காதல் சுகமானது 27
written by raja
"சரிடா, நீ என் கூட இருப்பனு நினைச்சு தான் நான் லீவு போட்டேன். இப்போ தான் அது நடக்கலயே, நான் போய் ஒர்க்-அ பாக்குறேன். ஆனா நாளைக்கு நான் உன்னை ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போகனும் வர்றியா?"
"எங்க சஞ்சனா?"
"நாளைக்கு என் அம்மா நினைவு நாள், நான் பிறந்து வளர்ந்த இடம் திருமழிசை பக்கம் ஒரு கிராமம். அங்க நான் வளர்ந்த வீடு இன்னும் என் பெயரில் தான் இருக்கு. அந்த வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரலாமா?"
ராஜாவிற்கு இவளுடன் தனியாக இருக்க நேர்ந்தால் மறுபடியும் கூடல் நிகழ்ந்து விரதம் கலைந்து அதனால் அவள் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயம். ஆனாலும் அவள் அம்மா நினைவு நாள் என்று கூறும் போது அவனால் மறுக்க முடியவில்லை.
ராஜா அவள் கைபிடித்து, "சரி எத்தனை மணிக்கு போகலாம் சொல்லு, லீவு போடனும்னா கூட போட்டுக்கலாம்" என்றான்.
"வேண்டாம் ராஜா, நான் காலையில் 6 மணிக்கெல்லாம் டான்னு உன் ரூமுக்கு வந்து விடுகிறேன். அங்கிருந்து நாம ரெண்டு பேரும் ஒரே பைக்கில் போலாம். போய் கொஞ்ச நேரம் அங்க இருந்து விட்டு கிளம்பினோம் என்றால் எப்படியும் பத்து மணிக்கு வேலைக்கு வந்து விடலாம்.. ஓகேவா?"
"நல்லா தான் பிளான் போடற சஞ்சனா, சரி நான் நாளைக்கு காலையில் ரெடியா இருக்கேன்."
அடுத்த நாள் காலை..,
சொன்னது போலவே சஞ்சனா 6 மணிக்கு வந்து விட்டாள். ராஜாவும் இப்பொழுது மகா மிருத்யுஞ்சய மந்திரம் படிக்க சீக்கிரமே எழுந்து விடுவதால் ஏற்கனவே கிளம்பி தயாராக இருந்தான். இருவரும் அவனுடைய பைக்கில் திருமழிசை தாண்டி செல்லும் போது இயற்கை எழில் காட்சிகள் அவர்களை ரம்மியமான புது சூழலுக்கு வரவேற்றது. சுத்தமான தென்றல் காற்றை சுவாசித்து கொண்டே சஞ்சனா தன் இனியவனுக்கு உற்சாகமாக வழி காட்டி கொண்டே வந்தாள்.
வண்டி தார் சாலையில் இருந்து மண் சாலைக்குள் பயணிக்க, வழியில் ஒரு கடையில் நிறுத்தி பூ வாங்கிக் கொண்டனர். பின் ஒரு இடத்தில் வண்டியை விட்டுவிட்டு, அவனை ஒரு வயல்காட்டு வரப்பில் கூட்டி சென்றாள்.
"எங்க சஞ்சனா கூட்டி போற, சுற்றிலும் வயல்வெளியா இருக்கு, வீடே காணோம்."
"அதோ அங்க ஒரு ஒட்டு வீடு தெரியுது பாரு, அது தான் என்னோட வீடு"
அழகான ஒரு சின்ன ஓட்டு வீடு. சஞ்சனா அங்கேயே ஓரிடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்தாள். உள்ளே வீடு கூட்டி பெருக்கி சுத்தமாக இருந்தது.
"சஞ்சனா, இங்க வீட்டில் யாரும் இல்லைனு சொன்ன, ஆனா வீடு சுத்தமா இருக்கு?"
"இது என் அம்மா வாழ்ந்த வீடு. என்னை வளர்த்த வீடு, இது எனக்கு கோவில் மாதிரி. அதனால் தினமும் சுத்தம் செய்ய ஒரு அம்மாவை வேலைக்கு வைத்து உள்ளேன்."
ராஜாவுக்கு அவள் வீட்டை சுற்றி காட்டினாள். அவள் ஓடியாடி விளையாடிய இடங்களை எல்லாம் சொல்லி சொல்லி காண்பித்தாள்.
"ராஜா என் கூட வாயேன், ஒரு முக்கியமான இடத்திற்கு கூட்டி போறேன்" என சின்ன குழந்தை ஆசையோடு கூட்டி செல்வது போல் அவனை கூட்டி சென்றாள்.
வீட்டின் பின்பக்கம் ஒரு சமாதி இருந்தது. அதன் அருகே சென்ற சஞ்சனா, "ராஜா எங்க அம்மாவை இங்கதான் புதைத்து இருக்கோம்" என்று கண்ணீருடன் சொல்ல, ராஜா அவளை அணைத்து தேற்றினான்.

சமாதியை சுத்தம் செய்து, பூ போட்டு இருவரும், தரையில் விழுந்து வணங்கினர். அப்பொழுது காற்று தென்றலாய் வீச, பூவரச மர பூக்கள் அவர்கள் மேல் விழுந்தது. அவள் அம்மா தான் ஆசிர்வாதம் செய்கிறார்கள் என அவர்களுக்கு நன்றாக தெரிந்தது.
மீண்டும் வீட்டுக்குள் சென்று, சஞ்சனா அவன் மடியில் படுத்து கொண்டு "ராஜா எங்க அம்மாவோடு கூட பிறந்தவங்க நாலு அண்ணன்கள், எங்க அம்மா தான் கடைசி. ஊரிலேயே நல்ல வசதியான குடும்பம். இப்போ இந்த வீட்டை சுற்றி இருக்கிற நிலங்கள் எல்லாம் என் அம்மா கூட பிறந்தவங்களுக்கு தான் சொந்தம். என் அம்மா என் அப்பாவை காதலித்து வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கட்டாங்க. என் அப்பா வேறு சாதி என்பதால் ரெண்டு பேர் வீட்டுலயும் சேர்த்துக்கல. என் தாத்தா, பாட்டி தான் இறக்கப்பட்டு இந்த வீட்டை ஒதுக்கி தந்தாங்க. நான் இங்கதான் பிறந்தேன், வளர்ந்தேன். என் அம்மா ஒரு கட்டத்தில் உடம்பு சரி இல்லாம இறந்துட்டாங்க. நான் இப்ப ஓரளவு படித்து இருக்கேன் என்றால் அதுக்கு காரணம் என் தாத்தா பாட்டி தான். அவங்க தான் என்னை வளர்த்து ஆளாக்கினாங்க. என் அம்மா கூட பிறந்தவங்க, என்னை சீண்ட கூட மாட்டாங்க. ஒரு கட்டத்தில் என் தாத்தா, பாட்டிக்கும் உடம்பு மோசமாகும் போது சொத்தில் ஒரு பகுதி எனக்கு கொடுக்க ஆசைப்பட்டாங்க. அதுக்கு என் மாமாக்கள் யாருமே ஒத்துக்கல. அப்புறம் நான் எனக்கு சொத்து எதுவும் வேண்டாம், என் அம்மா என்னை வளர்த்த வீடு மட்டும் எனக்கு கொடுத்துடுங்கனு கெஞ்சினேன். அதை மட்டும் ஒப்பு கொண்டு கொடுத்து இருக்காங்க. இப்போ இதை கூட விற்க சொல்லி என் அப்பா என்னை வற்புறுத்தி கொண்டே இருக்காரு. நான் எப்போதாவது இங்கே வந்து படுத்தால் என் அம்மா மடியிலயே படுத்த மாதிரி இருக்கும். அதனால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இதை விற்கவில்லை. இந்த உலகத்துல எனக்கென்று யாருமே இல்லைனு எனக்கு அடிக்கடி தோணும், உண்ணதவிர" என அவன் மடியில் விசும்பி விசும்பி அழுதாள்.
ராஜா அவள் தலையை வருடி அன்பாய் நெத்தியில் முத்தமிட்டான்.
"ராஜா இப்போ தான் என் மனசு லேசான மாதிரி இருக்குது. என் அம்மா மடியில் படுத்த மாதிரியே இருக்குடா. இப்படியே என் உயிர் போனாலும்.."
"வாயை மூடு சஞ்சனா என்ன வார்த்தை பேசறே, நீ இல்லாத உலகத்தில் நான் மட்டும் இருப்பேன்னு நினைச்சியா?"
"அய்யோ சாரி சாரிடா, ஏதோ உணர்ச்சி வசத்தில் பேசிட்டேன். அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு போக மாட்டேன் கவளபடாத போதுமா?" என்று அவள் தன் கண்ணை துடைத்து கொண்டு சிரிக்க,
"சஞ்சனா உன்னோட இந்த சிரிப்பு போதும் எனக்கு, என் எல்லா கவலையும் மறந்து விடும். எப்பவும் நீ இதே மாதிரி சிரித்து கொண்டே இருந்தால் போதும்டி"
அங்கு இருவருக்கு இடையே நெருக்கம் இருந்தாலும் காமத்தை விட அன்பே மேலோங்கி இருந்தது.
"இந்த வீட்டுக்கு நாம அடிக்கடி வரணும் ராஜா"
"கண்டிப்பாக வருவோம் செல்லம்"

நிறைவான மனதுடன் இருவரும் கிளம்பி சென்னை வரும் பொழுது, ராஜாவிற்கு டெக்னீஷியன் வேலு ஃபோன் செய்தான்.
"அண்ணே உங்க கஸ்டமர் இன்ஸ்டாலேஷன் வந்தோம், இங்க இந்த ஏரியா கவுன்சிலர் எங்களை பிடித்து வைத்து கொண்டு கலாட்டா பண்றார். அடிக்கிறாங்க அண்ணா, ஆபீஸுக்கும் தெரிவித்துவிட்டோம், இன்னும் எந்த தகவலும் இல்ல, கொஞ்சம் நீங்க வர முடியுமா?" என்று கேட்டான்.
"என்னடா சொல்ற! கவலைபடாத நான் ஒரு அரை மணிநேரத்தில் வந்து விடுகிறேன்." என போனை வைத்தான்.
"சஞ்சனா நீ cab புக் பண்ணி போ, நான் கொஞ்சம் அவசரமாக ஒரு இடத்திற்கு போகனும்"
சஞ்சனா ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதை உணர்ந்து "ம்ஹீம், நான் போக மாட்டேன். நான் உன் கூட தான் வருவேன்" என்றாள்.
"இல்ல சஞ்சனா போற இடத்தில் பிரச்சினை ஏதோ இருக்கு, நீ வர வேணாம்"
"பிரச்சனை இருக்குனா நீயும் போகாத ராஜா பிளீஸ்"
"ஆம்பளைங்க நாங்க ஏதாவது பண்ணி சமாளித்து விடுவோம். நீ பொண்ணு அதனால தான் சொல்றேன்"
"ராஜா ஒன்னு போறதா இருந்தால் என்னையும் கூட கூட்டிட்டு போ, இல்லை என்றால் நீயும் போகாதே"
"சரி வா உட்காரு. சீக்கிரம் போகனும்."
குறிப்பிட்ட இடம் வந்தவுடன் ராஜா பைக்கை நிறுத்தி, "சஞ்சனா நீ இங்கயே நில்லு, உள்ள வராத. நான் மட்டும் போய்ட்டு வந்துடறேன்." என்றான்.
உள்ளே கவுன்சிலர் அவனது அடியாட்களுடன் ராஜாவின் கம்பனி ஆட்களை சிறைப்படுத்தி வைத்து இருந்தான். போதாக்குறைக்கு அவர்களை அடித்து காயப்படுத்தி இருந்தான்.
"வாடா பொறம்போக்கு, நீதான் இந்த ஏரியா சேல்ஸ் மேனா? இங்க கம்பம் நடுவதற்கு உனக்கு யாருடா பெர்மிஷன் கொடுத்தது?"
ராஜா தன்மையாகவே பேசினான்.

"சார் நாங்க முறையாக சென்னை மாநகராட்சியில் பணம் கட்டி அனுமதி வாங்கி தான் இங்க கம்பம் நட்டு கேபிள் ஒட்டுகிறோம்"
"மாநகராட்சியில் அனுமதி வாங்கிட்டா போதுமா, மாநகராட்சி உறுப்பினர்கிட்ட அனுமதி வாங்க வேணாமா? எனக்கு வர வேண்டிய கமிஷன் வராமல் இங்கு இருந்து எவனும் நகர முடியாது. ஆமா யாரு அந்த பொண்ணு, செம்ம ஜிகிடியா இருக்கு. யப்பா என்ன கலரு.. அள்ளுதே, என்ன ஷேப், உன் லவ்வராடா?"

ராஜாவுக்கு சுல்லென்று கோவம் தலைக்கு ஏறியது.
"அவ நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க"
"உனக்கு இப்படி ஒரு வாழ்க்கையாடா, வாழ்வு தான். சரி நீ கல்யாணம் பண்ணிட்டு காலம் முழுக்க அவளோட வாழ்ந்துக்க, ஆனா இன்னிக்கு ஒரு நாள் அவ எனக்கு பொண்டாட்டியா இருக்கட்டும். அது தான் உனக்கு தண்டனை. டேய் போய் அவளை தூக்கிட்டு வாங்கடா" என கவுன்சிலர் தன் அடியாட்களை பார்த்து கூறினான்.
"அவ மேல எவன் சுண்டு விரலாவது பட்டுச்சு, இன்னிக்கு அவன் உயிரோடவே இருக்க மாட்டான்"
"டேய் சுருளி, போடா இவன் கண் முன்னாடியே அவளை வச்சி அனுபவிக்கனும்,என்ன பண்றான்னு பார்ப்போம்."
சுருளி முன்னே போக, ராஜா அவன் காலிலேயே எட்டி உதைத்தான். உதைத்த வேகத்தில் சுருளியின் கால் எலும்பு முறிய அங்கேயே ராஜா காலடியில் விழுந்தான். ராஜா ஷூ காலால் அவன் பின்தலையை தரையோடு வைத்து வெறியோடு அழுத்த சுருளி வலி தாங்காமல் கதறினான்.
அடுத்து மேலும் கவுன்சிலரின் நான்கு அடியாட்கள் கையில் ஆயுதங்களுடன் ராஜாவை சூழ்ந்து கொண்டனர்.
சஞ்சனா பதறி ஓடி வர, ராஜா உடனே "சஞ்சனா அங்கேயே நில்லு.கிட்ட வராத" என்றான்.
நால்வரும் ராஜாவை தாக்க வர, அங்கு டெக்னீஷியன் வைத்திருந்த கேபிள் ரோலை மின்னலென தாவி எடுத்து, அதை கேடயமாக பயன்படுத்தி அவர்களுடன் அனாசயமாக சண்டை போட்டான். சக்கரம் போல கேபிள் ரோலை வெட்ட வந்தவர்களின் ஆயுதங்களில் இருந்து தற்காத்துக் கொண்டு, பின் கேபிளை சவுக்கு போல் சுழற்றி சுரீர் சுரீர் என்று அடிக்க ஒவ்வொருவரும் அடி தாங்காமல் கதறினர். அதை பார்த்து சஞ்சனா விசில் அடித்து ரசித்தாள். ராஜாவின் பலமே மின்னல் போல வேகமாக செயல்படுவது தான். அவன் கையும் காலும் மின்னல் போல் செயல்பட்டு சிலம்பாட்டம் போல் கேபிள் மூலம் சுற்றி இருந்த ஆட்களை வெளுக்க வலி தாங்க முடியாமல் ஒவ்வொருவராக சிதறி ஓடினர். வேடிக்கை பார்த்த மக்கள் அனைவரும் கைதட்டி ராஜாவை உற்சாகப்படுத்தினர். ஏரியாவில் தன் மீது உள்ள பயம் மக்களிடம் குறைவதை கண்டு கவுன்சிலர் கோபத்தில் தானே அரிவாளை எடுத்து கொண்டு, சண்டை போட்டு கொண்டு இருக்கும் ராஜாவின் கழுத்தை வெட்ட பின்புறமாக செல்ல, அதை பார்த்த சஞ்சனா நொடியும் தாமதிக்காமல் அவனை தடுக்க ஓடிவந்தாள்.

ராஜாவின் கழுத்தை வெட்ட கவுன்சிலர் கையை ஒங்க, "அம்மா............." என சஞ்சனாவின் அலறல் சத்தம் கேட்டது.
தொடரும்...
தொடரும்...
Raja sir சஸ்போன்ஸ் வைக்காதிங்க அடுத்த பகத்தை உடனே அனுப்புங்க ப்ளீஸ்
ReplyDeleteporumai nanba thinamum pathividuvar
Deleteஅட நம்ம கதைல பக்தியும், ஆக்சனும் அதிகமா இருக்கே.... காதல் கம்மியா இருக்கு..... இப்படியே போனா நல்லாதான்யா இருக்கு....
ReplyDeletenandri nanba
Delete