காதல் சுகமானது 16

written by raja

முழு தொடர் படிக்க

"குட் மார்னிங்டா வாசு", ராஜா சொல்ல,

ராஜேஷ் அதற்கு "குட் மார்னிங் இல்ல ராஜா, இன்னிக்கு அவனுக்கு bad மார்னிங்." என்றான்.

"ஏண்டா என்ன ஆச்சு"

"ஐயா, நேற்று வேலையை கட் அடித்து விட்டு நம்ம தலைவர் ரஜினிகாந்த் நடிச்ச ஜெயிலர் படத்துக்கு போய் இருக்கார். அங்க தான் பிரச்சினையே"

"ஏன் என்ன ஆச்சு"

"படத்துக்கு போனோமோ, பார்த்தோமே என்று வந்து இருந்தால் பிரச்சினையே இல்ல. நம்ம ஆளு அங்கேயும் காசு சம்பாதிக்க பார்த்து இருக்கார்."

"ஏன் என்ன பண்ணான்?"

"ஐயா தெரிஞ்ச ஆளு மூலமா ஒரு 20 டிக்கெட் எப்படியோ உஷார் பண்ணிட்டார். டிக்கெட் வாங்கி வெளியில் நின்று ப்ளாக்ல டிக்கெட்டை கூவி கூவி வித்து இருக்கார். உனக்கு தான் தெரியுமே நம்ம மேனேஜர் விஜய் சார், பக்கா ரஜினி வெறியன் என்று. அந்த நேரம் அவருக்கு டிக்கெட் கிடைக்காமல் ப்ளாக்ல டிக்கெட் கிடைக்குமா என்று தேடிட்டு இருந்து இருக்கார். அப்ப நம்ம ஆளு முன்னாடி போய் நின்னது தான் தாமதம். ஐயா மூஞ்சி வெளிறி போச்சு. "ஏண்டா பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லனு லீவு போட்டுட்டு இங்க வந்து ப்ளாக்ல டிக்கெட்டா விக்கிற" என்று கேட்ட உடனே வாசுவோட மூஞ்சியை பார்க்கணுமே."

"அய்யயோ அப்புறம் என்ன ஆச்சு"

"சார், நானாவது உங்க கிட்ட சொல்லிட்டு வந்தேன், நீங்க என்ன எங்கிட்ட சொல்லிட்டா வந்தீங்க, நீங்க இங்கே தான் வரபோறீங்க என்று சொல்லி இருந்தால் நான் அப்படியே ஓடி போய் இருப்பேன் இல்ல என்று உளறி இருக்கான்"

அப்புறம் அவரே மொத்த டிக்கட்டையும் வாங்கிட்டு, "எனக்கு தேவையான டிக்கெட் சரியா இருக்குடா.வரட்டுமா"னு கேட்டு இருக்கார்.

"சார் காசு" என்று இவன் கேட்க

"சரி, இந்த மாசம் உனக்கு சம்பளம் வேணுமா, வேண்டாமா என்று கேட்டு இருக்கார். அப்புறம் அவரே பாவம் பார்த்து இந்தா என்று டிக்கெட்க்கான MRP காசு மட்டும் கொடுத்துட்டு போய்ட்டார்"

"சரி பரவாயில்லை வாசு, முதலுக்கு மோசம் இல்லை என்று விடு."

வாசு உடனே "ராஜா ஊரில் திருவிழா வருது, இதில் வர காசை வைச்சு அங்க போய் நல்லா என்ஜாய் பண்ணலாம் என்று நினைச்சேன்."

"எனக்கு dhamaka achieve பண்ண காரணத்தால் ஒரு 2000 ரூபா கிரெடிட் ஆகி இருக்கு வாசு. நான் வேணா அதை தரேன். போய் என்ஜாய் பண்ணு" ராஜா சொல்ல

வாசு " ரொம்ப தேங்க்ஸ் ராஜா" என்றான்.

"எப்படா வாசு திருவிழா?"

"அடுத்த வாரம் ராஜா"

அப்பொழுது சஞ்சனா ராஜாவிற்கு ஃபோன் பண்ணினாள்,

"ராஜா எங்க இருக்கே?"


"நான் இங்க டீ கடையில் தான் இருக்கேன் சஞ்சனா"

"சரி நம்ம விசயத்தை அப்பாகிட்ட சொல்லிட்டேன். உன்னை பார்க்கணும்னு சொல்றார்"

"ம் சரி சஞ்சனா, நான் ஒரு அப்பாயின்ட்மென்ட்க்கு ரோஹிணி இன்டர்நேஷனல் லாட்ஜ் வரை போறேன். சாயங்காலம் வேலை முடித்து விட்டு வரட்டுமா?"

"அவ்வளவு லேட் ஆகுமா? ராஜா அங்கயே பக்கத்துல ஓட்டல் மாதிரி ஏதாவது இருக்கா?"

"அதே லாட்ஜில் கீழே ஓட்டல் இருக்கு சஞ்சனா."

"அப்ப ஓகே, நான் அப்பாவை அங்கேயே கூட்டிட்டு வரேன். நாம அங்கயே பேசலாம்."

"ம் சரி" என்று போனை வைத்தான்.

"என்ன மச்சான் சஞ்சனாவா?" ராஜேஷ் கேட்க

"ஆமாடா, அவ அப்பாகிட்ட விசயம் சொல்லி ஆச்சாம், நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்றார்.

"சூப்பர்டா, சீக்கிரமே சட்டுபுட்டுனு கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கையால் அடி வாங்கும் சங்கத்தில் சேரும் வழியை பாரு" ராஜேஷ் வாழ்த்தினான்.

"Thank you டா ராஜேஷ்.."

"தாங்க்ஸ் மட்டும் பத்தாது மச்சான், சங்கத்து வளர்ச்சி நிதிக்கு பொருளாளர் வாசுவுக்கு ஒரு 500 ரூபா கொடு.."

"ஏண்டா நைட்டு சரக்கு அடிப்பதற்கு என்கிட்ட ஆட்டைய போட பாக்கறீங்களா.. நடக்காது மகனே.."

"டேய் இப்போ நீ கொடுக்கவில்லை என்றால் உன் லவ் புட்டுக்கும் பார்த்துக்க" என்று ராஜேஷ் விளையாட்டாக கூற

"பரவாயில்லை போடா" என்று ராஜா சிரித்து கொண்டே கிளம்பினான்.

*************************

ராஜா அந்த ஹோட்டல் வரவேற்பாளரிடம் "Excuse me sir, மேனேஜர் என்னை வர சொன்னார்" என்றான்.

"நீங்க"

"என் பேர் ராஜா. coming from ***"

"Oh yes, அவர் உங்களுக்காக தான் காத்திட்டு இருக்கார்.மேல மூணாவது மாடி போங்க, ரூம் நம்பர் 301.."

ராஜா மேலே படியேறும் போது கால் தடுக்கி ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை உணர்த்தியது. ஆனால் அதை அலட்சியப்படுத்தி மேலே சென்றான்.

காலிங்பெல்லை அழுத்த "எஸ் உள்ளே வாங்க" என்று பெண் குரல் கேட்டது.

ஒருவேளை மேனேஜர், பெண்ணாக இருக்குமோ என்று நினைத்து கொண்டு ராஜா உள்ளே செல்ல, உள்ளே இருந்த பெண் அவனை பார்த்து ஒரு மாதிரி சிரித்தாள்.


ராஜாவிற்கு அவள் சிரித்த விதம் ஏதோ தவறாக தோன்றியது. "மேடம் நீங்க தான் மேனேஜரா" என்று கேட்டான்.

அந்த பெண் விறுவிறுவென சேலையை அவிழ்க்க, "மேடம் என்ன பண்றீங்க" என்று ராஜா திரும்பி அவசரமாக வெளியேற முயற்சித்தான். கதவில் கைவைத்த நேரம் வெளியில் இருந்து கதவு வேகமாக திறந்தது. சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு வேகமாக உள்ளே நுழைந்து "இவனை அரெஸ்ட் பண்ணுங்க" என்றார்.

"சார் நான் எதுவும் பண்ணல. நான் இங்க ஆர்டர் எடுக்க வந்தேன்."

"அது இங்க வர்றவங்க எல்லோரும் சொல்ற கதை தான்." என்று அவன் சட்டையை அவிழ்த்து தரதரவென இழுத்து சென்றார்.

இழுத்து செல்லும் போது கீழே சஞ்சனாவும் அவள் அப்பாவும் எதிரே வந்தனர். சஞ்சனா ஓடிவந்து "சார் எதுக்கு இவனை இழுத்துட்டு போறீங்க" என்று பதறினாள்.

"நீ யாரும்மா முதல்ல,"

"நான்.. நான் இவன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு"

"என்னது போயும் போயும் இந்த பொறுக்கியை கல்யாணம் பண்ணிக்க போறீயா, உனக்கு வேற எந்த நல்ல பையனும் கிடைக்கலையா? இந்த இடம் பலான தொழில் நடைபெறும் இடம். இங்கே இவன் ரெகுலர் கஸ்டமர். இன்னிக்கு தான் வசமா மாட்டினான். போ போ" என்று விரட்டினான்.

"என்னடா நடந்துச்சு?" சஞ்சனா கண்கலங்க கேட்க


அவமானத்தில் வார்த்தை வெளிவர மறுத்ததால் கண்களில் கண்ணீரோடு ராஜா திக்கி திணறி பேச அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

சஞ்சனாவின் அப்பா அருகில் வந்து, "நல்லவேளை நீ தப்பிச்சம்மா, வா வீட்டுக்கு போகலாம். தலைக்கு வந்தது தலைபாகையோடு போனது" என்று கோவமாக ராஜாவை பார்த்தார்.

"அப்பா இல்லப்பா அவன் அந்த மாதிரி ஆள் கிடையாது"

"அதுதான் போலீஸ்காரங்களே சொல்றாங்களே, அவன் இங்க ரெகுலர் கஸ்டமர் என்று, நீ வெகுளி பொண்ணு வெளி உலகம் தெரியாம ஏமாந்துட்ட. நீ ஒரு நல்லவனை தான் தேர்ந்தெடுப்பாய் என்று நினைத்து வந்தேன். ஆனா இவன் பச்சை பொறுக்கியா இருப்பான் போலருக்கு."

"அப்பா ஒரு நிமிஷம் போலீஸ் ஸ்டேஷன் வரை போய்ட்டு என்னவென்று பார்த்து விட்டு வந்துடலாம்."

"சஞ்சனா நீ அம்மா இல்லாத பொண்ணு என்று நான் உன்கிட்ட கோபப்பட்டது கிடையாது. முதல் முறை என்னை கோபப்படும்படி செய்யாதே. வா வீட்டுக்கு போகலாம்."

சஞ்சனா அமைதியாக அவள் அப்பாவுடன் சென்றாள்.

***************************

இங்கே மேனேஜர் பிரியா துர்காவிடம் பேசிக்கொண்டிருந்தாள். 

"துர்கா உனக்கு சஞ்சனா வீடு தெரியும் தானே! கொஞ்சம் என் கூட வந்து அவ வீட்டை காண்பிக்க முடியுமா?"

"எனக்கு தெரியும் மேடம், என்ன விசயம்"

"அதுவந்து என்னோட தம்பிக்கு அவளை ரொம்ப பிடிச்சு இருக்கு, அவளை பொண்ணு கேட்கலாம் என்று"

"ஆனா மேடம் அவ ராஜாவை லவ் பண்றா. இதுக்கு அவ ஒத்துக்க மாட்டா"

"என்னது ராஜாவா, அவன் மாச சம்பளக்காரன். அவனால அவளுக்கு என்ன பெரிய வாழ்க்கை கொடுத்து விட முடியும். என் தம்பி தனியா ஸ்டார்ட் அப் கம்பனி வைச்சு கை நிறைய சம்பாதிக்கிறான். அவ சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்? நாங்க பெரியவங்க பார்த்து பேசிக் கொள்கிறோம். நீ வந்து வீட்டை மட்டும் காட்டு."

சஞ்சனாவும் அவள் அப்பாவும் வீட்டுக்கு வர, பிரியா துர்கா மற்றும் தன் உறவினர்கள் சிலருடன் வாசலில் காத்திருந்தாள்.

"யாரு நீங்க", சஞ்சனா அப்பா கேட்க,

"நான் சஞ்சனாவோட மேனேஜர், உள்ள போய் பேசலாமா?"

அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.

பிரியா "எனக்கு ஒரு தம்பி இருக்கான், பேரு அர்ஜுன். தனியா ஸ்டார்ட் அப் கம்பனி வச்சு கை நிறைய சம்பாதிக்கிறான். அவனுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு. அதனால் உங்க பொண்ணை பொண்ணு கேட்டு வந்து இருக்கோம்"

படுக்கை அறைக்குள் இருந்த சஞ்சனா அதை கேட்டு திடுக்கிட்டாள். துர்காவிடம் "என்ன அக்கா இது, நான் போய் உடனே இதை நிப்பாட்டறேன்" என்றாள்.

"இரு இரு, முதலில் நீ ஏன் அழுவுற?"

"இல்லக்கா, நாங்க ராஜாவை பார்க்க போனோம் அப்போ ராஜாவை போலீஸ் விபச்சார வழக்கில் கைது பண்ணி அழைச்சிட்டு போனாங்க."

"அப்போ நல்லதா போச்சு, அர்ஜுன் பார்க்க செம ஸ்மார்ட்டா இருக்கான். கை நிறைய சம்பாதிக்கிறான். கடவுளா பார்த்து ராஜா கெட்டவன் என்று உன் கண்ணில் காண்பித்து இருக்கார்."

"அக்கா ராஜாவை பற்றி தப்பா பேசாதீங்க, அவன் கண்டிப்பாக அந்த இடத்திற்கு போக மாட்டான்."

"அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற,"

"அவன் விபச்சார தொழிலில் ஈடுபட்ட ஒருத்தரை திருத்தி அவங்களுக்கு கடை வைச்சு மறுவாழ்வு கொடுத்து இருப்பதை நானே நேரில் பார்த்து இருக்கேன்"

"அந்த இடத்திற்கு நீயா போனீயா, இல்லை அவனா கூட்டிட்டு போனானா?"

"அவன் தான் கூட்டிட்டு போனான்."

"உன்னை இம்ப்ரஸ் பண்ண அந்த பொம்பளையை நடிக்க வைத்து இருக்கலாம் இல்லையா?"

"இல்ல அக்கா, அவன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு."

அப்பொழுது, பிரியா வீடியோகாலில் அர்ஜுனை அழைத்து சஞ்சனாவின் அப்பாவிடம் கொடுத்தாள்.

"Hi uncle, எப்படி இருக்கீங்க?,"

அர்ஜுனின் ஸ்டைலான உருவத்தை பார்த்தவுடன் சஞ்சனாவின் அப்பாவிற்கு அவனை ரொம்பவே பிடித்து விட்டது.

"Uncle நான் சஞ்சனாகிட்ட பேசலாமா?"

"அவள் உள்ளே ட்ரெஸ் மாற்றி கொண்டு இருக்கிறாள் மாப்பிள்ளை. நானும் உங்க அக்காவும் பேசிட்டு உங்களுக்கு நல்ல முடிவை சொல்றோம்."

பிரியா சஞ்சனா அப்பாவிடம் "இங்க பாருங்க Mr.ஆறுமுகம், எனக்கு எல்லாமே என் தம்பி விருப்பம் தான். நாங்க பெருசா எதுவும் எதிர்பார்க்கல. உங்களால் என்ன முடியுமோ அதை செய்தால் போதும்." என்றாள்.

"ஒரு நிமிஷம் இருங்க, நான் என் பொண்ணு கிட்ட போய் கலந்து பேசிட்டு வந்து விடுகிறேன்" என்று உள்ளே சென்றார்.

"சஞ்சனா எனக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சு இருக்கு, இது அவனோட ஃபோட்டோ பார்த்திட்டு சொல்லு"

சஞ்சனா அதை ஏறேடுத்தும் பார்க்காமல் "அப்பா ராஜா ரொம்ப நல்லவன்பா," என அழுதபடி சொன்னாள்.

"சஞ்சனா திரும்ப திரும்ப அந்த ஊர் மேய்றவன பத்தியே பேசி என்னை கோபத்துக்கு ஆளாக்காதே. அர்ஜுன் கூட தான் உனக்கு கல்யாணம். இது தான் என் முடிவு அதை சொல்ல தான் வந்தேன்"

துர்கா உடனே "அங்கிள் நீங்க போய் பேச வேண்டியதை பேசுங்க, நான் அவ கிட்ட எடுத்து சொல்லி சம்மதிக்க வைக்கிறேன்" என்றாள்.

ஆறுமுகம் வெளியே வந்து பிரியாவிடம் "எனக்கு இந்த சம்பந்தத்தில் முழு சம்மதம்" என்று கூற,

"ஒரு தடவை சஞ்சனாவையும் சொல்ல சொல்லுங்க" என்றாள் பிரியா.

"என் பொண்ணு என் பேச்சை மீற மாட்டா, நாம தட்டை மாற்றி கொள்ளலாம்."

"எதுக்கும் ஒரு தடவை சஞ்சனாகிட்ட கேட்டு சொல்லுங்க", பிரியா மீண்டும் வலியுறுத்தினாள்.

துர்கா சஞ்சனாவிடம், "சஞ்சனா உங்க அப்பாவிற்கு ஏற்கனவே ரெண்டு அட்டாக் வந்து இருக்கு.மேலும் ஒரு அட்டாக் வரவைத்து அவரை இழந்து விடாதே. சீக்கிரம் சம்மதம் சொல்லு" என்றாள்.

சஞ்சனா கலங்கிய கண்களுடன் துர்காவை பார்க்க,

"பொண்ணுக்கு சம்மதம்" என்று உள்ளே இருந்து குரல் வர, பிரியா தட்டை கொடுக்க ஆறுமுகம் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார்.

அங்கே போலீஸ் ஸ்டேஷனில் ராஜா ஜட்டியோடு உட்கார வைக்கப்பட, இங்கே சஞ்சனா - அர்ஜுன் நிச்சயம் நடைபெற்றது.

அன்பரசு ஜார்ஜ்ஜிற்கு ஃபோன் செய்து "டேய் ஜார்ஜ் நீ சொன்ன மாதிரியே செய்ஞ்சிட்டேன்டா, உனக்கு இன்னும் ஒரு போனஸ் நியூஸ், அவனோட காதலி அங்க வந்தாள். அவ முன்னாடியே அரெஸ்ட் பண்ணி கொளுத்தி போட்டுட்டு வந்துருக்கேன். இதுக்கு மேல அவன் பக்கம் கூட திரும்பி பார்க்க மாட்டா. இன்னிக்கு நைட் அவனை லாக்கப்புல வைச்சு லாடம் கட்டறேன். நீ ஜாலியா இரு." என்றார்.

"சூப்பர் மாமா, ஒரே கல்லில் ரெண்டு மாங்கா, நீங்க அவனை லாடம் கட்டுவதில் கூட எனக்கு சந்தோஷம் இல்ல, ஆனா அவ முன்னாடி அரெஸ்ட் பண்ணீங்க பாரு அது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம். அவளுக்கு இருக்கு இதுக்கு மேல கச்சேரி" என்று சந்தோஷத்தில் குதுகாலித்தான்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

நேத்து ராத்திரி... யம்மா!

கொழு கொழு அண்ணி

மாலை மங்கும் நேரம் 1