காதல் சுகமானது 18
written by raja
ராஜா வண்டியை எடுக்க தொடும் பொழுது எல்லாம் அவனுக்கு சஞ்சனாவின் நினைவுகள் அலைமோதியது. பைக்கில் அவள் மலர்கரங்களால் அவனை பின்னி கொண்டு ஊர் சுற்றியது கண்முன் வர, கோபத்தில் பைக்கை எட்டி உதைத்தான். என் வாழ்க்கை இப்படி நாரகமா மாத்தத்தான் வந்தியா சஞ்சனா என்று பைத்தியம் போல வெறி கொண்டு வானத்தை நோக்கி கத்த சாலையில் சென்றவர்கள் எல்லாம் திரும்பி அவனை ஒரு மாதிரியாக பார்த்தனர். அமைதியாக தரையில் உட்கார்ந்து அழுதான். கீழே விழுந்த பைக்கின் உந்து வேகத்தில் பின்சக்கரம் மட்டும் சுற்றி கொண்டு இருந்தது. ராஜா தன் பைக்கை சகோதரன் போல் பாவித்து வந்தான். எத்தனையோ முறை அவன் களைப்பில் வண்டியை கவணக்குறைவாக ஒட்டி விபத்து நடக்க இருந்த சமயத்தில் எல்லாம் பலமுறை இந்த பைக் அவனை காப்பாற்றி இருக்கிறது. இவனல்லவா என்னையும், என் குடும்பத்தையும் வாழ வைக்கிறான் என வேகமாக சென்று பைக்கை நிமிர்த்தி "சாரிடா அவள் மேல் உள்ள கோபத்தில் உன்னை உதைத்து விட்டேன்.என்னை மன்னிச்சிடு."என மானசீகமாக தன் பைக்கிடம் மன்னிப்பு கேட்டான்.
பைக்கில் ஊர் சென்றால் அவள் நினைவுகள் அலை அலையாக தொடர்ந்துவரும் என்று பைக்கை கொண்டு சென்று கோயம்பேட்டில் விட்டுவிட்டு பஸ்ஸில் சென்றான்.
அடுத்த நாள் காலை நண்பர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தில்,

வாசு ராஜேஷிடம் கேட்டான். "ராஜேஷ் எங்கடா ராஜாவை காணோம்"
"அவன் இதுக்கு மேல் வரமாட்டான் வாசு.வேலையை விட்டு நிக்க போறான்."
"டேய் என்னடா சொல்ற, இப்ப தான்டா அவன் TL ஆ செலக்ட் ஆனான். போஸ்டிங் வருவதற்குள் ஏண்டா இப்படி ஒரு முடிவு?"
"எல்லாம் சஞ்சனாவால் வந்த வினை" என்று ராஜேஷ் சொல்லும் பொழுதே சஞ்சனா அங்கே வந்தாள்,
வாசு: "மச்சான் சஞ்சனா தான் வரா"
சஞ்சனா: "அண்ணா ராஜா எங்க"
ராஜேஷ்: "போதும் சஞ்சனா உன் நாடகம். எத்தனை தடவை தான் எல்லோரும் அவன காயப்படுத்திட்டே இருப்பீங்க. உன்னால தான் அவன் இந்த வேலையையும் விட்டுட்டு எங்களையும் விட்டு போய்ட்டான்."
"என்ன அண்ணா சொல்றீங்க, வேலையை விட்டுட்டானா? ஏன் அப்படி பண்ணான்? நான் என்ன தப்பு பண்ணேன்?"
"ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத சஞ்சனா, நேற்று நீயும் உங்க அப்பாவும் சேர்ந்து உங்க வீட்டில் அவனை எப்படி அசிங்கப்படுத்தினீங்க. அதுவும் உன் அப்பா உனக்கும் அந்த பிரியாவோட தம்பி அர்ஜுனுக்கும் கல்யாணம் முடிவு ஆயிடுச்சு என்று சொன்னார். உன் வாழ்கையில் ராஜா திரும்ப குறுக்கிடுவதாக இருந்தால் அவனை வேலையை விட்டு தூக்குவேன் என்றும் மிரட்டினார். வார்த்தைக்கு வார்த்தை பொறுக்கி, கிரிமினல் என்று திட்டினார். அதை எல்லாம் நீ கேட்டுட்டு சும்மா தானே இருந்த".
"அண்ணா நேற்று நீங்க வந்ததே எனக்கு தெரியாது. நான் நேற்று இரவு 10 மணி வரை ராஜா ரூம் கிட்ட தான் அவனுக்காக காத்திட்டு இருந்தேன்"
"இந்த காதலால் அவன் பட்ட கஷ்டம் எல்லாம் போதும் சஞ்சனா. அவனோட ராசி அப்படி. இதற்கு மேல் அவன் வாழ்வில் நீ வராமல் இருப்பது தான் அவனுக்கும் நல்லது உனக்கும் நல்லது. உனக்கு கிடைச்ச வாழ்வை நீ நல்லா வாழு. அவன் பாவம் விட்டுடுங்க."
"ஆமாம் சஞ்சனா உன்னால தான் எங்க நண்பனை நாங்க இழந்துட்டு நிக்கிறோம்" வாசுவும் ஆமோதித்தான்.
"டேய் முட்டாள்களா, ராஜாவுக்காக கவலைபட ஃப்ரெண்ட்ஸ் என்று நீங்க இருக்கீங்க..! எனக்காக யாரு இருக்காங்க. என் நிலைமையில் இருந்து யாராவது யோசித்து பார்த்தீங்களா? என் அப்பா மட்டுமே. அதுவும் ஒரு பொண்ணாக என்னால நிறைய விசயங்களை என் அப்பா கிட்ட கூட சொல்ல முடியாது. ஏதோ ராஜா மூலமா, அவனோட அம்மா எனக்கு அம்மாவாகவும், நீங்க எல்லாம் எனக்கு அண்ணனாகவும் கிடைச்ச சந்தோஷத்தில் இருந்தேன். தங்கை என்ற உரிமையில் தான் உங்களை உரிமையா அடிச்சேன். ஒருவேளை என் அம்மா இருந்து இருந்திருந்தால் ...." என சொல்லும் போதே அவளுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது.

"சரி விடுங்க எனக்கு கிடைச்ச வாழ்க்கை அவ்வளவு தான். ஆனா அவனை அப்படியே விட்டுட்டு எல்லாம் என்னால் போக முடியாது. நானே தேடிக்கிறேன்." சொல்லிவிட்டு கண்ணீரோடு சஞ்சனா திரும்ப, சஞ்சனா கூறிய வார்த்தைகள் ராஜேஷை முற்றிலும் நிலைகுலைய செய்தது.
"நில்லு சஞ்சனா. நீ இதுவரைக்கும் பொய் சொல்லி நான் பாத்ததில்ல, நேத்து உங்க வீட்ல நடந்தத வச்சு நாங்கதான் உண்ண தப்பா புரிஞ்சுகிட்டோம்னு நினைக்குறேன். என்ன மன்னிச்சுடு சஞ்சனா. உன் அண்ணன் தானே நான், நான் இப்படி முட்டாள்தனமா பேசினா தங்கச்சி நீயும் கோவிச்சிக்கலாமா? சரி சொல்லு இப்போ நான் என்ன செய்யனும்."
"நான் ராஜா மொபைலுக்கு தொடர்ந்து கால் பண்ணிட்டே இருக்கேன். அவன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என்றே வருது."
"அவன் மொபைல் நேற்றே போலீஸ் ஸ்டேஷனில் ஆஃப் ஆயிடுச்சு சஞ்சனா. இன்னும் ஆன் பண்ணல. அவன் சொந்த ஊருக்கு தான் போய் இருக்கான்."
"அப்போ நான் உடனே அவன் ஊருக்கு கிளம்பறேன்."
"அவன் இப்போ அங்க இல்ல சஞ்சனா. நானே காலையில் ஃபோன் பண்ணி தான் தெரிந்து கொண்டேன்."
"ஆனா அவர் நம்பர் இப்போ வரை ஸ்விட்ச் ஆஃப் என்று தானே வருது. நீங்க எப்படி கால் பண்ணீங்க"
"அவன் நம்பர் தானே ஸ்விட்ச் ஆஃபில் இருக்கு, அவன் தங்கச்சி நம்பர் ஆன்ல தானே இருக்கு."
"அப்போ நான் உடனே அவளுக்கு ஃபோன் பண்ணி எங்கே இருக்கான் என்று கேட்டு தெரிந்து கொள்கிறேன்."
"அது ரொம்ப கஷ்டம் சஞ்சனா, ராஜா தான் எங்கே போறேன் என்று யார்கிட்டேயும் சொல்ல கூடாது என அவன் தங்கச்சிகிட்ட சொல்லிட்டு போய் இருக்கான். அவ அண்ணன் வார்த்தையை மீறி எதுவும் செய்ய மாட்டா. நான் கூட எவ்வளவு கேட்டும் அவ வாயே திறக்கல. அவ சரியான கிரிமினல், ஒரு உதாரணம் சொல்றேன் கேட்டுக்கோ."
"சின்ன வயசுல அவன் tvs excel எடுத்து கொண்டு தங்கச்சியை உட்கார வைத்து வீட்டுக்கு தெரியாம ரவுண்ட்ஸ் அடிச்சு இருக்கான். அப்போ கீழ விழுந்து அவன் தங்கச்சி காலில் silencer பட்டு வெந்து போச்சு.வீட்டில் மட்டும் சொல்லாத குட்டி, அப்பா என்னை பொளந்து விடுவாங்க என்று அவன் சொன்ன ஒரே வார்த்தைக்காக 4 வயசு குழந்தையாக இருக்கும் போதே அந்த பொண்ணு வீட்டில் வாயே திறக்கவில்லை. எப்படி அடிச்சு கேட்டும் சுத்தமா வேலைக்கே ஆகல. அப்புறம் தங்கச்சி அடி வாங்கறத பார்த்து மனசு கேட்காம கடைசியில் இவன் தான் உண்மையை ஒத்துகிட்டான். இப்ப வரை அவ அண்ணன் ஒரு வார்த்தை சொன்னால் அந்த பொண்ணு அதை மீறுவதே கிடையாது."
"இல்ல அண்ணா, எனக்கு வேற ஆப்ஷன் இல்ல, நான் அவளுக்கே ஃபோன் அடிக்கிறேன்."
சஞ்சனா திவ்யாவிற்கு ஃபோன் அடிக்க, முதல் அழைப்பிலேயே எடுக்கப்பட்டது.
"என்ன அண்ணி, உங்களுக்கும் அண்ணனுக்கும் எதுனா பிரச்சினையா? அவன் மூஞ்சி வாடி இருப்பதை பார்த்து கேட்டேன். அவன் வாயே திறக்கல. அவன் சென்னையில் வேலையை விட்டு விட்டு மீண்டும் அவனுக்கு பிடிக்காத பெங்களூர் வேலைக்கு போக போறதா வேற சொல்றான். என்னாச்சு அவனுக்கு"
"அப்போ அவன் பெங்களூரில் தான் இருக்கானா திவ்யா?"
"இல்ல அண்ணி.."
"பொறுமையை சோதிக்காத திவ்யா, அவன் எங்கே இருக்கான் என்று மட்டும் சொல்லு."
"சாரி அண்ணி, என் அண்ணண் அதை யார்கிட்டயும் சொல்ல கூடாதுனு சொல்லி இருக்கு. இன்னும் ரெண்டு மூணு நாளில் அவன் சென்னை வருவான். அப்போ பார்த்துக்கோங்க"
"திவ்யா நிலைமை புரியாமல் பேசாத, இந்த சூழ்நிலையில் உன் அண்ணனுக்கு உடனே நான் தேவை. ஏற்கனவே எந்த தப்பும் செய்யமாலே விதி எங்களை சுத்தி சுத்தி அடிக்குது. இன்னும் ரெண்டு மூணு நாள் என்றால் எங்கே நான் அவனை இழந்து விடுவேனோ என்று எனக்கு பயமாய் இருக்குது. தயவு செய்து சொல்லு"
"என்னால் நேரடியாக சொல்ல முடியாது. உங்களுக்காக வேணா ஜாடை மாடையா சொல்றேன். நீங்களே கண்டுபிடிச்சு கொள்ளுங்கள்.
அவன் இப்போ போய் இருக்கும் இடம் நாற்புறமாக சதுரமாய் திசைக்கு ஒன்றாய் மலை, அதன் நடுவில் சுந்தரமாய், சந்தனமாய் லிங்கம். இது தான் அவன் போய் இருக்கும் இடம்."
"இதை வச்சு எப்படிடி கண்டு பிடிக்கிறது"
"அவன் போய் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள ஊரின் கோவில் கோபுரம் தான் தமிழ்நாடு அரசின் சின்னத்தில் உள்ளது.இவ்வளவு தான் என்னால் க்ளூ கொடுக்க முடியும். இதற்கு மேல் கண்டுபிடிக்க வேண்டியது உங்க திறமை என்று வைத்து விட்டாள்."
எப்படியோ சஞ்சனா அந்த இடத்தை கண்டுபிடித்து விட்டாள்.
"சஞ்சனா நானும் உன் கூட வரேன்", ராஜேஷ் சொல்ல
"இல்ல அண்ணா, இந்த தடவை நான் மட்டும் தனியா போய் என் சொந்த முயற்சியில் தான் அவனை இங்க கூட்டி வர வேண்டும். அப்போ தான் எங்களுக்குள் மீண்டும் பிரிவு உண்டாகாது. அங்க போவதற்கு முன்னாடி என் அப்பாகிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு"
"சஞ்சனா அப்புறம் இன்னொரு தடவை எனக்கென்று யாரும் இல்லனு மட்டும் சொல்லாத. இந்த ரெண்டு அண்ணன்கள் எப்பவுமே உன் கூட தான் இருப்போம். ராஜாவே வந்தாலும் இனி நாங்க எப்போதும் உன் பக்கம் தான். உன் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் அந்த ராஜா பையனை நான் சும்மா விட மாட்டேன். வெற்றி உன் பக்கம் தான்டா. நீ போய்ட்டு வாடா செல்லம்." என்று ராஜேஷ் கண்கலங்க கூறினான்.
வாசுவும் "சிஸ்டர் உங்களுக்கு எப்பவெல்லாம் போர் அடிக்குதோ அப்பவெல்லாம் என்னை வந்து அடிச்சு பழகிக்கோங்க. உங்களுக்காகவே இந்த பாடியை நான் இன்சூரன்ஸ் பண்ணி வச்சி இருக்கேன்." என்றான் சிரித்தபடி.
"சரிங்க அண்ணன்ஸ் நீங்க என்னுடன் இருக்கும் வரை இனி எனக்கு எந்த கவலையும் இல்லை", என்று சொல்லிவிட்டு சிரித்து கொண்டே கிளம்பினாள் சஞ்சனா.
**************************

சஞ்சனா திரும்ப வீட்டுக்கு வந்ததை பார்த்த அவரது அப்பா,
"என்ன சஞ்சனா,வேலைக்கு போய்ட்டு உடனே திரும்ப வந்துட்டே"
"நான் வேலைக்கு போகல அப்பா,என் வாழ்க்கை துணையை பார்க்க போறேன்."
"யாரு அர்ஜுனா..?"
"இல்லப்பா ராஜாவை.."
"வர வர உனக்கு ரொம்ப திமிர் அதிகமாகி விட்டது சஞ்சனா, உனக்கும் அர்ஜூனுக்கும் நிச்சயம் நடந்து முடிந்து விட்டது. அதுவும் உன் சம்மதத்தோட. இப்போ போய் அந்த கேடு கெட்டவனை பார்க்க போறேன் என்று சொல்றியே"
"நான் எப்போ சம்மதம் கொடுத்தேன்? துர்காதான் வாயை விட்டா, நான் உங்களுக்கு எதுவும் ஆக கூடாது என்று அமைதியா இருந்தேன் அவ்வளவு தான்."
"இங்க பாரு சஞ்சனா எனக்கு அதெல்லாம் தெரியாது, நீ அவனை பார்க்க போக கூடாது. என் பேச்சை மீறி போவதாக இருந்தால் நீ உன் அப்பாவையும் இழக்க வேண்டி இருக்கும் பார்த்துக்க"
"என்னப்பா, சினிமாவில் வருகிற அப்பா மாதிரி மிரட்டி பார்க்கறீங்களா.. தெரிந்தோ தெரியாமலோ என் இளமை காலத்தில் எனக்கு நீங்க ஒரு பாதுகாப்பா இருந்து இருக்கீங்க. ஆனா அதுக்கு கூட காரணம் அவன் தான். அவன் இல்லை என்றால் நீங்க உயிரோடவே இருந்து இருக்க முடியாது. பெங்களூரில் நீங்க ஹார்ட் அட்டாக் வந்து உயிருக்கு போராடிய பொழுது உங்களை காப்பாற்றியது அவன் தான்."
"என்னது அவனா?" ஒரு நிமிஷம் ஆறுமுகம் அதிர்ந்தார்
"ஆமாம்."
"சரி இருக்கட்டும், அதுக்கு நாம நன்றி வேணா சொல்லிக்கலாம். ஆனால் உன் வாழ்க்கையையே கொடுப்பது முட்டாள்தனம். அர்ஜுனையும், அவனையும் கம்பேர் பண்ணி பாரு. ராஜாவை விட அர்ஜுன் பல மடங்கு சம்பாதிக்கிறான். உன்னோட எதிர்காலமும் நல்லா இருக்கும்."
"அப்படியா அப்பா, அர்ஜுனை விட ராஜா பல மடங்கு நல்லவன். உங்களுக்கு நடந்த விசயத்தை வைச்சே சொல்றேன். அவன் கிட்ட காசு இல்லை என்ற போதும் உங்களை காப்பாற்ற வேண்டும் என்று தன் தங்கச்சியின் கல்யாணத்திற்கு வாங்கி வைத்து இருந்த மோதிரத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்துட்டு போனான். அவனவன் ஒரு சின்ன உதவி செய்தாலும் ஊர் பூரா தம்பட்டம் அடிப்பாங்க, ஆனா நீங்க அவனை அசிங்கப்படுத்தும் போட, அவன் உங்க உயிரை காப்பாற்றியது பற்றி வாயே திறக்கல. இந்த ஒரு விசயத்திலேயே நீங்க புரிஞ்சிக்கலாம் அவன் நல்லவனா இல்லை கெட்டவனா என்று? இன்னொரு முக்கியமான விசயம் அவன் உண்மையில் தப்பு செய்பவனா இருந்தால், என்னையும்,உங்களையும் அங்க வர சொல்லி இருக்க மாட்டான்.. எனக்கு இந்த கார்,பணம் வீடு எதுவும் எனக்கு முக்கியம் இல்ல. அவன் கூட வாடகை வீட்டில் வாழ்ந்தாலும் சந்தோஷமாக இருப்பேன். பைக்கில் அவன் கூட போகிற சுகம் எனக்கு காரில் போகும் போது கூட வராது."
"சஞ்சனா நான் உனக்காக இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்காம வாழந்தவன். நேற்று வந்தவனுக்காக என்னிடம் வாக்குவாதம் செய்யாதே"
"ஓ, எனக்காக நீங்க கல்யாணம் பண்ணிக்கல , அம்மா இறந்த பிறகு என்னை வளர்ப்பதற்கு அம்மாவோட அப்பா அம்மா வந்தப்ப நீங்க என்னை அவங்க கூட அனுப்பாம அவங்க கொடுக்கிற காசை மட்டும் மாச மாசம் வாங்கி கொண்டீங்க. ஏன்? என்னை வளர்க்க தாத்தா பாட்டி கொடுக்கிற காசை வைச்சு பலான வீட்டுக்கு போவது எல்லாம் எனக்கு தெரியாது என்று நினைச்சீங்களா? ஒரு பொண்ணா நான் உங்களுக்கு இதுவரை என்னவெல்லாம் செய்து இருக்கிறேன் என்று என்னால் கூட சொல்லி காட்ட முடியும். சஞ்சனா ஆறுமுகமா இருந்திருந்தால் செஞ்சதை எல்லாம் இந்நேரம் சொல்லி காட்டி இருப்பா, ஆனா நான் இப்போ சஞ்சனா ராஜாவா இருப்பதால் என்னால சொல்லி காட்ட முடியாது. அது என் புருஷனோட குணம்."
"என்ன சொல்ற சஞ்சனா"
"ஆமா நான் எப்பவோ அவனை என் கணவனாக மனதில் வச்சாச்சு. நான் வரேன்ப்பா."
சஞ்சனா விறுவிறுவென செல்ல ஆறுமுகம் அரண்டு போய் உட்கார்ந்து இருந்தார்.
*************************
சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இயற்கை எழில் சூழ்ந்த இடம். பதினென் சித்தர்கள் வாழக்கூடிய இடம் என்று சொல்வார்கள்.பல அரிய வனவிலங்குகளின் புகலிடமும் அதுவே. பல அதிசயங்களை உள்ளடக்கிய இடமும் அதுவே. ராஜா ஒரு தடவை அங்கே உள்ள மகாலிங்கத்தை தரிசிக்க சென்றான். அப்பொழுது அங்கே உள்ள மடத்தில் அன்னதானம் சாப்பிட்டுவிட்டு நன்கொடை கொடுக்கும் பொழுது அங்கு இருந்த சாமியார் அவன் கைரேகையை பார்த்து
"தம்பி நீ இங்கே வந்து விடுகிறாயா, எனக்கு அப்புறம் இங்கு இறை சேவையை செய்ய சரியான ஆள் நீ தான். உன் மூலமாக இந்த மடம் பெரும் அளவுக்கு வளர்ச்சி பெறும்." என்று கூறினார்.
ராஜா இறைவனை நம்புவான், ஆனால் சாமியாரை நம்ப மாட்டான்.
"சாமி எனக்கு துறவறம் எல்லாம் விருப்பம் இல்லை. கல்யாணம் பண்ணி கொண்டு வாழ தான் ஆசை" என சொல்லிவிட்டு வந்து விட்டான்.
ஆனால் அப்பொழுது சாமியார் அவனை பார்த்து சிரித்து கொண்டே"நீ என்னைத் தேடி மீண்டும் இங்கு வரும் காலம் வரும்." என்று சிரித்தார்.
அதே போல் அவன் இதோ இப்பொழுது அந்த சாமியாரை சந்திக்க சதுரகிரி மலையை ஏறி கொண்டு இருந்தான்.
டேய் பாண்டி, "அன்ன தானத்திற்கு சாப்பாடு ரெடி ஆகி விட்டதா?" சாமியார் கேட்க,
"ஆயிட்டே இருக்கு சாமி." என்றான் அவன்.
"டேய் சீக்கிரம், யாரும் வந்து சாப்பாடு இல்லை என்று திரும்பி போக கூடாது."
"சாமி, நான் ஒன்னு கேட்கறேன் தப்பா நினைக்க கூடாது. இங்க நான் தானே எல்லா வேலையும் பார்ப்பத.? உங்களுக்கு அப்புறம் இந்த மடத்தை நிர்வகிக்கும் பொறுப்ப என்கிட்ட கொடுக்க கூடாதா? வெளியில் இருந்து ஆளை தேடறீங்களே."
"டேய் அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது. நான் சில வருஷத்துக்கு முன்னாடி ஒரு பையனோட கை ரேகையை பார்த்தேன். அற்புதமான பிரம்மச்சரிய ஜாதகம், அவன் மட்டும் மூலாதாரத்தில் உள்ள அவன் விந்துவை சகஸ்ரஞானத்திற்கு கொண்டு சென்று விட்டால் போதும், அவனால் அஷ்டமா சித்திகளையும் அடைந்து விட முடியும். அப்புறம் அவனை இந்த மடத்தின் பீடாதிபதி ஆக்கி விட்டால் நம் மடத்தின் புகழ் உச்சிக்கு சென்று விடும்."
"என்ன சாமி நீங்க என்னென்னவோ பேசறீங்க, விந்துவை உச்சிக்கு கொண்டு செல்வது என்பது சாதாரண காரியமா? அது எவ்வளவு கஷ்டம். இதில் நிறைய பேர் மண்டை குழம்பி பைத்தியமா ஆயிருக்காங்க."
"உலகத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் சில பேரை தியாகம் செய்வது தவறில்லை. நீ இந்த விசயத்திற்கு சரிபடமாட்ட. நான் கொடுக்கிற வேலையை மட்டும் பாரு."
"சாமி" என்று அழைத்த குரல் கேட்டு திரும்ப அங்கு ராஜா நின்று கொண்டு இருப்பதை பார்த்து சாமியார் முகம் மலர்ந்தது.
"வாப்பா நீ வருவேன்னு நான் எதிர்பார்த்தேன். வந்துட்ட"
"சாமி நான் கல்யாணம் பண்ணி வாழ தான் ஆசைப்பட்டேன். உனக்கு காதல் வரும்,ஆனால் கல்யாணத்தில் போய் முடியாது அந்த காதல் மூலமா நிறைய பிரச்சினைகள் வர கூடும் என்று நீங்க சொன்னது முற்றிலும் உண்மை."
"எப்படியோ புரிஞ்சிக்கிட்டா சரி. இப்போ என்ன முடிவு பண்ணி இருக்க"
"சாமி, நான் துறவறம் மேற்கொள்ளலாம் என்று இருக்கேன். ஆனா எனக்கென்று சில கடமைகள் இருப்பதால் அதை முடித்து விட்டு வர 2 வருஷம் அவகாசம் மட்டும் தேவை."
"சாமி என்று என்னை கூப்பிடாதே, குரு என்றே அழை உனக்கு என்ன கடமை பாக்கி இருக்கு மட்டும் சொல்லு"
"குரு, என் தங்கைக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும், அப்புறம் என் அம்மா கடைசி வரை எந்த சிரமமும் இல்லாமல் வாழ வழிவகை செய்யனும்."
"துறவறம் என்பது எல்லாவற்றையும் உதறி விட்டு வருவது தானே, சரி பரவாயில்லை நான் உனக்கு ஒரு வாக்கு அளிக்கிறேன். நீ இந்த மடத்தில் உடனே சேருவதாக இருந்தால் எனக்கு தெரிந்த செல்வந்தர் கிட்ட சொல்லி உன் குடும்பத்தை தத்து எடுக்க சொல்றேன். நீ கேட்டது ரெண்டுமே கிடைக்கும். ஆனா கடைசி வரை நீ இந்த மடத்தில் தான் இருக்க வேண்டி வரும்.உனக்கு சம்மதமா.."
"சரிங்க குரு."
"பாண்டி இங்க வாடா, சீக்கிரமே பூஜைக்கு ரெடி பண்ணு. நான் ராஜாவுக்கு இன்றே தீக்க்ஷை அளிக்க ஏற்பாடு செய்."

"ராஜா இதற்கு மேல் நீ என்னுடைய சிஷ்யன். நீ இதற்கு மேல் அசைவம் சாப்பிடவே கூடாது. சாத்வீகமான உணவுகளை அளவாக தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பயிற்சியா நான் உனக்கு சொல்லி தர போறேன். அதற்கேற்ப உன் உடம்பை தயார் செய்ய நீ கடுமையா உழைக்க வேண்டி இருக்கும்."
"என் மனசில் இருக்கும் பொண்ணை மறக்க நான் எந்த தியாகமும் செய்ய தயார் குரு."
"இங்க வா."
ராஜா அருகில் வந்தவுடன், அவன் கைரேகையை பார்த்து திருப்தி அடைந்து, அவன் அடிவயிற்றில் கை வைத்து அழுத்தி பார்த்தார். பின் அவன் கண்ணை நோக்குவர்மத்தை பயன்படுத்தி சில கேள்விகளை அவன் உள்மனதிடம் கேட்க அதுவும் அவருக்கு பரம திருப்தியாக இருந்தது.
'ஆஹா நெடுங்காலமாக நான் தேடி கொண்டு இருந்த என் மடத்திற்க்கான வாரிசு கிடைத்து விட்டது' என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டார்.
பூஜைகள் ஜகஜோராக நடந்து கொண்டு இருந்தது. ராஜாவுக்கு தீக்ஷை அளிக்க குரு ஒவ்வொரு பூஜையாய் செய்து கொண்டு இருந்தார். குரு அவனுக்கு மாலை அணிவிக்க சென்ற பொழுது அவரிடம் இருந்த மாலையை ஒரு இளமங்கையின் கைகள் தட்டி பறித்து ராஜாவின் கழுத்தில் அணிவித்தது. அது வேறு யாருமில்லை சஞ்சனா தான்.

"ஏய் பொண்ணு, என்ன காரியம் செய்ஞ்சுட்ட, இதுவரை செய்த பூஜை எல்லாம் நொடியில் பாழ்படுத்தி விட்டாயே."
"சாமி, இவன் எனக்கானவன். எதுக்காகவும் நான் இவனை விட்டு கொடுக்க மாட்டேன்."
ராஜா பேச வாயெடுக்க சாமியார் கை அமர்த்தினார்.
அங்கு இருந்த ஒருவரிடம், "நீ ராஜாவை கோவிலுக்கு கூட்டிட்டு போ. நான் இந்த பொண்ணு கிட்ட பேசிக்கிறேன்." என்றார்.
ராஜா அவருடன் சென்ற பிறகு, "இப்ப சொல்லுமா உனக்கு என்ன வேணும்?" என்றார் சாமியார்.
"சாமி நாங்க ரெண்டு பேருமே காதலிக்கிறோம். சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்க போறோம். நீங்க அவனை திரும்ப என்கூடவே அனுப்பி வைங்க."
"அவன் உனக்கு உபயோகப்பட மாட்டான்மா, சொல்றத புரிஞ்சிக்க அவனுடையது ஜாதாகமே பிரம்மச்சரிய ஜாதகம். எந்த பெண்ணுடனும் சேர மாட்டான். அப்படி சேர ஆசைப்பட்டால் வீணாக அவனுக்கு துன்பம் தான் வந்து சேரும்."
"இல்ல சாமி, அவன் எனக்கு தான் சொந்தம் நான் அவனுக்கு சொந்தம் இதைத்தான் நான் திடமாக நம்புகிறேன்."
"ம் இருக்கலாம். அவனோட 32 வயது வரை சில கல்யாண ரேகைகள் இருந்தது. ஆனா இன்று இரவு 8.39 மணிக்கு அவன் 32 வயது பூர்த்தி ஆகி 33 வயது ஆரம்பம் ஆகிறது. இனிமேல் முழுக்க முழுக்க அவன் ஜாதகம் பிரம்ச்சரிய ஜாதகம் தான். அவன் கல்யாண வாழ்க்கைக்கான காலம் கடந்து விட்டது. அவன் இன்னும் தனது விந்தணுவை வெளியவே விடவில்லை. நீங்கள் இருவரும் இணை சேர காலம் ஒரு வாய்ப்பை தந்தது. அப்படி நீங்கள் இணை சேர்ந்து இருந்தால் அவன் எனக்கு உபயோகபட்டு இருக்க மாட்டான்."
"சாமி உங்களுக்கு இதே மாதிரி வேறு யாராவது கிடைக்கலாம் இல்ல. என் ராஜாவை என்கிட்ட கொடுத்துடுங்க ப்ளீஸ்"
"அது முடியாது சஞ்சனா", சாமியார் திடமாக மறுத்தார்.
"சாமி என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்"
"அதை நான், அவன் உள்மனதிடம் பேசும் போது அறிந்து கொண்டேன். அவனோட ராசி மகர ராசி, நட்சத்திரம் உத்திராடம். அப்படியே ஐயப்ப சாமி ராசி, நட்சத்திரத்தில் பொறந்து இருக்கான். முக்கியமான விசயம் அவனோட 32 வயது வரை அவன் விந்து என்கிற தங்கத்தை வீணாக்கவே இல்லை. எனக்கு தேவையான மூன்று விசயமும் அவன்கிட்ட தான் இருக்கு. விந்துவை மட்டும் அவன் ஆறு சக்கரங்கள் வழியே சகஸ்ரஞானத்தில் ஏற்றி விட்டால் போதும் அவனுக்கு அட்டமாசித்திகள் கைவரப்பெற்று விடுவான். அவன் மூலம் இந்த மடம் பெரும் விருத்தியாகும். என்னிடம் ஒரே ஒரு சித்தி மட்டுமே உள்ளது. அவனை வைத்து நானும் மற்ற சித்திகளை அடைந்து விடுவேன். இப்போ நீ கிளம்பறது தான் ரெண்டு பேருக்கும் நல்லது."
"ஏன் சாமி உங்க சுயநலத்திற்காகவும், உங்க மடத்தின் வளர்ச்சிக்காகவும் எங்க ரெண்டு பேரையும் பிரிக்கிறீங்களே, உங்களுக்கே இது நியாயமா இருக்கா.?" ஆதங்கத்துடன் கேட்டாள் சஞ்சனா.

"நான் சுயநலம் பிடிச்ச சாமியார் தான் சஞ்சனா, ஆனா இதில் அவன் நலனும் இருக்கு."
"நான் உங்களை பற்றி உண்மையை சொல்லி அவனை கூட்டிட்டு போறேன்."
"முடிந்தால் முயற்சி பண்ணு" சாமியார் சிரித்தார்.
சஞ்சனா கோவிலுக்கு செல்ல, ஒளிந்து நின்று இதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த பாண்டியும் அவள் பின்னே ஓடினான்.
தொடரும்...
மிகவும் அருமை மிக விரைவில் அடுத்த பகங்களை அனுப்புங்க 🙏🙏🙏🙏
ReplyDelete