காதல் சுகமானது 32

ஷன்மதி ராஜாவிடம் போனில்,

"ராஜா பிளீஸ் நான் உடனே உன்னை பார்க்கணும்"

"இல்ல ஷன்மதி, நான் அவசரமாக சஞ்சனாவை பார்க்க போய்ட்டு இருக்கேன். நாம நாளைக்கு பார்க்கலாம்."

"ராஜா நான் உனக்காக பத்து நாளா காத்திட்டு இருக்கேன். இது முக்கியமான விசயம். என்னை வந்து பாரத்து விட்டு அப்புறமா சஞ்சனாவை பார்க்க போ. இப்போ நீ உடனே வரவில்லை என்றால் என்னை நீ உயிரோடவே பார்க்க முடியாது."


'ச்சே, என்ன இது' ராஜா மனதில் புலம்பினான்.

"ஷன்மதி இது ஒரு சின்ன விசயம் இதுக்கு போய் தற்கொலை பண்ணிக்க போறேன்னு சொல்ற,"

"இல்ல எனக்கு உன்னை பார்ப்பது தான் முக்கியமான விசயம். நீ வரவில்லை என்றால் கண்டிப்பா நான் தற்கொலை பண்ணிப்பேன்."

"சின்ன குழந்தை மாதிரி அடம்பிடிக்கிற ஷன்மதி, சரி எங்க வரணும் சொல்லு"

ஷன்மதி இடத்தை சொன்னாள்.

"ராஜா இன்னொரு முக்கிய விசயம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வா, நீ அரைமணி நேரத்திற்குள் வரவில்லை என்றால் நான் என் கையில் உள்ள விஷத்தை குடித்து விடுவேன்.."

"அந்த மாதிரி எதுவும் பண்ணிட வேண்டாம் ஷன்மதி, நான் உடனே வரேன்.."

ராஜா தன் பைக்கை வேகமாக செலுத்த, அவனுக்கு தொடர்ந்து மொபைல் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. அவை எதையும் எடுக்க கூடிய நிலையில் ராஜா இல்லை. அதில் சஞ்சனா அழைப்பும் ஒன்று.

ஷன்மதி, அடுத்து ஜார்ஜ்ஜிற்கு உடனே போன் செய்தாள்.

"ஜார்ஜ், நான் உன்ன வெளியே கொண்டு வந்ததற்காக பிரதிபலன செய்ய வேண்டிய நேரம் இது. நீ விரும்பிய பெண்ணை அடைய நானே உனக்கு சந்தர்ப்பம் அமைத்து தருகிறேன். உடனே நான் சொன்ன ஓட்டல் அறையில் போய் காத்திரு. உனக்கான விருந்து தேடி வரும்."

"நானும் அதற்காக தான் காத்து இருக்கிறேன் ஷன்மதி, ஆனா சஞ்சனா நெருப்புமாறி. அவளை நான் தொட்டு மறுபடியும் எதும் சிக்கல் ஆகிடாதே?"

"இங்க பாரு, நீ அவளை தொடு, தொடாமா போ. எனக்கு அதை பற்றி கவலை கிடையாது. நான் ராஜாவை அங்க கூட்டி வரும் பொழுது நீ அவளோடு ஒரே அறையில் அரைகுறை ஆடையில் இருக்கணும். அதை பார்த்து ராஜா அவளை வெறுப்பான். என்கிட்ட வருவான். உனக்கு சஞ்சனா, எனக்கு ராஜா. டீலா?"

"கேட்க நல்லா இருக்கு ஷன்மதி, ஆனா ராஜா எப்படி நம்புவான்? அவங்க ரெண்டு பேரும் உயிருக்குயிரா லவ் பண்றாங்க. கண்டிப்பாக சஞ்சனா சொல்வதை தான் அவன் நம்புவான்."

"இல்ல ஜார்ஜ், ஆம்பளங்க சைக்கலாஜியே அதான். அவனுங்க எத்தனை பெண் கிட்ட போனாலும் தப்பு இல்ல. ஆனா தனக்கு வரப்போகும் மனைவி மட்டும் பவித்ரமா இருக்கணும் என்று எதிர்பார்ப்பாங்க. ராஜாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இன்னொரு முக்கியமான விசயம், என்கிட்ட நீ சொன்ன மாதிரி சஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்கனும். ஏதாவது ஏமாற்று வேலை பண்ணே, உன்னை சும்மா கூட விட மாட்டேன்" என ஷன்மதி ஜார்ஜ்ஜை எச்சரிக்கை செய்தாள்.

"நான் அந்த மாதிரி எதுவும் ஏமாற்ற மாட்டேன் ஷன்மதி. என்னை நம்பு."

"சரி நேரமாச்சு உடனே கிளம்பு.."

அடுத்து உடனே சஞ்சனாவிற்கு ஃபோன் அடித்தாள் ஷன்மதி.

"ஹாய் சஞ்சனா எப்படி இருக்க?"

"ஷன்மதி, நானே ராஜா ஃபோன் எடுக்கலனு கடுப்பில் இருக்கேன். நீ வேற சும்மா வெறுப்பு ஏத்தாத.."


"ராஜா ஃபோன் எடுக்க மாட்டான். ஏன்னா அவன் என் கூட இருக்கான். இன்னிக்கு அவனுக்கும், எனக்கும் முதல் இரவு.." என ஷன்மதி சிரித்தாள்.

"என் ராஜா என்னை தவிர வேறு யாரையும் தொட கூட மாட்டான்."

"தொட போகிறானே அதுவும் இன்னும் கொஞ்ச நேரத்தில். நீ அவனுக்கு ஏதோ குறை வைச்சுருக்க, அதனால் தான் உன்னை விட்டு என்னை தேடி வருகிறான்."

"மறுபடியும் மறுபடியும் நீ பொய் சொல்ற ஷன்மதி, அவன் பன்னிரெண்டு நாளா எனக்காக தான் விலகி இருந்தான். இன்னிக்கு கண்டிப்பாக என்னை பார்க்க வருவான்."

"அய்யோ வெளி உலகம் தெரியாத வெகுளி பெண்ணாகவே இருக்கீயே சஞ்சனா..! பன்னிரெண்டு நாள் கழித்து வரும் பொழுது கூட உன்னை பார்க்க வராமல் அவன் என்னை பார்க்க வருகிறான் என்றால் அதிலேயே புரிந்து கொள்ள வேண்டாமா? அவனுக்கு என் மேல் தான் ஆசை.
ராஜா மேல் அவ்வளவு நம்பிக்கை இருந்தால் நீயே நான் சொல்கிற இடத்தில் வந்து பாரு. ராஜா என்கூட தான் இருப்பான். அவன் வாயாலேயே உன்னை வேண்டாம் என்று சொல்வான் பாரு.."

"நீ ஏதாவது பொய் சொல்லி அவனை அங்க வர வைச்சுருப்ப அதானே. நானே நீ சொல்கிற இடத்தில் வந்து அதை நிரூபிக்கறேன் போதுமா?"

"வா வா, உனக்காக நான் ராஜாவோடு காத்து இருக்கிறேன்" 

ஓட்டல் பெயர், அறை எண் அனைத்தையும் ஷன்மதி சொல்ல, சஞ்சனா ராஜாவை காணும் ஆவலோடு வேகமாக அந்த ஓட்டலை அடைந்தாள்.

அறைக்கதவை தட்ட, அது தானாக திறந்தது. 

சஞ்சனா அறைக்குள் நுழைய, அங்கு யாரும் இல்லை. ஆனால் பாத்ரூமிலிருந்து தண்ணீர் விழும் சப்தம் மட்டும் கேட்டது. சஞ்சனா பாத்ரூம் நோக்கி நகர, அப்பொழுது ஜார்ஜ் வெளியில் இருந்து அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினான்.

சஞ்சனா இப்பொழுது வெளியே செல்ல வேண்டும் என்றால் ஜார்ஜ்ஜை தாண்டி தான் செல்ல வேண்டும்.

அதே நேரத்தில் அந்த ஓட்டலின் எதிரில் உள்ள காஃபி டேயில் ராஜா ஷன்மதியை சந்தித்தான்.

ஜார்ஜ் சஞ்சனாவை நெருங்கி வர,சஞ்சனா பக்கத்தில் உள்ள பூச்சாடியை எடுத்து கொண்டாள்.

"ஜார்ஜ்!!! கிட்ட வந்த, உன் உசிரு உடம்பில் இருக்காது. ஒழுங்கா வழியை விட்டு விலகி விடு"

ஜார்ஜ் அமைதியாக "சஞ்சனா ஒரு நிமிஷம் அவசரப்படாத, என் விரல் நகம் கூட உன் மேல் படாது. உன்னையும் என்னையும் ஒரே ரூமில் வைத்து ராஜாவை கூட்டி வந்து பார்க்க வைப்பது தான் ஷன்மதியின் திட்டம். நான் ராஜாவிற்கு தீமை செய்து இருந்தாலும் அவன் அதை எல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் என் வாழ்க்கையே காப்பாற்றி இருக்கான். அவனுக்கு நான் துரோகம் செய்தால் நான் நல்லாவே இருக்க மாட்டேன். இப்போ இந்த திட்டத்திற்கு நான் ஒப்பு கொள்ளாவிட்டால் ஷன்மதி வேறு யாரையாவது கூட்டி வந்து ஏற்பாடு பண்ணி இருப்பா. அதனால் தான் வேறுவழி இல்லாமல் ஒப்பு கொண்டேன். நான் இதுவரை உங்களுக்கு செய்த தீமைக்கு என்னை மன்னித்து விடுங்கள்.."

சஞ்சனாவிற்கு ராஜா அன்று சொன்னதன் அர்த்தம் இப்பொழுதுதான்  புரிந்தது. ஒருவன் திருந்த சமயம் அமைகிறது என்றால் கண்டிப்பாக அந்த நேரத்தில் உதவ வேண்டும் என கூறியது நூறுக்கு நூறு உண்மை. இதோ கண் முன்னே ஜார்ஜ் திருந்தி உள்ளான்.

அங்கே ராஜா ஷன்மதியிடம், 

"இப்போ என்ன அவசரம் ஷன்மதி? எதுக்கு என்னை மிரட்டி வர சொன்ன"

"ராஜா நீ சஞ்சனாவை ரொம்ப நம்பற, நீ இல்லாத இந்த பன்னிரெண்டு நாளில் அவ பழைய காதலனை தேடி போய்ட்டா. ஆனா நான் உனக்காக எப்பவும் காத்திட்டு இருப்பேன்."

"வாயை மூடு ஷன்மதி, சஞ்சனாவை பற்றி தப்பா பேசினால் அவங்க நாக்கு அழுகிடும். மூணு நாளைக்கு முன்னாடி கூட அவ என்னை தேடி காசி வந்து இருந்தாள் தெரியுமா உனக்கு?"

"நான் சொல்றது முற்றிலும் உண்மை ராஜா, இப்போ எதிரில் உள்ள அந்த ஓட்டலுக்கு சஞ்சனா அவ காதலன் ஜார்ஜ்ஜோடு போவதை நான் ரெண்டு கண்ணால் பார்த்தேன். நீ என்னுடன் வந்தால் இருவரும் ஒரே அறையில் இருப்பதை என்னால் காண்பிக்க முடியும்"

ஜார்ஜ் பெயரை கேட்டவுடன் ராஜா சிலிர்த்து எழுந்தான்.

"ஜார்ஜ எப்படி வெளிய வந்தான். அவனுக்கு இன்னும் தண்டனை காலம் முடியல. உன்னை தவிர வேறு யாரும் அவன் வெளியில் வர உதவி செய்து இருக்க முடியாது"

"அதுவந்து ராஜா" ஷன்மதி என்ன சொல்வது என தெரியாமல் திணறினாள்.

"சஞ்சனாவை நீ தான இங்க வர வைச்சு ஜார்ஜ் கிட்ட சிக்க வைச்ச" எழுந்து மேசையை வெறி கொண்டு தட்டி ராஜா கர்ஜித்தான்.

ராஜா உண்மையை கண்டுபிடித்ததை எண்ணி அவள் முகம் வெளிறி போனது. என்ன சொல்வது என தெரியாமல் வார்த்தைகளை மென்று விழுங்கினாள். இதுவரை இவ்வளவு உக்கிரமான ராஜாவை அவள் பார்த்ததே இல்லை.

ராஜா ஷன்மதியை அடிக்க கையை ஓங்கினான். ஆனால் நிறுத்தி விட்டு "ச்சே நீயெல்லாம் ஒரு பொண்ணா, ஒரு அப்பாவி பொண்ணுக்கு நீ இப்படி துரோகம் பண்ணலாமா? என் தோழியாக இருக்கும் தகுதியை கூட நீ இழந்து விட்டாய் ஷன்மதி. என் சஞ்சனா நெருப்பு, கண்டிப்பாக ஜார்ஜ் மூலம் அவளுக்கு எந்த தீங்கும் வராது. இதுக்கு மேல் என் முகத்தில் கூட விழிக்காதே." என்று படபடவென பொரிந்து விட்டு ராஜா வெளியேறினான்.

ஷன்மதி, பிரம்மை பிடித்தவள் போல் உட்கார்ந்து இருந்தாள்.

இங்கே ஜார்ஜ் சஞ்சனாவிடம்,

"சஞ்சனா ராஜா எதிரில் உள்ள காஃபி டேவில் தான் இருக்கான். நீ போய் உடனே பாரு" என அவளுக்கு வழி விட்டான்.

ராஜா வேகமாக படிக்கட்டில் ஏறி அந்த லாபியில் மூன்றாவது மாடிக்கு வர, சஞ்சனா லிஃப்ட்டிற்குள் நுழைந்தாள்.

ராஜா, சஞ்சனாவை பார்த்து விட்டு மீண்டும் படிக்கட்டில் வேகமாக கீழே இறங்கினான்.

சஞ்சனா குழந்தை போல் குதுகாலித்து ராஜாவை பார்க்கும் ஆவலுடன் மான் போல துள்ளி கொண்டு ரோட்டை வேகமாக கிராஸ் செய்ய வேகமாக ஒரு கார் ஹார்ன் அடித்து கொண்டே அவளை மோத வந்தது. அதை பார்த்து ஒரு நிமிடம் நடுங்கி அப்படியே செயல் இழந்து நின்றுவிட்டாள்.

கார் வந்து அவளை மோத வந்த சமயம், ராஜா சஞ்சனாவை தள்ளி விட்டான். மின்னல் வேகத்தில் வந்த கார், அவனை மோதி தூக்கி வீசி எறிந்தது. அதில் ராஜா அந்தரத்தில் பறந்து மின் விளக்கு கம்பத்தில் மோதி தலையில் அடிபட்டு கீழே விழுந்தான்.

சஞ்சனா ஓடி வந்து அவன் தலையை தூக்கி மடியில் வைத்து கொண்டு கதறினாள். "யாராவது சீக்கிரம் ஆட்டோ கொண்டு வாங்க" என்று கத்தினாள்.

சஞ்சனாவிற்கு வந்த கண்டத்தில் இருந்து அவளை காப்பாற்றி விட்டோம் என்ற நிம்மதி அவன் முகத்தில் இருந்தது. மேலும் ஒருவேளை மரணம் சம்பவிக்குமே ஆனால் அவள் மடியில் இறக்க வேண்டும் என ஆசைப்பட்டதும் இப்பொழுது நிகழ்ந்து கொண்டு இருப்பதை எண்ணி அவன் உதட்டில் புன்முறுவல் பூத்தது. அவள் முகத்தை பார்த்து கொண்டே அவன் மயக்கமானான்.

அப்பொழுது அங்கு வேகமாக ஒரு கார் வந்து நின்றது. அதில் அவசரமாக ராஜா ஏற்றப்பட்டான். சஞ்சனாவையும் ஏற்றி கொண்டு கார் பறந்தது. அது ஷன்மதியின் கார் தான். அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரசிகிச்சைப் பிரிவில் ராஜா அட்மிட் செய்யப்பட்டான்.


தொடரும்...

Comments

  1. House wifes and working womens need massage contact me
    manikandan9790591801@gmail.com

    ReplyDelete
  2. 👍👍👍👍👌👌👌👌👌

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நேத்து ராத்திரி... யம்மா!

கொழு கொழு அண்ணி

மாலை மங்கும் நேரம் 1