காதல் சுகமானது 14
written by raja
"யாரு ராஜா அந்த வில்லி?"
"அது வேறு யாருமில்லை சஞ்சனா, என் சின்ன தங்கை தான். அவ என் கூட இருக்கும் போது யாரையும் என்னிடம் நெருங்க விட மாட்டாள். இந்த மாசம் நான் உன் கூட இருந்ததால் ஊருக்கு போக முடியல. அதனால் அவ என்னை பார்க்க சென்னை வருகிறாள்."
"ம்..."
"சஞ்சனா எனக்கு ஒரு ஐடியா என் தங்கை ஏன் சென்னை வரணும், நாம ரெண்டு பேரும் இப்போ கிளம்பினால் கூட நாளை காலை என் சொந்த ஊருக்கு போக முடியும். நீயும் என் அம்மா, தங்கை கிட்ட அறிமுகம் ஆன மாதிரி இருக்கும். அங்க போய்ட்டு நான் சொல்ற மாதிரி ஒரு சின்ன கேம் மட்டும் play பண்ணு."
ராஜா சஞ்சனா காதில் அந்த விசயத்தை சொல்ல, "ம்" என்று சந்தோஷமாக தலையாட்டினாள் சஞ்சனா.
ராஜாவும், சஞ்சனாவும் சென்னை - பெங்களூர் பைபாஸ் சாலையில் பறந்தனர்.
"டேய் இங்க இருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?"
"சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சென்னைக்கும், பெங்களூருக்கும் சரியா நடுவில் இருப்பது தான் என்னோட ஊர் சஞ்சனா."
சரியாக காலை 4 மணி அளவில் போய் சேர்ந்தனர். சிறு நகரம் தான். இன்னும் மக்கள் நடமாட்டம் தொடங்கவில்லை. சஞ்சனா, ராஜா கொடுத்த விவரத்தின் படி சரியாக அவன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். ராஜாவின் அம்மா வந்து கதவை திறந்தாள்.
"யாரும்மா நீ ?"
"நீங்க தான் ராஜாவோடா அம்மாவா?"
"ஆமாம்."
"அப்போ உங்ககிட்ட தான் ரொம்ப முக்கியமான விசயம் பேசணும்.நான் ராஜா ஆபீஸில் இருந்து வரேன். உள்ளே போய் பேசலாமா..!!"
"சரி வாம்மா", அதற்குள் ராஜாவின் தங்கை எழுந்து வர, சஞ்சனா அவளை பார்த்து "நீ தான் திவ்யாவா?" என்றாள்.
"ஆமா நீங்க யாரு?"
"என் பேரு சஞ்சனா. உங்க அண்ணன் சரியான திருடன். கூட வேலை செய்யும் பொண்ணுக்கிட்ட இருந்து முக்கியமான ஒண்ணை திருடிட்டான். அதுவும் திருடி ஏமாற்றிவிட்டு இங்கே தான் வந்ததாக தகவல். அதான் அவனை கையும் களவுமாக பிடிக்க இங்கே வந்துருக்கோம்."

"எங்க அண்ணன் அந்த மாதிரி எல்லாம் செய்ய கூடிய ஆள் இல்ல. அவன் வேணா ஏமாந்து விட்டு வருவான். ஆனா மத்தவங்களை ஏமாற்ற மாட்டான்."
ராஜாவின் அம்மாவும் அதற்கு ஆமோதிக்க
"ஒருவேளை பாதிக்கபட்ட பொண்ணே வந்து நேரில் சொன்னால் என்ன பண்ணுவீங்க" என்றாள் சஞ்சனா.
"நாங்க அப்பவும் நம்ப மாட்டோம்" இருவரும் ஒரு சேர சொன்னார்கள்.
"சரி உங்க அண்ணன் எங்கே?"
"அவன் சென்னையில் இருக்கான்"
"இல்லை அவன் இங்க தான் இருக்கான். நான் உங்க வீட்டை சோதனை போடணும்"
"எங்க அண்ணா இங்க இல்ல.சொன்னா புரிஞ்சிக்கோங்க"
"நான் நம்ப மாட்டேன்". சஞ்சனா கீழே நோட்டம் விட்டு மாடிப்படி ஏற, ராஜாவின் தங்கையும் அம்மாவும் பின் தொடர்ந்தனர்.
"அம்மா இந்த பொண்ணை ஏம்மா உள்ளே விட்ட, பார்க்க களவாணி பொண்ணு மாறி தெரியுது."
"ச்சே இல்லடி, முகம் லட்சணமா இருக்கு. அப்படிலாம் இருக்காது."
மூன்று பேரும் மொட்டை மாடி வரவும், ராஜா அங்கே பாய் விரித்து படுத்து கொண்டு இருப்பதை பார்த்து இருவரும் அதிர்ச்சியாகினர்,
"பார்த்தீங்களா.. யார் இது, உன் அண்ணனை இங்கே ஒளிச்சு வச்சுகிட்டு ரெண்டு பேரும் என்னையே ஏமாத்துறீங்களா..!"
"டேய் நீ எப்படா வந்த..!" என்று அம்மாவும், "அண்ணா நீ எப்ப வந்த" என்று அவன் தங்கையும் ஓடி வந்து அவனை கட்டி கொண்டாள்.
"இப்பவாது நான் சொல்வதை உண்மை என்று நம்பறீங்களா?"சஞ்சனா கேட்க
"இப்பவும் சொல்றேன் சஞ்சனா, என் அண்ணன் எதையும் திருட மாட்டான். அந்த கடவுளே வந்து சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்" என அவன் தங்கை திவ்யா உறுதியாக சொன்னாள்.
"நான் தான் அப்பவே சொன்னேனே சஞ்சனா, என் குட்டி ரோசும் சரி, என் அம்மாவும் சரி, என்னை பற்றி யார் என்ன தான் தப்பா சொன்னாலும் நம்ப மாட்டாங்க."
சஞ்சனா உடனே ராஜாவின் அம்மா காலில் விழுந்தாள்.
"அத்தை என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க"
"நல்லா இரும்மா, முதலில் எழுந்திரு. ராஜா என்னடா இதெல்லாம்?"
"அம்மா அவ சொன்னது எல்லாம் உண்மை தான். நான் திருடியது உண்மை தான்"
"நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்ட. உண்மையை சொல்லு என்ன நாடகம் நடக்குது இங்க?" அவன் தங்கை கேட்க
"நிஜமா தான்டா குட்டி ரோஸ், நான் அவ மனசை திருடிட்டேன். அவ உன் அண்ணி. அம்மா இதோ உன் மருமகள்"

"டேய்..!!! இதை ஏண்டா முன்னாடியே என்கிட்ட சொல்லல", என்று அவன் தங்கை பக்கத்தில் உள்ள பைப்பை எடுத்து அடிக்க வர,
"டேய் மூக்கு (ராஜா எப்பவுமே அவன் தங்கையை மூக்கு அல்லது குட்டி ரோஸ் என்றே அழைப்பான்) அடிக்காத, நேற்று தான்டா நானே அவகிட்ட என் காதலை சொன்னேன். இதோ இன்னிக்கு நேரா உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டேன் போதுமா?"
"ம் எனக்கு பிடிக்கல, அவளை எல்லாம் என்னால் அண்ணியாக ஏற்று கொள்ள முடியாது"
"டேய் மூக்கு என்னடா இப்படி சொல்ற, அவ ரொம்ப நல்லவடா", ராஜா முகம் வாட, சஞ்சனாவும் அதிர்ச்சி அடைந்தாள்.
"அய்ய, மூஞ்ச பாரு அதுக்குள்ள எப்படி சுருங்கி போச்சு, போய் கட்டிக்க போ", ராஜா முகம் மலர்ந்தது .
"அண்ணி கோவிச்சுக்காதீங்க, நான் சும்மா தான் விளையாடினேன். எனக்கு உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. அம்மா அண்ணியை கூட்டிட்டு வா நாம கீழ போலாம். இவன் மேலயே கிடந்து சாகட்டும்."
"டேய் மூக்கு, எப்பவும் நான் வந்தால் என் கூட தான் இருப்ப, இப்ப என்னடா அவ கூட ஒட்டிகிட்ட"
"இனிமே அப்படி தான் அண்ணா"
சஞ்சனாவிற்கு அம்மா இல்லாததால், ராஜாவின் அம்மாவோடு எளிதாக ஒன்றி விட்டாள்.
திவ்யா சஞ்சனாவை பார்த்து, "ஏன் அண்ணி உங்க அழகுக்கும் அறிவுக்கும் போயும் போயும் இந்த சுமார் மூஞ்சி குமாரை ஏன் செலக்ட் பண்ணி இருக்கீங்க."
"ஏன் திவ்யா, உன் அண்ணனுக்கு என்ன குறைச்சல். அழகிலும் சரி, அறிவிலும் சரி அவன் ஒன்னும் குறைந்தவன் இல்லையே. என்ன வெயிலில் சுற்றி கொஞ்சம் கலர் கம்மி ஆகிவிட்டது அவ்வளவு தானே"
"ம், நீங்க உங்க காதலனை விட்டு கொடுக்க மாட்டீங்க, அப்புறம் என் அண்ணா சரியான மங்குனி ஆச்சே. அவன் எப்படி உங்க கிட்ட வந்து காதலை சொன்னான்"
"மங்குனி மட்டும் இல்ல, இந்த காதல் விசயத்தில் மட்டும் சரியான tubelight. அவனை என்கிட்ட காதல் சொல்ல வைக்க நான் பட்ட பாடு எனக்கு தானே தெரியும்"
"அதானே பார்த்தேன். கடைசி வரை அப்படியே எட்ட நின்னு இதயம் முரளி மாதிரி காதலை கூட சொல்லாம ஓடி போய்டுவான்"
ராஜாவின் அம்மா, சஞ்சனாவிற்கு ஜடை பின்னி அலங்காரம் செய்து பூ வைக்க, அவளுக்கு அழுகை வந்து விட்டது.
"ஏன் சஞ்சனா அழுவுற"
"ஒண்ணுமில்ல அம்மா, நீங்க எனக்கு செய்வதை எல்லாம் பார்க்கும் போது என் அம்மா ஞாபகம் வந்துடுச்சு"
"நீயும் எனக்கு ஒரு பொண்ணு தான் சஞ்சனா, அழக்கூடாது. இதோ இவ காலேஜ் முடித்து விட்டால் நாங்கக்கு சென்னை தான் வரப்போறோம். இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் நாம எல்லோரும் ஒண்ணா இருக்கலாம்."
அன்றைய பொழுதும் இனிமையாகவே கழிந்தது.
ராஜா மற்றும் சஞ்சனா விடைபெற்றனர்.
"என்ன அண்ணா, முதல் முறையா அண்ணி வந்து இருக்காங்க. இன்னும் ஒரு நாள் தங்கி இருக்கலாமே."
"இல்லடா மூக்கு, நாளைக்கு ரெண்டு பேருமே வேலைக்கு போகனும். இனிமே ரெண்டு பேரும் அடிக்கடி வரோம். ஓகே வா"
சஞ்சனாவிற்கு, ராஜாவின் அம்மாவை மிகவும் பிடித்து விட்டது. அவரை விட்டு பிரிய அவளுக்கு மனமே இல்லை.
"சஞ்சனா கவலைப்படாத, உங்க அப்பாகிட்ட மட்டும் தான் இன்னும் சம்மதம் வாங்கணும். வாங்கிட்டோம் என்றால் சீக்கிரம் டும் டும் டும் தான். டேய் என் மருமகளை பார்த்து கூட்டிட்டு போடா, பழைய மாதிரி எல்லாம் வண்டிய வேகமாக ஒட்டாத."
"உன் மருமகள பத்திரமாக கொண்டு போய் சேர்ப்பது என் பொறுப்பு போதுமா அம்மா!"
சஞ்சனா ராஜாவிடம் "டேய் நம்ம கல்யாணத்திற்கு நான் உன் அம்மா, தங்கையிடம் சம்மதம் வாங்கி ஆச்சு. இனி நீ தான் என் அப்பாவிடம் சம்மதம் வாங்கணும்"
"உன் அப்பா ஊரில் இருந்து வந்த உடனே சம்மதம் வாங்கி விட வேண்டியது தான் சஞ்சனா"
இருவர் மனதிலும் சந்தோசம் நிரம்பி வழிந்தது.
அடுத்த நாள்,
"என்ன வாசு, நொண்டி நொண்டி வர, ராஜா கேட்க."
"டேய் எல்லாம் உன் ஆளினால் தான்டா, மனுஷியாடா அவ. பச்சை புள்ளை என்று கூட பார்க்காம இப்படி போட்டு அடிக்கிறா. ஆனா அவகிட்ட அடி வாங்கின ராசி என் பொண்டாட்டி முதல், போறவன், வர்றவன் கிட்ட எல்லாம் ரெண்டு நாளாக அடி வாங்கினேன்டா"
"டேய் அவளை பற்றி குறை சொல்லாத, உனக்கு அவ அடி கொடுத்து இருந்தாலும், என்ன முந்தா நாள் முழுக்க முழுக்க முத்த மழையில் குளிப்பாட்டிட்டாடா"
"அடப்பாவி இப்போ அனுபவிடா அனுபவி. சீக்கிரம் என்னை மாறி கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கையால் பூரிக்கட்டை, துடைப்பகட்டையால் உதை வாங்கும் காலம் வராமலா போகும். கண்டிப்பாக வரும்டா"
"அவ கையால் அடி வாங்க கூட கொடுத்து வைத்து இருக்கணும் போடா..."
"ராஜா இன்னிக்கு சாயங்காலம் சரக்கு அடிக்கலாமா?"
"டேய் அது சஞ்சனா போன வருத்தத்தில் அடிச்சதுடா, இதுக்கு மேல எல்லாம் என்னால் சரக்கு அடிக்க முடியாது."
"டேய் அது தான் ஒரு தடவை சரக்கு அடிச்சிட்டல்ல, இதுக்கு மேல பழகிக்க வேண்டியது தான். சஞ்சனாவுக்கு தெரியாம சரக்கு அடிச்சா தப்பு இல்ல. அப்புறம் எங்களுக்கு யாரு சரக்கு வாங்கி கொடுப்பா."
அந்த நேரம் சஞ்சனா வந்து தன் கையில் இருந்த பையினால் வாசு தலையில் ஒரு போடு போட,
"சிஸ்டர் நீங்க எப்போ வந்தீங்க..!!"
"நீ அவனை சரக்கு அடிக்க கூப்பிட்டப்பவே வந்துட்டேன். நீ தான் கெட்டு போறனு பார்த்தால் அவனையும் சேர்த்து கெடுக்கிற உன்னை...."
"இல்ல சிஸ்டர், எந்த ஒரு பழக்கத்தையும் தீடீரென விட கூடாது. கொஞ்சம் கொஞ்சமா தான் விடனும். அதை தான் நான் அவனுக்கு பக்குவமாக சொல்லி கொடுத்தேன்."
"டேய் அடங்குடா, அவன் என்ன மொடா குடிகாரனா, அன்னிக்கு தான் ஏதோ முதல் முதலாக குடிச்சான். நீ ஓசில குடிக்க அலையிறனு பச்சையா தெரியுது. இன்னொரு தடவ அவனை கூப்பிட்ட அவ்வளவு தான் பார்த்துக்க. இந்தா இந்த மருந்த உனக்குதான் வாங்கிட்டு வந்தேன். கால்ல தேச்சுக்கோ வலி குறையும்"
"ராஜா இந்தா உனக்கு லஞ்ச்" சஞ்சனா நீட்டினாள்.
அப்பொழுது மூன்று பேருக்கும் ஒருசேர குரூப் மெசேஜ் வந்தது.
"என்ன இது இன்னிக்கு சாயங்காலம் 7 மணிக்கு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் மீட்டிங் என்று போட்டு இருக்கு.ஏதோ புது பிளான் அறிமுகம் பண்ண போறத போட்டு இருக்கு."
"அப்போ இன்னிக்கு இரவு செம சாப்பாடு தான்" வாசு குதுகாலித்தான்.
ஆபிசில்,
"என்னடா ஜார்ஜ் உன் நிலைமை இப்படி ஆயிடுச்சு, TL வினோத் கூட உன்கிட்ட பம்முவான். ஆனா புதுசா வந்த சஞ்சனா பொண்ணு இப்படி அசிங்கப்படுத்திவிட்டாள்."
"அதான்டா பாலாஜி எனக்கு ஒன்னும் புரியல. இந்த மாதிரி என் வாழ்க்கையில் நடந்தது எனக்கே புதுசு. அதுவும் ராஜா மட்டும் தான் என்கிட்ட அடிக்கடி மோதி கொண்டு இருந்தான். அதையும் நம்ம மேனேஜர் வச்சி அவனை மட்டம் தட்டி வைத்து இருந்தேன். ஆனா இவ வந்த பிறகு அவன் அடுத்தடுத்து என்னை கிரிக்கெட் மற்றும் வாழ்க்கையில் தோற்கடித்து விட்டான்."
"இப்ப என்ன பண்ண போற ஜார்ஜ்,"
"அதையும் எனக்கு சஞ்சனா தான் கற்று கொடுத்து இருக்கா பாலாஜி. சந்தர்ப்பம் வரும் வரை காத்து இருந்து தான் பழி வாங்க வேண்டும்."
"ஆனா உனக்கு தான் அந்த பழக்கம் இல்லையே ஜார்ஜ், கோபத்தில் அவசரப்பட்டு எதுனா பண்ற, அது அவர்களுக்கு சாதகமாக போய் முடிந்து விடுகிறது."
"நீ சரியா தான் சொல்ற பாலாஜி, எனக்கு அவ கிடைக்காத கோபத்தில் என் உடல் முழுவதும் பற்றி எரிகிறது. இப்போ மட்டும் நான் அவர்கள் ஒன்றாக இருப்பதை பார்த்தால் கோபத்தில் என்ன பண்ணுவேன் என்றே தெரியவில்லை."
மாலை 7 மணி..

Park sheraton ஓட்டலில் அனைத்து விற்பனை பிரதிநிதிகளும் குழுமியிருந்தனர். உயர் பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் அங்கே இருந்ததால் எந்த ஒரு சிறு தவறு நடந்தாலும் உடனே அவர்களுக்கு தெரிந்து நடவடிக்கை எடுப்பார்கள் என எல்லோரும் எல்லாவற்றையும் அடக்கி கொண்டு இருந்தனர். அதுவும் இந்த மாதிரி ஒரு நாள் தான் அனைவரும் ஃபைவ் ஸ்டார் ஓட்டல் உணவையே பார்த்து சாப்பிட முடியும் என்பதால் முகத்தில் ஒருவித இறுக்கத்துடனும், உள்ளே மகிழ்ச்சியுடனும் அமர்ந்து இருந்தனர்.
தலைமை அதிகாரி நாராயணன் புது பிளானை அறிமுகப்படுத்தியது மட்டும் இல்லாமல் ஒரு புது அனுகுண்டையும் சேர்த்து தூக்கி போட்டார். எல்லோருடைய மாத TARGET இல் 10 ஆர்டர் இன்னும் அதிகமாக எடுத்தால் தான் INCENTIVE கிடைக்கும் என்று கூற, யார் முகத்திலும் ஈயாடவில்லை.
ராஜேஷ் வாசுவிடம் "டேய் வாசு, பழைய TARGET முடிப்பதற்கே இங்கு நாக்கு தள்ளி ரெண்டு மாசத்துக்கு ஒருமுறையோ இல்லை மூணு மாசத்துக்கு ஒரு முறையோ தான் incentive வாங்கறோம். இப்போ என்னடா பண்றது?"
"அதெல்லாம் incentive வாங்கறவன் கவலைப்படனும் மச்சான். நமக்கேதுக்கு அந்த கவலை? அதுலாம் அதோ பக்கத்தில் இருக்கானே ராஜா, அவன் கவலை பட வேண்டியது. ராஜேஷ் மட்டன் பிரியாணி வாசனை கமகமவென்று வருது. பசி வேற வயிற்றை கிள்ளுது. side dish வேற என்னென்ன இருக்கு என்றே தெரியல. சீக்கிரம் மீட்டிங் முடிந்தால் நல்லா இருக்கும். போய் ஒரு கட்டு கட்டலாம்."
Buffey முறையில் தான் அனைவரும் சென்று வேண்டியதை எடுத்து சாப்பிட வேண்டும். விதவிதமான உணவுகள் அடுக்கி வைக்க பட்டு இருந்தது. எங்கேயும் போல இங்கேயும் லேடீஸ் ஃபர்ஸ்ட். அதனால் சஞ்சனா முதலில் சென்று தன் காதலனுக்கும் சேர்த்து வாங்கினாள். ராஜா வரிசையில் நின்று கொண்டு இருக்க, சஞ்சனா இரண்டு தட்டுக்களோடு வந்து அவன் முன் நின்றாள்.
"என்ன சஞ்சனா எனக்கு என்ன அவசரம், நானே பொறுமையா வாங்கி சாப்பிடுவேனே"
"பரவாயில்லை வா, உனக்கு non veg எனக்கு veg ஓகே வா,"
ராஜாவுக்கு தன் நண்பர்களை விட்டு பிரிய தர்ம சங்கடமாய் இருந்தது.
"சரி போடா, நாங்களும் 5 நிமிஷத்தில் வாங்கிட்டு வந்துடறோம்" ராஜேஷ் கூற ராஜாவும், சஞ்சனாவும் தனியாக ஒதுங்கினர்.
"ஏன் சஞ்சனா உனக்கு தான் non veg பிடிக்காதே, அபறம் எதுக்கு எனக்குமட்டும் அத வாங்கின"
"எனக்கு பிடிக்காது தான், ஆனா உனக்கு பிடிக்குமே..! இன்னும் சொல்ல போனால் உனக்காக கொஞ்ச கொஞ்சமாக non veg செய்ய கற்று கொள்கிறேன்."
"ஏய் லூசு, உனக்கு பிடிக்காத எதையும் கஷ்டப்படுத்தி கொண்டு செய்ய வேண்டாம். நீ என்ன செய்தாலும் நான் சாப்பிட தயார். அப்படி எனக்கு அசைவம் சாப்பிட ஆசை வந்தால் நான் வெளியே போய் சாப்பிட்டு கொள்கிறேன் சரியா"
"சரி" என்று சஞ்சனா சந்தோஷத்துடன் தலையாட்டினாள்.
சஞ்சனா தன் உணவை எடுத்து "இதோட டேஸ்ட் எப்படி இருக்கு பார்" என அவனுக்கு ஸ்பூனில் ஊட்ட, அதற்கு அவனோ "உதடும் விரலும் இருக்க, ஸ்பூன் எதற்கு" கேட்டான்.
"சரி" என அவளும் சிரித்து கொண்டே தன் உணவை எடுத்து அவள் தளிர் கரங்களால் அவனுக்கு ஊட்டவும், அதை ஜார்ஜ் எதேச்சையாக பார்க்கவும், அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
அப்பொழுது ராஜேஷூம், வாசுவும், "டேய் உங்க ரொமான்ஸை வேறு இடத்தில் வைச்சுக்க கூடாதா?" என்று கிண்டலடித்தபடி வந்தனர்.
சஞ்சனா அதற்கு, "ஏன்? நாங்க மறைவா தான் உட்கார்ந்து இருக்கோம். யார் பார்த்தாலும் எனக்கு கவலை இல்லை." என்றாள்.
ராஜா உடனே "இல்ல சஞ்சனா, அவன் சொல்றதும் சரி தான். நாம ரெண்டு பேரும் வெளியே போகும் போது தனியா உட்கார்ந்து சாப்பிட்டா எந்த பிரச்சினை கிடையாது. ஆனா இங்கே கம்பனி பார்ட்டி என்று வரும் பொழுது தனி தனியாக தான் இருக்க வேண்டும். என்ன தான் நாம் காதலர்களாக இருந்தால் கூட இடம், பொருள் பார்த்து தான் பழக வேண்டும்."
அப்பொழுது வாசு, "டேய் ராஜா என்னடா உன் தட்டில் மட்டும் பீசு இத்தனை இருக்கு என்று அவன் தட்டில் கை வைக்க சஞ்சனா அவன் தலையில் குட்டி விட்டு, "அவன் தட்டில் கை வைத்தால் மகனே இன்னிக்கு நீ வீடு போய் சேர முடியாது" என மிரட்டி விட்டு சென்றாள்.
ராஜா சாப்பிட்டு விட்டு கை கழுவ செல்வதை பார்த்து, ஜார்ஜ்ஜும் பின்னாடியே சென்றான்.
ராஜா கை கழுவும் போது, ஜார்ஜ் ராஜா காதில் விழும்படி தன் நண்பனிடம் வேண்டுமென்றே பேச்சு கொடுத்தான்.
"ஏண்டா பாலாஜி இந்த சேல்ஸ் பசங்க எல்லாம் ஏன்டா இப்படி இருக்காங்க, நாம சப்பி போடுகிற எச்சை ஆர்டரை தான் எடுக்கிறாங்க என்று பார்த்தால் நாம அனுபவித்து தூக்கி எறியும் பொண்ணுங்களை கூட விட மாட்டாறாங்க. அதுவும் என் பிறந்த நாள் அன்னிக்கு அந்த சஞ்சனாவை என் ரூமில் வைச்சு மேட்டர் போட்டேன் பாரு, செம பீசுடா அவ" என்று அவன் கூறும் போதே அவன் கன்னத்தில் பலமான குத்து விழுந்தது.

அதில் நிலை தடுமாறி அவன் கீழே விழ, பாலாஜி ராஜாவை தாக்க தொடங்கினான். பாலாஜி இருப்பதோ ஒல்லி. அடிக்க வந்த பாலாஜியை அலேக்காக தலை மேல் தூக்கி வெளியே வீசி எறிந்தான் ராஜா. அடுத்து ஜார்ஜ் எழுந்து ராஜாவை அடிக்க வர, இருவருக்கும் துவந்த யுத்தம் ஆரம்பமாகியது. என்ன தான் ஜிம்க்கு போய் ஜார்ஜ் உடம்பை பார்த்து பார்த்து வலுவாக்கி வைத்து இருந்தாலும் ராஜாவின் உடலில் இயற்கையாக உருவாகி இருந்த வலிமைக்கு முன் அவனால் ஈடு கொடுக்கவே முடியவில்லை. சரமாரியாக ராஜாவிடம் அடி வாங்கி கொண்டு இருந்தான்.
ராஜாவின் வேகம் அசாதாரணமாக இருந்தது. ஜார்ஜ் அடிக்க கை ஓங்கும் முன், ராஜாவின் கை வேகமாக செயல்பட்டு ஜார்ஜை தாக்கி நிலை குலைய வைத்தது. மின்னல் போல் ராஜா தொடுத்த தாக்குதலில் ஜார்ஜ் முற்றிலும் நிலை குலைந்து கீழே விழுந்தான். இருந்தும் ஆத்திரம் அடங்காமல் ராஜா அவன் மார்பில் மாறி மாறி எட்டி உதைத்தான்.
இவர்கள் இருவரும் சண்டையிடுவதை பார்த்து இவர்களின் நண்பர்கள் ஓடி வந்து பிடித்து கொண்டனர். ராஜா அவர்களையும் மீறி காளை போல் துள்ளி ஜார்ஜ்ஜை கோபத்துடன் எட்டி எட்டி உதைத்தான்.
ஜார்ஜ் முகத்தில் அடி வாங்கி இரத்தத்துடன் தலைமுடி களைந்து பரிதாபமாக இருக்க, பக்கத்து தனி அறையில் சாப்பிட்டு கொண்டு இருந்த higher official அனைவரும் இங்கு நடக்கும் கலாட்டாவை அறிந்து ஓடி வந்தனர்.
நாராயண், அவர்கள் இருவரை பார்த்து "whats happening here, ஒரு MNC கம்பனியில் வேலை பார்த்திட்டு ரெண்டு பேரும் தெரு பொறுக்கிங்க மாறி சண்டை போட்டுட்டு இருக்கீங்க. ராஜா you are in next level.i didn't expect this from you. both will get severely punished. i will take a action, come to my cabin tomorrow in lunch time. both of you get out immediately from this place" என்று கத்தினார்.
சஞ்சனா தகவல் அறிந்து ராஜாவிடம் ஓடி வந்தாள்.
"ஏண்டா இப்படி பண்ண. நீ இப்ப தான் steps அட்டென்ட் பண்ணி இருக்க. நீ அடுத்த லெவலுக்கு போகும் நேரம் இப்படி பண்ணலாமா?" சஞ்சனா கேட்க ராஜா மௌனமாக தலைகுனிந்து இருந்தான்.
"இப்ப வாயை திறக்க போறீயா, இல்லையாடா" என்று அவள் மாறி மாறி அவன் கன்னத்தில் அறைந்தாள்.
ராஜா சஞ்சனாவின் கையை இழுத்து கொண்டு தனியாக சென்றான்.
"இப்போ எங்கடா என்னை கூட்டிட்டு போற?"
ராஜா ஒரு தனிமையான இடத்திற்கு அவளை கூட்டி சென்று முன்னும் பின்னும் யாரும் இல்லை என உறுதி செய்து கொண்டு, "உனக்கு தெரியாது சஞ்சனா. ஜார்ஜ் உன்னை பற்றி என்ன பேசினான் தெரியுமா? அது நாலு பேர் முன்னாடி சொல்ல கூடிய விசயம் இல்லை. அதனால் தான் உன்னை தனியே கூட்டிட்டு வந்தேன்"
"என்ன சொன்னான் அவன்?"
"அவன் அனுபவித்து தூக்கி எறிந்த எச்சில் இலை நீ என்று சொன்னான். என் சுந்தர நிலவை தப்பா பேசும் போது அதை கேட்டு எப்படி என்னால் தாங்கி கொள்ள முடியும்?"
"அதை நீ நம்பறீயா?"
"ச்சீ, நான் எப்படி டி இதை போய் நம்புவேன், என் உயிரின் பெண் வடிவம் நீ, உன் உயிரின் ஆண் வடிவம் நான். உன்னை பற்றி தப்பா பேசிய வாயை உடைச்சி உன் காலில் விழுந்து அவனை மன்னிப்பு கேட்க வைத்தால் தான் என் ஆத்திரம் தீரும் சஞ்சனா"
"சும்மா கோபப்பட்டு அறிவிழக்க வேண்டாம் ராஜா, அவன் சரியா பிளான் போட்டு எல்லா பெரிய ஆளுங்களும் ஒண்ணா இருக்கும் போது உன் கோபத்தை தூண்டி, சண்டை போட வைத்து உன் வேலைக்கு உலை வைச்சு இருக்கான். நீயும் அவன் விரிச்சு வைச்ச வலையில் போய் வகையாக விழுந்துட்ட..."
"அதுக்கு உன்னை பற்றி தப்பா பேசும் போது சும்மா இருக்க சொல்றியா, உன்னை விட இந்த வேலை எனக்கும் ஒன்னும் பெரிசு இல்ல". ராஜா எகிறினான்.
"அப்படி அவசரப்பட்டு எதையும் முடிவு எடுக்க வேண்டாம்டா, நீ என்னை நம்பற, எனக்கு அது போதும், அந்த எச்சை என்னை பற்றி என்ன வேணாலும் பேசிக்கட்டும். எனக்கு கவலை இல்ல, எனக்கு நீ அடுத்த நிலைக்கு போகனும் அது தான் முக்கியம். முதலில் பொறுமையா இருக்க கத்துக்க, இப்படி அவசரப்பட்டு ஒன்னும் ஆக போறதில்ல. அதுக்குன்னு அவனை சும்மாவும் விட கூடாது. சமயம் பார்த்து தான் பழி வாங்க வேண்டும். நாம திருப்பி அடிக்கும் பொழுது அவனுக்கு மட்டும் தான் பாதிப்பு இருக்கணும். நமக்கு எந்த பாதிப்பும் வர கூடாது. அதுக்கு பொறுமையா மறைந்து இருந்து தான் அடிக்கணும்."
"எனக்கு எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக மோதி தான் பழக்கம் சஞ்சனா. மறுபடியும் சொல்றேன் இந்த வேலை எனக்கு முக்கியம் இல்ல, நீதான் எனக்கு முக்கியம்."
"சரி விடு, இந்த பிரச்சினையில் இருந்து உன்னை எப்படி வெளிக்கொண்டு வருவது என்று எனக்கு தெரியும். ஜார்ஜ் கிட்ட இருக்கும் ஒரு ஆடு என்னிடம் ஒரு விசயத்தில் சிக்கி இருக்கு, அதை நான் மிரட்டுற மிரட்டுல நாளைக்கு நடக்க போகும் வேடிக்கையை மட்டும் பாரு. இந்த சஞ்சனா உன் கூட இருக்கிற வரை, அவ்வளவு எளிதாக இந்த வேலையில் இருந்து உன்னை யாரும் எடுக்க விட மாட்டேன்."
ஜார்ஜ் பாலாஜியை சந்திக்கும் பொழுது
"என்னடா ஜார்ஜ் இப்படி பண்ணிட்ட. இப்போ உன்னோட வேலைக்கே ஆபத்து வந்து விட்டதே?" பாலாஜி கேட்டான்.
"டேய் பாலாஜி, நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் எதிரிக்கு ஒரு கண்ணாவது போகனும். எனக்கு வேலை போனாலும் பரவாயில்லை, ஆனா அவன் வார்னிங் லெட்டர் வாங்கி அடுத்த லெவலுக்கு போக கூடாது. நாளைக்கு கண்டிப்பா குறைந்தபட்சம் வார்னிங் லெட்டர், இல்ல வேலையை விட்டு தூக்குவார்கள். அப்புறம் அவனை இன்னொரு இடத்தில் சிக்க வைக்க ஏற்பாடு செய்து இருக்கேன். அந்த ஏற்பாட்டில் இரண்டு பேரும் கண்டிப்பாக பிரிவது உறுதி.." என கொக்கரித்தான்.
தொடரும்...
Comments
Post a Comment