காதல் சுகமானது 31
written by raja
வாசு சோர்ந்து போய், "சஞ்சனா நல்லா தெரியுமா உனக்கு, ராஜா இங்கே தான் வந்தானா?" என்றான்.
"டேய், அவன் இங்கதான்டா இருக்கான். ராஜாவின் வீடியோ கூட வலைத்தளத்தில் பார்த்தேன். அது காசியில் எடுக்கப்பட்ட வீடியோ தான். அவன் இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டால் போதும் அவன் உடலில் இருந்து வெளிப்படும் அலைகள் என் உடலில் மோதி அலாரம் போல் அவன் இருக்கும் இடத்தை உணர்த்தி விடும். ஆனா என்ன ஒரு பிரச்சினை என்றால் நான் அவனை நெருங்கினாலும் அவனுக்கும் இதேபோல் அலாரம் அடித்து ஒளிந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம்."
"எப்படி, அன்னிக்கு டீக்கடையில் கண்டுபிடிச்சியே அப்படியா?"
"ஆமாண்டா, எங்க ரெண்டு பேருக்குள் ஒரு wave length ஓடிட்டு இருக்கு, அதை வைத்து எங்களால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் இருக்கும் பொழுது ஒருவரையொருவர் உணர முடியும். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட தூரம் வரை தான். எப்படி நாய் தன் மோப்ப சக்தியால் தன் எஜமானரை அடையாளம் சரியாக காண்கிறது அது போல தான் இதுவும்."
"என்னன்னவோ சொல்ற இதெல்லாம் நம்புனா தான் சோறு வாங்கி தருவ சரி நம்புறேன். ஆனா நான்லாம் என் பொண்டாட்டி பின்னாடி இருப்பது கூட தெரியாம டிவியில் பலான பாட்டு எல்லாம் பார்த்து ஜொள்ளு விட்டு தர்ம அடி வாங்கி இருக்கேன். இந்த மாதிரி சக்தி எல்லாம் எனக்கு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்."
"அது எல்லார்கிட்டேயும் தான் இருக்கு, அதுக்கு மனச ஒருமுக படுத்தனும். ராஜாவின் வாசம் எனக்கு அத்துபடி. அவன் பயன்படுத்திய துணி மற்ற துணியில் கலந்து இருந்தாலும் வாசத்தை வைத்தே, அவன் பயன்படுத்திய துணி எது என என்னால் சரியாக கூற முடியும்.."
"பேசாம உன்னை போலீசில் நாயா சேர்க்க வேண்டியது தான் சஞ்சனா."
"டேய்.. நீ உதை வாங்க போற..?"
"ரெண்டு பேரும் என்னைய விட்டுட்டு வந்துட்டீங்கள்ல?" என்ற குரல் கேட்டு திரும்பினர். அங்கு ராஜேஷ் இருந்தான்.
"அண்ணா, நீங்க எப்போ வந்தீங்க?" சஞ்சனா ஆச்சரிப்பட்டு கேட்க,
"நீங்க வந்த ரயிலில் தான் நானும் வந்தேன். ஏன் சஞ்சனா, அவனை கூட்டி போக தெரிந்த உனக்கு, என்னை கூப்பிட வேண்டும்னு தோணவே இல்லையா?"
"இல்லனா, எப்படியும் நாலைந்து நாளாவது ஆகும். ஏற்கனவே உங்க மனைவியுடன் சண்டைனு கேள்விப்பட்டேன். பாவம் நீங்களே கஷ்டத்தில் இருக்கீங்க. அதனால் தான் உங்கள கூப்பிடல."
"சஞ்சனா, எனக்கும் என் மனைவிக்கும் இருக்கிற பிரச்சினை எப்பவுமே இருப்பது தான். அதுக்காக என் நண்பன் ராஜாவை விட்டு விட முடியுமா?"
"என்னை மன்னிச்சிடு அண்ணா, சரி வாங்க போய் ராஜாவை தேடலாம்."
"இங்க பாரு சஞ்சனா, நேரம் ஆச்சு. இப்போ போய் தேட முடியாது. நான் நகரத்தார் தங்கும் விடுதியில் ரூம் புக் பண்ணி இருக்கேன். நானும்,வாசுவும் ஒரு ரூமில் தங்கி கொள்கிறோம். நீ ஒரு ரூமில் தங்கிக்கோ. விடியற்காலையில் இங்க கங்கா ஆர்த்தி விசேஷம். நிறைய பேர் ஒன்றாக கூடும் நேரம் அது. கண்டிப்பாக ராஜா அந்த நேரத்தில் அங்கே வருவான். நாம அந்த நேரத்தில் அவனை எளிதாக கண்டு பிடிக்க முடியும்.."
சஞ்சனா கண்கள் ஒளிர "சூப்பர்பா, இந்த ஐடியா எப்படி வந்துச்சு உங்களுக்கு." என கேட்டாள்.
"எப்பவுமே ஒரு சுற்றுலா இடத்திற்கோ, இல்லை வழிபாட்டு இடத்திற்கோ வரும் பொழுது அங்கே என்ன ஸ்பெஷல் என்று தெரிந்து கொண்டு தான் எல்லோரும் போவார்கள். அதுக்கு ராஜாவும் விதிவிலக்கல்ல. என்ன கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனா கண்டுபிடித்து விடலாம். வா இப்போ போய் ரெஸ்ட் எடுப்போம்.."
அதே நேரத்தில் இவர்கள் யாரும் எதிர்பார்க்காத ஒரு இடத்தில் ராஜா நின்று கொண்டு இருந்தான். அது மணிகர்னிகா. தொடர்ந்து பிணங்கள் எரியும் இடம். உலகின் மிகப்பெரிய சுடுகாடு. காசியில் இறந்தால் முக்தி, காசியில் இறப்பவர்களை தவிர்த்து மற்ற ஊர்களில் இறப்பவர்கள் உடலை கூட இங்கு வந்து பிணங்களை எரி இடுவார்கள். அதனால் இங்கு பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். ராஜாவிற்கு இதை பார்த்து கொஞ்சம் கூட பயம் இல்லை. ஒரு வேளை மரணம் சம்பவிக்கும் எனில் அவனுக்கு இங்கு இறக்க விருப்பம் இல்லை. சஞ்சனா மடியில் தான் உயிரை விட வேண்டும் என அவனுக்கு ஆசையாக இருந்தது.
இன்னும் பொழுது விடியவில்லை. ஆனால் கங்கை நதி ஓரம் கூட்டம் அலை மோதி கொண்டு இருக்க காரணம் கங்கா ஆர்த்தி காண.
சஞ்சனா, ராஜேஷ், வாசு மூவரும் இருக்கும் கூட்டத்தை சல்லடை போட்டு அலசி கொண்டு இருந்தனர்.
வாசு இருக்கும் கூட்டத்தை பார்த்து வாயை பிளந்து "டேய் ராஜேஷ், என்னடா இது இவ்வளவு கூட்டம்? இதில் எப்படி ராஜாவை கண்டுபிடிப்பது?" என்றான்.
வாசு இருக்கும் கூட்டத்தை பார்த்து வாயை பிளந்து "டேய் ராஜேஷ், என்னடா இது இவ்வளவு கூட்டம்? இதில் எப்படி ராஜாவை கண்டுபிடிப்பது?" என்றான்.
அப்பொழுது, ஒரு மிகப்பெரிய சாமியார் கூட்டம் எதிரில் வந்தது.
சஞ்சனா உடனே, "வாசு அமைதியா இரு. ராஜா இங்க தான் இருக்கான். அவன் எனக்கு மிக அருகில் இருப்பது போல் தோணுது." என்றாள்.
"டேய் வாசு இந்த கூட்டத்தில் ஒருத்தரை விடாத, ஆளுக்கு ஒரு பக்கம் தேடலாம். கமான் சீக்கிரம்" ராஜேஷ் கத்தினான்..
கூட்டத்தில் புகுந்து தேடும் போது, சஞ்சனா மொபைல் கீழே தவறி விழ, அதை ஒரு பெரியவர் எடுத்தார். மொபைல் ஸ்கிரீனில் ராஜாவும், சஞ்சனாவும் இருக்கும் படத்தை அவர் உற்று பார்ப்பதை பார்த்து, சஞ்சனா அவரிடம் "ஐயா இவரை உங்களுக்கு தெரியுமா?" என இந்தியில் கேட்டாள்.
"நீ தமிழிலேயே பேசும்மா, நான் தமிழ் தான். இவனை எதுக்கு நீங்க தேடறீங்க?"
ராஜேஷும், வாசுவும் தேடி விட்டு சஞ்சனாவிடம் வந்து விட்டனர். அவர் மூவரையும் நோட்டம் விட்டார்.
"ஐயா, இவன் என்னோட ராஜா. இவனை தேடி தான் வந்தேன். இவன் இப்போ இங்கே தான் இருந்தான். ஆனா இப்போ காணல."
அவர் ஆச்சரியப்பட்டு, "அவன் இங்கே வரவே இல்லயே" என கூற
"இல்ல ஐயா கண்டிப்பாக இப்போ தான் வந்தான். என் உள்ளுணர்வு சொல்லுச்சு"
அவர் கலகலவென சிரித்தார். "அதே உள்ளுணர்வு அவனுக்கு சொல்லி தான் உங்க கிட்ட இருந்து தப்பிக்க அவன் ஒரே ஓட்டம் ஒடிட்டான்."
சஞ்சனாவிற்கு அவன் இருக்கும் இடம் இவருக்கு தெரியும் என புரிந்து விட்டது.
"சரிங்க ஐயா, பரவாயில்லை. அவன் இருக்கும் இடம் மட்டும் சொல்லுங்க. நாங்க போய் பார்க்கிறோம்."
"அது சொல்ல முடியாத விசயம்மா, அவன் சில நாட்கள் இவ்வுலகில் இருந்து மறைந்து கொள்ள இங்கே வந்து இருக்கிறான். நீங்கள் திரும்பி ஊருக்கு செல்லுங்கள். இன்னும் சில நாட்களில் அவன் உங்கள் ஊருக்கு வந்து சேர்வான். இங்கே வந்து உரிமை கொண்டாடி அவனை சங்கடப்பட வைக்காதீர்கள்."
சஞ்சனா கோபம் அடைந்தாள்.
"ஐயா, அவன் என்னில் பாதி அவன். என்கிட்டேந்து அவன் ஒளிய முடியாது. ஒளிய கூடாது. ஒழுங்கா அவன் இருக்கும் இடத்தை உடனே எனக்கு காண்பித்து விடுங்கள். இல்லையேல் இங்கு நடப்பதே வேறு"
ராஜேஷும், வாசுவும் திரு திருவென முழிக்க, பெரியவர் அவள் பேச்சை கேட்டு அதிர்ந்தார்.
"சரி வாம்மா, அவன் தங்கி இருக்கும் இடத்திற்கு கூட்டி போகிறேன்.."
அனைவரும் மடத்திற்கு சென்று பார்க்க, ராஜாவின் பை அங்கே இல்லை. மாறாக ஒரு லெட்டர் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது. அதை சஞ்சனா எடுத்து படித்தாள்.
அதில் "சஞ்சனா இங்கயும் நீ என்னை தேடி வருவாய் என நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இன்னும் 3 அல்லது நான்கு நாட்களில் நானே உன்னை தேடி ஓடோடி வருவேன். இப்பொழுது நீ ஊருக்கு திரும்பி சென்று எனக்காக காத்திரு. கண்டிப்பாக உன்னை காண வருவேன்.." என்று இருந்தது.
"இன்னும் என்னம்மா? அவன் தான் தெளிவா சொல்லி இருக்கானே..! இன்னும் மூன்று நாளில் வந்து விடுவதாக. நீங்க ரயிலில் ஊருக்கு போய் சேரவே 2 நாள் ஆகி விடும். அப்புறம் என்ன ஒரே நாள் தான். வந்து விடுவான் போங்க."
"ஐயா அவன் தனியா இங்கே கஷ்டப்படும் பொழுது, அவன் கூட இல்லாமல் நான் ஊரில் இருப்பது நன்றாக படவில்லை. அவனுடைய கஷ்டத்தில் நான் உடன் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்."
"இங்க பாரும்மா, அவன் இங்கே கஷ்டம் எல்லாம் படல. இப்போ எனக்கு தான் கஷ்டம் உன்னால. எனக்கு ஒரு மகன் மாதிரி கூட இருந்தான். என்னோட தனிமையை போக்கி ரொம்ப ஆதரவாக இருந்தான். இப்போ உன்னால என்ன விட்டுட்டு போய்ட்டான். இன்னும் சொல்ல போனால் என்னை அவனுடன் வந்து தங்க சொல்லி சென்னைக்கு கூப்பிட்டான். நான் தான் முடியாது என மறுத்திட்டேன். உங்க ரெண்டு பேர் கல்யாணம் நடப்பது உறுதி.உங்க கல்யாணத்திற்கு என்னை கூப்பிட மறக்காதீங்க. நான் கண்டிப்பாக வரேன்."
"சரிங்க அய்யா", என்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள் சஞ்சனா.
ராஜா வழியில் வந்த பஸ்சை நிறுத்தினான். அது எந்த ஊர் எதையும் பார்க்காமல் ஏறி விட்டான். அது ஹரித்துவார் செல்லும் பேருந்து..
"சஞ்சனா இப்போ என்ன பண்ணலாம்?" ராஜேஷ் கேட்க,
"வேறு வழிஇல்லை. என் புருஷனே சொல்லிட்டான். அவன் பேச்சை என்னால் மீற முடியாது. சாயங்காலம் ரயிலில் கிளம்ப வேண்டியது தான்." என்றாள்.
வாசு அதிர்ந்து "என்னது ரயிலா? விமானத்தில் கூட்டி போவதாக தானே சொன்ன சஞ்சனா?" என்றான்.
"ஆமா என் ராஜா கூட வருவதாக இருந்தால் விமானத்தில் கூட்டி போவதாக சொன்னேன். ஆனால் அவன் தான் இல்லயே. அதுவும் இல்லாம விமானத்தில் சென்றால் சீக்கிரம் போய் சேர்ந்து விடுவோம். அப்புறம் 3 நாள் நான் அவனை நினைத்து ஏங்க வேண்டி இருக்கும். ஆனால் ரயில் என்றால் போய் சேரவே 2 நாளாகி விடும். அப்புறம் ஒரே நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவேன்.. கண்டிப்பாக நாம எல்லோரும் அடுத்த மாதமே கேங்டாக் டூர் மாறி போலாம். அப்போ உன்னை விமானத்தில் கூட்டி போறேன் சரியா?"
சரி என வாசு ஒப்பு கொண்டான்.
60 நாட்கள் விரதம் முடிந்து, ராஜா தன் விந்தணுவை கை அடித்து வெளியே எடுத்து கங்கையில் விட்டு வேண்டுதலை முடித்தான்..
"கங்கை தாயே, என்னோட உயிர் அணுக்களை ஏற்று கொள். உன்னில் விடப்படும் சடலங்களை நீ ஏற்று கொண்டு அவர்களுக்கு முக்தி அளிப்பதாக ஐதீகம். அதே போல் இந்த உயிர் அணுக்களில் இருப்பது நான் தான். என்னை தேடி வரும் காலன் கண்டிப்பாக இந்த உயிர் அணுவை உன்னிடம் கேட்பான். இதை அவனிடம் சேர்ப்பித்து விடு தாயே" என வேண்டி கொண்டான்.
சஞ்சனா காலையில் விழித்து எழும் பொழுது அவளுக்கு அடி வயிற்றை புரட்டி வாந்தி வாந்தியாக வந்தது. தலை வேறு வலித்ததால் சூடாக ஒரு கிரீன் டீ போட்டு சாப்பிட்டாள். அப்பொழுது தான் நாள் தள்ளி போய் இருப்பதை உணர்ந்தாள். உடனே ஓடி போய் preganacy kit வாங்கி வந்து டெஸ்ட் செய்ய அது அவள் preganant என ரிசல்ட் வந்தது. சந்தோஷத்தில் அவள் முகம் மலர்ந்தது. 'ராஜா இன்று தானே வருவதாக கூறினான். எத்தனை மணிக்கு வருவான் என தெரியவில்லையே. முதலில் இந்த சந்தோஷமான விசயத்தை அவனிடம் தானே கூற வேண்டும்' என பரபரத்தாள்.
விமானம் தன் சிறகுகளை விரித்து கொண்டு சென்னை வந்து இறங்கியது. அதில் இருந்து ராஜா உதிர்ந்தான். சென்னை வந்தவுடன் ராஜா தன் வண்டியில் இருந்து மொபைலை எடுத்து ஆன் செய்ய, அவனை தொடர்பு கொண்டவர்கள் அனைவருக்கும் ஒரு அலர்ட் மெஸேஜ் போனது..
"Dear Customer, +9172******* is now available to take calls."
அதை பார்த்து, இருவர் முகம் மலர்ந்து உடனே ராஜாவிற்கு ஃபோன் செய்தனர். ஒருவர் சஞ்சனா, மற்றொருவர் ஷன்மதி. அதிர்ஷ்டம் ஷன்மதிக்கே. அவள் ராஜாவிடம் பேசி முடித்து விட்டு வேறு ஒரு நம்பருக்கு ஃபோன் செய்தாள்.
"ஜார்ஜ் ரெடியா" என்று அவள் கேட்க,
அவன் "நான் மாம்பழத்தை ருசிக்க எப்பவோ ரெடி" என சிரித்தான்.
சஞ்சனா ராஜா மொபைலுக்கு தொடர்ந்து ஃபோன் செய்ய, அது எடுக்கப்படவே இல்லை. ஆனால் சஞ்சனா மொபைலுக்கு ஒரு இன்கமிங் கால் வந்தது. அது ஷன்மதியிடம் இருந்து..
ராஜா மற்றும் சஞ்சனாவை பிரிக்க, ஷன்மதி ஜார்ஜ் உடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டி இருந்தாள்.
தொடரும்...
கதை செம சூப்பர் செம சஸ்பென்ஸ்
ReplyDeletenandri nanba thodarnthu padinga thodarnthu comment panunga
DeleteOk நண்பா மாற்ற கதைகள் காமம் மட்டுமே ஆனால் இந்த கதை காதல் கதை மிகவும் அருமை
ReplyDelete