான் இங்க வெயிட் பண்றேன்"

இடுப்பில் அவள் கை வைத்து கொண்டு முறைப்பாக "ஏன்?" என்று கேட்க

"உள்ளே இருக்கிறவருக்கும் எனக்கும் நாலு வருஷமா ஒரு பஞ்சாயத்து ஒடிட்டு இருக்கு, அதனால் தான்"

"யாரை சொல்ற?"

"அது தான் கையில் வேலை வைச்சிக்கிட்டு நிக்கிறாரே, அவர் தான்"

"அடப்பாவி, முருகக்கடவுள் கிட்ட பஞ்சாயத்தா!"

"ஒழுங்கா உள்ள வாடா" என்று தரதரவென்று உள்ளே இழுத்து போனாள்.

ராஜா இறைவனிடம், "நாலு வருஷம் முன்னாடி வரை உன்னை தினமும் பார்க்க வருவேன். ஆனால் எப்போ எனக்கு காதலில் தோல்வி கொடுத்தாயோ, அன்றில் இருந்து நான் உன்னை பார்க்க வருவதை நிறுத்தி விட்டேன். இப்போ இவள் தான் மறுபடியும் உன்னை பார்க்க என்னை கூப்பிட்டு வந்துருக்கா, இவளையும் என்கிட்ட இருந்து பிரித்து விடாதே!" என்று வேண்டி கொண்டான்.

சஞ்சனா அவன் நெற்றியில் திருநீறு வைத்து மென்மையாக ஊத, தென்றல் காற்று அவனை வருடியது போல் இருந்தது.

"ம், எனக்கு குங்குமம் வைச்சு விடு"

தன் மோதிர விரலால் தொட்டு அவள் நெற்றியில் வைக்க போகும் போது, அவன் கை விரல் நடுங்கியது.

"என்னடா உன் கை இப்படி நடுங்குது?"

"முதல் தடவை சஞ்சனா, ஒரு பொண்ணோட நெற்றியில் வைக்க போறேன் அதனால் தான்.."

"சீக்கிரம் வை"

எப்படியோ அவள் நெற்றியில் வைத்து விட, இருவரும் ஒரு ஓரமாக உட்கார்ந்தனர்.

"இப்ப சொல்லுடா உன் பஞ்சாயத்தை, என்ன சுஜி உன்னை விட்டு போனதால் இவர் மேல கோபமோ?"

"ம்" என்று ஆமோதித்தான்.

"டேய் மரமண்டை, அவ உன்னை விட்டு போனதால் தானே நீ எனக்கு கிடைச்ச. அவ இருந்திருந்தா நான் உன் வாழ்வில் வர முடியுமா?"

"அப்போ நீ வந்து எனக்கும் அவருக்கும் இருந்த நாலு வருட பஞ்சாயத்தை முடிச்சு வைச்சுட்ட"

"ம், அப்புறம் உன் வாழ்வில் எத்தனை பேரை காதலிச்சு இருக்க"

"அந்த லிஸ்ட் நீண்டுகிட்டே போகுமே"

"அப்படியா, கொஞ்சம் லிஸ்ட்டை அவுத்து விடு பார்ப்போம்"

"முதன்முதலில் ஐந்தாவது படிக்கும் போது"

"என்னது ஐந்தாவது படிக்கும் போதேவா"

"குறுக்கே பேசக்கூடாது, அப்புறம் நான் மறந்து விடுவேன்"

"சரி சொல்லு"

"ஐந்தாவது படிக்கும் போது, நான் காமாட்சி டீச்சர் என்ற ஒருவரை லவ் பண்ணேன். ஆனா பாரு நான் லவ் பண்ண ஒரே மாசத்திலே அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அப்புறம் என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மைதிலி அக்காவை லவ் பண்ணேன். அவங்களுக்கு இன்னும் பாஸ்ட், ஒரே வாரத்தில் கல்யாணம் ஆய்டுச்சு. பாலிடெக்னிக் படிக்கும் போது தீபாராணி என்ற பொண்ணை லவ் பண்ணேன். எந்நேரம்..! அவ படிக்கும் போதே அவங்க முறைமாமனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க. அப்புறம் நான் பெங்களூரில் வேலை பார்க்கும் போது நித்யா என்ற பொண்ணை லவ் பண்ணி, முதல் முறை போய் பேசலாம் என்று பார்த்தா, அவ கல்யாண பத்திரிக்கையை எடுத்து நீட்றா"

சஞ்சனா சிரித்து கொண்டே "டேய் போதும் நிறுத்து, இதெல்லாம் லவ்வா, ஆமா இதில் ஒருத்தர் கிட்டயாவது லவ் சொன்னீயா, இல்லையா?"

"ம்ஹீம் யார்கிட்டயும் சொல்லல. அதுவும் என்னோட லவ் கல்யாண ராசி வேற, நான் யாரை லவ் பண்றேனோ, அவங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடந்து விடும்."

"பார்க்கலாம் உன் கல்யாண ராசி என்கிட்ட பலிக்குதா என்று பார்ப்போம்"

"எனக்கும் அது தான் பயமா இருக்கு சஞ்சனா, எங்க உனக்கும் வேறு ஒருவனோடு கல்யாணம் நடந்து விடுமோ என்று"

"அது எப்படிடா என்னை மீறி நடக்கும். அப்புறம் முக்கியமாக நீ சுஜி காதலை பற்றி சொல்லவே இல்லையே"

"அடுத்தது அது தான். முதன்முதலில் நான் சென்னை வந்த பொழுது நந்தனத்தில் தான் வேலை செய்தேன். அப்போ எல்லாம் bike கிடையாது. பஸ் தான். நான் திருமங்கலத்தில் 41D பஸ் ஏறுவேன். சுஜிதா அம்பத்தூரில் ஏறி அதே பஸ்ஸில் வருவா, சுஜிதா என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துகிட்டே வருவா. வெறும் லுக், லுக் மட்டும் தான். ஆனா அவ என் ஆபிசில் தான் வேலை பார்க்கிறாள் என்று எனக்கு தெரியவே தெரியாது. நான் 3rd floor, அவ வேலை பார்த்தது கீழே ஷோ ரூமில். அன்னிக்கு பஸ்ஸில் ஒரே கூட்டம், நிக்க கூட இடம் இல்ல, தீடீர்னு பரவாயில்ல உங்க பேகை கொடுங்க என்று அவ என்கிட்ட கேட்ட பொழுது எனக்கு உடம்பே வேர்த்து போச்சு"


"ஏன்டா இதில் என்ன இருக்கு?"

"நீ வேற சஞ்சனா, இப்போ இருக்கிற மாறி எல்லாம் அப்போ நான் இல்லை. பொண்ணுங்க கிட்ட பேசணும் என்றாலே, கை, கால் எல்லாமே நடுங்கும்"

"அப்புறம் ஒருநாள் ராஜேஷ் தான், சுஜிதாவை கூட்டிட்டு வந்து என்னோட பழக வைச்சான்"

"ஓ, அண்ணன், மாமா வேலை எல்லாம் பார்த்து இருக்கு, அவனுக்கு இருக்கு ஒருநாள் கச்சேரி. சரி அப்புறம் அவகிட்டேயாவது உன் லவ்வை சொன்னீயா, இல்லையா?"

"நான் எங்கே சொன்னேன்? அவ தான் சொன்னா, அவ தான் முதன்முதலில் என்னை propose பண்ணிய பெண். ராஜேஷ் தான் என்னை கன்வின்ஸ் பண்ணி லவ் பண்ண வைச்சான். கடைசியில் என்னை விட better option வந்த உடனே என்னை விட்டு விலகிவிட்டாள். எனக்கு ரெண்டு நாள் ஒரு மாதிரி தான் இருந்தது. அப்புறம் அந்த பாதிப்பில் இருந்து ராஜேஷ் தான் என்னை மீட்டு கொண்டு வந்தான். ஆனா நீ என்னை விட்டு போனால் நான் அதே போல் மீள முடியுமா என்று தெரியல"

"இங்க பாரு, அந்த மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது. ஒழுங்கா சீக்கிரம் என்கிட்ட லவ் சொல்லி என்னை கல்யாணம் பண்ற வழியை பார். உன்னோட கல்யாண ராசி என்னிடம் வொர்க் அவுட் ஆகுதா என்று பார்க்கலாம். அப்புறம் நீ முதல் முதலா காதல சொல்லும் பெண் நானா தான் இருப்பேன்" என்று சஞ்சனா சிரிக்க,

"சஞ்சனா நீ சிரிக்கும் போது உன் அழகு பன்மடங்கு கூடுது. அதில் என் உள்ளம் கொள்ளை போகுது. நீ பேசும் போது, உன் கண்மட்டும் இல்ல, நீ காதில் அணிந்து இருக்கும் லோலாக்கு கூட என் கூட பேசுது"

"ம், என்ன பேசுது, கொஞ்சம் கேட்டு சொல்லு"

ராஜா அவள் காதருகே தன் காதை வைத்து "அப்படியா, சரி ஓகே" என்றான்.

"என்ன சொல்லுச்சு என் கம்மல்?"

"அட முட்டாளே, என் எஜமானி மேனியில் இருப்பதற்கே எங்களுக்கு எவ்வளவு கர்வமா இருக்கு, அந்த தேவதையே உன்னை தேடி வரும் போது நீ காலம் தாழ்த்துவது சரியா? என்று கேட்டுச்சு"

"ம் சரியா தான் கேட்டு இருக்கு, அதுக்கு இந்த மண்டு என்ன சொல்லுது.?"

"இங்கே பார் கம்மலே, என்னவளின் மேனியில் வெயில் படாத இடத்தில் இருக்கும் உனக்கே இவ்வளவு திமிர் இருக்கும் என்றால், வெயில் படாத இடங்களை ஆள போகும் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று கூறினேன்"

"ச்சீ போடா" என்று சஞ்சனா வெட்கப்பட்டாள்.

அடுத்த நாள் மாலை,

சஞ்சனாவும் அவளது குழு நண்பர்களும் ஜார்ஜ் பிறந்த நாள் விழாவிற்கு சென்றனர்.

ஜார்ஜ் வீட்டின் முகப்பை பார்த்த உடனே அவள் ஆச்சரியம் ஆனாள்.
உள்ளே அவன் வீட்டின் ஆடம்பரத்தை பார்த்து மூக்கில் விரல் வைத்தாள்.

"என்ன இது இவ்வளவு பெரிய வீட்டில் இருந்து கொண்டு ஏன் இந்த சிறிய வேலைக்கு வருகிறான்" என்று நினைத்தாள். 

ஜார்ஜ் சொல்லி வைத்த மாதிரி, அவன் அப்பா, அம்மா எல்லோரும் அவளிடம் நெருங்கி பழகினர்.

"ஏய் சஞ்சனா, கம் வித் மீ, நான் என் வீட்டை சுற்றி காட்டுகிறேன்." 

வீட்டின் ஒவ்வொரு அறையை காட்ட, சஞ்சனா அதிசயித்து கொண்டே வர, கடைசியில் அவன் பெர்சனல் அறையை காட்டினான்.

"இது என்னோட பெர்சனல் அறை சஞ்சனா, வா வந்து உட்காரு. இந்த அறைக்கு என் அப்பா அம்மாவை கூட உள்ளே அனுமதிக்க மாட்டேன். உன்னை தான் முதல் முதலில் கூட்டி வந்து இருக்கேன்."

சஞ்சனா அந்த கட்டில் மீது உட்கார, அதன் மிருதுவான தன்மையே அதன் ஆடம்பரத்தை உணர்த்தியது. சுவரில் மாட்டி வைக்க பட்டு இருந்த ஓவியங்கள், மின் விளக்கு அலங்காரம் எல்லாம் கண்ணை கவர்ந்தன.

"இந்த அறையோட இன்டீரியர் வேலை எல்லாம் மிக அழகா இருக்கு ஜார்ஜ்"


"எல்லாம் நானே பார்த்து பார்த்து செய்ய வைச்சேன் சஞ்சனா, ஆனா ஏதோ ஒரு குறை இருந்துகிட்டே இருந்துச்சு. இப்போ நீ வந்த பிறகு அந்த குறை நீங்கி இந்த அறையின் அழகு முழுமை பெற்று இருக்கு சஞ்சனா"

"ஜார்ஜ், உனக்கு தான் வீட்டில் இவ்வளவு வசதி இருக்கே, அப்புறம் ஏன் போயும் போயும் இந்த telesales job செய்யற,"

"அது எனக்கு ஜஸ்ட் hobby சஞ்சனா, கூடிய சீக்கிரம் ஒரு பிசினஸ் ஒன்னு ஸ்டார்ட் பண்ண போறேன். அதுவரை இந்த வேலை எல்லாம் சும்மா ஒரு அனுபவத்திற்காக தான்."

அப்பொழுது ஜார்ஜின் அம்மா வந்து கேக் வெட்ட கூப்பிட,

"வா சஞ்சனா, கீழே கேக் வெட்ட போகலாம்.."

Cake வெட்டும் போது, முதல் துண்டை தனக்கு தான் ஊட்டுவான் என்று எதிர்பார்த்து அவன் அப்பா, அம்மா வாயை திறக்க, ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக "இது இன்று என்னோட ஸ்பெஷல் கெஸ்ட் சஞ்சனாவிற்கு தான்" என அவளுக்கு ஊட்ட, சஞ்சனாவே விக்கித்து போனாள்.

கடைசியாக சஞ்சனா தன் கிஃப்ட்டை கொடுத்து விட்டு கிளம்ப,

"இரு சஞ்சனா, நானே உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன்"

"இல்லை பரவாயில்ல ஜார்ஜ், நான் cab புக் பண்ணி போய் விடுகிறேன். உனக்கு எதுக்கு சிரமம்?"

"Oh no சஞ்சனா கமான், எப்படியும் நான் சங்கீயை ட்ராப் பண்ண தான் போறேன். அவ வீடும் உன் வீடும் அருகே தானே இருக்கு. உன்னையும் சேர்த்து ட்ராப் பண்ணா போச்சு. நீ சங்கீதாவிடம் பேசிட்டு இரு. நான் கார் கீ எடுத்துட்டு வந்து விடுகிறேன்."

சங்கீதா சஞ்சனாவிடம் "என்ன சஞ்சனா ஜார்ஜ் உன்னை லவ் பண்ற மாறி இருக்கு,"

"எனக்கு அப்படி தெரியலயே சங்கீ"

"இல்லன்னா அவன் அப்பா, அம்மாவை விட்டு முதல் கேக் துண்டை உனக்கு ஊட்டுவானா. இங்க பாரு அந்த வெறும் பய ராஜாவை விட்டுட்டு ஜார்ஜ்ஜை லவ் பண்ணு. உன் எதிர்கால நன்மைக்கு சொல்றேன்."

ஜார்ஜ் சஞ்சனாவை வீட்டில் விடும் பொழுது,

"சஞ்சனா நீ என்னோட பிறந்த நாள் விழாவிற்கு வந்தது ரொம்ப சந்தோஷம். நான் இன்னிக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கேன். good night. sweet dreams" என்று விடை பெற்றான்.

ஜார்ஜ் மொபைலுக்கு அவன் தோழன் பாலாஜி ஃபோன் செய்தான்.

"என்ன ஜார்ஜ் நீ விரித்த வலையில் பட்சி சிக்கிடுச்சா"

"எப்படி சிக்காம போய்டும் பாலாஜி, என் வீடு, என் லைஃப் ஸ்டைல், என்னோட அழகு பார்த்து மயங்காதவர்கள் யாராவது உண்டா?. இன்னும் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியில் அந்த சஞ்சனா என் வலையில் தானா வந்து விழுவா பாரு. இப்பவே அவள் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு இருக்கும். அப்புறம் இருக்கு அந்த பிச்சைகார பையன் ராஜாவுக்கு"

"சரி எப்படி, சஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்க போறீயா,
இல்லை மத்த பொண்ணுங்க மாறி அனுபவிச்சிட்டு கழட்டி விட போறீயா"

"ம், அவ்வளவு சீக்கிரம் அவ படுக்க மாட்டா, கல்யாணம் தான் பண்ணிக்கணும். ஒரு 3 மாசம் நல்லா அனுபவிச்சிட்டு தூக்கி எறிய வேண்டியது தான்" என்று சிரித்தான்.


தொடரும்...

Comments

  1. இது நான் xossipy தளத்தில் நினைவோ ஒரு பறவை என்ற தலைப்பில் எழுதிய கதை.தலைப்பின் பெயரை மாற்றி விட்டு copy and paste செய்யறீங்க. குறைந்தபட்சம் என்னிடம் சொல்லிவிட்டு இங்கே போஸ்ட் செய்து இருக்கலாம்.

    ReplyDelete
  2. இது ஒரு நண்பர் அனுப்பிய கதை உங்கள் கதை என்றாள் உங்களிடம் கேட்காமல் போட்டதற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  3. கதை நல்லா இருக்குது கண்டினியூ பண்ணுங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நேத்து ராத்திரி... யம்மா!

கொழு கொழு அண்ணி

மாலை மங்கும் நேரம் 1