காதல் சுகமானது 24

written by raja

முழு தொடர் படிக்க

முதல் நாள் 108 முறை மிருத்யுஞ்சய மந்திரம் நல்லபடியாக பாராயணம் செய்து முடித்தான் ராஜா.

சஞ்சனா வீட்டில், உடலுறவு கொண்டதில் இருவர் காம நீரும் சிந்தி இருந்த போர்வையை எடுத்து துவைக்க போட்டாள் சஞ்சனா. குளிக்கும் போது அவன் ஏற்படுத்திய காயங்களை பார்த்து வெட்கப்பட்டு தனக்கு தானே சிரித்து கொண்டாள்.


குளித்து முடித்து கிளம்பியவள் அவன் வாங்கி கொடுத்த ஸ்கூட்டரை எடுத்து கொண்டு வேகமாக அவனை பார்க்க டீக்கடைக்கு விரைந்தாள்.

ராஜா அந்த டீக்கடைக்கு வர, வாசுவும், ராஜேஷும் அங்கு இருந்தனர். அவனை பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

ராஜேஷ்: "வாடா ராஜா, உன்னை மூணு நாள் பார்க்காமல் இருந்ததே ஒரு மாதிரி இருக்கு. என்னடா ஆளே பளிச்சின்னு இருக்க"

ராஜா" "அதெல்லாம் ஒன்னுமில்லயே," என்று வெட்கப்பட்டு சிரித்தான்.

ராஜேஷ்" "டேய் என்னடா இவன் புதுசா வெட்கம் எல்லாம் படறான்."

ராஜா: "டேய் இப்போ சஞ்சனா வருவான்னு நினைக்கிறேன். நான் டீக்கடை பின்னாடி ஒளிந்து கொள்கிறேன். ஏதும் உளறி கிளறி வைக்காதே..! அதுக்கு தான் பைக்கை கூட பக்கத்து தெருவில் விட்டுட்டு வந்து இருக்கேன்."

ராஜேஷ்: "டேய் வாசு என்னடா இந்த வயசுல போய் கண்ணாம்பூச்சி ஆடறான்."

வாசு: "டேய் நாம கூட தான் இன்னும் நம்ம பொண்டாட்டி கூட விளையாடிட்டு இருக்கோம். விடு விடு" என்று சொல்லி முடிப்பதற்குள் சஞ்சனா வந்து விட்டாள்.


ராஜேஷ்: அவள் வண்டியை பார்த்து "ஏய் சஞ்சனா புது வண்டி கலக்கற,என்னது my husband gift ஆ அப்போ என் நண்பனோட கதி" என்று பதற,

சஞ்சனா: "டேய் அடங்குடா, இது ராஜா எனக்கு வாங்கி கொடுத்த கிஃப்ட் தான். அவனை தான் என் husbandனு போட்டு இருக்கேன்"

வாசு: "பார்த்தீயாடா ராஜேஷ், நமக்கு டீயும், புரையும் மட்டும் வாங்கி கொடுத்து ஏமாற்றி விட்டு இவளுக்கு மட்டும் ஸ்கூட்டர் வாங்கி கொடுத்து இருக்கான். அந்த களவாணியை சும்மா விடக்கூடாது"

சஞ்சனா: "டேய் அவன் யாருக்கு என்ன வாங்கி தர வேண்டுமோ அதை தான் சரியாக வாங்கி தந்து இருக்கான். நான் அவனோட தேவதை, அதனால் எனக்கு இந்த ரதம். நீங்க வீட்டை காவல் காக்கும்.." என்று சஞ்சனா சொல்லி முடிக்கும் முன்,

"போதும் நிறுத்து" என்று வாசு கையை காட்டினான், 

வாசு: "மச்சான் இதுக்கு மேல நம்மை யாரும் கேவலப்படுத்த முடியாது. நமக்கு மானம், ரோஷம் தான் முக்கியம். இப்பவே நாம அவன் ஃப்ரெண்ட்ஸ் ஷிப்பை கட் பண்றோம்"

ராஜேஷ்: "மானம் ரோஷம் எல்லாம் நமக்கெதுக்குடா. விடு என்ன இருந்தாலும் நம்ம நண்பன், நண்பனோட காதலி"

சஞ்சனா: "அண்ணா, ராஜா எங்க? இன்னும் வரல?"

ராஜேஷ்: "இல்லையே சஞ்சனா, அவன் வரவே இல்ல. ஒருவேளை நேரா ஃபீல்டுக்கு போய் இருக்கலாம்."

சஞ்சனாவிற்கு உள்ளுணர்வு தூண்ட "இல்ல நீங்க பொய் சொல்றீங்க, அவன் இங்க தான் இருக்கான்" என்றாள் உறுதியாக.

ராஜேஷ் சுற்றும் முற்றும் பார்த்து எப்படி கண்டுபிடித்தாள் என்று மனதில் நினைத்து "நான் போய் உன்கிட்ட பொய் சொல்வேனா சஞ்சனா, பாரு அவன் பைக் கூட இங்க இல்ல" என சமாளித்தான்.

சஞ்சனா விடாமல் "அண்ணா அவன் இங்க தான் இருக்கான், என்னோட உள் உணர்வு சொல்லுது, இருங்க நானே தேடறேன்" என்று சுற்றும் முற்றும் பார்க்க,  கடைசியில் ராஜேஷே சைகையில் அவனை காட்டி கொடுக்க, சஞ்சனா ஒளிந்து இருந்த ராஜாவை கண்டு பிடித்து விட்டாள்.

அவன் முன்னே நின்று "சார் இங்கே என்ன பண்றீங்க" என்றாள் பொன்சிரிப்புடன்.

ராஜா: "ஒன்னும் இல்ல சஞ்சனா, ஜஸ்ட் என் பைக் சாவி கீழ விழுந்துடுச்சு, அதை தான் தேடிட்டு இருந்தேன்."

சஞ்சனா: "அப்படியா இங்கே வாங்க சார்" என்று கூப்பிட, ராஜாவும் அருகே வந்தான். 

அவள் அவன் பேன்ட் பாக்கெட்டில் கை விட்டு துழாவ, "ஏய் என்னடி பண்ற" என்று நெளிந்தான்.

அவன் பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து அவன் முன்னே ஆட்டி "அப்போ இது என்ன சார்?" என்றாள் புருவத்தை உயர்த்தி.

ராஜா: "இது இங்க தான் இருக்கா, நான் எங்கேயோ தேடிட்டு இருக்கேன்"என்று வழிய

சஞ்சனா: "டேய் நான் தேடும் போது என் கையில் இன்னொரு சாவியும் கிடைச்சது, அது என் பூட்டுக்கான சாவி. அதை அப்புறமா நான் எடுத்துக்கிறேன்" என்று அவன் காதில் கிசுகிசுத்தாள்.

அப்போது "டேய் ராஜா உன்னை தேடி போலீஸ் வந்து இருக்குடா வெளியே வா" என்று ராஜேஷ் கத்தினான்.

ராஜா வெளியே வர, அங்கு ஜார்ஜ்ஜின் மாமா அன்பரசு நின்று கொண்டு இருந்தார். சஞ்சனாவும் அவன் பின்னாடியே வந்தாள். அவரை பார்த்தவுடன் சஞ்சனா முகம் கோபத்தில் சிவந்தது. இவரல்லவா என்னவன் மேல் பொய் கேஸ் போட்டார் என்று கோபம் பொங்கியது.

அன்பரசு: "உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் ராஜா"

ராஜா: "ஒரு நிமிஷம் சார்", என்று சஞ்சனாவை பார்த்து "சஞ்சனா நீ ஆபீஸுக்கு போ" என்றான்.

அவளோ உடனே அவன் கையை பிடித்துக் கொண்டு "நான் கொஞ்ச நேரம் கழித்து போய்க்கிறேன் ராஜா, சார் நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க...! சீக்கிரம் சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்புங்க" என்று கடுகடுத்தாள்.

அன்பரசு: "ராஜா நான் உன்கிட்ட உதவி கேட்டு வந்துருக்கேன். ஜார்ஜ் செய்யாத தப்புக்கு ஒரு கேஸில் மாட்டி இருக்கான். இப்போ கமிஷனர் அவங்க வீட்டு குழந்தையை கடத்தியதால் அவன் மேல் கோபம் கொண்டு கொஞ்சம் பெரிய கேஸ் எல்லாம் போட்டு 7 வருஷம் அவன் உள்ளே இருக்கிற மாதிரி வேலை நடந்திட்டு இருக்கு,"

சஞ்சனா: "வசமா மாட்டினானா, அவனுக்கு ஏழு வருஷமே கம்மி சார்."

அன்பரசு தனக்கு வந்த வேலை முக்கியம் என்று அமைதியாக "ராஜா அவன் கண்டிப்பா கமிஷனர் குழந்தையை கடத்தல, உனக்கு அவன் தீங்கு செய்ததால் உனக்கு பிரியமானவங்க கமிஷனர் குழந்தையை கடத்தி அவன் காரில் போட்டு அவனை மாட்டி விட்டு இருக்காங்க,.." என்றார்.

சஞ்சனா: "சார், அந்த மாதிரி எல்லாம் எதுவும் நடந்து இருக்க வாய்ப்பு இல்ல, ஜார்ஜ் தான் இந்த வேலையை செய்து இருப்பான். ஒருவேளை நீங்க சொல்வது உண்மை என்றால் ஆதாரம் காண்பிங்க?"

அன்பரசு: "சஞ்சனா நீ தான் குழந்தையை கடத்தி காரில் போட்டாய் என்று நீயே அவனுக்கு ஃபோன் செய்து சொல்லி இருக்கிறாய். அது கால் ரெக்கார்டிங்கும் ஆகி இருக்கு."

அப்போ தான் வாசு, ராஜா கணக்கில் ரெண்டு பன் வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தான். இதை கேட்டவுடன் அதிர்ந்து வேர்த்து போய் அவன் வாயில் இருந்த பன் தானே வெளியே வந்து விழுந்தது.

சஞ்சனா கொஞ்சம் கூட பதறாமல், "அது தான் கால் ரெக்கார்டிங் இருக்குல்ல. போய் அதை கொடுத்து அவனை ரிலீஸ் பண்ணிக்கோங்க.." என்றாள்.

அன்பரசு: "அது இப்போ முடியாது, அவன் மொபைலில் இருந்த எல்லா டேட்டாவும் அழிந்து விட்டது."

சஞ்சனா: "இருந்த ஒரு ஆதாரமும் போச்சா, இதுக்கு மேல அவனை கடவுளால கூட காப்பாற்ற முடியாது. போங்க போங்க.."..

ராஜா: "சஞ்சனா நீ ஒரு நிமிஷம் அமைதியா இரு, சார் இப்போ என்கிட்ட நீங்க என்ன எதிர்பார்க்கறீங்க"

அன்பரசு: "ஒன்னும் இல்ல ராஜா, உனக்கு கமிஷனரை நல்லா தெரியும் தானே..!நீ கொஞ்சம் கமிஷனர் கிட்ட போய் கேஸ் மட்டும் போட வேண்டாம்னு சொல்ல முடியுமா?"

ராஜா: "சார் அவர் நான் சொல்றத எல்லாம் கேக்கமாட்டார். அவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு என்னை ஆசையா கூப்பிடுவார். அவ்வளவு தான். மற்றபடி நான் அவர்கிட்ட எதையும் கேட்டது இல்ல. இப்போ நான் கேட்டால் செய்வாரா என்றும் தெரியாது?"

அன்பரசு: "இல்லை ராஜா, நீ சொன்னால் கண்டிப்பாக கேட்பார்."

சஞ்சனா: "சார் அவன் யார்கிட்டேயும் பேச மாட்டான். அதுக்கு நான் அனுமதியும் தர மாட்டேன்"

ராஜா: "சார் நீங்க ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க, பிளீஸ்"

அதற்கு அவரும் ஆமோதிக்க,ராஜா சஞ்சனாவை தனியே அழைத்து சென்றான்.

வாசுவுக்கு கை கால் உதறி கொண்டு இருந்தது.

ராஜேஷ் அவனை பார்த்து "என்னடா உனக்கு கை கால் எல்லாம் இப்படி நடுங்குது" என கேட்க 

வாசு "என்ன மச்சான் இவ இந்தமாரி வேலை எல்லாம் பார்த்து ருக்கா, கமிஷனர் வீட்டு குழந்தையை கடத்தி ஜார்ஜ் காரில் போட்டு அவனை மாட்டி விட்ருக்கா.போற போக்குல நம்மள எந்த கேஸிலாவது கோர்த்து விட்டா நம்ம நிலைமை என்ன ஆவறது. என் உடம்பு பித்த உடம்புடா, குப்பென்று வேர்த்துருச்சி.. போலீஸ் அடி எல்லாம் என்னால தாங்க முடியாது." என்றான்.

ராஜேஷ்: "சரி விடுடா, நம்ம ப்ரெண்ட் ராஜாவுக்காக தாங்கிக்கலாம்.."

வாசு: "நோ நோ.. இப்போ அவங்க ரெண்டு பேர் வந்த உடனே இந்த வாசுவோட விஸ்வரூபத்தை நீ பார்க்க போற,"

ராஜேஷ்: "என்னடா பண்ண போற"

வாசு: "Wait and see மகனே"

சஞ்சனா: "இங்க பாரு ராஜா, நீ அவனுக்கு support பண்ணி போக கூடாது. அவன் செய்த தப்புக்கெல்லாம் அவனுக்கு கண்டிப்பாக தண்டனை தேவை.."

ராஜா: "சஞ்சனா ஒரு நிமிஷம் நான் சொல்றத அமைதியா கேளு"

சஞ்சனா: "சரி சொல்லு,.."

ராஜா: "அவன் செய்த தவறுக்கு நான் அப்பவே மாலில் அவனுக்கு தண்டனை கொடுத்துட்டேன். நாம ஒருத்தருக்கு திருப்பி கொடுக்கிற தண்டனை அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கிற மாதிரி இருக்க கூடாது. அவனுக்கு உதவ நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கு. ஒருவேளை நம்ம மூலமாக அவன் வெளியே வந்தால், அதை விட பெரிய தண்டனை அவனுக்கு கிடையாது."

சஞ்சனா: "டேய் அவன் திருந்த மாட்டான்டா, மீண்டும் அவன் நமக்கு கெடுதல் பண்ணுவான். நான் சொல்றத கேளு"

ராஜா: "இங்க பாரு சஞ்சனா, அவன் பண்ற ஒவ்வொரு தப்பும் நமக்கு இதுவரை சாதகமாக தான் முடிந்து இருக்கு. நீ எனக்கு கிடைத்தது முதல், அர்ஜுனுடன் நடக்கவிருந்த கல்யாணம் நின்றது வரை அவனுக்கு தெரியாமலேயே அவன் நமக்கு உதவிக்கொண்டு இருக்கிறான். அவன் தண்டிக்கபட்டால் தான் நம் மேல வஞ்சம் இன்னும் அதிகமாகும் சஞ்சனா."

சஞ்சனா சமாதானம் ஆகாமல் "அது வந்து ராஜா ...." என்று இழுக்க,

ராஜா "இப்போ நான் சொல்றத நீ கேட்பியா மாட்டியா சஞ்சனா, நீ அனுமதி கொடுத்தால் மட்டுமே நான் அவனை காப்பாற்ற முயற்சி செய்ய முடியும்." என்று சொன்னவுடன் அமைதி ஆனாள்.

சஞ்சனா: "டேய் நான் உன் பேச்சை கேக்குறேன். உனக்கு இதில் விருப்பம் என்றால் நானும் இதற்கு சம்மதிக்கிறேன்."

சஞ்சனா அரை மனதாக ஒப்பு கொண்டாள்.

ராஜா: "சரி வா போலாம் சஞ்சனா"

ராஜா அன்பரசு முன்னே கமிஷனருக்கு ஃபோன் செய்தான்.

ராஜா: "சார் good morning"

கமிஷனர்: "ஹே ராஜா நானே உனக்கு ஃபோன் பண்ணனும்னு நினைத்தேன். நல்லா இருக்கியாடா"

ராஜா: "சார் நான் நல்லா இருக்கேன், நான் இப்போ உங்களை பார்க்க வரலாமா?"

கமிஷனர்: "இப்போ வேண்டாம் ராஜா, மதியம் வீட்டுக்கு வந்திடு. என் பொண்ணும் உன்னை பார்க்கனும்னு சொல்றா"

ராஜா: "யாரு சார், ஷன்மதியா..!"

கமிஷனர்: "ஆமா..."

ராஜா: "சரி சார், நான் மதியமே வந்து விடுகிறேன்."

கமிஷனர்: "அப்புறம் ராஜா, வரும் பொழுது எதுவும் சாப்பிட்டுவிட்டு வராதே. இன்னிக்கு நம்ம வீட்டில் தான் உனக்கு லஞ்ச். நம்ம வீட்டு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி."

ராஜா: "சார் தப்பா நினைக்காதீங்க, இன்னும் 60 நாளுக்கு நான் அசைவம் சாப்பிட முடியாது."

கமிஷனர்: "சரி பரவாயில்லை நீ வா உனக்காக சைவம் இன்று". என்று போனை வைத்தார்.

ராஜா அன்பரசுவிடம் "சார் நீங்க கவலைபடாமல் போங்க, கண்டிப்பாக என்னால் ஆன முயற்சியை செய்யறேன். நல்லதே நடக்கும்." என்றான்.

அன்பரசு சஞ்சனாவிடம் " உன்னை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கும்மா. உன் மேல எனக்கு கொஞ்சம் கூட கோபம் இல்ல. ஜார்ஜ் உன் காதலனுக்கு செய்த தீங்கிற்கு தான் அந்த மாதிரி செய்தாய். ஜார்ஜ் கண்டிப்பாக இதற்கு மேல் உங்க ரெண்டு பேர் வாழ்க்கையில் குறுக்கே வர மாட்டான்" என்று உறுதி அளித்துவிட்டு சென்றார்.

"டேய் யாருடா ஷன்மதி" சஞ்சனா கேட்க,

"அது கமிஷனரோட மூத்த பொண்ணு சஞ்சனா"

"எவ்வளவு வயசு இருக்கும்.?"

"ஏறக்குறைய உன் வயசு தான் இருக்கும்..? ஏன் இப்போ இந்த கேள்வி எல்லாம் கேட்கிற,"

"எல்லாம் காரணமாக தான், அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டதா?"

"இல்ல, என்ன விசயம் சஞ்சனா,"

"அப்போ என்னையும் கமிஷனர் வீட்டுக்கு கூட்டி போ,.."

"என்னை சந்தேகபடுகிறீயா சஞ்சனா,"

"உன்மேல எல்லாம் எனக்கு சந்தேகம் இல்ல. ஆனா அவ மேல இருக்கு. எவ கண்ணும் என் ராஜா மேல படக்கூடாது. உனக்கு ஆல்ரெடி ஆள் இருக்குனு அவளுக்கு தெரியனும் அதுக்கு தான். என்னையும் கூட்டி போ."

"சரி, ஒரு மணிக்கு ரெடியா இரு."

திடீரென சஞ்சனா காலுக்கு அடியில் இருந்து சத்தம் கேட்டது.
வாசு தான் சஞ்சனா காலில் விழுந்து இருந்தான்.

வாசு: "டேய் ராஜா, சிஸ்டர் கிட்ட சொல்லி என்னை மன்னிக்க சொல்லுடா"

ராஜா: "டேய் வாசு முதலில் எந்திரிடா, நடு ரோட்டில் போய் காலில் விழுந்துக்கிட்டு"

வாசு: "ம்ஹீம் சிஸ்டர் மன்னிச்சேன் என்று சொன்னால் தான் நான் எழுவேன்."

ராஜேஷ்: "அடேய் வாசு, இது தான் உன் விஸ்வரூபமடா"

சஞ்சனா: அய்யோ அண்ணா முதலில் எழுந்திருங்க, நீங்க என்ன தப்பு பண்ணீங்க..

வாசு: "அதுவா சிஸ்டர், அப்பப்ப கொஞ்சம் கைமாத்தா ராஜாகிட்ட கொஞ்சம் காசு வாங்குவேன். அப்புறம் இந்த டீ, பன்னுக்கெல்லாம் நான் காசே கொடுத்ததில்ல"

ராஜா: "டேய் வாசு நீ முதலில் எந்திரி, நான் இருக்கும் போது உன்னை அவ எதுனா பண்ண விடுவேனா?"

வாசு: "ஆமா, இவர் இருக்கும் போது தான் ஜார்ஜ்ஜை போலீசில் மாட்டி விட்டுச்சு உன் லவ்வர். அக்கா சஞ்சனா அக்கா நீ சொல்லு, அப்போ தான் நான் எந்திரிப்பேன்."

சஞ்சனா: "சரி நான் எதுவும் மாட்டி விடமாட்டேன், எழுந்திருங்க,"

வாசு: "அப்பாடா இப்போ தான் நிம்மதியா இருக்கு, ராஜா நான் உன்கிட்ட வாங்கி சாப்பிடதெல்லாம் கந்து வட்டிக்காச்சு கடன் வாங்கி திருப்பி கொடுத்துடுறேன். நான் கொடுத்துட்டேன்னு மட்டும் சிஸ்டர் கிட்ட சொன்னால் போதும்."

சஞ்சனா: "அய்யோ அண்ணா, நான் ஏன் உங்களை மாட்டி விட போறேன். சரி எனக்கு நேரமாச்சு நான் வரேன். அப்புறம் உங்களுக்கு எல்லாம் போலீஸ் தேவை இல்ல, நானே போதும்.." என்று சிரித்து கொண்டே கிளம்பினாள்.

வாசு: "அப்புறம் ராஜா,அப்படியே ரெண்டு சமோசா சொல்றது".வாசு ராஜா தோளில் போட்டு கேட்க

ராஜா: "சஞ்சனா" என்று கூப்பிட்டான்.

உடனே வாசு "யப்பா சாமி உன் சகவாசமே வேண்டாம்" என்று கிளம்ப, ராஜாவும் சிரித்து கொண்டே, "வாடா வா எடுத்து சாப்பிடு" என்றான் சிரித்தபடி.


தொடரும்...

Comments

  1. சூப்பர் போண்டாசடிக் 👌👌👌👌

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நேத்து ராத்திரி... யம்மா!

கொழு கொழு அண்ணி

மாலை மங்கும் நேரம் 1