காதல் சுகமானது 12
written by raja
"ராஜேஷ் எனக்கு ஒரு உதவி பண்ணுடா,""சொல்லுடா என்ன செய்யனும்."
"எனக்கு இப்போ ட்ரிங்க்ஸ் சாப்பிடணும் போல இருக்கு. கொஞ்சம் வாங்கி கொடுக்கறீயா"
"டேய் நீயாடா ட்ரிங்க்ஸ் சாப்பிடணும்னு சொல்ற.சுஜிதா உன்னை விட்டு பிரிந்த பொழுது கூட அவளை மறக்க நான் வற்புறுத்தி சாப்பிடு என்று கெஞ்சியபொழுது வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துட்ட. இப்ப மட்டும் கேக்கற."
"தெரியல ராஜேஷ், ஆனா இப்போ மனசு ரொம்ப வலிக்குது. பிளீஸ் ராஜேஷ் எனக்கு வாங்கி கொடு."
"சரிடா வா, முதலில் உன் ரூமுக்கு போகலாம்."
ராஜேஷ் உடனே வாசுவுக்கு ஃபோன் செய்தான்.
"வாசு உன் மொபைலுக்கு 2000 ரூபா அனுப்பி இருக்கேன். உடனே நீ சரக்கு வாங்கிட்டு ராஜா ரூமுக்கு வா."
"என்னடா விசேஷம்?"
"போனில் சொல்ல முடியாது. நேரில் வா சொல்றேன்."
சரக்கு ஓசியில் கிடைக்கிறது என்றதுமே வாசு குஷி ஆகி விட்டான். சரக்கு மற்றும் சைடிஷ் வாங்கி கொண்டு ராஜா ரூம் நோக்கி பறந்தான்.
ராஜா போகும் போது தான் வேண்டி கொண்ட கோவில் கோபுரத்தை பார்த்து, "காதலிக்க எனக்கு ஒரு யோகம் இல்லையே, ஆண்டவனே உனக்கும் அனுதாபம் இல்லையே" என்று கண்ணீரோடு கடந்து சென்றான்.
ரூமில் மூவரும் உட்கார்ந்து சரக்கு அடித்து கொண்டு போதையில் இருக்கும் பொழுது ராஜா மொபைல் ஒலித்தது.
ராஜா அதை பார்த்து "டேய் சஞ்சனா எனக்கு ஃபோன் பண்றாடா" என்றான்.
வாசு ராஜா மொபைலை அவன் கையில் இருந்து பிடுங்க அது தவறுதலாக on ஆகி விட்டது. அது தெரியாமல் வாசு போதையில் "என்ன சொல்ல போறா அவ, ராஜா என்னை மன்னிச்சிடு. என்னை விட அழகான பொண்ணு உன் வாழ்வில் கிடைப்பா, என்னை மறந்து விடு என சொல்ல போறா" என்று சொல்லிவிட்டு மொபைலை தூக்கி எறிந்தான்.
அடுத்து ராஜேஷ் மொபைல் ஒலிக்க, அவன் அதை கட் பண்ணுவதற்கு பதில் ஆன் செய்து விட்டான்.
அப்பொழுது ராஜா போதையில் பேசியது எதிர்முனையில் இருந்த சஞ்சனாவிற்கு தெளிவாக கேட்டது.
"ராஜேஷ், என்னோட வாழ்க்கைய பாரேன். கடிகார முள் போல ஏன் ஓடுது, எதுக்கு ஓடுதுனே தெரியல. சஞ்சனா எதுக்கு என் வாழ்வில் வந்தா, எதுக்கு விலகி போனா, எதுவுமே புரியல. வந்தா சந்தோசம் தந்தா, கொடுத்த சந்தோஷத்தை பறிச்சிட்டு போய்ட்டா"
அதற்கு வாசு, "மச்சான் நீ வாங்கி கொடுக்கிற சரக்குக்காக சொல்லல. நீ இதுக்கெல்லாம் கவலைபடாதே மச்சான். சஞ்சனா என்னடா சஞ்சனா அவளை விட நூறு மடங்கு இல்லை ஆயிரம் மடங்கு அழகு உள்ள பொண்ணை நான் லைனில் வந்து நிப்பாட்டறேன். உனக்கு அதில் எது விருப்பமோ அதில் ஒண்ணை செலக்ட் பண்ணிக்க மச்சான்." என்று உளற அதை போனில் எதிர்முனையில் இருந்த சஞ்சனா கேட்டுவிட்டு போனை கட் செய்தாள்.
*****************
அடுத்த நாள் காலை சஞ்சனா ராஜா வழக்கமாக செல்லும் டீக்கடை அருகே காத்து இருந்தாள். ஆனால் அப்பொழுது ராஜா வரவில்லை ராஜேஷ் மட்டும் வந்தான்.
"அண்ணா, ராஜா எங்க? வரலையா..!!"
"இந்த அண்ணன் கிண்ணன் கூப்பிடற வேலை வைச்சிக்காத சஞ்சனா"
"சரி கூப்பிடல, எனக்கு ராஜா வேணும் எங்க அவன்?"
"எதுக்கு என் நண்பனை தொடர்ந்து காயப்படுத்தி கொண்டே இருக்கவா?அதான் உனக்கு வசதியான புது லவ்வர் கிடைச்சாச்சுல்ல. அப்புறம் என்ன?"
சப்பென்று ராஜேஷ் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.
"அண்ணா, ராஜா எங்க? வரலையா..!!"
"இந்த அண்ணன் கிண்ணன் கூப்பிடற வேலை வைச்சிக்காத சஞ்சனா"
"சரி கூப்பிடல, எனக்கு ராஜா வேணும் எங்க அவன்?"
"எதுக்கு என் நண்பனை தொடர்ந்து காயப்படுத்தி கொண்டே இருக்கவா?அதான் உனக்கு வசதியான புது லவ்வர் கிடைச்சாச்சுல்ல. அப்புறம் என்ன?"
சப்பென்று ராஜேஷ் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.
"ஏய் என்னடி, என் நண்பனை ஏமாத்திட்டு என்னையே அடிக்கிறீயா. பொண்ணு ஆச்சேன்னு பார்க்கிறேன். இல்லைன்னா கன்னம் கின்னம் எல்லாம் பழுத்துடும் பார்த்துக்க."
"பின்ன என்னடா, அரைகுறையாக பார்த்திட்டு உளற வேண்டியது..! நான் ஜார்ஜ் லவ்வை ஏற்று கொண்டதை நீ பார்த்தீயா. அங்கே உண்மையா என்ன நடந்தது தெரியுமா?"
"நாங்க தான் பார்த்தோமோ, நீ அவன் கிட்ட இருந்து ரோஜா பூவை வாங்கினியே."
"ரோஜா பூவை வாங்கினேன். ஆனா அவன் கொடுத்த கீரிட்டிங் கார்ட வாங்கினேனா. பெண் புத்தி தான் பின்புத்தி என்று சொல்லுவாங்க. உங்க ரெண்டு பேர் புத்தியும் அப்படி தான் இருக்கு. நான் நேற்று அவன் நம்பருக்கும், உன் நம்பருக்கும் மாறி மாறி ஃபோன் பண்ணினா ரெண்டு பேரும் என்கிட்ட பேசாம போதையில் உளறிட்டு இருக்கீங்க."
"அப்போ ஜார்ஜ்ஜோட காதலை நீ ஏற்று கொள்ள வில்லையா?"
"இல்லை. என் மனசில் ராஜாவை வச்சிக்கிட்டு அவனுக்கு எப்படி ஓகே சொல்ல முடியும்?"
"அப்போ அங்க என்ன தான் நடந்தது?"
"அதை நான் ராஜாகிட்ட தான் சொல்ல முடியும். என்னை உடனே அவன்கிட்ட கூட்டிட்டு போ."
"எனக்கு அதை விட வேற என்ன வேலை, வா உடனே கூட்டிட்டு போறேன்"
ராஜா ரூம் வந்தவுடன், ராஜேஷ் தீடீர் ப்ரேக் அடித்து நின்றான்.
'அய்யோ மேல நிலைமை வேற சரியில்ல. நேற்று சரக்கு அடித்து வாந்தி எல்லாம் எடுத்து வச்சி இருக்கோம். அதுவும் சஞ்சனா அவன் ஆளு சரக்கு அடிச்சு இருப்பதை பார்த்தா என்னை தான் வெளுத்துடுவா. அப்படியே எஸ் ஆயிட வேண்டியது தான்.'
"என்ன ஆச்சு அப்படியே நின்னுட்ட, வா வந்து எந்த ரூம்னு காட்டு."
"சஞ்சனா எனக்கு ஒரு முக்கியமான ஃபோன் கால் இருக்கு. நீ என்ன பண்ற, நேராக மேல மொட்டை மாடிக்கு போ, ஒரே ஒரு சிங்கிள் ரூம் தான் இருக்கும். அது தான் ராஜாவோட ரூம். நான் ஃபோன் பேசி முடித்து விட்டு வரேன்."
"டேய் அவன் போதையில் இருந்தால் எழுப்பி விடனும் நீ கொஞ்சம் துணைக்கு வா,"
"No no, அதுகெல்லாம் நான் சரிப்பட்டு வர மாட்டேன், இதுக்காகவே மேலே ஒரு பீஸ் உனக்கு உதவி செய்ய(அடி வாங்க) காத்திட்டு இருக்கு சஞ்சனா. நீ மேல போ."
சஞ்சனா மாடி படி ஏற,
"வாசு இன்னிக்கு உனக்கு சங்கு தான்டி ஊஊஊஊஊஊ தான். தாரை தப்பட்டை மேளம் எல்லாத்துக்கும் சொல்லிட வேண்டியது தான்."என்று ராஜேஷ் சிரித்தான்.
மொட்டை மாடியில் சிமெண்ட் ஷீட் போட்ட ஒரு அறை. அறையின் உள்ளே ஒரே ஒரு அலமாரி, அதில் துணிகள் அடுக்கி வைக்கபட்டு இருந்தது. ஒரு சீலிங் பேன். பெயருக்கு ஒரு மேசை, ஒரு நாற்காலி. அந்த மேசையும் இஸ்திரி போடுவதற்கு மட்டுமே ராஜா உபயோகப்படுத்துவான். படுக்க பாய். ஓரமாக ஒரு சின்ன dust bin. ஒரு 25 லிட்டர் water can. அவசரத்திற்கு சமைக்க ஒரு ஸ்லாப் இல் induction stove மற்றும் சில பாத்திரங்கள், இவை மட்டுமே அந்த அறையில் இருந்தன. பாத்ரூம் அறையின் வெளியே சுவரை ஒட்டி இருந்தது. சொல்ல போனால் பூவே உனக்காக படத்தில் வரும் அறையை போல தான். பரந்து விரிந்த மொட்டை மாடி எல்லாம் அவன் ராஜாங்கம் தான்.
"டேய் ராஜா, உன் டூத் பிரஷ்ஷை நான் யூஸ் பண்ணிக்கவா என்று கேட்டு கொண்டே பாத்ரூமில் இருந்து வாசு ஜட்டியோடு வெளியே வரவும், சஞ்சனா மொட்டை மாடி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது"
வாசு அவளை பார்த்தவுடன், திடுக்கிட்டு வந்த வழியே திரும்பி சென்று தாளிட்டு கொண்டான். சஞ்சனாவும் திரும்பி கொண்டு கண்ணை மூடி கொண்டாள்.
"டேய் அசிங்கம் பிடிச்சவனே, இப்படி தான் ஜட்டி போட்டுட்டு வெளிய திரிவீயா. பேண்ட் போட்டுட்டு வெளிய போடா."
"சிஸ்டர், இது பேச்சுலர் ரூம், கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருக்கும். நீங்க தான் வரும் பொழுது முன்னாடியே சொல்லிட்டு வரணும்."
குடித்து விட்டு பண்ணிய அலப்பறையில் அறை முழுக்க அலங்கோலமாகி இருந்தது. ராஜா முதல் முறை குடித்ததால் வாந்தி வேறு எடுத்து வைத்து இருந்தான். பாயில் கவுந்து அடித்து படுத்து இருந்த ராஜாவின் தலையை தூக்கி மடியில் வைத்து கொண்டு "டேய் எந்திரிடா" என்று சஞ்சனா அவனை எழுப்ப லேசாக கண் திறந்தான்.
'என்ன இது நம்ம தலையணை இப்படி மெத்து மெத்தென்று இருக்காதே', லேசாக ராஜா கண் விழிக்கும் போது சஞ்சனாவின் முலை குன்றுகளின் இடை வழியே அவளின் நிலவு முகம் தெரிய "ஏய் சஞ்சனா, கண்ணை மூடினாலும் வர,திறந்தாலும் வர. உன்னை மறக்க முடியலடி, உன் கவிதை பாடின கண்களும், காதல் பேசின கைகளும் பொய்யா சஞ்சனா? கடைசியில் நீயும் என்னை விட்டு போய்ட்டியே. கண்ணை திறந்தா கூட கனவில் வந்த உன் முகம் தான்டி முன்னே வருது...." என்று அரைத் தூக்கத்தில் பினாத்தினான்.
"டேய் இது கனவு இல்லடா, நிஜம் தான். டேய் வாசு உள்ள என்னடா பண்ற, வெளிய வாடா பன்னி"
வாசு ஆடை அணிந்து கொண்டு வெளியே வர, சஞ்சனா அவனை பார்த்து "இவனுக்கு என்னடா ஊத்தி கொடுத்தீங்க. இன்னும் போதை தெளியாமல் இருக்கான்." என்றான் கோவம் கொண்ட முகத்துடன்.
"அது வந்து சிஸ்டர், காலையில் கூட உங்க நினைப்பாகவே புலம்பிட்டு இருந்தான். தொந்தரவு தாங்க முடியல. அதான் மீதம் இருந்த சரக்கை நான் தான் அவன் வாயில் ஊற்றி விட்டேன்."
"அடப்பாவி, உன்னை ..…..! சரி உன்னை அப்புறமா கவனிச்சுக்குறேன். முதலில் இவனை வந்து ஒரு கை பிடித்து வெளியே வந்து உட்கார வைடா."
வாசுவும், சஞ்சனாவும் ராஜாவை மொட்டை மாடியில் உட்கார வைத்தனர். சஞ்சனா பக்கெட் பக்கெட்டாக தண்ணியை எடுத்து வந்து ராஜா மேலே ஊற்றினாள். ராஜாவின் தலையை பிடித்து வாளியில் உள்ள தண்ணீரில் முக்கினாள்.
"அய்யோ அய்யோ யாராவது ஓடிவந்து என் நண்பனை காப்பாத்துங்க, அவன் மூச்சு முட்டி செத்துட போறான்." வாசு அலற
சஞ்சனா வாசுவுக்கு பளாரென்று ஒரு அறை கொடுத்தாள்.
"ஏண்டா நல்லா இருந்தவனை குடிக்க வைச்சு கெடுத்துட்டு இப்போ வந்து கத்திட்டு இருக்க, இனிமே எங்க ரெண்டு பேருக்கு நடுவில் யாராவது வந்தீங்க, அங்கேயே கொன்னுடுவேன் பார்த்துக்க. போய் கீழ நின்னு யாரும் மேல வராம பாரு போ. நானா ஃபோன் பண்ணும் போது தான் ரெண்டு பேரும் மேலே வரணும். புரிஞ்சுதா"
வாசு கன்னத்தில் கை வைத்து கொண்டு மௌனமாக தலையாட்டினான்.
"சிஸ்டர் ஒரே ஒரு சந்தேகம், அப்படி ரெண்டு பேரும் மேல தனியா என்ன பண்ண போறீங்க"
"இங்கே கொஞ்சம் வாயேன்" சஞ்சனா கூற வாசு அருகே வந்தான்.
வாசுவின் தலையில் கையில் இருந்த கூஜாவினால் ஓங்கி அடித்து "இப்போ தானே சொன்னேன். எங்க ரெண்டு பேருக்குள்ள என்ன வேணும்னா நடக்கும். குறுக்க வந்த அவ்வளவு தான்" என்றாள்.
வாசு தலையை தேய்த்து கொண்டே சிறிது தூரம் சென்று "சிஸ்டர் ,நீங்க குளிப்பாட்ட அவன் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல, விட்டா குழந்தையே கொடுத்துடுவான் பார்த்து உஷாரா இருங்க." என்று சொல்ல, சஞ்சனா கூஜாவை தூக்கி எறிய அதில் இருந்து தப்பி கீழே ஓடினான்.
வாசு தலையிலும், கன்னத்திலும் கை வைத்துக் கொண்டு வருவதை பார்த்து ராஜேஷ் "என்ன வாசு மேல பூஜை எல்லாம் நடந்துச்சு போல" என்றான் நக்கலாக.
"இப்ப தான் அவனுக்கு அபிசேகம் நடந்துட்டு இருக்கு. எனக்கு தான் மணி அடிச்சிட்டா மச்சான்."
"தெரியும்டா வாசு, அதுக்கு தான் நான் உஷாரா இங்கேயே நின்னுட்டேன்."
"அவ அடிச்சது கூட பரவாயில்ல மச்சான். ஆனா என்னை வாட்ச்மேன் ஆக்கி விட்டா. அவங்க ரெண்டு பேர் நடுவில் யாரும் வரக்கூடதாம். அதுக்கு யாரும் மேல வராம நான் காவல் இருக்கனுமாம். அப்படி என்ன மச்சான் நடக்கும் மேல?"
"வாயேன் வாசு, மேல போய் அதை அவ கிட்டேயே கேட்டு விடலாம்?"
"அய்யோ நான் வர மாட்டேன்பா, இப்ப கூட கடைசியில் அந்த கூஜாவை தூக்கி எறிஞ்சா பாரு, சரியா என் தலையை நோக்கி வந்தது. மயிரிழையில் உயிர் தப்பி வந்து இருக்கேன்."
ராஜாவின் போதை சற்று தெளிந்தது.
"சஞ்சனா நீயா..!! நீ எப்படி இங்கே?" போதை ஓரளவு தெளிந்து ராஜா கேட்க
"போய் உடை மாற்றி கொண்டு வா, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்."
சஞ்சனா சூடு தண்ணீரில் லெமன் டீ போட்டு அவனை குடிக்க வைத்தாள். அவனுக்கிருந்த கொஞ்ச நஞ்ச போதையும் கீழே இறங்கியது.
"இப்போ என்ன நடந்துச்சுனு சார் தண்ணி எல்லாம் அடிக்க ஆரம்பிச்சுட்டீங்க"
"எல்லாம் உன்னால தான் சஞ்சனா, ஜார்ஜ் உன்கிட்ட வந்து காதலை சொன்னப்ப நான் நொறுங்கிட்டேன். அந்த வலியை குறைக்க தான் குடிச்சேன்" என்று தலையை குனிந்து கொண்டே சொல்ல
"டேய் நிமிர்ந்து என் கண்ணை பார்த்து பேசுடா. நான் ஜார்ஜ் காதலை ஏற்றுக் கொண்டேனா? அதை நீ பார்த்தியா?"
"நீ சிரித்து கொண்டே அவன் கொடுத்த பூவ வாங்கினியே சஞ்சனா, அதை நான் பார்த்தேனே..! அதுவும் இந்த மாதிரி நடப்பது ஒன்னும் எனக்கு புதுசு இல்லையே. இது கூடவா எனக்கு புரியாது"
"முட்டாளாடா நீ, நான் உன்கிட்ட பழகுவதிற்கும், மத்தவங்ககிட்ட பழகுவதிற்கும் உனக்கு வித்தியாசம் தெரியலையா. நான் உன் கூட டான்ஸ் ஆடும் போது கூட போட்டியா இல்லாம ஜோடியா தான்டா ஆடினேன். உன்னை தவிர வேறு யார் இருந்தாலும் நான் ஆடி இருக்கவே மாட்டேன் புரிஞ்சிக்க. ஒரு பொண்ணு அத்தனை பேர் முன்னாடி உன் கூட அவ்வளவு நெருக்கமா ஆடும் போதே தெரிய வேணாமா, அவ உன்னை எவ்வளவு விரும்புறானு..!!"
"நான் நேற்று உனக்கு ஃபோன் பண்ணேன். அப்போ சங்கீதா என் மேல நீ கோபமாக இருப்பதாகவும், என்னை நீ பார்க்க விரும்பல என்றும் சொன்னா. இருந்தும் நான் உன் மேல உள்ள நம்பிக்கையில் தான் நேரில் வந்தேன். அப்போ தான் ஜார்ஜ் உன்கிட்ட காதலை சொல்லும் போது அவன் கையில் இருந்து நீ பூ வாங்கின."
"ஓ, சங்கீதா இந்த மாதிரி வேற சொல்லி இருக்காளா...! சரி நீ கேட்க வேண்டியது தானே? சஞ்சனா ஏன் கோபமாக இருக்கானு?"
"நான் கேட்டேன் சஞ்சனா அதுக்கு அவ, நீ பரிசு வாங்கும் போது நான் இல்லையாம். அதனால் நீ கோபப்பட்டனு சொன்னா. எனக்கு அப்படியே வந்து உன் கன்னத்தில் ஒரு அறை விடனும் போல இருந்தது."
"விட வேண்டியது தானே ! என்னை அடிக்கிற உரிமை மட்டும் இல்ல அணைக்கிற உரிமையும் உனக்கு மட்டும் தான். இங்க பாரு ராஜா, நீ எதனால் தடுமாறி விழுந்த. முந்தா நாள் இரவு ஏன் என் போனை எடுக்கலனு எல்லா விசயமும் எனக்கு தெரியும். அந்த ஜார்ஜ் உனக்கு கொடுத்த ஜூஸில் தூக்க மாத்திரை கலந்து இருந்தான்."
"ஓ, அதனால் தான் எனக்கு தூக்கம் தூக்கமாக வந்துச்சு. நான் கூட இரத்தம் கொடுத்ததில் வந்த சோர்வு என்று நினைச்சுட்டென் சஞ்சனா. சரி ஜார்ஜ் கிட்ட பூ வாங்கிய அப்புறம் என்ன தான் நடந்தது.?"
"ராஜா, இந்த உலகில் நான் விட்டு கொடுக்க முடியாத ரெண்டு பேர் யார் என்றால், ஒன்னு என் அப்பா, இன்னொன்னு நீ. உனக்கென பிறந்தவடா நான். உன் மேல நான் கோபப்படுவேன், அடிப்பேன், ஏன் சமயத்தில் கடிக்க கூட செய்வேன். ஆனா எப்பவும் உன்னை விட்டு போக மாட்டேன். உனக்கு ஒன்னு என்றால் என்னால் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது. அன்னிக்கு கிரிக்கெட் போட்டியில் ஜார்ஜ் வேண்டும் என்றே உன் மூக்கை உடைத்து காயப்படுத்தியதை பார்த்து நான் சும்மா இருப்பேன் என்று நினைச்சீயா, அன்றில் இருந்து அவனை பழி வாங்க சமயம் பார்த்துட்டே இருந்தேன்...
தொடரும்...
Comments
Post a Comment