காதல் சுகமானது 11
written by raja
அடுத்த நாள் ராஜா, ராஜேஷ் இருவரும் ஒன்றாக போட்டிக்கு வந்து கொண்டு இருக்கும் பொழுது ராஜா மொபைலுக்கு சக ஊழியர் பொன்வண்ணன் அழைத்தான்.
"ராஜா உன் இரத்த பிரிவு AB +ve தானே.""ஆமா பொன்வண்ணன்."
"ராஜா என் அம்மாவுக்கு ஆபரேஷன்.கொஞ்சம் நீ வந்து blood கொடுக்க முடியுமா?"
"நீ எந்த ஹாஸ்பிடல் என்று மட்டும் சொல்லு. நான் உடனே வரேன்."
"முகப்பேர் ஹாஸ்பிடல் தான் ராஜா,"
"சரி நீ போனை வை நான் உடனே வரேன்."
ராஜேஷ் ராஜாவிடம் கேட்டான். "டேய் ராஜா, நீ blood கொடுத்துட்டு உடனே டான்ஸ் ஆட முடியுமா?"
"ஒரு பத்து நிமிஷம் ஓய்வு எடுத்தா போதும் ராஜேஷ், அப்புறம் பிரச்சினை இல்ல."
ராஜா blood donate செய்து விட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு வரவே தாமதமாகி விட்டது. அவசர அவசரமாக ரெடி ஆகி மேடை ஏற சஞ்சனா அங்கு தயாராக இருந்தாள்.
இருவரும் கண்களாலேயே பேசிக்கொண்டு ஆடினர். ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் ஆடி அனைவரையும் கவர்ந்தனர். இரண்டாவது பாட்டு, மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் பாடல் வர அப்போது பரத நாட்டியம் ஆட வேண்டும். சஞ்சனாவின் அழகான நளினமான ஆட்டத்திற்கு ராஜா ஈடு கொடுத்து ஆட ரொம்பவே சிரமப்பட வேண்டி இருந்தது. மேலும் சில இடங்களில் அவள் மெல்லிய இடுப்பை அவன் பிடிக்க நேர்ந்தது. அவள் மேனியில் அவன் விரல்கள் கண்ட இடத்தில் வைக்க நேர்ந்தது. அதற்கான சந்தர்ப்பத்தை அவளே அமைத்து கொடுத்தாள். காதல் ரசம் ததும்ப அவனை உரசி ஒட்டி கொண்டு ஆடுவதும், தன் நாயகனுடன் ஆடுவதும் சஞ்சனாவிற்கு மிக உற்சாகமாக இருந்தது.
முதல் ரவுண்ட் முடிந்து இருவரும் சற்று உட்கார்ந்தனர்.
அப்பொழுது பாலாஜி ஜார்ஜ்ஜிடம் வந்தான். "என்ன ஜார்ஜ் ரெண்டு பேரும் என்னவோ டூயட் பாட்டுக்கு ஆடுவது போல் ஆடுறாங்க. அதுவும் அவ அவன ஒட்டி உரசி ஆடுறா. இதிலேயே அவங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகி நெருங்கிடுவாங்க போல.இப்படியே போச்சுன்னா நீ போட்ட திட்டம் எல்லாம் பாழாய் போய் விடும் போல் இருக்கே."
ராஜா தன் பையை ஓபன் செய்யும் போது அவன் blood donate பண்ணியதற்கான சர்டிஃபிகேட் கீழே விழுந்தது. அதை ஜார்ஜ் பார்த்து எடுத்து விட்டான்.
"டேய் பாலாஜி, அவன் இப்போ தான் இரத்தம் கொடுத்துட்டு வந்து இருக்கான். நீ உடனே நான் சொல்ற மாதிரி செய்."

ராஜாவிற்கு ஜுஸ் வழங்கப்பட்டது, அது அப்பொழுது ராஜாவுக்கும் அவசியம் தேவைப்பட்டதால் உடனே அருந்தினான். அதில் ஜார்ஜ்ஜின் சூழ்ச்சியும் அடங்கி இருந்தது.
மீண்டும் ஆட்டம் தொடங்க, இருவருமே தங்கள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
நேரம் செல்ல செல்ல ராஜாவின் கண்கள் சொருக தொடங்கியது. கால்கள் தடுமாறி ராஜா கீழே விழ, சஞ்சனா ராஜாவிடம் ஓடி வரும் முன் telesales டீம் அனைவரும் சஞ்சனாவை சூழ்ந்து கொண்டனர். எல்லோரும் வெற்றி களிப்பில் கொண்டாட சஞ்சனா அவர்களிடம் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தாள். ராஜேஷ் மற்றும் சீனி ஓடி வந்து ராஜாவை கைத்தாங்கலாக கீழே அழைத்து சென்றனர்.
"என்ன ராஜா ஆச்சு உனக்கு?" ராஜேஷ் வினவ,
"தெரியல ராஜேஷ், ஜுஸ் குடிச்சதுக்கு அப்புறம் கண்ணை இருட்டிக் கொண்டு வருது. எனக்கு ஒரு உதவி பண்ணு ராஜேஷ்."
"உதவி கிதவினா அடி விழும் பார்த்துக்க, என்ன செய்யனும் என்று மட்டும் சொல்லு."
"என்னால இப்ப கண்டிப்பாக bike ஒட்ட முடியாது. நீ என்னை கொஞ்சம் என் வீட்டிற்கு கூட்டிட்டு போ ராஜேஷ்."
"சரி வா" என்று ராஜேஷ் அவனை அழைத்து சென்றான்.
சஞ்சனா பரிசு வாங்கும் பொழுது அவள் விழிகள் சுற்றும் முற்றும் ராஜாவை தேடி அலைந்தன.
கீழே வந்த பிறகும் அவள் விழிகள் அவனையே தேடி கொண்டு இருப்பதை பார்த்து சங்கீதா கேட்டாள். "என்ன ராஜாவை தேடறீயா,"
"ஆமாம்" என்று சஞ்சனா கூற,
"அவன் தோற்று நீ ஜெயித்து விட்டாய், என்று உன் மேல் உள்ள கோபத்தில் அப்பவே வெளியே போய்ட்டான். சரியான selfish அவன்." என்றாள்.
சஞ்சனா ராஜாவின் மொபைலுக்கு ஃபோன் செய்ய, அவன் ஆழந்த உறக்கத்தில் இருந்ததால் போனை எடுக்கவில்லை.
"என்ன அவன் ஃபோன் எடுக்கலையா, இதற்கு மேல் அவன் உன் போனை எடுக்கவே மாட்டான். நான் தான் சொன்னேன்ல, அவன் உன் மேல செம கோபத்தில் இருக்கான்."
சஞ்சனா கண்களில் லேசாக கண்ணீர் வர, அதை அடக்கி கொண்டு வெளியே ஓடினாள்.

சங்கீதா, ஜார்ஜ்ஜை பார்த்து சக்சஸ்
என்று சைகை காட்ட, ஜார்ஜ்ஜும் தன் பங்குக்கு thumps up காட்டினான்.
****************
என்று சைகை காட்ட, ஜார்ஜ்ஜும் தன் பங்குக்கு thumps up காட்டினான்.
****************
காலையில் ராஜா சஞ்சனா மொபைலுக்கு ஃபோன் செய்ய, சங்கீதா ஃபோன் எடுத்தாள். காரணம் சஞ்சனா தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக ஆபீஸில் ரங்கோலி போடுவதில் மும்முரமாக இருந்தாள். அதனால் சஞ்சனாவின் நம்பர் சங்கீதாவிடம் இருந்தது.
'என்ன இது hubby என்று save பண்ணி இருக்கு', என்று சங்கீதா போனை எடுக்க,..
"ஹலோ சஞ்சனா, நான் ராஜா பேசறேன்." என்றான்.
"யாரு ராஜாவா, நான் சங்கீதா பேசறேன்.."
"கொஞ்சம் சஞ்சனா கிட்ட ஃபோன் கொடு சங்கீதா,"
"சாரி ராஜா, சஞ்சனா உன் மேல செம கோபத்தில் இருக்கா, அவ உன்கிட்ட பேசவே கூடாதுனு என்கிட்ட போனை கொடுத்து, இதுக்கு மேல இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணவோ இல்லை நேரில் சந்திக்கவோ வேண்டாம் என்று சொல்ல சொன்னா."
"ஏன் நான் என்ன பண்ணனேன் சங்கீதா?"
"நீ என்ன பண்ணல ராஜா, அவ பரிசு வாங்கும் போது எவ்வளவு ஆசையா உன்னை தேடினா தெரியுமா? நீ அப்படியே விட்டுட்டு போய்ட்ட. அவ ஜெயிச்சிட்டான்னு அவ மேல உனக்கு காண்டு. அது தான் உன் மேல செம கோபமா இருக்கா" என்று பேசிக்கொண்டே போனை துண்டித்து விட்டாள்.

ராஜா மீண்டும் ஃபோன் செய்ய, அழைப்பு எடுக்கப்படமாலே துண்டிக்கப்பட்டது.
"என்ன இவ, இந்த மாதிரி எல்லாம் இவ பண்ண மாட்டாளே" என்று ராஜா குழம்பினான்.
"என்னடா ஆச்சு" ராஜேஷ் ராஜாவிடம் கேட்க,
"தெரியல ராஜேஷ், சஞ்சனா என் மேல கோபமா இருக்கா என்று சங்கீதா சொல்றா. இதுக்கு மேல ஃபோன் பண்ணவோ, சந்திக்கவோ வேண்டாம் என்று சஞ்சனா சொன்னதா சொல்றா." என்றான்.
"ராஜா, இப்போ உன்கிட்ட சஞ்சனா பேசல, சங்கீதா தான் பேசி இருக்கா.எதுவாக இருந்தாலும் நேரா போய் பார்த்துக்கலாம். இன்னிக்கு தான் உன் காதலை தெரியப்படுத்த வேண்டிய நாள். வா உடனே கிளம்பு."
"அது தான் சரி ராஜேஷ். என் பைக் நேற்றில் இருந்து ஆபீஸில் தான் இருக்கு. நீ கொஞ்சம் என்னை ஆபீஸில் விட்டு விடு."
"விட்டு விடறதா, நான் நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேருவதை என் கண் கூடாக பார்த்திட்டு தான் போவேன். அதுக்கு தான் இவ்வளவு நாள் காத்திட்டு இருக்கேன்."
"சரி ராஜேஷ், போகும் போது கோவிலுக்கு போய்ட்டு போவோம்."
"சரி வா"
ராஜா கோவிலில்,
'என் வாழ்வில் இதற்கு மேல் காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம் என்று இருந்தேன். சஞ்சனா என் வாழ்வில் வந்து பாலைவனமாக இருந்த மனதை சோலைவனமாக மாற்றினாள். என்னை நம்பி வந்தவளிடம் முதல் முறையாக என் காதலை சொல்ல போகிறேன். அவளை என் வாழ்வில் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி முருகா' என்று வேண்டி கொண்டான்.
ராஜாவும் ராஜேஷூம் ஆபீஸில் நுழையும் பொழுது, சஞ்சனா இன்னமும் ரங்கோலி வரைந்து கொண்டு இருந்தாள்.
ராஜா அவளை பார்த்து கொண்டே கையில் ரோஜா மற்றும் greetings கார்டோடு பக்கவாட்டில் வரும் பொழுது ஜார்ஜ் தன் இரு சகாக்கள் புடை சூழ சஞ்சனாவின் நேர் எதிரே வந்தான். ஜார்ஜ் கையிலும் ரோஜா மற்றும் greetings card.
அவன் சஞ்சனாவின் முன் ஒரு கால் மடித்து சஞ்சனாவிடம் லவ் புரோபோசல் செய்ய, ராஜாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
"வாவ் லவ்லி புரோப்பொசல்.வாங்கிக்கோ சஞ்சனா" என்று சங்கீதா கத்த,
சஞ்சனா புன்னகையோடு அவன் கொடுத்த ரோஜாவை வாங்க, ராஜாவின் காலுக்கு கீழே பூமியே பிளந்தது போல் இருந்தது.
கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வர,உடனே அங்கு இருந்து வேகமாக வெளியேறினான்.
ராஜேஷ் உடனே ஓடி போய் ராஜாவை நிறுத்தி, "இருடா.உன்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசி பழகி லவ் பண்ணிட்டு அவன் கொடுக்கிற ரோஜா பூவை வாங்குறா. அவளை நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டுட்டு வரலாம்." என்றான் கோபமாக.
"வேண்டாம் ராஜேஷ், ஏமாற்றம் ஒன்னும் எனக்கு புதுசு இல்லயே. நான் தான் முதல்லயே சொன்னேனே. option என்று ஒன்று வருகிற வரை தான் நான் better ஆக தெரிவேன். option என்று வந்து விட்டால் நான் குப்பை மாறி தூக்கி எறியப்படுவேன். என்னோட வாழக்கை எப்பவுமே ஒரு மெழுகுவர்த்தி மாறி தான் ராஜேஷ். என் தங்கை வாழ்வின் இருட்டுக்கு மட்டுமே ஒளி வீச படைக்கபட்டவன் நான். கடைசி வரை நான் தனியா தான் உருகனும் போல. இந்த காதல் கல்யாணம் எல்லாம் என் வாழ்வில் வந்தால் இப்படி தான் நடக்கும். சஞ்சனா சந்தோசமாக இருக்க வேண்டிய தருணம் இது. நாம எதுவும் தொந்தரவு பண்ண வேணாம். வா போய் விடலாம்.
"டேய் நீ சும்மா விட்டாலும், நான் சும்மா விட மாட்டேன்டா. என் நண்பனுக்கு ஒன்று என்றால் என்னால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. போய் ரெண்டில் ஒன்று பார்த்திட்டு வரேன் இரு."
"டேய் ராஜேஷ், நம்ம நட்புக்கு நீ மரியாதை கொடுக்க விரும்பினால் நாம இங்கே இருக்க வேண்டாம். வா கிளம்பி போலாம். எனக்கு நீங்க போதும்டா. நம்மளோட நட்பை எவன்டா பிரிக்க முடியும்."
"ராஜா எனக்கு மனசு கேக்கலடா."
"ராஜேஷ் எனக்கு ஒரு உதவி பண்ணுடா,"
"சொல்லுடா நான் என்ன செய்யனும்."
"எனக்கு இப்போ ட்ரிங்க்ஸ் சாப்பிடணும் போல இருக்கு.கொஞ்சம் வாங்கி கொடுக்கறீயா"
"டேய் நீயாடா ட்ரிங்க்ஸ் சாப்பிடணும்னு சொல்ற.சுஜிதா உன்னை விட்டு பிரிந்த பொழுது கூட அவளை மறக்க நான் வற்புறுத்தி சாப்பிடு என்று கெஞ்சியபொழுது வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துட்ட. இப்ப மட்டும் கேக்கற."
"தெரியல ராஜேஷ், ஆனா இப்போ மனசு ரொம்ப வலிக்குது. பிளீஸ் ராஜேஷ் எனக்கு வாங்கி கொடு."
"சரிடா வா, முதலில் உன் ரூமுக்கு போகலாம்."
தொடரும்...
Comments
Post a Comment